06 ஏப்ரல் 2020

1919 - 2020 வைரஸ் ஆண்டுகள்

1919 ஸ்பானிஷ் வைரஸ் - 2020 கொரோனா வைரஸ்

1919 - 2020. இந்த இரண்டு ஆண்டுகளின் எண்களைப் பாருங்கள். 1919-ஆம் ஆண்டில் 19 - 19 எனும் எண்கள் வருகின்றன. 2020-ஆம் ஆண்டில்  20 - 20 எனும் எண்கள் வருகின்றன. 

 

அந்த இரண்டு ஆண்டுகளிலும்; அந்த இரண்டு எண்களிலும் ஏதோ ஒரு மர்மமான ஒற்றுமை இருப்பது தெரிகிறது அல்லவா. கொஞ்சம் ஆழமாக உற்றுப் பாருங்கள். சற்று அச்சமாகவும் இருக்கிறது.

ஓர் ஆண்டின் முதல் 2 எண்களும்; அதே ஆண்டின் இரண்டாவது 2 எண்களும் பொருந்தி வருவது, ஒரு நூற்றாண்டுக்கு ஒரு முறை மட்டுமே நிகழும். அது ஓர் அதிசயமான நிகழ்ச்சி.

அந்த வகையில் இந்த 2020-ஆம் ஆண்டில் உயிருடன் இருப்பதும் ஒரு சிறப்பு தான். இந்த மாதிரி அடுத்து 2121-ஆம் ஆண்டில் தான் வரும்.

இப்போது இருப்பவர்களில் அப்போது அந்த 2121-ஆம் ஆண்டில் வெகு சிலரே உயிர் வாழும் வாய்ப்புகள் உள்ளன. ஏன் என்றால் அதற்கு 100 வயதைத் தாண்டி இருக்க வேண்டும்.
 

இந்த 1919 - 2020 இரண்டு ஆண்டுகளிலும் உலகம் ஒரு புதுமையான வைரஸால் தாக்கப்பட்டு உள்ளது. அது மட்டும் அல்ல. மிகவும் கொடூரமாகவும் பாதிக்கப்பட்டு விட்டது. 1919-ஆம் ஆண்டின் கொடுமையில் இருந்து மீண்டு வருவதற்கு ரொம்பவும் சிரமப்பட்டது.

1919-ஆம் ஆண்டில் (19-19) ஸ்பானிஷ் காய்ச்சல் (Spanish flu) உலகத்தையே ஆட்டிப் படைத்தது. உலகத்தின் 50 மில்லியன் மக்களைக் கொன்று போட்டது. 500 மில்லியன் மக்களின் வாழ்வாதாரத்தை அழித்துப் போட்டது. அப்போதைய பிரிட்டிஷ் மலாயாவில் 34,644 பேரைக் கூறு போட்டது.

தமிழ்நாட்டில் இருந்து வந்து மலாயா இரப்பர் தோட்டங்களில் வேலை செய்த 6000 தமிழர்களையும் விட்டு வைக்கவில்லை. அதிகமான தமிழர்கள் பேராக், கெடா, பினாங்கு மாநிலங்களில் காலமானார்கள். நிபோங் திபால் பகுதியில் அதிகமான இழப்புகள்.
 

பத்து காஜாவில் கெல்லிஸ் காசல் எனும் மர்ம மாளிகையைக் கட்டிக் கொண்டு இருந்த தமிழர்களில் ஏறக்குறைய 100 பேர் பலியானார்கள். மலாயா தமிழர்களின் வரலாற்றில் அது ஒரு சோகமான காலச் சுவடு.

இப்போது 2020 ஆம் ஆண்டில் (20-20) கொரோனா வைரஸ் என்கிற மற்றொரு புதிய வைரஸ். உலகத்தைச் சீர்குலைத்து வருகிறது.

மனித வரலாற்றில் மாபெரும் போர்கள். மதிப்புகள் சொல்ல முடியாத மனித இழப்புகள். அவை அனைத்தும் கோடுகள் போட்டுச் சொல்ல முடியாத கொடுமையான இழப்புகள்.

போர்களினால் ஏற்பட்ட இழப்புகளைவிட கொடிய நோய்களினால் ஏற்பட்ட இழப்புகள் தான் அதிகம். 
 

மகா மோசமான பல தொற்று நோய்கள் உலக மக்களை ஆட்டிப் படைத்து வதைத்து இருக்கின்றன. அவற்றில் ஒன்று ஸ்பானிய காய்ச்சல்.

(ஸ்பானிஷ் காய்ச்சலால் மறைந்து போன மலாயாத் தமிழர்களின் வரலாற்றை வேறு ஒரு கட்டுரையில் பதிவு செய்கிறேன்.)

1919-ஆம் ஆண்டில் H1N1 எனும் வைரஸ் உலகத்தை ஆட்டிப் படைத்தது. இந்த வைரஸ் எங்கே இருந்து தன் பயணத்தைத் தொடக்கியது என்று யாருக்கும் இதுவரையில் தெரியவில்லை.

ஆனால் ஸ்பெயின் நாட்டு அரசக் குடும்பத்தை அதிகம் பாதித்ததால் அதற்கு ஸ்பானிஷ் காய்ச்சல் என்று பெயர் வைக்கப்பட்டது. இப்போது 2020 கொரோனா வைரஸ் உலகத்தையே உலுக்கிக் கொண்டு இருக்கிறது.

மனிதர்களைத் தவிர மற்றதை எல்லாம் சாப்பிடும் சாப்பாட்டு முறையினால் பல்லாயிரம் உயிர்களைப் பறி போனது. இதில் இருந்து ஓர் உண்மையைத் தெரிந்து கொள்ளலாம்.

மனிதர்கள் சைவ உணவர்களாக மாறும் வரையில் அசைவம் அசைந்து கொடுக்காது. அதுவே மனுக்குலத்திற்கு ஒரு சொல். ஒரு பாடம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
06.04.2020


பேஸ்புக் பதிவுகள்

M R Tanasegaran Rengasamy 1919-ல் ஸ்பானிஷ் புளு, இப்போது 2020-இல் சீனா ஃபுளு. 1940-களில் இரண்டாம் உலகப் போரின் போது மலேரியா என்ற நோய் வந்ததே... அந்த நோயின் பிறப்பிடம்... அப்பொழுதும் சயாம் மரண ரயில் பாதை அமைக்க நம்மவர்களைக் கூட்டம் கூட்டமாகக் கொண்டு சென்று கொன்றான் சப்பான்காரன். உலகப் பொருளாதாரப் போட்டியில் வெற்றி பெற நோயை உருவாக்கிப் பிணத்தின் மேலே பணம் பண்ணுகிறார்கள்... பாவிகள்.

Muthukrishnan Ipoh கொரோனா வைரஸ்... ஓர் ஆய்வுக் கூடத்தில் இருந்ததாகவும் ஒரு வதந்தி...

Sathya Raman >>> M R Tanasegaran Rengasamy இதே முகநூல் பகுதியில் இன்றைய சூழ்நிலையில் இந்த உலகத்தில் என்னவெல்லாம், எப்படியெல்லாம், யாரால், ஏன், எதற்காக என்பதற்கு எல்லாம் அவ்வப்போது மிக தெளிவாக சில அன்பர்கள் விளக்கி, விபரமாக பல பதிவுகளை செய்து வருகிறார்கள்.

சுவாரசியமாகவும், நம்பும் படியாகவும் இருக்கிறது. நாம் வாழும் இந்த பூமியில் இப்படியும் மனித ஜென்மங்கள் இருக்கிறார்களா என்ற பயமும் ஏற்படவே செய்கிறது. வாய்ப்பு கிடைத்தால் வாசித்துப் பாருங்கள். கிருஷ்ணன் சாரின் ஆய்வுக் கட்டுரைகளைப் படித்துவிட்டு மனம் பற்றி எரிவதைப் போல் அந்தப் பதிவுகளும் பதற வைக்கும்... படபடப்பை ஏற்படுத்தும். 😥

Sathya Raman >>> Muthukrishnan Ipoh ஆளைக் கொள்ளும் வீரியம் நிறைந்த வைரஸ் என்று தெரிந்திருந்தும் அவற்றை உருவாக்கி, உற்பத்தி செய்தவர்களை இந்த உலகம் மன்னிக்கவே கூடாது சார்.

Muthukrishnan Ipoh அமெரிக்காவின் வல்லரசு ஆளுமையைத் தகர்ப்பதற்கு எடுக்கப்பட்ட உயிரியல் போரின் அணுகுமுறையாக இருக்கலாம் என்று ஒரு சந்தேகம் உள்ளது... உறுதிப்படுத்த முடியவில்லை... உண்மை ஒருநாள் தெரிய வரலாம்...

Sathya Raman >>> Muthukrishnan Ipoh பல சந்தேகங்களுக்கு விரைவில் வெட்ட வெளிச்சமாகி பல உயிர்களை காவு வாங்கி, உயிரோடு உள்ளவர்களை மன உளைச்சலுக்கு காரணமானவர்களை வீதிக்கு கொண்டு வர வேண்டும். இம்முறை எவ்வித விட்டுக் கொடுத்தலுக்கும் சம்பந்தப் பட்டவர்களுக்கு வாய்ப்பு வழங்கவே கூடாது.

Muthukrishnan Ipoh உண்மை தெரிய வந்தாலும் மூடி மறைத்து விடுவார்கள்... மனிதர்களை ஆயிரக் கணக்கில் பலி கொடுத்தாலும்... ஒரு நாடு இன்னொரு நாட்டுடன் பகைத்துக் கொள்ள அவ்வலவு எளிதில் முன் வராது.

பல முறை யோசித்த பின்னர்தான் முடிவு எடுப்பார்கள். பகைத்துக் கொண்டால் ஏற்படக் கூடிய பொருளாதார பின்விளைவுகளையும் முதன்மைப் படுத்திப் பார்ப்பார்கள். முடிந்த வரையில் தட்டிக் கழிக்கவே முயற்சி செய்வார்கள்.

வுஹானில் உள்ள Wuhan Virology Institute ஆய்வுக் கழகத்தில் Charles Lieber எனும் அமெரிக்க ஹார்வார்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர், அந்த ஆய்வுக் கழகத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். அங்கே ’நானோ உயிரியல் ஆய்வுப் பிரிவு’ உருவாக்குவதற்கு மூல காரணமாக இருந்து இருக்கிறார்.

அவருக்கு சீனா அரசாங்கம் மில்லியன் கணக்கில் டாலர் வெகுமதி வழங்கி இருக்கிறது. ஆனால் அவர் அமெரிக்காவிடம் கணக்கு காட்டவில்லை.

ஏமாற்ற முயற்சி செய்ததாக அவர் மீது அமெரிக்க அரசாங்கம் வழக்கு தொடர்ந்து உள்ளது. இப்படி நிறையவே தில்லாலங்கடி வேலைகள் அனைத்துலக அளவில் நடைபெற்று வருகின்றன. சீனா மட்டும் அல்ல. அமெரிக்காவும் பயங்கர கில்லாடி.

