09 செப்டம்பர் 2019

உலக மக்கள் தொகை நாள்

இன்று உலக மக்கள் தொகை நாள் (World Population Day). உலக மக்கள் தொகை குறித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஐ.நா. சபை தோற்றுவித்த நாள். 2009-ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 7,024,000,000. அதாவது ஏழு பில்லியன்.


இன்று 11.07.2019 மாலை 4.00 மணிக்கு உலக மக்கள் தொகை 7,716,834,712. கடந்த பத்து ஆண்டுகளில் 700 மில்லியன் கூடி இருக்கிறது. 2050-ஆம் ஆண்டில் 8 முதல் 10.5 பில்லியன் வரை கூடிச் செல்லும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

1990-ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் உலகின் பிறப்புகள் வருடத்திற்கு 173 மில்லியனாக இருந்தது. 2010-ஆம் ஆண்டுகளில் 140 மில்லியன் என்ற அளவில் குறைந்து இருக்கிறது.
மக்கள் தொகை விழிப்புணர்வு முன்னெடுப்புகளினால் 30 பில்லியன் பிறப்புகள் குறைந்து உள்ளன. சற்றே மன நிறைவு அளிக்கிறது.

இறப்புகள் என்று எடுத்துக் கொண்டால் இப்போது ஆண்டிற்கு 57 மில்லியன் இறப்புகள். ஆனால் 2050-ஆம் ஆண்டு வாக்கில் இறப்பு விகிதம் ஆண்டிற்கு 90 மில்லியனாக உயரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.


இறப்புகளின் எண்ணிக்கையைப் பிறப்புகளின் எண்ணிக்கை மிஞ்சி விட்டது. அதனால் உலக மக்கள் தொகையானது 2050-ஆம் ஆண்டு வாக்கில் 8 முதல் 10.5 பில்லியன் வரை எட்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

ஒவ்வொரு விநாடி நேரத்திலும் 2 புள்ளி 582 எனும் விகிதத்தில் குழந்தைகள் பிறக்கின்றன. அந்த வகையில் ஒரு நாளைக்குச் சராசரியாக 223,098 குழந்தைகள் பிறக்கின்றன. ஒரு வருடத்திற்கு 81,430,910 என்று பிறப்புத் தொகை அதிகரித்துச் செல்கின்றது.


இன்றைய 20-ஆம் நூற்றாண்டில் மக்கள் தொகை உயர்விற்குக் காரணம் மருத்துவ முன்னேற்றம்; பசுமைப் புரட்சி; விவசாய உற்பத்திப் பெருக்கம். அதனால் பல நாடுகளில் இறப்பு விகிதம் குறைந்தது.

இன்றைக்கு (11.07.2019) மாலை 4.32 வரை இறந்தவர்களின் எண்ணிக்கை 111,577. பிறந்தவர்களின் எண்ணிக்கை மாலை 4.34 வரை 266, 528.

அப்படி என்றால் இன்றைக்கு ஒருநாள் மாலை 4.30-க்குள் மட்டும் உலக மக்கள் தொகை 150,000 அதிகரித்து இருக்கிறது.


இந்த மாதிரி பெற்றுத் தள்ளிக் கொண்டு போனால் இன்னும் ஒரு நூற்றாண்டில் பூமாதேவி தாங்க மாட்டார். அவரும் ஏதாவது ஒரு முடிவுக்கு வரலாம். என்ன சொல்கிறீர்கள்?

மேற்சொன்ன புள்ளி விவரங்களை Current World Population எனும் இணையத் தளத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். அதன் முகவரி:

https://www.worldometers.info/world-population/


...........................
பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள் 



Neela Vanam ஐயா... உங்களுடைய பதிவைப் பார்த்தேன். உலகத்தில் மக்கள் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. கூடவே எல்லா பிரச்சனைகளும் அதிகமாகின்றன.  இதற்குப் பரிகாரம் என்ன? ஒவ்வொரு நாடும் சட்டத்தின் மூலம் பிறப்பு விகிதத்தைக் குறைப்பது... அதாவது சீனா நாட்டைப் போல...  குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள விரும்பும் தம்பதியினர் மனம் வைத்தால் முடியும். இப்போது உள்ள நிலைமையில் அதிகமாகப் பெற்றுக் கொண்டு காலம் எல்லாம் கஷ்டப் பட வேண்டுமா?
 
 
Santhanam Baskaran இது 5 ஆண்டுகளுக்கு முந்தைய புள்ளி விவரம்.
 
