30 மார்ச் 2020

கொரோனா வைரஸ்: தடுப்பூசிகளில் இறந்த கிருமிகள்?

சில தடுப்பூசிகளில் பாதி இறந்த கிருமிகள் இருக்கும். சில தடுப்பூசிகளில் மயக்க நிலையில் கிருமிகள் இருக்கும். சில தடுப்பூசிகளில் இறந்த கிருமிகள் இருக்கும். 


சில தடுப்பூசிகளில் நுண்ணுயிரிகள் இருக்கும். சில தடுப்பூசிகளில் பலவீனம் ஆக்கப்பட்ட நுண்ணுயிரிகள் (inactivated vaccine) இருக்கும்.

அதையும் தாண்டிய நிலையில் சில தடுப்பூசிகளில் உயிருடனேயே கிருமிகள் இருக்கும். அல்லது ஒரு கிருமியின் நச்சுப் பொருளாகவும் இருக்கும். ஆனால்  அனைத்துமே ஒரே மாதிரியான அடிப்படைக் கொள்கையில் தான் செயல் படுகின்றன.

நமக்கு ஆறறிவு இருக்கிறது. மூளைக் கொண்டு சிந்திக்கிறோம். செயல் படுகிறோம். ஆனால் நம்முடைய உடலுக்கும் அறிவு இருக்கிறது. அது தெரியுமா உங்களுக்கு?

நம்மை எதுவும் கேட்காமலேயே அதுவே சொந்தமாக முடிவு எடுக்கும் ஆற்றல் அதனிடம் உள்ளது. இந்த விசயம் ரொம்ப பேருக்குத் தெரியாது.



நம் உடலுக்குள் எந்த ஒரு கிருமி நுழைந்தாலும் அது நல்ல கிருமியா அல்லது கெட்ட கிருமியா என்று நமக்குத் தெரியாமலேயே நம் உடல் ஆராய்ச்சி செய்துவிடும். ஆச்சரியமாக இருக்கிறதா. உண்மை.

சில விசயங்களில் நம் உடல் நம்மைக் கேட்டு ஆராய்ச்சிகள் செய்வது இல்லை. அதுவாக சொந்தமாக ஆராய்ச்சியில் இறங்கி விடுகிறது. அதற்கு முன்...

பாக்டீரியா வைரஸ் கிருமிகளில் நல்ல கிருமிகள் இருக்கின்றன. ஜெண்டல்மேன் கிருமிகள் இருக்கின்றன. சில அடாவடிக் கிருமிகள் இருக்கின்றன. சில அக்கப் போரான கிருமிகள் இருக்கின்றன.

அவற்றுக்கு எல்லாம் ’பை பை’ சொல்லும் இட்லர் இடி அமின் கிருமிகளும் இருக்கின்றன. அதில் கொரோனா கோவிட் கிருமிகள் இருக்கின்றனவே... சும்மா சொல்லக் கூடாது... எமதர்ம ராசனையே மெர்சல் ஆக்கிவரும் கிருமிகள்.



நல்ல கிருமிகள் பல ஆயிரங்கள் உள்ளன. அவை நம் உடலுக்கு கெட்டது ஒன்றும் செய்யாது. நல்லதுதான் செய்யுங்கள். பெரும்பாலும் பாக்டீரியா கிருமிகள்.

நம் உடலுக்குள் ஒரு கெட்ட கிருமி நுழைந்து விட்டால், நம் உடல் சட்டுபுட்டு என்று ஒரு பெரிய கூட்டுப் படையை உருவாக்கி விடுகிறது.

அந்தக் கூட்டுப் படையில் கழுத்துக் கணையச் சுரப்பி அதாவது தைமஸ் சுரப்பி (Thymus); கல்லீரல் (Liver); மண்ணீரல் (Spleen); எலும்பு மஜ்ஜைகள் (Bone Marrow); சிறுநீரகம் போன்றவை இருக்கும்.

இவை எல்லாம் ஒன்று சேர்ந்து கொள்கின்றன. உடலுக்குள் நுழைந்த கெட்ட கிருமிகளை அழிப்பதற்கு எந்த மாதிரியான மருந்து தயாரிக்கலாம் என்பதைப் பற்றி ஆராய்ந்து பார்க்கின்றன.

அந்தப் புதிய மருந்தைத் தயாரிக்கத் தேவையான மூலப் பொருட்களை உடனடியாகச் சேகரிக்கின்றன. தயாரித்த மருந்தை அந்தக் கிருமிகள் மீது செலுத்துகின்றன. அப்படியே அந்தக் கெட்டக் கிருமிகளை அழிக்கின்றன. எப்படி பக்காவாக வேலை செய்கிறது கவனித்தீர்களா? 



இயற்கையாகவே உலகில் உள்ள எல்லா மனித உடல்களுக்கும் கிருமிகளை எதிர்க்கும் ஆற்றல் உள்ளது. ஒரு குழந்தை பிறந்த போதே அந்த ஆற்றல் அந்தக் குழந்தைக்கு உண்டாகி விடுகிறது. 