சீனா நாடு உலகத்தையே தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகள் செய்து வருகிறது. 1990-ஆம் ஆண்டுகளிலேயே காய்கள் நகர்த்தப்பட்டு விட்டன.

கொரோனா போன்ற திடீர் தாக்குதல்கள் எல்லாம், சீனாவைப் பொறுத்த வரையில் சும்மா சாதாரணமான கொசுக்கடிகள். அவர்கள் போய்க் கொண்டே தான் இருப்பார்கள். உலக அளவில் மேலும் மேலும் பல குழப்படிகளை எதிர்பார்க்கலாம். சீனாவில் இருந்து அல்ல... வல்லரசுப் போட்டியில் அணிவகுத்து நிற்கும் நாடுகளிடம் இருந்து...

Sathya Raman >>> Muthukrishnan Ipoh இருக்கட்டும் சார். எப்பேர்ப்பட்ட கொம்பன் வேண்டுமானாலும் ஆகட்டும். அத்தனைக்கும் காலனிடம் அவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும். கூடவே இந்த இயற்கையும் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கும்மா என்ன? இனி வரும் காலங்கள் இந்த மனிதக் குலம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் அவர்களுக்கே சுவரில் எரிந்த பந்து போல் திரும்ப பெறப் போவது உறுதி. அது நல்லதோ, கெட்டதோ ???? ஆடுகிற ஆட்டம் எல்லாம் அம்பலத்தில் மட்டும் ஏறுவது இல்லை. அந்தரங்கத்திலும் தொங்க விடப்பட்டே தீரும்...

Malathi Nair U are really great anna... very knowledgeble person to get all these information.God bless u...

Muthukrishnan Ipoh வாழ்த்துகளுக்கு நன்றி... மகிழ்ச்சி... தங்களுக்கும் வாழ்த்துகள்...

Mageswary Muthiah இனிய காலை வணக்கம்

Muthukrishnan Ipoh வணக்கம்... வாழ்த்துகள்...

Krishna Ram நல்ல தகவல்...நன்றி ஐயா...

Muthukrishnan Ipoh மகிழ்ச்சி... வாழ்த்துகள்...

Parimala Muniyandy இனிய வணக்கம் அண்ணா🙏

Muthukrishnan Ipoh வணக்கம்... வாழ்த்துகள்...

Balamurugan Balu வணக்கம் ஐயா!

Muthukrishnan Ipoh இனிய வணக்கம்...

VT Rajan இனிய காலை வணக்கம் ஐயா... 🙏

Muthukrishnan Ipoh வாழ்த்துகள்

Selvi Sugumaran Nandri

Muthukrishnan Ipoh வாழ்த்துகள்...

Melur Manoharan "அருமையான" பதிவு ஐயா...!

Muthukrishnan Ipoh இனிய வாழ்த்துகள்...

Sundaram Natarajan இனிய காலை வணக்கம் அண்ணா

Muthukrishnan Ipoh வணக்கம்... வாழ்த்துகள்...

Palar Thangamarimuthu கடந்த நூற்றாண்டில் நிகழ்ந்த கசப்பான நிகழ்வுகளை நடப்பு நூற்றாண்டில் கிருமித் தொற்றால் ஏற்பட்டுள்ள பேரிழப்புகளை ஒப்பீடு செய்து அடுத்த நூற்றாண்டு எப்படி இருக்கும் என்ற கேள்வியுடன்... எதிர் கொள்ள வேண்டியிருக்கும் நிகழ்வுகளுக்காக நோய் நாடி நாள் முதல் நாடி அதுதணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல் என்ற வள்ளுவர் கூற்றை வழிமொழிகிறேன்

Muthukrishnan Ipoh வணக்கம்... வாழ்த்துகள்... மிக்க நன்றி ஐயா...

Palar Thangamarimuthu நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்... தட்டச்சுப் பிழையைத் திருத்தம் செய்து வாசிக்கும் படி வேண்டுகிறேன்... தட்டச்சு பிழை பொருத்தருள்க...

KR Batumalai Robert இனிய காலை வணக்கம், வாழ்த்துக்கள் அண்ணா.

Muthukrishnan Ipoh வணக்கம்... வாழ்த்துகள்...

Balamurugan Bala நல்ல தகவல்...நன்றி ஐயா...

Muthukrishnan Ipoh வணக்கம்... வாழ்த்துகள்...

Jainthee Karuppayah 2121... சரியான கணிப்பு... முகநூல் இருக்குமா? அப்போதும் பேசலாம்... Super... அருமை

Muthukrishnan Ipoh வணக்கம்... இனிய வாழ்த்துகள்...




05 ஏப்ரல் 2020

கொரோனா வைரஸ்: ஆண்கள் அதிகமாய் இறக்கிறார்கள். ஏன்?

கொரோனாவினால் ஆண்கள் தான் அதிகமாய் உயிர் இழக்கிறார்கள். பெண்களின் இறப்பு ஆண்களைவிட குறைவு. சராசரியாக ஒரு பெண்ணுக்கு மூன்று ஆண்கள் உயிர் இழக்கிறார்களாம். புதிய மருத்துவ ஆய்வுத் தகவல்கள் பரவலாகி வருகின்றன. 



இது எந்த அளவிற்கு உண்மையாக இருக்கும். ஆராய்ந்து பார்த்ததில், உடலமைப்பு ரீதியில் பெண்களைவிட ஆண்கள் சற்றே பலவீனமானவர்கள் எனும் உண்மை தெரிய வருகிறது.

உயிர் வாழும் முறை என்று வரும் போது பெண்களைவிட ஆண்கள் சற்றே பலவீனமானவர்கள் (When it comes to survival, men are the weaker sex.). அதற்குச் சில காரணங்கள் சொல்லப் படுகின்றன. என்ன காரணங்கள் என்று பார்ப்போம்.

இப்போது ஏற்பட்டு இருக்கும் இந்தக் கொரோனா தொற்று இருக்கிறதே, இது ஒன்றும் முதன்முறையாக ஏற்பட்ட உலகளாவியத் தொற்று நோய் அல்ல. ஏற்கனவே பற்பல கொடிய நோய்கள் வந்து போய் விட்டன. பல கோடி மக்கள் இறந்து போய் இருக்கிறார்கள்.




கறுப்பு மரணம் என அழைக்கப்படும் பிளேக் நோய்; காலரா; ஸ்பானிஷ் காய்ச்சல் (Spanish flu); சார்ஸ் (Severe Acute Respiratory Syndrome (SARS) போன்ற ’பெண்டமிக்’ தொற்றுகள் வந்து போய் இருக்கின்றன. சரி.

இப்போதைய உலக மக்களில் 100 வயது வரை வாழ்ந்து கொண்டு இருப்பவர்களில் 80 விழுக்காட்டினர் பெண்கள். 110 வயதை எட்டியவர்கள் 95 விழுக்காட்டினர் பெண்கள். ஆண்கள் சிலர் மட்டுமே தட்டுத் தடுமாறி அந்த வயதுகளைத் தொட்டுப் பார்க்கிறார்கள்.

மனித மரபணுக்களில் ஆண்களின் மரபணுக்கள்; பெண்களின் மரபணுக்கள்; இரண்டும் ஒன்று தான். ஒரே மாதிரி தான். ஆனால் அவற்றின் பரிணாம வளர்ச்சி (evolutionary growth) முறையில் தான், இரண்டுமே கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றம் கண்டு இருக்கின்றன. 




பரிணாமம் என்றால் என்ன? வாழ்வியல் சூழலுக்கு ஏற்றவாறு கொஞ்சம் கொஞ்சமாக நம்மை நாமே செதுக்கிக் கொள்வதைத் தான் பரிணாமம் என்கிறோம்.

உயிருடன் வாழும் ஓர் உயிர்ப் பொருளை உயிரி என்கிறோம். அந்த உயிரி, பூமியின் காலச் சூழல்; சுற்றுச் சூழல் அமைப்புக்கு ஏற்றவாறு படிப்படியாகத் தன்னை மாற்றிக் கொள்வது தான் பரிணாமம்.

ஆண்களின் மரபணுக்கள் அவர்களுக்குக் கொஞ்சம் கூடுதலான உடல் தசையைக் கொடுக்கிறது. உடலுக்கு உயரத்தையும் கொஞ்சம் கூடுதலாகக் கொடுக்கிறது. இது பல இலட்சம் ஆண்டுகளாக நடந்த பரிணாமம்.

ஆண்களின் உடல் எடையும் உடல் வலிமையும் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கிறது. ஏன் ஆண்களுக்கு மட்டும் இப்படி தனிப்பட்ட மரபணுச் சலுகைகள் என்று கேட்கலாம். நல்ல கேள்வி.




மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து ஆண்களுக்கு உடல் ரீதியாகவே பற்பல கஷ்டங்கள்; எதிர்நீச்சல்கள்; சண்டைகள்; கலவரங்கள்; திண்டாட்டங்கள்; தத்தளிப்புகள்; போர்கள்; போராட்டங்கள்.

குகைகளில் வாழும் போது குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டி கொடிய விலங்குகளுடன்  போராட்டம். உணவுத் தேடிப் போகும் போது காட்டு விலங்குகளிடம் இருந்து உயிர்த் தப்பிக்கப் போராட்டம்.

எதிரிக் குழுக்களிடம் இருந்து குடும்ப உறுப்பனர்களைத் தற்காக்க வேண்டிய போராட்டம். பயிர் பச்சைகளைப் பெரிய மிருகங்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டிய போராட்டம்.

இப்படி எக்கச்சக்கமான போராட்டங்கள். பல இலட்சம் ஆண்டுகளாக இந்த மாதிரியான தப்பிப் பிழைக்கும் போராட்டங்களை ஆண்கள் நடத்தி வந்து இருக்கிறார்கள். அங்கே இருந்து தான் ஆணாதிக்கமும் தலை தூக்கி இருக்கிறது. 




அதனால் ஆண்களின் மரபணு பரிணாமத்தில் சற்றே கூடுதலான வலிமை மாற்றங்கள். அதுதான் உண்மை. புரியும் என்று நினைக்கிறேன். சரி.

கொரோனா நோயினால் பெண்களைவிட ஆண்கள் தான் அதிகமாய் உயிர் இழப்பதாகத் தகவல்கள். என்ன காரணங்கள். ஆண்கள் சில கசப்பான உண்மைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

முதல் காரணம்: ஆபத்தான நேரங்களில் ஆண்களைவிட பெண்கள் அதிக மனவலிமையுடன் செயல்படும் திறன் கொண்டவர்கள். அதே சமயத்தில் ஆண்களைவிட பெண்கள் அதிகமாக மன தைரியம் கொண்டவர்கள்.

