30 ஜூன் 2013

அழகே அழகே அழகின் அழகே

[05.06.2013 மலேசியா தினக்குரல் நாளிதழில் பிரசுரிக்கப்பட்டது]

தனுஜா ஆனந்தன். அவரை இப்படியும் அழைக்கின்றேன்.

அழகே அழகே, அழகின் அழகே… 


முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை என்பதற்கு, இவர் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. வெற்றி என்பது ஒரு பிடிவாதமான கொள்கை. அதுவே அசைக்க முடியாத ஒரு நம்பிக்கை. அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் படியுங்கள்.


2009ஆம் ஆண்டின் மலேசிய அழகி. உலகின் 112 நாடுகளின் உலக அழகிகள் பங்கு பெற்ற உலக அழகிப் போட்டியில், தனுஜா ஆனந்தன் 20வது இடத்திற்குத் தேர்வு செய்யப்பட்டவர். உலக அளவில் பல வனவிலங்கு காப்பங்களின் நல்வழி, புனர்வாழ்வு ஆர்வலராகச் சேவை செய்து வருகின்றார். நல்ல ஒரு மகள்.

இவர் ஒரு வழக்குரைஞர். தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர். பேத்தா எனும் மலேசிய விலங்கு நல்வாழ்வு மேம்பாட்டு வாரியத்தின் தூதுவர். மலேசியப் புற்று நோய்ச் சங்கத்தின் ஆயுள்காலப் பணியாளர். இவருக்கு வயது 25.


2008ஆம் ஆண்டு மலேசிய அழகிப் போட்டியில் தனுஜா தோல்வி அடைந்தார். இறுதிச் சுற்றில் 19 பேர் பங்கெடுத்துக் கொண்டனர். அதில் சூ வின்சி எனும் சீனப் பெண் வெற்றி அடைந்தார்.

இருப்பினும், பங்கு பெற்று வெற்றி பெற வேண்டும் எனும் பிடிவாதமான கொள்கையும், வெற்றி பெற முடியும் எனும் அசைக்க முடியாத நம்பிக்கையும், இவருடைய திடமான கொள்கைப்பாடாக அமைந்தன.


மறுபடியும் 2009-ஆம் ஆண்டில் பங்கெடுத்தார். அதற்கு முன், பல மாதங்களுக்கு தீவிரமான ஒப்பனைப் பயிற்சிகளை மேற்கொண்டார். அத்துடன், ஓய்வற்ற ஒத்திகைகளும் தொடர்ந்தன. அவை எல்லாம் ஒன்றாக இணைந்து, அவருக்கு அழகுராணி எனும் பரிசை வழங்கி ஒரு முத்தாய்ப்பு வைத்தன.

முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை என்பதற்கு, தனுஜா எனும் இந்த மலேசியத் தமிழ்ப்பெண் நல்ல ஓர் எடுத்துக்காட்டு.

இறுதிச் சுற்றுக்கு 18 பெண்கள்

2009-ஆம் ஆண்டு மலேசிய அழகிப் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு 18 பெண்கள் தேர்வாயினர். பொதுவாக, உலக அழகிப் போட்டிகளில், இறுதிச் சுற்றுக்குத் தேர்வு பெறுபவர்களிடம் கடைசியாக ஒரு கேள்வி கேட்கப்படும்.


அந்தக் கேள்விக்கு அவர் அளிக்கும் விவேகமான, சாதுர்யமான, புத்திசாலித்தனமான பதிலில் இருந்துதான் அவர் மலேசிய அழகியாக அல்லது உலக அழகியாகத் தேர்வு செய்யப்படுவார். அந்த வகையில் தனுஜாவிடம், ‘உங்களுக்கு ஓர் அவதூறு ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்,

“அவதூறுகள் என்பது மிக இழிவான கிசுகிசுக்கள். அவற்றிற்கு மன்னிப்பு என்பதே கிடையாது. முன்பும் சரி இனி என்றும் சரி, எனக்கு அந்த மாதிரி ஒரு நிலைமை வராது என்று உறுதியாகச் சொல்வேன். எனக்கு என்று தனிப்பட்ட கொள்கைகள் உள்ளன. அந்தக் கொள்கைகளில் இருந்து நான் வெளியே வர முடியாது. வரவும் மாட்டேன். நான் எதை நம்புகின்றேனோ, அதற்கு முரண்பாடான கருத்துகளை நான் என்றைக்குமே ஏற்றுக் கொள்வதும் இல்லை.”


அடுத்த நிமிடம் அவருக்கு மலேசிய அழகியின் கிரீடம் சூட்டப்பட்டது. ஐந்து நீதிபதிகளும் ஒருமித்த வாக்குகளில் அவரைத் தேர்வு செய்தனர்.

