17 ஏப்ரல் 2019

ஆசாத் இராணுவப் பள்ளியில் டான்ஸ்ரீ சோமா - 2

இந்தியத் தேசிய இராணுவம் என்பது இந்தியாவின் விடுதலைப் படை. இரண்டம் உலகப் போரின் போது இந்தியாவில் ஆங்கிலேய  அரசினை எதிர்த்துப் போரிட உருவாக்கப்பட்ட ஒரு படை. 


ஜப்பானியர்களின் உதவியுடன் இந்தியாவின் காலனித்துவ அரசை எதிர்த்துப் போரிட்டது. தொடக்கக் காலத்தில் ஜப்பானியர்களால் கைது செய்யப்பட்ட ஆங்கிலேய இந்திய இராணுவத்தின் இந்தியப் போர்க்கைதிகள் அதில் இடம் பெற்று இருந்தனர்.

பின்னர் மலேசியா, சிங்கப்பூர், பர்மா போன்ற இடங்களில் வாழும் புலம்பெயர் இந்தியர்களும், இந்தியாவில் இருந்த சென்ற தன்னார்வலப் படைவீரர்களும் அதில் இடம் பெற்றனர். சரி. கட்டுரைக்கு வருவோம்.

தஞ்சோங் ரம்புத்தான் இராணுவப் பயிற்சி முகாம். அங்கே தங்கி இருந்தவர்களுக்கு வாரத்திற்கு ஒரு நாள் ஓய்வு கிடைக்கும். அந்த ஓய்வு நாளில் மட்டும் அவர்களுக்குப் பிடித்தமான பொழுது போக்குகளில் ஈடுபடலாம். 



ஒரு சிலருக்குத் திரைப்படம் பார்ப்பது ஒரு பொழுது போக்கு. தொலைக்காட்சிச் சேவை பயன்பாட்டில் இல்லாத காலக்கட்டம். நினைவில் கொள்வோம்.

அப்போது ஈப்போவில் ஓடியன், லீடோ, கத்தே, ரூபி, கேப்பிட்டல், சன் போன்ற திரையரங்குகள் புகழ்பெற்றவை. அந்தத் திரையரங்குகளில் ஓடியன் தியேட்டரில் மாதத்திற்கு நான்கு முறை தமிழ்ப் படங்கள் காட்டப்படும்.  பெரும்பாலும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஓடியன் திரையரங்கில் படம் பார்க்க தஞ்சோங் ரம்புத்தானில் இருந்து 200 பேர் போவார்கள். 20 கி.மீ. நடந்தே போக வேண்டும். நடந்தே வர வேண்டும்.

அப்போது ஜப்பானியர் காலம். பேருந்து வசதி குறைவு. சீருந்துகளும் குறைவு. எல்லாம் காலுந்து தான். இராணுவப் பாடல்களைப் பாடிக் கொண்டே போவார்கள். காலையில் போகும் அவர்கள் மாலையில் முகாமிற்குத் திரும்பி வந்து விடுவார்கள். நல்ல சுகமான அனுபவமாக இருந்து இருக்க வேண்டும்.



சோமசுந்தரத்திடம் அப்போது இருந்த இந்தி, ஆங்கில மொழி அறிவு அவருக்குப் பெரிதும் துணையாக இருந்து இருக்கின்றது. சமயங்களில் பயிற்சி பெறுபவர்களுக்கு பயிற்சி அதிகாரிகளின் இந்தி மொழிக் கட்டளைகள் சரியாகப் புரியாமல் போகும்.

அந்தச் சமயங்களில் சோமசுந்தரம் அழைக்கப் படுவார். ஆங்கிலத்தில் அல்லது தமிழில் விளக்கம் சொல்ல கேட்டுக் கொள்ளப் படுவார். அவரும் தனக்குத் தெரிந்த ஆங்கில இந்தி மொழிகளில் விளக்கம் கொடுப்பார்.

மூன்று மாத காலப் பயிற்சிகள் முடிந்தன. ஒருநாள் சோமசுந்தரம் உயர் இராணுவ அதிகாரியின் அலுவலகத்திற்கு (Adjutant’s Office) அழைக்கப் பட்டார். அதற்கு முன்னர் தஞ்சோங் ரம்புத்தானில் பயிற்சியில் இருந்த போது சிங்கப்பூர் ஆசாத் இராணுவப் பள்ளியில் சேர்வதற்கான தேர்வு நடைபெற்றது.

 

இந்தத் தேர்வு இராணுவ அதிகாரிகளுக்கான (NCO - Non Commissioned Officer) தேர்வாகும். தேர்வில் தேர்ச்சி பெற்றால் சிங்கப்பூரில் இருந்த ஆசாத் இராணுவப் பள்ளியில் உயர் பதவிகளுக்கான பயிற்சிகள் வழங்கப்படும். ஏறக்குறைய 2000 பேர் தேர்வில் கலந்து கொண்டார்கள்.

அவர்களுக்குத் தஞ்சோங் ரம்புத்தான் பயிற்சி முகாமிலேயே அறிமுகப் பயிற்சிகள் வழங்கப் பட்டன. அந்தச் சிறப்புப் பயிற்சியில் சோமசுந்தரமும் கலந்து கொண்டார். தேர்வு வந்தது. சோமசுந்தரம் தேர்வில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றார். அந்த 2000 ஜவான்களில் 50 பேர் தேர்வு செய்யப் பட்டனர்.

பின்னர் சிங்கப்பூர் ஆசாத் இராணுவப் பள்ளியில் இருந்து இந்திய தேசிய இராணுவ அதிகாரிகள் தஞ்சோங் ரம்புத்தான் பயிற்சி முகாமிற்கு வந்தனர். உயர் பதவிகளுக்கான பயிற்சியில் தேர்வு பெற்றவர்களிடம் நேர்காணல் நடத்தினார்கள். 



ஒரு வாரம் கழித்து தஞ்சோங் ரம்புத்தான் தலைமை அதிகாரி (Company Commander) சோமசுந்தரத்தை அவருடைய அலுவலகத்திற்கு அழைத்தார். தேர்வில் தேர்ச்சி பெற்றதாக வாழ்த்தினார்.

உடனடியாக பெட்டிப் படுக்கைகளை எடுத்துக் கொண்டு மறுநாளே சிங்கப்பூருக்குக் கிளம்ப வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

சிங்கப்பூர் உயர் பதவிகளுக்கான தேர்வில் 12 பேர் தேர்வு செய்யப் பட்டனர். இவர்கள் அனைவரும் வெவ்வேறு குழுக்களில் (Platoons) உள்ளவர்கள். அப்படித் தேர்வு செய்யப் பட்டவர்களில் சோமசுந்தரமும் ஒருவர்.

தேர்வு பெற்ற பன்னிருவரும் மேலும் சில அதிகாரிகளும் ஒரு லாரி வண்டியில் ஈப்போ இரயில் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப் பட்டனர்.



சிங்கப்பூர்ப் பயணம் ஒரு நீண்ட நேரப் பயணம். செல்லும் வழியில் நிறைய பேருடன் மனம்விட்டுப் பழகும் வாய்ப்பு. அந்த வகையில் அவருக்கு நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள். அந்த நண்பர்களில் ஒருவர் பெருமாள். இவர் பின் நாட்களில் தமிழகத்தில் பிரபலமான அரசியல்வாதியாகத் திகழ்ந்தவர்.

சிங்கப்பூர்ப் பயணம் அவருக்கு ஒரு புதுமையான இரயில் பயணம். ஒரு புது மாதிரியான அனுபவம். மறுநாள் சிங்கப்பூர் வந்து அடைந்தனர்.

அவர்களுக்காக ஓர் இராணுவ வண்டி இரயில் நிலையத்தில் காத்து நின்றது. சிங்கப்பூர் கில்ஸ்தீட் சாலையில் (Gilstead Road) இருந்த ஆசாத் பள்ளிக்கு (Azad School) அவர்கள் கொண்டு செல்லப் பட்டார்கள்.

ஆசாத் பள்ளி வளாகத்தில் இரு பெரிய பங்களாக்களும் இதர சில கட்டடங்களும் இருந்தன. பள்ளி வளாகத்திற்கு எதிரில் ஒரு குன்று. அதில் ஒரு பங்களா இருந்தது.


ஆசாத் பள்ளியின் தலைமை அதிகாரி லெப்டினெண்ட் கர்னல் உஜகார் சிங்(Lt. Col. Ujagar Singh) என்பவர் அந்தப் பங்களாவில் வசித்து வந்தார். அதுவே அதிகாரியின் அலுவலகமும் கூட.

ஆசாத் பள்ளியின் மேலாளராக கேப்டன் தெஸ்பாண்டி (Captain Despande) என்பவர் இருந்தார். பள்ளி வளாகத்தில் பல அதிகாரிகளின் குடியிருப்புகள் இருந்தன.

அந்த வளாகத்திற்குள் 80 லிருந்து 100 பேர் கொண்ட பாலசேனா (Balak Sena)  படைப் பிரிவும் இருந்தது. அதற்குக் கர்னல் ராணா (Col. Rana) என்பவர் தலைவராக இருந்தார்.

பள்ளியில் இருந்த இரு பெரிய பங்களாக்களில் ஒவ்வொரு பங்களாவிலும் 100 பேர் தங்கலாம். ஒரு பங்களா டெல்லிப் பிரிவுப் படையைச் சேர்ந்த சிப்பாய்களுக்கும்; இன்னொரு பங்களா பகதூர் பிரிவுப் படையைச் சிப்பாய்களுக்கும் ஒதுக்கப்பட்டு இருந்தது.

அந்த வகையில் சோமசுந்தரம் டெல்லிப் பிரிவுப் படையின் பங்களாவில் தங்க வைக்கப் பட்டார். நடுத்தர அதிகாரிகளுக்கான (Non Commissioned Officer Training) பயிற்சி அவருக்கு வழங்கப்பட்டது.

சிங்கப்பூர் காடுகளில் தொடர்ந்து ஒன்பது மாதங்கள் பயிற்சி. இங்கே தஞ்சோங் ரம்புத்தான் பயிற்சிகளைக் காட்டிலும் மேலும் கடுமையான பயிற்சிகள்.

நடைப் பயிற்சி; ஓட்டப் பயிற்சி; துப்பாக்கிகளை ஏந்திச் சுடும் பயிற்சி; இராணுவ வியூகப் பயிற்சி (Military Strategy) போன்ற பயிற்சிகள் வழங்கப் பட்டன. சிங்கப்பூர் பயிற்சிகளுக்கு கேப்டன் உபாத்தியாயா (Captain Upadhyaya) என்பவர் பொறுப்பு வகித்தார்.



பகல் நேரத்தில் மட்டும் அல்ல. இரவு நேரங்களிலும் பயிற்சிகள் நடத்தப் பட்டன. சிங்கப்பூரின் பெரும்பாலான காட்டுப் பகுதிகளில் பயிற்சிகள் நடைபெற்றன. சில நேரங்களில் செராப்போங் (Serapong) காடுகளில் தனியாக இருந்து காவல் செய்ய வேண்டி இருக்கும்.

ஒரு முறை ஓர் இரவு சோமசுந்தரம் மட்டும் தனியாகக் காட்டில் காவல் பணியில் இருந்தார். அப்போது புக்கிட் தீமா மலையோரத்தில் அழுகிய நிலையில் ஒரு ஜப்பானிய இராணுவ வீரரின் சடலம்.

அதை மிதித்ததும் சோமசுந்தரம் தடுமாறிப் போனார். அவர் வாழ்க்கையில் அது ஒரு மறக்க முடியாத நிகழ்ச்சி என்று நினைவு கூர்கிறார்.

