14 செப்டம்பர் 2019

மலேசிய இந்தியர்கள் தியாகிகளா?

மலேசிய இந்தியர்களின் மூதாதையர் தியாகிகளா? அல்லது கூலிக்கு மாரடித்தவர்களா? 

அண்மைய காலங்களில் சமூக ஊடகங்களில் பரவலாகி வரும் ஒரு கேள்வி.

இப்போதைய மலேசிய இந்தியர்களின் மூதாதையர் தியாகிகள் என்பதை ஒரு சாரார் ஆதரிக்கிறார்கள். மறு சாரார் மறுக்கிறார்கள். தியாகிகள் என்று சொல்பவர்கள் சிலரின் கருத்துகள் ரொம்பவுமே அழுத்தமானவை. உணர்வுகளைக் கொப்பளிக்க வைக்கும் பதிவுகள். அவற்றைப் பின்னர் பார்ப்போம்.




மலேசிய இந்தியர்களின் மூதாதையர் தியாகிகள் அல்ல. அவர்கள் கூலிக்கு மாரடித்தவர்கள் என்று சொல்பவர்கள் என்ன மாதிரியான காரணங்களைச் சொல்கிறார்கள் என்பதை முதலில் பார்ப்போம்.

மலேசிய இந்தியர்களின் மூதாதையர் கூலி வேலை செய்வதற்காக மலாயாவுக்கு அழைத்து வரப் பட்டவர்கள். செய்த வேலைக்கு அவர்கள் கூலி வாங்கினார்கள். அதாவது வாங்கிய கூலிக்கு வஞ்சகம் இல்லாமல் வேலை செய்தார்கள்.

ஆகவே செய்த வேலைக்கு கூலி வாங்கியவர்களைத் தியாகிகள் என்று எப்படிச் சொல்ல முடியும் என்று வாதிடுகிறார்கள்.

கூலிக்கு வேலை செய்தவர்களைத் தியாகி என்பதை எந்தக் கணக்கில் சேர்ப்பது. மலேசிய இந்தியர்கள் இந்த நாட்டின் குடிமக்கள். அந்த அடிப்படையில் தான் அவர்களுடைய கோரிக்கைகளும் இருக்க வேண்டும்.

மலேசிய இந்தியர்களின் மூதாதையர் வந்தார்கள்; வாழ்ந்தார்கள்; வீழ்ந்தார்கள். அப்படி இருக்கும் போது அவர்களை எப்படி தியாகிகள் என்று சொல்ல முடியும் என்று திருப்பிக் கேட்கிறார்கள்.




காட்டை வெட்டினோம், ரோட்டைப் போட்டோம், இரயில் பாதை போட்டோம் என்று இன்னும் எத்தனை நாளைக்குத் தான் சொல்லிக் கொண்டு இருக்கப் போகிறோம். எத்தனை முறைகளுக்குத் தான் அதையே திரும்பத் திரும்ப இராமாயணம் பாடிக் கொண்டு இருக்கப் போகிறோம்.

அப்படிப் பார்த்தால் சீனர்கள் நம்மை விட இந்த நாட்டின் வளர்ச்சிக்குப் அதிகமாகப் பாடு பட்டு இருக்கிறார்கள். நாம் இந்த நாட்டின் குடி மக்கள். நம் அடிப்படை உரிமைகளுக்குப் போராடும் குணம் தான் நமக்கு இப்போதைக்குத் தேவை என்றும் சொல்கிறார்கள்.

அமெரிக்கா நாட்டை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு காலத்தில் இங்கிலாந்து நாட்டின் காலனி நாடாக இருந்தது. இப்போது பாருங்கள். அமெரிக்கா ஒரு மாபெரும் வல்லரசு. ஆட்சி செய்த இங்கிலாந்து நாடே அடக்கி வாசிக்கிறது.




அமெரிக்கா என்பது உலகின் பல நாடுகளில் இருந்து புலம் பெயர்ந்தவர்கள் பலரும் ஐக்கியமாகிப் போன நாடு. அப்படிப் புலம் பெயர்ந்தவர்கள் அனைவரும்  இப்போது அந்த நாட்டின் குடி மக்கள்.

அமெரிக்கர்கள் எனும் அந்த ஒரே இன அடையாளத்தை வைத்துக் கொண்டு தன் அவர்கள் முன்னேறி வருகிறார்கள். உலகப் பொருளாதாரத்தை இறுக்கிப் பிடித்து உலகத்தையே ஆட்டிப் படைக்கிறார்கள்.

உலகப் போலீஸ்காரர் என்று பேர் எடுத்தாலும் கட்டப் பஞ்சாயத்து செய்து உகாண்டா இடி அமினையே மிஞ்சிப் போகிறார்கள். இது ஒருவரின் கருத்து. சரி. அந்தப் பக்கம் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

மலேசிய இந்தியர்கள் கூலிக்கு மாரடித்தவர்களா? யார் சொன்னது. எந்த விளக்கெண்ணெய் சொன்னது. என்னிடம் வரச் சொல்லுங்கள். நன்றாகக் கேள்வி கேட்டு அனுப்புகிறேன் என்று ஆத்திரம் ஆவியாகி கண்களில் அனல் பறக்க கொப்பளிக்கிறார் ஓர் அன்பர். பெந்தோங்கைச் சேர்ந்த எழுத்தாளர் பெந்தோங் சத்தியா ராமன். 1980-களில் மலேசியாவில் புகழ்பெற்ற எழுத்தாளர்.

சோறு போட்ட கைக்கு சூடு போடுகிறவர்கள் மலேசிய இந்தியர்கள் என்று சொல்லிக் கொள்ள கொஞ்சமும் லாயக்கு இல்லாதவர்கள் என்று குமுறுகிறார்.

அவரவர் கருத்துகளைச் சொல்ல அவரவருக்கு உரிமை உள்ளது. ஆனால் மலேசிய இந்தியர்கள் கூலிக்கு மாரடித்தவர்கள். அவர்கள் தியாகிகள் அல்ல என்று வம்சாவளி உணர்வு கொண்டவர்கள் எவரும் சொல்ல மாட்டார்கள். சொல்ல மனசும் வராது.




மலேசிய இந்தியர்கள் ஆயிரம் ஆயிரம் வேதனைச் சோதனைகளைக் கடந்து வந்தவர்கள். மலாயாத் தோட்டத் தமிழர்களின் சாதனைகளை உலக வரலாறு என்றைக்கும் மறக்காது. மறப்பதற்கு மனசும் வராது. எப்படி மறக்க முடியும். எப்படிங்க மறைக்க முடியும்.

மலாயா தமிழர்கள் இந்த மண்ணில் எத்தனையோ நூறாண்டுகளுக்கு முன்னரே கால் பதித்து விட்டார்கள். இது ஒரு வரலாற்று உண்மை. அது மட்டும் அல்ல. உலக வரலாற்றில் தவிர்க்க முடியாத உண்மையுங்கூட.

மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டிய நிலைமை. என்ன தான் வரலாற்றுப் படிவங்களைச் சிதைத்துப் போட்டாலும்; மறைத்துப் போட்டாலும்; மலாயாத் தமிழர்களின் வரலாற்று உண்மைகள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும். என்றைக்கும் அவை வரலாறு பேசும் வாய்மையான உண்மைகள்.

வரலாற்றை வரலாறாகப் பார்க்கும் பக்குவம் வேண்டும். வரலாற்றை வரலாறாகப் பார்க்கும் நல்ல எண்ணமும் வேண்டும். வரலாற்றை முறையாகப் படிக்காமல் அறியாமையில் சொல்வது மிகவும் தப்பு.




கடந்த 200 - 250 ஆண்டு காலமாக இந்த நாட்டிற்காக உழைத்த ஓர் இனத்தைச் சார்ந்தவர்களைத் தியாகிகள் என்று சொல்வதில் தப்பு இல்லை என்பதே என் கருத்து. கூலிக்கு மாரடித்தார்கள் என்று சொல்வது பெரிய தப்பு.

ஓர் அனைத்துலக விளையாட்டுப் போட்டியில் ஒரு வெள்ளிப் பதக்கம் அல்லது ஒரு தங்கப் பதக்கம் பெற்றவருக்கு டத்தோ விருது... 2 இலட்சம், 5 இலட்சம் ரொக்கம். மாதாந்திரப் பென்சனாக 2000 லிருந்து 3000. இதில் வீரர் தீரர் எனும் புகழ் மாலைகள். இரண்டு மூன்று வருட விளையாட்டு அனுபவத்தில் இத்தனைச் சலுகைகள்.

ஆனால் 100 - 200 வருடங்களாக உழைத்தவர்களுக்கு வீரர் பட்டம் வேண்டாங்க... வீர விருதும் வேண்டாங்க... ரொக்கமாக இலட்சம் ஆயிரங்கள் வேண்டாங்க... அவர்களின் உழைப்பிற்கு ‘தியாகிகள்’ எனும் ஓர் அடைமொழியைக் கொடுத்து விட்டுப் போகலாமே. அந்த அடை மொழிக்கு இப்படி ஒரு பெரிய ஆர்ப்பாட்டம் வேண்டாமே. அதற்கு வேறு சப்போர்ட். அட… சப்போர்ட் செய்வதற்கும் ஒரு விவஸ்தை வேண்டாமா.




இதிலும் கூடவா இன ஒதுக்கல்கள்... இன ஓர வஞ்சனைகள். மூதாதைய மலேசிய இந்தியர்களுக்குத் தியாகிகள் அடைமொழி வழங்கி அவர்களை நினைத்துப் பார்ப்பதில் என்னங்க தப்பு.

விதை சத்தம் இல்லாமல் முளைக்கிறது... மரம் சத்தத்தோடு முறிகிறது... அம்புட்டு தான்.

இந்த நாட்டில் இந்தியர் இனம் சில நூற்றாண்டுகளுக்கும் மேலாக சத்தம் இல்லாத விதைகளாய்த் தான் இருந்தார்கள். ஆனால் இப்போது ஏற்பட்டு உள்ள அரசியல் குளறுபடிகளைச் சலவை செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

தங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகளைக் கோரிக்கைகளாக முன் வைக்கிறார்கள். அதில் என்ன தப்பு. இடையில் புகுந்து மலேசிய இந்தியர்கள் கூலிக்கு மாரடிக்க வந்தவர்கள் எனும் ஜிங்கு ஜிக்கான் நாடகம் தேவையே இல்லை.

மலேசிய இந்தியர்களுக்குத் தியாகிகள் பட்டத்திற்குத் தோள் கொடுக்க விருப்பம் இல்லை என்றால் வாயை மூடிக் கொண்டு இருப்பதே சிறப்பு. வெந்த புண்ணில் பிளேடு போட்டு வேடிக்கை பார்க்காமல் இருந்தால் பெரிய புண்ணியம். 




தமிழ் ஆர்வலரும் சிந்தனையாளருமான ஸ்ரீ காளி கருப்பர் உபசாகர் 16.08.2019-ஆம் தேதி பேஸ்புக் ஊடகத்தில் பதிவு செய்த கருத்து:

சில பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே மலேசிய மண்ணில் தடம் பதித்து விட்ட உழைப்பாளிகள். இந்த நாட்டைப் பொன் விளையும் பூமியாக மாற்றிக் காட்டிய படைப்பாளிகள். அதை மறக்கலாமா? இந்த நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட்டுப் பல தியாகங்கள் செய்தவர்கள் மலேசிய இந்தியர்கள்.

எழுத்தாளர்  சத்தியா ராமன் மேலும் சொல்கிறார். முன்னுக்கு பின் முரணான சுய விளக்கம் ஒரு தெளிவு இல்லாத சிந்தனையைக் குறிக்கும். இந்த நாட்டு இந்தியர்கள் அவர்கள் செய்த வேலைக்கு மட்டும் கூலி பெற்று விட்டார்கள் என்று சொல்வது தப்பு. அவர்களைத் தியாகிகள் என்று முத்திரை குத்தக் கூடாது என்று சொன்னால் அது தப்பிலும் பெரிய தப்பு.




ஒருவர் ஆன்மீகவாதியாக இருக்கலாம். நாத்திகராக இருக்கலாம். பிரச்சினை இல்லை. ஆனால் இந்த நாட்டில் இந்தியர்கள் பட்ட அவலங்களின் மேல் அக்கறைக் காட்டாமல் இருப்பது பெரிய ஓர் அலட்சியப் போக்காகும்.

அதுவும் இல்லை என்றால் அரசியல் சார்பில் ஒரு பக்க வாதமாக இருக்கலாம். அப்படியும் இருக்கலாம். வேலைக்கு தகுந்த சம்பளம் கொடுக்கப் படுகிறது. இதில் என்ன தியாகி பட்டம் வேறு என்று வினா வைப்பது ரொம்பவும் தவறு.

காலை எட்டு மணிக்கு வேலைக்குப் போய் மாலை ஐந்து மணிக்கு வீடு திரும்புவர்களுக்கு வேண்டும் என்றால் மலேசிய இந்தியர்கள் கூலிக்கு மாரடித்தவர்கள் எனும் கூற்று பொருந்தி வரும்.

ஆனால் இந்தியாவில் இருந்து இங்கு ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அழைத்து வரப்பட்ட இந்தியர்களைக் கொத்தடிமைகளாகக் கொடுமைப் படுத்தினார்கள். 




அதிகாலை தொடங்கிச் சூரியன் மறையும் வரை துன்புறுத்தி வேலை வாங்கினார்கள்.  20, 30 காசு சம்பளத்திற்காக நாள் முழுதும் சிறைப் பட்டு சிதைக்கப் பட்டார்கள். அது தியாகம் இல்லையா?