ஆனால் தடுப்பூசி வேறு மாதிரி வேலை செய்கிறது. நம் உடலுக்குள் நோய்க் கிருமிகளின் நகல்களை அறிமுகப்படுத்தி, அந்தக் கிருமிகளை அழிக்கும் ஆற்றலைத் தூண்டுகிறது. அதற்காகத் தான் தடுப்பூசி போடப் படுகிறது.



தடுப்பு மருந்துகள் உடலுக்குள் பல வகைகளில் செலுத்தப் படுகின்றன.

1. வாய் வழி (Oral)

2. ஊசி வழி (Injection) - இதைத் தான் தடுப்பூசி என்கிறோம். இந்த ஊசியை தசைக்குள் செலுத்துவது (Intramascular); தோலுக்குள் செலுத்துவது (Intradermal); தோலுக்கு கீழ்ப் பகுதியில் செலுத்துவது (Subcutaneous).
   
3. தோலில் ஒட்டுப் போட்டு மருந்து செலுத்துவது (Transdermal).
   
4. உடலில் துளையிட்டு மருந்து செலுத்துவது (Puncture)

5. மூக்கு வழியாக மருந்து செலுத்துவது (Intranasal)



சரி. ஹைட்ராக்ஸி குளோரோ குயின் (Hydroxy Chloro Quine) எனும் மருந்தைக் கொண்டு கொரோனா கோவிட் நோயைக் குணப் படுத்தலாம் எனும் சர்ச்சை உலகம் முழுவதும் பரவலாக உள்ளது. அதைப் பற்றி பின்னர் பார்ப்போம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
30.03.2020









29 மார்ச் 2020

கொரோனா மருந்தைப் பரிசோதிக்க மலேசியா தேர்வு

கொரோனா கோவிட் -19 நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் (Remdesivir) எனும் மருந்து பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. அந்த மருந்தின் செயல் திறன் குறித்துச் சோதனைகளை நடத்தும் நாடுகளில் ஒன்றாக மலேசியாவும் தேர்வு செய்யபட்டு உள்ளது. 



ரெம்டெசிவிர் மருந்தைப் பரிசோதனை செய்வதற்கான உலகளாவிய மையங்களில் ஒன்றாக மலேசியா தேர்வு செய்யப் படுவதாக உலகச் சுகாதார நிறுவனம் (World Health Organization) இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவித்தது. பெருமைக்குரிய செய்தி.

பொதுவாகவே உலக சுகாதார நிறுவனம் நம்பிக்கைக்கு உரிய நாடுகளைத் தான் தேர்வு செய்யும். மலேசியாவின் சுகாதாரக் கட்டமைப்பில் மலேசிய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (Institute for Medical Research) உலகத் தரம் வாய்ந்தது.

மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (ஐ.எம்.ஆர்) 1900-ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது. அந்தக் காலக் கட்டத்தில் ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகள், அதாவது பிரெஞ்சு, டச்சு, ஆங்கிலேய ஏகாதிபத்தியங்கள் புதிய ஆராய்ச்சிக் கழகங்களை உருவாக்குவதற்கு காலனித்துவ நாடுகளைத் தேர்வு செய்தன.

அப்போது உருவானது தான் மலேசிய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்.


COVID-19 நோய்த் தொற்றுக்கு மட்டும் சிகிச்சை அளிக்க, ஐந்து வகையான மருந்துகள் பயன்படுத்தப்பட உள்ளன என்று மலேசியச் சுகாதார அமைச்சு அறிவித்து உள்ளது.


அந்த ஐந்து வகையான மருந்துகள்:

1. குளோரோ குயின் (Chloroquine),

2. ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (Hydroxychloroquine),

3. பாவிபிராவிர் (Favipravir),

4. ரெம்டெசிவிர் (Remdesivir)

5. கலெத்ரா (Kaletra)
எனப்படும் லோபினாவிர் (Lopinavir),  ரிடோனாவிர் (Ritonavir) மருந்துகளின் கலவை.

இந்த மருந்துகள் ஏற்கனவே மற்ற மற்ற நோய்களுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இருந்தாலும் இப்போது COVID-19-க்கு பயன்படுத்த முடிவு செய்து இருக்கிறார்கள்.




கொரோனா COVID-19 வைரஸுக்கு எதிராக ரெம்டெசிவிர் மருந்தைப் பரிசோதனை செய்ய உலகில் பல நாடுகள் தேர்வு செய்யப் படுகின்றன.
மலேசியாவின் தரம் வாய்ந்த மருத்துவக் கட்டமைப்பு முதன்மைப் படுத்தப் பட்டது. இவ்வாறு உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்து உள்ளது.

இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் சில நாட்களுக்கு முன்பு இருந்தே ரெம்டெசிவிர் மருந்தைப் பரிசோதனை செய்து வருகின்றன.