112 நாடுகளின் அழகிகள்

அதே 2009-ஆம் ஆண்டு டிசம்பர் 12-ஆம் தேதி, தென் ஆப்பிரிக்கா, ஜொகானஸ்பர்க் மாநகரில் உலக அழகிப் போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் தனுஜா, மலேசியாவைப் பிரதிநிதித்தார்.


இதில் 112 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர். உலகம் முழுமையும் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதை 600 மில்லியன் மக்கள் பார்த்தனர். அதில் அவருக்கு 20வது இடம் கிடைத்தது.

இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக, Miss World Top Model எனும் அழகுநய அழகிப் போட்டி நவம்பர் 28-ஆம் தேதி நடைபெற்றது. அதில் தனுஜா எட்டாவது இடத்தைப் பெற்றார்.

பொதுச் சேவைகள்

சிலாங்கூர் மாநில விலங்கு வதைத் தடுப்புக் கழகத்தின் பரப்புரையாளராகச் சேவை செய்து வரும் தனுஜா, தனக்கு ஓய்வு கிடைக்கும் போது எல்லாம் அந்தக் கழகத்தில் பராமரிக்கப் படும் நாய்கள், பூனைகள், செல்லப் பிராணிகளுடன் நேரத்தைக் கழிப்பதை ஒரு பொழுது போக்காகக் கொண்டுள்ளார்.

தவிர, PETA எனும் மலேசிய விலங்கு நல்வாழ்வு மேம்பாட்டு வாரியத்தின் தூதுவராகச் சேவை செய்கின்றார். கோலாலம்பூரில் நடைபெறும் பல்வேறு விலங்கு நல அமைப்புகளின் ஒன்றுகூடும் நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொள்கிறார்.

2005-ஆம் ஆண்டில், என்னுடைய மருமகள் கோலாலம்பூர், புக்கிட் நானாஸ் கான்வெண்ட் பள்ளியில் ஐந்தாம் படிவ மாணவிகளுக்கு ஆசிரியையாக இருந்தார்.


அப்போது தனுஜாவுக்கும் படித்துக் கொடுத்தார். வரலாற்றுப் பாடங்களில் தனுஜா ஆர்வம் காட்டியதாக மருமகள் சொல்கிறார். தனுஜா இன்னும் தொலைபேசியின் வழி தொடர்பு வைத்து இருக்கிறார். என் மருமகள் இப்போதும் அந்தப் பள்ளியில்தான் பணியாற்றுகிறார்.

நாளிதழ்களின் பாராட்டுகள்

தனுஜா ஆனந்தன், மலேசியாவில் உள்ள ஆதரவற்றச் சிறார்கள் இல்லங்களுக்குச் செல்வதை ஒரு வழக்கமாகவும், ஒரு வாடிக்கையாகவும் பேணிக் காத்து வருகின்றார். அங்குள்ள சிறுவர்களுக்கு இலவசமாக பரிசு பொருள்களையும், உணவு வகைகளையும் வழங்கி பெருமைப் படுத்துவதில் மகிழ்ச்சி கொள்கிறார்.

 

இவர் ஒரு வழக்குரைஞர் என்பதால், மலேசியாவின் பிரபல பெரிய நிறுவனங்கள் இவரை அழைத்து தங்களின் ஊழியர்களுக்கு விழிப்புரைகளை ஆற்றச் சொல்கின்றன. அதன் மூலம் அவருக்கு நிதி அன்பளிப்புகள் கிடைக்கின்றன.

அந்த நிதிகளை இவர் அப்படியே அனாதை இல்லங்களுக்குத் திருப்பிவிடுகிறார். இவருடைய இந்த இலட்சியக் கொள்கைகளைப் பற்றி மலேசியாவில் உள்ள நாளிதழ்கள் நிறைய செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

மலேசியப் புற்று நோய்ச் சங்கம்

மலேசியப் புற்று நோய்ச் சங்கத்திலும் தனுஜா ஆழ்ந்த ஈடுபாடுகளைக் காட்டி வருகின்றார். அந்தச் சங்கத்திற்கு தன்னால் இயன்ற பொருள் உதவிகளையும் செய்து வருகிறார்.


2011-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 28-ஆம் தேதி, மலேசியப் புற்று நோய்ச் சங்கத்திற்கு நிதியுதவி திரட்டும் வகையில், மலேசியாவின் ஆக உயரமான கினபாலு மலையில் ஏறி சாதனை படைத்தார். அதன் மூலம் ரிங்கிட் 50 ஆயிரம் கிடைத்தது.

அவருக்குத் துணையாக அவருடைய தங்கை அனுஜாவும் மலை ஏறினார். தனுஜாவும் அனுஜாவும் ஐந்து நிமிட இடைவெளியில் பிறந்த அக்காள் தங்கைகள். 2012 ஜூலை மாதம் ஓர் இசைக் காணொளியை வெளியிட்டதன் மூலம், மலேசியப் புற்று நோய்ச் சங்கத்திற்கு ரிங்கிட் 5 இலட்சம் வசூல் செய்து தரப்பட்டது.