எத்தனை இன்னல் வந்தாலும் பொறுமையோடும் சகிப்புத் தன்னையோடும் நாளும் செத்து செத்து வாழ்ந்தார்களே அது தியாகம் இல்லையா?

முதலில் அவர்களது அயராத உழைப்புக்கு தருந்த ஊதியம் கொடுக்கப் பட்டதா? அதற்கு எவராலும் பதில் சொல்ல முடியுமா? இன்று இந்த நாட்டில் மலிந்து கிடக்கும் மற்ற நாட்டுக்காரர்களுக்கு யாருங்க காரணம்.

திறமை இல்லா விட்டாலும் பெரிய சம்பளம் வேண்டும். உடல் உழைப்பு வேலைகள் வேண்டாம். படித்த படிப்புக்கு தகுந்த வேலையே வேண்டும் என்கிற பிடிவாதம் இங்கே பலருக்கும் உண்டு.. தகுந்த வேலை கிடைக்கும் வரை வேறு வேலைகளில் நாட்டம் இல்லாமல் போவது இப்போதைக்குப் பல பட்டதாரிகளின் நடப்பு விவகாரம். அது போன்ற காரணங்களைக் கூறி விரல் நீட்டலாம்.

ஆக உடலை வருத்தி உழைக்காமல் சொகுசாய் உள்ளவர்களே தியாகிகளாய் ஆக்கப்படும் காலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அன்று மலாயாவாக இருந்த நாட்டை மலேசியாவாக மாற்றி அமைக்க அரும்பாடு பட்டவர்கள் மலேசிய இந்தியர்கள். 




தனக்காக யோசிக்கத் தெரியாமல் நாட்டுக்காக நிறையவே ஆசா பாசங்களை இழந்த இந்தியர்களைத் தியாகிகள் என்று சொல்வதில் என்ன தவறு?

அதை விட்டு விட்டு "படிப்பது இராமாயணம்... இடிப்பது பெருமாள் கோவிலாக’ இருக்கக் கூடாது என்பது அந்த எழுத்தாளரின் கருத்து.

ஆக அவ்வப்போது சில அறைகுறை கூஜா தூக்கிகளும் வருவார்கள். போவார்கள். அவர்களின் சுய லாபத்திற்காக எதையாவது உளறி விட்டுச் செல்வார்கள். இவர்களுக்கு ஜால்ரா போடுவதற்காகவே சில வெங்காயச் சட்ணிகளும் இருக்கவே செய்வார்கள்.

மலேசிய இந்தியர்கள் நேற்று முந்தா நாள் மலாயாவுக்கு விருந்தாளிகளாக வந்தவர்கள் அல்ல. அவர் உண்மையிலேயே தியாகிகள். கூலிக்கு மாரடிக்க வந்தவர்கள் அல்ல.

மலேசிய இந்தியர்கள் இந்த மலையகத்தைத் தங்கள் உழைப்பால் உயர்த்தி உலகமே உற்றுப் பார்க்கும் அளவுக்கு கெளரவப் படுத்தியவர்கள்.

நம் மூதாதையர்கள் உழைச்சுப் போட்டுப் போன சுகத்தில் தான் இப்போது நாம் சொகுசாய்க் கால் மேல் கால் போட்டு சீரியல் பார்க்கிறோம். சொகுசாய்ச் சவடால் பேசிக் கொண்டு இருக்கிறோம். ரொம்பவும் வாசிக்க வேண்டாமே. அவர்கள் இல்லை என்றால் நீங்களும் இல்லை. நானும் இல்லை. அதை மறக்க வேண்டாமே.

நம்முடைய மூதாதையர்களை மறக்காமல் அவர்களை என்றைக்கும் நினைத்துப் பார்ப்போம். காலா காலத்திற்கும் அவர்களுக்கு நன்றி சொல்வோம். நம்முடைய மூதாதையர்களைக் கூலிக்கு மாரடித்தவர்கள் என்று வாய் கூசாமல் பேசுவதை நிறுத்திக் கொள்வோம்.

மலேசிய இந்தியர்கள் அன்றைக்கும் அஞ்சலிகள். இன்றைக்கும் அஞ்சலிகள். இனி என்றைக்கும் அஞ்சலிகள்… புஷ்பாஞ்சலிகள்.




கேமரன் மலை ஓராங் அஸ்லி தமிழர்கள்

1920-ஆம் ஆண்டுகளில் கேமரன் மலைக் காடுகளில் சாலை அமைக்கப் போன தமிழர்கள் சிலர் அங்குள்ள ஓராங் அஸ்லி பெண்களைத் திருமணம் செய்து கொண்டார்கள். காட்டுக்குள் ஒரு புதிய சமுதாயத்தையும் உருவாக்கிக் கொண்டார்கள். அது ஒரு வரலாற்றுச் சுவடு. இந்தச் செய்தி எத்தனைப் பேருக்குத் தெரியும்.

1.CH Road Construcation 1928

1926-ஆம் ஆண்டு தாப்பாவில் இருந்து கேமரன் மலைக்கு ஒரு சாலையை அமைக்க மலாயா ஆங்கிலேய அரசு திட்டம் வகுத்தது. பத்து மில்லியன் மலாயா டாலர்கள் செலவாகும் என்று கணக்கிடப் பட்டது. இப்போதைய கணக்குப்படி பார்த்தால் முன்னூறு நானூறு மில்லியன் ரிங்கிட்டைத் தாண்டி நிற்கும்.

சாலை அமைப்பிற்கு போக்டென் பிரிஸ்பர்ன் கம்பெனி (Messrs. Fogden, Brisbane and Company) எனும் ஆஸ்திரேலிய நிறுவனத்திற்கு 250,000 டாலர்கள் முன்பணம் வழங்கப் பட்டது. 1928 ஜனவரி முதல் தேதி சாலை அமைப்புப் பணிகள் தொடங்கின. 1930 நவம்பர் 14-ஆம் தேதி முடிவுற்றது.

2.CH Road Construcation 1929

அது ஒரு சவால் மிக்க நிர்மாணிப்புப் பணி. குதிரை அல்லது மாட்டு வண்டிகளில் தளவாடப் பொருட்கள் தாப்பா நகரில் இருந்து கேமரன் மலைக்குக் கொண்டு செல்லப் பட்டன. பின்னர் நீராவி இயந்திரங்கள் மூலமாக இரும்புத் தளவாடப் பொருட்கள் மேலே கொண்டு செல்லப் பட்டன.

கல் பாறைகளை உடைப்பதற்கு அதி நீர் அழுத்தத்தில் பாறை உடைக்கும் இயந்திரங்களைப் பயன்படுத்தினார்கள். சாலையின் நீளம் 51 மைல்கள்.