ரெம்டெசிவிர் என்பது ஒரு வைரஸ் தடுப்பு மருந்து. எபோலா (Ebola) வைரஸ் நோய் மற்றும் மார்பர்க் (Marburg) வைரஸ் தொற்று நோய்களைத் தடுத்து நிறுத்தும் மருந்தாக உருவாக்கப் பட்டது. 




அமெரிக்காவைச் சேர்ந்த கிலியாட் (Gilead Sciences) எனும் நிறுவனம் இந்த மருந்தை உருவாக்கியது.

1. சுவாச ஒத்திசைவு வைரஸ் (respiratory syncytial virus);

2. ஜூனின் வைரஸ் (Junin virus);

3. லாசா காய்ச்சல் வைரஸ் (Lassa fever virus);

4. நிபா வைரஸ் (Nipah virus);

5. ஹெந்திரா வைரஸ் (Hendra virus)

6. மெர்ஸ் (MERS); சார்ஸ் (SARS)


இந்த ரெம்டெசிவிர் மருந்து மேலே காணும் வைரஸ்களை எதிர்க்கும் ஆற்றலைக் காண்பித்து உள்ளது. அதனால் இப்போது கோவிட் 19-க்கு பயன்படுத்திப் பார்க்கிறார்கள்.





அமெரிக்கா வாஷிங்டனில் கொரோனா கோவிட் நோயாளிக்கு இந்த ரெம்டெசிவிர் மருந்தைச் செலுத்திப் பார்த்தார்கள். நம்பிக்கை அளிக்கும் முடிவு.

இப்போது சீனாவும் பெரிய அளவில் அந்த மருந்தைப் பரிசோதிக்கத் தொடங்கி விட்டது. ரெம்டெசிவிர் மருந்திற்கு GS-5734 எனும் அனைத்துலக ஆய்வுக் குறியீடு வழங்கப்பட்டு உள்ளது. 




பல வகையான வைரஸ்களுக்கு எதிராக ரெம்டெசிவிர் பயன் உள்ளதாக இருக்கும் என்று ஆய்வகச் சோதனைகள் தெரிவிக்கின்றன.

2013 – 2016ஆம் ஆண்டுகளில் மேற்கு ஆப்பிரிக்காவில் எபோலா வைரஸ் தாக்கிய போது இந்த ரெம்டெசிவிர் மருந்து பயன்பாட்டிற்கு வந்தது.

இந்த ரெம்டெசிவிர் தடுப்பு மருந்தைப் பற்றிய முழுக் கட்டுரையை விரைவில் பதிவு செய்கிறேன்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
29.03.2020

 

கொரோனா வைரஸ்: mRNA -1273 மருந்து

கொரோனா வைரஸுக்குத் தற்காலிகமாகத் தடுப்பூசி மருந்து கண்டுபிடித்து இருக்கிறார்கள். ஒரு வாரத்திற்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி. மகிழ்ச்சியான செய்தி. இருந்தாலும் இப்போது பரிசோதனைக் கட்டத்தில் தான் உள்ளது. அதற்கு எம்.ஆர்.என்.ஏ. 1273 (mRNA -1273) என்று பெயர் வைத்து இருக்கிறார்கள்.


அமெரிக்காவின் மொடெர்னா (Moderna) என்கிற நிறுவனம், அந்தத் தடுப்பூசியின் முதல் கட்டப் பரிசோதனையில் இறங்கி உள்ளது. இந்த நிறுவனம் அமெரிக்கா, மாசசூசெட்ஸ் (Massachusetts) மாநிலத்தில் உள்ளது.

கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் உலகம் முழுமைக்கும் 41 ஆய்வு நிறுவனங்கள் களம் இறங்கி உள்ளன. அவை அனைத்தும் உலகச் சுகாதார நிறுவனத்தில் (World Health Organisation) பதிவு பெற்ற மருத்துவ நிறுவனங்கள்.

எம்.ஆர்.என்.ஏ. 1273 தடுப்பூசிக்கான முதல் மனிதச் சோதனை கடந்த வாரம் தொடங்கியது. இந்த நிறுவனம் தான் புதிய தடுப்பூசி மருந்திற்கு முதல் அடியை எடுத்து வைத்து இருக்கிறது.



முழு உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் 18 வயது முதல் 55 வயது வரையிலான 45 நபர்கள் முதற்கட்டப் பரிசோதனைக்குத் தேர்வு செய்யப் பட்டனர்.

அவர்களில் முதல் நபருக்கு 2020 மார்ச் 17-ஆம் தேதி செலுத்தப் பட்டது. 6 வாரங்களுக்குப் பரிசோதனைகள் நடைபெறும். சோதனைக்குத் தேர்வு செய்யப் பட்டவரின் கையில் எம்.ஆர்.என்.ஏ. 1273 தடுப்பூசி மருந்து செலுத்தப் படுகிறது.

