19 ஏப்ரல் 2020

மலாக்கா மகா மைந்தர் பரமேஸ்வரா - 2

மஜாபாகித் அரசு (Majapahit Empire) 1293-ஆம் ஆண்டில் ஜாவா தீவில் உருவான அரசு. அது ஒரு ஜாவானிய, இந்து, பௌத்தம் கலந்த மாட்சிமை அரசு. கடல் ஆதிக்கம் சார்ந்த பேரரசு (Javanese Hindu-Buddhist thalassocratic empire).

அந்தப் பேரரசை உருவாக்கியவர் ராடன் விஜயா (Raden Vijaya) இவரின் மற்றொரு பெயர் நாராய சங்கரம விஜயா (Nararya Sangramawijaya). 

 

ஒரு சருகு மான் சில வேட்டை நாய்களைத் தன் பின்னங் கால்களால்
எட்டி உதைத்துத் தள்ளியதை நல்ல சகுனமாகக் கருதிய
பரமேஸ்வரா அந்த இடத்திற்கு மலாக்கா என்று பெயர் வைத்தார்.

அந்தப் பேரரசை ஹாயாம் வூரூக் (Hayam Wuruk) என்பவர் ஆட்சி செய்த போது மஜாபாகித் அரசு கடல் ஆளுமையில் சிறந்து விளங்கியது. ஹாயாம் வூரூக்கின் அசல் பெயர் ராஜா ஜனகரன் (Rajasanagara). இவருக்கு மற்றொரு பெயரும் இருந்தது. பத்ரா பிரபு (Bhatara Prabhu). இவரின் கீழ் ஒரு பிரதமர் இருந்தார். அவருடைய பெயர் கஜ மதன் (Gajah Mada). சிறப்பான நிர்வாகம். மஜபாகித் உச்சத்தைத் தொட்ட காலக் கட்டம்.

இந்த மஜபாகித் அரசு தோன்றுவதற்கு முன்னாலேயே, சுமத்திராவில் ஸ்ரீ விஜய பேரரசு ஆட்சி செய்து விட்டது. கி.பி. 650-ஆம் ஆண்டில் இருந்து கி.பி.1377-ஆம் ஆண்டு வரை இந்தோனேசியா தீவுக் கூட்டத்தையே ஆட்சி செய்த பேரரசு. 



1900-களில் மலாக்கா நகரம்
இங்கே ஒன்றைக் கவனியுங்கள். கி.பி. 650-ஆம் ஆண்டில் இருந்து கி.பி.1377-ஆம் ஆண்டு வரையில் சுமத்திரா தீவில் ஸ்ரீ விஜய பேரரசு. அதே காலக் கட்டத்தில் கி.பி.1293-ஆம் ஆண்டில் இருந்து கி.பி.1527-ஆம் ஆண்டு வரையில் ஜாவா தீவில் மஜபாகித் பேரரசு.

கால இடைவெளியைக் கவனியுங்கள். அதே சமயத்தில் ஆட்சிக் காலத்தையும் கவனியுங்கள்.

ஸ்ரீ விஜய பேரரசு 720 ஆண்டுகள் இந்தோனேசியாவில் ஆட்சி செய்து இருக்கிறது.

மஜபாகித் பேரரசு 370 ஆண்டுகள் இந்தோனேசியாவில் ஆட்சி செய்து இருக்கிறது.

ஸ்ரீ விஜய பேரரசின் வணிகத்துறை சீனா, இந்தியா, வங்காளம், மத்திய கிழக்கு நாடுகள் வரை பெருகி இருந்தது. சீனாவின் தாங் வம்சாவளியில் இருந்து சோங் வம்சாவளி வரை நீடித்தது. 13-ஆம் நூற்றாண்டில் அந்தப் பேரரசு உலக வரலாற்றில் இருந்து மறைந்து போனது. 



1700-களில் மலாக்கா பாலம்

அதாவது நீல உத்தமன் காலத்தில் இருந்து மறைந்து போனது. சிங்காசாரி (Singasari), மஜாபாகித் (Majapahit) அரசுகளின் விரிவாக்கத்தினால் அந்த மறைவு ஏற்பட்டது என்று சொன்னால் சரியாக இருக்கும்.

அதன் பின்னர் ஏறக்குறைய 700 ஆண்டுகளுக்கு ஸ்ரீ விஜய பேரரசைப் பற்றி யாருக்குமே தெரியாமல் இருந்தது. அந்தப் பேரரசைப் பற்றி உலக வரலாறு சுத்தமாக மறந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஏன் இந்தோனேசியாவில் வாழ்ந்த இந்தோனேசியர்களுக்கே தெரியாமல் தான் இருந்தது.

1918-ஆம் ஆண்டு ஜார்ஜ் கோடெஸ் (George Coedès) எனும் பிரெஞ்சு வரலாற்று ஆசிரியர் ஸ்ரீ விஜய பேரரசைப் பற்றி வெளியுலகத்திற்குச் சொன்னார். அப்படி ஒரு மாபெரும் அரசு இந்தோனேசியாவில் இருந்ததாகச் சொல்லும் போது உலகமே வியந்து போனது. 



மலாக்கா மணிக்கூண்டு
முதலில் அதிர்ச்சி அடைந்தது சுமத்திரா மக்கள் தான். ஏன் என்றால் அவர்கள் அங்கே தானே இருக்கிறார்கள்.

1984-ஆம் ஆண்டு விமானங்கள் மூலமாக பலேம்பாங் பகுதியைப் படம் பிடித்தார்கள். மனிதர்கள் உருவாக்கிய கால்வாய்கள், அகழிகள், குளங்கள், செயற்கைத் தீவுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

தவிர கைவேலைப் பொருட்கள், புத்தச் சிலைகள், உருண்மணிக் காப்புகள், மண்பாண்டங்கள், சீனாவின் பீங்கான் சாமான்களும் கிடைத்தன.

(2. Ahmad Rapanie, Cahyo Sulistianingsih, Ribuan Nata)

ஸ்ரீ விஜய நகரம் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்தன. நிறைய மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளும் கிடைத்தன. இப்போது அதே அந்த இடத்தில் ஸ்ரீ விஜய தொல்லியல் பூங்காவை (Sriwijaya Kingdom Archaeological Park) உருவாக்கி அழகு பார்க்கிறார்கள்.