அடுத்து அனைத்துலகத் தேர்வு. அதில் டெல்லி கம்பெனியைச் சேர்ந்த 200 பேர் தேர்வு எழுதினார்கள். அவர்களில் சோமசுந்தரம் அதிக மதிப்பு எண்கள் பெற்று முதல் மாணவராகத் தேர்வு பெற்றார்.

இந்தியத் தேசிய இராணுவத்தில் டெல்லிப் பிரிவு (Delhi Group); பகதூர் பிரிவு (Bahadur Group) என இரு பிரிவுகள். இதில் டெல்லிப் பிரிவில் சோமசுந்தரம் சிறந்த மாணவராகத் தேர்வு செய்யப் பட்டார். 



பகதூர் பிரிவில் இந்தியா தமிழ்நாடு கடலூரைச் சேர்ந்த எஸ். இரத்தினவேலு (Rathnavelu) என்பவர் தேர்வு செய்யப் பட்டார். இருவருக்கும் பத்து வயது வேறுபாடு. இருந்தாலும் நெருங்கிய நண்பர்களாகப் பயணித்தார்கள்.

ஓய்வு கிடைக்கும் போது எல்லாம் இருவரும் நாட்டு நடப்புகளைப் பற்றி பேசுவார்கள். இந்திய விடுதலை வீரர்களைப் பற்றிய கதைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். இவ்வாறான கலந்துரையாடல்களினால் இருவரின் நட்பும் இறுக்கம் பெற்றது.

இரத்தினவேலு வயதில் மூத்தவர் என்பவர் என்பதால் அவரின் ஆலோசனைகளைச் சோமசுந்தரம் ஏற்றுக் கொள்வார். கருத்துப் பரிமாற்றங்களில் சிற்சில சமயங்களில் முரண்பாடுகள் ஏற்படலாம்.

ஆனால் இரத்தினவேலுவைத் தன் மூத்த சகோதரனாகவே நினைத்துப் பழகி வந்தார். மதிப்புமிகு எஸ். இரத்தினவேல் அண்மையில் தமிழகத்தில் காலமானார்.

ஒன்பது மாதக் கடும் பயிற்சிகளுக்குப் பின்னர் உயர் அதிகாரிகளுக்கான நேர்முகத் தேர்வு. பகதூர் – டில்லிப் பிரிவுகளில் 12 பேர் தேர்வு செய்யப் பட்டனர். எட்டு வாரங்களுக்கு பத்து பகாட் அதிகாரிகள் பயிற்சிப் பள்ளியில் (Batu Pahar Officers Training School) சிறப்புப் பயிற்சி அளிக்கப் பட்டது.

பயிற்சி முடிந்ததும் சிங்கப்பூர் தலைமையகத்திற்கு மீண்டும் அனுப்பப் பட்டனர். ஓர் அதிகாரிகள் குழுவினர் அவர்களை நேர்காணல் செய்தனர்.

இறுதியில் இரத்தினவேலுவும் பகத் சிங் (Bhagat Singh) என்பவரும் தெரிவு செய்யப் பட்டனர். வயது குறைவு எனும் காரணத்தினால் சோமசுந்தரம் தேர்வு செய்யப்படவில்லை.

இருப்பினும் பயிற்சி முடிவின் அணிவகுப்பில் (Passing Out Parade) தலைமை தாங்கிச் செல்ல சோமசுந்தரம் தேர்வு செய்யப் பட்டார். இந்த அணிவகுப்பில் நேதாஜி வருவதாக இருந்தது. அந்தப் பயிற்சியின் போது கொடியும் கத்தியும் வழங்கப்படும். நேதாஜியே வழங்கிச் சிறப்பிக்கும் நிகழ்வு.

அதற்கு என்று தனிப்பட்ட சிறப்புப் பயிற்சி. உடலை வருத்திக் கொள்ளும் பயிற்சி. உரக்கக் குரல் எழுப்பிக் கட்டளைகள் சொல்ல வேண்டும். அதனால் அவருடைய குரல்வளை பாதிக்கப் பட்டது. 



அப்போது இந்தியத் தேசிய இராணுவத்தின் பயிற்றுநராக மாரிமுத்து என்பவர் இருந்தார். அவர்தான் கருப்பு மிளகைத் தூளாக்கிச் சோமசுந்தரத்திடம் சாப்பிடச் சொல்லிக் கொடுத்தார். தொண்டைவலி குறையவில்லை. இருப்பினும் பயிற்சியில் தொடர்ந்து கலந்து கொண்டார்.

பயிற்றுநர் மாரிமுத்து சிரம்பான் பகுதியில் இருந்து வந்தவர். இந்தியத் தேசிய இராணுவத்தின் நேரு பிரிகேட் (Nehru Birigade) அணியில் ‘பி’ கம்பெனி பிரிவைச் சேர்ந்தவர். பர்மா மாண்டலேயில் போக்குப்பா குன்றுப் பகுதியில் பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்துப் போர் புரிந்தவர்.

பர்மாவில் பெகு எனும் இடத்தில் பிரிட்டிஷ் இராணுவத்தினரால் பிடிபட்டார். போர்க் கைதியாக இந்தியாவிற்குக் கொண்டு செல்லப் பட்டார். புதுடில்லி செங்கோட்டை விசாரணையில் மாரிமுத்துவிற்கு எதிராக அரச நிந்தனை வழக்கு தொடரப் பட்டது.

விசாரனைக்குப் பின்னர் 1946-ஆம் ஆண்டு மலாயா திரும்பினார். கிள்ளானில் ஒரு புது வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். இந்து சமய பிரசாரங்களில் ஈடுபட்டார்.

பயிற்சி முடிந்து நடைபெறவிருந்த அணிவகுப்பு நிகழ்ச்சியில் துரதிர்ஷ்டவசமாக நேதாஜியால் கலந்து கொள்ள முடியாமல் போய் விட்டது. இந்திய பர்மா எல்லையில் இம்பால் கோகிமா போர் முனைகளில் அவருக்கு முக்கிய வேலைகள். அதனால் அவர் வரவில்லை.

தன்னுடைய ஆற்றலை நேதாஜியின் முன் வெளிப்படுத்த சோமசுந்தரம் மிகுந்த ஆர்வமாக இருந்தார். ஆனால் சோமசுந்தரத்திற்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அதைப் பற்றி இன்றும் கூட நினைத்துப் பார்த்து ஆதங்கப்படுவது உண்டு.

அடுத்து இந்தியத் தேசிய இராணுவத்தின் இரகசியச் சேவைப் பிரிவில் சேர்வதற்கான பயிற்சிகள். நீர்மூழ்கிக் கப்பல் மூலம் இந்தியாவிற்கு ஊடுருவல் செய்வதற்கான பயிற்சிகள்.

என்ன யோசிக்கிறீர்கள். டான்ஸ்ரீ சோமா அவர்களா? ஐ.என்.ஏ. இரகசியச் சேவைப் பிரிவில் பயிற்சிகளா? நீர்மூழ்கிக் கப்பலா? உண்மை தான். ஆனால் என்ன செய்வது. அவருடைய வயது தான் எப்போதுமே அவருக்குத் தடையாக இருந்து இருக்கிறது.

இருபதைத் தாண்டாத வயது. அதனால் பெரிய பொறுப்புகள் அவரிடம் வழங்கப்படவில்லை. அந்த வகையில் இந்திய இராணுவ இரகசியச் சேவைப் பிரிவில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. வயது தான் முக்கிய காரணம்.

இருந்தாலும் இந்தியத் தேசிய இராணுவம் அவரைக் கைவிடவில்லை. சோமசுந்தரம் ஆங்கிலம் இந்தி மொழிகளில் வல்லமை பெற்றவர்.

அதனால் இராணுவத்தின் பயிற்சிப் பாடத் திட்டங்களில் அவருக்குப் பயிற்றுநர் பொறுப்புகள் வழங்கப் பட்டன. அவரின் ஆங்கில மொழி, இந்தி மொழித் திறமை அவருக்கு அந்த வாய்ப்பை வழங்கின.

பயிற்சி பெற்ற அதிகாரிகள் வெவ்வேறு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப் பட்டனர். சிலர் போர் முனைக்குச் சென்றனர். சோமசுந்தரம் நிரந்தர ஆசாத் முகாம் பயிற்றுநராகப் பணியில் அமர்த்தப் பட்டார்.

ஆசாத் பயிற்சி முகாமிற்கு வரும் புதிய சிப்பாய்களுக்கு பயிற்சி அளித்தார். இந்தப் பணி அவருக்கு மன ஆறுதலையும் மனமகிழ்ச்சியையும் வழங்கியது. அவ்வப்போது ஓய்வும் கிடைத்தது.

அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தெலுக் இந்தானில் இருந்த அவருடைய குடும்பத்தாரைப் போய்ப் பார்த்து பேசும் வாய்ப்பு கிடைத்தது.

இன்னும் ஒரு தகவல். தஞ்சோங் ரம்புத்தான் முகாமில் யார் யார் சோமசுந்தரத்திற்குப் பயிற்சி அளித்தார்களோ அவர்களே ஒரு கட்டத்தில் சிங்கப்பூர் ஆசாத் முகாமிற்கு வந்தார்கள். சோமசுந்தரத்திடம் கூடுதல் பயிற்சிகளையும் பெற்றார்கள். ஓடமும் ஒருநாள் கப்பலில் ஏறும். கப்பலும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்.

டான்ஸ்ரீ சோமசுந்தரம் பயிற்சி கொடுத்த பலர் சயாம் பர்மா எல்லையில் இருக்கும் இம்பால், கோகிமா, மணிப்பூர், மத்திய பர்மா போர்முனைகளுக்குச் சென்றார்கள். பல நூறு பேர் அங்கே மறைந்தும் போனார்கள். அவர்களுக்கு வீர மரியாதை செய்வோம்.

இந்திய தேசிய இராணுவத்தினர் பர்மா சயாம் காடுகளில் வெள்ளையர்களுக்கு எதிராகத் துப்பாக்கிகளைத் தூக்கினார்கள். பாம்புக்கடி, பூரான்கடி, மலேரியாக் கொசுக் கடிகளில் இருந்து தப்பித்து வந்தார்கள். பசி பட்டினியால் உருக்குலைந்து போனார்கள்.

உடல் வேதனையின் உச்சிக்கே போய் வந்தார்கள். அவை அனைத்தும் அவர்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத சோக வரலாறுகள்.

அதில் சோமசுந்தரம் என்கிற ஓர் அறிவார்ந்த மனிதரையும் சேர்க்க வேண்டும். கடுமையான இராணுவப் பயிற்சிகள் அவருக்கு நல்ல ஒழுங்கு முறைகளைக் கற்றுத் தந்து இருக்கின்றன. நான் பார்த்துப் பழகிய மனிதர்களில் டான்ஸ்ரீ சோமாசுந்தரம் ஒரு நல்ல நியாயமான மனிதர். வாழ்த்துகிறோம்.

(முற்றும்)

சான்றுகள்

1. Toye, Hugh (1959), The Springing Tiger: A Study of the Indian National Army and of Netaji, Allied Publishers, ISBN 978-81-8424-392-5

2. Sareen, Tilak Raj (2004), Indian National Army, Gyan Publishing House, ISBN 81-212-0833-5

3. Sengupta, Nilanjana (2012), A Gentleman's Word: The Legacy of Subhas Chandra Bose in Southeast Asia, ISEAS Publishing, ISBN 978-981-4379-75-5

4. Marston, Daniel (2014), The Indian Army and End of the Raj, Cambridge University Press, ISBN 978-0-521-89975-8

5. Lebra, Joyce C. (2008), Women Against the Raj: The Rani of Jhansi Regiment, Institute of South-East Asian Studies, ISBN 978-981-230-808-5

16 ஏப்ரல் 2019

ஆசாத் இராணுவப் பள்ளியில் டான்ஸ்ரீ சோமா - 1

1943-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 13-ஆம் தேதி. இந்தியாவை ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுவிக்க சிங்கப்பூரில் ஒரு தற்காலிக இந்திய அரசாங்கம் தோற்றுவிக்கப் பட்டது. அதன் பெயர் சுதந்திர இந்தியா விடுதலை அரசாங்கம்.
 