இன்றைய வரையிலும் கட்டம் கட்டமாகச் சிலருக்குத் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

ஊசி போட்டவர்களுக்கு காய்ச்சல், உடல்நலக் குறைவு எதுவும் ஏற்படுகிறதா என்று கண்காணித்து வருவார்கள். 2020 ஏப்ரல் மாதக் கடைசியில் எம்.ஆர்.என்.ஏ. 1273 தடுப்பூசி மருந்தின் வீரியம் தெரிந்துவிடும். அதாவது ஆறு வாரங்களில் அந்த மருந்தின் வீரியம் தெரிந்துவிடும்.



இந்தச் சோதனை வெற்றி பெற்றால் மருந்து தயாரிப்புகள் உடனடியாகத் தொடங்கப்படும். இருந்தாலும் முழு அளவிலான தயாரிப்பிற்கு 12 முதல் 18 மாதங்கள் வரை பிடிக்கலாம்.

கொரோனா கோவிட் mRNA -1273 தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கும் முயற்களில் ஈடுபட்டு இருக்கும் சில கல்விக் கழகங்கள் அல்லது தனியார் நிறுவனங்கள்.

1. Moderna, அமெரிக்கா,
2. DIOSynVax, இங்கிலாந்து
3. Imperial College London, இங்கிலாந்து
4. Oxford University, இங்கிலாந்து
5. CureVac, ஜெர்மனி
6. BioNTech, ஜெர்மனி
7. CanSino Biologics, சீனா
8. Migal Galilee Research Institute, இஸ்ரேல்
9. Inovio Pharmaceuticals, அமெரிக்கா
10. Johnson & Johnson, அமெரிக்கா
11. Novavax, அமெரிக்கா
12. University of Queensland, ஆஸ்திரேலியா
13. VIDO-InterVac, கனடா

இணைப்பு >>>



இந்தியாவில் சில தனியார் நிறுவனங்களும் கல்விக் கழகங்களும் கொரோனா தடுப்பூசி பரிசோதனைகளில் ஈடுபட்டு வருகின்றன. அவற்றில்

1. Serum Institute of India (SII) Serum Institute of India,

2. Zydus Cadila,

3. Bharat Biotech ஆகிய மூன்று கழகங்கள் தீவிரம் காட்டி வருகின்றன. எப்படியும் ஓர் ஆண்டு காலம் பிடிக்கும்.

mRNA -1273 அல்லது Messenger Ribonucleic Acid என்றால் என்ன என்பதைப் பற்றிய கூடுதல் விவரங்களை அடுத்த பதிவில் பார்ப்போம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
28.03.2020



பேஸ்புக் பின்னூட்டங்கள்


Magendran Rajundram: உலக சுகாதார நிறுவனம் தடுப்பு ஊசியை பரிசோதிக்கும் வாய்ப்பை மலேசியாவுக்கு தந்து இருப்பதாக அறிகிறேன் ஐயா.

Muthukrishnan Ipoh: அந்தச் செய்தி போன வாரம் கிடைத்தது... உலகச் சுகாதார நிறுவனம் கேட்டுக் கொள்வதற்கு முன்னாலேயே பல நாடுகள் உடனடியாக ஆய்வுப் பரிசோதனைகளில் இறங்கி விட்டன...

Magendran Rajundram >>> Muthukrishnan Ipoh: நன்றி ஐயா

Muthukrishnan Ipoh: மலேசியா இன்னும் பரிசோதனயில் இறங்கவில்லை... நோய் தொற்றி இருக்கலாம் எனும் சந்தேகப் பேர்வழிகளை அரசாங்கம் வலை போட்டு தேடுவதற்கே நேரம் போதவில்லை... அதையும் நினைவில் கொள்வோம்...

Letchumanan Nadason: ஆறுதலான தகவல். நன்றி.

Thina Garan: நோயை உருவாக்கிய பின்.. மருந்தே அவர்களே கொடுக்கிற மாதிரி இருக்கு....... பணம்... 'China sold 432 million euros (3548 crores) in medicines to Spain. The real game has started now. LUSHSUX The real face of China'

Maari Aye: தகவலுக்கு நன்றி

Endran Puven: Aiyaa,oru kelvi..quba endra naadu marunthu thayarithu veithullathagavum aanal america antha naatuku tadai uttharavu pottullathagavum kelvi patten.athu pattriye vilakkam tarumaaru thaalmaiyodu kehtu kolgiren

Muthukrishnan Ipoh: அந்த மருந்தின் பெயர் Interferon Alpha-2B Recombinant. கியூபாவும் சீனாவும் சேர்ந்து கூட்டாக உருவாக்கிய மருந்து. சீனாவில் பல நூறு பேர் மீண்டு வந்தனர். ஆனால் முழு நிவாரணம் அளிக்கும் மருந்து அல்ல என்று அமெரிக்கா மறுத்து விட்டது...

அது மட்டும் அல்ல. சில லத்தீன் அமெரிக்க நாடுகளில் குறிப்பாக வெனிசூலா நாட்டில் கீழறுப்பு வேலைகளில் ஈடுபட்டு வருவதாகவும், ஆள் கடத்தல் வேலைகளில் ஈடுபட்டு வருவதாகவும் கியூபாவை அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. அதனால் அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடை. பாவம் கியூபா...

