பரமேஸ்வரா கொள்ளுப் பாட்டி திரிபுவனா துங்காதேவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பரமேஸ்வரா கொள்ளுப் பாட்டி திரிபுவனா துங்காதேவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

02 ஜூன் 2020

பரமேஸ்வரா கொள்ளுப் பாட்டி திரிபுவனா துங்காதேவி

1414-ஆம் ஆண்டு பரமேஸ்வரா தன்னுடைய 70-ஆவது வயதில் காலமானார். அவருடய உடல் நெகிரி செம்பிலான், போர்டிக்சனுக்கு அருகில் இருக்கும் தஞ்சோங் துவான் (Tanjung Tuan) எனும் இடத்தில் புதைக்கப் பட்டு இருக்கலாம். இந்தத் தஞ்சோங் துவான் எனும் இடம் முன்பு ரிக்காடோ முனை (Cape Rachado)  என்று அழைக்கப் பட்டது. 

திரிபுவனா துங்காதேவி

அல்லது அவர் சிங்கப்பூரில் உள்ள கென்னிங் மலையின் (Bukit Larangan, Fort Canning, Singapore) அடிவாரத்தில் புதைக்கப் பட்டு இருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது. இதுவும் இன்னும் உறுதி செய்ய முடியவில்லை. ஆய்வுகள் செய்து வருகிறார்கள்.

(It has also believed that Tanjung Tuan is the place where Parameswara (1344 – c. 1414), the last king of Singapura and the founder of Malacca was buried.)

சான்று: Abdul Rashid, Faridah (2012). Research on the Early Malay Doctors 1900-1957 Malaya and Singapore. Xlibris Corporation. ISBN 978-1-4691-7243-9. 

தஞ்சோங் துவான் (Tanjung Tuan)

தஞ்சோங் துவான் பகுதியில் ஆய்வுகள் செய்வதற்கு உறுதியான முயற்சிகள் எடுத்துக் கொள்ளப்படவில்லை. மலாக்கா வரலாற்று ஆய்வுக் கழகம் முயற்சிகள் செய்தது. ஆனால் அந்த முயற்சிகள் என்னவாயின என்றும் தெரியவில்லை. கிடப்பில் கிடக்கும் கோப்புகளில் அந்த முயற்சிகளும் அமைதி கொள்ளலாம்.

(It is generally believed that he was buried on top of a hill at Tanjung Tuan (also known as Cape Rachado), within the State of Malacca, Malaysia by which located nearby to the modern-day district of Port Dickson.)

சான்று: https://en.wikipedia.org/wiki/Tanjung_Tuan

மஜபாகித் பேரரசின் முதல் பேரரசர் (1293-1309) ராடன் விஜயா (Raden Vijaya also known as Nararya Sangramawijaya, regnal name Kertarajasa Jayawardhana). இவர் தான் மஜபாகித் பேரரசைத் தோற்றுவித்தவர். சீனா நாட்டுப் பேரரசர் குப்ளை கான் படைகளை எதிர்த்துப் போரிட்டு வெற்றி பெற்றவர். இதுவும் ஒரு பெரிய கதை.
இந்தோனேசியத் திரைப் படத்தில் திரிபுவனா துங்காதேவி

மஜபாகித் பேரரசிற்கு 300 கி.மீ. தொலைவில் சிங்கசாரி பேரரசு (Singhasari Kingdom) இருந்தது. அந்தப் பேரரசின் கடைசி மன்னர் ஸ்ரீ கீர்த்தநகரா (1268-1292). இவருடைய மகளின் பெயர் ஸ்ரீ காயத்ரி ராஜபத்தினி (Sri Gayatri Rajapatni). இவரைத் தான் ராடன் விஜயா மணந்தார்.

இவர்களுக்குத் திரிபுவனா துங்காதேவி (Tribuana Tunggadewi) எனும் மகள் பிறந்தார். (1326-1350) இந்தத் திரிபுவனா துங்காதேவி தான் மஜபாகித் பேரரசின் மூன்றாவது ஆட்சியாளர். இவரின் மற்றொரு பெயர் திரிபுவனா துங்காதேவி ஜெயவிஷ்ணு வரதனி (Tribhuwannottunggadewi Jayawishnuwardhani). இன்னொரு பெயரும் உள்ளது. தியா கீதர்ஜா (Dyah Gitarja).

மஜபாகித் பேரரசை மாபெரும் பேரரரசாக மாற்றி அமைத்தவர் மகாராணியார் திரிபுவனா துங்காதேவி. மஜபாகித் பேரரசை இவர் தனி ஒருவராக ஆட்சி செய்ததால் தான் இவரை மகாராணியார் என்று அழைக்கிறோம்.

இந்தோனேசிய மேடை நாடகத்தில் திரிபுவனா துங்காதேவி

Raden Wijaya, the first king (1293-1309) of Majapahit, was married to Sri Gayatri Rajapatni, a daughter of Sri Kertanegara, the last king (1268-1292) of Singhasari Kingdom, and had a daughter, Tribuana Tunggadewi, the third ruler (1326-1350) of Majapahit.

