23 செப்டம்பர் 2019

மலேசியாவின் வீர விருது வேலு ராஜ வேலு


மலேசியாவின் மிக உயரிய விருது ஸ்ரீ பலவான் காகா பெர்காசா விருது. Seri Pahlawan Gagah Perkasa (S.P.) மலேசிய நாட்டிற்காக அளப்பரிய தியாகம் செய்தவர்களைப் பெருமை செய்யும் வகையில் அந்த விருது வழங்கப் படுகிறது.

மலேசியாவில் கடந்த 60 ஆண்டுகளில் 30 பேர் மட்டுமே அந்த விருதைப் பெற்று இருக்கிறார்கள். அந்த விருதைப் பெற்ற முதல் மலேசியர். அவர் ஒரு தமிழர். வேலு ராஜ வேலு (Velu Rajavelu).

மலேசியாவில் வழங்கப்படும் விருதுகளில் ஆக உயரிய விருது ஸ்ரீ பலவான் காகா பெர்காசா விருது (Seri Pahlawan Gagah Perkasa (S.P.) இந்த விருது Tun, Tan Sri,Datuk விருதுகளைக் காட்டிலும் உயர்ந்த விருது. அது மட்டும் அல்ல.

மலேசியப் பேரரசருக்கு வழங்கப்படும் உயரிய விருது Darjah Kerabat Di-Raja Malaysia D.K.M. மலேசியப் பேரரசியாருக்கு வழங்கப்படும் உயரிய விருது Darjah Utama Seri Mahkota Negara D.M.N. இந்த விருதுகளுக்கும் உயர்ந்த விருது இந்த ஸ்ரீ பலவான் காகா பெர்காசா விருது.




(The award is the highest ranking in the list of the Malaysian Federal Ranking of Awards, and is ranked higher than the Darjah Kerabat Diraja Malaysia (D.K.M.) awarded to Malaysian Royalty.)

மலேசியா நாட்டிற்கு தன் உயிரை அர்ப்பணிப்பு செய்த வேலு ராஜ வேலு எனும் போலீஸ்காரருக்கு 1963-ஆம் ஆண்டு அந்த விருது வழங்கப்பட்டது.

1960-ஆம் ஆண்டுகளில் சிலாங்கூர் கிள்ளானில் ஒரு குண்டர் கும்பல் அராஜகம் செய்து வந்தது. அந்தக் கும்பலை அடக்குவதற்கு வேலு பணிக்கப் பட்டார். கிள்ளான் மிட்லண்ட்ஸ் தோட்டத்தில் அந்தக் கும்பல் சுகவாசம் செய்த போது தன் பணிப் படைகளுடன் வேலு அங்கே சென்றார். துப்பாக்கிச் சண்டை.

தன் சகாக்களின் உயிர்களைப் பாதுகாக்கும் பொருட்டு வேலு தன் உயிரைப் பணயம் வைத்தார். மிட்லண்ட்ஸ் தோட்டத்தில் ஆ சாய் என்பவரின் கடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் அவர் உடலில் 12 துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன.





எதிரிகளை அழிப்பதே அவரின் முதன்மையான குறிக்கோள். அதே சமயத்தில் தன் சகாக்களைக் காப்பாற்றுவதும் மற்றோர் இலக்கு. அந்த அடிப்படையில் வேலுவிற்கு ஸ்ரீ பலவான் காகா பெர்காசா வீர விருது 1963-ஆம் ஆண்டு வழங்கப் பட்டது.

(Seri Pahlawan Gagah Perkasa ('Gallant Warrior" or Warrior of Extreme Valour) is the highest federal award which can be presented in Malaysia.)

இந்த விருது 1960 ஜுலை 29-ஆம் தேதி உருவாக்கப் பட்டு; 1969-ஆம் ஆண்டில் மலேசிய அரசாணையில் சட்டமாகப் பதிவு செய்யப்பட்டது. அந்த வீரர் விருதைப் பெற்ற முதல் மலேசியர் ஒரு தமிழர் என்பதில் மலேசியத் தமிழர்கள் அனைவருக்கும் பெருமையே!