ஒவ்வொரு நாளும் 500 லிருந்து 3000 பேர் வேலை செய்தார்கள். ஏறக்குறைய 375 பேர் மலேரியா காய்ச்சலினால் பாதிக்கப் பட்டார்கள். சிலர் காடுகளிலேயே இறந்தும் போனார்கள்.

3.CH Road Construcation 1930

ஒரு சில தமிழர்கள் காட்டுக்குள் போய் காணாமல் போனார்கள். போனவர்கள் அப்படியே காட்டுக்குள் ஒளிந்து கொண்டார்கள். வெளியே வரவில்லை.

பல மாதங்கள் ஓராங் அஸ்லி மக்களுடன் வாழ்ந்தார்கள். அப்படியே ஓராங் அஸ்லி பூர்வீகப் பெண்களையும் திருமணம் செய்து கொண்டார்கள். காட்டுக்குள் ஒரு மறைவு வாழ்க்கை. சாலை நிர்மாணிப்புப் பணிகள் முடிந்தததும் இவர்களும் வெளியே நடமாட ஆரம்பித்தார்கள்.

ஆனால் சொந்த ஊர்களுக்கு அவர்கள் செல்லவில்லை. ஏன் என்றால் அவர்களுக்கு காட்டிலேயே குடும்பம் அமைந்து விட்டது. விட்டுப் போக மனம் இல்லாமல் அவர்கள் ஓராங் அஸ்லி போல வாழ ஆரம்பித்தார்கள்.

4.Cameron Highlands Tanah Rata 1940

அந்த மாதிரி காட்டுக்குள் போன நம்ப மன்மத ராசாக்கள் அங்கே ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த விசயம் எத்தனை பேருக்குத் தெரியும்

அவர்களின் வாரிசுகள் சிலரை ரிங்லெட் நகரில் இன்றும் பார்க்கலாம். முகத்தைப் பார்த்தாலே தெரிந்து விடும். இந்திய லாவண்யம் ’பளிச்’சென்று நன்றாகவே தெரியும்.

சும்மா சொல்லக் கூடாது. இந்தியச் சாமுத்திரிகா இலட்சணம் எங்கே எல்லாம் போய் விளையாடி இருக்கிறது பார்த்தீர்களா. பெருமையுடன் பெருமூச்சு விட்டுக் கொள்ளுங்கள்.

அதற்கு அப்புறம் மூன்று ஆண்டுகளில் கேமரன் மலைக்குச் சாலை அமைக்கப் பட்டது. அதாவது ரிங்க்லெட் வரையில். அடுத்து ரிங்லெட்டில் இருந்து தானா ராத்தாவிற்கு சாலை அமைத்தார்கள்.

5.Tapah CH 22.11.1950

அடுத்து வந்த மூன்று ஆண்டுகளில் பிரிஞ்சாங் வரை சாலை அமைக்கப் பட்டது. ஆங்கிலேயர்களும் சீனர்களும் போட்டிப் போட்டுக் கொண்டு கேமரன் மலையில் வீடுகள், பங்களாக்களைக் கட்டிக் கொண்டார்கள்.

1929-இல் போ தேயிலைத் தோட்டம் உருவானது. அப்புறம் படிப்படியாக வளர்ச்சி அடைந்து, இன்றைக்கு உலகப் புகழ் பெற்று விளங்குகிறது.

காட்டுக்குள் மாயமாய் மறைந்து போன தமிழர்களின் வாரிசுகளைத் தேடிப் பிடிப்பதும் பெரிய வேலை. அந்த ஒராங் அஸ்லி தமிழர்களின் வரலாற்றை எழுதுவதும் பெரிய வேலை. வரலாறு எழுதப்பட்டு வருகிறது.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)

சான்றுகள்

1. Shennan, Margaret (2000). Out in the Midday Sun: The British in Malaya 1880–1960. John Murray (Publishers) Ltd. p. 128.

2. ROAD TO CAMERON'S HIGHLANDS, The Straits Times, Tuesday, 3 March 1931. p. 12.



பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்


Thayalan Muniandy Hi... I’m tour guide... Used to do a tour in Cameron highland... But this is a new information about orang asli

Muthukrishnan Ipoh This truth is known to many...but the upper hands had subdued the realm...

Kanayaran Papaiah Interesting historical data Syabas well done Sir

Manimaran Govindaraj ஆண்டது ஆண்டியாவதும் ஆண்டியானது ஆண்டதும் ஊழ்தானே?

Kumaravel Muthu Goundan கடந்த 70 வருடங்களுக்கு மேல் கேமரன் மலையில் வசிக்கும் நான் அறிந்திடாத பல அரிய தகவல்களுக்கு நன்றி.

கேமரன் மலையின் இன்றைய வளர்ச்சிக்கு தமிழர்களின் அபரிமிதமான உழைப்பும் பங்களிப்பும் முக்கியமானவை... புதைந்து கிடக்கும் கேமரன் மலை தமிழர்களின் சரித்திரத்தை வெளிக் கொணர நீங்கள் முயற்சிக்க வேண்டும்.


Muthukrishnan Ipoh கேமரன் மலை தமிழர்களைப் பற்றி ஆய்வு செய்தால் ஒரு பெரிய புத்தகமே எழுதலாம் சார்... தமிழர்களைப் பற்றியதாக இருக்க வேண்டும்...

Kumaravel Muthu Goundan Muthukrishnan Ipoh உண்மைதான் அய்யா.... கேமரன் மலை தமிழர்களின் சரித்திரம்... கடந்த 90 வருடங்களில்... மலேசியாவில் ஒரு மாவட்டமே தமிழர்களின் கடும் உழைப்பால் வளர்ச்சி அடைந்தது என்றால் அது கேமரன் மலை மாவட்டமாக த்தான் இருக்கும்.

அத்தகைய உழைப்பாளித் தமிழர்களின் சரித்திரம் வெளிவர நானும் எனது நண்பர்களும் உங்களுக்கு துணை வருவோம்.


Muthukrishnan Ipoh முயற்சி எடுத்து களத்தில் இறங்க வேண்டும்... பார்ப்போம் ஐயா...

Sathya Raman என் குழந்தை பருவம் முதல் குமரிப் பருவம் வரை கேமரன் மலை போ தோட்டத்தில் தான் வசந்த காலமாய் அமைந்தது. கட்டுரையில் நீங்கள் குறிப்பிட்ட இந்த ஓராங் அஸ்லி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மலையில் நிரம்பி வழிந்தனர். 
சென்ரல் டிவிசனில் ஓய்வு நாளான ஞாயிற்றுக் கிழமைகளில் காட்டப் படும் தமிழ் திரைப் படங்களை காண்பதற்காகத் தியேட்டரில் முதல் இரண்டு வரிசையில் போய் அமர்ந்து கொண்டு அமர்களப் படுத்தும் அஸ்லிகாரர்களை மறக்கவே முடியாது. 
ஆனால் அவர்கள் பிடிக்கும் சுருட்டின் வாடையை மட்டும் இப்போது நினைத்தாலும்????? ஊவே. 🙆🙆🙆



Kalai Mani அருமையான வரலாற்றுப் பதிவு. வேறு யாரும் எழுத முன்வராத தமிழர்கள் வாழ்ந்த சுவடுகளை திரைப் படம் போல் கண் முன்னே கொண்டு வந்த பெருமை ஐயா முத்து அவர்களையே சாரும்.

