காந்திஜியின்_நோபல்_பரிசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காந்திஜியின்_நோபல்_பரிசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

12 செப்டம்பர் 2009

காந்திஜியின் நோபல் பரிசு

மகாத்மா காந்தியைப் பற்றி தெரியாதவர்கள் உலகில்  யாருமே இருக்க முடியாது. ஆசாரமான குடும்பத்தில் பிறந்தவர். சாமான்ய மனிதராக வாழ்ந்தவர். ஆசாபாசங்களை அடக்கி உயர்ந்தவர். மனிதக் கோபுரத்தில் புனித தெய்வமாக மறைந்தவர். மண்ணில் மனிதன் மறையும் வரையில் அந்த ஆத்மாவின் சுவடுகள் நிலைத்து நிற்கும்.

அவர் மறைந்த போது உலகில் சில நாடுகள் தங்களின் தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிட்டன. பல நாடுகள் அஞ்சல் தலைகளை வெளியிட்டு மரியாதை செய்தன. இருபதாம் நூற்றாண்டின் தலை சிறந்த அமைதிச் சின்னமாக மதிக்கப்படும் மகாத்மா மறைந்து அறுபது ஆண்டுகளாகிவிட்டன.
தணிக்கை அறிக்கைகள்

சரி! அப்பேர்ப்பட்ட ஒரு மனிதருக்கு மட்டும் நோபல் பரிசு ஏன் கொடுக்கப்படவில்லை. எத்தனையோ காமா சோமாக்களுக்கு கொடுத்து உச்சி முகர்ந்து பார்த்திருக்கிறார்கள்.

ஒருக்கால் மகாத்மா அந்தப் பரிசுக்கு அப்பாற்பட்ட மனிதராகத் தெரிந்திருக்கலாம். அல்லது அவருக்கு இந்தப் பரிசைக் கொடுத்து ஏன் நோபல் பரிசின் தகுதியை மிகைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்திருக்கலாம்.

எது எப்படியோ, நியாயப்படி கொடுக்கப்பட வேண்டிய ஒருவருக்கு கொடுக்க 'மறந்து' விட்டார்கள். ஆனால் ஒன்று மட்டும் உண்மை. மகாத்மா காந்திக்குக் நோபல் பரிசு கொடுக்கப்படாதது பெரிய அதிசயம்.

பலர் பலவிதமான காரணங்களைச் சொல்கிறார்கள். இந்தியப் பத்திரிகைகள் பல கண்டனக் கட்டுரைகளையும் எழுதின. உருப்படியான காரணங்கள் கிடைக்கவில்லை.


இருப்பினும் நோபல் பரிசு காப்பகத்திலிருந்து தணிக்கை செய்யப்பட்ட அறிக்கைகள் ஆவணங்களிலிருந்து கசக்கிப்  பிழியப்பட்ட சில தகவல்கள் இங்கே உங்களுக்காக வழங்கப்படுகின்றன. படியுங்கள். நியாயத்தைச் சொல்லுங்கள். 

ஒவ்வோர் ஆண்டும் நோபல் பரிசுகள் பௌதீகம், இரசாயனம், மருத்துவம், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் போன்ற ஆறு துறைகளில் கொடுக்கப்படும். உலகில் தலைசிறந்த மனிதர்கள், மேதைகள், கண்டுபிடிப்பாளர்களின் பெயர்கள் நோபல் பரிசு தேர்வுக் குழுவினருக்கு பரிந்துரைக்கப்படும்.

2அந்தப் பெயர்களைத் தேர்வுக் குழுவினர் பரிžலனை செய்வார்கள். அதன் பின்னர் மேற்சொன்னத் துறைகளில் ஒரு துறைக்கு ஒருவர் வீதம் ஆறு துறைகளுக்கும் ஆறு பேர் தேர்ந்தெடுக்கப்பார்கள். அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

ஒவ்வொரு பரிசும் முப்பத்தைந்து இலட்சம் ரிங்கிட் மதிப்புள்ளது. இந்தியாவிற்கு நான்கு முறை கிடைத்திருக்கிறது. ரபீந்தரநாத் தாகூர் (இலக்கியம்-1913) சர் சி.வி.ராமன் (இயற்பியல்- 1930) அன்னை திரேசா (அமைதி-1979) அமிர்தயா சென் (பொருளாதாரம்-1998).  

