மலேசிய இந்தியர்கள் வாங்கி வந்த வரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலேசிய இந்தியர்கள் வாங்கி வந்த வரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

26 அக்டோபர் 2019

மலேசிய இந்தியர்கள் வாங்கி வந்த வரம்

மலேசிய இந்தியர்களின் வரலாற்றில் தலைவர்கள் பலர் வந்தார்கள். பதவியில் அமர்ந்தார்கள். மக்களைப் பார்த்தார்கள். கைகுலுக்கினார்கள். கட்டிப் பிடித்தார்கள். கண்ணீர் விட்டார்கள். கரைந்து விட்டார்கள். பெயர்கள் வேண்டாமே.


அவர்களில் சிலர் மக்கள் மனங்களில் நிலைத்து நிற்கிறார்கள். கை எடுத்துக் கும்பிடும் அளவிற்கு சிகரம் பார்க்கிறார்கள். சொர்க்கத்தின் வாசலில் சொக்கத் தங்கங்களாய் ஒளி வீசுகின்றார்கள்.

இவர்களில் ஒரு சிலர் அரசியலுக்குள் கோடீஸ்வரர்களாக வந்தார்கள். கடைசியில் காமராசரைப் போல கையில் காசு இல்லாமல் மறைந்து போனார்கள். மனித மனங்களில் ஊழியூழி காலத்திற்கும் சமைந்து போனார்கள்.

இன்னும் சிலர் நீங்காத பங்கங்களின் நீர் ஊற்றுகளாய் கசிகின்றார்கள். சொன்னால் வெட்கம். சொல்லா விட்டால் துக்கம்.

மேலும் சிலர் அவர்களின் குடும்பங்களையே நன்றாகப் பார்த்துக் கொண்டார்கள். இவர்கள் மலேசிய இந்தியர்களின் நிதர்சனமான சாபக்கேடுகள். மன்னிக்கவும்.

மேலும் சிலர் நேற்று மழையில் நனைந்த ஆடுகளாய் இன்றும் ஒளிந்து நெளிந்து கொண்டு வருகிறார்கள் போகிறார்கள். இவர்களை நிரந்தரமான சாபக்கேடுகள் என்று சொல்ல முடியாது. மலேசிய இந்தியர்கள் வாங்கி வந்த வரத்தின் எச்சங்கள் என்றும் சொல்ல முடியாது.

வேறு எப்படித் தான் சொல்வது என்று எனக்கும் தெரியவில்லை. அதனால் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

-மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
22.10.2019


பேஸ்புக் பதிவுகள்


Letchumanan Nadason ஆரம்பம் முதலே நமக்கு சரியானத் தலைவர்கள் கிடைக்கவில்லையா அல்லது நாம் கண்டு அடையவில்லையா தெரியவில்லை. எப்போதும் நாம் ஒரு பதற்றத்துடனேயே வைத்திருக்கிறார்கள். சிறப்பானப் பதிவு. காலை வணக்கம்.


Muthukrishnan Ipoh ஆரம்பத்தில் இருந்தே நம் தலைவர்கள் நமக்கு விழிப்புணர்வுகளை வழங்கி இருக்க வேண்டும்... இப்படி மகா அரசியல்வாதிகள் வருவார்கள்... வந்து இப்படி குட்டையைக் குழப்பி மீன் பிடிப்பார்கள் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை... இது நம் சமுதாயத்தின் தப்பு அல்ல...


Letchumanan Nadason >>> Muthukrishnan Ipoh உண்மை.


Periasamy Ramasamy யாரை குறை சொல்லி என்ன பயன்? சமுதாயத்திற்காக முன்னோக்குத் திட்டங்கள் கொண்டு வந்த தலைவர்(கள்) இருந்த போது, முன்னோக்குச் சிந்தனை நம்மிடையே துளிர் விட்ட நேரம் நம்மிடையே படித்தவர்கள் மிகக் குறைவு.

ஆனால், சுயநலப் போக்கு கொண்ட தலைவர்கள் வந்த பின்பு, படித்தவர்கள் மத்தியில் கூட தன் குடும்பம், தன் சொந்தம் மட்டுமே பாராட்டும் குறுகிய மனப்பான்மை வளர்ந்ததுதான் மிச்சம்.

நாட்டின் மொத்த நில உடைமையில் வெறும் 1% பங்கையே பெற்றிருக்கும் நமது தே.நி.நி.கூ.சங்கம் மட்டும் பேர் போட்டு கொண்டிருக்கிறது...

மற்றபடி, நமக்கென்று இருந்த தென்னிந்திய தொழிலாளர் சேமநிதி, TPCA விளையாட்டு அரங்கம், ஆகிய இருந்தவற்றையும், நிர்வாகத் திறன் அற்றவர்களை முன்மொழிந்து அடகு வைத்துத் தொலைத்த கட்சித் தலைவர்கள் பெயர் தான் மிஞ்சுகிறது.

தமிழ்ப் பள்ளிகள் குறைந்து, கட்சி அரசியல் நடத்தும் தனியார் கோவில்கள் நிறைந்தது தான் சாதனை.

