14 ஜூலை 2019

பரமேஸ்வரா - சீனா அஞ்சல் தலையில்

1985-ஆம் ஆண்டு செங் ஹோவின் 580-ஆம் ஆண்டு நினைவு நாள். அதை முன்னிட்டு சீனா அரசாங்கம் செங் ஹோவிற்காகச் சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு செய்தது. அந்த அஞ்சல் தலையில் பரமேஸ்வராவின் படம் காட்சிப் படுத்தப் பட்டு உள்ளது. மகிழ்ச்சி தரும் செய்தி.



மலாக்காவைத் தோற்றுவித்தவர் மாமன்னர் பரமேஸ்வரா. 1402-ஆம் ஆண்டில் இருந்து 1414-ஆம் ஆண்டு வரை மலாக்காவை ஆட்சி செய்தவர். இவருக்கும் சீனாவுக்கும் நெருங்கிய அரச தந்திர உறவுகள் இருந்தன. பரமேஸ்வரா காலத்தில் சீனாவின் கடல்படை தளபதி செங் ஹோ (Zheng He) மலாக்காவிற்கு மூன்று முறைகள் வந்து இருக்கிறார்.

(Images of four stamps printed by photo gravure, and issued by China (PRC) on July 11, 1985 to commemorate the 580th anniversary of Zheng He's sea expeditions, Scott Nos. 1992-95.)

1400-ஆம் ஆண்டுகளில் பரமேஸ்வரா இரு தடவைகள் சீனாவிற்குப் பயணம் செய்து இருக்கிறார். அவரின் சீனப் பயணத்தின் போது செங் ஹோ (Zheng He); இன் சிங் (Yin Qing) ஆகிய இருவரும் துணையாக இருந்து இருக்கிறார்கள்.




1411-ஆம் ஆண்டு பரமேஸ்வராவும் அவருடைய மனைவியும் 540 அரசாங்க அதிகாரிகளுடன் சீனாவிற்கு முதல்முறையாகச் சென்று இருக்கிறார். யோங் லே (Yongle Emperor) மாமன்னரை மரியாதை நிமித்தம் கண்டு நட்புறவு பாராட்டி இருக்கிறார். நான்கிங் நகரில் பரமேஸ்வரா (Nanjing) இரு மாதங்கள் தங்கி இருக்கிறார்.

(சான்று: http://eresources.nlb.gov.sg/infopedia/articles/SIP_1540_2009-07-06.html)

யோங் லே மாமன்னர் பரமேஸ்வராவைப் பாராட்டிப் பேசினார். பரமேஸ்வரா தான் மலாக்காவின் உரிமைமிகு ஆட்சியாளர் என ஏற்றுக் கொண்டார். சீனாவின் அங்கீகாரமாகச் சின்னமாகச் சீன நாட்டு முத்திரை; சீன நாட்டுப் பட்டுத் துணி; சீன நாட்டு மஞ்சள் குடை அன்பளிப்பாக வழங்கப் பட்டன.




பரமேஸ்வரா தான் மலாக்காவின் உரிமை மிக்க ஆட்சியாளர் எனும் அதிகாரப் பூர்வமான கடிதமும் பரமேஸ்வராவிடம் வழங்கப் பட்டது. அதன் பின்னர் மலாக்கா ஒரு சிற்றரசு எனும் தகுதியைப் பெற்றது. அந்தத் தகுதியை வழங்கியவர் சீன நாட்டு மாமன்னர் யோங் லே. அங்கீகாரம் வழங்கப்பட்ட ஆண்டு 1411. [1]

மலாக்காவிற்குத் திரும்பி வரும் போது பரமேஸ்வராவிற்குத் துணையாகச் சீனக் கப்பல் படைத் தலைவர்களும் கூடவே வந்து இருக்கின்றார்கள். ஒருவர் செங் ஹோ (Admiral Cheng Ho). இன்னொருவர் இங் சிங் (Admiral Ying Ching). இருவரும் தனித்தனிக் காலக் கட்டங்களில் மலாக்காவிற்கு வந்து போய் இருக்கிறார்கள். [2]

ஆக சீனா - மலாக்கா தூதரக உறவுகளினால் மலாக்கா பேரரசிற்குச் சீனா ஒரு பாதுகாவலராகவே இருந்து இருக்கிறது.




சீனாவின் மிங் அரச வம்சாவளியினர் மலாக்காவிற்குப் பாதுகாப்பு வழங்கினார்கள். அதனால் மலாக்காவிற்கும் சீனாவிற்கும் அரச தந்திர உறவுகள் மேம்பாடு கண்டன. இந்த அரச தந்திர உறவுகள் வெளிநாட்டவரின் தாக்குதல்களையும் தவிர்த்தன.

