08 அக்டோபர் 2019

பக்காத்தான் ஆட்சியில் கருத்துச் சுதந்திரம்

தமிழ் மலர் - 06.10.2019

முன்பைவிட மலேசியர்கள் அதிகமான கருத்து சுதந்திரம் பெற்று இருக்கிறார்கள் என்று சட்டத்துறை தலைவர் டோமி தோமஸ் கூறினார். என்னையும் அரசாங்கத்தையும் பலர் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

அந்த நிலையிலும் யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது இல்லை. இன்னும் சொல்லப் போனால் சுதந்திர காலத்திலிருந்து இப்படி ஒன்று நடந்தது இல்லை.

ஆட்சி மாற்றம் நடந்து கடந்த 16 மாதங்களில் மக்களுக்கு இந்தக் கருத்து சுதந்திரம் வழங்கப்பட்டு உள்ளது. அரசாங்கத்தையே விமர்சிக்கிறார்கள்.

யாரையும் நாம் தண்டிக்கவில்லை என்று இங்கு நடைபெற்ற ஒரு சட்ட மாநாட்டை முடித்து வைத்த போது அவர் பேசினார்.

பக்காத்தான் ஆட்சிக்கு வந்த பிறகு முக்கியப் பொதுத் துறைகளில் ஏராளமான மாற்றங்களும் மறுமலர்ச்சிகளும் வந்து உள்ளன. அதில் கருத்துச் சுதந்திரமும் ஒன்று. ஆனால் நஜிப் காலத்தில் இது இல்லை.

பக்காத்தான் கூட்டணியைச் சேர்ந்த பல தலைவர்கள் நிந்தனை சட்டத்தால் குற்றம் சாட்டப் பட்டார்கள் என்றார் அவர்.



பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்
Moon Noom   நடப்பவை யாவும் நன்மைக்கே

Sathya Raman மலேசியர்களுக்கு முன்பைக் காட்டிலும் இப்போது கருத்து சுதந்திரம் அதிகம் என்கிறார் சட்டத் துறை தலைவர். இந்த வாய் பந்தல்களுக்கு எல்லாம் ஒன்னும் குறைச்சல் இல்லை. இந்தச் சுதந்திரத்தை வைத்துக் கொண்டு தானே இந்நாட்டு அரசியல் வாதிகளும் செய்யக் கூடாத அட்டூழியத்தை எல்லாம் செய்து வருகிறார்கள்.

தேர்தலுக்கு முன் ஒரு பேச்சு... தேர்தல் முடிந்து ஒரு பேச்சு... இந்த அழகான, அமைதியான நாட்டை பல ஏவல் வேலைகளைச் செய்து குட்டிசுவராய் ஆக்கிக் கொண்டிருக்கும் தரம் கெட்ட அதிகாரத்தில் உள்ளவர்களின் சுதந்திரத்தைத் தான் முதலில் கண்டித்துக் கட்டுப்பாடுகளை விதிக்கணும் இந்தச் சட்டத்துறை தலைவர்.


Muthukrishnan Ipoh நல்ல தெளிவான கருத்துகள்... >>> தேர்தலுக்கு முன் ஒரு பேச்சு தேர்தல் முடிந்து ஒரு பேச்சு >>> முற்றிலும் உண்மைங்க... நன்றி... தொடர்ந்து பதிவு செய்யுங்கள் சகோதரி... 
Perry Muthan   AG is talking politics.. Attacking the former government!

Manickam Nadeson    AG loyal to his boss.
 
Ravi Purushothaman   நம்ம பிரதமர் ரொம்ப தெளிவானவரு!
Varusai Omar   AG must angkat tong kat Bossnylahh! Duap un Mallu.apatak lagi.?
Malabari ngan Mallu abang adik loh!
 
அதுக்குத் தானே முத்து... முன்பே பதிவிட்டேன்... "பாம்புக்கும் மீனுக்கும் கதையை...!
 
Appalasamy Jetakiah தலைவர்களைச் சிறையில் வைத்த கலாச்சாரத்தை மகாதீர்தான் தொடக்கி வைத்தார்.

Muthukrishnan Ipoh அந்த வகையில் அன்வார் அவர்கள் 20 ஆண்டுகள் சிறையில் இருந்து இருக்கிறார்...

Sathya Raman Muthukrishnan Ipoh  இன்னும் அவர் முழுமையான சுதந்திரத்தை பெறவில்லை என்றே தோன்றுகிறது சார் .




மலேசிய இந்தியர்களே ஒன்று படுவோம்

மலேசிய இந்தியர்கள் எனும் ஒரு கால வட்டத்திற்குள் மலேசிய இந்தியர்கள் அனைவரும் நெருக்கப் படுகிறார்கள். நெருக்கப்பட்டு விட்டார்கள்.


தமிழன், தெலுங்கன், மலையாளி, மராட்டி, யாழ்ப்பாணர் எனும் தனித்தனி வட்டத்திற்குள் சுவாசிக்கும் வரையில் நாம் வேறு படுகிறோம். மகாதீர் போன்ற தீரர்கள் பலருக்கும் எடுப்பார் கைப்பிள்ளையாகி விடுகிறோம்.

மலேசிய இந்தியர்களே ஒன்று படுவோம்.

சாதி, இனப் பாகுபாடுகளைத் தவிர்ப்போம். ஒரு புதிய கட்டமைப்புக்குள் உயிர்ப்போம். வாழ்ந்து காட்டுவோம். நம் பிரிவினைகளை ஒதுக்கி வைப்போம்.

காலம் நம்மை இறுக்குகிறது. காலம் நம்மைக் கட்டாயப் படுத்துகிறது. காலம் நம்மை நெருக்குகிறது. வேறு வழி இல்லை.

சாதி சமயங்களைச் சற்றே ஒதுக்கி வைப்போம். நம் வாரிசுகளின் எதிர் காலத்தை நினைத்து இன்றே ஒன்று படுவோம்.

மலேசிய இந்தியர்களாகிய நாம் ஒரு கட்டாயத்திற்குள் நெருக்கப்பட்டு வருகிறோம். ஆகவே ஒன்று படுவோம்... ஒன்று படுவோம்.

மலேசிய இந்தியர்கள் எனும் ஐக்கியத்திற்குள் ஒன்றிணைவோம். நம் எதிர்காலச் சந்ததியினருக்கு வழிகாட்டிகளாய் அமைவோம்.

இன்றே செய்வோம். அதை நன்றே செய்வோம்.


பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்
Sathya Raman வணக்கம் சார். இன்றைய காலத்திற்கு ஏற்ப, நாட்டு நடப்பை நன்கு அறிந்து நம் மலேசிய இந்தியர்களுக்கு நீங்கள் அறிவுறுத்திய நற் சேதிகளுக்கு ஒரு நன்றிங்க சார்.

மலேசிய இந்தியர்கள் இதுநாள் வரை தங்களுக்குள் கொண்டிருந்த மன மாச்சிரியங்களை விட்டொழித்து இனியாவது இந்நாட்டில் இந்தியர்களுக்கு எதிராக ஏவப்படும் அவலங்களை அறிந்து, விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டுகிறேன்.

இனியும் இளிச்சவாயர்களாக இறுமாந்து, ஏமாந்து இருப்போமானால் இன்னொரு ஈழ பேரிடரைப் போல் இந்த நாட்டு இந்தியர்களும் எதிர்நோக்கும் நிலையை ஏற்படுத்திவிடும் அபாயம் இருக்கிறது.

இன்று ஆயுத பூஜை கடந்த பத்து நாட்களாகக் கொலுவில் அமர்ந்திருந்த அம்மன், துர்காவாக, மகாலட்சுமியாக, சரஸ்வதியாகக் கோலம் பூண்டு இன்று நவராத்திரியின் நாயகியாக முழுமை பெற்று அரக்கர்களை வதம் செய்ய கொலுவிலிருந்து வெளியே வரும் நாள்.

கோலாட்சியுடன் ஆசிதரும் காமாட்சியின் துணையுடன் நமக்கு வருங்காலங்கள் நலமே அமையும் என்று நம்புவோம், அம்மன் அருள் பெறுவோம்

Perumal Thangavelu நமது ஏமாளித் தனத்தை அரசியல் வாதிகள் பலவாறு திட்டமிட்டு ஒரு வட்டத்திற்குள் கொண்டு வந்து குண்டு சட்டியில் குதிரை ஓட்டுங்கடா என்கின்றனர்.
அன்று முதல் இன்று வரை இந்திய அரசியல் வாதிகள் தமக்காக ஒரு கூட்டத்தை வைத்துக் கொண்டு அரசு மானியங்களால் உயிர் வாழ்ந்து கொண்டு பித்தலாட்டங்களை நாளும் வளர்த்துகொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பவர்களே...
Manickam Nadeson நடக்கிறதை எழுதுங்கள். இரண்டு தெலுங்கர்கள், பத்து தமிழர்களுக்கு மத்தியில் தங்களது தாய்மொழியான தெலுங்கில் தான் பேசுவார்கள். அவர்களுக்குத் தமிழில் பேச தெரிந்தாலும் அங்குள்ள தமிழர்களை மதிக்க மாட்டார்கள். எனவே நடக்கிறதை எழுதுங்கள்.
Malathi Nair Kaalai vanakam saar.Neengal solvathu unaiyo unmai.eppoluthu naam ondraga enaiyaavitaal avargal nammai veelti viduvaagal.Otrumaiye balam.sonaal pattatu.
(நீங்கள் சொல்வது உண்மையான உண்மை. இப்போது நாம் ஒன்றாக இணையாவிட்டால் அவர்கள் நம்மை விரட்டி விடுவார்கள். ஒற்றுமையே பலம். சொன்னால் பற்றாது.)
Santhanam Baskaran மிகவும் அவசியமான கருத்து. அனைவரும் உணர்ந்து ஒன்று பட்டு வாழ வாழ்த்துகள்.

Varusai Omar
ஒரு மடக்கூவை கூவுறான் இன்னும் 5/6 ஆண்டுகளிலே பிற மொழிப் பள்ளிகளை ஒழிச்சிடனுமாம்'லெ?

இதென்ன சீப்பா, ஒளிச்சு வைக்க!

இந்த ஓநாய்களே ஒழிந்து போவார்கள்.
நமக்குத்தான் ஒற்றுமை என்றாலே ஏதோ மை ஒத்துற தாளுன்னு நினைக்கிறாங்க? ஒன்றிணைக்க கண்ணுக்கு எட்டிய தூரத்திற்கு யாருமே தென்படலியே?

இந்தியர்களுக்காகத் தான் ம.இ.கா.?  மெய்யாலுமா!

அதுதான் மாமன் மச்சான் மச்சினி, அப்பாலே சாதிக்காரனுக்கு... இப்படி, வந்ததை எல்லாம் வாரிச்  சுருட்டி வாயிலே போட்டாச்சே?

இப்போ காஞ்சு போன எலும்புத் துண்டு கூட இல்லாமல், குத்துயிரும் கொலை உயிருமா, ICU-இல் கெடக்காமே!?

Dorairaj Karupiah சிந்திப்பாயா தமிழா எங்கே இருந்தோம்... எங்கே நிற்க்கிறோம்... எங்கே தள்ளப்பட போகிறோம்...

ஏ தமிழா இன்னொரு தமிழனை...

உன் நண்பணாய் சகோதரனாய்...

ஏற்றுக் கொள்... அதுதான் காலத்தின் கட்டாயம்...


M R Tanasegaran Rengasamy தாய்மொழிப் பள்ளிகள் மீது கை வைக்க அண்மையில் கூடிய மானம் காக்கும் கூட்டம் முடிவு எடுத்துள்ளது. அக்கூட்டதில் பிரதமர் கலந்து கொண்டிருப்பது துரதிர்ஷ்டமாகும்.

மண்ணின் மைந்தர்கள் எனும் கேடயம் மூலம் நம்மை ஒடுக்கப் பார்க்கிறார்கள். இவ்வேளையில் நம்முடைய ஒற்றுமை மிக மிக அவசியம்.
(தொடரும்)







06 அக்டோபர் 2019

நீல உத்தமன் - 3

நீல உத்தமன் சிங்கப்பூரின் ஆட்சியாளராகப் பதவி ஏற்றதும் அவருடைய பெயரை ஸ்ரீ திரி புவனா என்று மாற்றம் செய்து கொண்டார். புவனம் என்றால் உலகம். ஸ்ரீ திரி புவனா என்றால் மூன்று உலகங்களின் அதிபதி.

முன்பு காலத்தில் இந்துக்கள், அண்டப் பிரபஞ்சத்தை மூன்று உலகங்களாகப் பிரித்து இருந்தார்கள். தெய்வங்களின் உலகம்; மனிதர்களின் உலகம்; கெட்ட ஆவிகளின் உலகம் என மூன்று உலகங்கள். அந்த வகையில் நீல உத்தமனுக்கு ஒரு சிறப்பான பெயர்.