சர்ச்சை

2012 செப்டம்பர் மாதத்தில் Dermalogica எனும் சருமப் பாதுகாப்பு நிறுவனம் ஒரு விளம்பரத்தில் நடிக்க இவருக்கு அழைப்பு விடுத்து இருந்தது. அதில் தன் சருமத்தின் அழகைக் காட்ட சற்றே கூடுதலாகக் கவர்ச்சி காட்டி இருந்தார் என்று சொல்லப்படுகிறது.  அந்த விளம்பரப் படம் ஒரு தரப்பினரின் குறைகூறல்களுக்கும் உள்ளாகியது.


தான் கவர்ச்சியைக் காட்டவில்லை; கவர்ச்சி என்றால் என்ன என்று சொல்ல வந்ததாக தனுஜா கூறினார். இதில் ஒரு தரப்பினர், தனுஜா அப்படியே நடித்து இருந்தாலும் அதில் கிடைத்த ரிங்கிட் மூன்று இலட்சம் பணத்தையும், அனாதை ஆசிரமங்களுக்கு அப்படியே தானமாகக் கொடுத்துவிட்டாரே என்று வாதாடினர். மலேசியாவில் உள்ள சில அனாதை ஆசிரமங்களின் ஊழியர்களும், குழந்தைகளும் தனுஜாவுக்கு ஆதரவாக எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.

மலேசிய விழாக்கள்

தனுஜாவின் சமூகக் கொள்கைகள், மலேசியர்கள் பலருக்குப் பிடித்து இருப்பதால், அந்தச் சர்ச்சை பெரிதாக்கப்படவில்லை. மலேசிய ஊடகங்களும் அந்தச் சர்ச்சையைச் சாந்தப்படுத்தி அமைதியாக்கிவிட்டன.


அதன் பின்னர் விளம்பரப் படங்களில் நடிப்பதைத் தனுஜா நிறுத்திக் கொண்டார். பகலில் நீதிமன்றத்திற்குச் சட்ட நூல்களுடன் போகும் இவர், மாலை வேலைகளில் பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

இன்றும், எல்லா வகையான இந்திய, சீன, மலாய் பாரம்பரிய மலேசிய விழாக்களிலும், சமய நிகழ்ச்சிகளிலும் கலந்து சிறப்பு செய்கின்றார். தீபாவளி, நோன்புப் பெருநாள், சீனப் புத்தாண்டு, கிறிஸ்மஸ் போன்ற பண்டிகை நிகழ்ச்சிகளில் ஏழை எளியவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்து வருகின்றார்.

11 ஜூன் 2013

மனிதர்களை மாசுபடுத்தும் மனிதத் தூசுகள்

[08.06.2013 மலேசியா தினக்குரல் நாளிதழில் பிரசுரிக்கப்பட்டது]


ஆதிகால மனிதன் சக்கி முக்கி கற்களைக் கண்டுபிடித்தான். ஆசை ஆசையாய்ச் சீண்டிப் பார்த்தான். அப்படி இப்படி என்று ஆராய்ச்சி செய்து பார்த்தான். ஆற்றில் நீந்தியதை, காற்றில் பறந்ததைப் பிடித்துச் சுட்டுச் சாப்பிட்டான். ஆனந்தமாய் ஆடிப் பாடினான். கிடைத்ததை மற்றவருக்கும் கொடுத்துச் சந்தோஷப்பட்டான். சுத்தமாய்ச் சுகமாய் வாழ்ந்தும் காட்டினான். அது அப்போதைய வரலாறு.

இப்போது என்ன நடக்கிறது தெரியுமா? ஏழை எளிய சாமான்ய மனிதனையே தன்னுடைய ஆராய்ச்சிகளுக்கு பலிக்கடாவாக மாற்றி வருகிறான். மருந்து ஆராய்ச்சிகளுக்காகச் சின்னச் சின்ன உயிரினங்களைப் பயன்படுத்திய காலம் எல்லாம் மலை ஏறி விட்டது.

இது காலம் செய்கின்ற கோலம். அப்படி சொன்னால் தப்பு.  மனிதம் செய்கின்ற கேவலம் என்று சொன்னால் சரியாக இருக்கும். மனித இனத்தை மனித இனமே அழித்துக் கொண்டு வருகிறது. வேறு எப்படி சொல்லச் சொல்கிறீர்கள். இது இப்போதைய வரலாறு.

விசயத்திற்கு வருகிறேன். எலிகள் போய்விட்டன. முயல்கள் போய்விட்டன. அதையும் தாண்டி, பறவைகளும் காட்டுக்குள் பறந்துவிட்டன. பறப்பன நடப்பன இருந்த இடத்தில் இப்போது மனிதன் வந்து மாட்டிக் கொண்டு தடுமாறுகிறான். 