1600-களில் மலாக்கா பண்டார் ஹிலிர் கடற்கரை பகுதி

தென் சுமாத்திராவின் பலேம்பாங் (Palembang) நகரில் மூசி (Musi) எனும் ஆறு ஓடுகிறது. அந்த ஆற்றின் கரையோரங்களில் ஸ்ரீ விஜய பேரரசு மையம் கொண்டு இருந்தது எனும் மர்ம முடிச்சு அவிழ்க்கப்பட்டது. அந்த முடிச்சை அவிழ்த்தவர் ஒரு பிரெஞ்சுக்காரர். அவருடைய பெயர் பியரி ஈவஸ் மாங்குயின் (Pierre-Yves Manguin).

(3. Munoz, Paul Michel)

2013-ஆம் ஆண்டு இந்தோனேசியப் பல்கலைக்கழகம் தீவிர ஆய்வுப் பணியில் இறங்கியது. அதன் பயனாக பாத்தாங் ஹாரி (Batang Hari River) ஆற்றுப் பகுதியில் ஜாம்பி (Muaro Jambi Regency, Jambi) எனும் இடத்தில் ஸ்ரீ விஜய பேரரசு இயங்கி வந்ததாக உறுதிப் படுத்தப்பட்டது.

மண்ணுக்குள் புதைந்து கிடந்த பல இந்திய மர்மங்களைப் பிரெஞ்சுக்காரர்கள் தான் அதிகமாக வெளியுலகத்திற்குத் தெரியப்படுத்தி இருக்கிறார்கள்.

1511-ஆம் ஆண்டு போர்த்துகீசியர்கள் மலாக்காவில்
கரை இறங்கியதைச் சித்தரிக்கும் ஓவியம்

அங்கோர் வாட்டில் ஓர் அதிசயம் இருப்பதாகச் சொன்னவர் ஒரு பிரெஞ்சுக்காரர்.

இந்தோனேசியா பிராம்பனான் திருமூர்த்தி கோயிலைக் கண்டுபிடித்து அறிமுகம் செய்தவர் ஒரு பிரெஞ்சுக்காரர்.

போரோபுடூர் புத்த ஆலயங்களைப் பற்றிச் சொன்னதும் ஒரு பிரெஞ்சுக்காரர்.

ஸ்ரீ விஜய பேரரசைப் பற்றி சொன்னதும் ஒரு பிரெஞ்சுக்காரர் தான்.

ஆக ஒரு வகையில் பிரெஞ்சுக்காரர்களுக்கு உலக இந்தியர்கள் நன்றி சொல்ல வேண்டும். இது என் கருத்து. இன்னும் ஒரு விசயம்.

1700-ஆம் ஆண்டுகளில் மலாக்கா

இந்தோனேசியத் தீவுக் கூட்டத்தை 1000 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியர்கள் ஆட்சி செய்து இருக்கிறார்கள். இந்தோனேசியர்கள் பலரிடம் இந்திய இரத்தம் ஓடலாம். இதை மறுப்பவர்களும் இருக்கலாம்.

ஆக அங்கே இருந்து பக்கத்துப் பக்கத்து நாடுகளில் குடியேறியவர்களுக்கு எந்த மாதிரியான இரத்தம் ஓடலாம் என்பதை அவதானிக்க வேண்டிய பொறுப்பு பெரிய பொறுப்பு.

பரமேஸ்வரா எனும் சொல் ஒரு தமிழ்ச் சொல் தொடர். இரு சொற்கள் வருகின்றன. பரமா (Parama) எனும் சொல். அடுத்து ஈஸ்வரா (Ishvara) எனும் சொல். இந்த இரு சொற்களும் இணைந்து உருவாக்கிய சொல் தொடர் தான் பரமேஸ்வரா (Parameswara)

இந்துக் கடவுளான சிவனுக்கு மற்றொரு பெயர் ஈஸ்வரன்.

(1.Tsang, Susan; Perera, Audrey)


1405-ஆம் ஆண்டில் சீனாவில் இருந்து மலாக்காவிற்கு வந்த
சீனக் கப்பல் படை தலைவர் செங் ஹோ என்பவரின் பயணக் கப்பல்கள்

முதலில் பரமேஸ்வரனின் வாழ்க்கை வரலாற்றின் சுருக்கத்தைப் பார்த்து விடுவோம்

.
*   1375-ஆம் ஆண்டில் ஸ்ரீ மகாராஜா (Sri Maharaja) என்பவர் சிங்கப்பூர் ராஜாவாக இருந்தார். இவர் சிங்கப்பூரை 1389-ஆம் ஆண்டு வரை 12 ஆண்டுகள் ஆட்சி செய்தார். இந்த ஸ்ரீ மகாராஜாவிற்கு மகனாகப் பிறந்தவர் தான் பரமேஸ்வரா.

*    1389-ஆம் ஆண்டில் சிங்கப்பூர் சிற்றரசில் அரசியல் குழப்பங்கள். அதனால் ஸ்ரீ மகாராஜாவின் பொறுப்புகளை அவருடைய மகனான ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா ஏற்றுக் கொண்டு அரியணை ஏறினார். ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா 1389-ஆம் ஆண்டில் இருந்து 1399-ஆம் ஆண்டு வரை சிங்கப்பூரை ஆட்சி செய்து வந்தார். (2.Windstedt, Richard Olaf)

1826-ஆம் ஆண்டில் மலாக்காவில் பிரிட்டிஷார் ஆட்சி

* 1399-ஆம் ஆண்டில் பரமேஸ்வரா சிங்கப்பூரில் இருந்து வெளியேற்றப் பட்டார்.

*    1401-ஆம் ஆண்டில் பரமேஸ்வரா மலாக்காவைத் தோற்றுவித்தார்.

*    1405-ஆம் ஆண்டில் பரமேஸ்வரா சீனாவிற்குச் சென்றார். மிங் அரசரின் நட்புறவைப் பாராட்டி அவரின் ஆதரவைப் பெற்றார்.

*    1409-ஆம் ஆண்டில் இந்தோனேசியா சுமத்திராவில் இருந்த பாசாய் எனும் சிற்றரசின் இளவரசியைப் பரமேஸ்வரா திருமணம் செய்து கொண்டார்.