இதைத் தவிர 1983ல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர் சந்திரசேகருக்கு இயற்பியல் துறையில் கிடைத்திருக்கிறது.

சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஆல்பிரட் நோபல் என்பவர் நைட்ரோ கிலிசரின் எனும் அமிலத்தைப் பயன்படுத்தி  வெடிமருந்து கண்டுபிடித்து ஒன்றாம் நம்பர்  பணக்காரரானார்.
 
வெடிமருந்துகளைப் பயன்படுத்திச் சுரங்கப்பாதைகள் செய்து பெரிய பெரிய பாலங்களைக் கட்டினார். சுவீடனில் ஒரு பயங்கரமான ஆயுதத் தொழிற்சாலையையும் கட்டினார். அதன் பெயர் போபர்ஸ்.

இந்தத் தொழிற்சாலைதான் 1980களில் இந்தியாவில் ஒரு லஞ்ச களேபரத்தையே உண்டாக்கிவிட்டு போனது. இந்திய இராணுவத்திற்கு ஆயுதங்கள் வாங்குவதாகச் சொல்லி காங்கிரஸ் தலைவர்கள் லஞ்சத்தை வாங்கி வந்தார்கள். மாபெரும்  மண்டைகள் உருண்டு போயின.
 
மனுக்குல நன்மைக்கு

4Gandhi_and_Indira_1924உலகம் முழுமையும் 90 வெடிமருந்து தொழிற்சாலைகளை ஆல்பிரட் நோபல் வைத்திருந்தார். அதனால் பின் நாட்களில் பல்லாயிரம் உயிர்கள் பலியாகின. மனம் வேதனையடைந்த அவர் அதற்குப் பரிகாரமாக தன் சொத்தில் பெரும்பகுதியை மனுக்குல நன்மைக்குப் பயன்பட வேண்டும் என்று உயில் எழுதினார்.

27 நவம்பர் 1895ல் எழுதிய அந்த உயிலில் தன் சொத்துகளை நோபல் அறவாரியம் பராமரிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.

ஒரு வருடம் கழித்து இறந்தும் போனார். இராசயனம், பௌதீகம், இலக்கியம் ஆகிய மூன்று துறைகளையும் அரச சுவீடன் அறிவியல் கழகம் கவனித்துக் கொள்கிறது.
 
5Gandhi_with_Tagore_Shantiniketan_1940நார்வே நாட்டின் காரோலின்ஸ்கா ஆய்வுக்கழகம் மருத்துவத் துறையைக் கவனித்துக் கொள்கிறது. அமைதித் துறையை நார்வே  நாடாளுமன்றக் குழுமம்  கவனித்துக் கொள்கிறது.

1960 ஆம் ஆண்டு அல்பர்ட் லூதுலி எனும் ஆப்ரிக்க போராட்டவாதிக்கு அத்தி பூத்தாற் போல அமைதிக்கான நோபல் பரிசைக்கொடுத்தார்கள். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். 

ஐரோப்பாவைத் தவிர வேறு நாட்டவருக்கு    கொடுக்கப்பட்டது அதுதான் முதல் தடவை.

அதுவரை நோபல் அமைதிப் பரிசு என்பது  ஐரோப்பியர்களின் தாத்தா பாட்டன் - மாமன் மச்சான்  சொத்தாகவே இருந்தது.  1964 ஆம் ஆண்டு கொஞ்சம் இறங்கி வந்து, மார்ட்டின் லூதர் கிங் எனும் கறுப்பின போராட்டவாதிக்கு   கொடுத்தார்கள்.

