// இன்று 19.04.2015 மலேசியா தினக்குரல் ஞாயிறு மலரில் வெளியான கேள்வி பதில் //
நந்தக்குமார் அழகிரி, சுங்கை பெரானாங், மந்தின், நெகிரி செம்பிலான்
கே: இணையத்தில் உலா வரும் போது நடிகை சிம்ரனுக்கு தான் பேஸ்புக் இணையத் தளத்தில் அதிகமான விசிறிகள் இருப்பது தெரிய வருகிறது. வேறு எந்த நடிகைக்கும் அந்த மாதிரியான ஆதரவு இல்லை என்பது கண்கூடாகத் தெரிகிறது. தப்பாகத் தவறாக நினைக்காமல் உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.
ப: நடிகை சிம்ரன் அருமையான ஒரு நடிகை. வடக்கத்திய பெண்ணாக இருந்தாலும் தமிழ் நன்றாகப் பேசுகிறார். தமிழ்த் திரை உலகில் முத்திரை பதித்த ஒரு நடிகை. நிச்சயமாக அவருக்கு நிறைய விசிறிகள் இருப்பார்கள். மூன்றாம் தலைமுறை நடிகைகளில் முதலிடம் கொடுக்கலாம்.
சரி. உங்கள் கேள்விக்கு வருகிறேன். உத்தியோகம் புருஷ இலட்சணம் என்று சொல்வார்கள். அந்த வகையில் இந்த மாதிரியான ஆராய்ச்சிகளை எல்லாம் செய்து உங்களுடைய உத்தியோகத்தை நல்ல படியாக பார்க்கிறீர்கள். மகிழ்ச்சி.

இருந்தாலும் மனதில் பட்டதைச் சொல்கிறேன். உங்கள் கேள்வியைத் தப்பாகச் சொல்லவில்லை. சிம்ரனுக்கு விசிறிகள் இருந்தாலும் சரி; இல்லை அந்த விசிறிகளே அவரைப் பார்த்து விசில் அடித்தாலும் சரி, கருத்துச் சொல்ல வேண்டியது அவருடைய கணவர். ஆக, நாம் தப்பாகவும் நினைக்கவில்லை. தவறாகவும் சொல்லவில்லை. நாளைக்குப் பயன்படுகிற மாதிரி கேள்வி கேளுங்கள். எல்லோருக்கும் பயன்பட வேண்டும். ஏன் என்றால் இந்தக் கேள்வி பதில் இணையத்திலும் போகிறது.