 Image may contain: text
 
 
 
 

இன்றைய சிந்தனை 11.07.2019 - பெண்ணின் அழகு

ஓர் ஆணைப் பொறுத்த வரையில் ஒரு பெண்ணின் அழகு என்பது அவனுடைய மனம் சார்ந்தது. ஆயிரம் கிளியோபாட்ராக்கள் வரலாம். ஆயிரம் சம்யுக்தாக்கள் வரலாம். ஆயிரம் ஐஸ்வர்யாக்கள் வரலாம்.

எவர் வந்தாலும் ஓர் ஆணின் மனதில் புதைந்து இருக்கும் பெண் மட்டுமே அழகாகத் தோன்றுவாள். அதுவே அழகின் ஆராதனை.

கங்கை, காவேரி, சிந்து, யமுனா, சரஸ்வதி, நர்மதா, சுபர்ணா, மேகனா, சபர்மதி என பெண்களின் பெயர்கள் நதிகளுக்கு வைக்கப் பட்டதும் அழகின் ஆராதனைகளே!


...........................
பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்  


Manickam Nadeson அப்புறம் ஏன் ஐயா சார், ஐஸ்வர்யா ராயை எல்லாரும் உலக அழகின்னு சொல்லுறாங்க?? ஏன் நானும் தான் சொல்லுறேன். இதுக்கு நீங்க தான் சரியான பதில தரணும்...
 
 
Muthukrishnan Ipoh எது சரியாக படுகிறதோ அதுதான் சரிங்க... என் கண்களுக்கு ஐஸ்வர்யா அழகாகத் தெரியவில்லை... அன்னை திரேசா தான் அழகாகத் தெரிகிறார்... அனைத்தும் நம் உள்பார்வையைப் பொறுத்தது சார்...
 
 
Abdul Zabar ஆண் என்பவன் பெண்ணுள் அடக்கம். தன்னுள் ஒரு பகுதி அவளாவால்... பிறப்பும் அவளால்... பிறந்த பின் சிறப்பும் அவளால்... என்பதே உண்மை.
 
 
Muthukrishnan Ipoh அனைத்தும் பெண்கள் தான்... ஆனால் அவளை இயக்குவது ஓர் ஆண் தானே... என்னைக் கேட்டால் ஆண் இல்லாமல் பெண் இல்லை... பெண் இல்லாமல் ஆண் இல்லை... இந்த இரு பாலாரும் இணைந்து இயங்குவதால் தான் இந்த உலகமே இயங்குகிறது...
 
 
Arjunan Arjunankannaya இப்போது தமிழில் முக நூல் ஒவ்வொரு நாளும் அருமையாய் இருக்கிறது ஐயா உங்கள் வரவால்...
 
 
Moon Noom அழகில் மயங்குவது ஆண் வீரத்தில் மயங்குவது பெண் தானே
 
 
Muthukrishnan Ipoh உண்மை தான்... ஆனால் ஆணின் வீரம் அவனுடைய உடல் வலிமையில் அல்லவே... மன வலிமையிலும் அறிவு வனத்திலும் தான் உள்ளது.
 
 
Manikam Kuppusamy இது முற்றிலும் உண்மை ஐயா நன்றி, வாழ்த்துகின்றேன்
 
 
Ramaiah Paidiah மனைவியின் சமையல்... சுத்தமான கை சமையல்... அந்த அற்புத கைகளுக்கு முத்தம் தந்து வாழ்த்து சொல்லுவோம்... வாழ்க இனிய உறவு !!
- *ராம் ராமைய்யா* செலாயாங்.
 
 
Guna Shan நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை நண்பரே
 
 
Sri Kaali Karuppar Ubaasagar ஆஹா... அண்ணா..மறுபடி இன்னொரு  திருவிளையடலா??
 
 
 
No photo description available.
 
 
Yogavin Yogavins Wow super sir
 
 
 
 
Image may contain: 1 person, smiling, text 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இன்றைய சிந்தனை 10.07.2019 - நமக்காக நாம் வாழ்வோம்

ஒருவருக்கு நாம் ஆயிரம் உதவிகள் செய்து இருக்கலாம். ஆனால் ஒரு முறை அவர் நம்மிடம் ஒரு குறையைக் கண்டுபிடித்து விட்டால்... அந்தக் கணத்தில் இருந்து நாம் செய்த உதவிகளை எல்லாம் அவர் மறந்து விடுவார்.


இது தான் உலகம். ஆக மற்றவர்களுக்காக நாம் வாழ வேண்டாம். நமக்காக நாம் வாழக் கற்றுக் கொள்வோம்.