(இவரைப் பற்றிய ஒரு முழுமையான கட்டுரை விரைவில்...)

சான்றுகள்:

1. https://en.wikipedia.org/wiki/Grand_Knight_of_Valour…

2. http://tohairforce1981.blogspot.com/…/episode-031-anugerah-…



பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்


Doraisamy Lakshamanan உலகச் சிறப்புகளைப் பெற்ற தமிழர்களைப் பற்றி ஒரு புத்தகமாக உலகத் தமிழினத்தவர்களுக்குத் தமிழின வரலாறாகக் கற்பிக்க முற்படுவோம். உலகத் தமிழின அறிஞர் பெருமக்களே! மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம், இனநலம் எல்லாப் புகழும் தரும் என்பதே குறட்பா!


Muthukrishnan Ipoh தங்களின் தமிழ் உணர்வுகளுக்கு மிக்க மரியாதை செய்கிறோம் ஐயா... நீங்கள் நீண்ட காலம் நீடு வாழ இறைஞ்சுகின்றோம்...


Periasamy Ramasamy கடமை கண்ணியம் கட்டுப்பாடு கற்றுத் தந்த தலைமுறையைச் சார்ந்த அரசு ஊழியர்கள். நியாயமாகப் பார்த்தால், இந்த சிறப்பு விருதின் வரலாறும், இவ்விருதினைப் பெற்ற அத்தனைப் பேரையும் பெருமைப் படுத்தும் வகையில் பள்ளிப் வரலாற்று நூல்களில் ஒரு பாடமாக இடம் பெற்றிருக்க வேண்டும்.


Muthukrishnan Ipoh 1965-ஆம் ஆண்டில் இவரைப் பற்றி தமிழ்ப் பள்ளிகளின் பாடப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் ஏதோ காரணத்தினால் அந்தப் பதிவைக் கல்வி அமைச்சின் அதிகாரிகள் நீக்கி விட்டார்கள்.

1967-ஆம் ஆண்டு The Dewan English Reader நான்காம் ஆண்டுப் பாடப் புத்தகத்தில் அவரைப் பற்றி ஒரே ஒரு பத்தி எழுதப்பட்டு இருந்தது. அவ்வளவு தான். இவை தான் வீரர வேலு அவர்களுக்குச் செய்யப்பட்ட வீர மரியாதைகள்.



Letchumanan Nadason நாங்கள் குடியிருந்தத் தோட்டத்திற்குப் பக்கத்துத் தோட்டமான மிட்லண்ட்ஸ் தோட்டத்தில் இன்றைய (i city) நடந்த சம்பவம் இது. அக்காலக் கட்டத்தில் மிகவும் பரபரப்பாக பேசப் பட்டது. அம்மாவீரன் நினைவாக எங்கள் தோட்டத்தில் ஒரு இன்னிசைக் குழு நிறுவப் பட்டது.


Mageswary Muthiah தமிழ் இனம் சாதனைகள் இன்னும் என்னவெல்லாம் செய்து இருக்கிறார்கள் என்று ஆர்வத்துடன் எதிர்பார்க்க வைக்கிறது உங்கள் எழுத்து பணி...


Khavi Khavi மயிர் கூச்செரிகிறது ஐயா, ஒருகணம் என்மரபும் கொந்தளிக்கிறது. எமக்கு அளிக்கப்பட்ட அரிய உயரிய வீரிய விருது இது..


Muthukrishnan Ipoh நம் மலேசியத் தமிழர்களைப் பற்றி நிறைய தகவல்கள் உள்ளன... சன்னம் சன்னமாய் வெளியே கொண்டு வருவோம்...


Thennarasu Sinniah இதுவரை அறியாத தகவல்..அன்னாரைப் பற்றிய கூடுதல் தகவலைப் பெரிதும் எதிர்பார்க்கிறேன் ஐயா.


