26 பிப்ரவரி 2017

பதாகை

படாகை என்றும் அழைக்கப்படும் பதாகை ஓர் அரசனின் அடையாளமாகக் கருதப்படும் கொடியைக் குறிக்கும் சொல்லாகும். அதனால் அரசனைப் பதாகையான் என்றும் அழைப்பார்கள்.

அதே சமயத்தில் பரதநாட்டியத்தில்... உள்ளங்கையையும் விரல்களையும் சேர்த்து உருவாக்கும் ஒரு நிலையைக் குறிக்கவும் அந்தச் சொல் பயன்படுத்தப் படுகிறது. 

பெருவிரலையும் அணிவிரலையும் மட்டும் ஒன்று சேர்த்துப் பிற விரல்களை நிமிர்ந்த நிலையில் வைக்கும் ஒரு நிலையைத் திரிபதாகை என்றும் அழைப்பார்கள்.


பரதநாட்டியத்தில் பதாகை
 
அபிநயம் - Gesture with one hand in which the thumb is bent while the other fingers are held close and upright

ஆங்கிலம் - ensign, ensign, banner
தமிழ் - பதாகை, அடையாளக் கொடி, சின்னம், விளம்பரக் கொடி

பயன்பாடு
பாடல்: பார்த்த முதல் நாளே... என் பதாகை தாங்கிய உன் முகம்
திரைப்படம்: வேட்டையாடு விளையாடு (2006)

ஜக்கி வாசுதேவ் ரகசியங்கள்




ஈஷா யோகா உலப் புகழ்பெற்ெயர்.ந்தப் பெயரில் பிரச்சாரம் செய்ர் கிட்டு. ாவகிட்டு என்கிற கிருஷ்ண மூர்த்தி. அில் ஜாவா வாசுதேவன் என்கிற ஜக்கி வாசுதேவ். அப்பிப் பெயர் ிரிந்த சத்குரு ஜக்கி வாசுதேவ் 1957 செப்டம்பர் 3 ஆம் தேதி கர்நாடகம் மைசூரில் பிறந்தவர். 

சின்ன வயதில் சத்குரு தேவ்
ஆன்மீகப் பாதைக்குத் துறவற வாழ்க்கைதான் சிறந்தது என்று உலக மக்களுக்குப் போதனை செய்த ஜக்கி வாசுதேவ் மைசூரில் ரிஷி பிரபாகர் என்ற யோகா குருவிடம் யோகா ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்

அங்கு அவர் விஜி எனும் விஜயகுமாரியைச் சந்தித்தார். இந்தப் பெண் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். அவருடன் நெருங்கிப் பழகியதில் காதல். அப்புறம் அவரையே திருமணம் செய்து கொண்டார். ராதே எனும் மகள் பிறந்தாள்.


வாலிப வயதில்
சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு கோவையில் சுதர்சன் வரதராஜ் என்பவரின் நட்பு கிடைத்தது. சுதர்சன் தன் மனைவி பாரதியை (முன்னாள் ஆந்திர எம்.பி ஒருவரின் மகள்) ஜக்கி வாசுதேவின் யோகா வகுப்பிற்கு அனுப்பி வைத்தார்.

அங்கு ஜக்கி வாசுதேவுடன் பாரதி நெருங்கிப் பழகினார். இருவருக்கும் பழக்கம் அதிகமானது. அதனால் மனைவி ஜக்கி வாசுதேவுக்கும் விஜிக்கும்...  பிரச்சினைகள்.



மோட்டார் சைக்கிள் பிரியர்
அதன் பிறகு விஜி தன்னுடைய அணாகத்தா சக்ரா ஆசிரமத்தில் தன் உயிரை விட்டதாக ஜக்கி வாசுதேவ் கூறுகிறார். ஆனால் தன் மகளை ஜக்கி வாசுதேவ் கொன்று விட்டதாக விஜியின் தந்தை காங்கன்னா போலீசில் புகார் கொடுத்து உள்ளார். வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் நிற்கிறது.