7gandhiph1ஜெர்மன் அதிபர் வில்லி பிராண்ட் (1971), 
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கீசிங்கர் (1973), 
வட வியட்நாமிய அதிபர் லீ டக் தோ (1973),  
ஜப்பானிய பிரதமர் இசாக்கு சாத்தோ (1974),  
இஸ்ரேலிய பிரதமர்கள் மினாசெம் பெகின் (1978) சைமொன் பெரெஸ் (1994) 
இட்சாக் ராபின் (1994),  
எகிப்திய அதிபர் அன்வார் சடாட் (1978), 
அன்னை திரேசா (1979), 
போலந்து நாட்டின் வாலேசா (1983), 
 தென் ஆப்ரிக்கப் பாதிரியார் டெஸ்மாண்ட் தூதூ (1984),  
அங் சான் சுகி (1991),
பாலஸ்தீனப் பிரதமர் யாசிர் அராபாட் (1994), 
ஈரானிய போராட்டவாதி சிரின் எபாடி (2003) 
போன்றவர்களுக்கு அமைதிப் பரிசைக் கொடுத்- திருக்கிறார்கள்.  
2004ல் வாங்காரி மாத்தாய் எனும் கென்யா பெண்மணிக்கு கொடுத்தார்கள்.

ஐ.நா. பொதுச் செயலாளர் கோபி அனானுக்குகூட 2001ல் கொடுத்திருக்கிறார்கள். அதைவிட இன்னொரு படி மேலே போய், இறந்து போன இரண்டாவது ஐ.நா. பொதுச் செயலாளர் டெக் ஹாமர்சால்ட்டிற்கு 1961லேயே கொடுத்திருக்கிறார்கள். அதன்பிறகு மிக அண்மையில் நெல்சன் மண்டேலாவுக்குக் கொடுத்தார்கள்.

பாரம்பரிய கொடுக்கல் வாங்கல் உறவுகள்
இதில் ஒரு சிறப்பு என்னவென்றால் இவர்கள் அனைவருமே மகாத்மாவைத் தங்களுடைய குருவாக ஏற்றுக் கொண்டவர்கள். அவரைத் தெய்வமாக நினைத்தவர்கள். இவர்கள் மட்டுமல்ல இன்னும் நிறைய பேர் உள்ளனர்.

ஆனால், அவர்களின் ஆத்மீக குருவிற்கு மட்டும் நோபல் பரிசு கொடுக்கப்படவில்லை. இவர்களைவிட காந்தி எதில் குறைந்து போனார் என்பதுதான் நம்முடைய கேள்வி.

சரி, என்ன காரணம். நார்வே நோபல் செயற்குழுவின் மனப்பான்மை குறுகிப் போனதா? இல்லை ஐரோப்பியர் அல்லாதவர்களின் விடுதலை உணர்வுகளை ஜரணிக்க முடியவில்லையா?

8gandhiஇல்லை இங்கிலாந்துக்கும் தங்கள் நாட்டுக்கும் இடையே உள்ள பாரம்பரிய கொடுக்கல் வாங்கல் உறவுகள் பாதிக்கப்படும் என்ற பயந்தாங்கொள்ளித் தனமா? இப்படிப்பட்ட கேள்விகள் எழவே செய்கின்றன.
'பாகிஸ்தானை இந்தியாவிலிருந்து பிரித்துக் கொடுத்ததால் இனக்கலவரம் ஏற்பட்டது. 

அதனால் பல்லாயிரக்கணக்கான பேர் மாண்டு போயினர். ஆக, பல ஆயிரம் உயிர்கள் பலி போனதற்கு காரணமாக இருந்தவருக்கு எப்படி அமைதிக்கான பரிசைக் கொடுப்பது' என்று தேர்வுக் குழுவினர் கேட்கிறார்கள்.

'அமைதிக்குத்தான் பரிசு கொடுக்கப்படுகிறது. அமைதி என்ற பெயரில் நடந்தவற்றில் அமைதியின்மை இருந்ததால் அங்கே அமைதி அடிபட்டு போகிறது. ஆகவே, அமைதி இல்லாத ஒன்றுக்கு அமைதி பரிசைக் கொடுப்பதில் நியாயமில்லை' என்கிறார்கள்.