நீல உத்தமனைப் பற்றிய வரலாற்றில் மேற்கத்திய வரலாற்று ஆசிரியர்கள் எவ்வித மாறுபாட்டுக் கருத்துகளைக் கொண்டு இருக்கவில்லை. நீல உத்தமன் இந்தோனேசியாவில் இருந்து வந்த ஓர் இந்தியர். பல்லவ இனத்தைச் சேர்ந்தவர் எனும் கருத்தில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.

ஆனால் மலாய் வரலாற்றுக் காலக் குறிப்புகள் (Malay Annals), நீல உத்தமனை வேறு விதமாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன். அதைப் பற்றி கல்வியாளர்கள் இன்றும் விமர்சித்து வருகிறார்கள்.

லோ டி ஜோங் (Loe de Jong) என்பவர் டச்சு வரலாற்று ஆசிரியர். இந்தோனேசியாவில் நீண்ட காலம் வாழ்ந்தவர். அவர் சொல்கிறார். மலாய் வரலாற்றுக் காலக் குறிப்புகளில் நீல உத்தமனைப் பற்றிய வரலாற்று புள்ளிவிவரங்களும்; நிகழ்வுகளும் ஒன்றுடன் ஒன்று யதார்த்தமாகக் கலக்கப்பட்டு உள்ளன என்று சொல்கிறார். 




(The Character of Malay Annals, the stories of the Malay Annals could have been realistically mixed with the historical figures and events.)

இருப்பினும் 1299-ஆம் ஆண்டு சிங்கப்பூரை நீல உத்தமன் என்பவர் தான் தோற்றுவித்தார் என்பதில் மாற்றுக் கருத்துகள் வைக்கப்படவில்லை. அதை மலாய் வரலாற்றுக் காலக் குறிப்புகள் ஏற்றுக் கொள்கின்றன.

சிங்கப்பூரை நீல உத்தமன் ஆட்சி செய்யத் தொடங்கிய பின்னர் 1320-ஆம் ஆண்டு சீனாவில் இருந்து ஒரு சீனத் தூதர் சிங்கப்பூருக்கு வந்தார். அவருடைய பெயர் வாங் டாயூவான் (Wang Dayuan).

அவர் சீன அரசரின் பிரதிநிதியாகும். அவர் நீல உத்தமனைச் சிங்கப்பூரின் அதிகாரப் பூர்வமான ஆட்சியாளராக ஏற்றுக் கொண்டார். அது சயாம் நாட்டிற்கு எதிரான ஒரு செயலாகும். வெந்த புண்ணில் வெங்காயத்தைத் தடவுவது போன்றது.

(The Travels of Marco Polo - Harmondsworth, Middlesex; New York: Penguin Books, Penguin Classics, 1958). 




நீல உத்தமனைச் சிங்கப்பூரின் அதிகாரப் பூர்வமான ஆட்சியாளராக ஏற்றுக் கொண்டது மட்டும் அல்ல; அவருக்கு ஸ்ரீ மகாராஜா சாங் உத்தாமா பரமேஸ்வரா பத்தாரா ஸ்ரீ திரி புவனா (Sri Maharaja Sang Utama Parameswara Batara Sri Tri Buana) எனும் சிறப்புப் பெயரையும் அந்தச் சீனத் தூதர் வழங்கிச் சென்றார்.

(Singapore: Ministry of Culture. p. 9. ISSN 0217-7773)

நீல உத்தமனின் சிங்கப்பூர் புதிய நிர்வாகத்திற்குச் சீனாவின் பக்கபலம் இருந்தது. அதே சமயத்தில் பாதுகாப்பும் இருந்தது. இதைப் பார்த்த சயாம் தயக்கம் அடைந்தது மட்டும் அல்ல.  சிங்கப்பூரின் மீது தாக்குதல் நடத்தவும் சயாம் பின் வாங்கியது.

சிங்கப்பூரை நீல உத்தமன் ஆட்சி செய்த காலத்தில் சுமத்திராவில் இருந்த மஜபாகித் அரசு திடீரென்று சிங்கப்பூரின் மீது தாக்குதல் நடத்தியது.

புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட நீல உத்தமனின் சிங்கப்பூர் அரசு ஏற்கனவே மஜாபாகித்தின் மீது சில தாக்குதல்களையும் நடத்தி இருக்கிறது. அதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். 




அந்தத் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தான் மஜாபாகித்தின் திடீர் தாக்குதல்கள் அமைந்தன.

எல்லாமே சண்டைகள் சச்சரவுகள். அவன் அடித்தால் இவன் திருப்பி அடிப்பது. இவன் அடித்தால் அவன் திருப்பி அடிப்பது. அப்புறம் கத்திக் குத்து, சமுராய் சண்டை. அந்த அழகுச் சண்டைகள் இன்னும் தொடர்கின்றன.

இப்போது நம் மலேசிய நாட்டில் நடக்கும் குண்டர் கும்பல் சண்டைகளைத் தான் சொல்கிறேன்.

நீல உத்தமன் 1347-ஆம் ஆண்டு காலமானார். அவருடைய உடல் சிங்கப்பூரின் புக்கிட் லாராங் (Fort Canning Hill) எனும் புக்கிட் லாராஙான் (Bukit Larangan) குன்றின் அடிவாரத்தில் புதைக்கப் பட்டது. 




அவருடைய மனைவியும் அங்கே தான் அமைதி கொள்கிறார். வரலாற்று ஆவணங்கள் சொல்கின்றன. இருந்தாலும் அவர்களுடைய சமாதிகளை இன்று வரை எவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. வேதனையான செய்தி.

(Tsang, Susan; Perera, Audrey - 2011)

நீல உத்தமனுக்குப் பிறகு அவருடைய மகன் ஸ்ரீ விக்கிரம வீர ராஜா (Sri Wikrama Wira) என்பவர் சிங்கப்பூரின் ராஜாவாகப் பதவி ஏற்றார். இவர் 1372-ஆம் ஆண்டில் இருந்து 1386-ஆம் ஆண்டு வரை சிங்கப்பூரை ஆட்சி செய்தார். 

ஸ்ரீ விக்ரம வீராவின் தாயார் பெயர் ஸ்ரீ பினி (Sri Bini). அதாவது நீல உத்தமனின் மனைவியின் பெயர் ஸ்ரீ பினி. இந்தப் பினி எனும் சொல்லில் இருந்து தான் பினி (மனைவி) எனும் மலாய்ச் சொல்லும் உருவாகி இருக்கலாம்.

