22 ஜனவரி 2013

மலேசியாவின் முதல் இந்திய சபாநாயகர்

Perak State Speaker V.Sivakumar
 
மலேசியாவின் முதல் இந்திய சபாநாயகர் எனும் பெருமைக்குரியவர் வி. சிவகுமார். மலேசிய இந்தியர்களின் அரசியல் வரலாற்றில் அரிய சாதனைகளைப் படைத்து வரும் ஓர் அற்புதமான இளைஞர். 

Sivakumar at Tronoh Market
துரோனோ சந்தையில் தன் தொகுதி மக்களுடன்

ஏழைகளின் தொண்டர் என்று ஏழை எளிய மக்களால் அன்பாக அழைக்கப்படுகின்றார். முழு மரியாதைக்குரிய சபாநாயகர் ஆடை அணிகலன்களுடன் அரியணையில் அமர்ந்து இருக்கும் போதே சட்டசபையில் இருந்து வெளியே இழுத்து வரப்பட்டவர். அந்த நிகழ்வு உலக மக்களிடையே ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இன்னும் பேசப்பட்டு வருகிறது.

அந்த விசயம் ஊடகங்கள் வழியாக வெளி உலகத்திற்கும் தெரிய வந்தது. அவர் மீது மலேசிய மக்களின் அனுதாப அலைகள் பலமாக வீச ஆரம்பித்தன. இன்னும் வீசிக் கொண்டும் இருக்கின்றன.
 

சுத்தமான அநீதி
 
அவருக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் சுத்தமான அநீதி செய்யப்பட்டதாக மலேசிய மக்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர். பேராக் மாநில மக்கள் கொந்தளித்து வருகின்றனர்.

Perak State Speaker V.Sivakumar arrested by Malaysian Police
வி. சிவகுமார் எனும் இளம் இந்த இளைஞர், மலேசியா, பேராக் மாநிலச் சட்டசபையின் சபாநாயகராக வலம் வந்தவர். மலேசியாவின் முதல் இந்திய சபாநாயகர் எனும் பெருமைக்கும் உரியவர். மலேசிய இந்தியர்களின் அரசியல் வரலாற்றில் சாதனைகளைப் படைத்து வரும் நல்ல ஓர் இளைஞர்.

2009 மே மாதம் 7 ஆம் தேதி, பேராக் மாநிலத்தில் அரசியல் கொந்தளிப்புகள் ஏற்பட்டன. இந்த கொந்தளிப்பை பேராக் அரசியல் சாசன நெருக்கடி 2009 என்று அழைக்கிறார்கள். சிவகுமார் தன் பதவியை இழக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது. அதன் பின்னர், பேராக் மாநிலத்தின் சட்டசபை கலைக்கப்பட்டது. 


அதற்கு முன் அரசியல் வரலாற்றைக் கொஞ்சம் சொல்லிவிடுகிறேன். மலேசியாவின் 12 ஆவது பொதுத் தேர்தல் 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்றது. அந்தத் தேர்தல், மலேசியாவின் அரசியலிலேயே மாபெரும் திருப்பத்தையே ஏற்படுத்தியது என்றுதான் சொல்ல வேண்டும். 

நீதித் தத்துவத் துறை
 
தீபகற்ப மலேசியாவின் ஆறு மாநிலங்கள் எதிர்க் கட்சியின் கரங்களில் வீழ்ந்தன. அவற்றுள் ஒன்று பேராக் மாநிலம். மற்றவை பினாங்கு, கெடா, சிலாங்கூர், திரங்கானு, கிளாந்தான் மாநிலங்கள்.

People of all races joint hands to support V.Sivakumar
அதன் பிறகு, பேராக் மாநிலத்தின் சட்டசபைக்கு வி. சிவகுமார் சபாநாயகராக நியமிக்கப்பட்டார். மலேசியாவில் வாழும் இந்தியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வி. சிவகுமார் 5 டிசம்பர் 1970இல், ஈப்போவில் பிறந்தவர். நீதித் தத்துவத் துறை இளங்கலையிலும், வணிக நிர்வாகத் துறை முதுகலையிலும் பட்டம் பெற்றவர். 1997ஆம் ஆண்டு அரசியலில் காலடி எடுத்து வைத்தார். ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம். குலசேகரனிடம் அரசியல் செயலாளராகச் சேவை செய்தவர்.

Riot Police controlling the crowd supporting Sivakumar
பின்னர், 2008ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் பேராக் மாநிலத்தின் துரோனோ சட்டமன்றத் தொகுதியில், லீ கிம் சோய் என்பவரை எதிர்த்துப் போட்டியிட்டார். 2,571 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றியும் பெற்றார்.

பேராக் அரசியல் பேரலை

அதற்கு முன் ஒன்றைச் சொல்லிவிடுகிறேன். 1957ஆம் ஆண்டு மலேசியா சுதந்திரம் அடைந்தது. அதில் இருந்து 2008ஆம் ஆண்டு வரை, பேராக் மாநிலத்தை தேசிய ஆளும் கட்சியான தேசிய முன்னணியே தன் இரும்புக் கரங்களினால் இறுக்கிப் பிடித்து வைத்து இருந்தது. மற்ற கட்சிகள் நசுக்கிப் போடப்பட்டன.

Sivakumar being carted away at the State Assembly
2008இல் ஏற்பட்ட மலேசிய அரசியல் சுனாமிப் பேரலையால், பேராக் மாநில ஆட்சி மக்கள் கூட்டணி எனும் எதிர்க்கட்சிகளின் கூட்டணியிடம் கைமாறியது. நம்முடைய கதாநாயகன் வி. சிவகுமார் சட்டசபையின் சபாநாயகராக நியமனம் செய்யப்பட்டார்.