அறிவியல் ஆராய்ச்சிகளுக்காக ஏழைச் சாமான்யர்களை மனிதப் பிண்டங்களாய் மாற்றுவது என்பது ஒரு கலையாக மாறி வருகிறது. அந்தக் கலையில் கைதேர்ந்த கலைஞர்களாக மேல்நாட்டு நிறுவனங்கள் பேரம் பேசி வருகின்றன. 

அண்மைய காலங்களில் நடந்து வருகின்ற ஓர் உண்மை. அந்நிய நாட்டு மருத்துவ ஆய்வுக் கூடங்கள் ஆராய்ச்சி எனும் பாவனையில் இந்திய ஆப்ரிக்க நாட்டுக் கல்லூரிகளில் நுழைகின்றன. அங்கு படிக்கும் மாணவர்களிடம் ஆயிரம், பத்தாயிரம் என்று சொல்லி ஆசை வார்த்தைகளை அள்ளித் தெளிக்கின்றன. [சான்று:http://indiatoday.intoday.in/story/india-an-easy-target-for-cheap-drug-trials/1/141921.html]

அவர்களை ஆராய்ச்சிக் கூடங்களுக்கு அழைத்துச் செல்லப் படுகின்றனர். அப்புறம் சுண்டெலிகளுக்குப் பதிலாக புதுப் புது மருந்துகள் அவர்களின் உடல்களில் பாய்ச்சப் படுகின்றன. அந்த மருந்துகள் என்னென்ன பக்கவாதங்களை விளைவிக்கின்றன என்பதைப் பற்றி ஆராய்ச்சிகள் நடக்கின்றன. அதாவது அவர்கள் மனிதச் சுண்டெலிகளாக மாற்றப் படுகிறார்கள் என்று சொன்னால் சரியாக இருக்கும். இவை அனைத்தும் மேலை நாட்டு ஆராய்ச்சியாளர்கள் செய்து வரும் நவீன வியாபாரத் தப்புத் தாளங்கள். 


சரி. உங்களுக்கு ஆப்பச் சட்டியில் ஆட்டா உருண்டை சுடத் தெரியுமா. தெரியாவிட்டால் பரவாயில்லை.  அங்கே ஆராய்ச்சிக் கூடங்களில் கணக்கு வழக்கு இல்லாமல் பணப் பெருச்சாளிகள் நெட்டி உடைக்கின்றன.  ஜால்ரா  போடும் அவர்களிடம் நிறைய ஜிங்கு சிக்கான்கள் இருக்கின்றன. கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். 

இந்த ஆராய்ச்சிகளைப் பற்றி கொஞ்சம் விளக்கமாகச் சொல்கிறேன். மனதைக் கொஞ்சம் இறுக்கிக் கொள்ளுங்கள்.  எந்த ஒரு புதிய மருந்தைக் கண்டுபிடித்தாலும் முதலில் அந்த மருந்தைச் சுண்டெலிகளுக்கு அல்லது கினியா வகை முயல்களுக்கு கொடுத்து பரிசோதனை செய்து பார்ப்பார்கள். அதுதான் காலம் காலமாக மருத்துவ உலகில் நடந்து வரும் ஒரு பாரம்பரிய வழக்கம் ஆகும். 

அப்படி பரிசோதிக்கும் போது ஆயிரக் கணக்கான சுண்டெலிகள் பலியாவது வழக்கம். ஊசி மூலம் செலுத்தப் படும் மருந்துகளைத் தாங்கிக் கொள்ள முடியாமல் செத்துப் போகும் எலிகள் உண்டு. மருந்தின் வேகத்தினால் வலிப்பு வந்து மரித்துப் போகும் எலிகள் உண்டு. மருந்தின் அதீத வக்கிரமத்தினால் உள் உறுப்புகள் சிதைந்து போய் சின்னா பின்னாமாகிப் போன எலிகள் உண்டு. மருந்தின் ஒவ்வாமையால் கொஞ்சம் கொஞ்சமாக உடல் ரணமாகிக் கொடூரமானச் சாவுகளை அனுபவித்த எலிகளும் உண்டு. [சான்று: http://www.nature.com/news/2011/110622/full/474427a.html] 

அதன் பின்னர் தான், அந்த மருந்து மனிதர்களுக்கு ஒத்து வருமா இல்லையா என்று முடிவு செய்வார்கள். எந்த வகையில் எந்த மருந்துகள் ஒத்துப் போகும் என்பதையும் முடிவு செய்வார்கள். அது வரை அந்த மருந்தை விற்பனைக்கு அனுப்ப மாட்டார்கள். மனிதர்கள் பயன்படுத்த அனுமதிக்கவும் மாட்டார்கள். 