 Malathi Nair Waiting to read sir.


Doraisamy Lakshamanan தமிழ்மொழி மேன்மையுற தமிழின வரலாறு கற்பிக்க வேண்டியது மிகவும் முகாமையானது!


Suthan Tiran புதிய தகவல்.





22 செப்டம்பர் 2019

இன்றைய சிந்தனை 18.07.2019 - வாழ்க்கை என்றால்


கவியரசு கண்ணதாசனின் வரிகள் வருகின்றன.

வாழ்க்கை என்றல் ஆயிரம் இருக்கும்...
வாசல்தோறும் வேதனை இருக்கும்...
வந்த துன்பம் எதுவென்றாலும்...
வாடி நின்றால் ஓடுவதில்லை...
உனக்கும் கீழே உள்ளவர் கோடி...
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு!


நடந்தது நடந்தது தான். அதுவும் நல்லதுக்காக நடந்து இருக்கலாம். அப்படி நினையுங்கள். இப்படித்தான் நடக்கும் என்பது விதியின் சாசனம். வாழ்வை அதன் போக்கில் விட்டு விடுங்கள். அது போய்க் கொண்டே இருக்கட்டும்.

நடப்பவை அனைத்தும் நன்மைக்கே என நினைத்து நீங்களும் போய்க் கொண்டே இருங்கள். எழுதிச் செல்லும் விதியின் கைகள் எழுதியே செல்லும்.



பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்


Doraisamy Lakshamanan உலகம் செழிக்க உழைக்கும் ஊடகத் துறையினர்களால் உலக மக்கள் ஒவ்வொரு துறையிலும் முன்னேறி வருவதால் உங்கள் வருகை உலகத் தமிழர்களை எல்லாத் துறைகளிலும் உயர்வதற்கு உங்கள வருகையை உலகத் தமிழர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம் இவ்வூடகத்தில்!


Doraisamy Lakshamanan கண்பார்வை காரணமாகவும் கை நடுக்கம் காரணமாகவும் பல குறைகளோடு என் மனக் குறையைக் கொட்டிக் கொண்டு இருக்கிறேன்.



உங்கள் உதவி உலக மக்களின் தாய்மொழியையும் பண்பாட்டையும் காத்து வளர்க்க ஒன்றிணையும் உலக மக்களாக ஒவ்வொருவரையும் தட்டி எழுப்ப உங்கள் வருகை உதவுகிறது உலக மக்களுக்கு!



Muthukrishnan Ipoh கருத்துகளுக்கு மிக்க நன்றி. அனைவருக்கும் ஏற்படும் இயற்கையான உபாதைகளைப் பெரிது படுத்தாமல் தமிழ் உணர்வுகளில் தொடர்ந்து பயணிக்க வேண்டுகிறோம்...


Doraisamy Lakshamanan தாய்மொழிப் பள்ளிகளின் எதிர்காலம் ஏற்றமுற ஐ.நா சபையோ யுனெஸ்கோவோ முன்வந்து உலக நாடுகளில் உள்ள ஒவ்வொருவரின் தாய்மொழியையும் தாய்மொழிப் பண்பாட்டையும் மீட்டெடுத்துக் கற்பிக்க வாரத்தில் ஒரு நாள் வட்டாப்பள்ளிகளில் ஒன்றிணைந்து படிக்கவும் எழுதவும் பேசவும் வாய்பை அளிக்க வழிகாட்டுங்கள் உலகத் தமிர்களுக்கு!


Muthukrishnan Ipoh மலேசியாவில் தமிழ் காப்பகம் உருவாக்கப்பட்டு உள்ளது. சிறப்பாகவும் செம்மையாகவும் செயல்படும் என பெரிதும் எதிர்பார்க்கிறோம்.