இந்தக் கட்டத்தில், பாரிசான் நேசனல் போட்டியாக ஜுனுஸ் வாகிட் என்பவரை தேசிய முன்னணி சபாநாயகராக நியமனம் செய்தது. இவர் ஏற்கனவே, பேராக் மாநிலச் சட்டசபையின் சபாநாயகராக இருந்தவர்தான். சட்டசபையில் தான் சார்ந்த கட்சிக்கு பெரும்பான்மை இல்லாத போது இந்த முறை மறுபடியும் அவரே நியமிக்கப்பட்டு இருந்தார். 



With his Tronoh people
இதைத் தொடர்ந்து, தேசிய முன்னணிக்கும் மக்கள் கூட்டணிக்கும் இடையே கரடுமுரடான வாக்குவாதங்கள். சட்டசபைக்கு வெளியே கைகலப்புகளும் நிகழ்ந்தன.

சபாநாயகர் யார்

ஜுனுஸ் வாகிட் சபாநாயகரா இல்லை வி. சிவகுமார் சபாநாயகரா என்பதை முடிவு செய்யும் ஒரு சட்டசபை வாக்கெடுப்பு, 2008 ஆகஸ்டு மாதம் 25ஆம் தேதி நடைபெற்றது. அந்த வாக்கெடுப்பில் வி. சிவகுமாருக்கு 31 வாக்குகள் கிடைத்தன. ஜுனுஸ் வாகிட்டிற்கு 28 வாக்குகள் கிடைத்தன. 



Ang Paw to Old Citizens
ஜனநாயக வாக்கெடுப்பின் முடிவின்படி வி. சிவகுமார் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். துணைச் சபாநாயகராக ஹீ இட் பூங் என்பவர் நியமிக்கப்பட்டார்.

ஹீ இட் பூங் என்பவர் ஒரு பெண். மகா பெரிய கில்லாடி. இவர் ஜெலாப்பாங் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். பணத்திற்காக விலை போன ஒரு மனுஷி. கொஞ்ச நஞ்ச காசு இல்லை. 30 மில்லியன் மலேசிய ரிங்கிட். அதாவது கிட்டத்தட்ட 50 கோடி ரூபாய். 



Listening to grievances of his constituency people
இவருடன் பேராங் சட்டமன்ற உறுப்பினர் ஜமாலுடின் முகமட் ராட்சி என்பவரும், சங்காட் ஜெரிங் சட்டமன்ற உறுப்பினர் முகமட் ஒஸ்மான் முகமட் ஜைலு என்பவரும், மாலிம் நாவார் சட்டமன்ற உறுப்பினர் கேஷ்வந்தர் சிங் என்பவரும், ஒன்றாகச் சேர்ந்து கொண்டு மக்கள் கூட்டணியில் இருந்து, தேசிய முன்னணிக்கு ஆதரவாகக் கட்சி தாவினர். எல்லோருக்கும் மில்லியன் கணக்கில் காசு கொடுக்கப்பட்டது. ஆளும் மக்கள் கூட்டணியைக் கவிழ்த்துவிட்டனர்.

பேராக் அரசியல் சாசன நெருக்கடி

அதனை ஒரு கட்சித் தாவல் என்று தாராளமாய்ச் சொல்லலாம். பேராக் சட்டமன்றத்தில் மக்கள் கூட்டணி, பெரும்பான்மையை இழந்தது. அதுவே, பேராக் அரசியல் சாசன நெருக்கடி 2009க்கு மூலகாரணமாகவும் அமைந்தது. அதன் தொடர்ச்சியாக, அரச சபாநாயகர் வி. சிவகுமாரும் பதவியைப் பறி கொடுக்க வேண்டியும் வந்தது.
At a Chinese Temple in Tronoh
இருப்பினும், 2009 பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி, சபாநாயகர் தகுதியில் இருக்கும் நிலையில், பேராக் மாநிலச் சட்டசபையின் அவசரக் கூட்டத்திற்கு வி. சிவகுமார் அழைப்பு விடுத்தார். அவருக்கு அந்த அரசு உரிமை இருந்தது. இரு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அவர் அந்த அழைப்பில் கோடி காட்டினார்.

அவர் கொண்டு வந்த தீர்மானங்களில், முதல் தீர்மானம்: பேராக் முதலமைச்சர் முகமட் நிஜார் ஜமாலுடின் என்பவர்தான் சட்டபூர்வமான அரசு அதிகாரி என்பதாகும்.

சட்ட அறிவுரைஞர்

அடுத்து, பேராக் சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டு புதிதாக ஒரு தேர்தலை நடத்தி ஒரு புதிய அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் என்பது, அவருடைய இரண்டாவது தீர்மானம். சபாநாயகர் வி. சிவகுமாரின் சட்டசபை அவசரக் கூட்ட அழைப்பை பேராக் மாநில சட்ட அறிவுரைஞர் அகமட் கமால் முகமட் ஷாகிட் என்பவர் நிராகரித்தார்.

At a sundry market in Tronoh
மாநிலத்தின் அரச ஆளுநரின் அனுமதி இல்லாமல் சட்டசபை அவசரக் கூட்ட அழைப்பை விடுக்க முடியாது என்று அவர் காரணம் காட்டினார். அதாவது பேராக் மாநில சுல்தானின் அனுமதி இல்லாமல் சட்டசபை அவசரக் கூட்டத்தை நடத்த முடியாது என்று சட்ட நுணுக்கங்களை அடையாளம் காட்டினார். சும்மா இருப்பாரா சிவகுமார். படித்த பையன் ஆயிற்றே.