ஆனால், நிலைமை இன்று அப்படி இல்லை. மேலை நாட்டு மருந்து உற்பத்தி நிறுவனங்கள் என்ன செய்கின்றன தெரியுமா. ஏழைகள் அதிகமாக உள்ள இந்திய ஆப்ரிக்க நாடுகளுக்குப் படை எடுக்கின்றன. தங்களது மருத்துவ ஆய்வுகளைப் பற்றி அங்குள்ள ஏழை மக்களிடம் இனிமையான பேசுகின்றன. அவர்களை எலிகளாய் முயல்களாய்ப் பயன்படுத்தி வருகின்றன.  

‘உலக மக்களின் நன்மைக்காக நாங்கள் இந்த ஆராய்ச்சிகளைச் செய்கிறோம். இதனால், உலகத்தில் எத்தனையோ கோடி பேர் நன்மை அடையப் போகிறார்கள். ஏற்கனவே, அமெரிக்காவில், அங்கோலாவில், ஆஸ்திரேலியாவில் செய்து பார்த்தாகி விட்டது. அங்கே யாருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை.  இங்கே இந்தியாவிலும் ஆப்ரிக்காவிலும் இந்த மருந்து நல்லபடியாக வேலை செய்கிறது. இளைஞர்களிடம் எப்படி வேலை செய்கிறது என்று பார்க்க வேண்டும்’ என்று சத்தியத்தில் த்தியம் செய்வார்கள்.

அந்த இளைஞர், இளைஞிகளுக்கு ஐயாயிரம், பத்தாயிரம் என்று கொடுப்பார்கள். அவர்களும் காசை வாங்கிக் கொண்டு தங்களுடைய உடலைப் பரிசோதனைக்கு தாரை வார்த்துக் கொடுப்பார்கள். அப்புறம் அந்த உடல்கள் பந்து விளையாட்டுத் திடல்களாக மாறும். அடுக்கு அடுக்காஆராய்ச்சிகள் நடக்கும். எல்லாம் கருணை பகவான் சித்தம். ஒரு சில நாட்களில் மருந்து அதன் வேகத்தைக் காட்டும். நேரம் சரி இல்லை என்றால், சனி பகவான் சங்கு ஊதிச் சகுனம் பார்க்கும். [சான்று: http://www.naturalnews.com/029924_medical_experiments_Guatemala.html#ixzz1Zy2LDYm9]

உயிருக்கு ஆபத்து என்றால் ஒரு கோடி வெள்ளி குடும்பத்திற்கு கொடுக்கப் படும் என்று ஏற்கனவே சொல்லி இருப்பார்கள். ஆனால், உண்மையிலேயே, உயிருக்கு ஆபத்து வந்தால் அவ்வளவுதான். ஒன்றும் தெரியாதது மாதிரி அப்படியே காலையையும் கையையும் கழுவிக் கம்பி நீட்டி விடுவார்கள். பெற்றோர் அல்லது உறவினர் போய் மேலிடத்தில் புகார் செய்யலாம். அந்த மேலிடத்திலேயே இவர்கள் போய் காசு மேல் காசை வைத்து காரியத்தைக் கச்சிதமாக முடித்துக் கொள்வார்கள். அவ்வளவு தான். பாதிக்கப் பட்டவர்கள் ஒன்றும் வாசிக்க முடியாது. 
  
இந்தியாவிலும் ஆப்ரிக்க நாடுகளிலும் மேல்நாட்டு நிறுவனங்கள் மனிதர்களை வைத்து பரிசோதனைகள் செய்வது பரவலாகிப் பிரபலமாகியும் வருகின்றது. அந்த மாதிரியான பரிசோதனைகளில் 2008 ஆம் ஆண்டில் இருந்து 2010 ஆம் ஆண்டு வரை, இந்தியாவில் மட்டும் 1,593 பேர் உயிர் இழந்து உள்ளனர். இது அதிர்ச்சி தரும் தகவல் மட்டும் அல்ல.  வேதனையிலும் வேதனையான செய்தி. [சான்று: http://ekawaaz.org/2010/08/20/india-a-nation-of-human-guinea-pig/]

இதில் பெரும்பாலோர் கிராமப்புறங்களில் வாழும் ஏழை எளியவர்கள். நகர்ப்புறச் சேரிப் பகுதிகளில் வாழும் அன்றாடம் காய்ச்சிகள். அற்றைக் கூலிக்காக அவதிப் படும் சாமான்ய மனிதர்கள். தனிமைக் கடலில் தவித்து வாடும் தனித்து வாழும் தாய்மார்கள். பணப் பற்றாக்குறையினால் படிக்க சிரமப் படும் மாணவர்கள். என்ன செய்வது. இவர்கள் வெள்ளைச் சட்டை போட்டவர்களிடம் வெள்ளந்தியாக ஏமாந்து போகிறார்கள்.  