இனி இருப்பதையும் பிடுங்காமல் விட மாட்டார்கள் என்பது போல ஓடிக் கொண்டிருக்கும் நாட்டின் சூழ்நிலை

https://www.freemalaysiatoday.com/.../peguam-fail-notis.../

நினைக்கவே... ஏற்பட்ட நடுக்கம் என்னை தொடர்ந்து எழுத விட மாட்டேன் என்கிறது...


Murugan Rajoo மனிதரில் மாணிக்கம், மக்களின் கண்ணீரைப் பார்த்து வெத்து வார்தைகள் கூறிய ஆயிரம் தலைவர்களின் அமரர் துன் டாக்டர் சம்பந்தன் ஒரு சகாப்தம். தலைநகரில் தமிழர்களின் தலை நிமிர வைத்த NLFCS கூட்டுறவு சங்கத்தின் வித்தகர்.


Muthukrishnan Ipoh
மலேசிய இந்தியர்களைப் பொருத்த வரையில் அவர் மனிதருள் மாணிகம்...


Parimala Muniyandy நமக்கு வாய்த்த தலைவர்கள்... நாம் வாங்கி வந்த வரம்... என்று நம்மை நாமே நொந்துக் கொள்ள வேண்டியது தான்... சிறப்பான பதிவு. நன்றி. காலை வணக்கம் அண்ணா.


Kumarasamy G P Govindasamy அறிந்த உண்மைகளை, மனக் குமறல்களை இப்படி எழுகிறீர்கள். சம்பந்தன் படத்தைப் பெரிதாக்கி சொல்லாமல் சொல்கிறீர்களே!


Velaydam Kannan >>> Kumarasamy G P Govindasamy: அந்த தமிழன் இல்லை என்றால் பல இந்திய குடும்பங்களில் திருவோடு நின்றிருப்பார் தெருவோடு.


Muthukrishnan Ipoh இப்போதைக்கு நம் கண்ணில் படும் ஒரு நல்ல தலைவர்...


Muthukrishnan Ipoh >>> Velaydam Kannan உண்மை... உண்மை... பல ஆயிரம் இந்தியர்களுக்கு வாழ்வு அளித்த ஒரு தெய்வம்...


Ramarao Ramanaidu சம்பந்தன் மலேசியாவில் பிறந்தவரா? விளக்கம் தேவை


Muthukrishnan Ipoh: BornThirunyanasambanthan s/o Veerasamy
16 June 1919, Sungai Siput, Perak


Tanigajalam Kuppusamy உண்மையான ஆதங்கத்தின் வெளிப்பாடு. தெய்வம் நின்று கொல்லும் என்று படித்திருக்கிறோம். காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.


Muthukrishnan Ipoh காலம் கடந்து போய்க் கொண்டுதான் இருக்கிறது சார்...


Muthukrishnan Ipoh அன்பர்களின் பதிவுகளுக்குப் பின்னர் முறையாகப் பதில் அளிக்கிறேன்... எல்லா பதிவுகளும்... கருத்துகளும் அருமை...


Kumar Murugiah Kumar's வணக்கம் ஐயா காலை வணக்கம்


Muthukrishnan Ipoh இனிய வணக்கம்... இனிய வாழ்த்துகள்


Santhanam Baskaran இனிய வணக்கம்.


Sheila Mohan இனிய காலை வணக்கம்... சார்... சிறப்பான பதிவு...


Muthukrishnan Ipoh நன்றிங்க... இனிய வணக்கம்... இனிய வாழ்த்துகள்...


Sambasivam Chinniah: Super Saar... Vaazhga Tamil. Good morning. Vaazhga Valamudan. Blessed tuesday morning. God bless you and your family. Take care...


Hamba Mu Umar: Umar Vaangi vantha varam..mikaum tavahru ayyah....amarar run sambanthan matrum amarar p pathu..ippoluthu nalla tahalamai tuhamam Malaysia tamillarku illai


Muthukrishnan Ipoh எவரையும் நாம் குறிப்பிட்டுச் சொல்லவில்லை... அமரர் பட்டு மறக்க முடியாத ஒரு சகாப்தம்...


Ramarao Ramanaidu
ஆனால் இவரே நம்மை வந்தேறிகள் என்ற அடையாளத்தைக் கொடுத்தது நெஞ்சில் பதிந்த தழும்பு ...


Muthukrishnan Ipoh ஒட்டு மொத்த இந்திய இனத்திற்கும் அப்போதைக்கு விழிப்புணர்வு இல்லாமல் போனதும் ஒரு வகையில் காரணம் ஐயா...


Murugan Rajoo அன்று அவர் கூறியதை சப்பை கட்டும் சில மூடர்கள், இன்று ஒரு கிழட்டு அயோக்கியன் #வந்தேறிகள் என்று கூறுகிறான்... ஏன் மவுன ஆசாமிகளாய் உள்ளனர். தமிழர்களைக் குறை கூறுவது என்றால் உடனே கிளம்பி விட வேண்டியது...