சிவகுமாரின் வழக்கறிஞர் அகஸ்டின் அந்தோனி என்பவர் மறுப்பு தெரிவித்தார். இங்கே ஒரு சட்டசபையின் கூட்டம்தான் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சட்டசபை கலைக்கப்படவில்லை. 

Malays assembled to listen his speech
அதனால், சிவகுமாரின் சட்டசபை அவசரக் கூட்ட அழைப்பு செல்லத்தக்கது. அந்த அழைப்பிற்கு மாநில சுல்தானின் அனுமதி தேவை இல்லை என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.

திடீர் அணுகுண்டு

சட்டசபை அவசரக் கூட்டம் நடைபெறுவதற்கு ஒரு சில நாள்களுக்கு முன்னால், 2009 மார்ச் 2ஆம் தேதி மற்றோர் அதிர்ச்சியான திருப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சட்டசபையின் கட்டிட வேலிக் கதவுகளுக்குப் பூட்டுகளைப் போட்டு பூட்டுமாறு பேராக் மாநிலச் செயலகம் கட்டளை பிறப்பித்தது. அது ஒரு திடீர் அணுகுண்டு.

Distributing rice packets to the needy people
அதே தினம் சிவகுமார் மற்றோர் அறிவிப்பையும் செய்தார். சட்டசபைச் செயலாளரைத் தான் பதவியில் இருந்து அகற்றுவதாகவும், மாநிலச் சட்டசபையின் அவசரக் கூட்டம் திட்டமிட்டபடி 2009 மார்ச் 3ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்தார்.

சபாநாயகர் சிவகுமாரின் ஆணையின்படி 2009 மார்ச் 3ஆம் தேதி சட்டசபை அவசரக் கூட்டத்தை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சட்டமன்ற உறுப்பினர்களும் கட்டிட வளாகத்திற்குள் வந்து சேர்ந்தனர்.

A get togather party
இந்தக் கட்டத்தில், சட்டசபைக் கட்டிட வளாகத்தில் நூற்றுக்கணக்கான போலீஸ்காரர்கள் கொண்டுவரப்பட்டு குவிக்கப்பட்டனர். மக்கள் கூட்டணியின் சட்டமன்ற உறுப்பினர்கள், கட்டிடத்திற்குள் நுழைவதில் இருந்து தடுக்கப்பட்டனர்.

மரத்தின் கீழ் சட்டமன்ற அவசரக் கூட்டம்

சட்டசபை வளாகத்தில், வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் ஒரு பெரிய மரம் இருந்தது. இன்னும் இருக்கிறது. அந்த மரத்தின் அடியில் அவசர சட்டசபைக் கூட்டம் நடைபெறும் என்று சிவகுமார் உடனடியாக அறிவித்தார்.


சபாநாயகரின் முழு ஆடை அணிகலன்களுடன் இருந்த சிவகுமார், மரத்தின் அடியிலேயே சட்டசபைக் கூட்டத்தையும் நடத்தினார்.

அது மலேசிய வரலாற்றில என்றென்றும் மறக்க முடியாத நிகழ்ச்சியாகும்.
அதைப் பார்ப்பதற்கு பொதுமக்கள் ஆயிரக் கணக்கில் அங்கே வந்து கூடி விட்டனர். என்னையும் சேர்த்துதான். ஓர் உலக அதிசயமே நடக்கிது. பார்க்காமல் இருக்க முடியுமா. பொதுமக்கள் கைதட்டல்கள் மூலமாகத் தங்களின் ஆதரவுகளைத் தெரிவித்தனர்.


மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு இப்படி ஒரு நிலையா என்று அவர்கள் மிக மிக வேதனை அடைந்தனர். கலைந்து போகுமாறு பொதுமக்களைப் போலீஸார் உரக்கத் தொனியில் அதட்டிப் பார்த்தனர். ஒன்றும் நடக்கவில்லை. பொதுமக்கள் அசையவில்லை.

மூன்று தீர்மானங்கள்

மரத்தின் கீழ் நடைபெற்ற அந்த அவசர சட்டமன்றக் கூட்டத்தில், 27க்கு 0 எனும் வாக்குப் பெரும்பான்மையில், மூன்று தீர்மானங்கள் உடனடியாக நிறைவேற்றப்பட்டன.
  • முதல் தீர்மானம்: முகமட் நிஜார் ஜமாலுடின் என்பவர்தான், மக்களால் தேர்வு செய்யப்பட்ட பேராக் மாநிலத்தின் முதலமைச்சர். அவர்தான் முதலமைச்சராக இருப்பார்.
  • இரண்டாவது தீர்மானம்: பாரிசான் நேசனல் கூட்டணி அமைத்த மாநில அமைச்சரவை சட்டத்திற்குப் புறம்பானது. செல்லுபடியாகாது.
  • மூன்றாவது தீர்மானம்: மாநில சட்டசபை கலைக்கப்பட்டு உடனடியாக இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
பகிங்கரக் கண்டனம்

மரத்தின் கீழ் சிவகுமார் நடத்திய சட்டசபை அவசரக் கூட்டத்திற்கு எதிராக பாரிசான் நேசனல் ஒரு பகிங்கரக் கண்டனம் தெரிவித்தது. அந்தக் கூட்டத்தில் தங்களின் சட்டமன்ற உறுப்பினர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை என்றும் அறிவித்தது.

இதற்கிடையில், மக்கள் கூட்டணியின் முதலமைச்சராக இருந்த முகமட் நிஜார் ஜமாலுடின், பேராக் மாநிலச் சட்டசபையைக் கலைத்து விடுமாறு பேராக் மாநில சுல்தான் ராஜா அஸ்லான் ஷா அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். ஆனால், அந்த வேண்டுகோள் நிறைவேற்றப்படவில்லை. இன்றுவரை காற்றில் பறந்து கொண்டு இருக்கிறது.