Sathya Raman: கொரோனா வைரஸுக்கு 1273 தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆய்வில் வெளிநாடுகளும் அதன் நிறுவனங்களும், பல்கலைக்கழகங்களும் தீவிரமாக ஈடுப்பட்டு வருவது தெரிகிறது. ஆனால் அந்த வரிசையில் இந்தியாவும், மலேசியாவும், மற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகள்கூட இல்லையே சார்?🤔

Muthukrishnan Ipoh: இந்தியாவில் சில தனியார் நிறுவனங்களும் கல்விக் கழக்ங்களும் கொரோனா தடுப்பூசி பரிசோதனைகளில் ஈடுபட்டு வருகின்றன. அவற்றில்

    1.Serum Institute of India (SII) Serum Institute of India,

    2.Zydus Cadila,

  3.Bharat Biotech ஆகிய மூன்று கழகங்கள் தீவிரம் காட்டி வருகின்றன. எப்படியும் ஓர் ஆண்டு காலம் பிடிக்கும்.

கட்டுரைப் பட்டியலில் முதன்முதலாக ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட கழகங்களைப் பற்றி தான் உள்ளது. முழுமையான பட்டியலைப் பின்னர் பதிவு செய்கிறேன்... கருத்துகளுக்கு நன்றி.

Melur Manoharan: "பயனுள்ள" தகவல்...!

Jainthee Karuppayah: நன்றிங்க சார் 1273.... மரணத்திற்குப் பிறகு மருந்து....

Muthukrishnan Ipoh:
என்ன செய்வது... மரணத்திற்கு முன் எல்லா நாடுகளும் போராடிக் கொண்டுதான் இருக்கின்றன...





28 மார்ச் 2020

கொரோனா வைரஸ்: அமெரிக்காவை எச்சரிக்கும் மெக்சிகோ

வரலாறு தலைகீழாக மாறி வருகிறது. அமெரிக்கர்கள் இனிமேல் மெக்சிகோவிற்குள் நுழையக் கூடாதாம். மெக்சிகோ மக்கள் அமெரிக்காவிற்கு எச்சரிக்கை செய்கின்றனர். 

கொரோனா கோவிட் வைரஸ் தாக்கத்தால் உலகிலேயே அதிகமாகப் பாதிக்கப்பட்டு அமெரிக்கா தடுமாறி நிற்கிறது. 104,256 பேருக்கு பாதிப்பு. 1,704 பேர் பலி.



அமெரிக்காவில் முறையான சமூகத் தொலைவு முறை (Social distancing) இல்லை. துரிதமான, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப் படுவது இல்லை. வந்தால் வரட்டும் என்கிற மெத்தெனப் போக்கு. அதனால் தான் வைரஸ் இவ்வளவு வேகமாக அங்கே பரவியது.

அமெரிக்காவில் அரிசோனா மாநிலத்தின் தென் பகுதியில் மெக்சிகோ. அங்கே உள்ள எல்லைப் பகுதியில் மெக்சிகோ நாட்டு மக்கள் கடந்த மூன்று னான்கு நாள்களாகப் ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வண்ணம் உள்ளது. அதனால் அமெரிக்கர்கள் மெக்சிகோவுக்குள் வந்தால் மெக்சிகோவிலும் வைரஸ் பரவல் அதிகரிக்கலாம் என அஞ்சுகிறார்கள்.

’அமெரிக்கா - மெக்சிகோ எல்லையை மூடுங்கள்.’ ‘அமெரிக்கர்களே வீட்டிலேயே இருங்கள்’. ‘உங்களால் எங்கள் உயிருக்கு ஆபத்து வேண்டாம்’ எனும் பதாகைகளை ஏந்தியபடி நூற்றுக் கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள்.



அண்மையில் அதிபர் டிரம்ப் சொன்னார். மெக்சிகோ மக்கள் அமெரிக்காவுக்குள் வரக் கூடாது. பெரிய தடுப்புச் சுவர் கட்டப்படும். பல பில்லியன் டாலர்கள் செலவானாலும் பரவாயில்லை. அதிபர் டிரம்ப் சவால் விட்டு மெக்சிகோ மீது போர்க் கொடி தூக்கினர்.

இன்றைக்குப் பாருங்கள். நிலைமை தலைகீழாக மாறி விட்டது. யானைக்கு பூனை மணி கட்டுகிறது. பூனைக்கு எலி மணி கட்டுகிறது. என்ன செய்வது. சமயங்களில் சட்டாம்பிள்ளைக்கு எதிராகச் சாட்டைகள் அவசியம் என்பார்கள். உண்மைதான் போலும்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
28.03.2020

கொரோனா வைரஸ்: எறும்புத்தின்னி காரணமா?