*   1411-ஆம் ஆண்டில் பரமேஸ்வரா சீனாவிற்கு மறுபடியும் சென்றார். மிங் அரசரின் பாதுகாப்பை நாடினார்.

*  1414-ஆம் ஆண்டில் பரமேஸ்வரா தன்னுடைய 69 அல்லது 70-ஆவது வயதில் காலமானார். (3.Miksic, John N.)

பரமேஸ்வரா சிங்கப்பூருக்கு எப்படி வந்தார். இவருடைய பாட்டனார் முப்பாட்டனார்கள் சிங்கப்பூருக்கு ஏன் வந்தார்கள். எப்படி வந்தார்கள். 



1900-ஆம் ஆண்டுகளில் மலாக்கா

ஒரு காலக் கட்டத்தில் சுமத்திரா தீவை ஸ்ரீ விஜய பேரரசு ஆட்சி செய்தது. அந்தப் பேரரசின் கீழ் பலேம்பாங் சிற்றரசு இயங்கியது.

அந்தச் சிற்றரசின் அரசராக பரமேஸ்வராவின் முப்பாட்டனார் நீல உத்தமன் இருந்தார். அவர் சிங்கப்பூருக்கு ஏன் வந்தார். இவற்றை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதே சமயத்தில் இந்தோனேசியாவை ஆட்சி செய்த இந்திய அரச பரம்பரையினர் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் பரமேஸ்வராவின் உண்மையான வரலாற்றுப் பின்னணி தெளிவாகத் தெரிய வரும்.

அந்த வகையில் அடுத்த அத்தியாயத்தில் இந்தோனேசியாவின் பாலி தீவை ஆட்சி செய்த வர்மதேவா பேரரசைப் பற்றி தெரிந்து கொள்வோம்

இந்தோனேசியாவில் பற்பல காலக் கட்டங்களில் பற்பல பேரரசுகள் ஆட்சிகள் செய்து உள்ளன. பெரும்பாலானவை இந்தியர் பேரரசுகள். இந்தோனேசிய வரலாற்றின் தொடக்க காலக் கட்டங்களில் இந்தியர் பேரரசுகள் தான் மிகையான தாக்கங்களை ஏற்படுத்தி உள்ளன. 




இந்தியப் பேரரசுகள் என்றால் இந்தியாவின் பேரரசுகள். அதாவது இந்தியா எனும் நாட்டின் கீழ் இருந்த பேரரசுகளைக் குறிக்கும். இந்தியர் பேரரசுகள் என்றால் கடல் கடந்து வந்த இந்தியர்கள் ஆட்சி செய்த பேரரசுகளைக் குறிக்கும்.

இந்தியப் பேரரசுகள் என்பதிலும் இந்தியர் பேரரசுகள் என்பதிலும் வேறுபாடுகள் உள்ளன. இந்தோனேசியாவில் இருந்த பேரரசுகளை இந்தியர் பேரரசுகள் என்றே அழைக்க வேண்டும்.

இந்தோனேசியா முழுமைக்கும் ஆங்காங்கே சின்னச் சின்ன அரசுகளும் இருந்தன. அவை உள்ளூர் மக்களால் உருவாக்கப் பட்ட அரசுகள். பின்னர் காலத்தில் பெரும் அரசுகள் வளர்ச்சி பெற்று கோலோச்சின.

சின்ன அரசுகளால் அந்தப் பெரிய அரசுகளை எதிர்த்து நின்று போராட முடியவில்லை. வலிமை மிகுந்த அந்த அரசுகளை எதிர்த்து நின்று சமாளிக்கவும் முடியவில்லை. கால ஓட்டத்தில் அந்தச் சின்ன அரசுகள் கரைந்து போயின.



சிங்கப்பூரை உருவாக்கிய நீல உத்தமன்

இந்தப் பெரும் பேரரசுகள் எப்படி உருவாகின என்பதைப் பற்றி இன்னும் ஆய்வுகள் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். துல்லியமான விவரங்கள் சரிவரக் கிடைக்கவில்லை. இருப்பினும் கிடைத்த வரலாற்றுச் சான்றுகளை முன் நிறுத்திப் பதிவு செய்கிறேன்.

இதுவரையிலும் இந்தோனேசியாவில் கிடைக்கப் பெற்ற கல்வெட்டுகள்; சிற்பச் சிலைகள்; சமயச் சின்னங்கள்; அகழாய்வு மண்பாண்டங்கள்; உலோகப் பொருட்கள் போன்றவை வரலாற்று ஆய்வுப் பணிகளுக்குப் பெரிதும் உதவியாய் இருக்கின்றன.

இந்தியப் பெருங்கடலுக்கும் பசிபிக் பெருங்கடலுக்கும் இடையில் உள்ள நாடு இந்தோனேசியா.

உலகின் மிகப் பெரிய இஸ்லாமிய நாடு. உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் நான்காவது இடம் வகிக்கிறது. அங்கே 26 கோடி மக்கள் வாழ்கிறார்கள். இந்தோனேசியா ஓர் அழகிய பச்சை மண். ஓர் அதிசயமான பசுமை வனம்

ஸ்ரீ விஜய பேரரசின் ஆளுமை

இந்தோனேசியாவில் மொத்தம் 17,508 தீவுகள் உள்ளன. ஜாவா, சுமத்திரா, போர்னியோ கலிமந்தான், செலிபஸ் ஆகியவை நான்கு பெரிய தீவுகள். பாலி, லொம்பாக், மதுரா, சும்பா ஆகியவை நடுத்தர தீவுகள். எஞ்சியவை அனைத்தும் குட்டிக் குட்டித் தீவுகள். எரிமலைகளுக்கும் பஞ்சம் இல்லை. ஏறக்குறைய 150 எரிமலைகள் உள்ளன..

இந்தோனேசியா எனும் சொல்லுக்குள் பற்பல பழைமைகள் பற்பல புதுமைகள். அவற்றில் பற்பல மர்மங்கள். அந்தச் சொல்லுக்குள் நீண்ட நெடிய ஒரு வரலாறு புதைந்து உள்ளது.