As a Perak State Speaker of the House
பேராக் மாநிலச் சட்டமன்ற வளாகத்தில், வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் இருந்த அந்த மரத்திற்கு ‘மக்களாட்சி மரம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்த மரத்தின் கீழ் ஒரு நினைவுப் பலகையும் வைக்கப்பட்டது. அதையும் பிடுங்கி எரிந்துவிட்டார்கள்.

சிவகுமாரும் சீனர்களும்

இப்போது சிவகுமாருக்கு வயது 42. இந்த இளம் வயதிலேயே ஒரு மாநிலத்தின் சபாநாயகராக அரியணை வீற்று சாதனை படைத்துள்ளார். இந்தக் காலக் கட்டத்தில், அவர் பேராக் மாநிலத்தின் சபாநாயகராக இல்லாவிட்டாலும், தன்னுடைய துரோனோ தொகுதி மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து வருகிறார். எல்லாவிதமான இன, சமய சடங்குகளிலும் கலந்து கொள்கிறார்.

Under Democracy Tree
பூர்வீகக் குடிமக்களின் திருமணங்களுக்குச் சென்று அவர்களில் ஒருவராக ஐக்கியமாகி விடுகிறார். துரோனோ நகரின் பிரதானக் காய்கறிச் சந்தைகளுக்குச் சென்று பொதுமக்களின் பிரச்னைகளைக் கண்டறிந்து அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்து வருகிறார்.

வயதானவர்களின் இல்லங்களுக்குச் சென்று பண உதவிகளைச் செய்கின்றார். துரோனோ தொகுதிச் சீனர்கள் அவரை ஓர் இந்தியராக இனம் பிரித்துப் பார்ப்பது இல்லை. தங்களின் குடும்ப உறுப்பினராகப் பார்க்கின்றனர்.

அனுதாப அலைகள்

முழு மரியாதைக்குரிய சபாநாயகர் ஆடை அணிகலன்களுடன் இருக்கும் போது, சிவகுமார் சட்டசபையில் இருந்து வெளியே இழுத்து வரப்பட்டது மலேசிய மக்களிடையே ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தவிர, ஊடகங்கள் வழியாக வெளியுலகத்திற்கும் தெரிய வந்துள்ளது.

With Ubah Banner
பொதுவாக, அவர் மீது மலேசிய மக்களின் அனுதாப அலைகள் இன்னும் பலமாக வீசிக் கொண்டு இருக்கின்றன. அவருக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் தீங்கு விளைவிக்கப்பட்டதாக பொதுமக்கள் கருதுகின்றனர்.

’உங்களைப் பற்றி ஒரு கட்டுரை எழுதுகிறேன். விக்கிப்பீடியாவிலும் வெளிவரும். நீங்கள் சபாநாயகர் அரசு உடைகளுடன் பிடித்த படம் ஒன்று வேண்டும். விக்கிப்பீடியாவில் பிரசுரிக்க வேண்டும்’ என்று சிவகுமாரை அழைத்து நேற்றிரவு பேசினேன். (21.01.2013)

ரொம்ப பிரபலப் படுத்த வேண்டாம் சார்

அதற்கு அவர், ‘ரொம்ப பிரபலப் படுத்த வேண்டாம் சார். தேர்தல் காலம். அமைதியாகப் போராடுவோம்’ என்றார். சபாநாயகர் எனும் தகுதியைத் தாண்டி, சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் தாண்டிப் போய் என்னிடம் வெகுநேரம் மனம் விட்டுப் பேசிக் கொண்டிருந்தார். என் மனதில் மழை பெய்தது.

At Tronoh Town with Chinese devotees
எதிர்வரும் 2013 ஏப்ரல் மாதம் மலேசியாவின் 13வது பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. வி.சிவகுமார் என்கிற இந்த இளைஞன், இதே துரோனோ தொகுதியில் மறுபடியும் தேர்தலில் நிற்கிறார். வெற்றி பெற வேண்டும். ஒரு தந்தையின் மனம் வேண்டிக் கொள்கிறது.

(விக்கிப்பீடியாவில் http://ta.wikipedia.org/s/2kgr எனும் முகவரியில் அவரைப் பற்றிய கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.)

19 ஜனவரி 2013

கச்சத்தீவு யாருக்கு?


ஊழி ஊழி காலமாகக் கச்சத்தீவு தமிழர்களின் வாழ்வாதாரமாக இருந்து வந்தது. இப்போது தமிழர்களைச் சுட்டுப் பொசுக்கும் ஒரு கொலைகளமாக மாறி வருகிறது. 

கச்சத்தீவு யாருக்கு?
இலங்கைக்கு இந்திரா காந்தியால் தாரை வார்த்துக் கொடுக்கப்பட்ட ஒரு குட்டி நிலப்பகுதி.  உலகத்தையே இப்போது திரும்பிப் பார்க்க வைக்கிறது.

கச்சத்தீவு ஒரு முடிந்துபோன கதை. தாரை வார்த்துக் கொடுத்த மகள் மறுபடியும் புது மகள் ஆனதாகச் சரித்திரமே இல்லை. போனது போனது தான். கொடுத்தது கொடுத்ததுதான்.

கச்சத்தீவில் கடந்த சில ஆண்டுகளில் இலங்கையின் கடல் படை 380 தமிழக மீனவர்களைச் சுட்டுப் போட்டு சூடு காட்டித்  தின்று  இருக்கிறது. 2800 க்கும் அதிகமான தமிழர்களைப் படுகாயப் படுத்தி இருக்கிறது.