ரொம்ப வேண்டாம். இந்த 2011 ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்து ஜூன் மாதம் வரை மட்டும் 618 பேர் உயிர் இழந்துள்ளனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இது உலகச் சுகாதாரச் சேவைகள் இயக்கம் தரும் புள்ளி விவரங்கள் ஆகும். 

எப்படி உயிர் இழப்பு ஏற்படுகின்றது? எடுத்துக் காட்டாக, இப்படிச் சொல்லலாம்.  ஒரு நிறுவனம் ஒரு புதிய மருந்தைப் புற்று நோய்க்காக ஆய்வு செய்து கண்டுபிடித்து இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த மருந்து மனித உடலில் எவ்வாறு பலன் அளிக்கிறது என்பதற்கு எந்தவித ஆதாரமும் கிடைக்காமல் இருக்கலாம். [சான்று: http://www.fromdusktildawn.org.uk/news.html] 

ஆக, சுண்டெலிகள் அல்லது முயல்களை வைத்து சோதனை செய்தால் அவற்றுக்குப் பேசத் தெரியாது. எங்கே வலிக்கிறது எப்படி வலிக்கிறது என்று சொல்லவும் தெரியாது. மனிதர்களை வைத்தே சோதனை நடத்தி விட்டால்… பிரச்னையே இல்லை. 

உடலில் எந்த எந்த இடத்தில் எப்படி எப்படி எல்லாம் வலிக்கிறது. எந்த இடத்தில் எந்த எலும்பு வலிக்கிறது. எந்த இடத்தில் எந்தத் தசை வலிக்கிறது. எந்த முட்டி வலிக்கிறது என்று அவர்களே வாய்விட்டுச் சொல்வார்கள். கண்ணீர் விட்டுக் கதறுவார்கள். வலியைப் போக்க மாற்று மருந்து கொடுப்பார்கள். அந்த மாற்று மருந்து எப்படி வேலை செய்கிறது என்பதையும் கவனிப்பார்கள். ஆக, இப்படியே ஆராய்ச்சிகள் தொடரும். கடைசியாக,  ஒரு சில நாட்களில் ஒரு சிலர் செத்தும் போவார்கள். [சான்று: http://indiatoday.intoday.in/story/hyderabad-illegal-human-trial-of-anti-cancer-drug-suspended/1/142692.html]

இந்தியா, விசாகப்பட்டணத்தில் நடந்த ஒரு சம்பவம். ஒரு மருந்து நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் சில கல்லூரி மாணவர்களை மருந்து சோதனைகளுக்காக அவர்களுடைய ஆய்வு கூடத்திற்கு அழைத்து வந்தனர். அந்த மாணவர்களில் ஒருவர் விஜயக்குமார். வயது 19. சங்கீத வித்யா பரிஷாத் தொழியியல் கல்லூரியில் மாணவர். ஆய்வுக் கூடத்திற்கு வந்து பரிசோதனை செய்து கொண்டால் 6000 ரூபாய் தரப்படும் என்று அவருக்குச் சொல்லப் பட்டது. 

ஆய்வுக் கூடத்தின் உள்ளே நுழைந்ததும் அவருடைய தோள் பை பிடுங்கப் பட்டது. கைப்பேசி அடைக்கப் பட்டது. சில ஒப்பந்தப் பாரங்களில் கையொப்பம் வாங்கப் பட்டது. சில மாத்திரைகளை விழுங்கச் சொன்னார்கள். அரை மணி நேரத்திற்கு ஒரு முறை இரத்தம் சின்னச் சோதனைக் குழாய்களில் பரிசோதனைக்காக எடுக்கப் பட்டது. 

மொத்தம் 20 முறைகள் இரத்தம் எடுக்கப் பட்டது.  இரண்டு நாட்களுக்குப் பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப் பட்டார். விஷயம் பெற்றோர்களுக்குத் தெரிய வந்தது. புகார் செய்தனர். இந்திய மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகத்தின் கீழ் பரிசோதனைகள் செய்யப் பட்டதாக அந்த நிறுவனம் தற்காத்துப் பேசியது. வழக்கு பதிவு செய்யப் பட்டிருக்கிறது. 
[சான்று: http://indiatoday.intoday.in/story/andhra-engineering-students-lured-into-drug-testing/1/145529.html]  

இதே போல ஹைதராபாத்தில் ஒரு மருந்து நிறுவனம் இருக்கிறது. இந்த நிறுவனம் குந்தூர் மாவட்டத்தில் பிதுகுர்லா பகுதியில் உள்ள 35 ஏழைப் பெண்களுக்கு மார்பகப் புற்று நோய்க்கான மருந்துகளைக் கொடுத்து ஆய்வு செய்தது. அந்தப் பெண்கள் அனைவரும் சுண்ணாம்புத் தொழில்சாலையில் வேலை செய்பவர்கள். அவர்களில் சிலர் விதவைகள், சிலர் தனித்து வாழும் தாய்மார்கள். அவர்களுக்கு மருந்துகள் கொடுக்கப் பட்டன. சிறுநீர், இரத்தம் போன்றவை தொடர்ந்தாற் போல நான்கு நாட்களுக்குப் பரிசோதிக்கப் பட்டன.  பின்னர், ஒவ்வொருவருக்கும் 10,000 ரூபாய் அன்பளிப்பாகக் கொடுக்கப் பட்டது. நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள். ‘அன்பளிப்பு’!