Khavi Khavi Acceptence @ ஏற்றுக் கொள்ளுதலே வாழும் கலை. அரவணைப்பு அன்பின் வெளிபாடாகிறது அன்பு ஆசிரியரே..
'தொடரும் பயணங்கள், தொடமுடியா இலக்குகள்..
தொட எத்தனிக்கும் துருவத்தேடல்களில்
தொலைந்தனவே சுயத் தேடல்கள்..
உணர்வின்றி உயிரற்ற நிலையில்
உருவங்கள் பலவாகி,
தேடல்களில் மெல்ல கரைகின்றனவே.. !'



Muthukrishnan Ipoh தொடரும் பயணங்கள், தொடமுடியா இலக்குகள்..
தொட எத்தனிக்கும் துருவத்தேடல்களில்
தொலைந்தனவே சுயத்தேடல்கள்..
உணர்வின்றி உயிரற்ற நிலையில்
உருவங்கள் பலவாகி,
தேடல்களில் மெல்ல கரைகின்றனவே.. !'
மனததைத் தொடுகின்ற வரிகள்.... அருமை அருமை...



Khavi Khavi பாராட்டுதலுக்கு உள மகிழ்கிறேன் ஐயா. இவை எம் மனதை ஆக்கிரமிக்கின்ற உணர்வுகள். எமது ஆழ்ந்த எண்ணங்கள். பல வேளைகளில் பரவலான இவ்வெண்ணங்களை முறையே எடுத்து உரைப்பதற்கு எனது உடல் அவயங்கள் தாமதிப்பதாய் உணர்கிறேன். மறுகணம் அவற்றை என் தாய்த் தமிழ்ச் சொற்களில் எழுதுகிறேன். நன்றி..


யு.பி. வெ ள்ளை ரோஜா. தங்களின் படைப்புகளை படித்து வருகிறேன் சார் அனைத்தும் மிக சிறப்பு


Doraisamy Lakshamanan வணக்கம் ஐயா முத்துக்கிருஷ்ணன் அவர்களே வாழ்த்துகளோடு வரவேற்கிறோம் உங்களை!


Thanga Raju எப்படிங்க தலைவரே இப்படி அசத்துறீங்க அருமை...


 
Muthukrishnan Ipoh எல்லாம் உங்களிடம் கற்றுக் கொண்டது தான்...


Image may contain: text 

Image may contain: 7 people, people smiling



மலாயா தோட்டத்துப் பெண்கள் - 1907






இந்தப் படங்களைப் பற்றி பலவிதமான கருத்துகள். பலவிதமான ஆருடங்கள். அந்தக் காலத்து மலாயா ரப்பர் தோட்டத் தொழிலாளர்களின் படங்கள் என்பது ஒரு பொதுவான கருத்து. ஒரு பொதுவான பார்வை.

மலாயாவில் எந்த இடத்தில் எப்போது எடுத்த படங்கள் என்று பலரையும் குழப்பத்தில் ஆழ்த்திய படங்கள் என்றுகூட சொல்லலாம். உண்மையில் இவை ரப்பர் தோட்டத்தில் எடுத்த படங்கள் அல்ல. ஒரு கரும்புத் தோட்டத்தில் எடுத்த படங்கள்.

இந்தப் படங்களின் உண்மையான வரலாறு தெரிய வரும்போது வியப்பு கலந்த அதிர்ச்சிகள் ஏற்படலாம்.

அப்போதைய புரோவின்ஸ் வெல்லஸ்லி (Province Wellesley); இப்போதைய செப்ராங் பிறை பகுதியில் இருந்த சங்காட் தோட்டத்தில் 1907-ஆம் ஆண்டு எடுத்த படங்கள். (Changkat Kledang).

அப்போது சங்காட் தோட்டம் ஒரு கரும்புத் தோட்டம். அந்தத் தோட்டத்தை 1851-இல் இருந்து 1914 வரையில் The Penang Sugar Estates Ltd எனும் கரும்புத் தோட்ட நிர்வாகம் நடத்தி வந்தது.

பின்னர் 1917-ஆம் ஆண்டில் அந்தத் தோட்டம் ஒரு ரப்பர் தோட்டமாக (changkat estate) மாற்றம் கண்டது.