பலகோடி ரிங்கிட் மதிப்புள்ள மீன்பிடி உபகரணங்கள், வலைகளை நாசம் செய்துள்ளது. நூற்றுக்கணக்கான மீனவர்களைச் சிறை செய்துள்ளது. 
க‌ச்ச‌த்‌தீவு அருகே ‌மீ‌ன்‌பிடி‌யில் ஈடுபட்ட 3500 ‌த‌‌மிழக‌ ‌மீனவ‌ர்கள் விரட்டியடிப்பு
காணாமல் போனவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.  இது மட்டும் இல்லை. இலங்கை அரசு ஆயிரக்கணக்கான கண்ணி வெடிகளைக் கச்சத்தீவு கடல் நீரில் அள்ளித் தெளித்து, அபிஷேகம் செய்து வருகிறது. தமிழக மீனவர்களின் படகுகள் வெடித்துச் சிதறிப் போய்க் கிடக்கின்றன.

ராமேஸ்வரம், மன்னார்க்குடி பகுதிகளில் நூற்றுக்கணக்கான பெண்கள் தாலி அறுக்கப் பட்டதற்கு இலங்கை தான் மூல காரணம். துணை போகிறது சீனா.

என் புருஷனைக் கொன்ற அந்த இனத்தையே அழிப்பேன் என்று கச்சைக் கட்டி நிற்கின்றது ஒரு பத்தினி விரதை.

கச்சத்தீவு ராமேஸ்வரத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் இருக்கிறது. இலங்கையில் இருந்து 20 கி.மீ. தொலைவு. பாக் நீரிணையில் இருக்கும் ஒரு சின்னக் குட்டித் தீவு. இங்கு ‘டார்குயின்’ எனும் பச்சை ஆமைகள் அதிகம். கச்சம் என்றால் ஆமை. பச்சைத் தீவு என்பது காலப் போக்கில் கச்சைத் தீவு ஆனது. 
(சான்று: http://ta.wikipedia.org/wiki/ கச்சதீவு)

1605 ஆம் ஆண்டில் மதுரையில் நாயக்க மன்னர்கள் வாழ்ந்தார்கள். அவர்கள் ராமேஸ்வரத்தில் சேதுபதி அரசை தோற்றுவித்தார்கள். சேதுபதி அரசுக்கு குத்துக்கால் தீவு, குருசடித் தீவு, இராமசாமித் தீவு, மண்ணாலித் தீவு, கச்சத் தீவு, நடுத் தீவு, பள்ளித் தீவு ஆகிய தீவுகள் வழங்கப் பட்டன.

அத்துடன் ராமேஸ்வரத்தில் இருந்த 69 கடற்கரைக் கிராமங்களும் சேதுபதி அரசருக்கு உரிமை ஆக்கப்பட்டன. அன்றில் இருந்து 1947 ஆம் ஆண்டு வரை கச்சத் தீவு இராமநாதபுரம் ஜமீனுக்கு சொந்தமாக இருந்து வந்தது.

இந்தியா விடுதலை அடைந்ததும் ஜமீன் முறை அகற்றப் பட்டது. அதன் பின்னர் கச்சத்தீவு இந்தியக் குடியரசிற்குச் சொந்தமானது. 

(சான்று: http://www.mahaveli.com/?p=8891)
கச்சத்தீவில் புனித அந்தோனியார் திருவிழா
ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய கடலோர மாவட்டங்களில் வாழும் தமிழக மீனவர்கள் தொன்று தொட்டு, கச்சத்தீவின் அருகில் மீன் பிடித்து தங்களின் அன்றாட வாழ்க்கையை நடத்தி வந்தனர். இப்போதும் அப்படித் தான் நடந்து வருகிறது. அதில் மாற்றம் இல்லை.

சரி. இந்தியாவுக்குச் சொந்தமான கச்சத்தீவை ‘இந்தா எடுத்துக்கோ’ என்று இந்திரா காந்தி ஏன் இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்தார். அதில் ஒரு பெரிய ரகசியமே மறைந்து கிடக்கிறது. சிலருக்குத் தெரியும். பலருக்குத் தெரியாது. அந்த ரகசியத்தைச் சொல்கிறேன்.

1971 ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போர் நடந்தது. அப்போது இந்தியாவின் பிரதமராக இந்திரா காந்தி இருந்தார். கிழக்கு பாகிஸ்தானைத் தாக்கி மூன்றே நாட்களில் ஒரு புதிய நாட்டையே உருவாக்கிக் கொடுத்தார் அந்த இரும்புப் பெண்மணி. அந்தப் பழைய கிழக்கு பாகிஸ்தான் தான் இப்போதைய வங்காள தேசம். 
(சான்று: http://en.wikipedia.org/wiki/Indo-Pakistani_War_of_1971)

இது அமெரிக்காவிற்குப் பிடிக்கவில்லை. ஏன் என்றால், அமெரிக்காவும் பாகிஸ்தானும் கூட்டாளிகள். உடனே ‘எண்டர்பிரைஸ்’ எனும் அணு ஆயுதக் கப்பலை இந்தியாவைத் தாக்க அமெரிக்கா அனுப்பியது.

அப்போது அமெரிக்காவின் அதிபராக நிக்சன் இருந்தார். கல்கத்தாவின் மீது அணுகுண்டுகளைப் போடுவது தான் அமெரிக்காவின் திட்டம்.
தமிழக மீனவர்கள் தங்களின் மீன்பிடிப்
படகைக் கரைக்கு இழுத்து வருகின்றனர்.
அமெரிக்காவிற்கு உதவியாக இங்கிலாந்து எச்.எம்.எஸ். ஈகள் எனும் ஆணு ஆயுதக் கப்பலையும் அனுப்பியது. வங்காள விரிகுடாவில் அமெரிக்க, இங்கிலாந்து படைகள் குவிக்கப் பட்டன. எல்லாம் இந்தியாவைத் தாக்குவதற்குத் தான்.