அதன் பின்னர் பாரதி தன்னுடைய கணவர் வரதராஜுவை விவாகரத்து செய்து விட்டு ஜக்கி வாசுதேவுடன் குடும்பம் நடத்தி அப்படியே ஆன்மீகப் பாதைக்கு வந்து விட்டார்.



மனைவி விஜயகுமாரியுடன்
சரி. அடுத்து ஜக்கி வாசுதேவ் கஞ்சா வியாபாரம். 40 ஆண்டுகளுக்கு முன்பு கோயம்புத்தூர் புரூபாண்ட் ரோடு மேம்பாலத்திற்கு கீழ் ஜக்கி வாசுதேவ் கஞ்சா வியாபாரம் செய்து வந்தார்.

கஞ்சா வியாபாரத்தில் இவருக்கு ரிச்சர்ட் என்ற பிரபல ரவுடி உதவி. அதே சமயத்தில் இவர்கள் இருவருக்கும் உதவியாக இருந்த ஒரு பெண் திடீரென்று காணாமல் போனார்.

அந்தப் பெண்ணின் நிலை என்ன ஆனது என்று இதுவரை யாருக்கும் தெரியவில்லை. சில நாட்களில் ரவுடி ரிச்சர்ட்டும் கொலை செய்யப் பட்டார். அதே போல ஜக்கியின் மனைவி விஜியையும் ஜக்கி வாசுதேவ் தான் கொலை செய்து விட்டார் என்று ஒரு வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.



விஜிக்கும் ஜக்கி வாசுதேவுக்கும் பிறந்த மகள் தான் குழந்தை தான் ராதே. முக்திக்கு வழிகாட்டி என்று பிறர் வீட்டுப் பிள்ளைகளுக்கு மொட்டை அடித்து சாமியாராக ஆக்கியவர் ஜக்கி வாசுதேவ். ஆனால் அவரின் செல்ல மகள் ராதே குடி, கொண்டாட்டம் என வளர்ந்த நவீன காலத்து மங்கை.

அத்தனைக்கும் ஆசைப்படு என இவர் சொல்வது இவரின் திருப்புதல்விக்கும் இவருக்கும் மட்டும் தான் போல் இருக்கிறது,

அடுத்து ஈஷாவில் சந்நியாசம் எடுக்கிறவர்கள் முதலில் குடும்பத் தொடர்பை முழுமையாக நிறுத்திக் கொள்ள வேண்டும். அவர்களின் கல்விச் சான்றிதழ்கள் முதற் கொண்டு அனைத்து ஆவணங்களும் ஈஷா மையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் போய்விடும். குருகுலப் பள்ளியில் சேர்வதற்கு கட்டணம் 7 லட்சம் ரூபாய்.




சம்பந்தப் பட்டவர்கள் பெயரில் இருக்கும் சொத்து, நகை, பணம் போன்றவை கூட ஈஷாவின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும். இவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் தான் என்ன என்று தெரியவில்லை. ஆனால் கிட்டத்தட்ட அனைவரும் கஞ்சா அடித்த மாதிரி அரை போதையில் தான் எப்போதும் இருப்பார்கள்

இவரால் 10 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கா உருவாக்கப் பட்டதே சம்ஸ்கிருதி என்ற குருகுலப் பள்ளி இதில் குழந்தைகளை சேர்த்த கட்டணம் 7 லட்சம்.



ஈஷாவில் அதிகாலை 5மணிக்கு எழுந்து... தீர்த்த குண்டம் எனும் குளத்தில் 10-12° குளிர்ந்த நீரில் குளியல். பின்பு யோகா, களரி பயிற்சி, பின் 2-3kms நடை பயிற்சி. பின் மீண்டும் குளியல். அதன்பின் சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட உணவு. பின் மீண்டும் இரவு 7 மணிக்கே அடுத்த வேளே உணவு. இடையில் ஒன்றும் கிடையாது. எப்படி உங்கள் வசதி?
 