அதை ஆசாத் ஹிந்த் (Azad Hind) என்று இந்தி மொழியில் அழைத்தார்கள். இந்த அரசாங்கம் தோற்றுவிக்கப் பட்டதும் அதனை ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி, ரோமானியா, ஹங்கேரி, பல்கேரியா, குரோசியா, பின்லாந்து, தாய்லாந்து, சோவியத் ரஷ்யா ஆகிய நாடுகள் அங்கீகரித்தன.

இந்த அரசாங்கத்தைத் தோற்றுவித்தவர் நேதாஜி என்று அன்புடன் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ்.

ஆசாத் ஹிந்த் அரசாங்கம் தோற்றுவிக்கப் படுவதற்கு முன்னர் ஓர் அரசாங்கம் இருந்தது. அதன் பெயர் இந்திய விடுதலை இயக்கம். 1942-ஆம் ஆண்டு ராஜ் பிகாரி போஸ் என்பவரால் தோற்றுவிக்கப் பட்டது. தோக்கியோவில் உருவானது.
 

புதிய ஆசாத் அரசாங்கத்தைத் தோற்றுவித்தவர் நேதாஜி. அதற்கு ஜப்பானிய அரசு முதன்மையாக இருந்தது. பண உதவி, இராணுவ உதவி, அரசியல் உதவிகள் செய்தது. ஜெர்மனியும் சோவியத் ரஷ்யாவும் இராஜதந்திர உறவுகளை வழங்கின.

ஆசாத் ஹிந்த் அரசாங்கம் தோற்றுவிக்கப் படுவதற்கு மலாயாவில் பலர் பல வகைகளில் உயிரைப் பணயம் வைத்து தியாகங்கள் செய்து இருக்கிறார்கள்.

என். ராகவன்;

டாக்டர் லட்சுமியா;

பி.கே.தாஸ்;

எஸ்.என். சோப்ரா;

ஜான் திவி;

கே.எல். தேவாசர்;

எஸ்.சி. கோஹோ;

எஸ்.ஏ.மித்ரா;

எஸ். சண்முகம்;

டாக்டர் மசூம்டார்;

எம்.கே. சிதம்பரம்;

செங்கப்பா;

எல்லப்பா;

சுவாமி சத்தியானந்த பாரதி;

கே.ஏ, நாராயணன்;

கே.கே.பெஞ்சமின்;

அருசணாசலம் செட்டியார்;

கானல் மஹ்பூப் அகமட்;

என். வீரையா;

எம். காந்திநாதன்;

பத்மஸ்ரீ ஜானகி ஆதிநாகப்பன்;

கேப்டன் லட்சுமி சுவாமிநாதன் (சேகல்);

கேப்டன் மோகன்;

எஸ்.ஏ. ஐயர்;

சட்டர்ஜி;

ஹபிபுர் ரஹ்மான்;

போன்றவர்களின் பெயர்கள் வரலாற்றில் இடம் பெறுகின்றன. இன்னும் பெயர்கள் உள்ளன. பட்டியல் நீளும்.
 

ஆசாத் அரசாங்கம் சொந்தமாக நாணயங்களை அச்சிட்டு வெளியிட்டது. சொந்தமாக அஞ்சல் தலைகளை வெளியிட்டது. சொந்தமாக நீதிமன்றங்களை நடத்தியது. சொந்தமாகச் சட்ட திட்டங்களையும் வகுத்துப் பின்பற்றியது.

ஆசாத் அரசாங்கத்திற்கு உண்மையான, சட்டபூர்வமான அரசாங்கத் தகுதிகள் இருந்தன. இருந்தாலும் அதற்கு என்று ஒரு தனி நாடு இல்லை. தனி ஒரு நிலப்பரப்பும் இல்லாமல் இயங்கியது.
 

1943-ஆம் ஆண்டு அந்தமான் நிக்கோபார் தீவுகளை ஆசாத் அரசாங்கத்திற்கு ஜப்பானிய அரசு வழங்கியது. பின்னர் மணிப்பூர், நாகாலாந்து போன்ற இடங்களின் சில பகுதிகள் ஆசாத் அரசாங்கத்துடன் இணைக்கப் பட்டன.

ஆசாத் அரசாங்கம் தோற்றுவிக்கப் பட்டதும் அந்த அரசாங்கத்திற்கு ஓர் இராணுவ அமைப்பு தேவைப் பட்டது. அந்த வகையில் இந்திய விடுதலை தேசிய இராணுவம் எனும் ஓர் இராணுவ அமைப்பு உருவாக்கப் பட்டது. சுருக்கமாக அதன் பெயர் இந்திய தேசிய இராணுவம்.

அடுத்தக் கட்டமாக 1943 அக்டோபர் 23-ஆம் தேதி; ஆங்கில, அமெரிக்கக் கூட்டுப் படைகள் மீது ஆசாத் அரசாங்கம் போர்ப் பிரகடனம் செய்தது.

அதோடு அப்படியே விட்டுவிடவில்லை. இந்திய - பர்மா எல்லையில் இருந்த கூட்டுப் படைகள் மீது முதல் தாக்குதலையும் தொடுத்தது.
 

இந்திய விடுதலை தேசிய இராணுவத்தை இந்திய தேசிய இராணுவம் என்று சுருக்கமாக அழைத்தார்கள். ஆங்கிலத்தில் ஐ.என்.ஏ.

Azad Hind Fauj - Indian National Army - INA

பர்மா எல்லையில் இருந்த இம்பால் கோகிமா பகுதியில் முதல் போர் நடந்தது. அதற்கு இம்பால் போர் (Battle of Imphal) என்று பெயர். கோகிமாவில் இருந்த பிரிட்டிஷ் படைகளை ஐ.என்.ஏ. படையினர் தோற்கடித்து இந்தியாவிற்குள் காலடி வைத்தனர். பெரிய சாதனை என்றே சொல்ல வேண்டும்.

மோய்ராங் எனும் இடத்தை ஐ.என்.ஏ. படையினர் கைப்பற்றிய போது சற்றே பின்வாங்க வேண்டிய அவலநிலை. அதற்குக் காரணம் பிரிட்டிஷ் கூட்டுப் படையின் தொடர்ச்சியான வான் தாக்குதல்கள். ஐ.என்.ஏ. படையினருக்குப் போதுமான உணவு வந்து சேரவில்லை. அத்துடன் மருந்துப் பொருட்களும் ஆயுதங்களும் உடனடியாக வந்து சேரவில்லை.
 

அதனால் தான் ஐ.என்.ஏ. இந்திய தேசிய இராணுவம் பின் வாங்கியது. பல ஆயிரம் பேர் இரு தரப்பிலும் இறந்து போனார்கள்.

நேதாஜியின் இந்தியத் தேசிய இராணுவத்தினர் (ஐ.என்.ஏ. படையினர்) இந்தியாவிலும், பர்மாவிலும் ஐந்து போர்களில் ஈடுபட்டனர். அதில் ஜான்சிராணி படையினரின் பங்கு அளப்பரியது. அதை நாம் மறந்து விடக் கூடாது.

அந்தப் போர்களில் ஐ.என்.ஏ. படையினருடன் ஜப்பானிய போர் வீரர்களும் பங்கெடுத்தனர். போர் விவரங்கள் கீழே வருகின்றன.

பிரிட்டிஷ் படையில் பிரிட்டிஷார், இந்திய இராணுவத்தினர், கூர்கா படையினர் பங்கெடுத்தனர்.
 


1. Battle of Sinzweya

சின்ஸ்வேயா போர்


தேதி: 05.02.1944 - 23.02.1944

இடம்: அரக்கான், பர்மா

பிரிட்டிஷ் தரப்பு உயிரிழப்புகள்: 3,506

ஜப்பான் - ஐ.என்.ஏ. தரப்பு உயிரிழப்புகள்: 3,106

ஜப்பான் - ஐ.என்.ஏ. தரப்பு காயம் அடைந்தோர்: 2,229



2. Battle of Imphal

இம்பால் போர்


தேதி: 08.03.1944 - 03.07.1944

இடம்: இம்பால், மணிப்பூர், இந்தியா

பிரிட்டிஷ் தரப்பு உயிரிழப்புகள்: 12,603

ஜப்பான் - ஐ.என்.ஏ. தரப்பு காயம் அடைந்தோர் / உயிரிழப்புகள்: 54,879

(ஜப்பான் - ஐ.என்.ஏ. தரப்பில் பெரும்பாலோர் பசி பட்டினி, நோய்களினால் இறந்தவர்கள்)



3. Battle of Kohima
   
கோகிமா போர்


தேதி: 04.04.1944 - 22.06.1944

இடம்: கோகிமா, நாகாலாந்து, இந்தியா

பிரிட்டிஷ் தரப்பு உயிரிழப்புகள்: 4,064

ஜப்பான் - ஐ.என்.ஏ. தரப்பு காயம் அடைந்தோர் / உயிரிழப்புகள்: 5,764 - 7,000



4. Battle of Pokoku

பொகோக்கு போர்


தேதி: 04.02.1945 - 13.05.1945

இடம்: பொகோக்கு, பர்மா

பிரிட்டிஷ் தரப்பு உயிரிழப்புகள்: 4,002

ஜப்பான் - ஐ.என்.ஏ. தரப்பு காயம் அடைந்தோர் / உயிரிழப்புகள்: 6,590 - 10,000
   


5. Battle of Central Burma

மத்திய பர்மா போர்


தேதி: ஜனவரி 1945 - மார்ச் 1945

இடம்: மத்திய பர்மா

பிரிட்டிஷ் தரப்பு உயிரிழப்புகள்: 2.307

பிரிட்டிஷ் தரப்பு காயம் அடைந்தோர் / காணாமல் போனோர்: 15,888

ஜப்பான் - ஐ.என்.ஏ. தரப்பு உயிரிழப்புகள்: 6,513

ஜப்பான் - ஐ.என்.ஏ. தரப்பு  காயம் அடைந்தோர் / காணாமல் போனோர்: 6,299



பின்னர் வரும் கட்டுரைகளில் ஒவ்வொரு போரைப் பற்றியும் விளக்கமாக எழுதுகிறேன். சரி. ஆசாத் இராணுவப் பள்ளியைப் பற்றி பார்ப்போம்.

இந்திய தேசிய இராணுவத்தின் மிக முக்கியமான அம்சமாக விளங்கிய அமைப்பு ஆசாத் இராணுவப் பள்ளி ஆகும். இந்தப் பள்ளி சிங்கப்பூர் கில்ஸ்தீட் சாலையில் அமைந்து இருந்தது. இந்தப் பள்ளியில் ஆயிரக் கணக்கான மலாயா, சிங்கப்பூர் இந்தியர்கள் பயிற்சி பெற்றார்கள்.

அனைவரையும் இங்கே நினைவுபடுத்தி எழுத இயலவில்லை. மன்னிக்கவும். இந்தப் போர் வீரர்களைப் பற்றியும் அவர்களின் போர் வரலாற்றையும் இப்போதைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும். அவர்களின் தன்னலமற்றச் சேவைகளை நினைவுகூர வேண்டும். அதுவே நம் தலையாய நோக்கமாகும்.

