குறை காண்பது தவறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குறை காண்பது தவறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

13 ஜூலை 2019

குறை காண்பது தவறு

அடுத்தவரைக் குறை சொல்வதில் நம்மில் பலருக்கு மகிழ்ச்சி. அதிலும் நாம் சரியாகச் செய்து அடுத்தவர் தவறாகச் செய்து விட்டால் அவ்வளவுதான். அவர் தொலைந்தார். 


சிலருக்கு எதைச் செய்தாலும் சரியாக வராது. இது சரி இல்லை. அது சரி இல்லை என்று சொல்லிச் சொல்லியே உயிரை வாங்கி விடுவார்கள்.

தனக்கும் சரியாகச் செய்யத் தெரியாது. செய்கிறவர்களையும் நிம்மதியாகச் செய்ய விடமாட்டார்கள். அடுத்தவர்களை மட்டம் தட்டுவதே அவர்களின் தூரநோக்கு.


பவளத்திலும் பழுது உள்ளது. வைரத்திலும் காயம் உள்ளது. பிறருடைய குற்றங்களைப் பார்ப்பதைவிட நம்முடைய குற்றங்களைப் பார்ப்போம். குறை காண்பது மனிதம். நிறை காண்பது தெய்வீகம்.

(முத்துக்கிருஷ்ணன்)