14 ஜூலை 2019

மலேசியாவில் 5G தொழில்நுட்பம்

மலேசியா 5G தொழில்நுட்பத்திற்கு வந்துவிட்டாலும் இன்னும் முறையாக அமலுக்கு வரவில்லை. இன்னும் சில காலம் பிடிக்கலாம். 2017-ஆம் ஆண்டில் தொடக்கச் சோதனைகள் எல்லாம் முடிந்து விட்டன.


மலேசியாவில் பெரும்பாலும் இப்போது 4G தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.

நீங்கள் பயன்படுத்தும் Android திறன்பேசிகள் 5G தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்ளும் ஆற்றல் கொண்டவை. பெரும்பாலானவை.

ஏன் என்றால் வாட்ஸப், பேஸ்புக், யூடியூப் போன்ற சமூக ஊடகங்களை உங்கள் திறன்பேசி ஏற்றுக் கொண்டால் 5G தொழில்நுட்பத்தையும் உங்கள் திறன்பேசி ஏற்றுக் கொள்ளும் ஆற்றல் கொண்டது. கவலை வேண்டாம்.

சமயங்களில் சில வகை திறன்பேசிகள் 5G தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்ளா. ரொம்பவும் பழைய மாடலாக இருந்தால் அந்தப் பிரச்சினை வரலாம். தூக்கிப் போட்டுவிட்டுப் புதுசா ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள். பழைய மாட்டுக் காடியை ஏன் கஷ்டப்பட்டுத் தள்ளிக் கொண்டு போக வேண்டும்?


நாம் நாட்டில் அலைபேசி சேவை வழங்கும் நிறுவனங்கள் Maxis, Celcom, DiGi, U Mobile, Tune Talk, Red Tone Mobile போன்றவை. இவை தான் 5G தொழில்நுட்பத்தை நடைமுறைக்கு கொண்டு வருகின்றன.

5G தொழில்நுட்பம் வந்ததும் உங்களுடைய திறன்பேசி ‘ஆட்டோமெட்டிக்’காக அந்த G-யை ஏற்றுக் கொள்ளும்.

அப்புறம் என்ன. நாலைந்து விநாடிகளில் ஒரு திரைப்படத்தை உங்கள் திறன்பேசிக்குள் பதிவிறக்கம் செய்து விடலாம். பார்க்கத் தான் உங்களுக்கு நேரம் இருக்காது.

இன்னும் ஒரு விசயம். Mobile Data பயன்படுத்துபவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். Wifi பயன்படுத்தினால் கவலையே இல்லை. அதற்காக வேலைகளைத் தூக்கிக் கடாசிவிட்டு பார்க்கச் சொல்லவில்லை. புதிய தொழில்நுட்பம் வந்து கொண்டு இருக்கிறது. அதற்காகச் சொல்ல வருகிறேன்.


ஐந்தாம் தலைமுறைக்கான அலைபேசியை அடிப்படையாகக் கொண்ட இணையத் தளத் தொழில்நுட்பமே 5G என்று அழைக்கப் படுகிறது.

இதற்கு முன்பு 4G எனும் நான்காம் தலைமுறை தொழில்நுட்பம் இருந்தது. அதை விட 5G பல நூறு மடங்கு வேகமாகப் பதிவிறக்கம்; பதிவேற்றம் செய்யும் ஆற்றலைக் கொண்டது. G என்றால் ஜெனரேசன் (GENERATION).

5G திறன்பேசியின் ஆற்றலை ஒரே வார்த்தையில் சொல்கிறேன். யூடியூப்பில் திரைப் படங்கள் மில்லியன் கணக்கில் உள்ளன. இந்தத் திரைப்படங்களை உங்களுடைய திறன்பேசியின் மூலமாகப் பதிவிறக்கம் செய்ய முடியும்.

அந்த வகையில் ஒரு திரைப் படத்தை 4 விநாடிகளில் பதிவிறக்கம் செய்து விடலாம். அவ்வளவு வேகம்.


அதாவது 50 காணொலிகளை ஒரே விநாடியில் பதிவிறக்கம் செய்யும் வேகம். நினைத்துப் பார்க்க முடியவில்லை. 5G மலேசியாவிற்கு வந்து விட்டது. விரைவில் பரவலாகப் பயன்படுத்தப் படலாம்.

