தமிழ் தாத்தா உ.வே.சா வீடு இடிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் தாத்தா உ.வே.சா வீடு இடிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

19 பிப்ரவரி 2017

தமிழ் தாத்தா உ.வே.சா வீடு இடிப்பு






தமிழ் தாத்தா தமிழறிஞர் உ.வே.சாமிநாத ஐயர் சென்னையில் வாழ்ந்த வீடு இடித்து தரைமட்டமாக்கப் பட்டது. தமிழகம் முழுவதும் சிதறிக் கிடந்த பண்டைத் தமிழ் இலக்கியங்களைத் தேடி எடுத்து பதிப்பித்த பெருமைக்குரியவர் தமிழ் தாத்தா உ.வே.சா.

அழிந்து கொண்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் நூல்களையும், மூவாயிரத்துக்கும் அதிகமான ஏட்டுச் சுவடிகளையும் கையெழுத்து ஏடுகளையும் கால்நடையாக ஊர் ஊராக அலைந்து சேகரித்து ஆவணப் படுத்தினார்.




1903ஆம் ஆண்டில் சென்னை திருவல்லிக் கேணியில் 20 ரூபாய் வாடகையில் ஒரு வீட்டில் வசித்தார். அந்த வீட்டையே பின்னர் விலைக்கு வாங்கி தனது ஆசிரியர் நினைவாக வீட்டுக்கு ‘தியாகராச விலாசம்' என்று பெயர் வைத்தார். 


திருவல்லிக் கேணியில் உ.வே.சா வசித்த வீடு அவரது உறவினர்களின் பராமரிப்பில் இருந்தது. பின்னர் இந்த வீடு விற்பனை செய்யப் பட்டது.

கடந்த 2012 செப்டம்பரில் வீட்டின் உள்பகுதி இடிக்கப் பட்டது. அதற்கு பத்திரிகைகள், தமிழறிஞர்கள் கண்டனம் தெரிவித்தனர். 

கட்டிட இடிப்புப் பணி தடைபட்டது. சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், புராணங்கள் அழிந்து விடாமல் அவற்றைத் தொகுத்து அச்சிட்டு நூல்களாக்கிய உ.வே.சா. சென்னையில் வாழ்ந்த வீட்டை தமிழக அரசு அவரது நினைவு இல்லமாகப் பராமரிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை தமிழறிஞர்கள் பலரும் முன்வைத்தனர். 

இருந்தாலும் அண்மையில் அந்த வீடு இடித்து தரைமட்டமாக்கப் பட்டுள்ளது. இதனால் தமிழறிஞர்களும், அரசியல் தலைவர்களும் வருத்தமடைந்து உள்ளனர். உ.வே.சாமிநாத ஐயரின் பங்கு இல்லாமல் புறநானூறு, குறுந்தொகை, சிலப்பதிகாரம் உள்ளிட்ட தமிழ் இலக்கிய நூல்கள் மற்றும் காப்பியங்கள் நமக்குக் கிடைத்து இருக்காது. 

பேருந்து, ரயில் போக்குவரத்து வளர்ச்சி பெறாத காலத்தில் ஊர் ஊராக நடந்து சென்று தமிழ் நூல்களை திரட்டித் தொகுத்தவர் உ.வே.சா.

இருந்தாலும் 2014 டிசம்பரில்... தமிழ் அன்னைக்குப் பூச்சரம் கட்டிய உ.வே.சாமிநாத ஐயரின் வீடு இடிக்கப்பட்டது கொடுமையிலும் கொடுமை. தமிழகமா தமிழைக் காக்கப் போகிறது.