'இந்தியாவிலிருந்து பாகிஸ்தானைப் பிரித்துக் கொடுத்த வரையில் சரி. ஆனால், பிரித்துக் கொடுத்த பின் ஏற்பட்ட கலவரத்தில்தான் அமைதிப் பிரச்னை ஏற்பட்டது. அமைதியே இல்லாமல் போய்விட்டது. ஆகவே, காந்திக்கு நோபல் பரிசு கொடுப்பதில் இடைஞ்சல் ஏற்பட்டது' என்று தேர்வுக் குழுவினர் வாதிடுகின்றனர்.
  
இன்னும் சில காரணங்களும்  சொல்லப்படுகிறன. ஆகா! எப்பேர்ப்பட்ட தத்துவார்த்த, வெள்ளைக்கார  உண்மைகள்.

இந்தியாவின் தோழர்கள்
9jb05824சரி, விஷயத்திற்கு வருவோம். 1930களில் காந்திஜிக்கு ஆதரவான பல அறவாரியங்கள் உலகம்  எங்கும் தோன்றின.

அவற்றிற்கு
'இந்தியாவின் தோழர்கள்' என பெயரிட்டு அழைத்தனர். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் நிறைய கிளைகள் இருந்தன. 

அந்த வகையில் நார்வேயிலும் ஒரு கிளை உருவானது.

அதற்கு ஒலே கோல்சென் என்பவர் தலைவராக இருந்தார். அவர்     தொழிற் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர். 1937ல் காந்திஜியின் பெயரை நோபல் பரிசு தேர்வுக் குழுவிற்கு முதல் முறையாக அனுப்பினார். ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

'காந்திஜியின் கொள்கைகளில் கூர்மையான திருப்பு முனைகள் உள்ளன. ஒரு கட்டத்தில் விடுதலை வீரராக இருக்கிறார். மறுகணம் சர்வாதிகாரி போல தோன்றுகிறார்.  ஒரு கட்டத்தில் கொள்கைவாதியாக இருக்கிறார்.

மறுகணம் தேசியவாதியாக மாறுகிறார். மதம் மாறியது போல பேசுகிறார். திடீரென்று சாதாரண அரசியல்வாதியாகிறார்
' என்று சொல்லப்பட்டு நியமனம் நிராகரிக்கப்பட்டது.
  
ksmuthukrishnan11Mahatma_gandhi_and_Jinnahஅனைத்துல ரீதியில் காந்திஜிக்கு சில எதிர்ப்புகள் இருக்கவே செய்தன. 'காந்திஜி தொடர்ந்தாற் போல அகிம்சாவாதியாக இருந்தார் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. 

பிரிட்டிஷாருக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கம் நியாயமானதுதான்.

இருந்தாலும் பயங்கரமான வன்முறைகள் நடந்துள்ளன. 1920-1921ல் நடந்த ஒத்துழையாமை இயக்கத்தை குறிப்பிட்டுச் சொல்லலாம். மத்திய பிரதேசத்தில் சவுரி சவுரா எனும் இடத்தில் நடந்த சம்பவம்.

ksmuthukrishnan12Mahatma_Gandhi_With_Charlie_Chaplinபேரணியில் கலந்து கொண்டவர்கள் போலீஸ் நிலையத்தைத் தாக்கி பல போலீஸ்காரர்களைக்   கொன்றனர். அப்புறம் அந்த போலீஸ் நிலையத்தையே எரித்துவிட்டனர்.

அந்தப் பேரணியைத் தூண்டிவிட்டவருக்கு எப்படி நோபல் பரிசு கொடுப்பது
' என்று சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நோபல் பரிசு தேர்வுக் குழுவின் ஆலோசகராக Jacob Worm-Muller என்பவர் இருந்தார். அவர் காந்திஜியின் பெயரை நிராகரிக்கும் போது 'இவர் இந்திய தேசியவாதியாகவே அதிகம்  தெரிகிறார். தென் ஆப்ரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களுக்காக மட்டுமே போராடியிருக்கிறார்.
 