ஸ்ரீ விக்ரம வீரா 1362-ஆம் ஆண்டு வரை சிங்கப்பூரை ஆட்சி செய்தார். ஸ்ரீ விக்ரம வீராவின் மனைவியின் பெயர் நீலா பாஞ்சாலை. இவருடைய காலத்தில் தான் சயாமிய அரசின் ஒரு பெரிய தாக்குதலும் நடந்தது. 




வடக்கே சயாம் நாட்டில் இருந்து 70 கப்பல்களில் சயாமியர்கள் வந்தனர். பயங்கரமான தாக்குதல் நடத்தினர். இருந்தாலும் சிங்கப்பூரை அசைக்க முடியவில்லை. மூன்று மாதம் வரை தாக்குப் பிடித்தது.

அதற்குள் சீனாவில் இருந்து சீனக் கடற்படை களம் இறங்கி விட்டது. கடைசியில் சயாமியர்களின் முற்றுகை தோல்வியில் முடிந்தது.

இந்தக் காலக் கட்டத்தில் மஜாபாகித் அரசு ஜாவாவில் மிகவும் பலம் வாய்ந்த அரசாக விளங்கியது. சிங்கப்பூரின் துரிதமான வளர்ச்சியைக் கண்டு அதன் மீது மஜாபாகித் அரசிற்குப் பேராசை ஏற்பட்டது.

குறுகிய காலத்தில் ஒரு குட்டி அரசு இப்படி அபரிதமான செல்வாக்கைப் பெற்று விட்டதே எனும் ஆதங்கம் வேறு.

மஜாபாகித் அரசின் இராணுவத் தளபதியாக காஜா மாடா (Gajah Mada) என்பவர் இருந்தார். இவரின் உண்மையான பெயர் கஜ மதன். இந்த கஜ மதன் எனும் பெயர் தான் பின்னாட்களில் காஜா மாடா என்று மாறியது. 




நுசாந்தாரா (Nusantara) என்று அழைக்கப்பட்ட இந்தோனேசியத் தீவுக் கூட்டங்களில் இருந்த எல்லா அரசுகளையும் கைப்பற்றி அவற்றை மஜாபாகித் அரசின் கீழ் கொண்டு வருவதே காஜா மாடாவின் இலட்சியமாக இருந்தது. இவர் பேராவல் கொண்ட ஓர் இராணுவ தலைவர்.

சுமத்திராவில் இருந்த ஸ்ரீ விஜய பேரரசையும் கைப்பற்ற திட்டம் வகுத்தார். அப்போது ஸ்ரீ விஜய பேரரசின் ஆளுமை மங்கி வந்த காலம். அந்த அரசையும் மஜாபாகித் அரசின் கீழ் கொண்டு வருவதற்குப் பயங்கரமான திட்டம் வகுத்தார்.

1350-ஆம் ஆண்டில் மஜாபாகித் அரசின் பேரரசராக ஹாயாம் ஊருக் (Hayam Wuruk) என்பவர் பதவி ஏற்றார். இவரின் அசல் பெயர் ராஜ ஜனகரன் (Rajasanagara). இவர் இராஜசா (Rajasa Dynasty) பரம்பரையைச் சேர்ந்தவர்.

இவர் சிங்கப்பூர் அரசிற்கு ஒரு தூதுச் செய்தியை அனுப்பினார். அதாவது சிங்கப்பூர் அரசு மஜாபாகித் அரசிற்கு அடிபணிந்து அதன் கீழ் ஆட்சி செய்ய வேண்டும் எனும் தூதுச் செய்தி.

அந்தச் செய்திக்கு ஸ்ரீ விக்கிரம வீர ராஜா அடிபணியாமல் மறுத்து விட்டார். அதோடு விட்டு இருந்தால் பரவாயில்லை. அப்படியே ராஜ ஜனகரன் சிங்கப்பூருக்கு வந்தால் அவருடைய தலையைக் கொய்யப்படும் என்றும் செய்தி அனுப்பினார். 




ராஜ ஜனகரன் சினம் அடைந்தார். உடனே சிங்கப்பூரைத் தாக்கத் திட்டம் வகுத்தார். 180 போர்க் கப்பல்களையும் எண்ணற்ற உதவிக் கப்பல்களையும் அனுப்பினார்.

பிந்தான் தீவு வழியாக ராஜ ஜனகரனின் கப்பல் அணிவகுத்து வரும் செய்தி சிங்கப்பூருக்கு எட்டியது. உடனே சிங்கப்பூரைத் தற்காக்க 400 போர்க் கப்பல்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. சிங்கப்பூர் கடற்கரைப் பகுதியில் போர் மூண்டது. அந்தப் போர் மூன்று நாட்கள் நீடித்தன. 

கடற்போரில் ராஜ ஜனகரனின் கப்பல் படை அவ்வளவாக அனுபவம் இல்லாதது. அதனால் இலகுவாகத் தோற்கடிக்கப் பட்டது. இந்தப் போரில் ராஜ ஜனகரன் தோல்வி அடைந்தார்.

 (2. A. Samad, Ahmad (1979), Sulalatus Salatin - Sejarah Melayu)

அதன் பின்னர் ஸ்ரீ விக்ரம வீரா 1362-ஆம் ஆண்டு வரை சிங்கப்பூரின் ராஜாவாக இருந்தார்.

ஸ்ரீ விக்ரம வீராவிற்குப் பின்னர் ஸ்ரீ ராணா விக்கிரமா (Sri Rana Wikrama) என்பவர் ஆட்சிக்கு வந்தார். இவர் சிங்கப்பூரின் மூன்றாவது ராஜா. 1375-ஆம் ஆண்டு வரை 13 ஆண்டுகள் சிங்கப்பூரை ஆட்சி செய்தார்.

(3. Dr. John Leyden - 1821)

இந்தச் சமயத்தில் சிங்கப்பூரின் ஆட்சியில் சில திருப்பங்களும் குழப்பங்களும் ஏற்பட்டன. குடும்பச் சச்சரவுகள் தான் மூல காரணம். அதனால் நீல உத்தமனின் பேரனாகிய ஸ்ரீ ராணா வீரா கர்மா (Sri Rana Wira Karma) என்பவர் சிங்கப்பூரின் ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டிய ஒரு கட்டாய நிலை ஏற்பட்டது.