இந்தக் கட்டத்தில் இந்தியாவிற்கு ஆதரவாக ரஷ்யா களம் இறங்கியது. இந்தியாவின் மீது கையை வைத்தால் ரஷ்யா சும்மா இருக்காது, பதிலடி கொடுக்கும் என்று உலகத்தையே எச்சரிக்கை செய்தது.

இந்தியாவிற்கு ஆதரவாக கியூபா, அங்கோலா, இஸ்ரேல், பிரான்சு போன்ற நாடுகள் படைகளை அனுப்பத் தயாராக இருந்தன.
90,000 பாகிஸ்தானிய போர் வீரர்களை இந்தியா தடுத்து வைத்தது.
ரஷ்யாவின் 12 அணு நாசகாரிக் கப்பல்கள், ஓர் அணு நீர்மூழ்கிக் கப்பல், மூன்று விமானந்தாங்கிக் கப்பல்கள் இந்தியக் கடல் எல்லைக்குள் வந்து சேர்ந்தன. அவற்றில்  18,000 ரஷ்யப் போர் வீரர்கள் தயார் நிலையில் இருந்தனர்.

இதைத் தவிர 2000 ரஷ்ய எம்.ஐ.ஜி ரகப் போர் விமானங்கள் இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் நிறுத்தி வைக்கப் பட்டன. மூன்றாவது உலகப் போர் வரக் கூடிய கட்டம். ஆட்டம் கண்டு போனது அமெரிக்கா. அதன் வரலாற்றில் முதல் முறையாக பின வாங்கியது.

இந்தக் கட்டத்தில் இந்தியாவைக் குறி வைத்து ஐ.நா. சபையில் ஒரு தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்தது. சும்மா இருக்குமா ரஷ்யா. தனது ரத்து அதிகாரத்தால் அந்தத் தீர்மானத்தைத் தடை செயதது.

இல்லை என்றால் இந்தியா மீது ஐ.நா. படைகள் போர் தொடுத்து இருக்கலாம். உலகச் சரித்திரம் வேறு மாதிரி எழுதப் பட்டிருக்கலாம். அதன் பின்னர் அமெரிக்கா பின் வாங்கியது.

இந்த நிலையில் இந்தியா யோசிக்கத் தொடங்கியது. இந்தியாவின் வடக்கே தரைப்பகுதி. அங்கே பாகிஸ்தானும், சீனாவும் நாக்கைத் தொங்கப் போட்டு நிற்கின்றன. கிழக்கும், மேற்கும் கடல் பகுதிகள். பரவாயில்லை. ஆபத்து இல்லை. தெற்கில் உள்ள ஒரே தரைப்பகுதி இலங்கைதான். 

கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்களை தாக்கி சிங்கள கடற்படை அட்டகாசம்

வங்காள தேசப் போருக்குப் பின் இலங்கையில் விமானத் தளம் அமைக்க பாகிஸ்தான் இடம் கேட்டுக் கொண்டிருந்தது. அதைத் தடுக்க இந்திரா காந்தி திட்டம் போட்டார்.

இலங்கையில் பாகிஸ்தானுக்கு இடம் கிடைத்தால் இந்தியாவுக்கு ஆபத்து. அப்போது இலங்கையின் பிரதமராக ஸ்ரீ மாவோ பண்டாரநாயகா இருந்தார். அவரைச் சமாதானம் செய்ய முயன்றார். 
(சான்று: http://www.alaikal.com/news/?p=17814)

கச்சத் தீவை எங்களுக்குத் தந்து விடுங்கள். இலங்கையில் விமான தளம் அமைக்க பாகிஸ்தானுக்கு நாங்கள் இடம் தர மாட்டோம் என்று ஒரே அடியாக பண்டாரநாயகா கிடுக்குப் பிடி போட்டார்.

இந்திரா காந்தியால் மறுக்க முடியவில்லை. சரி என்று சொல்லிவிட்டார். அந்தச் சமயத்தில் அவருக்கு வேறு வழியும் இல்லை. மறுத்தால் ஆபத்து தலைக்கு மேல் வந்துவிடும்.

கச்சத்தீவு எங்கே இருக்கிறது
1974 இல் கச்சத்தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப் பட்டது. பிறகு இரண்டு வருடங்கள் கழித்து 1976 இல் மீண்டும் ஓர் ஒப்பந்தம். தமிழக மீனவர்கள் கச்சத்தீவில் தங்கி ஓய்வு எடுக்கலாம். வலைகளை உலர்த்தலாம். ஆண்டுக்கு ஒருமுறை அங்கே நடக்கும் அந்தோணியார் கோயில் திருவிழாவில் பங்கேற்கலாம்.

ஆனால், யாரும் தங்கக் கூடாது. அவை அந்த ஒப்பந்தத்தின் அடிப்படைகள். ஆனால் அந்த ஒப்பந்தத்தின் படி இலங்கை அரசு நடந்து கொள்கிறதா என்பதுதான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி.
கச்சத்தீவை கண்காணிக்க இந்திய கடற்படை ஆயத்தம்

இலங்கை ஒரு சிறிய நாடுதான். ஆனால் அதை இந்தியா பகைத்துக் கொண்டால் என்ன ஆகும். சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் தளம் அமைக்க இலங்கை இடம் கொடுத்து விடும்.