அந்த வரலாற்றில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியர்கள் இந்தோனேசியாவை ஆட்சி செய்த ஒரு காலச்சுவடும் உள்ளது. இதைக் கேட்டு மலைக்கவும் வேண்டாம். திகைக்கவும் வேண்டாம். ஓர் உண்மையை மறைக்கவும் வேண்டாமே.

இந்தோனேசியாவைப் பொருத்த வரையில் இந்தியர்கள் என்றால் தமிழ்நாட்டில் இருந்து புலம் பெயர்ந்த பல்லவர்கள். ஏன் என்றால் இந்தோனேசியாவில் முதன்முதலில் குடியேறிய இந்திய இனம் பல்லவ இனம் ஆகும். பல்லவர்கள் யார்; எங்கு இருந்து தமிழ்நாட்டிற்கு வந்தார்கள் என்பதைப் பற்றி இன்றும் ஆய்வு செய்து கொண்டு இருக்கிறார்கள்.

பல்லவர்கள் பல நூற்றாண்டுகளாகத் தமிழ்நாட்டில் வாழ்ந்தவர்கள். தமிழர்களின் கலைகளை வளர்த்தவர்கள். தமிழர்களின் கலாசாரங்களுடன் ஐக்கியமானவர்கள். ஆகவே அவர்களைத் தமிழர்களின் ஒரு பிரிவினர் என்று சொல்வதில் தப்பு இல்லை.

இந்தோனேசியாவைப் பல இந்தியப் பேரரசுகளும் பல இந்தியச் சிற்றரசுகளும் ஆட்சி செய்து உள்ளன. பல்லவர்கள் பற்றி அடுத்து வரும் அத்தியாயங்களில் தெரிந்து கொள்வோம்.

(தொடரும்)

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
16.04.2020

Copyright of KSMuthukrishnan
posted at https://ksmuthukrishnan.blogspot.com/


சான்றுகள்:

1. Pierre-Yves Manguin - Academic Staff, Senior Research Fellow at the French School of Asian Studies. He directed archaeological missions in Sumatra on the port sites of the Sriwijaya period (7th to 13th centuries) in 2010 and 2011.

2. Partogi, Sebastian (25 November 2017). "Historical fragments of Sriwijaya in Palembang". The Jakarta Post.

3. Munoz, Paul Michel (2006). Early Kingdoms of the Indonesian Archipelago and the Malay Peninsula. Singapore: Editions Didier Millet.

4. Sita W. Dewi (9 April 2013). "Tracing the glory of Majapahit". The Jakarta Post.







இந்தோனேசியா 1500 ஆண்டுகாலப் பேரரசுகள்

இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர்கள் 1500 ஆண்டுகளாக இந்தோனேசியாவை ஆட்சி செய்து இருக்கிறார்கள். பல பேரரசுகளையும் உருவாக்கி இருக்கிறார்கள். பல எண்ணற்ற இந்து புத்த ஆலயங்களையும் உருவாக்கி இருக்கிறார்கள்.

அந்தப் பேரரசுகளை யார் யார் தோற்றுவித்தார்கள்? எந்த ஆண்டில் தோற்றுவித்தார்கள்? எங்கே  தோற்றுவித்தார்கள் எனும் சுருக்கமான விவரங்களைத் தருகிறேன்.

1. சாலகநகரப் பேரரசு - மேற்கு ஜாவா (Salakanagara Kingdom) கி.பி. 130 – 362

2. கூத்தாய் பேரரசு - களிமந்தான் போர்னியோ (Kutai Kingdom) கி.பி. 350 – 1605

3. தர்மநகரப் பேரரசு - ஜகார்த்தா (Tarumanagara Kingdom) கி.பி. 358 - 669

4. கலிங்கப் பேரரசு - மத்திய ஜாவா (Kalingga Kingdom) கி.பி. 500 – 600

5. மெலாயு பேரரசு - ஜாம்பி சுமத்திரா (Melayu Kingdom) கி.பி. 600


6. ஸ்ரீ விஜய பேரரசு - சுமத்திரா (Srivijaya Kingdom) கி.பி. 650 - 1377

7. சைலேந்திரப் பேரரசு - மத்திய ஜாவா (Shailendra Kingdom) கி.பி. 650 - 1025

8. காலோ பேரரசு - மேற்கு ஜாவா (Galuh Kingdom) கி.பி. 669–1482

9. சுந்தா பேரரசு - மத்திய ஜாவா (Sunda Kingdom) கி.பி. 669–1579

10. மத்தாரம் பேரரசு - கிழக்கு ஜாவா (Medang Kingdom) கி.பி. 752–1006


11. பாலி பேரரசு - பாலி (Bali Kingdom) கி.பி. 914–1908

12. கௌரிபான் பேரரசு - கிழக்கு ஜாவா (Kahuripan Kingdom) கி.பி. 1006–1045

13. கெடிரி பேரரசு - கிழக்கு ஜாவா (Kediri Kingdom) கி.பி. 1045–1221

14. தர்மாசிரியா பேரரசு - மேற்கு சுமத்திரா (Dharmasraya) கி.பி. 1183–1347

15. சிங்காசாரி பேரரசு - கிழக்கு ஜாவா (Singhasari Kingdom) கி.பி. 1222–

16. மஜபாகித் பேரரசு - ஜாவா - (Majapahit Kingdom) கி.பி. 1293–1500


மேலே காணும் பேரரசுகளில் சில முக்கியமான பேரரசுகளை யார் யார் தோற்றுவித்தார்கள் எனும் சுருக்கமான விவரங்களையும் வழங்குகிறேன்.