Muthukrishnan Ipoh மலேசியாவில் உள்ள ஒவ்வோர் இடத்திலும் தமிழர்களைப் பற்றிய ஒரு வரலாறு இருக்கிறதுங்க...

Palar Thangamarimuthu Arumai vaazhtthukkal thodaraddum Thamizhar payanitthlla vaazhkkaippathivugal (அருமை... வாழ்த்துகள்... தொடரட்டும் தமிழர் பயணித்த வாழ்கைப் பதிவுகள்)


Sathya Raman தங்களின் அயராத தேடல்கள் பிரமிக்க வைக்கிறது சார். இதற்காக நீங்கள் செய்யும் வீட்டுப் பாடங்கள் அளப்பறியது. தொடருங்கள் சார். உங்களின் பகிர்வுகளைப் படித்துப் படித்து ஞாபக சக்தியை உசுப்பேற்றுகிறோம்.🙏 


Sri Kaali Karuppar Ubaasagar அருமையான தகவல் அண்ணா..வாழ்க தமிழர்களை பற்றிய உங்கள் ஆய்வுகள்🙌🙏🏵 


Rajaletchemy Hemy ஆண்ட நம் இனம் ஆளப் பெற்றது 


Ganabaskaran Nadason தமிழர்களின் வரலாற்றினை மிகவும் சிரமப்பட்டு தேடி சிறப்பாக வழங்கிவரும் தங்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள்

Melur Manoharan தங்களின் "வரலாற்று" பதிவு "பிரமிப்பாக" இருந்தது...! நன்றி...! 

Veerayah Gopal தெரிந்து கொள்ள வேண்டியவை. முன்னாள் மாணவர்கள் இயக்கம் SRJK(T) சுப்பரமணிய பாரதி, பினாங்கு.

M R Tanasegaran Rengasamy தமிழன் தடம் பதித்த இடங்களெல்லாம் தங்கமாய் மிளிர்கின்றன. நல்ல பதிவு. வாழ்த்துகள்.

Manickam Nadeson என்னை மாதிரியே கேமரன் மலையில யாரையோ ஓராங் அஸ்லிய பாத்ததா என் நண்பர் சொன்னாரு, அது இதுவா இருக்குமோ???

Muthukrishnan Ipoh உணமை ஐயா... ஒருவர் அல்ல... ஐந்து ஆறு பேர் உங்க மாதிரியே இருக்காங்களாம்... எதற்கும் ஒற்றுமைத் துறை அமைச்சரிடம் சொல்லி வைப்போம்... 😆😆😆 


Thanga Raju அற்புதமான பதிவுகள் தலைவரே

Raily Muniandy மறைந்து போன தமிழரின் தடங்களைக் கண் முன் நிறுத்தி உள்ளீர்கள் ஐயா. நன்றி. 


Mageswary Muthiah இன்னும் எவ்வளவு ரகசியம் புதைந்த கிடக்கிறது நம் மலேசிய தமிழர்களை பற்றி. ?

Maana Mackeen வாழ்க நீ எம்மான் - ஆய்வில் முக்குளிப்பதற்காக..

Krishnan Ramiah சிறப்பான வரலாற்று பதிவுக்கு நன்றி ஐயா.

Inbachudar Muthuchandran ஒர் அருமையான தொகுப்பு

Mydeen Saleem அருமையான தகவல் (வரலாறு)

Jeya Balan அருமை ஐயா உங்கள் சேவை அளப்பரியது ! வாழ்த்துகள்.

மாரியப்பன் முத்துசாமி மாரியப்பன் முத்துசாமி அற்புதமான பதிவு. உங்களை நிறையவே பாராட்டலாம்

Bala Sena தங்களது ஒவ்வொரு பதிவையும் படித்து அறிந்து கொள்ள சுவையான தகவல் ஐயா

Macho Bala அருமையான ஒரு வரலாற்றுப் பதிவு

Letchumanan Nadason நாட்டின் வளர்ச்சியில் தமிழர்களின் உழைப்பு. அருமையான பதிவு. நன்றி ஐயா.

Muthukrishnan Ipoh மலேசிய நாட்டைப் பொன் விளையும் பூமியாக மாற்றியவர்கள்  இந்தியர்கள்...

Samugam Veerappan கடந்த கால சிறப்புகள் கண் முன்னே தெரிந்து கொள்ள முடிகிறது.

K.V. Rajoo Kaliapa அருமையான👌வரலாற்று பதிவு...வாழ்த்துகள்

Ramaiah Paidiah மாமா ஒரு பல்கலைக்கழகம் !!

Raghavan Raman மற்றும் ஒரு புதிய தகவலை தந்தமைக்கு மிக்க நன்றி.

Ganabaskaran Nadason 👏 உங்களது அரும்பணிக்கு எனது நல்வாழ்த்துக்கள்

Vejaya Kumaran amerikawil aaprikargalai (அமெரிக்காவில் ஆப்பிரிக்கர்களை)
kodumai (கொடுமை)
paduttiyathu (படுத்தியது)
pol ithuvum britis (போல் இதுவும் பிரிட்டிஷ்)
arasaanggam (அரசாங்கம்)
tamilargaluku (தமிழர்களுக்கு)
seithathu kodumaye.ulagil (செய்தது கொடுமையே. உலகில்)
ulla tamil (உள்ள தமிழ்)
sonthanggaluku (சொந்தங்களுக்கு)
yetho oru (ஏதோ ஒரு)
wagaiyinil (வகையினில்)
nadanthathu (நடந்தது)
kodumaiye.... (கொடுமையே)
jappaaniyar (ஜப்பானியர்)
malaayavil potta (மலாயாவில் போட்ட)
aaatanggal (ஆட்டங்கள்)
kathayai (கதையை)
konjam koorawum (கொஞ்சம் கூறவும்)
ayyaa... (ஐயா)


Murugan Rajoo தமிழர்கள் உலகை வணிக ரீதியில் பயணித்து பொருளாதார வலு பெற்று செம்மையாக வாழ்ந்தனர்.

ஆரிய அயோக்கியர்களின் தீய செயலும், யூதர்களின் திருட்டு வேலைகளும் தமிழினத்தையும், தமிழர்களின் தொன்மைகளையும் திட்டமிட்டழித்து சின்னா பின்னம் ஆக்கினர்.