............................
பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்


Raghavan Raman ஒருவர் நம்மை மறப்பதற்கு நாம் தவறு செய்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. என்று ஒருவர் தனக்கு உங்களால் இனி எதுவும் கிடைக்காது என்று உணர்கிறாரோ அன்றே உங்களை மறந்து விடுவார். பெரும்பாலும் இது தான் இன்றைய நிலை.
 
 
Muthukrishnan Ipoh உண்மைதான்... இனி எந்த நன்மையும் இல்லை என தெரிய வந்ததும் ஏதாவது ஒரு சாக்கு போக்குச் சொல்லி கழன்று விடுகிறார்கள்... உண்மையான அன்பிற்கு விசுவாசம் இல்லாதவர்கள் கருத்திற்கு நன்றிங்க டத்தோ...
 
 
Muthukrishnan Ipoh வணக்கம்... வாழ்த்துகள்... ஐயா... தாங்கள், தேவராஜ், அடியேன் மூவரும் மயில் வார இதழின் ஆசிரியர் பகுதியில் பணி புரிந்த இனிய நினைவுகள்... இன்னும் பயணிக்கின்றன...
 
 
M R Tanasegaran Rengasamy அந்த இனிய நினைவுகள்... கலையாத மேகங்கள் ...தூவும் மழைத்துளி போல்... நெஞ்சை குளிர்விக்கும்... அதுவொரு வரம்... நன்றி சார்.

 

காப்பியனை ஈன்றவளே

காப்பியனை ஈன்றவளே!
காப்பியங்கள் கண்டவளே!
கலைவளர்த்த தமிழகத்தின்
தலைநிலத்தில் ஆள்பவளே!
தாய்ப்புலமை யாற்புவியில்
தனிப்பெருமை கொண்டவளே!
தமிழரொடு புலம்பெயர்ந்து
தரணியெங்கும் வாழ்பவளே!
நிலைபெறநீ வாழியவே!  நிலைபெறநீ வாழியவே! 


எங்களெழில் மலைசியத்தில்
சிங்கைதனில் ஈழமண்ணில்
இலக்கியமாய் வழக்கியலாய்
இனக்காவல் தருபவளே!
பொங்கிவளர் அறிவியலின்
புத்தாக்கம் அத்தனைக்கும்
பொருந்தியின்று மின்னுலகில்
புரட்சிவலம் வருபவளே!

செவ்வியலின் இலக்கியங்கள்
செழித்திருந்த பொற்காலம்
சேர்த்துவைத்த செயுள்வளத்தில்
செம்மாந்த பழையவளே!
அவ்வியலில் வேரூன்றி
அறிவுயர்ந்த தற்காலம்
அழகழகாய் உரைநடையும்
ஆளுகின்ற புதியவளே!

குலங்கடந்து நெறிகடந்து
நிலவரம்பின் தடைகடந்து
கோமகளாய்த் தமிழர்மனம்
கொலுவிருக்கும் தமிழணங்கே!
நிலவினுக்கே பெயர்ந்தாலும்
நினதாட்சி தொடருமம்மா.....
நிலவினுக்கே பெயர்ந்தாலும்
நினதாட்சி தொடருமம்மா!
நிறைகுறையாச் செம்மொழியே! 

நிலைபெறநீ வாழியவே!  நிலைபெறநீ வாழியவே!

ஆக்கம்: கவிஞர் சீனி நைனா முகம்மது
இசை: ஆர்.பி.எஸ்.ராஜூ
குரல்: துருவன், பாபு லோகநாதன்
காணொளிப்பதிவு : சேரன் குமரன் (மலேசியா)

 

...........................
பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்



Nantha Kumaran நிலைபெறநீ வாழியவே... நிலைபெறநீ வாழியவே...
 
 
Doraisamy Lakshamanan தொல்காப்பியத் தொண்டர் உலக மக்களால் நினைவு கூறும் தமிழ் வாழ்த்துப்பா! வாழ்க சீனி ஐயா புகழ் வையகமெங்கும்!
 
 
Manickam Nadeson அதுவே நமது அழகு தமிழ், அற்புத தமிழ். சரிங்களா ஐயா சார்.
 
Sri Kaali Karuppar Ubaasagar கன்னி தமிழே நீ வாழ்க🙌
 
 
 





இன்றைய சிந்தனை 08.07.2019 - அலெக்ஸ்சாண்டர் எடுக்கும் முடிவு

நான் எடுக்கும் முடிவு சரியா என்று எனக்கு தெரியாது. 
ஆனால் எடுத்த முடிவை சரியாக்குவேன் - Alexander the Great


மனித உயிர் விலை மதிப்பற்றது. அதனை இழப்பது என்றால் அது உன் நாட்டிற்காக மட்டுமே இருக்க வேண்டும் என்று சொன்னவர் அலெக்ஸாண்டர்.