உலகில் புகழ்பெற்ற திறன்பேசி தயாரிப்பு நிறுவனமான சாம்சங் கடந்த 2019 மார்ச் மாதம் தன் 5G திறன்பேசியான சாம்சங் கேலக்சி எஸ்10ஐ வெளியிட்டது.

அதேபோன்று, ஹுவாவேய், ஓப்போ போன்ற முன்னணி நிறுவனங்கள் ஏற்கனவே தங்களின் 5G திறன்பேசிகளை வெளியிட்டுவிட்டன.


 ......................
பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்

  • Pragash Moorthy இலங்கையில் 5G அலைவரிசை கோபுரங்கள் ஆங்காங்கே நிறுவப்பட்டுக்கொண்டிருக்கின்றது. ஆனால் அதற்கு மக்கள் எதிர்ப்பு நிலவுகின்றது. 5G அலைவரிசை கோபுரங்களில் இருந்து வெளிப்படும் கதிர்களால் கருவில் இருக்கும் ஐந்து மாத சிசுவுக்கு கூட பாதிப்புகள் ஏற்படும் என்று செய்திகள் பரவுவதனால் மக்கள் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். அத்தகைய செய்தி உண்மையா பொய்யா என்று தெரியவில்லை.
     
    • Muthukrishnan Ipoh >>> Pragash Moorthy >>> உண்மை ஐயா. 5G அலைவரிசை கோபுரங்கள் வெளியிடும் மின்காந்த அலைவரிசைகள்; அதாவது மின்காந்த அலைக் கற்றைகள் மனித உயிர்களுக்கு மட்டும் அல்ல; விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

      அனைத்துலக அளவில் 52 நாடுகளின் மருத்துவர்கள்; அறிவியலாளர்கள் எச்சரிக்கை செய்து உள்ளனர்.

      5G அலைவரிசை புற்றுநோய் தாக்கத்தை ஏற்படுத்தலாம். குழந்தைகள், கர்ப்பவதிகள், சிறுவர்கள் அதிகமாகப் பாதிக்கப் படலாம்.

      இப்போது நாம் பயன்படுத்தும் திறன்பேசி அலைக் கற்றைகள் புற்றுநோயை உருவாக்கும் என்று 2011 ஆம் ஆண்டே உலக சுகாதார நிறுவனம் எச்சரித்து விட்டது.

      வளர்ச்சி அடைந்த நாடுகளில் கூட 5G தொழில்நுட்பச் சேவைக்கு அனுமதி வழங்க தயங்குகிறார்கள். குறிப்பாக அமெரிக்காவில்...

      இலங்கையில் அப்படி என்றால் மலேசியாவில் ஒரு பெரிய கேள்விக்குறி.

    •  Muthukrishnan Ipoh 5ஜி என்பது பில்லியன் கணக்கில் பணம் புரளும் விசயம்...

      பல நாடுகள் அனுமதி கொடுக்க மறுக்கின்றன.

      ஏற்கனவே இப்போது நாம் பயம்படுத்தும் 4ஜி கைப்பேசிகள்... காது... மூளையில் புற்று நோயை உருவாக்குகின்றன... உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை செய்து வருகிறது.

      கைப்பேசியை அதிக நேரம் பயன்படுத்தாதீர்கள் என்று சொன்னால் யார் கேட்கிறார்கள்...
  • Neela Vanam ஐயா கைப்பேசியினால் உலகத்திலைள்ள தேவையான செய்திகளை படிக்க முடிகிறது தேடுதல் கூடுகிறது காரணம் அறிவுப்பசிதான் பாதிப்பை யாரும் கண்டுக் கொள்வதில்லை. விஞ்ஞானிகள் பாதிப்பில்லாத அலைக்கற்றை கண்டு பிடித்தால் நல்லது.

கண்ணை நம்பாதே

கண்ணை நம்பாதே... உன்னை ஏமாற்றும்...
நீ காணும் தோற்றம்... உண்மை இல்லாதது...
அறிவை நீ நம்பு... உள்ளம் தெளிவாகும்...
அடையாளம் காட்டும்... பொய்யே சொல்லாதது...





  •  
    கண்ணை நம்பாதே!
    உன்னை ஏமாற்றும்!
    உன்னை ஏமாற்றும்

    நீ காணும் தோற்றம்!
    உண்மை இல்லாதது!