இவர் மஜபாகித்தை பேரரசைச் சேர்ந்த இளவரசர் கீர்த்தவரதனா (Kertawardana) என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். திரிபுவனா துங்காதேவி - கீர்த்தவரதனா தம்பதிகளுக்கு ஒரு மகள் பிறந்தார். அவருடைய பெயர் ஈஸ்வரி (Iswari). இந்த ஈஸ்வரி மற்றோர் மஜபாகித் இளவரசரைத் திருமணம் செய்து கொண்டார். அந்த இளவரசரின் பெயர் சிங்கவரதனா (Singawardana).

ஈஸ்வரி - சிங்கவரதனா தம்பதியினருக்கு ஒரு மகள் பிறந்தார். அவருடைய பெயர் சரவர்தானி (Sarawardani). இவர் ராணாமங்களா (Ranamenggala) எனும் மஜபாகித் இளவரசரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் பிறந்தார். அவருடைய பெயர் பரமேஸ்வரா. இந்தப் பரமேஸ்வராதான் மலாக்காவைத் தோற்றுவித்த கதாநாயகர்.

கற்சிலை வடிவத்தில் பார்வதியாக
திரிபுவனா துங்காதேவி (Rimbi temple, East Java) [1]

அதாவது மஜபாகித் பேரரசை ஆட்சி செய்த மகாராணியார் திரிபுவனா துங்காதேவியின் கொள்ளுப் பேரன் தான் பரமேஸ்வரா (great-grandson of Empress Tribhuwana Wijaya Tunggadewi)

பரமேஸ்வராவின் கொள்ளுத் தாத்தா தான் நீல உத்தமன். சிங்கப்பூரை உருவா
க்கியவர். சிங்கப்பூருக்குச் சிங்கம் ஊர் என்று பெயர் வைத்தவர்.

She married Kertawardana, and had a daughter: Iswari, who married Singawardana, and had a daughter, Sarawardani. Sarawardani. married Ranamenggala, and had a son, Parameswara who was born in 1344, during the reign of his great grandmother, Tribuana Tunggadewi, the third monarch of Majapahit.

(சான்று: https://www.newworldencyclopedia.org/entry/Malacca_Sultanate)

பரமேஸ்வராவுக்குப் பின் அவருடைய மகன் ஸ்ரீ ராம விக்ரமா எனும் மெகாட் இஸ்கந்தர் ஷா (Megat Iskandar Shah) மலாக்காவை 1424-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார். இவர் மலாக்காவின் இரண்டாவது ஆட்சியாளர்.

மலாக்காவின் ஆட்சியாளர்கள்:

• 1400–1414 - பரமேஸ்வரா (Parameswara)
• 1414–1424 - மெகாட் இஸ்கந்தர் ஷா (Megat Iskandar Shah)
• 1424–1444 - முகமட் ஷா (Muhammad Shah)
• 1444–1446 - அபு சாயிட் ஷா (Abu Syahid Shah)
• 1446–1459 - முசபர் ஷா (Muzaffar Shah)
• 1459–1477 - மன்சுர் ஷா (Mansur Shah)
• 1477–1488 - அலாவுதீன் ரியாட் ஷா (Alauddin Riayat Shah)
• 1488–1511 - மகமுட் ஷா (Mahmud Shah)
• 1511–1513 - அகமட் ஷா (Ahmad Shah)

மலாக்காவைப் பரமேஸ்வரா என்பவர் தான் தோற்றுவித்தார். அதில் மாற்றுக் கருத்துகள் இல்லை.

இருப்பினும் அண்மைய காலங்களில் அவருடைய பெயர் வரலாற்றில் இருந்து இரட்டடிப்புச் செய்யப் படுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பாட நூல்களில் இருந்தும் பரமேஸ்வரா காணாமல் போய் வருகிறார். உண்மை மறைக்கப்படக் கூடாது என்பதே நம்முடைய ஆதங்கம்.

மலாக்காவைப் பரமேஸ்வரா கண்டுபிடிக்கவில்லை என்றும் ஒரு சாரார் கருத்து சொல்கிறார்கள். இஸ்கந்தார் ஷா என்பவர் தான் கண்டுபிடித்தார் என்றும் சொல்கிறார்கள். உண்மையிலேயே அது தவறான கூற்று.

மலாக்கா என்றால் பரமேஸ்வரா. பரமேஸ்வரா என்றால் மலாக்கா. ஆக ஒரு வரலாற்றுச் சிதைவை நியாயப் படுத்த முன்வருபவர்கள் எந்தக் கல்வி மேடையிலும் என்னை வரலாற்று வாதத்திற்கு அழைக்கலாம். சான்றுகளை முன் வைக்கத் தயாராக இருக்கின்றேன்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
02.06.2020



[1] The statue of the Hindu goddess Parvati, the consort of Shiva. The statue represent Tribhuwanottunggadewi, queen of Majapahit (1328-1350). The statue originated from Rimbi temple, East Java, circa 14th century CE. The statue now is the collection of National Museum of Indonesia, Jakarta.
Date     3 August 2009
Source     Gunawan Kartapranata
This file is licensed under the Creative Commons Attribution-Share Alike 3.0 Unported license.


(பரமேஸ்வரா ஆய்வு நூலில் இருந்து இந்தக் கட்டுரைப் பகுதி தொகுக்கப் படுகிறது. இந்த நூல் விரைவில் வெளியீடு காணும்)