அவர்களில் ஒருவர் டான்ஸ்ரீ சோமசுந்தரம். அவர்களைப் பற்றித் தான் இன்று தெரிந்து கொள்ளப் போகிறோம். வாய்ப்பு கிடைக்கும் போது மற்றவர்களைப் பற்றி எழுதுகிறேன்.

ஈப்போவுக்கு அருகில் ஒரு சிறுநகரம். அதன் பெயர் தஞ்சோங் ரம்புத்தான். அங்கே தான் மலாயாவின் வட பகுதிக்கான இந்திய தேசியப் பயிற்சி முகாம் இருந்தது. 1944-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தஞ்சோங் ரம்புத்தான் (Tanjung Rambutan Training Camp) பயிற்சி முகாமில் உள்ள காலாட்படையில் ஒரு ஜவானாக டான்ஸ்ரீ சோமா இணைந்தார்.

இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டவர்களை அப்போது ஜவான் என்று அழைத்தார்கள். தஞ்சோங் ரம்புத்தான் பயிற்சி முகாமில் தான் அவருடைய தொடக்கப் பயிற்சிகள். அதன் பின்னர்தான் சிங்கப்பூர் பிடாடாரி பயிற்சி முகாமில் பயிற்சிகள்.

https://en.wikipedia.org/wiki/K._R._Somasundram - He joined the Indian National Army at the age of 14 and later after World War II trained at the Tanjung Rambutan Training Camp

தஞ்சோங் ரம்புத்தான் இராணுவப் பயிற்சி முகாமில் அவருக்கு சில மாதங்கள் பயிற்சி. அங்கே அவருக்குப் பொது அறிவு, புவியியல், வரலாறு, அறிவியல், இராணுவத் தந்திரங்கள், இராணுவ விவேக அணுகுமுறைகள் போன்றவை சொல்லித் தரப் பட்டன.
 

ஒவ்வொரு நாளும் எட்டு அல்லது பத்து மணி நேர இராணுவப் பயிற்சிகள். அனைத்தும் கடுமையான பயிற்சிகள். அவருடைய பிலட்டூன் பயிற்சிப் பிரிவில் 50 பேர் இருந்தார்கள். முதல் இரு வாரங்களுக்கு கடும் பயிற்சிகள்.

அந்தப் பயிற்சிகள் அவரைச் சிறந்த ஒரு கட்டொழுங்கு மனிதராக மாற்றி அமைத்தன. அப்படிச் சொன்னால் தப்பு இல்லை என்று நினைக்கிறேன். அந்த ஒழுங்குச் சீர்முறைகளை நாம் இப்போதும் அவரிடம் பார்க்க முடிகின்றது.

தஞ்சோங் ரம்புத்தான் பயிற்சி முகாமில் இவர் மட்டுமே வயதில் குறைந்தவர். 14 வயது. ஒரு தடவை கடும் வெயிலில் பயிற்சி செய்யும் போது மயக்கம் போட்டு விழுந்து விட்டார். காய்ச்சல் வேறு. அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். இரு நாட்கள் மயக்க நிலையில் இருந்து இருக்கிறார்.



கண்விழித்துப் பார்த்த போது பக்கத்து படுக்கையில் அவருடைய டிரில் மாஸ்டர் படுத்து இருக்கிறார். பயிற்சி முகாமில் இருந்தவர்களில் யாரோ சிலர் அவரை மனத் தாங்கலில் அடித்து விட்டார்களாம். வலியால் டிரில் மாஸ்டர் முனகிக் கொண்டு இருந்து இருக்கிறார்.

(தொடரும்)

சான்றுகள்

1. Ghose, Sankar (1975). Political ideas and movements in India. Allied Publishers; Original from: University of Michigan Press.

2. Toye, Hugh (1959). The Springing Tiger: A Study of the Indian National Army and of Netaji Subhas Chandra Bose. Allied Publishers. p. 187. ISBN 978-8184243925.

3. Singh, Harkirat (2003) The INA trial and the Raj. Atlantic Publishers & Distributors. pp. 102–103. ISBN 81-269-0316-3

4. Sarkar, S. (1983), Modern India: 1885–1947, Delhi: Macmillan India, p. 412, ISBN 978-0-333-90425-1

5. Chandra Sarkar, Subodh (2008). Notable Indian trials. M.C. Sarkar; Original from: University of Michigan Press.

15 ஏப்ரல் 2019

பரதத்தில் அசத்தும் பல்கேரிய பெண்மணி

கணினி வேலை. கை நிறைய சம்பளம். காலப் போக்கில் கணினி வாழ்க்கையில் சலிப்பு. மன அமைதி இல்லா சலசலப்பு. மாற்றுவழி தேடினார். யோகா பயிற்சி அழைத்தது. இந்தியாவிற்கு வந்தார். 


கடல் தாண்டி வந்தவரை இந்தியப் பாரம்பரிய நடனங்கள் அணைத்துக் கொண்டன. அப்படியே அவரின் வாழ்க்கையும் மாறியும் போனது.

இப்போது பல்கேரியா நாட்டில் இரு பரதநாட்டியப் பள்ளிகளை நடத்தும் அளவிற்கு உலகப் புகழ்பெற்று விளங்குகிறார். அவர் தான் காத்யா தோஷிவா (Katya Tosheva).

ஓர் இந்தியப் பெண்ணாகவே மாறிப் போன அந்த  அழகிய ஐரோப்பியப் பெண்மணியைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

ஐரோப்பா கண்டத்தில் மிகப் பழைமையான வரலாறு படைத்த நாடு பல்கேரியா. கலை கலாசார நடனங்களுக்குப் புகழ்பெற்றது. பல்கேரியாவின் வடக்கே ரோமானியா. மேற்கே செர்பியா. தெற்கே கிரீஸ், துருக்கி. கிழக்கே கருங்கடல். பரப்பளவு 110,993 சதுர கி.மீ.  மலேசியாவின் பரப்பளவில் மூன்றில் ஒரு பாகம். அதன் தலைநகரம் சோபியா.



தலைநகர் சோபியாவில் பதினான்கு ஆண்டுகள் பொறியாளராக பணியாற்றியவர் காத்யா தோஷிவா. காலப்போக்கில் அந்த வேலை அவருக்குச் சலிப்பை ஏற்படுத்தியது.

காத்யாவிற்கு மன மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் யோகா கலையை அவருடைய கணவர் அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சிதான் காத்யாவின் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.

யோகா பயில வந்த காத்யா, இப்போது பரதநாட்டியம், ஒடிசி, கதக் போன்ற இந்தியப் பாரம்பரிய நடனங்களை கற்று வருகிறார். அது மட்டும் அல்ல. பல்கேரியாவில் நடனப் பள்ளிகளையும் தொடங்கி இருக்கிறார். இந்தியக் கலைகளைப் பல்கேரியா நாட்டு மக்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறார்.

அண்மையில் அவரைப் பி.பி.சி. வானொலி நிலையத்தின் ஐஸ்வர்யா ரவிசங்கர் பேட்டி கண்டார். அந்தப் பேட்டியின் சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 



2005-ஆம் ஆண்டில் பல்கேரியாவில் ஒரு யோகா ஆசிரியரிடம் பயிற்சி பெறத் தொடங்கினார். யோகா கலையைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள 2013-ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்தார். இந்தியாவின் கலை, கலாசாரம், உணவு முறை, பழக்க வழக்கங்கள், பாரம்பரிய நடனங்கள் போன்றவை அவருக்கு மிகவும் பிடித்துப் போயின.

பரதக் கலை தமிழகத்தைப் பிறப்பிடமாகக் கொண்டது. பரதக் கலையை பற்றி கேள்விப் பட்டதும் அதைக் கற்றுக் கொள்ள ஆர்வம் ஏற்பட்டது. ஆனால் உண்மையில் பரதத்தின் நடன அசைவுகள் அவர் நினைத்ததைவிட மிகவும் கடினமாக இருந்தன.

பரதத்தைக் கற்க ஆர்வம் இருந்தால் மட்டும் போதாது. மனதை ஒருமுகப்படுத்த வேண்டும். முழுக் கவனத்தையும் நடனத்தின் மீது செலுத்த வேண்டும். கடினமாகப் பயிற்சிகள் செய்ய வேண்டும். பரதத்தைக் கற்கத் தொடங்கிய பின்னர்தான் அது எவ்வளவு கஷ்டமானது என்பதை அவர் உணர்ந்து இருக்கிறார்.



பரதக் கலையைக் கற்பதற்காகத் தன் வேலையை விட்டார். முதலில் பரதத்தை ஒரு பொழுபோக்காகத் தான் கற்கத் தொடங்கினார். இந்தியாவில் மூன்று மாதங்கள் பயிற்சி பெற்றார்.

பயிற்சிக்குப் பின்னர் பல்கேரியா திரும்பியதும் மீண்டும் வேலைக்குச் செல்ல வேண்டிய ஒரு கட்டாய நிலை. இருந்தாலும் அவரால் வேலையில் பழையபடி கவனம் செலுத்த இயலவில்லை.

பரதத்தின் அசைவுகள்; இசையோடு ஒன்றித்து நடனம் ஆடுவது; அவற்றில்தான் அவருடைய எண்ணங்கள் எல்லாம் சுற்றிச் சுற்றி வலம் வந்தன. அதனால் தன்னுடைய கணினிப் பணியை விட்டு விலகினார்..

வேலையை விட்டு விலகினால் செலவுக்கு என்ன செய்வது என்று தடுமாறிக்  கொண்டு இருந்த போது அவருடைய குடும்பத்தினர் ஆதரவாக இருந்தனர். அவருடைய கணவரும் பக்கபலமாக இருந்தார்.



'உன் மகிழ்ச்சிதான் எனக்கு முக்கியம். நடனம் ஆடும்போது உன் முகத்தில் தெரியும் அளவில்லா மகிழ்ச்சியை நான் எப்போதும் பார்க்க வேண்டும். அதுவே எனக்கு மகிழ்ச்சி. கவலைப் படாதே காத்யா...  நாம் எப்படியாவது பிழைத்துக் கொள்ளலாம். பரதத்தைத் தொடர்ந்து கற்றுக் கொள். நான் உனக்குத் துணையாக இருக்கிறேன் என்று மனைவியைத் தட்டிக் கொடுத்தார் காத்யாவின் கணவர் ரோசன் கென்கோவ். அப்படி உணர்ச்சி ததும்ப கூறுகிறார் காத்யா தோஷிவா.

பல்கேரியாவின் பாரம்பரிய நடனத்தையும் இவர் கற்று இருக்கிறார். இருந்தாலும் பரதநாட்டியம் கற்ற பிறகு, இந்தியாவின் மற்ற மற்ற பாரம்பரிய நடனங்களையும் கற்க வேண்டும் என்கிற ஆர்வம் அவருக்கு ஏற்பட்டது.

வாரணாசியைச் சேர்ந்த ரவிசங்கர் மிஷ்ரா என்பவரிடம் கதக் நடனத்தைக் கற்றுக் கொண்டார். புனேவைச் சேர்ந்த நிவேதிதா பாத்வே என்பவரிடம் பரத நாட்டியத்தைக் கற்றுக் கொண்டார். ஒடிசி நடனத்தை பெங்களூருவில் வசிக்கும் ஷர்மிளா முகர்ஜி என்பவரிடம் கற்று வருகிறார்.



தன் கணவர்தான் தனக்கு மிகப் பெரிய தூண்டுதலைக் கொடுத்ததாகச் சொல்கிறார். தென் இந்தியாவில் உள்ள எல்லா நகரங்களையும் சுற்றிப் பார்த்து விட்டார். இவருடைய கணவர் இந்தியாவிற்கு வந்து தபேலா வாசிக்கவும் கற்றுக் கொண்டார். மனைவி ஆட கணவர் வாத்தியம் வாசிக்கிறார்.