........................
பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்


Manickam Nadeson அது அலெக்ஸாண்டர் சொன்னது, நீங்க என்னா சொல்ல வர்ரீங்க ஐயா சார்
 
 
Muthukrishnan Ipoh நான் நினைத்ததை அவர் சொல்லிட்டாரு... வேறு என்னங்க நான் சொல்ல...
 
 
Manickam Nadeson அதானே, அலெஸ்சாண்டர் எப்படி தானா சொல்லி இருக்க முடியும், இப்படி சூப்பரா சொல்ல உங்கள தவிர வேறு யாரால முடியும். நன்றி ஐயா சார்.
 
 
பாரதி கண்ணம்மா அருமையான வார்த்தைகள் 🙏
 
 
Doraisamy Lakshamanan முயற்சி திருவினையாக்கும் என்பதே வள்ளுவம்...
வெற்றியே தங்களுக்கு! வாழ்த்துக்கள் ஐயா...
 
 
Muthukrishnan Ipoh உண்மை வாசகம் ஐயா... முயற்சியை மட்டும் கைவிடவே கூடாது... யார் உங்களைக் கைவிட்டாலும் முயற்சியை மட்டும் இறுக்கமாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்... முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்...
 
 
Muthukrishnan Ipoh தஞ்சை பெரிய கோயில்... ஓர் உலக அதிசயம்... இதை உலகின் எட்டாவது அதிசயமாகச் சேர்க்க வேண்டும்...
 
 
Sheila Mohan  காலை வணக்கம் சார்..தன் முனைப்பு வாசகம். நன்றிங்க சார்... 
 
 
Muthukrishnan Ipoh உலக சரித்திரத்தில் அலெக்ஸாண்டரைப் போல் வேறு ஒரு மாவீரன் கிடையாது என்பதால் தான் அவரை அலெக்ஸாண்டர் தி கிரெட் என்று இன்றும் நினைவில் வைத்து இருக்கிறது வரலாறு.
மாவீரன் அலெக்ஸாண்டர் கி.மு 323-ஆம் ஆண்டு ஜூன் 10-ஆம் தேதி தன் 33-ஆவது வயதில் காலமானார். இந்த உலகமே தனக்கு போதாது என்று சொன்னவருக்கு ஆறடி நிலமே போதுமானதாக இருந்தது என்று அலெக்ஸாண்டரை வருணிக்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து.

அலெக்ஸாண்டர் பேராசைக்காரன் என்ற
பொருளை அந்த வரிகள் தந்தாலும் நாம் அந்த மாவீரனின் மறுபக்கத்தையும் பார்க்க வேண்டும். அவர் ஒட்டுமொத்த உலகையும் வெல்ல நினைத்தது உண்மைதான்.

ஆனால் வெற்றிகள் பல குவிந்தபோதும் அலெக்ஸாண்டர் அகம்பாவமோ ஆணவமோ கொள்ளவில்லை. மாறாக தான் கைப்பற்றிய தேசங்களையும் மன்னர்களையும் வீரர்களையும் கண்ணியமாக நடத்தினார் என்றுதான் வரலாறு கூறுகிறது.

உலக சரித்திரத்தில் அலெக்ஸாண்டரைப்போல் வேறு ஒரு மாவீரன் கிடையாது என்பதால் தான் அவரை அலெக்ஸாண்டர் தி கிரெட் என்று நினைவில் வைத்திருக்கிறது வரலாறு.

அப்படிப்பட்ட மாவீரனுக்கு வீரம் பலத்தை தந்தது. விவேகம் புகழைத் தந்தது. வீரமும் விவேகமும் அலெக்ஸாண்டரிடம் இருந்ததால் தான் அவருக்கு அந்த வானமும் வசப் பட்டது. இந்த நியதி நமக்கும் நிச்சயம் பொருந்தும்.

அலெக்ஸாண்டரைப் போல் நமக்கு வீரமும் விவேகமும் இல்லை என்றாலும் நாம் எண்ணுகின்ற இலக்கினை நோக்கி விடாமுயற்சியோடும் கடின உழைப்போடும் போராடினால் நமக்கும் அந்த வானம் வசப்படும்.

நன்றி: யாழ்அன்பு, August 5, 2012
 
Image may contain: 1 person