ஸ்ரீ ராணா வீரா கர்மா சிங்கப்பூரை 13 ஆண்டுகள் ஆட்சி செய்தார். அதன் பின்னர் சிங்கப்பூரின் அரசராக ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா (Sri Maharaja Parameswara) என்பவர் பதவிக்கு வந்தார்.

இவர் நீல உத்தமனின் கொள்ளுப் பேரன் ஆகும். இந்த ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா என்பவர் தான் மலாக்காவைத் தோற்றுவித்த பரமேஸ்வரா.

ஸ்ரீ விக்ரம வீராவிற்குப் பின்னர் ஸ்ரீ ராணா விக்கிரமா (Sri Rana Wikrama) என்பவர் ஆட்சிக்கு வந்தார். இவர் சிங்கப்பூரின் மூன்றாவது ராஜா. 1375-ஆம் ஆண்டு வரை 13 ஆண்டுகள் சிங்கப்பூரை ஆட்சி செய்தார்.

(3. Dr. John Leyden - 1821)

இந்தச் சமயத்தில் சிங்கப்பூரின் ஆட்சியில் சில திருப்பங்களும் குழப்பங்களும் ஏற்பட்டன. குடும்பச் சச்சரவுகள் தான் மூல காரணம். அதனால் நீல உத்தமனின் பேரனாகிய ஸ்ரீ ராணா வீரா கர்மா (Sri Rana Wira Karma) என்பவர் சிங்கப்பூரின் ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டிய ஒரு கட்டாய நிலை ஏற்பட்டது.




ஸ்ரீ ராணா வீரா கர்மா சிங்கப்பூரை 13 ஆண்டுகள் ஆட்சி செய்தார். அதன் பின்னர் சிங்கப்பூரின் அரசராக ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா (Sri Maharaja Parameswara) என்பவர் பதவிக்கு வந்தார்.

இவர் நீல உத்தமனின் கொள்ளுப் பேரன் ஆகும். இந்த ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா என்பவர் தான் மலாக்காவைத் தோற்றுவித்த பரமேஸ்வரா.

ஸ்ரீ ராணா வீரா கர்மாவிற்குப் பின்னர் வந்தவர் தான் ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா (Sri Maharaja, Raja of Singapura). அதாவது மலாக்காவின் கதாநாயகன் பரமேஸ்வரா. (F2) 

இவர் நீல உத்தமனின் கொள்ளுப் பேரன். 1389-ஆம் ஆண்டில் இருந்து 1398-ஆம் ஆண்டு வரை சிங்கப்பூரின் ராஜாவாக இருந்தார். 1375-ஆம் ஆண்டில் இருந்து 1389 வரை என்ன நடந்தது எனும் விவரங்கள் நமக்கு சரியாகக் கிடைக்கவில்லை. இதைப் பற்றியும் ஆய்வுகள் செய்து கொண்டு வருகிறார்கள்.

*செஜாரா மலாயு* எனும் மலாய் வரலாற்றுக் காலக் குறிப்புகள் சிங்கப்பூரை உருவாக்கிய நீல உத்தமனைப் பற்றி வேறு கோணத்தில் சித்தரிக்கின்றது. அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று வரலாற்று அறிஞர்கள் கருத்து கூறுகின்றனர். 




ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா என்பவர் நீல உத்தமனின் கொள்ளுப் பேரன் ஆகும். சொல்லி இருக்கிறேன். இவர் மஜாபாகித்தின் தொடர் தாக்குதலில் இருந்து தப்பிக்க நினைத்தார்.

அதனால் சிங்கப்பூரில் இருந்து வெளியேறினார். உள்ளூர் வரலாற்று நூல்களில் சயாம் நாடுதான் சிங்கப்பூரைத் தாக்கியதாகச் சொல்லப் படுகிறது. உண்மை அதுவல்ல.

உண்மையில் மஜாபாகித் அரசின் பெயரை மறைத்து விட்டார்கள். தெரியாமல் செய்தார்களா... தெரிந்தே செய்தார்களா. தெரியவில்லை. அது ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம்.

அது மட்டும் இல்லை. முன்பு துமாசிக்கை ஆட்சி செய்த தெமாகியைப் பரமேஸ்வரா கொலை செய்துவிட்டு ஆட்சியைக் கைப்பற்றியதாகச் சிலர் சொல்வார்கள். சில வரலாற்று நூல்களும் அப்படித் தான் சொல்கின்றன. அது ரொம்பவும் தப்பு. 




தெமாகியைக் கொன்றது நீல உத்தமன். பரமேஸ்வரா அல்ல. இந்த உண்மையை இப்போதாவது தெரிந்து கொள்ளுங்கள். பாவம் ஒரு பக்கம். பழி ஒரு பக்கம்.

சிங்கப்பூரின் முதல் ராஜா நீல உத்தமன். இவர் 1299-ஆம் ஆண்டில் இருந்து 1347-ஆம் ஆண்டு வரை சிங்கப்பூரை ஆட்சி செய்தார்.

இரண்டாவதாக வந்தவர் ஸ்ரீ விக்கிரம வீரா. இவர் 1347-ஆம் ஆண்டில் இருந்து 1362-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார்.

மூன்றாவதாக வந்தவர் ஸ்ரீ ராணா விக்கிரமா. இவர் 1362-ஆம் ஆண்டில் இருந்து 1375-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார்.

நான்காவதாக வந்தவர் ஸ்ரீ மகாராஜா. இவர் 1375-ஆம் ஆண்டில் இருந்து 1389-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார்.

ஐந்தாவதாக வந்தவர் பரமேஸ்வரா. இவர் 1389-ஆம் ஆண்டில் இருந்து 1398-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார். பரமேஸ்வரா தான் சிங்கப்பூரை ஆட்சி செய்த ஐந்தாவது ராஜா. கடைசி ராஜா. இவர் ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா என்று அழைக்கப் பட்டார்.   

பரமேஸ்வரா சிங்கப்பூரின் ராஜாவாக இருந்த போது சுமத்திராவின் மஜாபாகித் அரசு சிங்கப்பூர் மீது அடுத்தடுத்து தாக்குதல்களை நடத்தியது. அந்தத் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாமல் சிங்கப்பூரில் இருந்து பரமேஸ்வரா வெளியேறினார்.

ஒரு செருகல். செஜாரா மலாயு (Sejarah Melayu) எனும் மலாய் வரலாற்றுக் குறிப்புகள் பரமேஸ்வரா எனும் சொல்லைப் பயன்படுத்தவில்லை. மாறாக ஸ்ரீ மகாராஜா எனும் பெயரையே பயன்படுத்தி இருக்கிறது.