ஆபத்துகளை எதிர்கொள்வதில் ஆண்களைவிடப் பெண்களே துணிச்சல் மிக்கவர்கள் என்று சொல்லப் படுகிறது. இந்தக் காரணம் மனவலிமை தொடர்பானது.




இரண்டாவது காரணம்: மது அருந்தும் பழக்கம். இந்தப் பழக்கம் ஆண்களுக்கு அதிகம். பெண்களைவிட ஆண்களே மதுப் பழக்கத்திற்கு அதிகமாய் அடிமையானவர்கள். இதுவும் ஒரு பொதுவான கருத்து.

மூன்றாவது காரணம்: புகைபிடிக்கும் பழக்கம் (Higher rates of tobacco consumption). புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்குப் பொதுவாக நுரையீரல் பாதிப்பு ஏற்படுவது உண்டு.

கொரோனா வைரஸ் மனிதர்களின் உடலுக்குள் மூக்கு வழியாக நுழைந்து மூச்சுக் குழாயை முதலில் சேதப் படுத்துகிறது. அடுத்து நுரையீரலைச் சிதைக்கிறது. அதனால் வைரஸ் தொற்று ஏற்பட்டதும் அவர்களின் நுரையீரல் அதிகமாய்ப் பாதிக்கப்பட்டு உயிர் இழக்கிறார்கள்.

நான்காவது காரணம்: பெண்களின் ஹார்மோன் (hormone) சுரப்பிகளில் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருப்பது ஒரு காரணம் (more aggressive immune system).

அதனால் கொரோனா உயிரிழப்புகள் தடுக்கப் படுவதாகவும் சொல்லப் படுகிறது. வைரஸ் கிருமிகளை எதிர்த்துப் போராடும் சக்தி பெண்களுக்கு அதிகம். 




ஆனாலும் பெண்களின் ஹார்மோன் (hormone) சுரப்பிகளில் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருப்பதால் அதுவே சமயங்களில் அவர்களுக்கு ஆபத்தாகவும் முடியலாம்.

முடக்கு வாதம் (rheumatoid arthritis); தண்டுவட மரப்பு நோய் (multiple sclerosis}; கேடயச் சுரப்பியைத் தாக்கி அழிப்பது (autoimmune thyroiditis); ஜோக்ரன் சிண்ட்ரோம் (Sjögren’s syndrome); தோல் அழிநோய் (lupus) போன்ற நோய்கள் பெண்களுக்கு அதிகம். ஆக பெண்களின் நோய் எதிர்ப்புச் சக்திக்கு அவர்களின் ஹார்மோன்களே காரணம்.

ஐந்தாவது காரணம்: பெரும்பாலும் பெண்கள் வீட்டிலேயே இருக்கிறார்கள். தங்கள் உடலை எப்போதும் சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் ஆண்கள் அப்படி இல்லையே. அதிகமாய் வெளியே போவது வழக்கம். அதனால் உடல் சுத்தம் கொஞ்சம் குறைவு. பெண்களுக்கு வீடுதான் உலகம். ஆண்களுக்கு உலகமே வீடு.

இந்த மாதிரியான காரணங்களினால் தான் கொரோனா உயிரிழப்பு விகிதத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபாடுகள். ஆக என்னதான் வேறுபாடுகள் இருந்தாலும், ஆண்களின் உயிரிழப்புகள் என்பது பெண்களையும் மறைமுகமாகப் பாதிக்கும்.

ஏன் என்றால் பெண் இனம்; ஆண் இனத்தைச் சார்ந்து இருக்கிறது. ஆண் இனம்; பெண் இனத்தைச் சார்ந்து இருக்கிறது. இதில் ஓர் இனத்திற்கு இழப்பு என்றால் அது இரண்டு இனத்தையுமே பாதிக்கும். நீ இல்லாமல் நான் இல்லை. நான் இல்லாமல் நான் இல்லை.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
05.04.2020


பேஸ்புக் பதிவுகள்


Parimala Muniyandy அருமையான விளக்கங்களுடன் கூடிய பதிவு. மிக்க நன்றிங்க அண்ணா🙏

Muthukrishnan Ipoh கருத்துகளுக்கு நன்றிங்க...

M R Tanasegaran Rengasamy "மாதராய்ப் பிறப்பது மாதவம்..." ரொம்பச் சரி. வாழ்க பெண்கள்.

Muthukrishnan Ipoh வீட்டை விட்டு யாருமே வெளியே போகக் கூடாது என்பதால்... குடும்பங்களில் ரொம்பவுமே சண்டைச் சச்சரவுகளாம்... Domestic Violence... புருசன் பெஞ்சாதி சண்டைகள்...😆😆

M R Tanasegaran Rengasamy வாழ்க்கையில் இதுவெல்லாம் சகஜம் சார்.

Muthukrishnan Ipoh 😆😆✌️

Balamurugan Balu வணக்கம்! நல்ல செய்தியை பதிவு செய்தமைக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்!

Muthukrishnan Ipoh பெண்களுக்கு நல்ல செய்தி... பாவம் ஆண்கள்...

Poovamal Nantheni Devi >>> Muthukrishnan Ipoh இல்லை ஐயா, குடும்ப வாழ்வில் பெண் துணை இல்லாத ஆணும், ஆண் துணை இல்லாத பெண்ணின் வாழ்வும் சிரமமே.

Muthukrishnan Ipoh >>> Poovamal Nantheni Devi ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் சார்ந்து உள்ளனர்... 0 என்பது பெண்கள்... 1 என்பது ஆண்கள்... இந்த இரு எண்களால் தான் மனித இனம் நகர்ந்து கொண்டு இருக்கிறது... கணினித் துறையும் 0, 1 எனும் இரு எண்களால் தான் இயங்குகிறது...

Sheila Mohan சிறப்பான விளக்கம் நன்றிங்க சார்...

Muthukrishnan Ipoh நன்றிங்க.... மகிழ்ச்சி...

Tanigajalam Kuppusamy ஆண்கள், பெண்களின் ஒப்புயர்வு அலசல் அருமை. பரிணாம விளக்கமும் மிக எளிமையாக அனைவரும் புரிந்து கொள்ளும்படி புனைந்து உள்ளீகள். 👍🌺

Muthukrishnan Ipoh பெண்களைப் பகைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது... நல்லதோ கெட்டதோ அவர்களைப் பாராட்டி நம் காரியத்தைச் சாதித்துக் கொள்வோமே... பாராட்டுங்கள் பரிசுகளை அள்ளுங்கள்... 😃😃

Muthukrishnan Ipoh மரபணுக்களைப் பற்றியும் அவற்றின் உள்ளடக்கம் பற்றி விளக்கம் கொடுப்பதுவும் கடினம் என்று சொல்ல முடியாது... முதலில் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்... அதன் பின்னர் தமிழ்ப் படுத்துவதில் சிரமம் இருக்காது... நன்றிங்க தணிகா...

Pon Vadivel ஐயா மேதகு முத்து அவர்களே, ஆதி காலத்தில் எல்லா துறைகளிலும் பெண்களே தலைவர்களாகவும் ஆட்சி புரிபவர்களாகவும் இருந்திருக்க வேண்டும். பெண்களின் உத்தரவுக்கு ஏற்ப, ஆண்கள் உணவு தேடவும் வீட்டுக்கு காவலாகவும் இருந்திருக்க வேண்டும்.

உலகம் இயற்கையாக பயணித்துள்ளது. இறுமாப்பும் ஆணவமும் கொண்ட ஆடவன், ஆட்சியை பெண்களிடம் இருந்து பின் வாசல் வழியாக ஆக்கிரமித்து உலகை பலிகடா ஆக்கிவிட்டான். பொறுமை இழந்த ஆண்டவன் ஆறறிவு மிக்க மனிதனை அழிக்க ஓரறிவு வைரஸ்களை அனுப்புகின்றார்.

பண்டைய கால பல மிருகங்கள் இனம் இப்போதில்லை. அது போல இப்போது இருக்கும் அரக்க குணம் படைத்த மனித இனங்களை படைப்பதை நிறுத்தி மனித சாயலில் தெய்வ குணம் பொருந்திய மாற்று இனம் படைக்க முனைந்து விட்டாரோ, என்னவோ. உங்களின் ஆராய்ச்சியில் இப்படி ஒரு சங்கதி எழுந்திருக்கின்றதா, ஐயா.

Muthukrishnan Ipoh வணக்கம். தங்களின் கேள்விக்குப் பின்னர் பதில் அளிக்கிறேன்... நன்றி.

Inbachudar Muthuchandran ஆண்கள் பெண்கள் பற்றி சிறப்பான கட்டுரை, வாழ்த்துகள் அய்யா

Muthukrishnan Ipoh கருத்துகளுக்கு நன்றி... மகிழ்ச்சி ஐயா...

Mahdy Hassan Ibrahim ஏற்றுக் கொள்ள வேண்டிய உண்மைகள்! தெளிவூட்டலுக்கு நன்றிகள்!

Muthukrishnan Ipoh மருத்துவ வல்லுநர்கள் செய்த ஆய்வுகள்... நம்பகமான ஆய்வுகள்... ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் நல்லாய்வுகள்.. நன்றிங்க...

Maana Mackeen ஆய்வும் எழுத்தும் அருமை. அருமை. அந்தக் கிருமி உங்களிடம் வாலாட்டாது இருப்பதாக... அத்தோட, கள்ளுக் கடைப் பக்கம் போவாதீக அப்புறானே... சத்தியமா...

Muthukrishnan Ipoh கருத்துகளுக்கு மிக்க நன்றிங்க இலங்கைப் புகழ் எழுத்துச் செம்மலே... இலங்கைத் தமிழேடுகளில் தங்களின் எழுத்துகளைக் கண்டு பரவசம் அடைந்தவர்களில் அடியேன் ஒருவன்... வாழ்த்துகள் ஐயா...

Maana Mackeen மகிழ்ச்சியும் நன்றியும். வசதிப் பட்டால், நீங்கள் தொடர்புடைய 'தமிழ் மல'ரில் உங்கள் நாட்டுத் தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள் பற்றிய ஆய்வுக் கட்டுரையைப் பார்த்து விடுங்கள்.

Don Samsa அப்படியே தலைவரே.. நல்லது

Muthukrishnan Ipoh
மகிழ்ச்சி

KR Batumalai Robert சிறப்பு அண்ணா.

Muthukrishnan Ipoh நன்றி.... மகிழ்ச்சி...

Krishna Ram Superb sir....

Muthukrishnan Ipoh நன்றி... நன்றி...

Melur Manoharan "அருமையான" பதிவு"...! நன்றி ஐயா...!

Muthukrishnan Ipoh நன்றிங்க தம்பி...

