மின் வெளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மின் வெளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

20 ஜூன் 2014

மின் வெளி

(மலேசிய நண்பன் 27.03.2011 ஞாயிறு பதிப்பில் வெளியிடப் பட்டது) 

கலாமஞ்சரி நாயுடு, ஜாலான் ஈப்போ, கோலாலம்பூர்


கே: Cyber Space எனும் சொற்கள் அடிக்கடி பயன் படுகின்றன. அதன் அர்த்தம் என்ன என்று சொல்லுங்கள்?

ப: 1984 ஆம் ஆண்டு வில்லியம் கிப்சன் எனும் ஓர் அறிவியல் கதாசிரியர் ‘நியூரோ மென்சர்’ எனும் நாவலை எழுதினார். அதில் அவர் சைபர் ஸ்பேஸ் எனும் ஒரு சொல்லை முதன் முதலில் பயன் படுத்தினார்.

சைபர் ஸ்பேஸ் என்றால் எவராலும் கண்ணால் காண முடியாத ஓர் இடம். ஆனால், அப்படி ஓர் இடம் இருக்கிறது என்பது எல்லாராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்று. தமிழில் ’மின் வெளி’ என்று அழைக்கலாம்.

ஆக, அப்படி பார்க்க முடியாத ஒரு கற்பனையான இடத்தைத் தான் சைபர் ஸ்பேஸ் என்று அவர் அழைத்தார். இந்தச் சொல்லை 1989ல் இணைய உலகம் பயன்படுத்த ஆரம்பித்தது. இணைய உலகத்தை சைபர் ஸ்பேஸ் என்று அழைத்தாகள். இப்போதும் அப்படித் தான் அழைக்கிறார்கள்.

கண்ணுக்குத் தெரியாத இணைய வலைப் பின்னலில் நுழைந்து அங்கு உள்ள படங்களைப் பார்க்கிறோம். ஆவணங்களைப் படிக்கிறோம். பாடங்களைப் பதிவிறக்கம் செய்கின்றோம். அவற்றை அனுபவ ரீதியாக உணர்கின்றோம். ஆனால், பார்த்தது இல்லை. ஆகவே, இணையத்தை ’சைபர் ஸ்பேஸ்’ என்று அழைப்பதில் தவறு இல்லையே.