கொரோனா கோவிட் வைரஸ் கிருமியை மரபியல் தொழில் நுட்பம் (genetic engineering) வழியாக மனிதன் உருவாக்கினான் என்று சொல்கிறார்கள். சிலர் உண்மை என்கிறார்கள். பலர் தவறு என்கிறார்கள்.
 

இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம் என்றும் சிலர் சொல்கிறார்கள். குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது ஒரு கலை. ஆயல் கலைகளில் அறுபத்து ஆறாவது கலை என்று நான் சொல்ல மாட்டேன். சிலர் சொல்கிறார்கள்.

அலுங்கு, வௌவால் போன்ற விலங்குகளிடம் இந்தக் கொரோனா கோவிட் வைரஸ், காலம் காலமாய்க் குடியிருந்து வந்து இருக்கிறது என்பது தான் உண்மை.

வௌவால்களிடம் இருந்து அலுங்கு எனும் எறும்புத் தின்னியிடம் பாய்ந்து இருக்கலாம். பின்னர் மனிதனிடம் பாய்ந்து இருக்கலாம். அல்லது அந்தப் பரவலுக்குப் புனுகுப் பூனை (Civet); மரநாய் (ferret) போன்ற விலங்குகள் இடைத் தரகர்களாக இருந்து இருக்கலாம்.
 

சான்று: Kristian G. Andersen, Andrew Rambaut, W. Ian Lipkin, Edward C. Holmes, Robert F. Garry. The proximal origin of SARS-CoV-2. Nature Medicine, 2020.

எப்படி இந்தக் கொர்ரோனா கிருமிகள் உலகளாவிய நிலையில் பரவின. அதற்கு சரியான பதிலையும் சீன ஆய்வாளர்கள் மறைக்காமல் சொல்கிறார்கள்.

வௌவால், பாங்கோலின் (Pangolin) எனும் அலுங்கு தான் மூல காரணம் என்று உறுதியாகச் சொல்கிறார்கள். அலுங்கு என்பதைச் சிலர் அழுங்கு என்றும் சொல்கிறார்கள். சரியான சொல் அலுங்கு.
 

Pangolin sales plunge in Gabon over coronavirus fears

அது ஓர் எறும்புத்தின்னி. வெப்ப மண்டல மலைக் காடுகளில் அதிகமாய் வசிக்கின்றன. இவற்றின் உடலின் மேல்பகுதி கடினமான உறுதியான செதில்களால் (Perils) ஆனவை. எதிரிகளிடம் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள ஒரு பந்து போல் சுருண்டு கொள்ளும்.

அலுங்கு மிகவும் விரும்பி உண்ணும் உணவு எறும்புகள், கரையான்கள். சாதுவான பிராணி. எவருக்கும் தீங்கு விளைவிக்காது. உலகில் அழிந்து வரும் விலங்குகளில் ஒன்றாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இருந்தாலும் வூஹான் மார்க்கெட்டில் சர்வ சாதாரணமாக விற்று வந்தார்கள். இனிமேல் விற்பார்களா. தெரியவில்லை. பட்டது போதும் என்று சுருண்டு போய்க் கிடக்கிறார்கள்.

https://www.medicalnewstoday.com/…/coronavirus-pangolins-ma…

கண்டதைக் கற்றவன் பண்டிதன் ஆவான். கண்டதைத் தின்னவன் என்ன ஆவான். நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
28.03.2020


பேஸ்புக் பதிவுகள்


Janakiraman Raman தோட்டப்புறங்களில் வாழ்ந்தது மறக்க முடியவில்லை. மாடுகள் மேய்ச்சலுக்கு அனுப்புவது. மாலையில் பால் கரந்து தோட்ட லயங்களில் கொடுப்பது இரவில் பிள்ளைகளுக்கு டுவிசன் வகுப்புக்கள் நடத்துவது.

Sathya Raman >>> Janakiraman Raman உண்மைதான் சார். இரவில் டியூசன் வகுப்புகள் நடக்கும். தோட்டத்திலுள்ள மாணவர்கள் அனைவரும் ஒரேஒரு டியூசன் சொல்லிக் கொடுப்பவர் வீட்டில் தான் மூன்று, நான்கு மணி நேரம் இரவு வகுப்புகளில் செலவிடுவோம்.

டியூசன் சொல்லிக் கொடுப்பவரும் பட்டதாரி ஆசிரியரோ, மெத்தப் படித்தவரோ இல்லை. அன்றைய எம்.சி.இ. வரை படித்தவரோ கொஞ்சம் விபரம் தெரிந்தவராகத் தான் இருப்பார்.

நிஜமாக இப்பவும் நினைத்து, நினைத்து ஏங்கும் அந்தத் தோட்டப்புற வாழ்க்கையை மீண்டும் மீட்டெடுக்க வாய்ப்பே இல்லாத போது வருத்தங்கள் மட்டுமே எஞ்சியவை. 😢

Muthukrishnan Ipoh எனக்கும் அந்த அனுபவம் இருக்கிறது. மாதம் பத்து வெள்ளி கட்டி ஆங்கிலம் படித்த நினைவுகள்... ஆனால் பெரிய புலமை எதுவும் வந்துவிடவில்லை... சிட் டவுன்... ஸ்டேண்ட் அப்... இந்த ரெண்டையும் நன்றாகக் கற்றுக் கொண்டேன்...