Sathya Raman மேலே உள்ள ஆய்வு கட்டுரையில் நீங்கள் பதிவு செய்த அனைத்தும் உண்மை தான் சார். அதில் பெண்களைக் காட்டிலும் ஆண்கள் ஊர் சுற்றுபவர்கள் என்கிறீர்கள். மெத்த சரிதான். இக்கட்டான காலக் கட்டத்தில் கூட அடங்கி ஒடுங்கி இருக்க மாட்டேன் என்கிறார்கள்.

நம் நாட்டு காவல்துறை ஆரம்பத்தில் கண்டித்தார்கள். அத்துமீறி போனதும் போலீஸ் லாரிகளில் அள்ளிக் கொண்டு போய் அபராதம் விதிப்பதோடு ஜெயிலில் போடுவதாகச் சொல்கிறார்கள்.

ஆனால் இந்தியாவில் ஆங்காங்கே ஊர் சுற்றும் ஆண்களை அங்குள்ள காவல் அதிகாரிகள் அடி கொடுத்து வெளுத்து வாங்குகிறார்கள். தேவையா இது. உயிருக்குப் பயந்தாவது பத்திரமாக வீட்டிலே இருந்தால் என்ன... குடி முழுகி விடுமா என்ன? மற்றும் ஒரு சிந்தனை மிக்க கட்டுரை. நன்றிங்க சார் 🙏

Muthukrishnan Ipoh மேலும் ஒரு தகவல்... வீட்டிற்குள்ளேயே இருங்கள் என்று அரசாங்கம் கெஞ்சிக் கூத்தாடினாலும் சிலர் கேட்பதாக இல்லை...

கோலாலம்பூரில் ஓர் அரசாங்க அதிகாரியும் (கவுன்சிலர்) அவரின் நண்பர்களும் பொது வளாகத்தில் பேட்மிண்டன் விளையாடி இருக்கிறார்கள். அவர்களைப் பிடித்துக் கொண்டு போய் நீதிமன்றத்தில் நிறுத்தி விட்டார்கள். மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டியவர்களே அரசாங்க விதி முறைகளை மீறினால் எப்படிங்க...

கொரோனா வைரஸ் தாக்கத்தைச் சாதாரணமாக எடை போடுவது ரொம்பவும் தப்பு... இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடித்து ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு எப்படியும் 18 மாதங்கள் பிடிக்கலாம்... அதற்குள் பல வேதனையான விளைவுகளை மனுக்குலம் எதிர்நோக்க வேண்டி வரலாம்...

மலேசியா மட்டும் அல்ல... உலகமே நிலைகுத்தி நிற்கிறது... இன்றைய நிலவரம்...

பாதிப்பு அடைந்தவர்கள்:
1,217,724

இறப்புகள்:
65,832

நலம் அடைந்தவர்கள்:
253,744

Sathya Raman >>> Muthukrishnan Ipoh சொல் பேச்சு கேட்காதவர்களை கொரோனா தான் தட்டி கேட்கணும் சார்.🤦

Don Samsa என்ன தலைவரே, நாளுக்கு நாள் குண்டுகளை தூக்கிப் போடறீங்க. கட்டுரையை படிப்பதற்கே பயமாய் உள்ளது. எங்க உங்களை புலனத்தில் ஆளையே காணோமே தலைவரே. அழைத்தாலும் பதில் இல்லை...

Muthukrishnan Ipoh உண்மை தான் ஐயா... உலக அளவில் கொரோனாவில் பாதிக்கப் பட்டவர்களில் 71% ஆண்கள்... கொஞ்ச நாட்களுக்கு வாட்ஸ் அப் மௌன விரதம்...

Samugam Veerappan தாங்கள் சொல்லும் கருத்துகள் அனைத்தும் உண்மையானவை

Muthukrishnan Ipoh மகிழ்ச்சி ஐயா...

Tanigajalam Kuppusamy #புனைந்துள்ளீர்கள்

Manickam Nadeson என்ன தவம் செய்தோமோ, இப்படி ஒரு கிருமி ஆண்களை அதிகம் தாக்குவதற்கு... நாமெல்லாம் ரொம்ப பாவம் ஐயா சார். சரியா சாமி கும்பிடுறது இல்லையோ???

Muthukrishnan Ipoh ஆண்களுக்குப் பெண்களைவிட நோய் எதிர்ப்புச் சக்தி குறைவு என்பது உண்மை... ஆண்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்... அதே சமயத்தில் ஆண்களுக்கு ஆபத்து என்றால் அது பெண்களையும் பாதிக்கும்...

Jainthee Karuppayah கடைசியாக சொன்னீர்களே நான் இன்றி நீ இல்லை... நீ இன்றி நான் இல்லை... கட்டுரையின் முத்தாய்ப்பு. I give 100% marks...

Muthukrishnan Ipoh மார்க் கொடுத்து பாராட்டி இருக்கிறீர்கள்.... மிக மகிழ்ச்சி...

பெ.சா. சூரிய மூர்த்தி தங்களின் பதிவுகள் அனைத்தும் சிந்திக்கக்கூடியவை ஐயா.நன்றி.வணக்கம்.வாழ்க.

Muthukrishnan Ipoh கருத்துகளுக்கு மிக்க நன்றிங்க...

Balamurugan Bala விளக்கங்களுடன் கூடிய சிறப்பான கட்டுரை சார்...

Muthukrishnan Ipoh நன்றிங்க... வாழ்த்துகள்...

Shanker Muniandy உங்கள் கூற்று முற்றிலும் உண்மை.

Muthukrishnan Ipoh நன்றி... மகிழ்ச்சி...

Vely Loganathan நன்றி அய்யா

Muthukrishnan Ipoh மகிழ்ச்சி... வாழ்த்துகள்.








04 ஏப்ரல் 2020

சீனாவில் நாய்க்கறி திருவிழா

அந்தக் காலத்தில் உயிர் வாழ்வதற்காக மனிதன் சாப்பிட்டான். இந்தக் காலத்தில் சாப்பிடுவதற்காக மனிதன் உயிர் வாழ்கிறான். அந்தக் காலத்தில் பயிர் செய்வதற்காக ஆடு மாடுகளை வளர்த்தான். இந்தக் காலத்தில் வயிறு வளர்ப்பதற்காக நாய் பூனைகளைச் சாகடிக்கிறான்.



அந்தக் காலத்தில் அவனுடைய சாப்பாட்டுத் தட்டுகளில் சமைத்த ஆடுகள் கோழிகள் மேய்ந்தன. இந்தக் காலத்தில் அரைகுறையாகச் சமைத்த நாய்களும் பூனைகளும் ஒப்பாரி வைத்து ஓலம் வைக்கின்றன. காலத்தின் அலங்கோலங்கள்.

மனிதப் பண்புகளை மரிக்கச் செய்வது சகிக்க முடியாத அசிங்கச் செயல்.
அப்படித் தான் சொல்லத் தோன்றுகிறது.

நாய் இறைச்சி பூனை இறைச்சி என்று சொல்லும் போது குமட்டுகிறது. நினைக்கும் போது குமட்டுகிறது. அதைப் பற்றி எழுதும் போதும் அடிவயிற்றில் ஆயிரம் வால்ட் மின்சாரம் அடிக்கிறது.

ஆனால் அந்த மாதிரி குமட்டல்களை எல்லாம் கும்மாளம் போட்டுச் சாப்பிடும் ஜென்மங்களை நினைக்கும் போது ரொம்பவுமே குமட்டித் தொலைக்கிறது. 




அவர்களை உகாண்டா நாட்டின் ஒன்றுவிட்ட பங்காளிகள் என்று சொல்ல முடியவில்லை.

பாப்புவா நியூகினி நர வேட்டை நாயகர்களின் தூரத்துச் சொந்தங்கள் என்றும் சொல்ல முடியவில்லை. ஒரே வார்த்தையில் சொன்னால் சுத்தக் கசுமாலங்கள். மன்னிக்கவும். ஒரு சில நாடுகளில் வாழும் சில பல மனிதப் பாரம்பரியங்களைத் தான் அப்படிச் சொல்ல வேண்டி உள்ளது.

எப்படித்தான் நாயையும் பூனையையும் அடித்துக் கொன்று சாப்பிடுகிறார்களோ தெரியவில்லை. நினைக்கும் போதே அடி வயிற்றில் 8.4 புள்ளி சுனாமி நிலநடுக்கப் பேரலைகள் குலை நடுங்க வைக்கின்றன.

தெருக்களில் சுற்றித் திரிந்த அனாதை ஜீவகளுக்கு எல்லாம் சாப்பாட்டுத் தட்டுகளில் விடுதலை கிடைத்து விட்டது போலும். இப்படி நான் சொல்லவில்லை. ஆசியா விலங்குகள் (Animals Asia) பாதுகாப்புக் கழகம் சொல்கிறது. 




சீனாவில் மட்டும் ஒவ்வோர் ஆண்டும் 10 மில்லியன் நாய்கள்; 4 மில்லியன் பூனைகள்; இறைச்சிக்காகப் படுகொலை செய்யப் படுகின்றன என்று ஆசியா விலங்குகள் பாதுகாப்புக் கழகம் சொல்கிறது..

(https://www.animalsasia.org/uk/facts-about-the-abuse-of-dogs-and-cats-in-asia.html)

இன்னும் ஒரு கணக்கு வருகிறது. மயக்கம் போட்டு விழாமல் இருந்தால் சரி. உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 25 மில்லியன் நாய்கள் மனிதர்களால் உண்ணப் படுகின்றன.

சீனா, தென் கொரியா, வியட்நாம், நைஜீரியா, இந்தியா போன்ற நாடுகளில் நாய் இறைச்சியின் பெயர் சர்வ சாதாரணமாக அடிபடுகிறது. உலகம் எங்கிலும் உள்ள பல நாடுகளிலும் நாய் இறைச்சி சாப்பிடப் படுகிறது அல்லது சட்டப்பூர்வமாக உள்ளது. இதில் இந்தியாவின் பெயரும் வந்து போகிறது.




வட இந்தியாவின் சீனா எல்லையோர மாநிலங்களில் நாய்களைப் பிடித்து கொரியா, சீனா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். நல்ல ஒரு வியாபாரமாகவும் விளங்குகிறது. தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

கீழே ஒரு காணொலியின் இணைய முகவரி வருகிறது. இந்தியா நாகாலாந்தில் நாய்கள் எப்படி இறைச்சிக்காக அடித்துக் கொல்லப் படுகின்றன என்பதைச் சித்தரிக்கும் காணொலி. உலக அமைதிக் கழகம் பதிவு செய்த காணொலி. உலக அளவில் பரவலாகி விட்டது.

https://newsroom.humanesociety.org/video/video.php?bctid=5030678792001

இன்னும் ஒரு குமட்டல் செய்தி. சீனாவின் குவாங்ஷி (Guangxi) மாநிலத்தில், யூலின் (Yulin) மாநகரில் வருடா வருடம் நாய்க்கறி திருவிழா நடைபெறுகிறது.