ஆக, ஒட்டு மொத்த   இந்தியாவின்  பாதுகப்புக்காகத் தமிழக மீனவர்களின் நலன்கள் புறக்கணிக்கப் படுகின்றன என்பது தான் உண்மையிலும் உண்மை. 

கச்சத்தீவில் இலங்கை போர் கப்பல்
இலங்கையில் இருக்கும் தமிழ் இனம் அழிக்கப் படும் போது இந்தியா மௌனம் சாதித்து வந்ததற்கு இதுவும் ஒரு காரணம். இப்போது புரிகிறதா!

கச்சத்தீவு மறுபடி இந்தியாவுக்கு கிடைக்கவே கிடைக்காது.  இப்படி நான் சொல்லவில்லை. உலகின் இரண்டாவது போலீஸ்காரர் சீனா சொல்கிறது. சொல்லியும் வருகிறது.

அமெரிக்காவை மிரட்டியும் வருகிறது. இப்போது ரஷ்யா அடங்கிப் போய் கிடக்கிறது. என்ன செய்வது. அங்கேயும் ஆயிரத்து எட்டு பிரச்னைகள்.

கச்சத்தீவில் சீனாவின் கப்பல்கள் வந்து போகின்றன. அவற்றுக்கு உதவியாக இலங்கையின் கப்பல்களும் வருகின்றன. ‘நாங்கள் இருக்கும் போது நீ ஏன் பயப்படுகிறாய்... புகுந்து விளையாடு’ என்று சீனா இலங்கைக்கு நெல்லிக்காய் லேகியம் கொடுத்து வருகிறது. 

கச்சத்தீவு அருகே எண்ணெய் கிணறுகள்
அந்த லேகியத்தைச் சாப்பிட்டுக் கொண்டு இலங்கை இப்போது அமெரிக்காவிற்கே சவால் விடுகிறது. என்ன செய்வது. காலம் செய்கிற கோலம்.

கச்சத்தீவின் அருகே, ஆழ்கடலில் எண்ணெய் வளங்கள் உள்ளன. அவை சீனாவின் கண்களை உறுத்துகின்றன. சின்னத் தம்பி இலங்கையைக் கைக்குள் போட்டுக் கொண்டால் சீக்கிரமாக பிரியாணி சாப்பிடலாமே என்று சீனா ஆசைப் படுகிறது. ‘வாங்க அண்ணே... வாங்க’ என்று இலங்கையும் சமையல் சாதம் செய்து போட தயாராக இருக்கிறது.

இப்படி எழுதுவதற்காக தயவு செய்து என்னை மன்னிக்கவும். இந்திய - இலங்கை உடன்பாடு கையெழுத்து ஆகிறது என்று கருணாநிதிக்கு நன்றாகத் தெரியும்.

உண்மையிலேயே தமிழக மீனவர்கள் மீது அக்கறை இருந்து இருந்தால்... உடனடியாக  தமிழகச் சட்டசபையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி மிகப் பெரிய போராட்டத்தை நடத்தி இருக்கலாம். கச்சத்தீவை விட்டுக் கொடுத்து இருக்கக் கூடாது.

ஆனால், அதைச் செய்யத் தவறிவிட்டார். இப்போது கடிதம் மேல் கடிதம் எழுதி பயன் இல்லை. பாவம் அவர். அவரைக் குறை சொல்லக் கூடாது. பாசத்திற்கு பேரம் பேசவே அவருக்கு நேரம் இல்லாமல் போய்விட்டது. 

கச்சத்தீவின் தோற்றம்
தமிழகத்தில் ஆயிரம் ஆயிரம் அரசியல் கட்சிகள் வரலாம். போகலாம். கச்ச தீவை மீட்டுத் தருகிறோம் என்று காட்டுக் கத்தலாய்க் கத்தலாம்.

ஆனால், கச்சத்தீவு கிடைக்கும் என்பதை மறந்து விடுவது தான் நல்லது என்று எனக்குப் படுகின்றது. வெள்ளம் தலைக்கு மேல் போன பிறகு இனிமேல் கத்திப் பிரயோஜனமே இல்லை.

பழகிப் போன ஆடம்பரமான அரசியல் கவிதாஞ்சலிகள் அலை அலையாய் வரலாம். அவை கச்சத் தீவில் செத்துப் போன மீனவ ஜீவன்களுக்கு கேட்கவே கேட்காது. கேட்கவும் கூடாது! அதுவே அவர்களுக்கு பெரும் புண்ணியமாக இருக்கும்!