ஆசிரம வாழ்க்கை பிடிக்காமல் அல்லது உடல் நலம் குன்றிப் போனால்... அதனால் ஆசிரமத்தை விட்டு விலகினால் வாங்கிய பணத்தில் பத்து பைசா கூட திரும்ப கொடுக்கப்பட மாட்டாது
 
சதுரங்க வேட்டை என்ற திரைப்படம் உலகளவில் நடக்கும் பல போலி வியாபார தந்திரங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. அதில் கதாநாயகன் பேசும் ஒரு வசனம் 



நாம் சொல்லுற ஒவ்வொரு பொய்யிலும் ஓர் உண்மை இருக்கணும்

இது தான் தன்னை உணர்ந்த ஞானி என்று சொல்லித் திரியும் திருட்டுச் சாமியார்களின் தாரக மந்திரம்.

ஈஷா யோகா மையத்தில் சந்நியாசியாக மாறிப் போனவர்களில் 80% பேர் படித்தவர்கள். இப்படி படித்தும் முட்டாள்களாக இருப்பது வேதனையாக இருக்கிறது.




யார் மீது தவறாக இருந்தாலும் சரி நம்மை நாமே மாற்றிக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

இறை பக்தி வேறு, மூட நம்பிக்கை என்பது வேறு. முக்தி என்பது இருக்கிறதா இல்லையா எறு தெரியவில்லை. ஆனால் உங்களுக்காக ஒரு வாழ்க்கை இருக்கிறது, உங்களுக்கு என்று ஒரு குடும்பம் இருக்கிறது. அதைத் தொலைத்துவிட வேண்டாம்.
 
உனக்குள் நீ மலர வேண்டும். அதற்கு மற்றவர் உதவிகள் தேவை இல்லை

24 பிப்ரவரி 2017

வாட்சாப் என்பது வாட்சாப்


ஒருவருக்குக் கொடுக்கப்பட்டப் பெயர் எல்லா மொழிகளிலும் அதே பெயராகவே இருக்கிறது. அதைப் போல ஒரு செயலிக்கு கொடுக்கப்படும் பெயரும் எல்லா மொழிகளிலும் அதே பெயராகத் தான் இருக்க வேண்டும்.

வாட்சாப் Whatsapp செயலியைப் புலனம் என்கிறோம். டெலிகிராம் செயலியைத் தந்தி என்கிறோம். மற்ற மற்றச் செயலிகளின் பெயர்களை எல்லாம் தமிழில் மொழிப் படுத்துகின்றோம். ஒரு நிறுவனத்தின் பெயரைத் தமிழ்ப் படுத்துவது முறை அல்ல.

Facebook என்பது பேஸ்புக்காக இருக்க வேண்டும். Twitter என்பது டிவிட்டர் என்று இருக்க வேண்டும். அதே போல Flickr, Google, Instagram, Habbo, LinkedIn, Bebo, YouTube, Viber, Tumblr, Pinterest, Quora, Friendster, Myspace, Orkut, Xanga போன்ற செயலிகளின் பெயர்களும் அவற்றின் அசல் பெயர்களிலேயே அழைக்கப்பட வேண்டும்.

‘தமிழரசி’ என்னும் பெயர் கொண்ட ஒருவரை ஆங்கிலத்தில் ‘Tamil Queen’ என்று அழைப்பது இல்லை. அதே போல ‘கருப்பையா’ என்பவரை ‘Black Ayya' என்று அழைப்பதும் இல்லை. ராமசாமி என்பவரை Rama God என்று அழைப்பது இல்லை.

Bill Gates என்பவரை  வாயிற்கதவு மசோதா என்று அழைப்பது இல்லை. 100 Plus என்பதை நூறு கூட்டல் என்று அழைப்பது இல்லை. சரிங்களா. Coca Cola, Pepsi Cola, 7 Up, Fanta எனும் பெயர்களை மட்டும் ஏன் தமிழ்ப் படுத்துவது இல்லை. எந்தச் சொல்லைத் தமிழ்ப் படுத்த முடியுமோ அவற்றை மட்டும் தமிழ்ப் படுத்துகிறார்கள்.