அந்தத் திருவிழாவின் பெயர் லைச்சி நாய்க்கறி திருவிழா (Lychee and Dog Meat Festival). பத்து நாட்களுக்கு அந்தத் திருவிழா கோலாகலமாக நடைபெறும். ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதம் 21-ஆம் தேதி தொடங்கி 30-ஆம் தேதி முடிவு அடைகிறது.




நாய்களை மரப் பேழைகளில் வைத்து அணிவகுப்புச் சாயலில் ஊர்வலம் கொண்டு போவார்கள். ஊர்க்கோலம் முடிந்ததும் அவற்றை அடித்துக் கொன்று அப்படியே வெட்டிச் சமைத்து திருவிழாவுக்கு வந்தவர்களுக்கு விருந்து கொடுக்கிறார்கள்.

எது எதற்கு எல்லாமே திருவிழா எடுப்பார்கள். நாய்க்கறி இறைச்சிக்காக இப்படி ஒரு திருவிழாவை சீனாவில் நடத்துகிறார்கள். அதில் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட நாய்கள் கொல்லப் படுகின்றன.

(https://en.wikipedia.org/wiki/Lychee_and_Dog_Meat_Festival)

சீனாவின் தெருக்களில் மில்லியன் கணக்கில் நாய்களும் பூனைகளும் அனாதைகளாய் வாழ்கின்றன. அவற்றில் கைவிடப்பட்ட செல்லப் பிராணிகளும் உள்ளன.

அவற்றில் உரிமையாளர்களால் தூக்கி எறியப் பட்ட அனாதை அழகுப் பிராணிகள். மேலும் பல தெருக்களில் பிறந்து வளர்ந்த ஐந்தடி ஜீவராசிகள்.




சீனாவில் செல்லப் பிராணி பிரியர்கள் நிறையவே உள்ளனர். பெரும்பாலும் நாய்களும் பூனைகளும் குடும்ப செல்லப் பிராணிகளாக வளர்க்கப் படுகின்றன.

அதே சமயத்தில் தெரு நாய்கள்; தெருப் பூனைகளின் நடமாட்டத்தை குறைக்கும் முயற்சியில் அமலாக்க அதிகாரிகள் தீவிரமாக ஈடுபடுகின்றனர். கொடூரமான வகையில் அந்தப் பிராணிகள் கொல்லப் படுகின்றன.

விலங்குகள் கொடூரமாகக் கொல்லப் படுவதற்கு உலகளவில் பல நாடுகள் தடை விதித்து உள்ளன. இருந்தாலும் சொரணையைத் தேடும் மனிதர்கள் இருக்கும் வரையில் பல கோடி நாய்களுக்கும் பூனைகளுக்கும் விமோசனம் இல்லை. அப்படிப்பட்ட அசிங்கத் தனங்களும் அடங்கப் போவது இல்லை. பாவம் அந்த உயிர்கள்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
04.04.2020






பேஸ்புக் பதிவுகள்


Krishna Ram அருமையான பதிவு... thanks sir

Muthukrishnan Ipoh மிக்க நன்றி...

Ravi Purushothaman சீன அரசு இவற்றை நிரந்தரமாகத் தடை செய்ய வேண்டும்...

Muthukrishnan Ipoh வனவிலங்குச் சட்டத்தில் சீர்த்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்...

Khavi Khavi உணவு உண்பது, தன் உடல் கொண்ட உயிரை பாதுகாக்க நிகழும் வாழ்வியல் நிகழ்வு. ஒன்றை கொன்றுதான் இன்னொன்று நகர்கிறது. ஆனால் இச்செயல் அளவுக்கு மீறினால் அஃது ஓர் அழிவின் ஆரம்பமாகிறது. நன்றி..

Muthukrishnan Ipoh
சரியாகச் சொன்னீர்கள்...

Khavi Khavi  நன்றி ஆசிரியரே.. :)

SU Vaasagan Subramaniam உலக நாடுகள் அனைத்தும் சீனாவை 10 ஆண்டுகளுக்கு எந்த ஒரு வரத்தகமும் இல்லாமல் ஒதுக்கி வைக்க வேண்டும்.. கண்டதை தின்னு மக்களை அழிக்கிறது..

Muthukrishnan Ipoh அது எல்லாம் நடக்கிற காரியம் இல்லை சார்... அவர்கள் தான் இப்போது உலகத்திலேயே நம்பர் ஓன் பணக்காரர்கள்...

SU Vaasagan Subramaniam >>> Muthukrishnan Ipoh இன்னும் இல்லை ஐயா.. அவர்கள் எண்ணம் வேறு.. நடக்காது என்றில்லை.. நடத்த மலேசியாவிற்கு வக்கில்லை.. கண்டவன் காலில் விழுந்து கிடப்பதே இவர்களின் நோக்கம்.. சீனாவின் தாக்குதல் அமெரிக்கா.. சொவியட் அதன் பின்னால்.. இது பழைய பழிவாங்கும் படை..

Magendran Rajundram >>> SU Vaasagan Subramaniam

https://youtu.be/1a_yBHpkPs0https://youtu.be/1a_yBHpkPs0

Ammini Ayavoo ஏன் நாய்கள் பூனைகள் சாப்பிடுபவர்களைத் திட்டுகிறீர்கள்???
நம் தட்டிலும்தான் ... கோழிகள் ஆடுகள் மீன் வகைகள் யாவும் உள.. எல்லாம் உயிர்கள் தான்... வாழ்க வையகம் ...

Muthukrishnan Ipoh // நாய்கள் பூனைகள் சாப்பிடுபவர்களைத் திட்டுகிறீர்கள் // இனிமேல் பாராட்டுவோம்...

Ammini Ayavoo >>> Muthukrishnan Ipoh எல்லாம் உயிர்கள்தாம்...

M R Tanasegaran Rengasamy அதுதான் ஒட்டு மொத்தமாக அடித்து உலகத்தையே அடைத்து வைத்திருக்கிறது. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

Muthukrishnan Ipoh கலிகாலம் என்பது கழிகாலம் ஆகலாம்...

M R Tanasegaran Rengasamy >>> Muthukrishnan Ipoh கலிகாலம் உலகத்தைக் காலியாக்கலாம்.

Sathya Raman >>> Muthukrishnan Ipoh மனிதனின் பாவத்தின் சம்பளம் தான் இன்று அவனையே வீழ்த்திக் கொண்டிருக்கிறது சார்.

Rajendra Kumar Malaysiavil irukkum Chinese intha maadhiri naai / poonai saapuduvaangalaa ayya ???  (மலேசியாவில் உள்ள சீனர்கள் இந்த மாதிரி நாய் பூனை சாப்பிடுவார்களா ஐயா)

Muthukrishnan Ipoh  தெரியவில்லை...அவர்களைத் தான் கேட்க வேண்டும்...

Rajendra Kumar >>> Muthukrishnan Ipoh ha ha ha

Vikneshwaran Adakkalam ஒரு இனத்தின் உணவு முறை / கலாச்சாரம் உங்களை குமட்டச் செய்கிறது என்றால், நீங்கள் ஆதிக்க மனப்பான்மையில் இருக்கிறீர்கள் என அர்த்தம்.

உணவு மனிதனின் உரிமை. அவன் என்ன சாப்பிட வேண்டும் என்பதை அவனே தேர்வு செய்கிறான். சிலருக்கு முட்டை குமட்டலாம். மாடு குமட்டலாம். சிலருக்கு அசைவம் கூட குமட்டலாம்.

புதுமனை புகுதலின் போது பஞ்சகவ்யம் அருந்தும் பழக்கம் கூட நம்மில் பலரிடம் உண்டு. ஜப்பானில் இருந்த போது ஒரு ஆவணப்படத்தை பார்த்தேன்.

மாட்டுச் சாணத்தையும் கோமியத்தையும் புனிதமாக போற்றும் பழக்கத்தையும் அதன் பின் விளைவிகளையும் எந்த அளவுக்கு மனிதனை பாதிக்கும் என்பதை விளக்க ஒரு நாட்டின் / இனக் குழுவின் நம்பிக்கையே மோசமாக சித்தரித்தார்கள்.

ஒரு கற்பிதம் தனக்குள் புனிதமாகிவிட்ட பட்சத்தில் மற்றவரின் அனைத்து நம்பிக்கைகளும் கேவலமாகத்தான் தோன்றும். நான் இப்போது ஒரு புனித நிலையில் இருக்கிறேன் ஆதலால் மற்றவை மட்டமாகிவிடுகிறது.

நமக்கு பிடிக்காததை பிடிக்காதென சொல்லிட்டு போகலாம். இழிவுபடுத்த தேவை இல்லை. எல்லா சீனர்களும், கொரியர்களும் நாய் பூனை சாப்பிடுவதில்லை. அது ஒரு இனக் குழுவின் நம்பிக்கை, கலாச்சாரம்.

Sathya Raman >>> Vikneshwaran Adakkalam தங்களின் தற்காப்பு விளக்கம் சரிதான். ஆயினும் மனிதன் அதிகமாக, செல்லப் பிராணியாக தங்களின் வீடுகளில் வளர்ப்பது நாய், பூனைகளைதான் அவற்றையே அளவுக்கு அதிகமாக பலி கொடுத்து இந்த மனிதப் பயல் பசியை போக்கணுமா என்ன?

"கொன்றால் பாவம் தின்றால் போச்சு" என்கிற தத்துவம் பேசுவதற்கு ஜோர் போடலாம். ஆனால் அதுவும் எல்லை மீறும் போது மனிதனின் எல்லா தவறான செயல்களுக்கும் காலனிடம் பதில் சொல்ல வேண்டிருக்கிறதே?

வாயில்லாத ஜீவன்கள் என்பதற்காக கொலை செய்து அவற்றை உணவாக்கும் விதத்தை உன்னதம் என்று ஏற்கும் இது எத்தகைய மனநிலை? அவரவருக்கு வெவ்வேறு உணவு பழக்க வழக்கம் என்பது வழக்கமான ஒன்றே ஆகட்டும்.

மிருக வதை சட்டம்படி அது குற்றம் தானே? வாய் இல்லாத ஜீவன் என்பதற்காக இந்த மனிதன் மற்ற உயிரினத்திற்கு எத்தகைய கொடுமைகளையும் செய்வதை ஆதரிக்கிறீர்களாக்கும்?

Vikneshwaran Adakkalam >>> Sathya Raman நான் மிக தெளிவாகவே எழுதி இருக்கிறேன். பிடிக்காத ஒன்றை பிடிக்காதென சொல்வதில் தவறில்லை. ஒவ்வாமை வேறு இழிவு படுத்துவது வேறு. இதற்கு மேல் தெளிவுபடுத்த தேவை இல்லை என்று கருதுகிறேன். நன்றி.