நிபோங் திபால் கலிடோனியா தோட்டம் கேள்விப்பட்டு இருப்பீர்கள். இப்போது இது ஒரு செம்பனைத் தோட்டம். 1960-களில் அது ஒரு ரப்பர் தோட்டம். 1863-ஆம் ஆண்டில் அது ஒரு கரும்பு தோட்டம். அங்கே மூன்று கரும்பு ஆலைகள் இருந்து இருக்கின்றன.

1900-ஆம் ஆண்டில் பேராக், பாகான் செராயில் முதல் அரசினர் தமிழ்ப்பள்ளி நிறுவப்பட்டது. வருடத்தைக் கவனியுங்கள்.

1908-ஆம் ஆண்டு நிபோங் திபால் பகுதியில் ஒரு தமிழ்ப்பள்ளி தொடங்கப் பட்டது. அதன் பெயர் சங்காட் தோட்டத் தமிழ்ப்பள்ளி. பினாங்கு மாநிலத்தைப் பொறுத்த வரையில் அதுதான் முதல் அரசினர் தமிழ்ப்பள்ளி.

முதலில் சொல்லப்பட்ட சங்காட் கரும்புத் தோட்டம்... அங்கே தான் செபராங் பிறையின் முதல் தமிழ்ப்பள்ளி உருவானது.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)

சான்று: The Penang Sugar Estates, Ltd., and the Malayan Sugar Industry, 1851-1914, Lynn Hollen Lees; The Business History Review - Vol. 81, No. 1 (Spring, 2007), pp. 27-57


பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்


Malathi Nair Sir as for now u are the only person who with proof and dare to write the truth even thoe ppl hurt u.respect u

Muthukrishnan Ipoh Thank you for your kind words ... Our research works will continue despite obstacles.

Mangala Gowri நன்றி ஐயா. அந்தப் பெண்கள் அமர்ந்திருக்கும் கோலம் ஏதோ போட்டோவுக்கு போஸ் கொடுப்பதற்கு என்றே அமர்ந்து இருப்பதால், உண்மை கதை தெரியாமல் போயிற்று. சார் உங்கள் தொடர்பு எண்கள் வேண்டும். வரலாறு குறித்த சில தகவல்களை தங்களிடம் கேட்டு தெளிவு பெற வேண்டும்...

Muthukrishnan Ipoh உண்மையிலேயே படம் பிடிக்கும் போது என்ன நடந்தது என்று நமக்குத் தெரியாது... 111 வருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட படம்... இருப்பினும் நமக்கு என ஒரு வரலாற்றுப் பதிவு கிடைத்து இருக்கிறது. மகிழ்ச்சி அடைவோம்.

Sri Kaali Karuppar Ubaasagar இந்த மாதிரி சரித்திர நிகழ்வுகளை..உங்களால் தான் வெளிச்சத்திற்கு கொண்டு வர முடியும் நன்றி அண்ணா🙏

Thennarasu Sinniah ஐயா, உங்களால் மட்டுமே இது சாத்தியமாகிறது...வாழ்க பல்லாண்டு...

Muthukrishnan Ipoh நன்றி... நிறைய படிப்பதினால் பல புதிய தகவல்கள் தெரிய வருகின்றன...

Ganesan Nagappan Muthukrishnan Ipoh படிப்பதினால் பல 'புதிய' தகவல்கள் தெரிய வருகின்றன... படிப்பதினால் பல 'பழைய' தகவல்கள் தெரிய வருகின்றன... இதில் எது சரி !? Just kidding ஐயா...

Muthukrishnan Ipoh இரண்டுமே சரிதாங்க... தகவல்கள் தாம் முக்கியம்... பழைய தகவலாக இருந்தாலும் சமகாலத்தில் அறிவிக்கப்படும் போது அது ஒரு புதிய செய்தியாகவே தெரிய வருகிறது....