கடந்த சில ஆண்டுகளாகத் தலைநகர் சோபியாவில் இருக்கும் இந்திரா காந்தி உயர்நிலைப் பள்ளியில் பரதநாட்டியம் சொல்லித் தருகிறார். அதே சமயத்தில் காயா எனும் நடனப் பள்ளியையும் நடத்துகிறார். செர்பியா நாட்டு அரசாங்கமும் இவரை அழைத்து நடன வகுப்புகள் நடத்தச் சொல்லிக் கேட்டுக் கொண்டு உள்ளது. பல்கேரியா, செர்பியா நாடுகளில் காத்யாவின் பரதனாட்டியப் புகழ் பரவி வருகிறது.

பரதனாட்டியம் மட்டும் அல்லாமல் மேற்கத்திய நடனங்களையும் தற்போது பயின்று வருகிறார். தனது படைப்பாற்றல் மூலமாகப் பல வகை நடனங்களை ஒருங்கிணைத்து மேடைகளில் அரங்கேற்றி வருகிறார்.

காத்யாவிற்கு யோகாவை அறிமுகம் செய்து வைத்த இவரின் கணவருக்கு, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இவரே தபேலாவை அறிமுகம் செய்து வைத்தார். 



2018-ஆம் ஆண்டில் பல்கேரியாவிற்கு இந்தியக் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகை தந்து இருந்தார். அப்போது அவர்  முன்னிலையில் கணவர் ரோசன் தபேலா வாசிக்க, தான் நடனம் ஆடியதாக காத்யா பெருமையுடன் கூறுகிறார்.

ஐரோப்பிய நாடுகளான செர்பியா, கிரீஸ், பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் இந்திய பாரம்பரிய நடனங்களை அரங்கேற்றி வருகிறார். பல்கேரிய மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற நாட்டுப்புற நடனங்களைக் குழுவாகச் சென்று அரங்கேற்றம் செய்து வருகிறார்.

இவருடைய நடனப் பள்ளியில் பல்கேரியப் பெண்கள் மட்டும் அல்ல; பல்கேரிய இளைஞர்களும் ஆர்வத்துடன் பரதநாட்டியம் பயின்று வருகின்றனர்.

இவர் சொல்லும் அடுத்த வார்த்தையைக் கேளுங்கள். இந்த உலகில் இந்தியப் பாரம்பரிய நடனங்கள் அற்புதமானவை. ஆகவே அவற்றை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்க வேண்டும். மேலும் இதனை எனது குழுவினருடன் இணைந்து பெரிய மேடைகளில் அரங்கேற்ற வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. எனது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பல்கேரியாவின் கலை ஆர்வலர்கள் ஆதரவுடன் அந்தக் கனவு நிச்சயம் ஒரு நாள் நிறைவேறும் என்று நம்புகிறேன் என்கிறார்.



பல்கேரியா நாட்டு மக்கள் மத்தியில் பரதநாட்டியத்திற்கு மிகுந்த வரவேற்பு இருப்பதாக மகிழ்ச்சியுடன் கூறுகிறார். பல்கேரியாவில் பல மேடைகளில் இந்திய நடனங்களை ஆடி இருக்கிறார்.

உண்மையில் பல்கேரியா நாட்டு மக்கள் இந்திய நடனங்களை ஆர்வத்துடன் பார்க்க வருகிறார்கள். குறிப்பாக விதம் விதமான நடன அசைவுகள், பாடல் வரிகள், இந்தியக் கலாசார அடையாளங்களான மருதாணி, கால் சலங்கை போன்றவற்றை வியப்புடன் பார்க்கிறார்கள் என்று கூறுகிறார்.

காத்யா தொடங்கியுள்ள நடன பள்ளியைப் பற்றி கேட்டபோது "நடனம் ஆடுவது எனக்கு மகிழ்ச்சியையும் மன நிறைவையும் அளிக்கிறது. நான் கற்றுக் கொண்ட இந்த பழம்பெரும் பாரம்பரியம் கொண்ட கலைகளை ஆர்வமுள்ள பிறருக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியில் நான் ஈடுபட்டு வருகிறேன்.

பல்கேரியாவில் என் வீட்டிற்கு அருகே அமைந்து உள்ள இந்திரா காந்தி எனும் பள்ளியில் மாணவர்களுக்கு நடன பயிற்சி அளித்து வருகிறேன். என் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் நடனத்தையும், இந்தியப் பாரம்பரியம்;  இந்தியத் தெய்வங்கள் குறித்தும் தெரிந்து வருகிறார்கள். என்னுடன் சேர்ந்து மந்திரங்கள் சொல்வதிலும் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார்கள் என்கிறார்.

கடின உழைப்பும் ஈடுபாடும் இல்லாமல் உங்கள் இலக்கை அடைய முடியாது. ஒருவருக்கு ஒருவர் அன்பைப் பரிமாறிக் கொள்ள வேண்டும். நாம் கற்றதைத் தயங்காமல் மற்றவர்களுக்கும் சொல்லித் தர வேண்டும்; ஒற்றுமையே வாழ்வில் பலம் சேர்க்கும் என்கிறார் காத்யா.

பழம்பெரும் பாரம்பரியமும் கலாச்சாரமும் வரலாற்று சிறப்பும் கொண்ட இந்தியப் புனிதப் பூமியில் பாரம்பரிய கலைகளுக்கு வரவேற்பு, அண்மைய காலங்களில் குறைந்து கொண்டே வருகிறது.  நாம் அறிவோம்.

இருப்பினும் இதற்கு மத்தியில் இந்தியப் பாரம்பரிய நடனங்களால் ஈர்க்கப் பட்டவர் காத்யா. அந்த நடனங்களை முறையாகப் பயின்று உலக மேடைகளில் அரங்கேற்றி வருகிறார். காத்யா எனும் அந்தப் பல்கேரியப் பெண்மணியைக் கையெடுத்துக் கும்பிட்டு வாழ்த்துவோம்.

சான்றுகள்
1.https://www.deccanchronicle.com/lifestyle/books-and-art/240119/a-yogic-start-to-classical-dance.html

2.https://www.youtube.com/watch?v=0YZwwEZjFbg

3.https://www.thehindu.com/news/cities/Kochi/finding-her-rhythm-beyond-borders-through-dance/article26073298.ece

14 ஏப்ரல் 2019

தமிழர் வரலாற்றுக் காலக்கோடு

தமிழர் வரலாற்றுக் காலக்கோடு என்பது கி.மு. 2000-களில் தொடங்கி இன்று வரை தமிழர்களின் முக்கிய வரலாற்று நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டுகின்றது. வரலாற்றுக்கு முந்திய காலம், சங்க காலம் முதல் இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டு வரை பிரித்துப் பார்க்கலாம்.


தமிழர்களின் ஆட்சி, அரசியல், மொழி, தமிழர்களை ஆட்சி செய்தவர்கள், தமிழர்கள் அடைந்த இன்னல்கள் என பல முக்கிய நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டுகின்றது.

தமிழகம், ஈழம், மலேசியா, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா மற்றும் புலம் பெயர் தமிழர்கள் என விரிவடைகின்றது. அவை தமிழர்களின் முக்கிய நிகழ்வுகளைக் கோடிக் காட்டுகின்றது. இந்தக் காலக்கோடு, கல் ஆயுதங்களைப் பயன்படுத்திய தமிழர்கள் முதல் கணினியைப் பயன்படுத்தும் இந்தக் காலத்துத் தமிழர்கள் வரை பிரித்துக் காட்டுகின்றது.



அத்துடன் அவர்களின் இன்பங்களையும் துன்பங்களையும், அவர்கள் அடைந்த வெற்றித் தோல்விகளையும், அவர்களின் ஏற்ற இறக்கங்களையும் அறிய உதவுகின்றது.

வரலாற்றுக்கு முந்திய காலம்

சுமார் கி.மு. 3000 - 1400 - பையம் பள்ளியில் புதிய கற்காலம்.

சுமார் கி.மு. 2000 - 300 - தமிழகத்தின் இரும்பு காலம்.

முற்சங்க காலம்

சுமார் 1000 - 300 கி.மு. - பெருங்கற்காலம்.

சுமார் 600 கி.மு. - தமிழ்ப் பிராமி நடைமுறைத் தமிழ் எழுத்தாகியது.

சுமார் 500 கி.மு. - தமிழ் இலக்கண நூல் தொல்காப்பியம் தொல்காப்பியரால் எழுதப் படுகிறது.


சங்க காலம்

சுமார் கி.மு. 500 - சங்க காலப் பாண்டியர்களால் தமிழக முத்திரைக் காசுகள் வெளியிடப்பட்டன.

சுமார் கி.மு. 300 - மெகஸ்தெனஸ் இந்தியா வருகை. பண்டையா எனும் அரசி பாண்டிய நாட்டில் ஆட்சி.

சுமார் கி.மு. 250 - அசோகர் கல்வெட்டு. தமிழகத்தின் நான்கு பேரரசுகள் (சேரர், சோழர், பாண்டியர், வேளிர்.

சுமார் கி.மு. 200 - நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னனின் ஆட்சியில் சமண மதம்.

சுமார் கி.மு. 145 - இலங்கையில் தமிழ் மன்னன் எல்லாளன் ஆட்சி. துட்டகை முனுவுடன் போர்.

சுமார் கி.மு. 200 - சங்க இலக்கிய நூல்கள் சங்க காலத்தில் உருவாக்கப் பட்டன.

சுமார் கி.மு. 150 - கலிங்க நாட்டு அரசன் த வெற்றிகளைத் கதிகும்பம் எனும் கல்வெட்டில் பதிவு செய்தல்.

சுமார் கி.மு. 130 - சேர அரசன் உதியஞ்சேரலாதன் சேர நாட்டில் ஆட்சி.

சுமார் கி.மு. 175 - இலங்கை அரசன் கஜபாகு காலத்தில் சேரன் செங்குட்டுவன்; கரிகால் சோழன் ஆட்சி.

சுமார் கி.மு. 190 - சேர நாட்டில் சேர அந்துவஞ்சேரல் இரும்பொறை ஆட்சி.

சுமார் கி.மு. 200 - தமிழ் பிராமியானது. தமிழ் எழுத்தின் முன்னோடியான வட்டெழுத்து தோற்றம்.

சுமார் கி.மு. 60 - மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் அகஸ்டஸ் கிரேக்க மன்னனுக்குத் தூது.

வணிக காலம்

சுமார் கி.பி. 1 - 140 - மதுரையை பாண்டிய மன்னன் ஆண்டதாக பிலினி, தாலமி என்பவர்களின் குறிப்புகள்.

சுமார் கி.பி. 190 - சாவகம் (ஜாவா) தீவில் தமிழ் பேசப்பட்டது.

சுமார் கி.பி. 1 - 200 - முதல் இரண்டு நூற்றாண்டுகளில் தமிழர்கள் யவனர்களுடன் சிறந்த வணிக உறவு. கிரேக்க வணிக நூலேட்டில் மூவேந்தர் துறைமுகங்களான நறவு, தொண்டி, முசிறி, நீலகண்ட நகரம், கொற்கை, அழகன்குளம், காலப்பட்டினம், பாண்டிச்சேரி, எயிற்பட்டினம் போன்றவை சிறந்த துறைமுகங்களாக இருந்ததாக எழுதப் பட்டது.

சுமார் கி.பி. 250 - சீன நாட்டு வரலாற்று அறிஞர் சுவான்சாங், பாண்டியர் அரசாங்கத்தை பாண்யுவி எனக் குறித்தார். பாண்டிய மக்கள் சீனர்களைப் போலவே சிறிய உயரம் படைத்து இருந்தனர் என எழுதி உள்ளார்.

