(மலேசிய நண்பன் 27.03.2011 ஞாயிறு பதிப்பில் வெளியிடப் பட்டது)
பூர்ணம் விஸ்வநாதன், செபாராங் பெராய், பினாங்கு
கே: LAN என்றால் என்ன?
ப: Local Area Network என்பதே அதன் சுருக்கம். பல கணினிகளை ஒரே ஒரு தலைமைக் கணினியுடன் இணைக்கும் அமைப்பே இந்த ‘லான்’ முறை. இதைத் தமிழில் ‘உள்ளக வலைப்பின்னல்’ என்று அழைக்கலாம்.
ஒரு கணினி வலைப்பின்னலில் பல கணினிகள் இணைக்கப் பட்டு இருக்கும். இவ்வாறு இணைக்கப் பட்டு இருக்கும் கணினிகளை மேற்பார்வை செய்யும் தலைக் கணினியை Network server என்று அழைப்பார்கள். தமிழில் பிணையச் சேவைக் கணினி என்று அழைக்கலாம். ஒரு நிறுவனத்தின் தேவைக்கு ஏற்றவாறு, பல கணினிகள் இந்த வலையமைப்பில் இணைக்கப்பட்டு இருக்கும்.
இந்தச் சேவைக் கணினிகளை server என்று அழைப்பார்கள். அவற்றின் வகைகள்.
o மின்னஞ்சல் சேவைக் கணினி - Email sever
o இணையச் சேவைக் கணினி - Internet server (proxy)
o கோப்புச் சேவைக் கணினி - File sever
o அச்சு சேவைக் கணினி - (Print sever) printer
o தரவுத் தள சேவைக் கணினி - (Data base server) DB