வீட்டுக்கு வந்ததும் பலருக்கு வாந்தி, மயக்கம், உடல் வலி, முட்டி வலி, நெஞ்சு வலி, அளவுக்கு மீறிய உடல் பலகீனம் போன்ற உபாதைகள். புகார் செய்யப் பட்டு நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. அவர்களில் கருணம்மா என்பவர் இப்போது இடுப்புக்கு கீழ் உணர்வு இல்லாமல் படுத்த படுக்கையாய் கிடக்கிறார்.
[சான்று: http://unitedblackuntouchablesworldwide.blogspot.com/2011/06/karunamma-victim-and-also-former-drugs.html]

இந்த மாதிரி பரிசோதனைகளைச் செய்யும் வெளி நாட்டு நிறுவனங்களினால் 2010 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு 1,500 கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது. இந்தத் தொகை 2012இல் 2,760 கோடியாக உயர்ந்தது.

”நாலா புறமும் பகைவர் கூட்டம் 
நடுத்தெருவில் நம் தமிழ்த்தாய் மக்கள்”  

என்கிற பாவேந்தரின் சொற்கள் இப்போது என் நினைவிற்கு வருகின்றன.
ஆக, மேல்நாட்டு நிறுவனங்கள் தங்களுடைய ஆராய்ச்சிகளுக்காக ஏழை எளியவர்களை மனிதப் பிண்டங்களாய் மாற்றி வருகின்றன. எலிகள் போய்விட்டன. முயல்களும் போய்விட்டன. ஆனால், அந்த இடத்தில் இப்போது மனிதன் வந்து மாட்டிக் கொண்டு நிற்கிறான். 

மனிதனின் ஆராய்ச்சிக்கு சின்னச் சின்ன உயிரினங்களைப் பயன்படுத்திய காலம் மலையேறி விட்டது. இப்போது ஏழை எளிய மனிதனே பலிக்கடாவாக மாறி வருகிறான். இது காலம் செய்கின்ற கோலம். தப்பு… மனிதம் செய்கின்ற கேவலம். மனித இனத்தை மனித இனமே அழித்துக் கொண்டு போகிறது.

மனித நேயங்களை மாசு படுத்தும் மிக மோசமான அவலட்சணங்கள் தானே! ஒன்றை மட்டும் இப்படிச் சொல்வேன். துலாபாரத் தூண்கள் தூசுகளாகித் தூர்ந்து போய் விட்டன. உலகின் பல இடங்களில், இது இப்போதைய வரலாறு. 

ஒரு கட்டத்தில் ஆராய்ச்சி செய்கிறேன் என்று சொல்லி மனிதன், ஆயிரம் ஆயிரம் எலிகளை அடித்துப் பிடித்து வெட்டிப் பார்த்தான். ஆயிரம் கோடி சுண்டெலிகளை நசுக்கிப் பொசுக்கி அசிங்கப் படுத்தினான். அவனுடைய ஆராய்ச்சிகளுக்கு அளவே இல்லாமல் போனது. 

அந்த ஆராய்ச்சிகள் அதோடு நின்றால் பரவாயில்லை. அதையும் தாண்டிப் போய் இப்போது மனித உணர்வுகளை  வதக்கி எடுத்து வேடிக்கை பார்க்கின்றான். ஏழை மக்களின் உயிர்களைக் கோமாளிப் பகடைக் காய்களாக மாற்றிப் பார்க்கின்றான். 

இப்படி எழுதுவதற்காக மன்னிக்கவும். பணத்திற்காக தன் இனத்தையே இப்படி அழிக்கலாமா. கொஞ்சம் கூட மனிதம் இல்லாத அந்த ஜால்ரா பிண்டங்களை என்னவென்று சொல்வது? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். 

முன்பு, மனிதச் சுகத்திற்காகக் கோடிக் கோடியான வாயில்லா ஜீவன்களின் உயிர்கள் வேரோடு அறுக்கப் பட்டன. பொறுத்துப் போனது பூமி. ஆனால், இப்போது பேசத் தெரிந்த ஜீவன்களையே பேசாமடந்தைகளாக மாற்றிப் போட்டு, அந்த உயிர்களுக்கு அலங்கோல மாலைகளைப் போடுவது என்பது பாவத்திலும் பெரிய பாவம். ஏழேழு ஜென்மங்களுக்கும் சொந்த பந்தங்களைச் சுற்றி சுற்றி வரும் பொல்லாத பாவம்! பூமாதேவிக்கு இது ஓர் இரங்கல் செய்தி!