Kumar Tamil Iyya ஐயா,நெகிழ்வாய் உள்ளது.தொடர்ந்து பதிவிடுங்கள்

Aaravayal Periyaiah நல்ல தகவல்! நன்றி!

Arojunan Veloo மகிழ்ச்சி; பயன்மிகுந்தத் தகவல்

Mageswary Muthiah அருமை அருமை எப்படி நன்றி கூறுவது என்று தெரியவில்லை.

Chitra Ramasamy வணக்கம் ஐயா.. உங்கள் கட்டுரைகள் மூலம் பல வரலாறுகளைத் தெரிந்து கொள்ள முடிகிறது..  நன்றி ஐயா

Mahdy Hassan Ibrahim உங்கள் நாட்டு வரலாற்றைத் தொலைவில் இருக்கும் நாமும் சிறிது அறிந்து கொள்ள வழிவகுக்கும் சிறந்த பதிவு!

Muthukrishnan Ipoh நன்றிங்க தலைவரே... உங்களின் நினைவுகள் இலங்கை வானொலியை எப்போதும் நினைவு படுத்துகின்றன...

Bala Sena தெரியாத விடயங்கள் உங்களால் தெரியப் படுகிறது ஐயா..

Inbachudar Muthuchandran நல்ல ஒரு தொகுப்பு அய்யா.நிறைய புதிய விடயங்களை தந்துள்ளீர்கள்.

Chithra Vijayan பல அறிய தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா.

DJbala Bala ஐயா, உங்களால் மட்டுமே இது சாத்தியமாகிறது...வாழ்க பல்லாண்டு...

Tamil Zakir வரலாற்று சுவடுகளை கண்முன்னே நிறுத்தும் கதாமகன் நீங்கள் வாழ்க பல்லாண்டுகள்

Muthiah Sundaram வரலாற்றுச் செய்தி.




இன்றைய சிந்தனை 17.07.2019 - சுறுசுறுப்பு டானிக்

இன்றைக்கு ஒரு குட்டிக் கதை... அது ஒரு தெருச் சந்தை. அங்கே ஓர் இளைஞன். கையில் சின்னச் சின்னப் பாட்டில்கள்.

சுறுசுறுப்பு டானிக்… சுறுசுறுப்பு டானிக்… காலையில் ஒரு தேக்கரண்டி... மாலையில் ஒரு தேக்கரண்டி... அம்புட்டுத்தான்... நாள் பூராவும் சுறுசுறுப்பாக இருக்கலாம்... என்று கூவிக் கூவி விற்றுக் கொண்டு இருந்தான்.

நிறைய பேர் வந்தார்கள். வாங்கினார்கள். சாப்பிட்டார்கள். சந்தோஷப் பட்டார்கள்.

கொடுத்த காசு வீண் போகவில்லை. சுறுசுறுப்பான டானிக் தான். தீர்ந்து போனதும் அவனைத் தேடிப் போனார்கள். ஆள் அட்ரஸ் இல்லை. காணாமல் போய் விட்டான்.

இரண்டு ஆண்டுகள் கழிந்தன. அதே அந்த இளைஞன் சந்தையில் மிட்டாய் விற்றுக் கொண்டு இருந்தான்.

அடடா தம்பி... உங்களை எங்கே எல்லாம் தேடுவது. அந்தச் சுறுசுறுப்பு டானிக் இன்னும் வேண்டும்... இத்தனை நாளும் எங்கே போனாய்...

ஜெயிலில் இருந்தேன்...

ஏன்... என்னாச்சு...

போலி மருந்து விற்றதுக்காக இரண்டு வருசம் ஜெயில்...

உங்க மருந்து போலி மருந்தா... எவன் சொன்னது... உங்க மருந்தைச் சாப்பிட்டு நான் ரொம்பவும் சுறுசுறுப்பா இருந்தேன் தெரியும்...

அது எல்லாம் இல்லீங்க... வெறும் பச்சை தண்ணியிலே சீரகம், சீனி, சோம்பு, வெந்தயத்தை இடிச்சி போட்டு விற்றேன்...