(இந்தக் கட்டுரைத் தொடர் தயாரிப்பு நிலையில் உள்ளது. பின்னர் தொடரும்)





எக்ஸ்சேஞ்ச் 106 கோபுரம் மலேசியா

மலேசியாவில் உயர்ந்த கோபுரமாய் உச்சம் பார்த்து உவகை பூத்தக் கோபுரங்கள் பெட்ரோனாஸ் கோபுரங்கள் (Petronas Twin Towers). தெரிந்த விசயம். இப்போது இல்லை. அவை அவற்றின் அருமை பெருமை மகிமைகளை எல்லாம் இழந்து விட்டன.  



போட்டியாக எக்ஸ்சேஞ்ச் கோபுரம் (Exchange 106) வந்து விட்டது. மலேசியாவின் அடுத்த உயர்ந்த கோபுரம்.

இந்த எக்ஸ்சேஞ்ச் 106 கோபுரம் தான், இப்போதைக்கு மலேசியாவிலும் தென் கிழக்கு ஆசியாவிலும் மிக உயர்ந்த கோபுரம் ஆகும். உலகின் உயரமான 15 வானளாவிகளில் இதுவும் ஒன்று.

(This building is so tall that it’s now among the top 15 tallest buildings in the world!)

அதையும் தாண்டிய நிலையில் உலகில் மிக உயர்ந்த கோபுரங்களின் பட்டியலிலும் தடம் பதித்து விட்டது.

பெட்ரோனாஸ் கோபுரங்களின் உயரம் 452 மீட்டர். எக்ஸ்சேஞ்ச் கோபுரத்தின் உயரம் 492 மீட்டர். கிட்டத்தட்ட அரை கி.மீ. உயரம். இரண்டுக்கும் 40 மீட்டர் வேறுபாடு. பெட்ரோனாஸ் கோபுரங்கள் 88 மாடிகள். எக்ஸ்சேஞ்ச் 106க்கு; 106 மாடிகள்.



Petronas Twin Towers: 451.9m
Exchange 106: 492.3m

உள்ளே 2116 கார்களை நிறுத்தி வைக்கலாம்.

2000 பேர் தொடர்ந்து வேலை செய்து இருக்கிறார்கள்.

The whole operation was so huge that it required:

* 120 cement mixers
* 8.5 million kg of cement
* 16 million kg of sand
* 19 million kg of construction aggregates
* 2 million kg of ice to counter the heat generated in the construction process




பயங்கரமான புயல் காற்று அடித்தாலும் லேசில் அசைத்துவிட முடியாது. பத்து மீட்டர் அளவிற்கு அப்படியும் இப்படியும் வளைந்து கொடுக்கும் ஆற்றலைப் பெற்றது.

ஜப்பானில் அடிக்கடி வந்து போகும் மாமியார் வீட்டு நில நடுக்கங்களையும் தாங்கிக் கொள்ளும் அளவிற்குப் பக்காவாகக் கட்டி இருக்கிறார்கள். பேய்க் காற்று பிசாசு காற்று எல்லாம் ஒன்றும் வாசிக்க முடியாது.

இந்த எக்ஸ்சேஞ்ச் கோபுரத்தின் அடிப்பாகத்தில் நான்கு மாடி உயரத்திற்கு இராட்சச அதிர்ச்சி உறிஞ்சிகளை வைத்து இருக்கிறார்கள். நம்ப புந்தோங் பூச்சிக் கண்ணா பாஷையில் ’லூஸு ஸ்பிரிங்ஸ்’.

பத்து மீட்டருக்கு வளைந்து தளர்ந்து மறுபடியும் நிமிர்ந்து கொள்ளும். கோபுரம் அப்படியும் இப்படியும் வளையும் போது, கட்டடத்தின் உள்ளே மாட்டிக் கொண்டவர்களுக்குப் பாதி உயிர் போய் வரலாம். 




இருந்தாலும் பிரச்சினை இல்லை. உயிருக்கு உத்தரவாதம். அப்புறம் என்னங்க.

என்னதான் புயல்காற்று வீசினாலும் கோபுரம் சரிவதற்கான வாய்ப்பு இல்லை. இன்னும் ஒரு பிளஸ் பாயிண்ட். வெடி குண்டு வைத்து தகர்த்துவிட முடியாது. நடக்காத காரியம். வெடி மருந்து நுகர்வுச் சாதனங்கள் மூலைக்கு மூலை வைத்து இருக்கிறார்கள்.

வெடிமருந்து வாடை 100 மீட்டர் தொலைவில் தெரிந்து விடும். மற்றபடி எந்த மாதிரியாகவும் மோடி மஸ்தான் வேலை நடக்காது. ஒன் மினிட் பிளீஸ்.

பக்காவா பிளான் பண்ணி ஓட்டையைப் போட்டு ஆட்டையைப் போடுகிற மாதிரியான வேலை எல்லாம் நடக்காது என்று சொல்ல வருகிறேன். அந்த மாதிரி பக்குவமாகக் கட்டி இருக்கிறார்கள்.

அப்புறம்... ஏரோபிளேன் வைத்து மாஸ்டர் பிளேன் போட ஒசாமா மாதிரியான ஆட்கள் இல்லையே. கொஞ்சம் கூடுதலான மகிழ்ச்சி அடையலாமே.

இதற்கு முன்னர் தென் கிழக்கு ஆசியாவிலேயே மிக உயரமான கட்டடமாக வியட்நாம் நாட்டின் லேண்ட்மார்க் 81 (Landmark 81) கோபுரம் இருந்தது. இப்போது இல்லை. அந்த விருதை மலேசியாவின் எக்ஸ்சேஞ்ச் கோபுரத்திற்குக் கொடுத்து விட்டார்கள். 




ஓர் ஒப்பீடு செய்தால்... சிங்கப்பூரின் தஞ்சோங் பாகார் குவோகோ (Guoco Tower) கோபுரம் 290 மீட்டர் உயரம்.

இலங்கையின் தாமரை கோபுரம் 356 மீட்டர். பெட்ரோனாஸ் கோபுரங்கள் 452 மீட்டர்.

துபாய் நகரின் புர்ச் கலிபா (Burj Khalifa) 830 மீட்டர். போதுங்களா.

கோலாலம்பூருக்கு அருகாமையில் துன் ரசாக் நகர் மாற்றுத் திட்டம் (Tun Razak Exchange) உருவாகி வருகிறது. சுருக்கமாக டி.ஆர்.எக்ஸ். (TRX). 2015-ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.

