தமிழ் மலர் 05.06.2017 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் மலர் 05.06.2017 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

05 ஜூன் 2017

தமிழ் மலர் 05.06.2017


 *தமிழ்நாட்டைத் தமிழர்கள் ஆட்சி செய்யும் வரையில்*

2004 சுனாமிக்குப் பிறகு தமிழகத்தின் கல்பாக்கத்தைச் சுற்றி உள்ள பகுதிகளில் வாழ்ந்த மக்களுக்குப் பலவிதமான புதுப் புது நோய்கள். 

புதுச்சேரியைச் சேர்ந்த நான்கு மீனவக் குப்பங்களில் புற்றுநோய், பிறவி ஊனம், கருக்கலைதல் அதிகமாயின. புதுச்சேரி மாநில அரசும் வேறு வழி இல்லாமல் ஒப்புக் கொண்டு இருக்கிறது. கதிர்வீச்சு காரணமா என்று கண்டு அறியப்பட வேண்டும் என்றும் சொல்கிறது.

’மல்டிபில் மயலோமா’ (Multiple Myeloma) என்பது ஒரு வகையான எலும்பு மஜ்ஜை புற்றுநோய் ஆகும். இந்த நோய் கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர்களிடம் அதிகமாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.

ஆனால் இன்று வரை அதைப் பற்றி பொது மக்களுக்கு சரியான முறையில் விளக்கங்கள் எதுவும் கொடுக்கப்படவும் இல்லை. சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் கொதிப்பு அடைந்து போய் இருக்கின்றனர்.

https://www.saddahaq.com/the-harmful-effects-of-nuclear-power-plant-in-kalpakkam - The Harmful effects of Nuclear power plant in Kalpakkam
 


உலகில் உள்ள எல்லா நாடுகளுமே ஜப்பான் புகுஷிமாவில் நடந்த விபத்தை நல்ல ஒரு பாடமாக எடுத்துக் கொள்கின்றன. பல நாடுகள் புதிய அணு ஆலைத் திட்டங்களை ஒத்தி வைக்கின்றன.

இப்போது இருக்கும் அணு உலைகளின் பாதுகாப்புகளைப் பற்றி தீவிரமான ஆய்வு நடவடிக்கைகளில் இறங்கி உள்ளன. அணு உலைகளைப் பற்றி மறுபரிசீலனைகள் செய்கின்றன.

ஆனால் இந்தியா மட்டும், தான் பிடித்த முயலுக்கு மூன்றே முக்கால் கால்கள் என்று பிடிவாதம் பிடிக்கிறது.

தமிழகக் கூடாங்குள அணுமின் நிலையம் வேண்டாம் என்று தமிழக மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர் செய்கின்றனர். உண்ணாவிரதம் இருந்தனர் இருக்கின்றனர். ஆபத்து வரும் என்று தலையால் அடித்துக் கொள்கின்றனர்.

ஆனால் முன்பு டில்லியில் இருந்த மோகன்ஜி அரசாங்கம் கொஞ்சம்கூட கண்டு கொள்ளவில்லை. செத்தால் தமிழன் தானே சாகிறான் என்ற நினைப்பில் ஏனோ தானோ போக்கில் வாழ்ந்தார்கள்.

அதற்கு ஒத்து ஊதியது ஒரு பதிவிரதா இட்லி சாம்பார் அண்ட் கம்பெனி. கடைசியில் மோடி என்கிற கப்பல் மோதி அந்தக் கம்பெனியைக் ஆழ்கடலுக்குள் மூழ்கடித்து விட்டது. நல்லது. புரியும் என்று நினைக்கிறேன்.

அப்புறம் இன்னும் ஒரு விசயம். அப்படியே கூடாங்குள அணுமின் நிலையத்தில் பிரச்னைகள் என்று வைத்துக் கொள்ளுங்கள். சும்மா ஒரு பேச்சுக்குத் தான். அப்படி ஒரு நிலை வரக்கூடாது.

அப்படியே வந்தால் முதலில் ‘ஏர்கண்டிஷன்’ போட்டு உண்ணாவிரதம் இருக்கப் போவது நாடறிந்த நல்ல ஒரு பெருமகனாகத் தான் இருப்பார். நான் சொல்லவில்லை. சொல்வேனா. அப்படித்தான் தமிழகத்தின் கூடாங்குள ஏழை மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.

தமிழ்நாட்டைத் தமிழர்கள் ஆட்சி செய்யும் வரையில் தமிழ் நாட்டுத் தமிழர்களுக்கு விமோசனம் இல்லை. அது ஒரு சாபக்கேடு.