சங்க காலத்திற்கு பின்னான காலம்

சுமார் கி.பி. 300 -325 - சிவகந்தவர்மன் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு தமிழகத்தில் பல்லவர் அரசு.

சுமார் கி.பி. 300 - 590 - களப்பிரர் தமிழ் நாட்டின் மீது படையெடுப்பு. பாரம்பரிய ஆட்சி மாற்றம்.

சுமார் கி.பி. 340 - குப்தப் பேரரசு தென்னிந்தியாவை நோக்கி படையெடுப்பு. தொண்டை நாடு முழுவதும் சோழர்கள் ஆக்கிரமிப்பு.

சுமார் கி.பி. 361 - ரோமானியப் பேரரசனான சூலியனுக்கு பாண்டியர் தூதனுப்புதல்.

சுமார் கி.பி. 436 - 463 - தமிழகத்தில் இருந்து இலங்கை சென்ற பாண்டிய மன்னர்கள், இராசராட்டிரம் எனும் அரசை ஏற்படுத்தினர்.

சுமார் கி.பி. 436 - 460 - பல்லவன் இரண்டாம் கந்தவர்மன் என்பவனின் மூன்று மகன்களும் பல்லவ அரசை வடதமிழகம் முழுதும் விரிவுபடுத்தினர்.

பல்லவர் பாண்டியர் ஆட்சி

சுமார் கி.பி. 550 - 600 - பல்லவன் சிம்மவிஷ்ணு தொண்டை நாடு, சோழ நாடுகள் மீட்பு. பாண்டியன் கடுங்கோன் மதுரையைக் களப்பிரர் ஆட்சியில் இருந்து மீட்பு.

சுமார் கி.பி. 590 - 630 - காஞ்சிபுரத்தில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் ஆட்சி.

சுமார் கி.பி. 610 - மகேந்திரவர்மனைச் சமணத்தில் இருந்து சைவ சமயத் துறவி திருநாவுக்கரசு நாயனார் மதம் மற்றுகிறார்.

சுமார் கி.பி. 628 - சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி பல்லவ அரசு மீது படையெடுப்பு. காஞ்சிபுரம் முற்றுகை.

சுமார் கி.பி. 630 - 668 - பல்லவ மன்னன் முதலாம் நரசிம்ம பல்லவன் தொண்டை மண்டலத்தில் ஆட்சி.

சுமார் கி.பி. 642 - சாளுக்கியர் மீது முதலாம் நரசிம்ம பல்லவன் படை எடுத்து பாதமியை நீக்குதல். புலிகேசி யுத்தத்தில் கொல்லப் படுதல்.

சுமார் கி.பி. 670 - 700 - பாண்டிய அரிகேசரி மாறவர்மன் மதுரையில் ஆட்சி.

சுமார் கி.பி. 700 - 728 - பல்லவன் ராஜசிம்மன் காஞ்சிபுரத்தில் கைலாசநாதர் கோயிலையும் மாமல்லபுரக் கடற்கரைப் பகுதிகளில் கோயில்களைக் கட்டுதல்.

சுமார் கி.பி. 700 - 730 - கொங்கு நாடு வரை பாண்டிய அரசை கோச்சடையான் ரணதீரன் விரிவாக்குதல்.

சுமார் கி.பி. 731 - பல்லவப் பேரரசில் ஆட்சி முறைக் குழப்பம். பல்லவ அரசனாக இரண்டாம் நந்திவர்மன் தேர்வு.

சுமார் கி.பி. 731 - 765 - சாளுக்கிய மன்னன் இரண்டாம் விக்கிரமாதித்தனுடன் சேர்ந்து, பாண்டியன் மாறவர்மன் ராஜசிம்மன் பல்லவ அரசன் நந்திவர்மனைத் தாக்குதல்.

சுமார் கி.பி. 735 - சாளுக்கிய மன்னன் இரண்டாம் விக்கிரமாதித்தன் பல்லவ நாடு மீது படையெடுத்து, தலைநகர் காஞ்சிபுரத்தை ஆக்கிரமித்தல்.

சுமார் கி.பி. 760 - பல்லவன் இரண்டாம் நரசிம்மவர்மன் மேற்கு கங்க அரசு மீது போர்த் தொடுத்து அதைத் தோற்கடித்தல்.

சுமார் கி.பி. 765 - 815 - பாண்டியன் பராந்தகன் நெடுஞ்சடையான் மதுரையை ஆளுதல்.

சுமார் கி.பி. 767 - பாண்டியப் படைகள் காவிரி ஆற்றின் தெற்கில் பல்லவர்களைத் தோற்கடித்தல்.

சுமார் கி.பி. 800 - 830 - முதலாம் வரகுன பாண்டியன் அரசனாகிறான். பல்லவ அரசன் நந்திவர்மனைத் தோற்கடித்து திருச்சிராப்பள்ளி வரை அரசை விரிவாக்குதல்.

சுமார் கி.பி. 825 - 850 - பல்லவன் மூன்றாம் நந்திவர்மன் பாண்டிய அரசைத் தோற்கடித்து வைகை வரை பல்லவப் பேரரசை விவரித்தல்.

சுமார் கி.பி. 830 - 862 - பாண்டியன் சீவல்லபன் மதுரையில் ஆட்சி.

சுமார் கி.பி. 840 - சீவல்லபன் இலங்கை மீது போர்த் தொடுத்து முதலாம் சேனனிடமிருந்து வட மாகாணங்களைக் கைப்பற்றல்.

சுமார் கி.பி. 848 - காவிரி கழிமுகத்தை ஆட்சி செய்த முத்தரையர்களை வெற்றி கொண்டு விஜயாலய சோழன் தஞ்சாவூரில் எழுச்சி.

சுமார் கி.பி. 859 - பாண்டியன் சீமாறன் சீவவல்லபன் கும்பகோணப் போரில் பல்லவர்களைத் தோற்கடித்தல்.

சோழர் காலம் - யாழ்ப்பாண அரசு

சுமார் கி.பி. 887 - ஆதித்த சோழன் பல்லவ அரசன் அபராஜிதனைத் தோற்கடித்தல்.

சுமார் கி.பி. 949 - தக்கோலம் போர். சோழர் படையை ரஸ்ராகுப்தா கிருஷ்ணா III தோற்கடிக்கிறான்.

சுமார் கி.பி. 985 - ராஜ ராஜ சோழன் அரியணை ஏறுதல்.

சுமார் கி.பி. 1010 - ராஜ ராஜ சோழன் தஞ்சைப் பிரகதீசுவரர் கோயிலைக் கட்டி முடித்தல்.

சுமார் கி.பி. 1012 - இராஜேந்திர சோழன் அரியணை ஏறுதல்.

சுமார் கி.பி. 1023 - இராஜேந்திர சோழன் கங்கைக்குப் பயணம்.

சுமார் கி.பி. 1025 - சோழர் கடற்படை ஸ்ரீவிஜய அரசனைத் தோற்கடித்தல்.

சுமார் கி.பி. 1041 - இராஜேந்திர சோழன் இலங்கை மீது படையெடுத்தல்.

சுமார் கி.பி. 1054 - மேலைச் சாளுக்கியர்களுக்கு எதிரான கொப்பம் போரில் இராஜேந்திர சோழன் மரணம் அடைதல்.

சுமார் கி.பி. 1070 - முதலாம் குலோத்துங்க சோழன் அரியணை ஏறுதல்.

சுமார் கி.பி. 1118 - விக்கிரம சோழன்.

சுமார் கி.பி. 1133 - இரண்டாம் குலோத்துங்க சோழன்.

சுமார் கி.பி. 1146 - இரண்டாம் இராஜராஜ சோழன்.

சுமார் கி.பி. 1163 - இரண்டாம் இராஜாதிராஜ சோழன்.

சுமார் கி.பி. 1178 - மூன்றாம் குலோத்துங்க சோழன்.

சுமார் கி.பி. 1178 - கூழங்கை ஆரியச்சக்கரவர்த்தி (யாழ்ப்பாண அரசு).

சுமார் கி.பி. 1216 - மூன்றாம் இராஜராஜ சோழன்.

சுமார் கி.பி. 1246 - மூன்றாம் இராஜேந்திர சோழன்.

சுமார் கி.பி. 1246 - குலசேகர சிங்கையாரியன் (யாழ்ப்பாண அரசு).

சுமார் கி.பி. 1256 - குலோத்துங்க சிங்கையாரியன் (யாழ்ப்பாண அரசு).

சோழரிடமிருந்து பாண்டியருக்கு மாறுதல்

சுமார் கி.பி. 1190 - 1260 - ஆறகழூரைத் தலைநகராக்கி பானா வம்ச ஆட்சி.

சுமார் கி.பி. 1216 - 1239 - முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் மதுரையைச் சோழரிடம் இருந்து மீட்டு மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்று பெயர் பெறுதல். இவருடைய ஆட்சியில் சோழர் சிற்றரசர் ஆனவுடன் அவர்களின் அழிவும் தொடங்குதல்.

சுமார் கி.பி. 1216 - காடவர் வம்சம்.

சுமார் கி.பி. 1236 - சம்புவரையர் வடதமிழகத்தைக் கைப்பற்றி நாயக்கர் காலம் வரை ஆள்கின்றனர்.

பாண்டியர் எழுச்சியும் இஸ்லாமியர் ஆட்சியும்

கி.பி. 1214 - 1236 - இலங்கை மீதான கலிங்கப் படையெடுப்பு.

கி.பி. 1251 - முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் அரியணை ஏறல்.

கி.பி. 1268 - முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் வட இலங்கையைக் கைப்பற்றி அங்கு குலசேகர சிங்கையாரியன் என்பவனைப் பட்டத்தில் அமர்த்துகிறான். அதற்குப் பின் இவன் வழியில் வந்த ஆரியச் சக்கரவர்த்திகள் யாழ்பாணத்தை கி.பி. 1619 வரை ஆண்டனர்.

கி.பி. 1279 - மூன்றாம் இராஜேந்திர சோழனின் இழப்பைத் தொடர்ந்து சோழ ஆட்சியின் முடிவு.

கி.பி. 1268 - 1310 - குலசேகர பாண்டியனின் ஆட்சியில் மதுரை உலகின் தலை சிறந்த செல்வச் செழிப்புள்ள நகரமாக இருந்ததாக மார்க்கோ போலோ குறிப்பு.
பாண்டியர்களுக்கும் ஏமன் நாட்டவர்களுக்கும் குதிரை வணிகம் நடந்ததாக இபின் பட்டுடா குறிப்பு.

கி.பி. 1308 - அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக் காபூர் தமிழ்நாடு வழியாக தேவகிரியை ஆக்கிரமித்தல்.

கி.பி. 1310 - குலசேகரப் பாண்டியனின் மகன் சுந்தர பாண்டியன் தன் தந்தையைக் கொன்று அரசனாகுதல். இது உள்ளூர் கலகமாக மாறித் தன் சகோதரன் வீரபாண்டியனால் தோற்கடிக்கப் படுகிறான்.

கி.பி. 1311 - மாலிக் காபூர் பாண்டிய நாட்டை ஆக்கிரமித்து மதுரையைத் தாக்குதல்.

கி.பி. 1327 - 1370 மதுரை சுல்தானினால் மதுரை ஆளப்படுதல்.

விஜயநகரப் பேரரசு - திருமலை நாயக்கர் - ஐரோப்பிய ஆட்சி

கி.பி. 1370 - தமிழ் நாடு முழுவதையும் விஜயநகரப் பேரரசின் முதலாவது புக்கா ராயனும் அவனுடைய மகனும் கைப்பற்றுகிறார்கள். பாண்டியர்கள் சிற்றரசர் எனும் நிலையை அடைந்தனர்.