Muthukrishnan Ipoh // ஒரு இனத்தின் உணவு முறை  கலாச்சாரம் உங்களை குமட்டச் செய்கிறது என்றால், நீங்கள் ஆதிக்க மனப்பான்மையில் இருக்கிறீர்கள் என அர்த்தம்.//

ஒவ்வொருவருக்கும் அவரவர் கருத்தைச் சொல்ல உரிமை இருக்கிறது... அந்தக் கருத்திற்கு எவரும் எதிர்க்கருத்துகள் சொல்லலாம்... எதிரிவிளைவுகளை ஏற்படுத்தும் கருத்துகளைச் சொல்லி மூக்கு உடைபடாமல் பார்த்துக் கொள்வதே சிறப்பு..... எல்லாம் தெரிந்த நல்லையர்கள் மாதிரி ஏடாகூடமாகக் கருத்துகள் சொல்லி வம்பில் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதும் சிறப்பு...

Muthukrishnan Ipoh >>> Sathya Raman நாயையும் பூனையையும் தின்பது அவர்களின் பழக்கம் என்றால் அப்புறம் ஏன் வளர்க்க வேண்டும்... அப்புறம் ஏன் நடுத்தெருவில் கொண்டு போய் விட்டு விட்டுப் போக வேண்டும்...

Vikneshwaran Adakkalam எல்லாம் தெரிந்த நல்லையர்கள் மற்றவர்கள் மூக்கை உடைக்கும் அளவுக்கு சினம் கொள்ளவும் தேவை இல்லை தான்.

Magendran Rajundram ஆதிக்க மனப்பான்மை மற்றும் மனித நேயம் இரண்டுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது. இந்த கட்டுரை எதை அடிப்படையாக கொண்டு எழுதி இருக்கிறார் என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.

Sathya Raman >>> Muthukrishnan Ipoh பல வீடுகளில் நாய், பூனையை வளர்ப்பவர்கள் தங்களின் குழந்தைகளைவிட வளர்ப்பு பிராணிகள் மீது ஆதிதப் பாசத்துடன் இருப்பதை இன்றைக்கும் நிறைய வீடுகளில் பார்க்கிறோம்.

என்அண்டை வீட்டுக்காரர் அவர் கடித்து சாப்பிட்ட ஆப்பிளை நாய்க்கு ஊட்டுவதும், கொஞ்சி விளையாடுவதும், அவர் வேலை முடிந்து வீட்டினுள் நுழைவதற்குள் அதுகளும் செல்லமாய் சிணுங்கி வைப்பதும் பார்க்கவே பரவசமாக இருக்கும்.

கூடவே சாலையில் அடிப்பட்டு வயிறு கிழிந்து உயிருக்கு போராடும் நாய்களை வீட்டுக்கு கொண்டு வந்து வைத்தியம் பார்த்து இவர் வளர்பதும், மற்ற நண்பர்களுக்கு கொடுப்பதையும் பார்த்து வருகிறேன்.

அதற்கு மாறாக இன்னொரு அண்டை வீட்டுக்காரர் நாய் குறைத்தாலே கெட்ட வார்த்தையில் திட்டுவதும், நாயின் காதை பிடித்து கார் டயரில் வைத்து காரை ஏற்றி அது கதற, கதற கொடூரம் புரிவதையும் பார்த்து இருக்கிறேன் சார்.
மேலும் ஊர் பெருமைக்கு நாய், பூனைகளை வளர்க்க வேண்டியது பிறகு வக்கு இல்லாத போது அதுகளை தெருவில் விட்டு விடுவதும் இது மனிதாபிமானம் அற்றவர்களின் கெட்ட குணம்.

தன்னால் இயலாத காரியத்தை முயற்சிக்குகூட இத்தகையவர்கள் செய்யக்கூடாது. விரும்புபோது வளர்ப்பதும், வெறுக்கும்போ து விரட்டி அடிப்பதும் நல்ல மனித செயல் அல்ல.

யோகேந்திரன்: பயிர்களை கூட தான் செல்லமாக வளர்க்கிறார்கள்.. அதற்காக அதை உண்ண வேண்டாம்னு சொல்லுவீங்களா ?🤔

மாரியப்பன் முத்துசாமி: நமது நாட்டில் சைவ உணவுக்கு மாறும் வகையில் சைவ இறைச்சி உணவகங்கள் குறைந்த விலையில் விற்று வருவது நாம் அறிந்ததே. இது சீனர்கள் தான் நடத்தி வருகின்றனர்

Muthukrishnan Ipoh உண்மைதான் ஐயா...

Indra Ramasamy இந்த மாமிச உண்ணிகள் எவ்வளவு பட்டாலும் திருந்தப் போவதில்லை... மனசாட்சி அற்றவர்கள்.

Balamurugan Balu வணக்கம்! நல்ல பதிவு செய்தமைக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்!

Muthukrishnan Ipoh மகிழ்ச்சி ஐயா....

Melur Manoharan "நல்ல பதிவு" நன்றி ஐயா"...!

Jsr Chandra Cinavil Nirantarama: tadai seiya vendum. Sir (சீனாவில் நிரந்தரமாய் தடை செய்ய வேண்டும்)

Muthukrishnan Ipoh எதிர்பார்ப்போம்...

Santhi Krishnasamy: Intha kiriminga enge thiruntha pothu😭😭 (இந்த கிருமிங்க எங்கே திருந்த போகுதுங்க)

Muthukrishnan Ipoh கண்டவதைக் கற்றவன் பண்டிதவன் ஆவான்... கண்டதைத் தின்றவன்.... ஆவான்... நீங்களே நிறைவு செய்து கொள்ளுங்கள்...

Pon Vadivel என்ன கொடுமை ஐயா பெரியவர் முத்துக்கிருஷ்ணன் அவர்களே, ஆறாம் அறிவுகள், ஐந்தாம் அறிவுகளை வதம் செய்து விழுங்குகின்றனரே...

Muthukrishnan Ipoh
நாய்களையும் பூனைகளையும் தின்று பழகி விட்டார்கள்... அது அவர்களின் வாழ்வியலில் ஒரு கலாசாரமாக மாறி விட்டது...

Muthukrishnan Ipoh ஆடு, மாடு, கோழி, நாய், பூனை வளர்ப்புப் பிராணிகள் தான். இவற்றுள் நாயும் பூனையும் உலகளாவிய நிலையில் செல்லப் பிராணிகள். பிள்ளைகளைப் போல வளர்த்து விட்டு, அந்தச் செல்லப் பிராணிகளையே அடித்துத் தின்பது என்பது மனிதாபிமானம் அற்ற, ஈவு இரக்கமற்றச் செயலாகவே தோன்றுகிறது.

அப்படி வளர்த்த செல்லப் பிராணிகளுக்கு நோய் நொடி வந்ததும் அவற்றைக் கொண்டு போய் நடுத் தெருவில் விட்டு விட்டு வந்து விடுகிறார்கள். அதைப் பார்க்கும் சில நாய் பூனை விரும்பிகள், அவற்றைப் பிடித்துக் கொண்டு போய்க் கொன்று, அவற்றின் இறைச்சியை கூறு போட்டு விற்று காசு பார்க்கிறார்கள்.

இதை எல்லாம் பார்க்கும் போது சிலருக்கு குமட்டல் வரலாம். நாயைத் தின்பதும் பூனையைத் தின்பதும் ஓர் இனத்தின் பழக்க வழக்கம் என்றால் அந்த நாய்களையும் பூனைகளையும் சுத்தியலால் அடித்துக் கொல்வது பெரும் கொடூரம்...

Muniandy Segar இந்த நாகரிக உலகில் இன்னும் பிற உயிரினங்களுக்கு எதிரான வன்முறையுடன் ஒரு அறியாமையைக் காண்கிறோம்

Sheila Mohan படிக்கும் போதே குமட்டிக்கொண்டு வருகிறது...
மனித வடிவில் மிருகங்கள்...

Muthukrishnan Ipoh படிக்கும் போது மட்டும் அல்ல... அதை நினைக்கும் போதே குமட்டல் வருகிறது...

Sarawna Sarawna திருந்தாத மட ஜென்மங்கள்.

Pon Vadivel ஐயா, மேதகு முத்துக்கிருஷ்ணன் அவர்களே, நாய் நன்றியுள்ள பிராணி, நாய்கள் மேல் பொறாமை கொண்ட அதிகமான மக்கள் இருக்கின்றனர் என்பது உறுதிப்படுத்தப் படுகின்றது. எங்களுக்கு இல்லாத நன்றி, கடமை பொறுப்பு, ஐந்தறிவுள்ள உனக்கு மட்டும் எதற்கு?

எங்களை நீ அவமானப் படுத்துகிறாய் எனும் தீராத கோபம், சில நாட்டு மக்கள் நாயைக் கொன்று தின்று விடுகின்றார்கள். இப்படிப்பட்ட நாடுகளில் இருக்கும் நாய்களை அப்புறப் படுத்த ஐக்கிய நாடுகள் சபை ஒரு தனிப் பிரிவை ஏற்படுத்த வேண்டும். உலகெங்கும் உள்ள பிராணிகள் வதை எதிர்ப்பு இயக்கங்கள் நல்ல முடிவு எடுக்க வேண்டும்.

Muthukrishnan Ipoh நாய் நன்றி உள்ள பிராணி... உண்மைதான்... ஆனால் அந்த நாயையே ஓர் உணவுப் பொருளாக நினைக்கும் போது நன்றி அடிபட்டு போகின்றது ஐயா...

நன்றியை மறக்கும் உலகில் காலத்தில், வாயில்லா ஜீவன்கள் காட்டும் நன்றியை நினைத்துப் பார்க்க மனிதனுக்கு நேரம் இல்லை என்றே தோன்றுகிறது...

Malini Rangasamy அருமையான பதிவு. நன்றி

Muthukrishnan Ipoh மகிழ்ச்சி...

Vejaya Kumaran: yenne oru kalaa haaram.......seena naa kokkaa (என்ன ஒரு கலிகாலம்...)

Selvi Sugumaran: Enna Sir ettu... Sad (என்ன சார் இது)

Muthukrishnan Ipoh என்ன செய்வது... நீங்களே சொல்லுங்கள்...

Sush Meetha: Better die

Ravi Purushothaman எதற்கும் ஒரு வரம்பு இருக்கிறது... மனித நேயம் என்பதற்கு அர்த்தம் மறந்து போனதா... அது இருக்கும் வரைதான் மனிதன்... இன்னும் மனித இறைச்சியை விரும்பினால் அதுவும் அவர்கள் விருப்பம் என்பீரோ?

Muthukrishnan Ipoh நன்றாகச் சொன்னீர்கள்... மனிதநேயம் இருக்கும் வரையில் தான் மனிதம் வாழும்...

Gurunathan Dharmalingam இந்த ஜீவன்களின் சாபங்கள் எல்லாம் அந்த சீன அரக்கர்களுக்கே உரித்தாகும். இவர்களின் மரணம் இந்தப் பிராணிகளைவிட கொடூரமானதாக இருக்கும். காத்திருப்போம் காலம் வரும் வரை!