1. பூரணவர்மன் - தர்மநகரப் பேரரசு (Tarumanagara) (கி.பி.358 - கி.பி.669 ஜாகர்த்தா)

2. ஸ்ரீ ஜெயாசேனா - ஸ்ரீ விஜய பேரரசு (Srivijaya) (கி.பி.650 - கி.பி.1377 சுமத்திரா)

3. கலிங்கர்கள் - சைலேந்திரப் பேரரசு (Shailendra) (கி.பி.650 - கி.பி.1025 மத்திய ஜாவா)

4. ஸ்ரீ கேசரி வர்மதேவா - வர்மதேவா பேரரசு (Warmadewa) (கி.பி.914 - கி.பி.1181 பாலி)


5. சஞ்சாயா (Sanjaya Rakai) - மத்தாராம் பேரரசு (Medang Mataram Kingdom) (கி.பி.732 - கி.பி.1006 கிழக்கு ஜாவா)

6. ராடன் விஜயா (Raden Wijaya) - மஜபாகித் பேரரசு (கி.பி.1293 - கி.பி.1527 ஜாவா)

7. ராஜாசா (Rajasa) - சிங்காசாரி (Singasari)  பேரரசு; (கி.பி1222 - கி.பி.1292 கிழக்கு ஜாவா) 


இந்தப் பேரரசுகள் எல்லாம் காலத்தால் கதைகள் சொல்லும் பேரரசுகள். உலகம் இருக்கும் வரையிலும் வரலாற்றுக் கதைகளைச் சொல்லும் பேராண்மைகள்.

ஒரு பக்கம் உண்மையான வரலாற்றை வாழ்த்தித் துதிக்கின்றார்கள். இன்னொரு பக்கம் அதே வரலாற்றை வரலாற்றை தாழ்த்தித் மிதிக்கின்றார்கள். வாழ்த்துவதும் துதிப்பதும் பேராண்மைத் தன்மையின் வரலாறுகள். மிதிப்பதும் சிதைப்பதும் பேராண்மைத் தன்மையின் கோளாறுகள்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
19.04.2020

18 ஏப்ரல் 2020

கறுப்புக் கண்ணாடி ஸ்டைல் 17 வயதினிலே

வெயில் கொளுத்துகிறது. கண் கூசுகிறது. கண்ணீர் வழிகிறது. கறுப்புக் கண்ணாடி அணிகிறோம். கோளாறு இருந்தாலும் அணிகிறோம்.

எனக்கு பெரிய கோளாறு இல்லை. லேசாக மார்க்கண் பார்வை. ரொம்பவும் இல்லை. ஆப்ரேஷன் பண்ணியும் இரு கண்களுக்கும் பிணக்குகள். அதோடு சின்ன வயதிலேயே கறுப்புக் கண்ணாடி போட்டுப் பழகி விட்டேன். இன்றும் பழக்க தோசம் விடவில்லை. 


சீனாவில் நடந்த கதை. 13-ஆம் நூற்றாண்டில் சீனாவில் முதன்முதலாகக் கறுப்புக் கண்ணாடி பயன்படுத்தி இருக்கிறார்கள். அந்த நாட்டின் நீதிமன்றங்களில் வயதான நீதிபதிகள் கறுப்புக் கண்ணாடி அணிந்து வழக்குகளை விசாரித்து இருக்கிறார்கள்.

நீதிபதி என்ன நினைக்கிறார் என்பதைக் கண்வழியாக மக்கள் அறிந்து விடக் கூடாது என்பதற்காக அந்தக் காலத்து சீன நாட்டு நீதிபதிகள் கறுப்புக் கண்ணாடிகளை அணிந்தார்களாம்.

வட துருவப் பகுதிகளில் வாழும் எஸ்கிமோ மக்கள் பனியின் தாக்கத்தால் பார்வையை இழக்காமல் இருக்க உலோகத் தகடுகளைக் கண்ணாடி போல அணிந்தார்கள்.

1930-ஆம் ஆண்டுகளில் அமெரிக்க விமானப் படை வீரர்கள் சூரிய ஒளியின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த கறுப்புக் கண்ணாடி அணிந்தார்கள்.

சூரியனில் இருந்து வெளி வரும் புறநீலக் கதிர்கள் கண்களை அடையாமல் தடுப்பதற்காகக் கறுப்புக் கண்ணாடிகளையே பயன்படுத்தவேண்டும் என்று கண் மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.

ஆனால் இப்போது எல்லாம் அப்படி இல்லைங்க. சும்மா ஒரு ஷோ காட்டுவதற்காகச் சிலர் அணிகிறார்கள். என்னையும் பாருங்கள் என் அழகையும் பாருங்கள் என்பதின் அடையாளமாக இருக்கலாம். என்னையும் அதிலும் சேர்க்க நினைக்கலாம்... இப்போது அப்படி இல்லைங்க... பேரன் பேத்தி எல்லாம் எடுத்தாகி விட்டது... இனிமேல் என்ன அழகு என்ன வேண்டிக் கிடக்கு...

பேஸ்புக்கில் படத்தைப் பதிவு செய்தேன். அதற்கு கிடைத்த வரவேற்பைப் பாருங்கள்.


பேஸ்புக் பதிவுகள்
December 29, 2018



Govind Bala:
அய்யா... இந்தப் படம் எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. அன்று 1968 - 1969-ஆம் ஆண்டுகளில் நீங்கள் நாளிதழ்களில் மற்றும் வானொவியில் டுரியான் துங்கல் முத்துக்கிருஷணன் என்று வலம் வந்து கொண்டு இருந்தீர்கள்.

Zahir Hussain: நம்ம ஊரு... P. Ramlee மாறி இருக்கீங்க அண்ணா... வாழ்த்துக்கள்

Gunasegar Manickam: 🙏

சாராவதி முனிவேல்:
🙏

Ganesan Matchap: 
🙏

Malathi Nair: Saar u look like Gopi ur brother Rajakumaran's son.

Raja Mutukumar:
🙏

SP Banu:
🙏

Murugan Thevar
ஆகா ஆகா மூத்தவர் செம்மையாக உள்ளாரே.

Don Samsa: சூப்பர் தலைவரே..

மாரியப்பன் முத்துசாமி: சூப்பர் ஐயா

Sambasivam Chinniah: Super ayyah. Vaazhga Valamudan

Abdul Zabar: 17 வயதில் பன்நூறு கனவுகள்... !!

ML Manivannan: ஸ்த்தாயில் மன்னன்...

Gunasegar Manickam
வாழ்க வளமுடன்..... ஐயா...

Murthy Devi: Vallke nallamudan ✌✌✌✌✌

Maniam Eswari அந்த நாள் நினைவுகள். பசுமை. ஆகா சிறப்பு.

Sriram Guruguloo:
🙏

Rajendra Kumar: 17 vayadhinilae...!!!