01 ஜூன் 2013

தமிழ்ப்பள்ளிகள் கண்பார்வை திட்டம்


An Eye Examination Program for Malaysian Tamil School Students
மலேசியத் தமிழ்ப்பள்ளிகள் கண்பார்வை திட்டம்


MINDBB எனும் மலேசியச் சமூக அமைப்பு தமிழ்ப்பள்ளிக்கூடங்களுக்கு பல வகைகளில் உதவி செய்து வருகிறது. இப்போது, கண் பார்வை குறைந்த மாண்வர்களுக்கு இலவசமாக மூக்குக்கண்ணாடி வழங்கும் திட்டத்தில் கவனம் செலுத்தியுள்ளது. அதைப் பற்றிய விவரங்கள்:

This pilot program will be done in Selangor, Malaysia.  There are 97 Tamil schools in Selangor. Out of which 32 schools have 100 or less students (based on 2012 data). This might be our potential target schools and the list of the schools is produced below;

1. SJK(T) Ladang Brafferton
2. SJK(T) Sungai Sedu
3. SJK(T) Pulau Carey Selatan
4. SJK(T) Pulau Carey Barat
5. SJK(T) Pulau Carey Timur
6. SJK(T) Ladang Braunston
7. SJK(T) Ladang Bukit Ijok
8. SJK(T) Ghandiji
9. SJK(T) Ladang Hopeful
10. SJK(T) Ladang Kampung Baru
11. SJK(T) Ladang Sungai Terap
12. SJK(T) Ladang Kuala Selangor
13. SJK(T) Ladang Raja Musa
14. SJK(T) Bukit Rotan Baru
15. SJK(T) Ladang Riverside
16. SJK(T) Ladang Selangor River
17. SJK(T) Ladang Sungai Buloh
18. SJK(T) Ladang Sungai Rambai
19. SJK(T) Ladang Tuan Mee
20. SJK(T) Ladang Dominion
21. SJK(T) Ladang Changkat Asa
22. SJK(T) Ladang Escot
23. SJK(T) Ladang Kerling
24. SJK(T) Ladang Lima Belas
25. SJK(T) Ladang Minyak
26. SJK(T) Ladang Nigel Gardner
27. SJK(T) Ladang Mary
28. SJK(T) Ladang Sungai Tinggi
29. SJK(T) Ladang Sungai Bernam
30. SJK(T) Ladang Ampar Tenang
31. SJK(T) Ladang Bute
32. SJK(T) Ladang West Country Barat

We need some help from  readers,

1. Do you happen to know if any of the above school(s) have been included in an Eye Examination program done this year or last year by any organization? If yes, we would drop the school from the list and focus on those yet to be covered. In that way we all will work complementing each other and optimizing our resources.

2. Do you have the name and contact details (school phone/handphone) of the HMs of the above schools? Would like to compare with the contact details we already have as we learn some of the HMs in my list have been shifted to another school or has since retired.

3. We are planning to sponsor spectacles for poor students. If you are working in an optical company, can you please send us your quotation for the spectacles? Do highlight the specification of your chosen product(s) for e.g low prescription spectacles, high prescription spectacles, frame metal or plastic, lens plastic/glass, multi-coated lens or not, have UV protection, EMI (computer use), scratch resistance and etc.

Lately we received information regarding the good work done by some organization, where they have done eye screening for couple of schools. I was surprised to learn 25% of the students in one of the school is said to have vision problem and received spectacles.

Another small batch of schools screened by different organization shown statistics that 30% of their student diagnosed with vision problem. These numbers are worrisome, as such Usha proposed to do an Eye Screening Project for Tamil Schools. 

The idea is to start in one state, focusing schools with 50 and lesser students. If successful we can replicate this to other states. We were thinking to start with Selangor first. There are two phase involved, the first is screening.

At this phase we engage with a certified optometrist preferably from a government institution or from an NGO to assist us to do the screening to all selected Tamil School. Good if a fundus camera test be included in screening test at the schools. 

Once all the identified schools have been screened and the number of students has been finalized, we can go to Phase 2 where negotiation will be done with lenses and frame company for good price. 

Fund raising also will be done in this phase to cover the cost. Usually students studying in under enrolled schools (50 students and below) are usually from poor background, thus we can work to cover the whole cost of the spectacles. There is a reason why we are looking for optometrist from government institution or NGO and not from a private shop.

The previous two organization have engaged with private optometrist, they are usually paid based on the number of spectacles they prescribe. We are not sure if the 25% and 30% findings is accurate thus would like to compare with our own data. If you are an optometrist and would like to join this activity, kindly email us at:

svanan77@gmail.com
ksmuthukrishnan@gmail.com

If you are from a lenses or frame company do also quote us your subsidized pricing for some sample products for us to consider. Thanks.