குறிப்பாக சயாம் நாடும் மஜபாகித் பேரரசும் மலாக்காவின் மீது தாக்குதல் நடத்தி அதைக் கைப்பற்றிக் கொள்ள காத்து இருந்தன. சீனா - மலாக்கா நல்லுறவுகளினால் அந்தத் தாக்குதல்கள் நடைபெறாமல் போயின. மலாக்காவில் அமைதி நிலவியது. அதனால் மலாக்கா ஒரு முக்கிய வணிகக் கேந்திரமாக விளங்கியது.

1405-ஆம் ஆண்டு இன் சிங் தூதர் மலாக்காவிற்கு அனுப்பப் பட்டார். மலாக்கா ஆளுநருக்கு தங்கப் பட்டுப் பின்னல்; தங்கத்தினால் பின்னப்பட்ட ஒரு முகத்திரை வழங்கப்பட்டது.

இன் சிங் தூதர் மலாக்காவிற்குச் சென்ற போது அங்கே ஒரு சாம்ராஜ்யம் அமைக்கப்படவில்லை. மலாக்காவில் ஒரு நிரந்தரமான மன்னரும் இல்லை. ஆண்டுதோறும் சயாமிற்கு 40 தங்கக் கட்டிகள் வரிப் பணமாக வழங்கப் படுகிறது.

இன் சிங் தூதரைக் கண்டு மலாக்காவின் தலைவர் பாய்-லி-மி-சுலா (Pai-li-mi-su-la) அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார். பரமேஸ்வராவை சீனாவிற்கு அழைத்து வந்தார். அவரைச் சீன மாமன்னர் வெகுவாகப் பாராட்டினார்.




மான்-லா-காவின் (Man-la-ka) மன்னராக்கிப் பெருமை செய்தார். அவருக்குச் சீன அரசு முத்திரை; வண்ணம் தோய்ந்த பணத் தாட்கள்; ஓர் ஆடை ஆபரண பெட்டகம்; மஞ்சள் நிற மாட்சிமைக் குடை வழங்கப்பட்டது.



அதற்கு நன்றி கூறிய மலாக்காவின் தூதர் மன்னர் பரமேஸ்வரா மகிழ்ச்சி அடைகிறார். ஆண்டுதோறும் அன்பளிப்பு வழங்க சம்மதிக்கிறார். மலாக்கா அரசிற்கு சாம்ராஜ்யம் எனும் தகுதி வழங்கப்பட வேண்டும் என்பதே அவரின் தாழ்மையான வேண்டுகோள். மலாக்கா ஒரு சாம்ராஜ்யமாகக் கருதப்படுகிறது எனும் அரசக் கவிதை பொறிக்கப்பட்ட ஒரு கல்வெட்டு வழங்கப் பட்டது. 

சீன நாட்டு அரச தந்திர உறவுகளில் பரமேஸ்வரா காட்டிய அணுக்கத்தின் காரணமாக செங் ஹோ அஞ்சல் தலையில் பரமேஸ்வராவின் உருவம் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.


பரமேஸ்வரா வரலாற்று ஆய்வு நூலில் இந்தத் தகவல் இடம்பெற்று உள்ளது.

சான்றுகள்:

1. http://www.epress.nus.edu.sg/msl/ - Wade, Geoff (2005), Southeast Asia in the Ming Shi-lu: an open access resource, Asia Research Institute and the Singapore E-Press, National University of Singapore - பக்கம்: 786

2. Ming Shilu known as the Veritable Records of the Ming dynasty - http://www.epress.nus.edu.sg/msl/introduction

இன்றைய சிந்தனை 26.06.2019 - வாழ்க்கை விடுகதை

வாழ்க்கை என்பது விடை இல்லாத விடுகதை. 

 Image may contain: 1 person

 ஆரம்பமும் இல்லை. முடிவும் இல்லை.
 
நம்பிக்கை எனும் துடுப்பில் இலக்கு தெரியாமல் நகர்ந்து கொண்டு இருக்கிறோம்.  கூட்டிக் கழித்துப் பார்த்தால் வாழ்க்கை ஒரு புரியாத புதிர்.


காலையில் எழுந்ததும் நமக்குத் தெரிந்தவர்களிடம் வணக்கம் சொல்கிறோம். அதே போல நமக்கு முன்பின் தெரியாதவர்கள் இந்த ஊடகங்கள் வழியாக ஒரு வகையில் நண்பர்கள் ஆகிறார்கள்...