Nesaraj Rajandran:
🙏





மலாக்கா முத்துக்கிருஷ்ணன் ஊடகக் கலை அரசன் விருது

உலகளாவிய தமிழர்களுக்கும் மலேசியத் தமிழர்களுக்கும்  சிறந்த ஊடகக் கலைச் சேவைகள் செய்து வருவதைப் பாராட்டும் வகையில் மலாக்கா முத்துக்கிருஷ்ணனுக்கு ஊடகக் கலை அரசன் விருது வழங்கிச் சிறப்பிக்கப் பட்டது.

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தினரும்; மலேசிய இந்தியர் கலை பண்பாட்டு சபா அமைப்பினரும் இணைந்து அந்தச் சிறப்பைச் செய்தார்கள்.

இந்த நிகழ்ச்சி 2014 ஜூன் 24-ஆம் தேதி, மலேசியா, பெட்டாலிங் ஜெயா தோட்ட மாளிகையில் நடைபெற்றது.

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவர் தேனிசைத் தென்றல் தேவா; தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் செயலாளர் கலைமாமணி பி.எஸ்.சச்சு; மலேசிய இந்தியர் கலை பண்பாட்டு சபா அமைப்பின் தலைவர் எஸ்.பி. மாணிக்கவாசகம் ஆகியோர் தலைமையில் அந்த விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


பேஸ்புக் பதிவுகள்
December 30, 2018


Doraisamy Lakshamanan: உழைக்கும் துறைக்கு மேலும் மேலும் ஊக்கமூட்டுவது:
அல்லவை தேய அறம் பெருகும் நல்லவை நாடி இனிய சொலின் - குறட்பா-96.
சான்றிதழ் சான்று பகரட்டும்,; நம் இனிய சொல் முகநூலில் நாளும் ஒலிக்கட்டும் நாநிலம் எங்கும்!

Narayanan Krishnan: வாழ்த்துக்கள். இந்த மலேசிய மண்ணில் அதிகம் எழுதிக் குவித்தவர் தாங்களாகத் தான் இருக்க வேண்டும்...

சிமா. இளங்கோ: நாவலாசானே!!! இன்றைய பருவ மழையைப் பற்றி பேசலாமே!! நேற்றைய வெள்ளப் பெருக்கைப் பற்றி ஏன் ஆசானே? நீங்கள் விருதுகளின் கடல்!!! ஆறுகளுக்கு நாம் ஆறுதல் கூறலாமே!!!

Sathya Raman:
எம் மொழியால் பல பதிவுகளை அறிந்து, தெரிந்து ஆராய்ந்து பத்திரிகைகள் வழி, மற்ற மற்ற தகவல் சாதனம் வழி வாசகர்களை ஆர்வமிக்க தகவல்களை கற்று அறிய உதவும் உங்கள் எழுத்துகளுக்கு கிடைத்த நல்லதொரு அங்கீகாரம். மென்மேலும் பல விருதுகள் பெறணும் சார்... வாழ்த்துக்கள்👏

Kumara Devan Marimuthu Thever: Congratulations and may God bless you always sami

Parimala Muniyandy: வாழ்த்துகள் சார்.🌹 மேலும் பல விருதுகள் உங்களுக்கு கிடைக்க வேண்டும். 👏👏👏🙏

Manickam Nadeson:
வாழ்த்துகள் ஐயா சார், இன்னும் பல வெற்றிப் பதக்கங்களை வாங்கி குவிப்பீராக,

M R Tanasegaran Rengasamy: தங்களின் அரும்பணிக்கு தக்க சான்று. நல்வாழ்த்துகள். தொடரட்டும் உங்கள் தமிழ்ச் சேவை.

Saiselvi Saiselvi: Congrats bro

Sai Krishnan Munusamy: வாழ்த்துகள் ஐயா! உங்கள் படைப்புகளை விரும்பி படிப்பேன். நன்றி

Vally Jeeva  Sir Congrats

Janagee Kanmani வாழ்த்துக்கள் ஐயா... தொடரட்டும் தமிழுக்கான உங்கள் சேவை

Malathi Nair: Great... Valtukal sir.

Tanigajalam Kuppusamy: வரும் புத்தாண்டில் இன்னும் விருதுகள் பெற்றுய்ய வாழ்த்துக்கள்.

Nagarajan Arumugam: Vaalthukkal Sir....

Karunaharan Karuna: ஐயா உங்கள் கைபேசி தொடர்பு எண்ணை என் 0196634706 எண்ணுக்கு அனுப்பி வைக்கவும். நன்றி

Karunaharan Karuna: வாழ்த்துக்கள் ஐயா, தொடர்ந்து எழுதுங்கள் ஐயா. வாழ்க என்றும் வளமுடன்.

Ravisarva Chand: வாழ்த்துகள் ஐயா...தொடரட்டும் உங்கள் ஆய்வு படைப்புகள்

Kodis Varan வாழ்த்துகிறேன்! இன்னும் நிறைய சரித்திரத் தொடர்களை எழுதுங்கள்!

Karuppiah Karu: Congrats sir

Janakey Raman Manickam: Nalvaalthukal Sir.

Uthiya Kamachi: Congrats Sir

Guru Govind:
வாழ்த்துகள் ஐயா.

Uma Umasiva: Valthugal sir

Sundaram Natarajan: Valthugal Anna

Govind Bala: வாழ்த்துக்கள்.

ரா.சதிஸ் குமார்: வாழ்த்துக்கள் மரியாதைக்குரிய அய்யா

Arjunan Arjunankannaya: அருமை சார் உங்கள் விளக்கம்.

Mageswary Muthiah: வாழ்த்துக்கள்.💐

Oviyar Lenah Valthukal

மரு.கோ.தனசேகரன் பாவலர் கோவதன்:
வாழ்த்துக்கள் சகோதரரே.வாழ்க வளமுடன்

Ravi Purushothaman:
வாழ்த்துகள். ஐயா

சிமா. இளங்கோ: உண்மை! உண்மையிலும் உண்மை! வாழ்த்துகள்!!!

Rajoo Veeramuthu: இனதினிய நல்வாழ்த்துகள்

Kanagarajoo Meekan: வாழ்க வழமுடன் வாழ்த்துக்கள் சார்

Indra Indrani வாழ்த்துகள் ஐயா.

Samugam Veerappan
: மிக்க மகிழ்ச்சி .மனமார்ந்த வாழ்த்துகள்.வாழ்க.