பிறகு வந்த கொடுங்கோல் ஆட்சியான பிரிட்டிசு காலணி ஆட்சியோ தமிழர்களை பல நாடுகளுக்கு கூலி அடிமைகளாய் கொண்டு சேர்த்தனர்.

ஆங்காங்கு கொண்டு சென்ற தமிழர்களை வைத்து காடுகளை அழித்து சாலைகளை அமைத்து, தோட்டங்களை உருவாக்கி, கட்டிடங்களை கட்டி, அந்த அந்த நாட்டை பொன் படுத்தி வளங்களையும், செல்வங்களையும் கொள்ளை அடித்தனர்.

இறுதியாக தமிழர்களை நட்டாற்றில் விட்டு விட்டு சென்றனர் பிரிட்டிசு கயவர்கள்


Muthukrishnan Ipoh மலேசியத் தமிழர்களின் காலச் சுவடுகள் கண்ணீரில் எழுதப்பட வேண்டியவை...

Yogavin Yogavins Wow... Good job sir

Rajandran Arasan சரியான போடு. வாழ்த்துக்கள்.

Sinnappn Sinnappan அற்புதம்

Sivalingam Muniyandi ஓர் உற்சாகம் கொடி கட்டிப் பறக்கிறது, அந்தரங்க சோகங்களுடன்...





இன்றைய சிந்தனை 16.07.2019 - நேற்றைய கவலை

நேற்றைய கவலையை நேற்றோடு மறப்போம். இன்றைய பொழுதை மகிழ்ச்சியுடன் பார்ப்போம். சரி. இன்றைக்கு ஒரு குட்டிக்கதை...

அடை மழை. துறவிகள் இருவர். ஒரு குடிசையின் கீழ் நிற்கின்றனர். மழை நின்றது. இருப்பிடத்தை நோக்கி நகர்கின்றனர்.


அப்போது ஓர் அழகான இளம் பெண். சாலையைக் கடக்க முடியாமல் தவிக்கின்றாள். துறவிகளில் ஒருவர் என்னாச்சு... உதவி தேவையா என்று கேட்கிறார்.

சாலை முழுவதும் சகதி. பட்டுப் பாவாடை பாழாகிவிடும் என்கிறாள். கவலை வேண்டாம்... என் தோள்களில் ஏறிக்கொள் என்று கூறி உதவி செய்கிறார்.

மற்ற துறவி கோபமாக ’ஒரு பெண்ணை ஒரு துறவி தொட்டுத் தூக்கியது தவறு’ என்கிறான்.

உதவி செய்த துறவி சொல்கிறார். அந்தப் பெண்ணை அப்போதே நான் இறக்கி விட்டு வந்து விட்டேன். நீ தான் இன்னும் சுமந்து கொண்டு இருக்கிறாய் என்கிறார்.

அதே போல நாமும் நம் வாழ்வில் மற்றவர் ஏற்படுத்திய வேதனைகளை ஒவ்வொரு நாளும் தூக்கிக் கொண்டு அலைகிறோம். வேண்டாமே... தூக்கி எறியுங்கள். புதிய சிந்தனை... புதிய பாதை... புதிய மலர்ச்சி. போய்க் கொண்டே இருங்கள். நீங்கள் நீங்களாக இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.



பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்


Doraisamy Lakshamanan உலகமக்கள் அனைவரோடும் இணைந்திருக்கக் கற்றுக் கொடுங்கள் ஐயா. உங்கள் பேரறிவின் பெருந்துணையால் உலகத் தமிழினம் உயர்க் கல்வி பெற்று உலக மக்களுடன் நிகராக நிலைத்து வாழ உங்களால் மட்டுமே முடியுமென உறுதியாக நம்புகிறோம் ஐயா திரு முத்துக்கிருஷ்ணன் அவர்களே!

 
Muthukrishnan Ipoh கருத்துகளுக்கு மிக்க நன்றி... எழுத்துகளின் வழி இயன்றதைச் செய்வோம்...நல்லவற்றைச் செய்வோம் ஐயா...

Thennarasu Sinniah அருமை..வாழ்வியல் உண்மை.

Bala Sena குட்டிக்கதையாக இருந்தாலும் அர்த்தம் நிறைந்தது ஐயா..

Chitra Ramasamy வணக்கம்.. குட்டி கதை தான் ஆனால் வாழ்வில் நிறைய அர்த்தங்களை கொடுக்கk கூடிய ஒன்று

Barnabas இனிய வணக்கம். புரிதலில்லையேல் (நாய் குரைப்பதை கண்டு கொள்ளாதது போல் விலகிச் செல்வது புத்திசாலித்தனம். புரிந்து கொண்ட நாய் சத்தியமாய் குரைக்காது.) நாம் ஏன் கவலைப்பட்டு நம் நிம்மதியை இழக்க வேண்டும்?

Image may contain: indoor 

Image may contain: 1 person 

No photo description available.

பிலிப்பைன்ஸ் நாட்டில் கலிங்கர்கள்

பிலிப்பைன்ஸ் நாட்டின் லூசோன் தீவில் கலிங்கர்கள் எனும் பூர்வீகக் குடிமக்கள் வாழ்கிறார்கள். பிலிப்பைன்ஸ் அரசாங்கம் கலிங்கா எனும் ஒரு மாநிலத்தை அவர்களுக்கு ஒதுக்கிக் கொடுத்து உள்ளது. முன்பு அந்த மாநிலத்தின் பெயர் கலிங்கா – அப்பாயாவோ (Kalinga-Apayao). 1995-ஆம் ஆண்டு கலிங்கா மாநிலம் தனி மாநிலமாகப் பிரிக்கப் பட்டது.

பிலிப்பைன்ஸ் கலிங்கா மாநிலத்தில் மக்கள் பொது மண்டபம் - 
Kalingga (Javanese: Karajan Kalingga; 訶陵 Hēlíngor 闍婆 Dūpó in Chinese sources) was the 6th century Indianized kingdom on the north coast of Central Java, Indonesia. 6th century.


சிங்கப்பூர் ஆய்வாளர் பாலாஜி சதாசிவன் கீழ்கண்டவாறு உறுதிபடுத்துகிறார்.

ஏறக்குறைய 2200 ஆண்டுகளுக்கு முன்னர் கலிங்கர்களின் முதல் புலம்பெயர்வு நடைபெற்றது. அசோகரின் கலிங்க கொலைவெறி ஆட்டத்தில் இருந்து தப்பித்த பல ஆயிரம் பேர் கடல் மார்க்கமாக தென்கிழக்காசிய நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து இருக்கிறார்கள். அப்படிப் புலம் பெயர்ந்தவர்கள் பிலிப்பைன்ஸ் தீவிற்கும் புலம் பெயர்ந்து இருக்கலாம்.

