தெய்வநாயகம் செட்டி மலாக்கா - 1781 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தெய்வநாயகம் செட்டி மலாக்கா - 1781 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

06 அக்டோபர் 2019

தெய்வநாயகம் செட்டி மலாக்கா - 1781

இவர் வேறு ஓர் இனத்தைச் சேர்ந்தவர் போல தெரியலாம். அல்லது வேறு ஒரு மதத்தைச் சேர்ந்தவர் போலவும் தோன்றலாம். ஏன் என்றால் இந்தப் படம் இணையத்தில் மிகவும் பரவலான படம். அண்மைய காலங்களில் பரவலாகி வரும் படிமம்.



இந்தப் படத்தின் பின்னணி தெரியாமல் பலரும் பல மாதிரியான கருத்துகளைச் சொல்லி வருகிறார்கள். ஒரு தெளிவு பெறவே இந்தப் பதிவு.

இந்தப் படத்தில் உள்ளவரின் பெயர் தெய்வநாயகம் செட்டி. மலேசியாவின் மிகப் பழைமை வாய்ந்த ஸ்ரீ பொய்யாத மூர்த்தி கோயிலைக் கட்டியவர் தான் இந்தத் தெய்வநாயகம் செட்டி ஆகும். இந்தக் கோயில் மலாக்கா மாநிலத்தில் அமைந்து உள்ளது. 1781-ஆம் ஆண்டு கட்டப்பட்ட கோயில்.

தெய்வநாயகம் செட்டி எனும் அவருடைய பெயரில் செட்டி என்று ஓர் இணைப்பு வருவதைக் கவனித்தீர்களா. ஒன்றைத் தெளிபடுத்திக் கொள்ளுங்கள். செட்டி என்பது வேறு. செட்டியார் என்பது வேறு.

செட்டி என்பவர்கள் மலாக்காவில் 600 - 700 ஆண்டு காலமாக வாழ்கிறார்கள். செட்டியார்கள் என்பவர்கள் மலாக்காவிற்கு 1890-களில் வந்தார்கள்.

டச்சுக்காரர்கள் மலாக்காவை ஆட்சி செய்யும் போது தான் ஸ்ரீ பொய்யாத மூர்த்தி கோயில் கட்டப்பட்டது (1781-ஆம் ஆண்டு). ஓர் இந்து கோயில் கட்டுவதற்கான நிலத்தை டச்சுக்காரர்கள் மலாக்கா செட்டிகளிடம் வழங்கினார்கள் (1776-ஆம் ஆண்டு).

தெய்வநாயகம் செட்டியின் கொள்ளுப் பேரன் கே.எல்.சிட்டி. இவர் மலாக்கா உயர்நிலைப் பள்ளியில் (Malacca High School) ஆசிரியராக இருந்தவர். 1966-ஆம் ஆண்டு எனக்கு ஆங்கிலம் படித்துக் கொடுத்த ஆசிரியர். 1974-ஆம் ஆண்டு காலமானார்.




தெய்வநாயகம் செட்டி மலாக்காவில் வாழ்ந்த செட்டிகளுக்குத் தலைவராக இருந்து இருக்கிறார். கொடை நெஞ்சராக நிறைய தான தர்மங்கள் செய்து இருக்கிறார். எந்த ஆண்டில் இறந்தார் எனும் விவரங்கள் கிடைக்கவில்லை.

மலாக்கா அருங்காட்சியகத்தில் இவரின் படத்தைக் காட்சிப் படுத்தி இருக்கிறார்கள். அங்கேயும் கூடுதலான விவரங்கள் கிடைக்கவில்லை.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)

Thaivanayagam Chitty - Businessman, Philanthropist and The leader of the Chitty people (1700s) is famously known as the man who built the Sri Poyatha Moorthi Temple in 1781.

Sri Poyatha Moorthi Temple is the oldest Hindu temple in Malaysia and one of the oldest functioning Hindu temples in Maritime Southeast Asia. Dutch colonial government of Malacca gave Thaivanayagam Chitty a plot of land. The temple is dedicated to Vinayagar or Ganesha.


பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்
 
Anbananthan Renga நன்றி. சில வருடத்திற்கு முன், இவரைப் பற்றி ஒரு மலேசிய தமிழ் அறிஞரிடம் சொன்ன போது பொய்யான தகவல் என்றார். இப்பொழுது தங்களின் மூலம் உண்மையை உணர்வார். எதிர்பார்க்கிறேன்.
 
Muthukrishnan Ipoh வரலாற்றை ஆழமாகவும் முழுமையாகவும் படிக்க வேண்டும் ஐயா...
  
M R Tanasegaran Rengasamy மலாக்காவின் மலாய் வீரர்களின் (ஹங்துவா)  வழி வந்தவர் போல் காணப் படுகிறார் பெரியவர் தெய்வநாயகம் செட்டி.  றந்த பின்னணியைக் கொண்டவர்களைத் தங்கள் வழி வந்தவர்கள் என அடையாளம் காட்டி விடுகிறார்கள். அதற்குரிய அதிகாரம் அவர்கள் கையில் இருக்கிறது. ஆனால் இந்தப் பெரியவரின் வழி வந்த வாரிசுகள் எவருமில்லையா? நல்ல பதிவு. மலாக்கா செட்டிகளும், செட்டியார் இனத்தவரும் வெவ்வேறு என விளக்கியது நன்று.
 
Muthukrishnan Ipoh செட்டிகள் பார்ப்பதற்கு மலாய்க்காரர்கள் போலவே இருப்பார்கள்... அவர்கள் பேசுவதும் மலாய் மொழி... இனிமையான அமைதியான மனிதர்கள்... இவர்களுடன் நெருங்கிப் பழகி இருக்கிறேன்... இவருடைய கொள்ளுப் பேரன் மட்டுமே எங்களுக்குத் தெரியும்... அவரும் 1976-இல் இறந்து விட்டார்...
 
Vel Paandiyan தமிழன், தமிழச்சி வாழ்ந்து காட்டி இருக்கிறார்கள். மறுபடியும் நமது சரித்திரம் மிளிர வேண்டும். மடிந்திடக் கூடாது தோழர்களே...
 
Muthukrishnan Ipoh உண்மைதான் ஐயா... நம் வரலாற்றைக் கொஞ்சம் கொஞ்சமாக மீட்டு எடுக்க வேண்டும்.
 
Perry Muthan Salute to Thaivanayagam Chetti Sir for building the Hindu temple in Malacca about 230 years ago.This temple evidenly record and register the Indians stay in Malacca.
 
Muthukrishnan Ipoh மலாக்கா செட்டிகள் பல நூறு ஆண்டுகளாக மலாக்காவில் வாழ்ந்து வருகிறார்கள்...
 
Dawa Rajan Devan Thanks for all historical information...something to be proud of...
 
Muthukrishnan Ipoh தங்களின் உற்சாகமான சொற்களுக்கு நன்றிகள்
 
Kumar Murugiah Kumar's Pathivu arumai... nandri (பதிவு அருமை... நன்றி)
 
Sarasvathy Kandasamy Saras Antha perumai ayya ungkaluku serum... Valthukkal.(அந்தப் பெருமை ஐயா உங்களுக்குச் சேரும்... வாழ்த்துகள்)

Sri Kaali Karuppar Ubaasagar அருமை... அருமை...புதைக்கப் பட்டும் மறைக்கப் பட்டும் எத்தனை எத்தனை உண்மைகள் உங்களது (செங்கோளால்) எழுதுகோலால் உயிர் பெறுகிறது அண்ணா... நன்றி வணக்கம் அண்ணா...
 
Mu Ta Neelavaanan Muthuvelu ஐயா... இந்த செட்டிகளுக்கும், நகரத்தார்களுக்கும் தொடர்பு இல்லையோ...

Muthukrishnan Ipoh இல்லை... இரு இனத்தவர்களும் வெவேறான வம்சாவளியினர்...