Ramarao Ramanaidu >>> Murugan Rajoo: சரி ... நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதைச் சொல்லுங்கள் ... போகிற போக்கில் நீங்களும் சொல்லிவிட்டுப் போக வேண்டாம் ... ஏதாவது போராட்டம் ஆர்ப்பாட்டம், மறியல் யாதேனும் செய்தீர்களா மகாதீருக்கு எதிராக? மூடர் எனச் சொல்வது உங்களையும் சேர்த்துத்தான் ... வார்த்தை உபயோகிப்பில் மரியாதை தேவை ...


Murugan Rajoo >>> Ramarao Ramanaidu: உங்கள் வார்தை கவனம். நீங்கள் என்ன செய்துள்ளீர்கள் துன் சம்பந்தனை குறைகள் கூற... அவரைப் பற்றி பல நல்ல காரியங்கள் உள்ளது... அதை எல்லாம் அறியாத மூடர் தானே நீங்கள்...


Ramarao Ramanaidu >>> Murugan Rajoo: சரி ... துன் சம்பந்தன் பற்றி அதிகம் தெரிந்த அறிவிலி நீ என்பதை ஒத்துக் கொள்கிறேன் ...


Muthukrishnan Ipoh விழிப்புணர்வு இல்லாமல் போனது ஒரு காரணம்... எடுத்துச் சொல்ல சரியான தலைவர் இல்லாமல் போனது மற்றொரு காரணம்...


Hamba Mu Umar Umar >>> Muthukrishnan Ipoh: thedungkal kidaipadum nallah thalaivar Tamil samuthayamthirku


Arjunan Arjunankannaya நெஞ்சில் உரமும் இன்றி... நேர்மை திறனும் இன்றி வஞ்சனை செய்வாரடி கிளியே... வாய் சொல்லில் வீரரடி... இது தான் தமிழன். அவனை யாரலும் மாற்ற முடியாது. 10 கோடி மக்கள் இருந்தும் ஒரு நாடு இல்லாதவர்கள். காரணம் துரோக குணம்


M R Tanasegaran Rengasamy ஆண்டவன் நமக்குத் தந்த வரத்தால் அந்த தலைவர்கள் நல்லது செய்யாவிடினும் நல்லா வாழ்கிறார்கள். அவர்களைச் சார்ந்தவர்களும் எல்லா வளமும் பெற்று வாழ்கிறார்கள். வரம் கொடுத்த சிவனே சமயங்களில் கதி கலங்கிடுவார். நாம் எம்மாத்திரம். சோறு போட்டவனின் குரல்வளையைப் பிடிக்கும் வன்மம் வளர்ந்துவிட்டது. தலைவர்களைத் தலைவர்களாக நாம் தான் காத்து வந்து இருக்கிறோம். அதுதான் உண்மை.


Moon Noom ஐயா வணக்கம் தங்களின் ஆதங்களை அறிந்தேன். என் செய்வது இன்றுள்ள தலைவர்கள் போல் அன்றில்லையே. மானமுள்ள தமிழனாக வாழ்வதற்கு ஒன்று சேர வேண்டும். ஒரே மலேசிய இந்தியனாக வாழ்வோம். நன்றி.


Tina Karan தலைவன் என்பவன் மக்களுக்குப் பணி செய்யும் சேவகன் என்று எப்பொழுது ஒருவன் நினைக்கிறானோ... அப்பொழுது தான் நாடும் வீடும் நன்மைப் பெறும் ஐயா! இங்கே நடப்பது என்ன? தலைவர் என்றாலே மற்றவர்கள் அவர்களுக்கு அடிமையாக அல்லவா பார்க்கின்றனர்..! நல்ல தலைவர் (சேவகர்கள்) இருக்கின்ற போதிலும், கொஞ்ச கூட தகுதி இல்லாத தலைவர்களும் இருக்கின்றனர் என்பது நாம் வாங்கி வந்த வரம்...


Krishnan Sockalingam அருமை ஐயா


Maha Lingam வாழ்த்துகள்...


Soma Kulim: Nandu katthai sir... (நண்டு கதை சார்)


Varusai Omar >>> Sambasivam Chinniah: உங்கள் வாழ்த்தும் வணக்கமும் எனக்காக இருந்தாலும்... தோழர் முத்துவுக்காகவும் இருந்தாலும் சரி...


Kanna Kannan: Arumai sir... Tamilan sape kedu... Malaysia vela epadiye odrumaiya elama... Porama padu.. Aduthevane kadikodothu kudi kodothu eruthom Na... Vike veraivil sonthe nadule nadu aduruvargel ake paduvom...

(அருமை சார். தமிழன் சாபக்கேடு... மலேசியாவிலே இப்படியே ஒற்றுமை இல்லாமல்... படுகிறோமே பாடு... அடுத்தவனைக் காட்டிக் கொடுத்து இருந்தோம்னா... விக விரைவில் சொந்த நாட்டிலே நாடு அற்றவர்களாக்கப் படுவோம்...)


Bakivelu Ramaya: Without you stating their names we can assume whom you mean.