இந்த 2019-ஆம் ஆண்டில் எண்பது விழுக்காட்டு வேலைகள் முடிவு அடைந்து உள்ளன. 2021-ஆம் ஆண்டில் முற்றாக நிறைவு பெறும்.




இது கோலாலம்பூரின் மிகப் பெரிய... மிகப் பிருமாண்டமான நிதி வளாகமாக மாறி வருகிறது. முன்னாள் பிரதமர் துன் ரசாக் நினைவாக இந்தத் திட்டம்.

கோலாலம்பூரில் உள்ளவர்களுக்கு நிறையவே கொடுக்கல் வாங்கல் நிதி பரிமாற்றங்கள். அனுதினமும் புத்ராஜெயாவிற்குப் போய் வர முடியாது என்று சொல்லி இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தார்கள்.

புத்ராஜெயாவைக் கொண்டு வந்தது மகாதீர். அதற்குப் போட்டியாக உருவாக்கப் பட்டது தான் இந்த எக்ஸ்சேஞ்ச் கோபுரம் (Exchange 106). கொண்டு வந்தது யார் தெரியுங்களா?

நம்ப ரோசாப்பூ ரோசம்மாவின் அன்புக் கணவரும்... டிவிட்டர் மன்னரும்... பிக் பாஸ் என்று புகழாரம் செய்யப்படும் முன்னாள் பிரதமர் ஐயா அவர்கள் தான்.

இந்தத் துன் ரசாக் நகர் மாற்றுத் திட்டத்தைக் கையில் எடுத்த பின்னர் தான் பல கோடிகள் பரிமாறிக் கொள்ளப் பட்டன. கொஞ்ச நஞ்ச லஞ்சம் இல்லை. முதலையை முழுக்காடு போட்டு முழுங்கிய மாதிரி...




இப்போது நீதிமன்றத்தில் நஜீப் சார் படும் வேதனைகள் சொல்லில் மாளா. பொம்பள பேச்சைக் கேட்டு பொசுங்கி நசுங்கிப் போயிட்டாருங்க. பாவம் அவர். பிளே பாய் ஜோ லோ என்பவரையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

நஜீப் சாருக்கு ரொம்பவுமே உதவி செய்தவர் ரோசாப்பூ. பெரியவரின் புத்ராஜெயா அலுவலகத்திலேயே ஒரு பகுதியை இடித்து உடைத்து ஓர் உளவுத் துறையை உருவாக்கினார் ரோசாப்பூ. அங்கே ஒரு குட்டி மாபியா கும்பலையே நடத்தி இருக்கிறார். பற்பல மில்லியன்களில் பணப் பட்டுவாடா. எல்லாமே கமிஷன் கரைத்தல் காஞ்சனா சமசாரங்கள்.

இப்போது மாட்டிக் கொண்டு கோர்ட்டும் வாசலுமாய் ஓடிக் கொண்டுத் திரிகிறாரே முன்னாள் அமைச்சர் துங்கு அட்னான்... அவரும் இதில் மாட்டிக் கொண்டவர் தான். நஜீப் சாரைச் சொல்லவே வேண்டாம். கறுப்புப் பட்டியலில் முதலிடம்.

எக்ஸ்சேஞ்ச் கோபுரம் தொடர்பான கூடுதலான தகவல்களை இன்று இரவில் பதிவு செய்கிறேன். பொறுத்துக் கொள்ளுங்கள். நாளைய பத்திரிகைக்கு கட்டுரை தயாரிக்கணும்... சரிங்களா...

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
06.10.2019

 

பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்
Mangala Gowri வணக்கம் சார். கட்டுரையைப் படித்த பின்னர் வாய் வார்த்தை ஏதுமின்றி இருக்கிறேன். தமிழக டிவி சீரியல்கள் நம்ப ரோசாப்பூவிடம் ஒரு நாள் பேட்டி எடுத்தால் போதும், எத்தனையோ சீரியல்களை உருவாக்கி விடுவார்கள்... அவரின் ஊழல் நாடகத்தை மையமாக வைத்து. ஒரு பெண் இத்தனை அராஜகமாகவா?! கடவுளே அறிவான்
 
Muthukrishnan Ipoh உண்மையிலேயே நஜீப் ஒரு நல்ல மனிதர்... அவரை இந்த நிலைமைக்கு கொண்டு வந்ததே ரோசாப்பூ தான்... நஜீப் நம்ப இந்தியர்களுக்கு நிறைய உதவிகள் செய்து இருக்கிறார்... அதை மறக்கக் கூடாது...
Mahdy Hassan Ibrahim கோபுரங்களின் உச்சியில் எல்லோரையும் கொண்டு போய் அமர்த்தி விட்டது உங்கள் பதிவு!
 
Muthukrishnan Ipoh நன்றிங்க... என்ன இருந்தாலும் இலங்கையின் தாமரை கோபுரம் கண்ணுக்குள் இருக்கிறது... கண்டிப்பாக பார்க்க வேண்டும்... விரைவில்...
 
Hamba Mu Umar Umar Tamilar muthukrishnan.vazgah valamudan ayyah Tamil saritarah guruveh. (தமிழர் முத்து... வாழ்க வளமுடன் ஐயா... தமிழ் சரித்திர குருவே)
 
Santhanam Baskaran இனிய வணக்கம். நல்ல தகவல்கள்.
 
Melur Manoharan "இனிய" மதிய வணக்கம் ஐயா...!
 
Image may contain: one or more people, people standing, outdoor and nature 
 
Muthukrishnan Ipoh அழகு அழகு மேலூர் தம்பி....
Sathya Raman வணக்கம் சார். அம்மாடியோ! இந்த எக்ஸ்சேஞ் கோபுரத்தின் பின்னணியில் இவ்வளவு பிரளயம் இருக்கிறதா? கோலாலம்பூர் செல்லும் பொழுது எல்லாம் இந்தச் சாலை வழியாகப் போகும் வாய்ப்பு கிடைத்தால் இன்னும் முழுமை பெறாத அந்தக் கட்டிடத்தை அண்ணார்ந்து பார்க்கும் போது இந்த நாட்டு அரசியல் மாற்றதால் சிறிது காலம் கட்டிட வேலைகள் நிறுத்தப் பட்டதாகக் கேள்விப் பட்டேன்.
ஆனால் அந்தக் கட்டிடம் முழுமைப் பெற்று பெட்ரோனாஸ் இரட்டை கோபுரத்தையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு இருப்பதைத் தங்களின் ஆய்வுக் கட்டுரையைப் படித்து அறிய முடிந்தது சார்.
நாட்டின் முக்கால் வாசி கருவூலத்தையே களவாடிய நம் நாட்டின் முன்னாளும், அவரின் [உங்கள் பாஷையில் சொன்னால்] ரோசாப்பூ ரோஸ்மாவும் மற்றும் மந்திரி பரிவாரங்களும் வெச்சி செய்த ஊழல்களுக்கு மத்தியிலும் இந்தக் கட்டிடம் களைக் கட்டி நிற்பது ஆச்சரியமே.