இந்தியர்களைவிட மிக மோசமான நிலையில் வாழ்ந்த கறுப்பர்களின் வாழ்க்கை நிலையை நினை த்துப் பார்க்கவில்லை. அதனால் 1937 ஆம் ஆண்டிற்கான நோபல் அமைதிப் பரிசை Lord Cecil of Chelwood என்பவருக்குக் கொடுக்கிறோம்' என்று கூறியிருக்கிறார்.

ஐந்து முறை காந்திஜியின் பெயர் 
ksmuthukrishnan14gandhi3முதலாம் உலகப் போருக்குப் பிறகு உலக நாடுகளின் ஒற்றுமைக்காக ஒர் ஒன்றியம் அமைக்கப்பட்டது. அதன் பெயர் 'லீக் ஆப் நேஷன்ஸ்'.

அந்த ஒன்றியத்தின சட்ட திட்டங்களை வடிவமைத்துக் கொடுத்தவர்தான் இந்த லார்ட் செசில். ஓர் ஆங்கிலேயர்.
1919ல் அவர் எழுதிய கடிதத்திற்கு 1937ல் கொடுத்தார்கள்.

காந்திஜியின் பெயரை அமுக்கிவிடலாம் என்பதற்காக இதைச் செய்திருக்கலாம். இல்லையா. இப்படியும் பார்க்க வேண்டும். 

1937, 1938, 1939, 1947, 1948 ஆண்டுகளில் காந்திஜியின் பெயர் நோபல் பரிசுக்கு முன் மொழியப்பட்டுள்ளது.  மூன்று முறை இறுதிச் சுற்றுக்கும் வந்தது. ஆனால், ஒரு முறைகூட தேர்வு பெறவில்லை.

1947 ஆம் ஆண்டு நோபல் அமைதிப் பரிசுக்கான  நியமனம் இந்தியாவிலிருந்து வந்தது. அதை பம்பாய் கவர்னர் பி.ஜி.கெர், ஐக்கியப் பிரதேச முதல்வர் கோவிந்த் பல்லாபந்த், இந்திய சட்டசபைத் தலைவர் மாவலங்கார் ஆகியோர் காந்தியின் பெயரைத் தாக்கல் செய்திருந்தனர்.
அத்துடன் மேலும் ஐவர் பெயர்களும் உலகின் வெவ்வேறு இடங்களிலிருந்து தாக்கல்          செய்யப்பட்டிருந்தன.

ksmuthukrishnan15MahatmaGandhi_4தேர்வுக்குழுவில் ஐவர் இருந்தனர். அனைவருமே நார்வே நாடாளுமன்ற உறுப்பினர்கள். அவர்களில் Herman Smitt Ingebretsen என்பவரும் Christian Oftedal என்பவரும் 1947 ஆம் ஆண்டிற்கான அமைதிப் பரிசை காந்திஜிக்கு கொடுத்தே ஆக வேண்டும் என்று விடாப்பிடியாக நின்றனர்.

ஆனால், தேர்வுக்குழுவில் எஞ்சிய மார்டின் டிரான்மல், பிகர் பிராட்லண்ட், குன்னர் ஜான் மூவரும் மறுத்தனர். இந்த மூவரில் ஒரே ஒருவர் மட்டும் அந்தப் பக்கம் சாய்ந்திருந்தால் சரித்திரமே வேறு மாதிரி போயிருக்கும். என்ன செய்வது.

காந்திஜிக்கு அதிர்ஷ்டம் இல்லையா இல்லை அவரை நம்பிய உலகத்திற்கு அதிர்ஷ்டம் இல்லையா. புரியவில்லை.

நீதி நெறிமுறைகளுக்கு ஒத்து வராமல்
இந்த மூவரும் மறுத்ததற்கு காரணம் இந்திய-பாகிஸ்தான் நெருக்கடி நிலைமைதான். எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல அமைந்தது ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் 1947 செப்டம்பர் 27 ஆம் தேதியில் அனுப்பிய செய்தி.
 
