சூரியகாந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சூரியகாந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

25 ஜூன் 2016

சூரியகாந்தி

சூரியகாந்தி (Helianthus Annuus) பசுமைக் கொள்கையின் அடையாளம். பூக்களில் தனித்தன்மை வாய்ந்தது. அமெரிக்க நாடுகளில் உருவான மலர். மிகப் பெரிய மஞ்சரியைக் கொண்டது. மஞ்சரி என்றால் பூங்கொத்து. ஆலிவ் எண்ணெயைவிட மலிவாக இருப்பதால் வெண்ணெய் (மார்ஜரின்) மற்றும் பயோடீசல் தயாரிப்புக்கும் பயன்படுகிறது. 


தவிர ஈயம், யுரேனியம் போன்ற நச்சுப் பொருட்களை மண்ணில் இருந்து பிரித்து எடுப்பதற்கும் சூரியகாந்திகளைப் பயன்படுத்துகிறார்கள். உக்ரெய்ன் நாட்டின் தேசியப் பூ சூரியகாந்தி.

எத்தனைப் பூக்கள் இருந்தாலும் சூரியகாந்திப் பூவிற்கு வேறு ஒரு பூ நிகராகுமா. பூக்களுக்கு என்று அழகு ராணிப் போட்டி வைத்தால் சூரியகாந்திக்குத் தான் முதல் பரிசு. கி.மு 2600 ஆண்டுகளுக்கு முன் மெக்சிகோவில் தான் முதன்முதலாகப் பயிரிடப்பட்டது.

காட்டுச் சூரியகாந்தி (Tithonia Diversifolia) என்பது ஜப்பானிய சூரியகாந்தி. ஆங்கிலத்தில் Tree marigold எனும் பெயரும் உண்டு. மத்திய அமெரிக்காவை தாயகமாகக் கொண்டது. அங்கிருந்து மற்ற உலகப் பகுதிகளுக்கு அறிமுகப்படுத்தப் பட்டது. ஜப்பானில் மிகப் பிரபலம். இந்தியாவின் நீலகிரி மாவட்டத்தில் பயிர் செய்கிறார்கள்.

இதில் பூ என அழைக்கப்படுவது உண்மையில் பெரும் எண்ணிக்கையிலான சிறுபூக்கள் ஆகும். பொதுவாக ஒவ்வொரு சிறு பூவும் 137.5° பாகையில் அடுத்த சிறுபூவை நோக்கி வரிசையான வடிவமைப்பை கொண்டு இருக்கும்.

சூரிய உதயத்தின் போது பெரும்பாலான சூரியகாந்திகளின் முகங்கள் கிழக்கை நோக்கித் திரும்புகின்றன. அன்றைய நாள் நகரும் போது சூரியகாந்திகளின் முகங்களும் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கிச் சூரியனைப் பின் தொடருகின்றன. இரவில் அவை மீண்டும் கிழக்குத் திசைக்குத் திரும்புகின்றன. சூரியன் இல்லாத போது அவற்றின் முகங்கள் திரும்புவது பெரிய அதிசயம்.

சூரியகாந்திப் பூங்கொத்தின் சிறுபூக்களின் வடிவமைப்பின் மாதிரியை 1979 ஆம் ஆண்டில் ஹெச். வோஜெல் (H. Vogel) என்பவர் முன்வைத்தார். கணித முனைவு ஆயங்களில் (Fibonacci numbers). r = c square root n ; θ = n X 137.5 என்று தெரிவிக்கப்படுகிறது. இங்கே θ என்பது கோணம். r என்பது ஆரம் அல்லது மையத்திலிருந்து தூரம். n என்பது சிறுபூவின் சுட்டி எண். c என்பது ஓர் அளவீட்டுக் காரணியாகும்.

இது ஒரு கணிதச் சமன்பாடு. இந்தப் பூவைக் கொண்டு தான் *பைபானாச்சி சமன்பாடு* உருவாக்கப்பட்டது. கணித வளர்ச்சியில் தாவரங்கள் எப்படி எல்லாம் உதவிகள் செய்கின்றன. (சான்று: http://wiki.eanswers.com/ta/சூரியகாந்தி)