    அறிவை நீ நம்பு!
    உள்ளம் தெளிவாகும்
    அடையாளம் காட்டும்!
    பொய்யே சொல்லாதது!

    கண்ணை நம்பாதே...

    காவலரே வேஷமிட்டால்
    கள்வர்களும் வேற்றுருவில்
    கண் முன்னே தோணுவது
    சாத்தியமே!

    காத்திருந்து கள்வருக்கு
    கைவிலங்கு பூட்டி விடும்
    கண்ணுக்குத் தோணாத
    சத்தியமே!

    போடும் பொய்த் திரையைக்
    கிழித்து விடும் காலம்!
    புரியும் அப்போது மெய்யான
    கோலம்!

    கண்ணை நம்பாதே...

    ஓம் முருகா என்று சொல்லி
    உச்சரிக்கும் சாமிகளே!
    ருத்ராட்சப் பூனைகளாய்
    வாழுறீங்க!

    சீமான்கள் போர்வையிலே
    சாமான்ய மக்களையே
    ஏமாற்றிக் கொண்டாட்டம்
    போடுறீங்க!

    பொய்மை எப்போதும்
    ஓங்குவதும் இல்லை!
    உண்மை எப்போதும்
    தூங்குவதும் இல்லை!

    கண்ணை நம்பாதே...

    பொன் பொருளைக் கண்டவுடன்
    வந்த வழி மறந்து விட்டு
    கண்மூடிப் போகிறவர்
    போகட்டுமே!

    என் மனதை நானறிவேன்!
    என் உறவை நான் மறவேன்!
    எதுவான போதிலும் ஆகட்டுமே!

    நன்றி மறவாத
    நல்ல மனம் போதும்!
    என்றும் அதுவே என்
    மூலதனம் ஆகும்!

    கண்ணை நம்பாதே... https://www.youtube.com/watch?v=7XmNcms8U0Q
     
    • Muthukrishnan Ipoh மருதகாசி இயற்றிய பாடல்... பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி மாணிக்கம் சார்... இந்த பாடலைப் பற்றி சுவையான தகவல் ஒன்று உண்டு .

      பாடலை இயற்றிய மருதகாசி ‘பொன் பொருளைக் கண்டவுடன்’ என்று வரும் இடத்தில்


      ‘தன் வழியே போகிறவர் போகட்டுமே’ என்று முதலில் எழுதினாராம்.

      மக்கள் திலகம் தன் வழி சரியாக இருந்தால் அந்த வழியில் போவதில் என்ன தவறு என்று கேட்டாராம். அதில் இருக்கும் உண்மையை உணர்ந்து ‘கண் மூடி போகிறவர் போகட்டுமே… என்று மாற்றி எழுதினாராம் கவிஞர் மருதகாசி.

கா. மு. ஷெரீப் பிறந்த நாள் - 07.07.2019

ஏரிக்கரையின் மேலே போறவளே…
பாட்டும் நானே பாவமும் நானே...
அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை...
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா...
வானில் முழுமதியைக் கண்டேன்...
உலவும் தென்றல் காற்றினிலே...
வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்...
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா...


இப்படி அற்புதம் அற்புதமான பாடல்களைத் தந்த மாபெரும் கவிஞர் கா. மு. ஷெரீப் அவர்கள் பிறந்தநாள். தமிழுகம் பார்த்த அந்தக் கவித் திலகத்தை நினைவு கூர்வோம். தமிழுகம் என்றைக்கும் அவரை மறக்காது.

Image may contain: 1 person, cloud, sky, text, nature and outdoor

உன்னதங்கள் நிறைந்த கவிஞர். உத்தமங்கள் மலர்ந்த மனிதர். ஆன்மிகத்தில் இமயம் பார்த்தவர். ஒழுக்கத்தில் சிகரம் தொட்டவர்.

காலத்தால் அழிக்க முடியாத அரிய பெரிய தத்துவப் பாடல்களை எழுதியவர். தமிழ் உலகம் சுவாசிக்கும் காற்றையும் மணக்க வைத்த பெருமகனார்.

வற்றாத கவிதைச் சுனைகளில் இன்றைக்கும் என்றைக்கும் வாழ்கின்ற கவித்திலகம்.