கால ஓட்டத்தில் உறவினர்கள் ஆகிறார்கள்.. நம்முடைய வாழ்க்கையில் ஓர் அங்கமாக மாறியும் போகிறார்கள்... அவர்களுக்கு் வணக்கம் சொல்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். உவகை பூக்கிறது.

ஆனால் காலை வணக்கம், மாலை வணக்கம் என்பதற்குப் பதிலாக வணக்கம் என்று ஒரே சொல்லில் சொன்னால் போதும். அந்த வணக்கம் காலத்தையும் கடந்து போகிறது என்பது என் தனிப்பட்ட கருத்து.



Sathya Raman வணக்கம் சார், சமீபத்தில் ஆய்வில் அறிவிக்கப் பட்டது. உலகிலேயே தமிழர்கள் தான் மிக அதிகமாக "காலை வணக்கம்" பதிவுகளை பகிர்ந்து கொள்கிறார்களாம்.🙏
 
 
Muthukrishnan Ipoh அந்த ஆய்வைச் செய்த யார் என்று சொன்னால் சற்று ஆறுதலாக இருக்கும் சார்...

நாள் ஒன்றுக்கு உலகம் முழுமைக்கும் 500 - 600 கோடி செய்திகள் கைப்பேசிகள் மூலமாகப் பகிர்ந்து கொள்ளப் படுகின்றன...


அந்தச் செய்திகளை ஒருவர் படித்து முடிக்க வேண்டும் என்றால்... ஒரு நாள் செய்திகள் மட்டும்... ஆயிரம் ஆண்டுகள் பிடிக்குமாம்... இப்படி இருக்கும் போது “காலை வணக்கம்” ஆய்வு நடந்து இருப்பது பெரிய விசயம் தான்...
 
 
Sathya Raman சில மாதங்களுக்கு முன்பு பிரபலமான தமிழக தொலைக்காட்சி தமிழ் செய்தியில்தான் இந்த தகவலை நானும் கேட்டேன் சார்.செய்தியில் கூறப்பட்ட தகவல் என்பதால் நம்ப வேண்டியதாகிறது சார்.
 
 
Muthukrishnan Ipoh இருக்கலாம். அவர்களுக்கு எப்படி தகவல் கிடைத்தது என்று நமக்குத் தெரியாது ஐயா...
 
 
Sathya Raman வணக்கம் சார், தங்களின் எழுத்துப் பதிவுகளை நீண்ட காலம் அறிந்து வந்துள்ளேன். தங்களைவிட வயதிலும் குறைந்த பெண் நான். எண்பது, தொன்னூறுகளில் பகாங் சத்தியா என்ற பெயரில் பத்திரிகைகளுக்கு எழுதி வந்துள்ளேன் சார். இடையில் நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் படைப்பிலக்கியத் துறையைப் பார்த்து படித்து வருகிறேன் சார். ஆகவே நான் ஒரு பெண்.
 
 
Muthukrishnan Ipoh Sathya Raman பகாங் சத்தியா... நீங்க தானா... நீண்ட நாட்களாக எழுத்துத் துறைப் பக்கம் காணவில்லை... ஒரு காலத்தில் நாளிதழ்களிலும் வானொலியிலும் உங்கள் படைப்புகளைப் பார்த்து படித்து இருக்கிறோம்... தொடர்ந்து எழுதுங்கள்... நன்றி.
 
 
Manickam Nadeson வாழ்க்கைக்கு விடை உண்டு ஐயா சார், ஆமாம் வாழ்க்கையை வாழ்ந்து பாருங்கள், இன்ப துன்பங்களை ரசித்து அனுபவியுங்கள். அங்கே இருக்கிறது விடை.
 
 
Santhanam Baskaran உண்மைதான். அர்த்தமற்ற பயணம். அதில் ஓர் அர்த்தத்தைத் தேடும் முயற்சிதான் வாழ்க்கையோ!
 
 
Manickam Nadeson வாழ்க்கை உண்மையிலேயே அர்த்தமுள்ளது, அதை அனுபவிப்பவர்களுக்குத் தான் தெரியும் அதன் அருமையும் பெருமையும். வாழுங்கள்.
 
 
 Image may contain: text
 
 
 
 
 
 
 
  Image may contain: indoor

ஹெலன் கெல்லர் பிறந்த நாள் - 27.06.1880

அதிசயமே அதிசயித்துப்போகும் அசாத்திய சாதனைப் பெண்மணி. பிறந்த பத்தொன்பது மாதங்களி‌ல் பேசுகின்ற, பார்க்கின்ற, கேட்கின்ற சக்தியைப் பறிகொடுத்த ஒரு பச்சைத் தளிர். பசுமை மாறாத அந்த பச்சைக் குழந்தை எடுத்து வைத்த ஒவ்வோர் அடியிலும் போராட்டங்களின் சப்த நாடிகள். 
 