Muthukrishnan Ipoh அது ஓர் இனத்தின் நெடு நாளைய பழக்க வழக்கம்... நல்லது அல்ல என்று அவர்கள் உணர வேண்டும்... சீனர்களில் பெரும்பாலோர் அந்தப் பிராணியைச் சாப்பிடுவது இல்லை... ஒரு சிலர் தான் சாப்பிடுகிறார்கள்... அதனால் ஒட்டு மொத்தமாய் குறை சொல்வதை ஏற்க இயலாது... ஓர் இனத்தை அரக்கர்கள் என்று ஒட்டு மொத்தமாய் வசை பாடுவதும் தவறு...









அமேசான் காடுகளில் கொரோனா வைரஸ்

கொரோனா கோவிட் வைரஸ் அமேசான் காடுகளையும் விட்டு வைக்கவில்லை. அங்கேயும் கள்ளப் பார்வை. அங்கேயும் அதர்ம ஆட்சி. ஆரவாரம் இல்லாமல் ஒரு புதிய மிரட்சி.


அமேசான் காட்டிற்குள் அடங்கி ஒடுங்கி வாழ்கின்ற பூர்வகுடிக் மக்களிடமும் கொரோனா வைரஸ் பரவி இருக்கிறது. கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதியே பூர்வகுடிக் மக்களிடம் கொரோனா அறிகுறிகள் தோன்றி விட்டன. பிரேசில் அரசாங்கம் அதை உறுதிப்படுத்தி உள்ளது.

வடக்கு அமேசானில் பிரேசில், கொலாம்பியா, பெரு நாடுகளில் கொகாமா (Kokama) பூர்வகுடி மக்கள் வாழ்கிறார்கள். மக்கள் தொகை 21 ஆயிரம்.

அந்தப் பூர்வீக இனத்தைச் சேர்ந்த 20 வயது பெண்ணுக்குக் கொரோனா. அதைப் பிரேசில் நாட்டின் பூர்வகுடி இனங்களுக்கான மருத்துவ சேவைக் குழு உறுதிப்படுத்தி இருக்கிறது. 


பிரேசில் நாட்டில் சாவோ ஜோஸ் (Sao Jose Dos Campos) என்கிற கிராமம். அங்கே சுகாதாரத் துறை முகவராக அந்தப் பெண்மணி பணிபுரிகிறார். அவருக்குத் தான் கொரோனா பாதிப்பு. அதனால் சுற்று வட்டாரக் கிராமங்களில் கொரோனா தொற்று பரவி இருக்கலாம் என்று பெரிதும் அஞ்சப் படுகிறது.

அமேசான் காடுகளில் தனிமையில் வாழ்கின்ற பூர்வக்குடி மக்களிடம் கொரோனா விரைவில் பரவிவிடும் ஆபத்து இருக்கிறது. பிரேசில் அமேசான் காட்டுப் பகுதிகளில் 107 பூர்வகுடியினக் குழுக்கள் உள்ளன.

படிப்பு வாசனை குறைவு. பழமை வாதங்கள். பழமைப் போக்குகள். சின்னச் சின்ன கிராமங்களில் சின்னச் சின்னக் குழுக்களாய் வாழ்கிறார்கள். அதனால் கொரோனா எளிதில் தொற்றி விடலாம்.


உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இல்லை என்றால் உலகின் பழமையான பல பூர்வீக இனங்கள் காணாமல் போகலாம்.

அமேசான் காடுகள் கோடிக் கோடி ஆண்டுகளாகக் கோடிக் கோடி உயிர் இனங்களுக்கு உயிர் கொடுத்த உயிர்நாடி. கோடிக் கோடி ஆண்டுகளாக உயிர்க் காற்றைக் கொட்டிக் கொடுத்த உலக நாடி.

அங்கே கோடிக் கோடி ஆண்டுகளாகக் கொட்டும் மழையில் நனையும் மழைக் காடுகள். கோடிக் கோடி ஆண்டுகளாகச் சூரிய வெளிச்சத்தைப் பார்க்காத பச்சைக் பசுமரத்துக் காடுகள். 


ஒரே வார்த்தையில் சொன்னால்... கோடிக் கோடியான மரங்கள். கோடிக் கோடியான செடி கொடிகள். கோடிக் கோடியான மருந்து மூலிகைகள். கோடிக் கோடியான உயிரினங்கள்.

அமேசான் மழைக் காடுகள், உலகத்தையே வாழ வைக்கும் ஓர் உலக அதிசயம். அமேசான் காடுகளில் மட்டும் 390 பில்லியன் மரங்கள் உள்ளன. இந்த உலகின் உயிரினங்களில் மூன்றில் ஒரு பங்கு இந்த மழைக் காடுகளில் தான் வாழ்கின்றன.

இப்போது... அங்கேயும் கொரோனா வைரஸ் சாம்ராஜ்யம் தொடங்கி விட்டது. இதுவே ஒட்டு மொத்த உலக மனித இனத்திற்கு மாபெரும் சோதனைக் காலம். 
 

இனம், மொழி, சமயம், சாதி, சம்பிரதாயங்களைக் களைந்து விட்டு, மனிதர்கள் ஒரே மனித இனமாய் வாழ வேண்டிய ஒரு காலக் கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

உலகிலுள்ள கோடிக் கோடியான உயிரினங்களில் மனித இனம் மட்டும் தான் ஆறறிவு பெற்ற அழகிய இனம். அந்த இனத்திற்கு இப்போது ஓர் இக்கட்டான காலம். ஆண்டவர் கொடுத்த ஆறறிவை அழகாய்ப் பயன்படுத்திக் கொள்வோம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
04.04.2020


பேஸ்புக் பதிவுகள்

Tanigajalam Kuppusamy இறுதியிலுள்ள பத்தியின் வரிகள் மனதுக்கு இதமாகவுள்ளன.

Muthukrishnan Ipoh மகிழ்ச்சிங்க... அந்த ஆறறிவினால் நம் மனுக்குலம் அழிவை நோக்கிப் பயணிப்பதாக ஒரு நெருடலும் ஊர்கின்றது தணிகா...

Tanigajalam Kuppusamy >>> Muthukrishnan Ipoh
மிகவும் மகிழ்கிறேன். எப்போதும் இப்படியே அழையுங்கள். அணுகுண்டு, அணுப்பிளவு, இணைவு (Fission, Fusion) பற்றி ஒரு கட்டுரை எழுதுங்களேன். யுரேனியம், புளுடோனியம், நியுகிலியஸ் இவற்றின் பயன்பாடு குண்டு தயாரிப்பில் எப்படி பயன்படுகிறது என்பன போன்ற விளக்கங்களும் இருப்பது சிறப்பு.

Doraisamy Lakshamanan உலகமக்கள் அனைவரையும் இணையம் வழி ஒன்றிணைத்து இரவு பகல் எந்நேரமும் எல்லோரிடம் எல்லோரும் இணையம் வழி இணைந் துபேசி இல்லாத வசதிகளை எப்படித் தருவது என்பதை உலக நாடுகள் ஓன்றிணைந்து உருவாக்கி உதவ வேண்டுகிறேன் உறவுகளே!

Muthukrishnan Ipoh அதில் கொரோனா தன் பங்கை ஆற்றி வருவதையும் உணர முடிகின்றது...

Vejaya Kumaran: om murugaa ulaga makkal anaiwarayum kaapaatru. ellaa vithe noiyilirunthum anaittu makalayum kaatarul puriye wendum.. murugaa... kaapaatru.. om nameshiwaaye... (ஓம் முருகா... உலக மக்கள் அனைவரையும் காப்பாற்று. எல்லாவித நோய்களில் இருந்தும் அனைத்து மக்களையும் காத்தருள் புரிய வேண்டும். முருகா... காப்பாற்று... ஓம் நமசிவாய)

Muthukrishnan Ipoh வேண்டுகிறோம்.... 🙏🙏🙏

Endran Puven:
Arumai aiyaaa... ippoluthu amazon kaadugalin nilavarengal eppadi iruku aiya (அருமை ஐயா... இப்போது அமேசான் காடுகலின் நிலவரங்கள் எப்படி இருக்கு ஐயா)

Muthukrishnan Ipoh பொறுத்து இருந்து பார்ப்போம்...

Endran Puven: seri aiyaa (சரி ஐயா)

Khavi Khavi கால சூழலுக்கேற்ப பகுத்து அறியும் அறிவு. ஆறாம் அறிவு.

Melur Manoharan "இனிய" காலை வணக்கம் ஐயா...!

Muthukrishnan Ipoh 🙏🙏🙏

Selvi Sugumaran: Sir no word to said

Muthukrishnan Ipoh
மகிழ்ச்சி... 🙏🙏🙏

Parimala Muniyandy இனிய மதிய வணக்கம்🙏

Muthukrishnan Ipoh இனிய வாழ்த்துகள்....

Melur Manoharan "அருமையான" பதிவு ஐயா...!

Muthukrishnan Ipoh வாழ்த்துகள்

Rajaletchemy Hemy அடர்ந்த காட்டில் கோரானாவின் இராஜ பாட்டை அமைந்தது எவ்வாறு ஐயா

Sathya Raman அமேசான் காடுகள் கோடி, கோடி ஆண்டுகளாய் சூரிய வெளிச்சத்தையே காணாத அளவுக்கு காடுகளின் அடர்த்தியான மரங்கள் ஆச்சரியத்தையும், பிரமிப்பையும் ஏற்படுத்துகின்றன. அத்தகைய அரிய காடுகளைத் தான் சில மாதங்களுக்கு முன்பு தீ வைத்து தீர்க்கப் பார்த்தார்கள் சில பேராசைக்காரர்கள். வியப்பூட்டும் கட்டுரை நன்றிங்க சார்.🙏

Nahdan Narayansamy சார் என் இனிய வணக்கம்... Amazon பற்றிய பதிவு அருமை.. உங்களை போன்ற எழுத்தாளர்கள் இருக்கும் வரை தமிழுக்கு அழிவே இல்லை.. வாழ்க தமிழ்.. சார் ஒரு சின்ன வேண்டுகோள் Bermuda triangle பற்றி ஒரு பதிவு உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.. நன்றி அய்யா...

Muthukrishnan Ipoh அனைத்து எழுத்தாளர்களுக்கும் மகிழ்ச்சி... பெர்மூடா முக்கோணத்தைப் பற்றி தமிழ் மலரில் 3 கட்டுரைகள் அண்மையில் எழுதினேன். அவற்றை வலைப்பதிவில் பதிவு செய்கிறேன்... நன்றிங்க...

Nahdan Narayansamy சார் ரொம்ப நன்றி.. நான் தமிழ் மலர் வாங்குவது இல்லை.. உங்கள் பதிவுகள் அனைத்தும் வலைப் பகுதியில் பதிவு செய்யவும்.. உங்கள் பதிவுகளை நான் ஒரு பகுதியில் save பண்ணியுள்ளேன்.. வருங்காலத்தில் என் பிள்ளைகளுக்கு உதவியாக இருக்கும்....

