வாட்ஸ் அப் தடை செய்த நாடுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாட்ஸ் அப் தடை செய்த நாடுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

25 ஜூன் 2017

வாட்ஸ் அப் தடை செய்த நாடுகள்

உலகில் சில நாடுகளில் வாட்ஸ் அப் பயனர்களின் கணக்குகள் தடை செய்யப் படுகின்றன. அரசியல் காரணங்களே முக்கியமானவை. 


எந்த நாட்டில் அரசியல் தலைவர்களைப் பற்றியும் அரசாங்கத்தைப் பற்றியும் அதிகமாக விமர்சனங்கள் செய்யப் படுகின்றனவோ அங்கே எல்லாம் பல ஆயிரம் பயனர்களின் வாட்ஸ் அப் தடை செய்யப் படுகின்றன.

மலேசியாவில் வாட்ஸ் அப் தடை செய்யப்படும் வாய்ப்புகள் நிறையவே உள்ளன. முடிந்த வரையில் அரசு சார்ந்த அவதூறுகள், வதந்திகளைப் பதிவு செய்வதைத் தவிர்க்கவும். உண்மையான செய்திகளாக இருந்தால் பதிவு செய்யலாம்.

ஆனால் ஒரு தலைவரைப் பற்றி கிண்டல் கேலியான நையாண்டியான பதிவுகள்; அவரைப் பற்றிய அவதூறான நக்கலான செய்திகள் முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும்.

ஒரு தடவை உங்கள் வாட்ஸ் அப் தடை செய்யப் பட்டால் அதன் பின்னர் உங்கள் வாட்ஸ் அப் ஒரு நிரந்தரத் தடையாகி விடும். 



கைப்பேசி எண்களை மாற்றி விட்டால் தப்பிக்கலாமே என்று நினைக்க வேண்டாம். அந்த எண்கள் உங்கள் பெயரில் தானே பதிவு செய்யப் படுகிறது. 

 மனைவி பிள்ளைகளின் கைப்பேசிகளைப் பயன்படுத்தினால் அந்த எண்களின் வாட்ஸ் அப் கணக்கும் தடை செய்யப்படும்.

அந்தத் தடை வரிசையில் மலேசியா ஏழாவது இடத்தில் இருக்கிறது. 38 விழுக்காட்டுப் பயனர்களின் வாட்ஸ் அப் இயக்கம் தடை செய்யப்பட்டு உள்ளது. 

இது 2017 ஜூன் மாதத் தகவல். தென்னப்பிரிக்காவில் வாட்ஸ் அப் பயன்படுத்தவே முடியாது.

1. South Africa - 100%
2. Singapore - 96%
3. United Arab Emirates - 86%
4. United Kingdom - 55%
5. India - 50%
6. Pakistan - 39%
7. Malaysia - 38%
8. Canada - 13%
9. Australia - 11%
10. United States - 5%

சான்று:
http://unblockwhatsapp.online/2016/11/22/top-countries-where-whatsapp-is-blocked/