மஜபாகித் பேரரசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மஜபாகித் பேரரசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

17 மார்ச் 2017

மஜபாகித் பேரரசு

இந்தோனேசியாவை ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பற்பல இந்தியப் பேரரசுகளும் சிற்றரசுகளும் ஆட்சிகள் செய்து உள்ளன.


மஜபாகித் பேரரசு (ஆங்கிலம்: Majapahit Empire; இந்தோனேசியம்: Karaton Mojopahit) கி.பி.1293 முதல் கி.பி.1500ஆம் ஆண்டுகள் வரை இந்தோனேசியாவை ஆட்சி செய்த மாபெரும் இந்தியப் பேரரசு. அந்தப் பேரரசைச் சங்கராமா விஜயா (Nararya Sangramawijaya) எனும் ராடன் விஜயன் உருவாக்கினார். இவர் 1293 முதல் 1309 வரை ஆட்சி செய்து இருக்கிறார்.

இந்தோனேசியா, சிங்கப்பூர், மலாயா, புருணை, தென் தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், கிழக்குத் தீமோர் போன்ற நாடுகள் கி.பி. 1350 லிருந்து 1389 வரையில் மஜபாகித் பேரரசிற்குத் தலை வணங்கி தஞ்சம் கேட்ட நாடுகள். 96 சிற்றரசுகள் கைகட்டிச் சேவகம் பார்த்தன.


பரமேஸ்வரா மலாக்காவைத் தோற்றுவிப்பதற்கு முன்பு இருந்தே மஜபாகித் பேரரசு மலாயாவின் பல இடங்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தது.

1365 ஆம் ஆண்டு  நகரகிரேதாகமம் (Nagarakretagama) எனும் ஒரு நூல் எழுதப் பட்டது. இந்த நூலின் மற்றொரு பெயர் தேசவர்ணம் (Desawarñana). அதன் ஆசிரியர் மப்பு பிரபஞ்சா (Mpu Prapanca). அந்த நூலில் மஜபாகித் அரசைப் பற்றி வியக்கத் தக்க செய்திகளை விட்டுச் சென்று உள்ளார்.

ரொம்ப வேண்டாங்க. லக்சா கேள்விப்பட்டு இருப்பீர்கள். மலேசியர்களின் மதிப்பிற்குரிய உணவு. இந்த லக்சா யாருடையது தெரியுங்களா. மஜபாகித் மக்களுடையது. அவர்கள் தான் 13 – 14 நூற்றாண்டில் இந்த லக்சா உணவை மலாயாவுக்குக் கொண்டு வந்தார்கள். இந்த விசயம் எத்தனைப் பேருக்குத் தெரியும். சொல்லுங்கள்.


இந்த உண்மைகளை மலேசிய வரலாற்று ஆசிரியர்கள் ஏற்றுக் கொள்வார்களா இல்லையா. தெரியவில்லை. அது நமக்குப் பிரச்சினையும் இல்லை. நம் தரப்பில் தக்கச் சான்றுகள் உள்ளன. சன்னம் சன்னமாய் அந்த வரலாற்று உண்மைகளை வெளியுலகத்திற்குத் தெரியப் படுத்துவோம். அதுவே மலேசியத் தமிழர்களின் தலையாயக் கடமையாக இருக்க வேண்டும்.

(சான்று: http://www.globalsecurity.org/military/world/malaysia/history-majapahit.htm -  1350-1400Majapahit empire controlled most of Peninsular Malaysia and the Malay Archipelago.)

(சான்று:      http://bernama.com/bernama/v3/bm/news_lite.php?id=457821 - After Majapahit had conquered Palembang, the favourite culinary dish then was laksa. It was the dish of choice throughout the empire of Majapahit.)