Muthukrishnan Ipoh 🙏

Vally Jeeva: so sad sir and thanks for ur message

Jainthee Karuppayah தங்களின் ஆசிரியர் யார்? எந்தப் பள்ளி சார்? .... மலேசியாவில்... தங்களைப் போன்றோர் விரல் விட்டு எண்ணி விடலாம்... தாங்கள் தனித்து நிற்கிறீர்கள்... பெருமைக்குரிய விஷயம் நண்பரே

Muthukrishnan Ipoh மலாக்கா டுரியான் துங்கல் தமிழ்ப்பள்ளியில் படித்தவன்... அமரர் வி.பி. பழநியாண்டி ஆசிரியர் அவர்கள் தமிழ் படித்துக் கொடுத்தார்... தங்களின் கருத்துகள் பெரிதும் மகிழ்ச்சி அளிக்கின்றன... நன்றி...







03 ஏப்ரல் 2020

வௌவால்கள் சொல்லும் மர்மங்கள் - 2

வௌவால்கள் ஏன் தலைகீழாகத் தொங்கித் தூங்குகின்றன. காரணம் இருக்கிறது. உலகின் பல உயிரினங்கள் தூங்கச் செல்லும் போது வெளவால்கள் மட்டும் விதிவிலக்கு.
 

படுத்த பாயைச் சுருட்டி... மூட்டை கட்டி... கொட்டாவி விட்டு... இரை தேடப் போகின்றன. இராத்திரி முழுவதும் சுற்றி அலைகின்றன. சூரியன் வந்ததும் மறுபடியும் படுக்கப் போகின்றன. சும்மா ஒரு ஜோக்.

வௌவால்களுக்குப் படுக்க பாயும் இல்லை. இழுத்து போர்த்திக் கொள்ள போர்வையும் இல்லை. தலைகீழாய்த் தொங்கிக் கொண்டே தூங்கும் ஜீவன்களுக்கு அப்படி எல்லாம் நவீன வசதிகள் இல்லை.

50 மில்லியன் வருசங்களாக அப்படித்தான் தலைகீழாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றன.


வௌவால்கள் ஏன் தலைகீழாகத் தொங்கித் தூங்குகின்றன. அவற்றால் ஹெலிகாப்டர் போல சட்டென்று எழுந்து சடக் சடக் என்று மேலே பறக்க முடியாது. அவற்றின் இறக்கைகள் கனமானவை. மேலும் அதன் இறக்கைகள் 6 அடி வரை நீளமாக இருக்கும்.

பொதுவாகவே பறவைகள் தம் பலம் பொருந்திய இறக்கைகளைக் கிழ்நோக்கி உந்துவதன் மூலம் மேலே எழும்பி பறக்கின்றன. சில பறவைகள் தம் வேகத்தை அதிகரிக்க விமானத்தை போல சிறிது தூரம் ஓடி அப்புறம் மேலே பறக்கின்றன.

ஆனால் வௌவால்களுக்கு அப்படி இல்லை. அவற்றின் முன் கால்கள்; பின் கால்கள் மிக மிருதுவானவை. ஓடி வந்தோ அல்லது இறக்கைகளை உயர்த்தியோ பறக்கும் அளவுக்கு பலம் இல்லை.


அதனால் தான் அவை தலைகீழாக தொங்கி... விமானம் போல கீழே இறங்கி பறக்கின்றன. உயரமான இடத்தில் தலைகீழாக தொங்குவதால் அவை மற்ற மற்ற விலங்குகளிடம் எளிதில் பலியாவது இல்லை.

தனக்கு ஏற்படும் ஆபத்தில் இருந்து காப்பாற்றிக் கொள்வதற்கும் வௌவால்கள் தலைகீழாகத் தொங்குகின்றன. தூங்குகின்றன.

இன்னும் ஒரு விசயம். வௌவால்கள் தலைகீழாகத் தொங்கும் போது, அதிக அளவு சக்திகள் தேவைப் படுவது இல்லை. உடனே பறப்பதற்கும் அதுவே எளிமையான வழியாகவும் அமைகின்றது.

வௌவால் தலைகீழாகத் தொங்கும் போது இறந்து விட்டால் கூட, வேறு ஏதோ ஒரு பொருள் அதை மோதி தள்ளும் வரை அது கீழே விழாமல் அப்படியே தொங்கிக் கொண்டு இருக்கும்.


வௌவால்கள் இறக்கை கட்டிப் பறக்கின்றன. மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் பறக்கக் கூடியவை. இருந்தாலும் அவற்றைப் பறவை இனத்தில் சேர்க்க முடியாது. ஏன் என்றால் அவை குட்டி போட்டு பால் தரும் பாலூட்டிகள்.

வௌவால்களின் இறைக்கைகள் தான் அவற்றின் முன் கைகள். வௌவால்களுக்குக் கண் பார்வை உண்டு. ஆனால் கண்கள் பெரிதாக வளர்ச்சி அடையவில்லை. இருந்தாலும் அதற்கு கண் பார்வை தேவை இல்லை.

50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்ட பரிணாம மாற்றங்களின் போதே அவற்றின் கண்கள் சின்னதாக அமைந்து விட்டன. இன்றும் அதே கண்கள்.

இவற்றின் இறக்கை, கால், முதுகு எல்லாமே ஜவ்வு போல இணைந்து அமைந்து இருக்கின்றன.


வௌவால்கள் இரவில் பறக்கும் போது ஒரு வகையான மீயொலியை (Ultrasound) எழுப்பும். அப்படி ஓர் ஆற்றல். மீயொலிகளை மனிதர்களால் கேட்க முடியாது. வௌவால்களால் கேட்க முடியும்.

மீயொலிகள் மற்ற பொருட்களின் மீது பட்டு எதிர் ஒலிக்கும். அந்த எதிரொலிப்பின் அளவை உணர்ந்து கொண்டு தான் வௌவால்கள் தம் திசையை நிர்ணயித்துக் கொள்கின்றன.

அதாவது இரவில் பறக்கும் போது மீயொலி அலைகளை அனுப்புகின்றன. அந்த மீயொலிகள் எதிரில் இருக்கும் சுவர் அல்லது பொருட்களில் மீது மோதித் திரும்ப வரும். அதைக் கொண்டு அதன் தொலைவைக் கணக்கிடும் தகவமைப்பு வௌவால்களுக்கு உண்டு.

இந்தத் தகவமைப்பின் மூலம் எதிரில் இருக்கும் பொருட்களை மட்டும் அல்ல; அவற்றின் உடல் அளவையும் கூட கண்டுபிடித்து விடுகின்றன.

ஒலி அலைகள் ஒரு பொருளின் அதிர்வினால் உண்டாகின்றன. மனிதனின் கேட்கும் ஆற்றல் நொடிக்கு 20 அதிர்வுகளில் இருந்து 20,000 அதிர்வுகள். ஒலியை இரு வகையாகப் பிரிக்கலாம்.

20 அதிர்வுகளுக்கும் குறைவாக இருந்தால் அதற்குப் பெயர். தாழ் ஒலி (infrasound) 20000 அதிர்வுகளுக்கும் கூடுதலாக இருந்தால் அதற்குப் பெயர் மீயொலி (ultrasound). அதையே மிகை ஒலி என்றும் அழைப்பார்கள்.

வௌவால்கள் நொடிக்கு 20,000 அதிர்வுகளுக்கும் கூடுதலாகக் கேட்கும் திறன் கொண்டவை. மனிதர்களால் அந்த அளவிற்குப் போக முடியாது. ஒலியைப் பற்றி வேறு ஒரு கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்.

இரத்தத்தைக் குடிக்கும் வௌவால்கள் உள்ளன. இவற்றை ஆங்கிலத்தில் Vampire bat என அழைப்பார்கள்.

0.04.2020 மிருகங்கள், ஆடு மாடுகள் இரத்தத்தைக் குடிக்கும். சமயம் கிடைத்தால் மனிதர்களின் இரத்தத்தையும் விட்டு வைப்பது இல்லை. இந்த மாதிரியான காட்டேறி (Vampire) வௌவாலுக்கு வாயின் உட்புறத்தில் இரு பெரிய வெட்டுப் பற்கள் இருக்கும்.

காட்டேறி வௌவால்கள் இரையை கடிக்கும் பொது அவற்றின் உமிழ்நீரை இரையின் மீது செலுத்தும். உமிழ்நீரில் உள்ள திராகுலின் (Draculin) எனும் திரவம் இரத்தம் உறைவதைத் தடுக்கிறது. அதனால் தான் டிராகுலா எனும் பெயர் புகழ் பெற்றது. மேலும் தகவல்களுடன் மீண்டும் சந்திப்போம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
03.04.2020


பேஸ்புக் பதிவுகள்


Rani Ranibalan அருமையான தகவல்.நன்றி ஐயா.

Muthukrishnan Ipoh மிக்க மகிழ்ச்சி...

Muthukrishnan Ipoh அனைவருக்கும் இனிய வணக்கம்... இனிய வாழ்த்துகள்... இன்றைய நாள் இனிமையாய் நலமாய் அமைய வேண்டுகிறேன்.

Vely Loganathan Nandri Aiya

Balan Muniandy சிறப்பான இன்றைய நிலைக்கு ஏற்ற தகவல்... வாழ்த்துக்கள்... மலாக்கா வரலாற்று நாயகன் ஐயா முத்துக்கிருஷ்ணன் அவர்களே... தொடரட்டும் தங்களின் வரலாற்று படைப்புக்கள்... வாழ்த்துக்கள் ஐயா... வாழ்க வளமுடன்...

Muthukrishnan Ipoh தங்களின் வாழ்த்துகளில் மெய்மறந்து போனேன்... நன்றிங்க தம்பி பாலன்....

Janakiraman Raman சிறந்த பதிவுகள் ஐயா நன்றி.

Muthukrishnan Ipoh நன்றிங்க தலைவரே...

Sheila Mohan காலை வணக்கம் சார். அருமையான விளக்கம்..

Muthukrishnan Ipoh வணக்கம்... வணக்கம்... வாழ்த்துகள்....
Arjunan Arjunankannaya காலை வணக்கம் ஐயா

Muthukrishnan Ipoh இனிய வணக்கம்...

Ponni Veerappan

Muthukrishnan Ipoh வாழ்த்துகள்...

Melur Manoharan "இனிய" மாலை வணக்கம் ஐயா...!

Muthukrishnan Ipoh இனிய வணக்கம்...

Poovamal Nantheni Devi Dracula விளக்கம் சிறப்பு

Muthukrishnan Ipoh மகிழ்ச்சி.... வாழ்த்துகள்...

Shantakumar Dilip காலை வணக்கம் ஐயா.

Muthukrishnan Ipoh இனிய வாழ்த்துகள்...

Tana Letchumy Very good information. Arumai.