கி.பி. 1422 - சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் காலத்தில் தென்காசி, பாண்டியர் தலைநகரமாக இருந்தது. தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில் இவனுடைய தம்பியின் காலத்தில் கட்டி முடிக்கப் பட்டு அதற்குப் பின் வந்த பாண்டியர்கள் அந்தக் கோயிலிலேயே முடியும் சூட்டுக் கொண்டனர்.

கி.பி. 1505 - இலங்கையில் போர்த்துக்கீசிரியரின் வருகை.

கி.பி. 1519 - முதலாம் சங்கிலி யாழ்ப்பாண அரசனாகுதல்.

கி.பி. 1522 - போர்த்துக்கீசிரியரின் வருகை.

கி.பி. 1535 - தஞ்சாவூரில் நாயக்கர்கள் ஆட்சியை ஏற்படுத்திய சேவப்பா நாயக்கரை விஜயநகரப் பேரரசின் அச்சுத ராயன் தஞ்சாவூரை ஆள நியமிக்கிறான்.

கி.பி. 1535 - 1590 - சேவப்பா நாயக்கர் முதலாவது சுதந்திர நாயக்கராக தஞ்சாவூரை ஆளுகிறார்.

கி.பி. 1600 - 1645 - கொல்லம் கொண்டான் என்ற பாண்டிய மன்னனின் ஆட்சி முடிவோடு பாண்டியர்கள் வரலாற்றில் இருந்து மறைதல். தஞ்சை நாயக்கர்களில் முக்கியமான ரகுநாத நாயக்கர் வருகை.

கி.பி. 1609 - புலிக்கட் எனும் இடத்தில் இடாச்சு குடியேற்றங்கள்.

கி.பி. 1609 - யாழ்ப்பாண அரசு போர்த்துக்கீசிரியரிடம் வீழ்தலும் யாழ்ப்பாணத்தில் போர்த்துக்கீசிரியர் ஆட்சியும்.

கி.பி. 1621 - யாழ்ப்பாணத்தின் கடைசி மன்னன் இரண்டாம் சங்கிலி கோவாவில் போர்த்துக்கீசிரியரால் தூக்கிலிடப் படுகிறார்.

கி.பி. 1623 - 1659 - மதுரையில் திருமலை நாயக்கர் ஆட்சி.

கி.பி. 1639 - பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் சென்னை பட்டினத்தினை வாங்கி ஜார்ஜ் கோட்டையை அமைத்தல்.

கி.பி. 1652 - தஞ்சையும் சிவசிங்கையும் விஜயபுர சுல்தானிடம் வீழ்தல்.

கி.பி. 1656 - மதுரை நாயக்கர் திருமலைக்கு எதிராக மைசூர் படைகள் ஆக்கிரமிப்பு.

கி.பி. 1658 - இலங்கையில் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி ஆட்சி.

கி.பி. 1675 - விஜயபுரத்திலிருந்து தஞ்சை நோக்கி மராத்தியப் படை நகர்வு. ஏகோயி தன்னைத் தானே அரசனாக அறிவித்தல்.

கி.பி. 1692 - மொகலாய பேரரரசின் பிரதிநிதி சுல்பிகார் அலிகான் ஆற்காடு நவாப்பை அமைத்தல்.

கி.பி. 1746 - பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம் ஜார்ஜ் கோட்டையைத் தாக்கிக் கைப்பற்றுதல்.

கி.பி. 1796 - இலங்கையில் பிரித்தானிய ஆட்சியின் ஆரம்பம்.

கிழக்கிந்திய நிறுவனம் - பாளையக்காரர் போர்கள்

கி.பி. 1749 - பிரித்தானியர் ஜார்ஜ் கோட்டையை மீண்டும் கைப்பற்றுதல்.

கி.பி. 1751 - ராபர்ட் கிளைவ் ஆற்காட்டைத் தாக்கிக் கைப்பற்றுதல்.

கி.பி. 1751 - பூலித்தேவன் கும்பினிப் படைத் தலைவர்களான முகமது அலி; அப்துல் ரகீம் போன்றவர்களை வரிமறுப்புப் போரில் தோற்கடித்து பாளையக்காரர்கள் போரைத் தோற்றுவித்தல்.

கி.பி. 1752 - விஜயக்குமார நாயக்கரை தோற்கடித்து பரங்கியர் கேப்டன் கோப் தலைமையில் பரங்கிப் படை மதுரையை கைப்பற்றுதல். அதை அறிந்த முத்து வடுகநாதர் மதுரை மீது போர் தொடுத்து, கேப்டன் கோப்பின் படைகளை விரட்டி அடித்து, மீண்டும் விஜயக்குமார நாயக்கரையே மதுரை மன்னராகப் பதவி அமர்த்தல்.

கி.பி. 1756 - பிரித்தானியாவும் பிரான்ஸும் முதலாவது கர்நாடக ஒப்பந்தம் செய்தல். ஆற்காடு நவாப்பாக முகம்மது அலி வால்யாவை நியமித்தல்.

கி.பி. 1759 - பிரான்ஸ் படையினர் தாமஸ் ஆர்த்தர் தலைமையில் சென்னையைத் தாக்குதல்.

கி.பி. 1760 - பிரித்தானியருக்கும் பிரான்ஸுக்கும் இடையே வந்தவாசிப் போர். வீரபாண்டிய கட்டபொம்மன் பிறப்பு.

கி.பி. 1767 - மைசூர் சுல்தான் ஹைதர் அலி சென்னையைத் தாக்குதல், பிரித்தானியர் அதை முறியடித்தல். பூலித்தேவன் ஆண்ட நெற்கட்டாஞ்செவ்வலின் பக்கத்து பாளையமான கொல்லம் கொண்டான் பாளையக்காரரான வாண்டாயத் தேவன், பூலித்தேவனுக்கு உதவியதற்காகப் பரங்கிப் படையால் கொல்லப் படுதல். பூலித்தேவன் இறப்பு.

கி.பி. 1772 - முத்து வடுகநாதர் காளையார் கோயிலுக்கு ஆயுதமின்றிச் சென்ற போது பரங்கிப் படைத் தளபதி பான்சோர் அவரைச் சுட்டுக் கொன்றான்.

கி.பி. 1773 - பிரித்தானிய அரசு சீராக்கல் சட்டத்தை அமுலாக்குதல். பிரித்தானிய அரசின் கீழ் சென்னை நிர்வாகம் செல்லுதல்.

கி.பி. 1777 - 1832 - இரண்டாம் சரபோஜி தஞ்சையை ஆளுதல்.

கி.பி. 1799 - சரபோஜி உடன்படிக்கையின்படி தஞ்சைப் பேரரசு பிரித்தானியர் வசமாதல். பிரித்தானியரால் கட்டபொம்மன் தூக்கிலிடப் படுதல்.

கி.பி. 1803 - சென்னை ஆளுநரை பென்டிங் நியமித்தல்.

கி.பி. 1800 - 1805 - பாளையக்காரர் போர்கள்.

கி.பி. 1806 - வேலூர்க் கோட்டையில் சென்னை ஆளுநர் பென்டிங்கிற்கு எதிர்ப்பு. பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் இந்திய வீரர்களின் வேலூர்ச் சிப்பாய்க் கலகம்.

பிரித்தானிய ஆட்சி


கி.பி. 1800 - பிரித்தானிய ஆட்சிக்கு வேலை செய்வதற்கு தமிழ்நாட்டில் இருந்து தமிழர்கள் சிங்கப்பூருக்கு அழைத்து செல்லப் படுதல்.

கி.பி. 1815 - தேயிலை, கோப்பி, தென்னைத் தோட்டங்களில் வேலை செய்வதற்கு தமிழ்நாட்டில் இருந்து தமிழர்கள் இலங்கைக்குக் கொண்டு செல்லப் படுதல்.

கி.பி. 1860 - தமிழ்நாட்டில் இருந்து தமிழர்கள் தென்னாப்பிரிக்கா அழைத்து செல்லப் படுதல்.

கி.பி. 1892 - பிரித்தானிய அரசின் இந்திய கவுன்சில்கள் சட்டம்.

கி.பி. 1901 - தமிழகத்தில் இருந்து தமிழர்கள் மலேசியாவிற்கு வேலைக்காகச் செல்லுதல்.

கி.பி. 1909 - இந்திய அரசுச் சட்டம்.

கி.பி. 1921 - முதலாவது பிரதேச தேர்தல் சென்னையில் நடைபெறுதல்.

கி.பி. 1927 - சென்னை காங்கிரஸ் முழு சுதந்திரத் தீர்வை வெளியிடுதல்.

கி.பி. 1928 - சைமன் குழுவின் சென்னை வரவு. வலுவான எதிர்ப்பு.

கி.பி. 1928 - இலங்கையில் கோல்புறூக் அரசியல் சீர்திருத்தம்.

கி.பி. 1937 - காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று சென்னையில் ஆட்சி அமைத்தல்.

கி.பி. 1939 - இலங்கையில் முதலாவது தமிழ் - சிங்களக் கலவரம்.

கி.பி. 1938 - பெரியாரின் தலைமையில் தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம், கேரளா உள்ளிட்ட திராவிடநாடு போராட்டம்.

கி.பி. 1941 - சென்னையில் இந்திய முஸ்லிம் லீக்.

கி.பி. 1943 - இந்திய தேசிய ராணுவத்தில் மலேசிய ரப்பர் தோட்டத் தொழிலாளிகள் இணைந்தனர்.

கி.பி. 1944 - பெரியாரும் அண்ணாதுரையும் திராவிடர் கழகத்தை அமைத்தல்.

கி.பி. 1944 - இலங்கையில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் உருவாக்கம்.

பிரித்தானிய ஆட்சியின் பின்பு

கி.பி. 1947 - சென்னை மாகாணம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகத்தின் பகுதிகளாக தமிழ்நாடு உள்ளடக்கப் படுதல்.

கி.பி. 1949 - இலங்கைத் தமிழரசுக் கட்சி எஸ். ஜே. வி. செல்வநாயகம் தலைமையில் கூட்டாட்சிக் கோரிக்கை.

கி.பி. 1953 - சென்னை மாநிலத்தில் தமிழ் மொழி ஆட்சி மொழி.

கி.பி. 1958 - இலங்கை இனக் கலவரம்.

கி.பி. 1964 - இந்திய வம்சாவளித் தமிழர் தொடர்பான முதலாவது ஸ்ரீரிமாவோ - சாஸ்திரி உடன்படிக்கை.

கி.பி. 1965 - இந்தி தேசிய மொழியாக பிரகடனம். பரவலான இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள்.

கி.பி. 1969 - சென்னை மாநிலம் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம்.

கி.பி. 1981 - யாழ் பொது நூலகம் எரிப்பு.

கி.பி. 1983 - இலங்கையில் தமிழர் படுகொலை. இலங்கை இனப்பிரச்சினை. ஆயுதப் போராக மாறுதல்.

கி.பி. 1983 - அதிக அளவான ஈழத் தமிழர்கள் மேற்கத்திய நாடுகளுக்குப் புலம் பெயர்தல்.

கி.பி. 1985 - ஈழத் தமிழர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்குடன் திம்புப் பேச்சுவார்த்தைகள்.

கி.பி. 1987 - இந்திய இலங்கை ஒப்பந்தம். இந்திய அமைதி காக்கும் படையின் வருகை.

கி.பி. 2004 - ஆழிப் பேரலையால் ஆயிரக் கணக்கான தமிழர்களும் உடமைகளும் இழப்பு.