நானும் என் மகனும் பேசிக் கொள்ளும் பொழுது இத்தகைய பொது விசயங்களை அவ்வப்போது அலசுவது உண்டு. அப்படி அளவளாவியதில் ஒரு விசயம் அறியப் பட்டேன். இந்த எக்ஸ்சேஞ் கட்டிடத்தை மிஞ்சும் அளவிற்கு பி.எம்.பீ. கட்டிடமே மலேசியாவில் வருங்காலத்தில் அதிக உயரமான கட்டிடமாம்.




ஏற்கனவே முன்னாள் பிரதமர் நஜீப் துன் ரசாக் அவர்களின் திட்டத்தில் உருவாகிக் கொண்டிருந்த இந்த பி.எம்.பீ. கட்டிடத்தை ஒரு சில வடிவமைப்பில் மாற்றம் செய்து, இந்நாள் அரசாங்கம் அந்தப் பணிகளை ஏற்று நடத்துவதாகத் தகவல்.

இன்னும் நான்கு அல்லது ஐந்து மாதங்களில் அந்தக் கட்டிட வேலைகளும் முழுமையாகப் பூர்த்தி ஆகிவிடுமாம். நஜீப் அரசாங்கத்தால் 108 மாடிகளாக நிர்ணயிக்கப்பட்ட அந்தக் கட்டிடம் மகாதீர் அரசாங்கத்தால் 118 மாடிகளாக மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

இதை வைத்துப் பார்க்கும் போது எக்ஸ்சேஞ்சை 106-ஐ விட பி.எம்.பீ. கட்டிடமே மலேசியாவிலும், ஆசியாவிலும் மிக உயர்ந்த கட்டிடமாக இருக்குமாம்.

இதில் என்ன உறுத்தல் என்றால் நாட்டில் காசின் கையிருப்பு காலி எனவும், கடன் சுமையே அதிகம் என்றும் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த போது மக்களிடம் தங்கள் குறைகளை முன் வைத்த போது நம் மக்களும் கோடிக் கோடியாய் நிதியை வாரி வழங்கினர்.

ஆனால் இன்று நிலைமையே வேறு. நாட்டின் சுமைகளைத் தங்களின் தோளில் சுமந்த மக்களுக்கு நன்றிக் கடனாக இந்த அரசாங்கம் தன் மூப்பாகவும், இஷ்டத்திற்கு விலைவாசியையும் ஏற்றி, தீட்டிய மரத்திலேயே கூர் பார்க்கிற கெட்ட குணமதியாளர்களாய்க் காட்டிக் கொள்கிறது.

கடந்த பொதுத் தேர்தலில் இந்நாட்டு மக்களுக்காக அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என்று ஆர்ப்பரித்தவர்கள், அளந்து விட்டவர்கள் இன்று ஆடம்பரங்களில் நாட்டின் கையிருப்பில் கைவைத்து, கவலை இல்லாமல் ஊதாரிச் செலவுகளைச் செய்துவிட்டு அந்தச் சுமையையும் மக்கள் தலையிலேயே சுமத்துவார்கள்.

அடுத்த பொதுத் தேர்தலில் மக்கள் முன் நீலிக் கண்ணீரோடு, நீதிக் கதைகளைக் கட்டவிழ்த்து விடவும் இப்போதே காத்து இருப்பார்கள் என்பதே இப்போதைய என் கவலை சார்.

 
Kumar Murugiah Kumar's Sathya Raman எனக்கும் அந்த உருட்டல் இருக்கிறது...
 
Muthukrishnan Ipoh வணக்கம் சகோதரி... நீண்ட ஒரு பதிவு. நிறையவே தகவல்கள் நிறைந்த பதிவு... தங்களுக்கே உரித்தான சாயலில் தொகுத்து இருக்கிறீர்கள்... PNB 118 கட்ட்டிடம் 2012 ஆண்டில் நிறைவு பெறும்...

>>>
நாட்டின் சுமைகளைத் தங்களின் தோளில் சுமந்த மக்களுக்கு நன்றிக் கடனாக இந்த அரசாங்கம் தன் மூப்பாகவும், இஷ்டத்திற்கு விலைவாசியையும் ஏற்றி, தீட்டிய மரத்திலேயே கூர் பார்க்கிற கெட்ட குணமதியாளர்களாய்க் காட்டிக் கொள்கிறது.

கடந்த பொதுத் தேர்தலில் இந்நாட்டு மக்களுக்காக அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என்று ஆர்ப்பரித்தவர்கள், அளந்து விட்டவர்கள் இன்று ஆடம்பரங்களில் நாட்டின் கையிருப்பில் கைவைத்து, கவலை இல்லாமல் ஊதாரிச் செலவுகளைச் செய்துவிட்டு அந்தச் சுமையையும் மக்கள் தலையிலேயே சுமத்துவார்கள்.

அடுத்த பொதுத் தேர்தலில் மக்கள் முன் நீலிக் கண்ணீரோடு, நீதிக் கதைகளைக் கட்டவிழ்த்து விடவும் இப்போதே காத்து இருப்பார்கள்

>>>

உங்களின் இந்த ஆதங்கம் உண்மையிலேயே நியாயமானது... இப்போதைய அரசாங்கம் இப்படிச் செய்யும் என்று கொஞ்சமும் எதிர்பார்பார்க்கவில்லை சகோதரி... தொடர்ந்து பயணியுங்கள்.. தங்களின் பதிவுகளில் இருந்து நிறைய விஷயங்களை நானும் தெரிந்து கொள்கிறேன்... நன்றிங்க... நன்றி...
 
Meena Govindan Sathya nandraha unmaiyaga sonneergal... (சத்யா... நன்றாக உண்மையாக சொன்னீர்கள்...)
 
Vijikrish Krishnasamy Nantri aiya... (நன்றி ஐயா)