'பாகிஸ்தான் தனியாக ஒரு தரைப்படை, ஒரு கப்பற்படை, ஒர் விமானப்படை வேண்டும் என்று கேட்கிறது. இருக்கும் இந்திய இராணுவத்திலிருந்துதான் வர வேண்டும் என்கிறது.

16Tagore_Gandhi
ஆகவே, நீதி நெறிமுறைகளுக்கு ஒத்து வராமல் முரண்டு செய்தால் இந்தியாவிற்கு வேறு வழியில்லை. போருக்குப் போக வேண்டிய நிலைமை ஏற்படலாம்' என்று வேதனைப் பட்டு காந்தி சொல்கிறார்.

இந்தச் செய்தியை அந்த மூவரும் ஒரே உடும்பு பிடியாய்ப் பிடித்துக் கொண்டனர். ஒர் அமைதி விரும்பி போரைப் பற்றி பேசவே கூடாது. 

அவருக்கு அமைதிப் பற்றைவிட நாட்டுப்பற்று மேலோங்கி நிற்கிறது என்று முடிவு செய்தனர்.

அதனால், 1947 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசை 'குவாக்கர்ஸ்' என்றழைக்கப்பட்ட அமெரிக்கத் தோழமைக் கழகத்திற்கு கொடுத்தனர். இரண்டாவது முறையும் நோபல் பரிசு காந்திஜிக்கு கிடைக்காமல் போனது.

1948 ஆம் ஆண்டு ஒரு தமிழர், காந்தியின் பெயரை நோபல் தேர்வு குழுவிற்கு முன்மொழிந்தார். யார் அந்தத் தமிழர். அவர்தான் டாக்டர் கே.எஸ்.கிருஷ்ணன்.

நோபல் பரிசு பெற்ற 'ராமன் விளைவு' பற்றி நாம் எல்லோரும் அறிவோம். உலகமே வியந்து பாராட்டிய Raman Effects கண்டுபிடிப்பை 'ராமன்-கிருஷ்ணன்' விளைவு என்றுதான் அழைக்க வேண்டும்.

132005052901681602அந்தக் கண்டுபிடிப்பை சர்.சி.வி.ராமனும் கிருஷ்ணனும்தான் சேர்ந்து கண்டுபிடித்தார்கள். இருந்தாலும் பெரிய மனசு படைத்து கூட்டாளி தர்மத்தில் ராமனுக்கு விட்டுக் கொடுத்தார் டாக்டர் கிருஷ்ணன். அதன் விளைவாக சர் சி.வி.ராமனுக்கு நோபல் பரிசு  கொடுத்தார்கள்.
 
உலகில் பலருக்கு இந்த விஷயம் தெரியும். சிலருக்குத் தெரியாது. மேற்கு நாடுகளில் இன்றும் 'ராமன் கிருஷ்ணன்' விளைவு என்றுதான் அழைக்கிறார்கள். கிழக்கில்தான் 'ராமன் விளைவு' என்று அழைத்து வருகிறோம்.

மாபெரும் உதாரணப் புருஷராய் விளங்கிய டாக்டர் கிருஷ்ணன், மகாத்மாவின் மானசடராய் வாழ்ந்தும் காட்டியவர். இந்திய இயற்பியல் (Physics) ஆய்வுக்கூடத்தின் இயக்குநராய்ப் பணியாற்றியவர்.

டாக்டர் கிருஷ்ணன் மறைந்த பிறகு அவருடைய ஆவணங்கள் புதுடில்லியில் உள்ள தீன்மூர்த்தி பவனில் இருக்கும் நேரு நினைவு நூலகத்திற்கு அன்பளிப்பு செய்யப்பட்டு, இன்று வரையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

கத்தியின்றி ரத்தமின்றி 
nathuram-godse-and-mahatma-gandhi-rare-real-unseen-picture-before-assassination
1947 ஆம் ஆண்டு தொடக்கத்தில் அலாகாபாத் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறைத் தலைவராக இருந்தவர்.