(தோற்றம்: 11.08.1914 - மறைவு: 07.07.1994)
 

சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? பாடல்...

https://www.youtube.com/watch?v=Vy-nGNGAnDQ



 ........................
பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்



Murugan Rajoo அருமை ஐயா. தங்களின் எழுத்தின் ஆளுமை மிக செம்மை. நல்வாழ்த்துகள்


அக்காலத்தின் கட்டாயக் கவி ❤️




உமர் தம்பி

தேனீ, வைகை, தமிழா, இ-கலப்பை... இவை என்ன என்று தெரிகிறதா. 2000-ஆம் ஆண்டுகளில் கணினியிலும் இணையத்திலும் தமிழைப் பயன்படுத்துவதற்கு உதவிய தமிழ்ச் செயலிகள். அதாவது புரகிரம்கள். இந்தத் தமிழ்ச் செயலிகளை உருவாக்கியவர் உமர் தம்பி. இ-கலப்பை, தமிழா போன்ற செயலிகளின் உருவாகத்தில் இவரின் பங்களிப்பு நிறையவே உள்ளன.



தமிழ் இணையச் சூழலில் நன்கு பரிச்சயமான பெயர். அவர் மறைந்து 13 ஆண்டுகள் ஆகின்றன. எதிர்வரும் (ஜுலை) 12-ஆம் தேதி அவரின் நினைவு நாள். 53 வயதில் இயற்கை எய்தினார்.

உமர் தம்பி, கணினித் தமிழின் முன்னோடி. தமிழ் இணையத்தின் அறிஞர். இணையத்தில் இப்போது தமிழ் அழகாகத் தவழ்ந்து வருவதற்கு பாடுபட்டவர்களில் மிக மிக முக்கியமானவர்.

ஓலைச் சுவடிகளில் உறைந்து கிடந்த தமிழ்ப் படிவங்களைக் கணினி மூலம் உலகம் எங்கும் கொண்டு சென்றவர். அவரை இந்தத் தமிழ் உலகம் மறக்கலாமா?




தமிழுக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்த அந்த அறிஞரை மறக்கலாமா? தமிழுக்காக உழைத்த அந்தத் தமிழ் மகனை இந்தத் தமிழ் உலகம் மறக்கலாமா?

ஆனால் மறந்து விட்டதே. விளம்பரத்தைத் தேடிப் போகாதவர் விளம்பரம் இல்லாமலேயே மறைந்தும் போனார். இப்போது விளம்பரம் இல்லாமலேயே துயில் கொள்கிறார்.

உமர் தம்பி எந்த கல்லூரிக்கும் போய் கணினித் தொழில் நுட்பத்தை பயிலவில்லை. துபாயில் பணிபுரிந்த காலங்களில் தனக்கு கிடைத்த ஓய்வு நேரங்களில் சொந்தமாகவே கணினி தொழில் நுட்பங்களைக் கற்றுக் கொண்டார்.




2001-ஆம் ஆண்டு தமிழகம் வந்தார். தமிழ் உலகம் கணினியில் தடம் பதித்த காலத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டார்.

உலவிகளில் (Browser) செயல்படும் மைக்ரோசாப்ட் தொழில்நுட்பமான (WEFT) வெப்ட். இதை முதன் முதலாகத் தமிழில் அறிமுகம் செய்தார். தமிழ் எழுத்துருக்கள் கணினியில் நிறுவப்படாத காலம் அது.

இந்தக் கட்டத்தில் தமிழ் ஒருங்குறி எழுத்துக்களால் அமைந்த இணையத் தளங்களை மைக்ரோசாப்ட் உலவிகளில் படிக்கும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தார்.

தேனீ எழுத்துருவை இயங்கு எழுத்துருவாக (Dynamic Fonts) மாற்றினார். பல்வேறு இணையத் தளங்களில் அதை இலவசமாகப் பயன்படுத்த வழி செய்தார்.

இன்று தமிழ் இணைய உலகில் பல்லாயிரம் பேர் அந்த எழுத்துருவைப் பயன்படுத்தி வலைப்பதிவு செய்து வருகிறார்கள்.