அதைப் போல Kentucky Fried Chicken (KFC) என்பதை ‘கெந்தக்கி வறுத்த கோழி’ என்று சொல்கிறோமா. இல்லையே. Pizza Hut என்பதை ’பிசா குடிசை’ என்றும் சொல்வது இல்லையே. YouTube என்பதை ’உந்தன் குழாய்’ என்று சொல்ல முடியுமா. சொல்லுங்கள். ஆக Whatsapp என்பதை வாட்சாப் என்றுதான் அழைக்க வேண்டும்.

வாட்சாப் உருவாக்கியவர்களின் உழைப்பால் இலவசமாகவே அவர்களின் கண்டுபிடிப்பைப் பயன்படுத்தி வருகிறோம். அந்த வகையில் அவர்கள் வைத்த பெயர்களை அப்படியே சொல்லி அவர்களுக்கு நன்றி சொல்வது நம்முடைய கடமையாகும்.

DLP தமிழ்ப் பள்ளிகள் பாதிக்கப்படும்

DLP என்றால் Dual Language Programme. மலேசிய மொழியில் Program Dwibahasa. தமிழில் *இருமொழிப் பாடத் திட்டம்*.  


இந்த இரு மொழித் திட்டத்தினால் எதிர்காலத்தில் மலேசியாவில் உள்ள தமிழ்ப் பள்ளிகள் நிச்சயம் பாதிக்கப்படும். தமிழ்ப் பள்ளிகள் மட்டும் அல்ல. தமிழாசிரியர்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறையும்.

தவிர இன்னும் ஒரு முக்கியமான விசயத்தையும் நீங்கள் கவனிக்க வேண்டும். DLP இருமொழிப் பாடத் திட்டத்தில் கணிதம் அறிவியல் எனும் இரு பாடங்களைப் பற்றி மட்டுமே எல்லோருமே பேசிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இதில் உள்ள ஒரு மறைமுகச் சிக்கலைப் பற்றி பலர் கண்டு கொள்வதே இல்லை. 



பெரும்பாலோர் இப்போது தமிழ் மொழியில் நடத்தப்படும் பொருளியல், தொழிநுட்பப் பாடங்களை DLP திட்டத்தில் சேர்ப்பது இல்லை. இந்தப் பொருளியல், தொழிநுட்பப் பாடங்களை ஆங்கிலத்திலும் நடத்தலாம் அல்லது மலாய் மொழியிலும் நடத்தலாம். தலைமையாசிரியரைப் பொருத்தது.

அடுத்து மலாய், ஆங்கிலப் பாடங்களை வேறு மொழிகளில் போதிக்க முடியாது. தெரிந்த விசயம். அந்தந்த மொழிகளிலேயே போதிப்பார்கள். அதாவது மலாய் பாடத்தை மலாய் மொழியிலும் ஆங்கிலப் பாடத்தை ஆங்கில மொழியிலும் தான் போதிக்க வேண்டும்.

ஆக இந்த ஆங்கில, மலாய்ப் பாடங்களையும் சேர்த்தால் மொத்தம் ஆறு பாடங்களைத் தமிழ் மொழி அல்லாத மொழிகளில் வேற்று மொழிகளில் போதிக்கப் போகிறார்கள்.

அப்படி என்றால் கணிதம், அறிவியல், பொருளியல், தொழில்நுட்பம், ஆங்கிலம் ஆகிய ஐந்து பாடங்களும் ஆங்கில மொழியில் போதிப்பார்கள். மலாய்ப் பாடம் மலாய் மொழியில் போதிக்கப்படும். ஆக மொத்தம் 6 பாடங்கள் வேற்று மொழிகளில் போதிக்கப் போகிறார்கள்.

அப்படி என்றால் இன்னும் 10 ஆண்டுகளில்... இந்த DLP திட்டத்தினால் 10 தமிழாசிரியர்கள் பணியாற்றும் பள்ளிகளில் 4 பேர் தான் தமிழாசிரியர்களாக இருக்கலாம். மற்ற 6 ஆசிரியர்கள் இதர சீன, மலாய் ஆசிரியர்களாக இருக்கலாம். 