Janakiraman Raman >>> Muthukrishnan Ipoh 🙏

Sathya Raman முன்பு தோட்டப் புறங்களில் கூட நம்பவர்கள் பலரிடம் இந்த அலுங்கு சாப்பிடும் பழக்கம் இருந்திருக்கிறது சார். கூடவே அதனுடைய கடுமையான ஓட்டை பிரித்தெடுத்து சின்ன, தின்னதாய் வெட்டி, உரசி குழந்தைகளின் கைகளில் கட்டி விடுவார்கள்.

இந்த அலுங்கு ஓட்டுக்கு காத்து கருப்பு பில்லி சூன்யம், தோஷம் போன்றவை பக்கத்திலேயே அண்டாதாம். அதற்காகவே குழந்தைகள் கைகளில் கட்டுவார்கள். நானும் பார்த்திருக்கிறேன்.

அது மட்டும் அல்ல. உடும்பு, தவளை, முயல், ஆமை என சீனர்கள் மட்டுமல்ல நம் தமிழர்கள் பலரும் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களாக இப்போதும் இருக்கிறார்கள் சார்.

Muthukrishnan Ipoh உண்மைதான். 50 வருடங்களுக்கு முன்னர் தோட்டத்தில் மழை பெய்து ‘திட்டி’ என்றால் சிலர் அலுங்கு வேட்டை; உடும்பு வேட்டை; பன்றி வேட்டை என்று கிளம்பி விடுவார்கள். பலர் வீட்டில் அலுங்கு கறி வேகும்.

பலவிதமான காட்டுப் பொருள் சமையல்கள். அந்த விருந்துகளில் நானும் கலந்து கொள்வேன். தோட்டப்புற வாழ்க்கை தனித்துவமான வாழ்க்கை.

Muthukrishnan Ipoh எதைச் சாப்பிடலாம் எதைச் சாப்பிடக் கூடாது; அதற்கு ஒரு வரையறை வேண்டும்... மனிதர்களுக்கு காலம் சொல்லிக் கொடுக்கும் பாடம்...

Manickam Nadeson பலர், பல விதமான ஆதராங்களை முன் வைக்கும் போது , இந்த விசக் கிருமியை சீனா வேண்டும் என்றே தயாரித்து மற்ற நாடுகளை அழிக்க எண்ணி உள்ளதை நன்கு உணர முடிகிறது. சில ஆண்டுகளுக்காவது சீனாவை எல்லா நாடுகளும் புறக்கணிக்க வேண்டும்.

Muthukrishnan Ipoh அதே சந்தேகம் எனக்கும்... ஆனால் மூடி மறைத்து வாழும் அந்த நாட்டில் இருந்து எந்த ஓர் உண்மையான தகவலும் கிடைக்கப் போவது இல்லை... கருத்துகளுக்கு நன்றிங்க தலைவரே...

Sathya Raman >>> Manickam Nadeson உங்கள் கருத்துக்கு மாற்றுக் கருத்து ஏதுமில்லை சார். வேண்டுமென்றே வணிக நோக்கத்திற்காக சீனா பார்த்த நாச வேலைதான். அங்கு அதிகாரத்தில் உள்ளவர்கள் மனித நேயத்திற்கு அப்பாற்பட்டவர்கள் தானே?

அதோடு இன்னொரு தகவல்களும் கசிந்து வருகிறது. வூகான் நகரில் உள்ள துணிகள் உற்பத்தி செய்யும் தொழில்சாலையில் இருந்து இத்தாலிக்கு பல வருடமாக துணிகளை ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறது சீனா. இன்று கொத்துக் கொத்தாய் மரணத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இத்தாலிக்கு அந்தத் துணிகள் மூலமாகவே இந்த கொரோனா வைரஸைப் பரப்பியதாக பேச்சும் உள்ளது.

மேலும் சீனாவை சுற்றியுள்ள ஊர்களுக்கு எல்லாம் அதிகம் பரவாத இந்த கிருமி பல்லாயிரம் கீலோ மிட்டருக்கு அப்பால் உள்ள மற்ற 200 மேற்பட்ட நாடுகளுக்கு வேகமாக பரவி எங்கும் உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருப்பதையும் ஊர்ந்து கவனித்தால் இதற்கு பின்னால் பல உண்மைகள் உடைப்படும்.