பிலிப்பைன்ஸ் கலிங்கா மாநிலத்தின் பூர்வீகப் பெண்கள் - Kalinga Indigenous Tribal Dance Ritual, Kalinga, Philippines. Source: https://jcuxp7.wordpress.com/category/kalinga/page/1/


அந்தக் காலக் கட்டத்தில் தான் கலிங்கர்கள் தீபகற்ப மலேசியாவில் குடியேறி இருக்கிறார்கள். ஆதிகால மலாயா தமிழர்கள் இந்தக் கலிங்கப் பரம்பரையில் இருந்து வந்தவர்களாக இருக்கலாம்.
(6. Sadasivan, Balaji Sadasivan 2011)

ஜாவாவை ஆட்சி செய்த சைலேந்திர மன்னர்களின் பரம்பரையினர் கலிங்கத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தென் சயாமை ஆட்சி செய்தார்கள். அதே சமயத்தில் தீபகற்ப மலேசியாவையும் ஆட்சி செய்தார்கள்.
(7. Coedes, George 1968. Walter F. Vella)

பிலிப்பைன்ஸ் கலிங்கா மாநிலத்தில் உள்ள கலிங்கா உணவகம் (எழுத்துகளைக் கவனிக்கவும்) - Srivijayan Empire (683-1275 AD) and Majapahit empire (1275 to 14th century) are said to have influence on Philippines' culture.

7-ஆம் நூற்றாண்டில் இந்தோனேசியா ஜாவா தீவில் கலிங்கப் பேரரசு எனும் ஓர் அரசு உருவானது. இந்தியாவின் கலிங்கப் பேரரசின் பெயரே இந்தோனேசியாவின் கலிங்கப் பேரரசிற்கும் வைக்கப் பட்டது.

கி.பி. 650-ஆம் ஆண்டில் இருந்து கி.பி.850-ஆம் ஆண்டு வரை கலிங்கப் பேரரசு இந்தோனேசியாவை ஆட்சி செய்து இருக்கிறது. (8. Drs. R. Soekmono, 1973)

பிலிப்பைன்ஸ் கலிங்கா மாநிலத்தின் பூர்வீகக் குடிமக்கள் - Kalingas, Gaddang, Isneg, Mangyan, etc. The last wave consisted of migrations between 500BC to 1400AD.

கலிங்கப் பேரரசு ஆட்சி செய்த காலத்தில் மேலும் இரு பேரரசுகள் இந்தோனேசியாவில் இருந்து இருக்கின்றன. ஒன்று கூத்தாய் பேரரசு; மற்றொன்று தர்மநகரா பேரரசு.

இன்னும் ஒரு செய்தி. கலிங்கப் பேரரசு; கூத்தாய் பேரரசு; தர்மநகரா பேரரசு. இந்த மூன்று பேரரசுகளும் தான் இந்தோனேசியாவின் வரலாற்றில் மிக மிகப் பழமையான பேரரசுகள்.

ஸ்ரீ விஜய பேரரசு; மஜபாகித் பேரரசு; சிங்காசாரி பேரரசு; சைலேந்திரா பேரரசு போன்ற அரசுகள் தோன்றுவதற்கு முன்னரே கலிங்கப் பேரரசு இந்தோனேசியாவில் உச்சம் பார்த்து ஆட்சி செய்து விட்டது.
(7.2. Sneddon, James 2003)

கி.பி. 674-ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் கலிங்க நாட்டை சீமா (Queen Shima) எனும் ராணியார் ஆட்சி செய்தார். இவர் திருடு கொள்ளைகளுக்கு எதிராக மிகக் கடுமையான சட்டங்களைக் கொண்டு வந்தவர். நேர்மையாகவும் உண்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்று குடிமக்களைக் கேட்டுக் கொண்டவர்.
(8. Masatoshi Iguchi 2017)

ஆக அந்தக் காலக் கட்டத்திலும் இந்தோனேசியாவில் இருந்து இந்தியர்கள் மலாயாவுக்குள் புலம் பெயர்ந்து இருக்கிறார்கள். இந்தோனேசியா வரலாற்று ஆசிரியர் பூர்வாந்தாவின் ஆய்வறிக்கையில் இருந்து அந்த உண்மை இங்கே பதிவு செய்யப் படுகிறது.
(9. H Purwanta 2012)


(சஞ்சிக்கூலிகள் வரலாற்று ஆய்வு நூலில் இருந்து தொகுக்கப் பட்டது.)

1. International Journal of Advanced Research in ISSN: 2278-6236. Management and Social Sciences Impact Factor: 6.284. Vol. 5 | No. 6 | June 2016 www.garph.co.uk IJARMSS | 937

2. THE MIGRANTS OF KALINGA: FOCUS ON THEIR LIFE AND EXPERIENCES (2016) Janette P. Calimag, Kalinga-Apayao State College, Bulanao Tabuk City, and Kalinga.


பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்

Thina Garan கலிங்கர்கள்தான் ..சீனர்கள் இந்தியர்களை .. கிலிங்கான் மற்றும் மலாய் மொழியில் கிளிங் என்றும் அழைக்கின்றனர். keling..kelingan https://en.wikipedia.org/wiki/Keling
 
 
Nedunchelian Raman தமிழர்களை மலாய்காரர்கள் கெலிங் என்றால் வரலாறை எண்ணி பெருமைப்பட வேண்டும் மாறாக சிந்திக்காமல் கோபப் படக் கூடாது
 
 
Inbachudar Muthuchandran மிகச்சிறந்த ஆய்வு
 
 
Endran Puven Arumaiyane thagaval...valgha valargha aiyaa
 
 
Kanna CK Kanna Ck அருமையான பதிவு. நன்றி ஐயா
 
 
Jeya Balan மிக சிறப்பு ஐயா
 
 
Gogila Balan Great sir
 
 
 
 

இன்றைய சிந்தனை 15.07.2019 - ஓரவஞ்சனை

ஓரவஞ்சனை என்றால் ஒரு பக்கம் சார்ந்து செயல்படும் வெளிப்படையான பாரபட்சப் போக்கு. அண்மைய காலங்களில் ஊடகங்களில் அந்தப் போக்கை அதிகமாகப் பார்க்க முடிகின்றது. இங்கே முன்வைக்கப்படும் கருத்து சிலருக்கு வேதனை அளிக்கலாம். மன்னிக்கவும்.


‘வானம் இடிஞ்சிச்சு...
பூமி பொளந்துச்சு...
வெள்ளம் வந்துச்சு...
நாய் கொரைச்சுச்சு...
மக்கள் ஓடுச்சு...’


என்று ஒருவர் பதிவு செய்கிறார் என்றால் அதற்கு நூற்றுக் கணக்கான பேர் வரிந்து கட்டிக் கொண்டு ’லைக்’ போட்டு மகிழ்ச்சி அடைகிறார்கள். நமக்கும் மகிழ்ச்சி.