2010-ஆம் ஆண்டில் யுனிகோட் பயன்பாட்டிற்கு வராத காலக் கட்டம். ஆளாளுக்கு எழுத்துருக்களை உருவாக்கி மார்தட்டிக் கொண்டு இருந்தார்கள். அடியேன் நானும் சும்மா இல்லை.

எனக்குத் தெரிந்த கணினி அறிவைக் கொண்டு ‘முத்து’ எனும் எழுத்துருவை உருவாக்கி உலவ விட்டேன். அப்போது அது பெரிய விசயம். ஒரு 50 பேர் வரை பயன்படுத்தி இருக்கிறார்கள். இப்போது அந்த எழுத்துரு என்ன ஆனது என்று கேட்க வேண்டாம். நானே மறந்து விட்டேன்.

ஓர் எடுத்துக்காட்டு. www.tamilmalar.com இணையத் தளத்தைக் கணிணியில் வாசிக்க வேண்டும் என்றால் தமிழ் மலர் இணையத் தளத்தில் நிறுவப்பட்டு இருக்கும் (Tamil Font) தமிழ் எழுத்துருவை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதன் பின்னரே இணையத் தளத்தை வாசிக்க முடியும். அது அப்போது. இப்போது தான் யுனிகோட் வந்து விட்டதே. கவலையை விடுங்கள்.




அப்போது உமர் தம்பியின் தேனி தமிழ் எழுத்துருவைப் பயன்படுத்தி எந்த இணையத் தளமாக இருந்தாலும் தமிழ் எழுத்துருக்களைப் பயன்படுத்தாமலேயே வாசிக்கலாம். பெரிய சாதனை.

கணினித் தமிழின் முன்னோடியான உமர் தம்பிக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழக முதல்வரிடம் பரிந்துரை செய்யப் பட்டது.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் துபாய் உமர் தம்பி அரங்கம் எனும் கணினி அரங்கம் உருவாக்கப் பட்டு கணினி பற்றிய கட்டுரைகள் சமர்ப்பிக்கப் பட்டன..




அது மட்டும் அல்ல. கணினி, அறிவியல், பொருளாதாரம், கல்வி, வணிகம் போன்ற துறைகளில் இப்போது வழக்கத்தில் உள்ள ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ் சொற்களைத் தொகுத்து தமிழ் இணைய அகராதியைக் கொண்டு வந்தவரும் உமர் தம்பி அவர்கள் தான்.

சின்னச் சின்ன மென்பொருள் நிரலிகளை உருவாக்கி அவற்றின் மூலம் ஆயிரக் கணக்கான வெள்ளிக்கு விலைபேசி விற்ற காலத்தில் தான் உமர் தம்பியும் வாழ்ந்தார். இருந்தாலும் காசு எதுவும் வாங்காமல் யுனிகோட் எழுத்துருக்களையும், பல மென்பொருள் நிரலிகளையும் உருவாக்கி உலகத் தமிழர்களுக்கு வழங்கி இருக்கிறார்.

அவர் மறைந்தாலும் தமிழ்க் கணினி உலகம் இருக்கும் வரை நினைத்துப் பார்க்கும் அளவிற்கு ஓர் அன்பளிப்பைச் செய்துவிட்டுப் போய் இருக்கிறார்.

இணைய உலகத்தில் தமிழைத் துரிதமாகக் கொண்டு வர வேண்டும் என்று ஆசைப் பட்டவர் உமர் தம்பி. அவர் எடுத்த முதல் முயற்சி தான் இன்று இலட்சக் கணக்கான தமிழ் வலைப் பதிவுகளுக்கு ஆணிவேராக அமைந்து உள்ளது.


உமர் தம்பி போன்று தமிழுக்காக உழைத்த உண்மையான தமிழர்களைத் தமிழ் மொழி மாநாடுகளும் கண்டு கொள்ளவில்லை. உலகத் தமிழராய்ச்சி மாநாடுகளும் கண்டு கொள்ளவில்லை. வேதனை.

நம் தாய்மொழி தமிழின் வளர்ச்சிக்குப் பாடுபட்ட, பாடுபடும் தமிழர்கள் கண்டு அறியப்பட வேண்டும். அவர்களுக்கு முறையான அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். அதுவே தமிழ்கூறும் நல்லுகத்தின் எதிர்பார்ப்பு.
Umar Thambi - Forgotten father of Tamil computing

...................................................