மகாத்மா காந்திக்கு உலகின் மிகப் பெரிய விருதான நோபல் பரிசு கிடைக்க வேண்டும் என்று  யாருக்கும் தெரியாமல் அமைதியாக முயற்சிகளை செய்து வந்தவர். காந்திக்கு இந்த விஷயம் தெரியாது.


நார்வே நோபல் பரிசு தேர்வுக் குழுவில் டாக்டர் கிருஷ்ணனின் நண்பர் ஒருவரும் இருந்தார். அவருக்கு கடிதம் எழுதினார்.
 
அந்த நண்பர் காந்திஜி பற்றிய சிறப்புச் செய்திகளைத் தயாரித்து ராஜாஜிக்கு அனுப்பி வைத்தார். படித்துப் பார்த்த ராஜாஜி அவற்றை டாக்டர் கிருஷ்ணனுக்கு அனுப்பி வைத்தார்.

பின்னர், அந்தக் குறிப்புகள் தேர்வுக் குழுவினருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால், பரிசு கிடைக்கவில்லை. ஏன்        தெரியுமா? முதலில் சொன்னேனே... ராய்டர்ஸ் நிறுவனத்தின் செய்திகள் தப்பாக வியாக்கியானம் செய்யப்பட்டன என்று.
அதே பிரச்னைதான். இருந்தாலும் டாக்டர் கிருஷ்ணன் மனம் தளரவில்லை. எப்படியாவது காந்திக்கு நோபல் பரிசு வாங்கிக் கொடுத்துவிட வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார்.

1948 ஆம் ஆண்டிற்கான பரிசை வாங்கிக் கொடுத்துவிடலாம் என்று முயற்சியும் செய்தார். இந்தியா விடுதலை பெற்ற நேரம் அது. இந்தியாவின் விடுதலை குறித்து உலகமே மூக்கில் விரலை வைத்த நேரம். கத்தியின்றி ரத்தமின்றி சாணக்கியம் செய்து வாங்கிய விடுதலை.

மகாத்மாவின் அகிம்சாக் கொள்கையை உலகச் சமுதாயம் அங்கீகரித்த காலக்கட்டம். நோபல் பரிசு தேர்வுக் குழுவினரும் அந்த ஆண்டிற்கான அமைதிப் பரிசை மகாத்மாவிற்குக் கொடுக்க முடிவும் செய்திருக்கலாம்.
 
ஆனால், விதி விளையாடிவிட்டது. 1948 ஜனவரி மாதம் 30ஆம் தேதி மகாத்மா சுட்டுக் கொல்லப்பட்டார்.

அந்த ஆண்டு காந்தியின் பெயரை நியமனம் செய்து தேர்வுக் குழுவினருக்கு ஆறு கடிதங்கள் வந்தன. அதில் இரண்டு ஏற்கனவே நோபல் பரிசு பெற்றவர்களின் கடிதங்கள். எமிலி கிரீன் என்பவர் ஒருவர். இருந்தாலும் கிடைக்கவில்லை.

மகாத்மா இறந்து போனாலும் Posthumous Nomination என்று அவருடைய பெயரில் கொடுத்திருக்கலாம். அதிலும் சில இடைஞ்சல்கள் இருக்கவே செய்தன. 

gransonஅப்படியே பரிசைக் கொடுத்தாலும் யாரிடம் கொடுப்பது. உயிரோடு இருந்திருந்தால் நேரடியாகக் கையில் கொடுக்கலாம். அவர்தான் உயிரோடு இல்லையே.
 
மகாத்மா எந்த ஒரு கழகத்தையும் சார்ந்தவர் இல்லை. அவர் பெயரில் எந்த சொத்தும் இல்லை. எந்த உயிலும் இல்லை. எந்த ஒரு வங்கிக்கணக்கும் இல்லை.
 