ஆக அந்த 6 ஆசிரியர்கள் சீன, மலாய் ஆசிரியர்களாக இருக்கும் பட்சத்தில்... அந்தத் தமிழ்ப் பள்ளியின் தலைமையாசிரியர் ஒரு தமிழராகத் தான் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ஒரு சீனர் அல்லது ஒரு மலாய்க்காரர் அந்தப் பள்ளியின் தலைமையாசிரியராகப் பதவிக்கு வரலாம். வரக்கூடிய சாத்தியங்கள் உள்ளன.

இந்த 2017ஆம் ஆண்டு மலேசியாவில் 54 தமிழ்ப் பள்ளிகளில் இருமொழிப் பாடத் திட்டம் அமலாக்கத்திற்கு வருகிறது. அந்தத் தமிழ்ப் பள்ளிகளில் 6 பாடங்களைத் தமிழ் மொழி அல்லாத வேற்று மொழியில் படித்துக் கொடுக்கப் போகிறார்கள். இந்த நகர்வு எதிர்காலத்தில் நிச்சயமாகத் தமிழ்ப் பள்ளிகளின் அடையாளத்தை இழக்கச் செய்யும்.

DLP இருமொழிப் பாடத் திட்டத்தைச் சிலர் வரிந்து கட்டிக் கொண்டு ஆதரிக்கிறார்களே. எதிர்கால மலேசியத் தமிழர்கள் தங்களின் அடையாளத்தை இழக்கப் போகிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாமலா இருக்கும். இந்தக் கருத்து என்னுடைய தனிப்பட்ட கருத்து.

DLP இருமொழிப் பாடத் திட்டம்

DLP இருமொழிப் பாடத் திட்டத்தில் கணிதம் அறிவியல் எனும் இரு பாடங்களைப் பற்றி மட்டுமே எல்லோருமே பேசிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இதில் உள்ள ஒரு சிக்கலைப் பற்றி பலர் கண்டு கொள்வதே இல்லை. 


பெரும்பாலோர் இப்போது தமிழ் மொழியில் நடத்தப்படும் பொருளியல், தொழிநுட்பப் பாடங்களை DLP திட்டத்தில் சேர்ப்பது இல்லை. இந்தப் பொருளியல், தொழிநுட்பப் பாடங்களை ஆங்கிலத்திலும் நடத்தலாம் அல்லது மலாய் மொழியிலும் நடத்தலாம். தலைமையாசிரியரைப் பொருத்தது.

அடுத்து மலாய், ஆங்கிலப் பாடங்களை வேறு மொழிகளில் போதிக்க முடியாது. தெரிந்த விசயம். அந்தந்த மொழிகளிலேயே போதிப்பார்கள். அதாவது மலாய் பாடத்தை மலாய் மொழியிலும் ஆங்கிலப் பாடத்தை ஆங்கில மொழியிலும் தான் போதிக்க வேண்டும். 



ஆக இந்தப் பாடங்களையும் சேர்த்தால் மொத்தம் ஆறு பாடங்களைத் தமிழ் மொழி அல்லாத மொழிகளில் வேற்று மொழிகளில் போதிக்கப் போகிறார்கள்.

அப்படி என்றால் கணிதம், அறிவியல், பொருளியல், தொழில்நுட்பம், ஆங்கிலம் ஆகிய ஐந்து பாடங்களும் ஆங்கில மொழியில் போதிப்பார்கள். மலாய்ப் பாடம் மலாய் மொழியில் போதிக்கப்படும். மொத்தம் 6 பாடங்கள் வேற்று மொழிகளில் போதிக்கப் போகிறார்கள். 



இந்த 2017ஆம் ஆண்டில் இருந்து மலேசியாவில் 49 தமிழ்ப் பள்ளிகளில் இருமொழிப் பாடத் திட்டம் அமலாக்கத்திற்கு வருகிறது. தமிழ்ப் பள்ளியில் 6 பாடங்களை வேற்று மொழியில் படித்துக் கொடுக்கப் போகிறார்கள். எப்படிங்க?

இந்த நகர்வு எதிர்காலத்தில் நிச்சயமாகத் தமிழ்ப் பள்ளிகளின் அடையாளத்தை இழக்கச் செய்யும். சரி தானே.