 Image may contain: 1 person, text that says 'ஹெலன் கெல்லர்'

ஆல் போல் தழைத்தார். அருகு போல் வேர் வளர்ந்தார். விருச்சகமாய் உயர்ந்து போனார். அப்படியே இமயத்தில் சிகரம் வைத்தார். 

தன்னம்பிக்கையின் ஒளியாய்ப் பிரகாசித்துக் காட்டினார். விதி எந்த அளவுக்குப் பின்னுக்கு இழுத்தாலும் அதையே பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னுக்குப் போய் போராடிக் காட்டியவர் ஹெலன் கெல்லர்.

பொழுது விடிவதற்குள் செத்துப் போய்விட வேண்டும் எனும் கொடிய வேதனையில் வதைபட்ட அந்தக் குழந்தை வானத்தையே வசப் படுத்தியது. உலக மக்களையே திரும்பிப் பார்க்க வைத்தது.

கண் பார்வை இல்லாமலும், காது கேளாமாலும் கெல்லர் பட்ட சிரமங்களை விடவா உங்கள் பிரச்சினை பெரிசு. சொல்லுங்கள்.

கண்கள் இருந்தும் இல்லாமல்; காதுகள் இருந்தும் இல்லாமல்; ஹெலன் கெல்லரால் இத்தனைச் சாதிக்க முடிந்தது என்றால் நமக்கு தடையாக இருப்பது எதுவுமே இல்லை. தெரிந்து கொள்ளுங்கள்.

நமக்கு ஏற்படும் தடைகளை உடைத்து எறிய வேண்டும் என்றால் ஹெலன் கெல்லரை நினைத்துக் கொள்ளுங்கள்.

அந்த அபூர்வச் சிகாமணி நம் காதுகளில் சொல்லும் இரண்டு வார்த்தை மந்திரம் என்ன தெரியுங்களா. தன்னம்பிக்கை, விடாமுயற்சி.

முயற்சி செய்யும் வரை தான் நாம் எல்லாம் மனிதர்கள். முயற்சி இல்லை என்றால் நாம் மனிதர்களே அல்ல.

தன்னம்பிக்கை; விடாமுயற்சி; இந்த இரண்டையும் உணர்வுப் பூர்வமாக பின்பற்றும் எவருக்கும் வானம் வசப்படும். நீங்கள் வசப்படுத்த விரும்பும் வானத்தில் மகிழ்ச்சியாக சிறகடித்துப் பறக்க என்னுடைய வாழ்த்துக்கள்.

இன்றைய சிந்தனை 04.07.2019 - தவறுகளை மறப்போம்

தவறுகள்தான் நமக்கு புதிய அனுபவங்களைத் தருகின்றன.... அந்தப் புதிய அனுபவங்கள் தான் புதிய தவறுகளைக் குறைக்கச் செய்கின்றன...

Image may contain: shoes and text

தவறுகளை மறப்போம்... தவறு செய்தவர்களை மன்னிப்போம்... அதுவே மனுக்குலத்தின் நியதி...

.............
  • Manickam Nadeson அனுபவப் பாடம் ஒருவர திருந்துவதற்கு தான், ஆனால் ஒரு சிலர் என்ன தான் அனுபவ பாடம் கற்றாலும் திருந்தவதே இல்லை, செய்த தவற்றை மீண்டும் மீண்டும் தொடர்வதே, வேதனையாக இருக்கிறது.
     

    •  
       
       
      • Melur Manoharan
        காலை வணக்கம்...!
      • Image may contain: bird and text

         
        • மன்னிப்பதும் மறப்பதும்மட்டுமல்ல மன்னிப்பை ஏற்றுக்கொள்வதும் மனித மாண்பு.

இன்றைய சிந்தனை 05.07.2019 - மனிதர்கள் நிறம் மாறலாம்

மனிதர்கள் சிலநேரம் நிறம் மாறலாம்!
மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்!
இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்!
எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்!
ஒரு வாசல் மூடி... மறுவாசல் வைப்பான்
இறைவன்... இறைவன்...

Image may contain: 1 person, standing and outdoor

ஓவியம்: உலகப் புகழ் ரவி வர்மா...
 
 .............................................

Manickam Nadeson நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துகள். முழு பாடலும் இங்கே. https://www.youtube.com/watch?v=JjRs0KjYzbo