உலக சுகாதார அமைப்பின் தலைவர்கூட சீனாவின் கைப்பாவை என்ற குற்றம் சாட்டும் உள்ளது. எது எப்படியோ ஈழத்தில் ஏற்படுத்தப்பட்ட உயிர்ப் பலிகளை இந்த உலகம் உதாசீனப்படுத்திய மாதிரி, அணுஆயுதம் இன்றி, பயங்கர இயற்கை பேரிடர் இன்றி ஒரேயொரு வைரஸ் மூலமாக இன்று மனிதக் குலத்தையே முட்டாள்களாக நினைத்து காரியம் சாதித்த கேடுக் கெட்ட சாகசக்காரர்களை உலக நீதிமன்றம் தண்டித்தே ஆக வேண்டும் சார் 🙏

Sambasivam Chinniah: Vaazhga Valamudan en iniya kaalai vanakam ayyah . God bless you. (வாழ வளமுடன்... என் இனிய காலை வணக்கம்)

Sambasivam Chinniah >>> Muthukrishnan Ipoh: nandri ayyah. (நன்றி ஐயா)

Kumar Murugiah Kumar's வணக்கம் ஐயா! அந்த தோட்ட ஏக்கம் இன்னும் இருக்கிறது ஒவ்வொரு மனிதனுக்கும்.

Muthukrishnan Ipoh தோட்டப்புற வாழ்க்கை இனிமையான வாழ்க்கை... மறக்க முடியாத அனுபவங்கள்...

Melur Manoharan "இனிய" காலை வணக்கம் ஐயா...!

Muthukrishnan Ipoh இனிய வணக்கம்... வாழ்த்துகள்...

Ganesan Pachappan உடனுக்குடன் தகவல்களைச் சேகரித்து பதிவிட்டு வருகிறீர்கள் நன்றி ஐயா.

Muthukrishnan Ipoh மகிழ்ச்சி... மகிழ்ச்சி...

Letchumanan Nadason முன்பு மனிதர்கள் சாப்பிட்ட உணவெல்லாம்
இன்று கிருமி பரப்பியாய் ஆனதெப்படி? தங்கள் பதிவுகள் சிறப்பு. நன்றி

Shiva Ramanna Thank you

M R Tanasegaran Rengasamy அண்மையில் ஒரு ஆவணப் படம் பார்த்தேன். அதில் ஒரு வகை வௌவால்கள் மாட்டின் இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கின்றன. இதனால் மாட்டிறைச்சியிலும் கோவிட்- 19 வைரஸ் இருக்க வாய்ப்பு அதிகமுள்ளது. இந்த இறைச்சியைச் சாப்பிடுபவர்கள் அதிகம் பாதிப்புள்ளாக வாய்ப்புண்டு தானே சார்.

Muthukrishnan Ipoh புதிய தகவல்... நன்று....

Selva Mani இது சீனாவின் சித்து விளையாட்டுதான்! போலி அரிசி, முட்டை, காய்கறிகள் என மனிதாபிமானற்ற செய்த சீனா கொஞ்சம் பெரிய அளவில் விளையாடுகிறது!

Shanker Muniandy எனக்கு தெரிந்து பல ஆண்டுகளாக மலேசியாவிலும் கூட அலுங்கு மூசாங் முள்ளம்பன்றி வொளவால் போன்ற பிராணிகளை சிலர் சாப்பிட்டுக் கொண்டு வந்திருக்கிறார்கள், ஆனால் இப்போது மட்டும் கொரோனா வைரஸ் பரவியது ஏன் சார்?

Muthukrishnan Ipoh சுத்தம் இல்லாத இடங்களில் அடைபட்டு இருக்கும் விலங்குகளில்... வைரஸ்கள் மீண்டும் உயிர் பெறும் வாய்ப்புகள் அதிகம்...

Jainthee Karuppayah 30 ஆண்டுக்கு முன்னர் தோட்டத்தில் இதை உணவுக்காக இந்த அலுங்கு... பார்த்திருக்கிறேன்.... வறுமை ஆம் ... அப்போது எந்த நோயும் அண்டவில்லை.... பசி கொடுமையான காலங்களில் ஈசலைக் கூட வறுத்து சாப்பிட்டு வாழ்க்கையை ஓட்டியதாக ... என் மாமியார் கூறியது நினைவுக்கு வருகிறது.

Muthukrishnan Ipoh இந்த வைரஸ்கள் பல கோடி ஆண்டுகள் அமைதியாக இருந்தவை... Dormant என்று சொல்வார்கள்... சரியான வெப்பத்தில், சரியான் வேதியல் மாற்றங்கள் ஏற்படும் போது அந்த வைரஸ்கள் உயிர்ப்பு பெறுகின்றன... நாளைய தமிழ் மலர் நாளிதழில் இதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

Jainthee Karuppayah >>> Muthukrishnan Ipoh
நன்றி

Malathi Nair: Im sure inimeel atai kandaale oodivivaargal nammavagalum. (இனிமேல் அதை கண்டாலே ஓடி விடுவார்கள் நம்மவர்களும்)

Muthukrishnan Ipoh ஆப்பிரிக்கா கெபோன் நாட்டில் அலுங்கு வியாபாரம் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்தது. இப்போது யாரும் வாங்குவது இல்லையாம். ஒரு விலங்கினம் பிழைத்தது.

Jainthee Karuppayah >>> Muthukrishnan Ipoh: ok