DLP இருமொழித் திட்டம் - 1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
DLP இருமொழித் திட்டம் - 1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

03 ஜூன் 2017

DLP இருமொழித் திட்டம் - 1

DLP இருமொழித் திட்டம் அமலாக்கம் செய்யப் படுவதற்குப் பல தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. அண்மையில் புத்ரா ஜெயா கல்வி அமைச்சின் முன் அமைதிப் பேரணி ஒன்றும் நடந்து இருக்கிறது.


2016-ஆம் ஆண்டு தொடக்கம் மலேசியப் பள்ளிகளில் இரு மொழிக் கொள்கை அமலாக்கம் பெறுகிறது என கல்வியமைச்சு அறிவித்தது. 

அதன்படி தமிழ்ப் பள்ளிகளில் நான்காம் ஆண்டு தொடங்கி அறிவியல், கணிதம், தொழில் நுட்பம், புத்தாக்கம் ஆகிய நான்கு பாடங்கள் மலாய் அல்லது ஆங்கில மொழியில் போதிக்கப்படும்.

அப்படி ஓர் அமலாக்கத்திற்குச் சில வரையறைகளும் உள்ளன. DLP இருமொழித் திட்டம் அமலாக்கம் செய்ய விரும்பும் ஒரு பள்ளியில் போதுமான ஆங்கில மொழி ஆசிரியர்கள் இருக்க வேண்டும். 

அந்தப் பள்ளியின் மாணவர்கள் ஆங்கில மொழியில் புரிந்து கொள்ளும் தகுதிகளையும் பெற்று இருக்க வேண்டும்.

அதன் பின்னர் தான் அந்த நான்கு பாடங்களையும் ஆங்கிலத்திலேயே போதிப்பதற்கான வசதிகள் செய்து தரப்படும். இந்தப் பரிச்சார்த்த முயற்சிக்கு 300 மலாய் தொடக்கப் பள்ளிகளை அரசாங்கம் தேர்வு செய்தது. சரி.


இந்தத் திட்டம் தேசியப் பள்ளிகளில் மட்டுமே அமல் செய்யப்படும் என்றும் அறிவிப்பு செய்யப் பட்டது. ஆனால் தமிழ்ப் பள்ளிகளில் அதன் தாக்கங்கள் துரிதமாகப் பரவத் தொடங்கி விட்டன.

இந்தத் திட்டத்தைச் சீனப் பள்ளிகள் முற்றாகப் புறக்கணித்து விட்டன. அரசாங்கம் இதை நன்றாகவே எதிர்பார்த்தது. அதன் காரணமாக தேசியப் பள்ளிகளை மட்டும் அந்தத் திட்டத்திற்கு முதலில் உட்படுத்தியது. இருந்தாலும் மலாய் சமூகத்திலும் பல்வேறு வகையில் எதிர்ப்பு அலைகள்.

ஒரு மொழியின் மீதான ஆற்றலை மேம்படுத்த வேண்டும் என்றால் முதலில் அந்த மொழியைப் போதிக்கும் நேரத்தைக் கூட்ட வேண்டும். அடுத்து ஆங்கில பாடத்தைப் போதிப்பதில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களையும் பணியில் அமர்த்த வேண்டும். 


அப்படி இல்லாமல் மற்ற பாடங்களை உடனடியாக ஆங்கிலத்திற்கு மாற்றுவது என்பது மலாய் மொழிப் பள்ளிகளின் தேசிய மொழிக் கொள்கைக்குக் குந்தகம் விளைவிக்கும். மலாய் கல்விமான்கள் பலர் அவ்வாறு மாற்றுக் கருத்துகளை முன்வைத்தனர்.

தமிழ்ப் பள்ளிகளிலும் இந்தப் பிரச்சினை தொடர்பாக இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. அவை என்ன கருத்துகள் என்பதை அடுத்த பதிவில் தெரிவிக்கிறேன்.