Arojunan Veloo: வாழ்த்துகள் முத்து!

Kanna Dasan: வாழ்த்துகள் ஐயா..

Suria Rich: வாழ்த்துக்கள் ஐயா

Malini Rangasamy வாழ்த்துக்கள்

Don Samsa வாழ்த்துகள் தலைவரே

Padmani Apparu Mullai மகிழ்ச்சி வாழ்த்துகள் ஐயா

Gunasegar Manickam வாழ்த்துக்கள் ஐயா.....

Manikam Manikam Manikam வணக்கம் ஐயா, வாழ்த்துக்கள்

Nathan Perumal
Vanakkam and valthukal

Letchmighandan Letchu வாழ்த்துக்கள் ஐயா

Muthusamy Uthirapathi
வணக்கம் ஐயா, வாழ்த்துக்கள்

Baakialetchumy Subramaniam வாழ்த்துகள் சகோதரரே

Raja Rajan வாழ்த்துக்கள் சகோ

Elamaran Raganathan வாழ்த்துக்கள் ஐயா

Moon Noom வாழ்த்துக்கள்

Anba Alagan வாழ்த்துக்கள்

Selvakumar Selvaragu வாழ்த்துகள் ஐய்யா!

Chitra Ramasamy வாழ்த்துக்கள் ஐயா

Nirmala Nimmy Twins வாழ்த்துகள் ஐயா...

Subramaniam Annamalai:
Valtukkal sar

Murthy Devi Vallthukal aya

Ramesh Yamuna வாழ்த்துகள் ஐயா 🙏

Revi Chander வாழ்த்துகள் ஐயா

Paramasivam Maruthai வாழ்த்துக்கள்

Narayanan Letchumanan
ஊடகத்தில் ஊடல் செய்யும் வித்தகர் வாழ்க.

Vasudevan Letchumanan மனமார்ந்த நல்வாழ்த்து 🙏💐

Subramaniam Maruthan

Ram Ram Ram வாழ்த்துக்கள் ஐயா.....

Sebastiyan Perianayagam: Vaalthukal aiyah

Indra Devi வாழ்த்துகள்

Krishnan Subramaniam வாழ்த்துகள் ஐயா

Prabha Karan Karunamoorthy வாழ்த்துக்கள் ஐயா

Ravindran Suppiah நல்வாழ்த்துகள்

Tamil Vasu வாழ்த்துகள் ஐயா

B.k. Kumar வாழ்த்துகள்

Selvadurai Yoges வாழ்த்துகள் ஜயா

Maniam Eswari வாழ்த்துக்கள் ஐயா

Selvadurai Yoges வாழ்த்துகள் ஜயா

Kunasekaran Nadesen வாழ்த்துகள், நண்பரே..

Panir Selvam Natchi Muthu: Vaalthukkal sir

Elamani Youngbell
வாழ்த்துகள்

Tanggam Janu வாழ்த்துக்கள்

Samy Samy நல்வாழ்த்துக்கள் ஐயா

Suba Nargunan சுப நற்குணன் மனமார்ந்த பாராட்டும் நல்வாழ்த்தும்.

Kuppasamy Krishnan வாழ்த்துக்கள் சார்

Sivalingam Dharmayah இனிய நல் வாழ்த்துகள் ஐயா!

Kandasamy Periyasamy
வாழ்த்துகள் ஐயா.

Sagathevan Saga: Valthukal aiyah

சிவசிதம்பரம் நடராஜன்: வாழ்த்துகள்

Rajathurai Muniandy வாழ்த்துகள் ஐயா..!!

Muthu K Kumar என் இனிய நல்வாழ்த்துக்கள்! ஜயா

Naliah Supramaniam: VALTUKKAL BRO. !!!!

Kamaraj Thangaraju: Vaalthukhel sir Muthukrishnan Ipoh

Kpraman Hm: Valtukkal aiya.

Vel Paandiyan: வாழ்த்துக்கள்... உங்களது படைப்புகள் முத்து முத்தாக தொடரட்டும்....

Thanabaal Varmen

சிவனேஸ் சிவாநந்தம்: மிக்க மகிழ்க்சி தங்களின் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

Krishnan Sockalingam வாழ்த்துக்கள் ஐயா

Letchumanan Nadason
வாழ்த்துக்கள் ஐயா.

Senthil Vasan: VALTHUKAL aiya




மலாக்கா முத்துக்கிருஷ்ணன் தமிழ்ச் சுவடிகள்

மலாக்கா முத்துக்கிருஷ்ணனின் தமிழ்ச் சுவடிகள் என்ற இலக்கிய நிகழ்வு "வாழும் போதே வாழ்த்திடுவோம்" எனும் நோக்கத்தில் டான்ஸ்ரீ சோமா மண்டபத்தில் 2017 மே மாதம் 07-ஆம் தேதி பிற்பகல் 3.00 மணிக்கு நடந்தேறியது. 


மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் இலக்கியப் படைப்புகளை ஆய்வு செய்யும் ஒரு நிகழ்ச்சி. அந்த வகையில் மலாக்கா முத்துக்கிருஷ்ணனின் படைப்புகள் அந்த நிகழ்ச்சியில் ஆய்வுகள் செய்யப் பட்டன.

மலேசியத் தமிழ் உலகிற்கு அரும் பெரும் சேவைகளைச் செய்து வரும் பூச்சோங் தமிழ் எழுத்தாளர் இயக்கம் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தது. இந்த இயக்கம் மலேசியாவில் நாடறிந்த தமிழ் எழுத்தாளர்களை அறிமுகம் செய்கின்றது.


இந்த நிகழ்ச்சியில் மலாக்கா முத்துக்கிருஷ்ணனின் பற்பல திறமைகளை வாசகர்கள் எடுத்து உரைத்தனர். மலேசியப் போலீஸ் படையின் ஆணையர் டத்தோ தெய்வீகன் சிறப்புரை ஆற்றினார். மலேசியாவில் தமிழ் எழுத்தாளர்கள் எனும் தம் உரையில் பற்பல அரிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

ஆய்வாளர்கள்

திருமதி. கண்மணி கிருஷ்ணன்: மலாக்கா முத்துக்கிருஷ்ணனின் சிறுகதைகள், நாடகங்கள், வாழ்க்கை வரலாறு


திரு. சுதாகர் சுப்பிரமணியம்: மலாக்கா முத்துக்கிருஷ்ணனின் வரலாற்றுக் கட்டுரைகள்

திரு. பூச்சோங் நாராயணன்: என் பார்வையில் மலாக்கா முத்துக்கிருஷ்ணன்

வாழும் போதே வாழ்த்திடுவோம் எனும் நோக்கத்தில் அந்த நிகழ்ச்சி நடைபெற்றது. 