அதே அவர் ஒன்றரை டன் பவுடரை முகத்தில் கொட்டி... ‘என்னையும் பாருங்க என் அழகையும் பாருங்க’ என்று ஒரு செல்பி படத்தைப் போட்டால் அதற்கும் ஆயிரக் கணக்கான பேர் லைக் போடுகிறார்கள்.

ரொம்ப ரொம்ப சந்தோஷம். ஏன் என்றால் அது அவரவர் தனிப்பட்ட விசயம்.

விளம்பரம் தேவை தான். அதற்காகப் பொருத்தம் இல்லாத உரைவீச்சுகளைத் தவிர்க்கலாமே...

முகம் சுழிக்கும் அளவிற்கு ’மேக் அப்’ போட்டு விளம்பரம் தேடுவது தவிர்க்கப்பட வேண்டிய விசயம். பிசுபிசு பவுடர் கசிந்து... வியர்வையில் பிசுபிசுத்து மினுக்கும் முகத்தைப் பார்க்கும் போது அழகே அழகு என்று சொல்ல முடியவில்லை.

பாவம்... அந்த முகத்தின் மீது பரிதாபம் கலந்த அனுதாபம் தான் வருகிறது.

பெண்கள் என்றாலே அழகு. அந்த அழகிற்கு மேலும் அழகு தேவை இல்லை. கொஞ்சமாகச் செயற்கை அழகு போதும். இயற்கை கொடுத்த அழகே அழகு. அதில் லேசான ’மேக் அப்’ வைத்த அழகு என்றால் ரொம்பவும் அழகு.

உங்களின் சாதனைகள்; உங்களுடைய பிள்ளைகளின் சாதனைகள்; மற்ற மாணவர்களின் சாதனைகள்; உங்களுடைய விருதுகள்; உங்களின் வெளியூர்ப் பயணக் காட்சிகள்; உங்களின் அன்றைய சிறப்பான அம்சங்கள் போன்றவற்றுக்கு முதலிடம் வழங்க வேண்டும்.

நல்ல தனிப்பட்ட கருத்துகள்; சமூகத்திற்குப் பயன்படும் கருத்துகள்; தத்துவமான கருத்துகள்; பள்ளி மாணவர்களுக்கான ஊக்குவிப்புக் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்வோம்.

கூவத்தைச் சுத்தம் செய்ய நினைப்பது தவறு அல்ல. கூவத்திற்குக் கூந்தல் கட்ட நினைப்பது தான் தவறு.


பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்


Arjunan Arjunankannaya ஆமாம் ஐயா. எவ்வளவு மாணவர்கள் சாதனை புரிகிறார்கள். அதனைப் புரியாமல் அழகான பெண்கள் வந்தால் வரிசை கட்டி நிற்கிறார்கள்.வேதனை.
 
 
Muthukrishnan Ipoh உண்மைதான்... நம்முடைய மாணவர்கள் வெளிநாடுகளுக்குப் போய் பெரிய பெரிய அறிவியல் சாதனைகளை எல்லாம் செய்து வருகிறார்கள். 
 
நம் இனத்திற்குப் பெருமை தேடி தருகிறார்கள். அவர்களைப் பாராட்ட வேண்டும். அவர்களுக்கு உற்சாகம் தர வேண்டும்.

அண்மையில் நம் தமிழ்ப் பிள்ளைக
ள் ரஷ்யா, ஜார்ஜியா நாடுகளுக்குப் போய் நம் கலாசார நடனங்களை அரங்கேற்றம் செய்து உலக அளவில் முதல் நிலையில் வெற்றி பெற்று நாட்டிற்கும் நம் இனத்திற்கும் பெருமை செய்து இருக்கிறார்கள். அவர்களை உச்சி குளிர வேண்டும். அது நம் கடமைங்க ஐயா... அதுவே நம் உணர்வாக இருக்க வேண்டும்...

அதை விடுத்து.... அரை டன் பவுடர்களுக்கு ஆலாபனைகள் செய்வது நன்றாக இல்லை...
 
 
Doraisamy Lakshamanan நமது தாய்மொழி தமிழையும் நமது பண்பாட்டுக் கையேடான திருக்குறளையும் கொண்டு மலேசியத் தமிழ்ப் பள்ளிகளைப் பாதுகாக்கும் விதமாக, தற்போது தமிழ்ப் பள்ளிகளிலும் இடைநிலைப் பள்ளிகளிலும் படித்துக் கொண்டுள்ள அனைவரையும்... 
 
 பல்கலைக்கழகம் கல்லூரி வரை படிக்க வைத்து வேலை வாய்ப்பு கிடைக்கும் வரை இவர்கள அனைவரையும் கண்காணித்துப் படிக்க வைக்க, உலகத் திருக்குறள் கல்விப் பணிக்களப் புரவலர்கள் குழு, தற்போது ஜோகூர் SMK Tun Fatimah இடைநிலைப் பள்ளியில்... 
 
பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கு உதவியாக பார்வை கல்விக் கழகம் மலேசிய நண்பன் நாளிதழின் வழி இடைநிலைப் பள்ளிப் பாடக் குறிப்புக்கையே ஏடாக நாள் தோறும் ஒரு பாடத்தை அதன் செலெபஸ் படி ஓராண்டுக்கான பாடக் குறிப்புகளை வெளியிட்டு உதவினால்... 
 
மலேசியாவின் அனைத்து இடைநிலைப்பள்ளி மாணவர் மாணவிரும் நாள்தோறும் நாளிதழை வாங்கிப் படித்து கல்வியில் வெற்றி பெற மலேசிய நாளிதழ்களை மூவின மக்களும் வாங்கிப் படித்துப் பல துறைகளில் பயனடைவர் என நாங்கள் நம்புகிறோம்.
 
 
இத்திட்டத்தில் தங்களின் பங்களிப்பு உதவியை பேரளவில் எதிர்பார்க்கின்றோம்!
 
 
எப்படி தாங்கள் எந்த நாளிதழ் வழி எந்தப் பாடத்தின் செலபஸ் வழங்கி நம் மலேசியப் பல்லின மாணவர் சமுதாயம் மலேசியாவை மேம்பாடு அடைந்த நாடாக வளர உதவுங்கள் என தாங்களே அடையாளம் காணும்படி வேண்டுகிறேன்.  நன்றி வணக்கம்.
 
 
Raghavan Raman கருத்துக்கு நன்றி. அன்பர்கள் பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்ப்போம்.
 
 
Bala Sena ஆமாம் ஐயா.. சரியாகச் சொன்னீர்கள்.. போலிகளுக்குத் தான் இங்கே மதிப்பு..
 
 
Ve Sangkar வணக்கம் 🙏 சிறப்பாக சொன்னீர்கள்.
 
 
Parimala Muniyandy மிகவும் சரியாக சொன்னீங்க சார்.👌👍
 
 
Guna Shan அருமையாகச் சொன்னீர்கள் நண்பரே