கணினி கலைச்சொற்கள்


Application Software – பொதுப் பயன்பாட்டு மென்பொருள்
Battery/Cell - மின்கலம்
Binary Numbers (0,1) - இரும எண்கள் / துவித எண்கள்
Browser – உலவி (பெயர்ச் சொல்) / உலாவி (வினைச் சொல்)
Button – பொத்தான்
Code Generator - குறிமுறை இயற்றி /  நிரல் இயற்றி
Command -  கட்டளை
Computer – கணினி
Central Processing Unit - மையச் செயலகம்
Compact Disk – குறுவட்டு
Compiler/ interpreters – நிரல்மொழி மாற்றி
Control Unit - கட்டுப்பாட்டகம்
Digital – எண்ணிமம்
Digital Versatile Disk(DVD) - பல் திறன் இறுவட்டு
Data – தரவுகள் (பன்மை) / Datum – தரவு (ஒருமை)
Data Base - தரவுத்தளம்
Download – பதிவிறக்கம்
DVD -  இறுவட்டு
e-mail - மின்னஞ்சல்
Executable Program - நிறைவேற்றத்தகு நிரல்
Execute - நிறைவேற்று
File - கோப்பு
Key board – விசைப்பலகை / தட்டச்சுப் பலகை
Software – மென்பொருள் / நிரலி
Hardware - வன்பொருள்
Screen – திரை / கணினித் திரை
Laptop - மடிக்கணினி
Memory - நினைவகம்
RAM - தற்காலிக  நினைவகம்
Registry - பதிவகம்
Microprocessor - நுண்செயலகம்
Operating System - இயக்கு தளம் / இயங்குதளம்
Pointer - சுட்டி
Mouse – சுழலி / சொடுக்குப் பொறி
Internet – இணையம் / இணையத்தளம்
Networking - வலைப்பின்னல் / வலையமைப்பு
Printer - அச்சுப்பொறி
Server – வழங்கி / சேவைக் கணினி / பரிமாறிக் கணினி
Internet Server - இணைய சேவைக் கணினி
IC (Integrated Circuit) - ஒருங்கிணைச் சுற்று
Input - உள்ளிடு
Port - பொருத்துவாய்
Liquid Crystal Display (LCD)- திரவப்படிக திரையகம்
Super computer - மீத்திறன் கணினி / அதித் திறன் கணினி
Output - வெளியீடு
Upload - பதிவேற்றம்
Multi-media – பல்லூடகம்
Multi-media Super Corridor – பல்லூடகப் பெருவழி
High Level Language - மேல்நிலை நிரல்மொழி
Low Level Language -  கீழ்நிலை நிரல்மொழி
Source Language / Source Code - மூல மொழி
Machine Language - பொறி மொழி / கணினி மொழி
Source Code Optimizer - மூல மொழி ஊகவுறுத்தி
Target Code Optimizer - பெயர்ப்பு மொழி ஊகவுறுத்தி
Tool Bar - கருவிப்பட்டை
IT (Information Technology) - தகவல் தொழில்நுட்பம்
Interface – இடைமுகம் / இடைமுகப்பு
table -அட்டவணை
List - பட்டியல்
object oriented language - பொருள்நோக்கு நிரல்மொழி
Free / Open - கட்டற்ற
Function - செயற்கூறு
Modem - இணக்கி
chip - சில்லு
word processor - சொல் செயலி
spread sheet - விரி தாள்
Global positioning System (GPS)- உலக இருப்பிட முறைமை
Scroll bar - உருள் பட்டை/ ஏற்று இறங்குப்பட்டை
Interface - இடை முகம்
Synchronize – ஒத்தியக்கம்


முதன்மைக் கணினி - Main Frame
தனியாள் கணினி - Personal computer
மடிக்கணினி / ஏட்டுக்கணினி - Notebook
எண்சட்டம் - Abacus
துளைப்பட்டை - Punch Card
கட்டுளம் - Valve
திரிதடையம் - Transistor
ஒருங்கிணைந்த சுற்றமைப்பு - Integrated Circuit
ஒத்திசை கணினி - Analog Computer
இலக்கமுறை கணினி - Digital Computer

07 ஜனவரி 2013

குழந்தைகளுக்கான விளையாட்டுகள்


குழந்தைகளுக்கான விளையாட்டுகள்

படங்களுக்கு கீழே இருக்கும் கத்தரிப்பூ நிற இணையத் தொடர்புகளின்  மீது சொடுக்குங்கள். விளையாட்டுகள் இருக்கும் இணையத் தளத்திற்குச் செல்லலாம். இணையத் தளத்திற்குப் போய், ஆகக் கீழே I want download for free அல்லது Download Free என்பதைச் சொடுக்கி இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். பிரச்னைகள் என்றால் எனக்கு அழையுங்கள். 

பினாங்கு அன்புமணி அவர்களுக்கு, இப்போது உங்களுக்கு மனநிறைவு தானே!

Angry Birds Star Wars 1.1.0

Angry Birds Star Wars 1.1.0
இதைப் பணம் கொடுத்து வாங்க வேண்டி இருக்கும். விலை 60 ரிங்கிட். இருப்பினும் உங்களுக்காக ஒரு குறுக்கு வழி. http://extabit.com/file/2du6w4ymwibkt எனும் இணையத் தளத்திற்குப் போய், ஆகக் கீழே I want download for free என்பதைச் சொடுக்கி இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். 63.7 MB



Angry Birds Space 1.3.1

http://uploaded.net/file/pon3jnrm எனும் இணையத் தளத்திற்குப் போய், ஆகக் கீழே Download Free என்பதைச் சொடுக்கி இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். கொள்ளளவு  36.9 MB

Planets Under Attack (2012)

http://uploaded.net/file/71ub38cf  எனும் இணையத் தளத்திற்குப் போய், Download Free என்பதைச் சொடுக்கி இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். Password: crazy    கொள்ளளவு  294 MB

Castle Crashers (2012)

http://ul.to/v34uz2o1 (பாகம் 1), http://ul.to/uclihu3a (பாகம் 2) எனும் இணையத் தளத்திற்குப் போய்,  Download Free என்பதைச் சொடுக்கி இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். Password: crazy    கொள்ளளவு  187 MB


Bejeweled 3 (2012) DeLuxe Edition

http://www.ddlstorage.com/9ouzzdc6uy2k/Bej3w3l3d3.ITA.rar.htm எனும் இணையத் தளத்திற்குப் போய், Download Free என்பதைச் சொடுக்கி இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். Password: crazy    கொள்ளளவு  100 MB

Angry Birds Seasons 2.5.0

http://extabit.com/file/29hbyfyzvkg9q எனும் இணையத் தளத்திற்குப் போய், Download Free என்பதைச் சொடுக்கி இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். Password: இல்ல   கொள்ளளவு  60.2 MB