உமர் தம்பி உருவாக்கிய செயலிகளும் கருவிகளும்:

1. AWC Phonetic Unicode Writer

2. Online RSS creator – can be used in offline as well

3. RSS Feed செய்தியோடை உருவாக்கி

4. எண்களாகத் தெரியும் ஒருங்குறி எழுத்துக்களைப் படிப்பதற்கான செயலி

5. தமிழை ASCII வடிவில் Database சேமிக்கும் கருவி

6. எல்லா வகையான குறிமுறைகளையும் ஒருங்குறிக்கு மாற்றும் செயலி

7. ஒருங்குறி மாற்றி

8. GNU (Linux) பொதுமக்கள் உரிம அடிப்படை எழுத்துருக்கள்

9. ’தேனீ ’ ஒருங்குறி எழுத்துரு

10. வலைப் பதிவுகள், வலைத் தளங்களுக்கான இயங்கு எழுத்துரு தொடுப்பு

11. ’வைகை’ இயங்கு எழுத்துரு

12. தமிழ் மின்னஞ்சல்

13. ’தமிழ்’ ஒருங்குறி Toolbar உலவி

14. Uniwriter (உலவியில் Tools மெனு)


..................................
    M R Tanasegaran Rengasamy வாழும் பொழுதே வாழ்த்தும் பண்பை மறந்தே விடுகிறோம் நாம். இந்தப் பணி உமர் தம்பி அவர்களின் விசயத்திலும் தொடர்ந்திருப்பது வருத்தமளிக்கிறது. கணினி உலகிற்கு ஆற்றிய அரும் பணிக்காக உமர் தம்பியின் நாமம் என்றென்றும் தக்கார் மனங்களில் நிலைத்திருக்கும். வாழ்க .. வாழ்க..
  • Senthil Kumar இந்தக் கட்டுரையை அனைவருக்கும் பகிரச் செய்து உமர் தம்பியின் தமிழ்த் தொண்டை தெரியச் செய்வதே நாம் திரு உமர் தம்பிக்கு காட்டும் நன்றிக் கடன்
  • Letchumanan Nadason திரு. உமர் தம்பி அவர்கள் ஆற்றிய அரும் பணியை என்றென்றும் நன்றியுடன் நினைவு கூர்வோம்.
  • Raghavan Raman கணிணியில் தமிழை பயன்படுத்தும் ஒவவொருவரும் அவரை நினைவு கொள்வதுடன் மற்றவர்களும் இதனை அறியச் செய்வோம்.

இன்றைய சிந்தனை 11.07.2019 - நமக்காக வாழ்வோம்

ஒருவருக்கு நாம் ஆயிரம் உதவிகள் செய்து இருக்கலாம். ஆனால் ஒரு முறை அவர் நம்மிடம் ஒரு குறையைக் கண்டுபிடித்து விட்டால்... 

 Image may contain: flower

அந்தக் கணத்தில் இருந்து நாம் செய்த உதவிகளை எல்லாம் அவர் மறந்து விடுவார். 

இது தான் உலகம். ஆக மற்றவர்களுக்காக நாம் வாழ வேண்டாம். நமக்காக நாம் வாழக் கற்றுக் கொள்வோம்.

Raghavan Raman ஒருவர் நம்மை மறப்பதற்கு நாம் தவறு செய்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. என்று ஒருவர் தனக்கு உங்களால் இனி எதுவும் கிடைக்காது என்று உணர்கிறாரோ அன்றே உங்களை மறந்து விடுவார். பெரும்பாலும் இது தான் இன்றைய நிலை.
 
Muthukrishnan Ipoh உண்மைதான்... இனி எந்த நன்மையும் இல்லை என தெரிய வந்ததும் ஏதாவது ஒரு சாக்கு போக்குச் சொல்லி கழன்று விடுகிறார்கள்... உண்மையான அன்பிற்கு விசுவாசம் இல்லாதவர்கள் கருத்திற்கு நன்றிங்க டத்தோ...
 

Image may contain: 1 person, smiling, text

Santhanam Baskaran இனிய வணக்கம் ஐயா.
இந்த புதன் இனிய நாளாக அனைவருக்கும் அமையட்டும்.
குறைகளை நீக்கி நிறைகளை மட்டுமே காண்போம். அன்பு செய்வோம்.