வாட்சாப் என்பது வாட்சாப் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாட்சாப் என்பது வாட்சாப் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

24 பிப்ரவரி 2017

வாட்சாப் என்பது வாட்சாப்


ஒருவருக்குக் கொடுக்கப்பட்டப் பெயர் எல்லா மொழிகளிலும் அதே பெயராகவே இருக்கிறது. அதைப் போல ஒரு செயலிக்கு கொடுக்கப்படும் பெயரும் எல்லா மொழிகளிலும் அதே பெயராகத் தான் இருக்க வேண்டும்.

வாட்சாப் Whatsapp செயலியைப் புலனம் என்கிறோம். டெலிகிராம் செயலியைத் தந்தி என்கிறோம். மற்ற மற்றச் செயலிகளின் பெயர்களை எல்லாம் தமிழில் மொழிப் படுத்துகின்றோம். ஒரு நிறுவனத்தின் பெயரைத் தமிழ்ப் படுத்துவது முறை அல்ல.

Facebook என்பது பேஸ்புக்காக இருக்க வேண்டும். Twitter என்பது டிவிட்டர் என்று இருக்க வேண்டும். அதே போல Flickr, Google, Instagram, Habbo, LinkedIn, Bebo, YouTube, Viber, Tumblr, Pinterest, Quora, Friendster, Myspace, Orkut, Xanga போன்ற செயலிகளின் பெயர்களும் அவற்றின் அசல் பெயர்களிலேயே அழைக்கப்பட வேண்டும்.

‘தமிழரசி’ என்னும் பெயர் கொண்ட ஒருவரை ஆங்கிலத்தில் ‘Tamil Queen’ என்று அழைப்பது இல்லை. அதே போல ‘கருப்பையா’ என்பவரை ‘Black Ayya' என்று அழைப்பதும் இல்லை. ராமசாமி என்பவரை Rama God என்று அழைப்பது இல்லை.

Bill Gates என்பவரை  வாயிற்கதவு மசோதா என்று அழைப்பது இல்லை. 100 Plus என்பதை நூறு கூட்டல் என்று அழைப்பது இல்லை. சரிங்களா. Coca Cola, Pepsi Cola, 7 Up, Fanta எனும் பெயர்களை மட்டும் ஏன் தமிழ்ப் படுத்துவது இல்லை. எந்தச் சொல்லைத் தமிழ்ப் படுத்த முடியுமோ அவற்றை மட்டும் தமிழ்ப் படுத்துகிறார்கள்.

அதைப் போல Kentucky Fried Chicken (KFC) என்பதை ‘கெந்தக்கி வறுத்த கோழி’ என்று சொல்கிறோமா. இல்லையே. Pizza Hut என்பதை ’பிசா குடிசை’ என்றும் சொல்வது இல்லையே. YouTube என்பதை ’உந்தன் குழாய்’ என்று சொல்ல முடியுமா. சொல்லுங்கள். ஆக Whatsapp என்பதை வாட்சாப் என்றுதான் அழைக்க வேண்டும்.

வாட்சாப் உருவாக்கியவர்களின் உழைப்பால் இலவசமாகவே அவர்களின் கண்டுபிடிப்பைப் பயன்படுத்தி வருகிறோம். அந்த வகையில் அவர்கள் வைத்த பெயர்களை அப்படியே சொல்லி அவர்களுக்கு நன்றி சொல்வது நம்முடைய கடமையாகும்.