அப்படின்னா... எங்களுக்குச் சுறுசுறுப்பு கொடுத்தது...

அது உங்கள் நம்பிக்கை அண்ணாச்சி...

நம்பிக்கை என்பது மருந்து மாத்திரை இல்லைங்க. அது தான் வாழ்க்கையின் உந்து சக்தி. நம்பிக்கை இருக்கும் வரையில் இழந்தவை எல்லாம் கிடைத்துக் கொண்டே இருக்கும். எல்லாம் சரியாகிவிடும் என்று இயங்குங்கள. எல்லாமே அழகாகி விடும். நம்புங்கள் நல்லதே நடக்கும்.

பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்
Mageswary Muthiah
Image may contain: text, outdoor and nature


Raja Mutukumar
Image may contain: flower, text and nature


Tamil Zakir
Image may contain: outdoor and nature


Thanabaal Varmen
Image may contain: tree, outdoor and nature

Manickam Nadeson நம்பிக் கையை வச்சேன் இப்போ சிறையில இருக்கேன்... ஆமாம் ஐயா சார்... நான் கையை வச்சது கே.எப்.சி. கல்லாவுல.


Muthukrishnan Ipoh கிண்டல் மன்னன் மாணிக்கம் அவர்களுக்கு வணக்கம்... வாழ்த்துகள்...

Manickam Nadeson Muthukrishnan Ipoh பட்டம் வேற குடுத்துட்டீங்களா, நன்றி ஐயா சார். எப்ப பணமுடிப்பு தருவீங்க??? கையில காசு வேற இல்லீங்க ஐயா சார்.

Sheila Mohan இனிய வணக்கம். தன்னம்பிக்கை மிக்க குட்டிக்கதை , அருமைங்க சார்....!!

Santhanam Baskaran இனிய வணக்கம் ஐயா.
இந்நாள் உலக மக்கள் யாவருக்கும் மகிழ்ச்சி நிறைந்த நன்னாளாகட்டும்.


Rajaletchumy Manimegan வணக்கம் சார்.....குட்டி கதையாக இருந்தாலும் அதில் உள்ள கருத்து உணர்வு பூர்வமானது நன்றி சார்...

Melur Manoharan "இனிய" காலை வணக்கம் ஐயா...!

Image may contain: indoor


Indra Balakrishnan வணக்கம்...M R Tanasegaran Rengasamy எது எப்படியோ... இளைஞன் விற்ற சீரகம், சீனி, சோம்பு, வெந்தயக் கலவை நமது முன்னோர்களின் ஐந்தறைப் பெட்டி நாட்டு மருந்துதான்... என்றாலும் கதையில் வரும் நம்பிக்கை விதை கைகண்ட மாமருந்து. சிறப்பு...

Letchumanan Nadason தன்னம்பிக்கையூட்டும் அருமையான குட்டிக்கதை.

Barnabas இனிய காலை வணக்கம். நம்பிகைக்கு ஒரு நல்ல குட்டிக்கதை.




ஆஸ்திரேலியாவில் இரண்டாம் மொழி தமிழ்

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் மாநிலத்தில் அடுத்தக் கல்வி ஆண்டு முதல் தமிழ் மொழியும் ஒரு பாடமாகக் கற்றுத் தரப்படும் என நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு அறிவித்து உள்ளது. இது தொடர்பான தமிழ் மொழிப் பாடம் உள்ளடக்கிய புதிய பாடத் திட்டத்தையும் அந்த மாநில அரசு வெளியிட்டு உள்ளது. 


தமிழ் மலர் - 22.09.2019
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை இரண்டாவது மொழிப் பாடமாக தமிழ் பயிற்றுவிக்கப்பட உள்ளது.

இந்தி, பஞ்சாபி, பெர்சியன் மொழிகளையும் பாடத் திட்டத்தில் சேர்க்க நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு முடிவு எடுத்து உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.