ஆக, அந்தப் பரிசுப் பணத்தை யாரிடம் கொண்டு போய் கொடுப்பது, சேர்ப்பது என்று தேர்வுக் குழுவினர் மண்டையைப் போட்டுக் குழப்பிக் கொண்டார்கள்.

கடைசியில்  கொடுக்கப் படாமலேயே போனது. பின்னர் அந்த ஆண்டிற்கான நோபல் அமைதிப்  பரிசுக்குப் பொருத்தமான நபர் உலகில் யாரும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டது.

1948ஆம் ஆண்டு யாருக்கும் பரிசு கொடுக்கப்படவில்லை என்பதை மறுபடியும் நினைவு படுத்துகிறேன்.

பொருத்தமான நபர் யாரும் இல்லை

'பொருத்தமான மனிதர் இல்லை' என்று சொன்னார்களே இதில் ஒரு சந்தேகம் இருந்தது. அப்போது பாலஸ்தீனத்திற்கு ஐ.நா பிரதிநிதியாக கவுண்ட் பெர்னாடோதே என்பவர் இருந்தார். அவர் சுவீடன் நாட்டைச் சேர்ந்தவர்.

அவருக்கு கொடுப்பதற்கு முடிவு செய்யப்பட்டு காந்திஜிக்கு மறுக்கப்பட்டிருக்கலாம். மூடு மந்திர வேலை நடந்திருக்கலாம் எனும் சந்தேகம் இருக்கவே செய்தது. இருந்தாலும் பெர்னாடோதேவின் பெயர் முன்மொழியப்படவில்லை என்பது தெரிய    வந்ததும் தேர்வுக் குழுவினர் நியாயமாகவே நடந்திருக்கிறார்கள் என்பது பின்னர்  தெரிய வந்தது.
 
ஆக, காந்தி இன்னும் ஓர் ஆண்டு உயிரோடு இருந்திருந்தால் நிச்சயம் அவருக்கு பரிசைக்     கொடுத்திருப்பார்கள்.

1989 ஆம் ஆண்டுக்கான அமைதிப் பரிசை புத்த சமயவாதி டாலாய் லாமாவிற்கு கொடுத்தார்கள். அப்போது டாலாய் லாமா சொன்னார். 'இந்தப் பரிசை மனிதச் சமுதாயத்தின் அமைதிச் சின்னமான மகாத்மாவின் நினைவாக வாங்கிக் கொள்கிறேன்' என்றார்.

3YoungGandhi

ஆனால், ஒன்றை இங்கே நினைவில் கொள்ள வேண்டும். மகாத்மாவின் பிள்ளைகள் ஹரிலால், மணிலால், ராம்தாஸ், தேவதாஸ் ஆகிய நால்வரும் அந்தச் சமயத்தில் உயிருடன் தான் இருந்தார்கள். ஹரிலால் குடித்து குடித்து வாழ்க்கையை அழித்துக் கொண்டவர்.

காந்தி இறந்து போன பிறகு சில மாதங்களில் அவரும் இறந்து போனார். இவர்களில் தேவதாஸ் மட்டுமே மகாத்மாவுடன் கடைசி வரை இருந்தார்.
அவருக்காவது அந்தப் பணத்தைக் கொடுத்திருக்கலாம். 1976ஆம் ஆண்டு கணக்குப்படி மகாத்மாவின் வழி வந்தவர்கள் 47 பேர் உலகில் ஐந்து நாடுகளில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

உலகை இயங்க வைக்கும் இயற்பியல் விதிகளில் இரண்டை கண்டுபிடித்த  தமிழர்கள் இருவருக்குமே நோபல் பரிசு கொடுக்கப்பட்டது. அதன் பிறகு கடந்த அறுபது வருடங்களாக எந்தத் தமிழருக்கும் கிடைக்கவில்லை. அண்மையில் அமெரிக்காழ் ிழுக்குக் கிடத்ு உள்ளு.

மறுபடியும் யாருக்காவது கிடைக்க வேண்டும்.  வேண்டிக் கொள்வோம்.