கி.பி. 2006 - 2009 - இலங்கைத் தமிழர் இனப் படுகொலை.

கி.பி. 2009 - இலங்கையில் ஆயுதப் போர் முடிவடைதல்.

கி.பி. 2011 - இலங்கை அரசும் புலிகளும் போர்க் குற்றங்கள் செய்ததாக ஐ.நா. குற்றம் சாட்டு.

............................................................
 
மேற்கோள்கள்:

விக்கிப்பிப்பீடியா தமிழ்

பண்டைய தமிழகம் - சி.க. சிற்றம்பலம், 1999

Nilakanta Sastri, K.A. A History of South India, OUP, Reprinted 2000

Historical Atlas of South India-Timeline-http://www.ifpindia.org/Historical-Atlas-of-South-India-Timeline.html (French Institute of Pondicherry)

Codrington, Humphry William, A Short History of Lanka (http://lakdiva.org)

Veluppillai, Prof. A., Religious Traditions of the Tamils http://tamilelibrary.org/

Nilakanta Sastri, K.A., Srinivasachari, Advanced History of India, Allied Publishers Ltd, New Delhi, Reprinted 2000

Read, Anthony, The Proudest Day - India's Long Ride to Independence, Jonathan Cape, London, 1997

11 ஏப்ரல் 2019

Burma Thailand Death Railway

Based upon report originally produced from comprehensive details compiled by Capt D. Nelson (SSVF) B.R.E on 23 Aug 45. It was printed in a booklet prepared by Lt Col T.R.Beaton (Retd) Australian Army after he had spent two years as Curator of the Hellfire Pass Museum (Dec 1999 Dec 2001)


A brief description of the parties of prisoners that were sent to the Burma Thailand Railway. Some statistics on the terrible toll taken by conditions imposed by a ruthless enemy are as follows:


Military
Number of POWs
Deaths
British
30131
6904
Dutch
17990
2782
Australian
13004
2802
American
686
131
Total
61811
12619

Civilians
Number of Slaves
Deaths
Malaya
75000
42000
Burmese
90000
40000
Javanese
7500
2900
Singapore
5200
500
Total
177700
85400

The above figures do not include the deaths of Railway workers moved to other locations and later died from the treatment received while working on the railway.


Burma Thailand Railway Camps Note Distances shown to nearest Kilometre Distance from Thanbyuzayat (in kilometers) Distance from Nong Pluduc (in kilometers) Notes
THANBYUZAYAT 0 415 Base hospital camp.
Kandaw (4 Kilo) 5 410 Green Force commenced work 1st October 1942, the first to start work on the Burma end
Wagale (8 Kilo) 8 406 Dutch Force first occupied Wagale
Thetkaw (14 kilo) 14 400 Captain Claude Anderson (SMO) wrote a report to the SMO "A" Force Lt Col Hamilton from here 31st January 1943
Hlepauk (18 Kilo) 18 396 Anderson Force 10th October 1942 to 1st January 1943. No 5 Group from 40 kilo on 26th January 1943 to March 1943.
Kunhnitkway (26 Kilol 26 389 Ramsay Force 20th December 1942 to the 18th March 1943
Rephaw (30 Kilo) 30 385 After repeated bombings at Thanbyuzayat, 30 Kilo became Base Hospital for No 3 Group, subject to strafing raids
Tanyin (35 Kilo) 35 380 Williams Force from Java (884 POWs) arrived October 1942. Joined by Anderson Force January 1943 to become No 1 Mobile Force
Betetaung (40 Kilo) 40 374 Black Force ex Java including 184 Americans arrived October 1942
Anankwin (45 Kilol) 45 370 No 1 Mobile Force moved here while laying the rails & sleepers before moving to the 60 kilo camp
Thanbaya 50 365 F' Force Hospital Camp. 1700 desperately sick were brought here from Thailand, of these 700 died in less than 6 months. Major Hunt a West Australian doctor worked tirelessly here with few drugs.
Khonkhan (55 Kilo) 55 360 Base hospital under renowned Australian Surgeon, Colonel Coates, he performed countless leg amputations on ulcer patients.
Taungzun (60 Kilo) 57 358 When No 1 Mobile Force arrived in May 1943 they had to bury dead Asians found in the huts, Cholera victims, this was the start of an cholera epidemic among POWs
Kami Mezali (65 Kilo) 65 350 3 Group head quarters
Mezali (70 Kilo) 69 346 No 1 Mobile Force moved here from the 60 kilo in July 1943 previously occupied by Burmese it was in a filthy condition with deep mud every where, a total clean up was needed before it could be occupied.
Meiloe (75 Kilo) 75 340 Black Green & Ramsay Forces arrived 18th March 1943
Apalaine (80 Kilo) 80 337 No 5 Group late March 1943 No 1 Mobile Force arrived in August No 5 Group were still in occupartion, No 5 Base Hospital
Apalon (82 Kilo) 83 332 Site of one of the seven steel railway bridges in Burma.
Lawa (85 Kilo) 85 330 No 5 Group 15 March 1943
Tadein (90 Kilo) 90 325
Kyondaw (95 Kilo) 95 320 Transit camp for 'F' Force sick moving to Thanbaya. Many died here.
98 Kilo Camp 98 317
Regue (100 Kilo) 100 315 No 5 Group 29th May 1943
Aungganaung (105 Kilo) 105 310 A work camp housed Black, Green & Ramsay Forces in April 1943, later used as a grouping camp before the POWs were evacuated to Tamarkan in Thailand
Paya Thanzu Taung (108 Kilo) 108 307 This camp was situated just north of the three small pagodas which now mark the border between Thailand and Burma. No 1 Mobile Force occupied this camp 17/26 September 1943 having night marched from 95 Kilo Camp.
The Three Pagodas 108.5 306.5 Site of an ancient battle between Thailand and Burma.
Changaraya 112 301 F' Force No 5 Camp for 700 British. The 214 men who died here are buried in a single mass grave in Kanchanaburi War Cemetery.
Kami Sonkurai 115 299 F' Force No 3 Camp, originally 400 Australians. A good camp that later suffered a lot of deaths after survivors from Changaraya moved in.
No 1 Mobile Force Camp 116 299 Staging camp for Anderson and Williams combined Rail laying Force
Songkurai 121 294 'F' Force No 2 Camp for 1,600 British. Site of the "Bridge of 600" a death camp 600 died here and another 600 when evacuated to Thanbaya and Kanburi
122 Kilo Camp 122 293 No 1 Mobile Force occupied this camp.
Shimo Songkurai 127 288 F' Force No 1 Camp of 1800 Australians. Major Bruce Hunt with his medical team worked miracles with little support from the Japanese.
Little Nikki 131 284 No 1 Mobile Force's most southern camp.
Tunnel Party Camp 132 283 Set up in 1945 POWs constructed defence positions for Japanese.
Nikki Camp 133 282 HQ camp for 'F' Force. Lt/Col Dillon Force C.O. About 1000 POWs including 400 Australians. Some Malay Volunteers worked in this area, they were mostly British civilian business men.
Nikki Bridge Buillding Camp 134 281 Prisoners here built bridge over the Ranti River
Lower Nikki 139 276 Original HQ camp for 'F' Force. The first River
Thingomtha 142 273 Pond's Party built a large bridge here.
Upper Konkoita 145 270
Konkoita 152.13 263 H Force No 4 Camp of Australians.
Kurikonta 157 258 H Force No 1 Camp
Kroeng Krai 165 250 Six Australians were killed in a rock fall.
Swinton's Camp 166 249
Dobb's Camp 169 246
Johnson's Camp 171 244
Tha Mayo Wood 176 239 Indian workers occupied this camp during construction, later POWs worked on wood parties, fuel for the Engines
Tha Mayo 178 237
Nam Chon Yai 186 229
Tha Khanun North 190 225
Tha Khnnun Base 192 223
Tha Khanun (Australian) 193 222
Tha Khanun South 197 218 Lt/Col Pond's Australian group worked in this area
Bangan 201 214
Yongthi 202 213 Small group of 'D' Force Australians and a small group of Dutch POWs.
Prang Kasi 211 kilo 204 211 Dutch Camp
Prang Kasi 207 208 East of Railway Station
Prang Kasi South 208 207 British and Australian of 'D' Force in a riverside camp south of railway station.
Linson (3 Camps) 212 203 Woodcutting camp set up here in December 1944.
Kui Mamg 216 199 Upstream from Hot Springs
Hindat 217 198 Close to railway station.
Hindat West 218 197 River Camp 1 kilometre from station
Wang Hin 223 192
Kuishi 225 190 Dutch prisoners worked in this area
Kui Yae 229 186 Dutch prisoners worked in this area. 26 POW's killed in Allied bombing raid 8 December 1944.
Lin Tin 233 182 Dutch prisoners worked in this area
Kinsaiyok Main Camp 244 171 Mixed nationalities. Site of shooting of British POW.
Kinsaiyok Jungle Camp 2 247 168 Site of rock quarry for rail ballast
Kinsaiyok Jungle Camp 1 254 161 The original grave cross of an Australian who died here was found in 2000.
Kinsaiyok Jungle Camp 3 256 159
Hintock Cement 258 157 Barges bringing up barrel of cement unloaded here
Hintock River (2 Camps) 260 155
Hintock Road (3 Camps) 261 154 Dunlop Force worked here on cuttings & Three Tier Bridge. 'Weary' Dunlop's camp had showers built from bamboo. Large number of deaths here from cholera.
Malay Hamlet 262 153 H' Force camp of men to reinforce work on Hellfire Pass. 216 deaths in about 10 weeks.
Kannyu No 3 263 152 POWs from this camp worked on the infamous Hellfire Pass
Upper Kannyu 264 151
Lower Kannyu (3 Camps) 264 151 Dunlop Force initially constructed one of these camps.
Kannyu South 265 150
Tampi 267 148
Tampi South 272 143 D Force Workers
Tonchan Spring 275 140
Tonchan Central 276 139
Tonchan South 284 131 H Force commenced work here on arrival from Singapore in May 1943
Tarsao Hospital 290 125 HQ and hospital camp for 'D' Force. Transit camp for workers marching north.
Wang Yai 290 125
Pukai 296 119
Wang Pho North 299 116
Wang Pho Central 302 113
Wang Pho South 302 113 Camp on west of the river. Site of the still operating Wampo Viaduct where trains cross with tourists
Arrow Hill 305 110
Non Pradai 313 102
Tha Kilen 317 98
Ban Khao 327 88 Dutch POW discovered neolithic artifacts here and post war returned to find a major neolithic site.
Wang Takhain 334 81
Wang Yen 340 75
Wang Lan 346 69
Chungkai 355 60 A work camp then one of the main hospital camps for Thailand POWs, now the site of a War Cemetery.
Tha Makhan 359 56 Commencing 26 October 1942 under Colonel Phillip Toosey British & Dutch POWs built two bridges a wooden one and a steel one across the River Kwai (Kwae Yai)
Kan'buri Base 362 53 Headquarters of 9th Railway Regiment, in charge of the Thailand end of the construction. F & H Force Hospital camps.
No 2 Base Camp 364 51 Aerodrome Camps No's 1 & 2. Officers Camp 1944
Kan'buri Hospital 365 50 Hospital Camp for F & H Forces.
Tha Muang 376 39 Base camp for many railway workers at the end of construction. Dutch lived here until 1947.
Tha Rua 389 26 Transit camp for prisoners from Singapore marching north.
Ban Pong 412 3 First transit camp for prisoners from Singapore
Nong Pladuc 415 0 Start of construction in June 1942 by British POWs from Singapore

http://www.mansell.com/pow_resources/camplists/death_rr/deathrailwaycamplist.html