மலாக்கா முத்துக்கிருஷ்ணனின் 50 ஆண்டு கால எழுத்துலக வாழ்க்கையில் இது நான்காவது நிகழ்ச்சியாகும். சென்ற 2016-ஆம் ஆண்டு மலேசியத் திரைப்பட இயக்குநர் பிரான்சிஸ் சில்வன் தலைமையில் ஒரு பெரிய கலை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது.

டாக்டர் ஜெயபாரதி எனும் புதிய விருதை முதன் முறையாக அறிமுகம் செய்து, அந்த விருதை மலாக்கா முத்துக்கிருஷ்ணனுக்கு வழங்கிச் சிறப்புச் செய்தார்கள். 


அது அவரின் வாழ்க்கையில் ஒரு வாழ்நாள் சாதனை விருது என்று பிரான்சிஸ் சில்வன் வாழ்த்துரை வழங்கினார்.

பூச்சோங் தமிழ் எழுத்தாளர் இயக்கத் தலைவர் ஜி.குணசேகரன் அவர்களும்;  இயக்கத்தின் அன்பர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சிக்குத் தங்களின் சிறப்பான ஆதரவுகளை வழங்கினார்கள். பூச்சோங் தமிழ் எழுத்தாளர் இயக்கத்தினரின் தமிழ்ச் சேவைகளை மலேசியத் தமிழர்கள் என்றென்றும் நினைவில் கொள்வார்கள்.

பேஸ்புக் பதிவுகள்
May 8, 2017


Thennarasu Sinniah சரித்திரச் சக்கரவர்த்தியை பற்றிய தேடுதல் என்பதே ஒரு இனிமான உணர்வாகும்... இன்றைய தலைமுறைக்கு அவரை வாழும் காலத்தில் அறிமுகப்படுத்தி சிறப்பு செய்த பூச்சோங் வாசகர் எழுத்தாளர் இயக்கத்தின் பணி மகத்தானது.

Thennarasu Sinniah
இனிமையான உணர்வாகும்...

Maana Mackeen மிகவும் அரியதொர் நிகழ்ச்சி. மலேசிய இலக்கிய ஆர்வலர்கள் அத்தனைபேரும் சிறப்பிக்க வேண்டும் என அரசு வாழ்நாள் சாதனை பெற்ற ஓர் இலங்கைக் கலைஞன் - ஆய்வெழுத்தாளன் வேண்டி நிற்கிறேன். மலேசியாவினர் இந்த 'முத்து'வைப் போற்றிப் பாதுகாக்கத் தவறக் கூடாது. (கவனிக்க: இவர் எழுத்துக்கள் மட்டுமே எனக்கு நெருக்கமானவை)

Muthukrishnan Ipoh தங்களின் கருத்துகளுக்கு மிக்க நன்றி ஐயா

C Birabakaran: Naan kanda sirantha manithar neengal... (நான் கண்ட சிறந்த மனிதர் நீங்கள்...)

Arojunan Veloo வாழ்த்துகள் முத்து!

Marukrishnan Maruthan வணக்கம் என் நீண்டகால நண்பர் மானமிகு மலாக்கா முத்துகிருஸ்ணன் அவர்களின் இலக்கிய சுவடிகள் நிகழ்வுக்கு வர முடியவில்லை என்றாலும் எனது மனமாற வாழ்த்துக்கள். ஒரு நாள் சந்திப்போம். மரு. கிருட்ணன். 01110191854

Mallika Perumal: Vaalthugal sir

Durai Senguttuvan விழா வெற்றி பெற வாழ்த்துகள்

Radha Pachoma சகோதரர் மலாக்கா முத்துக்கிருஷ்ணனின் இநத விழா வெற்றிப் பெற வேண்டும் வாழ்த்துக்கள். மேம்மேலும் இன்னும் பல கட்டுரைகளை படைக்க வேண்டும் நீங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன் அன்புடன் உங்கள் சகோதரி.

Nagaraja Akila வாழ்த்துகள் ஐயா .

Don Samsa வரும் காலங்களில் மேலும் பல பாராட்டுக்கள் விருதுகள் அவருக்கு கிடைக்க வேண்டும்..

Puan Kalai Wani Vijayan ஆம் தம்பி

Junaidi Bezita இனிமையான உணர்வாகும்...

C Birabakaran Vaalthukkal saar......

Vijay Jay Good Morning dear

Premjee Latha Congrats sir....

Letchumanan Nadason வாழ்த்துக்கள் ஐயா. பலப் பயனானத் தகவல்களை எங்களுக்கு வழங்கிய தங்களுக்கு நன்றி.

Patmarobert Patma Vaalthukkal sir

Paneerchelvan Arjunan Vazthukal sir. Your former student Paneer Arjunan

Nagalingam Patkunam யாதும் ஊரே யாவரும் கேளீர்.புலம்பெயர் தமிழர்களின் தமிழ் உணர்வு மெய்சிலிற்க வைக்கின்றது.வாழ்த்துக்கள்.

Kumarasamy G P Govindasamy பேஸ்புக் வழியாக செய்தி கண்டு நானும் கலந்து கொண்டேன். நிகழ்வு சிறப்பாக இருந்தது. சிற்பங்களைப் பற்றி உரையாற்றிய செல்வி செந்தமிழ்ச் செல்வி உரை நன்று. டத்தோ தெய்வீகன் பெற்றோர் கடமைகளை இலக்கிய உதாரணங்களை கொண்டு பேசியது நிகழ்வுக்கு முத்தாய்ப்பாக அமைந்தது. நிகழ்ச்சியின் கதாநாயகன் மலாக்கா முத்துக் கிருஷ்ணன் உரை இல்லாதது ஒரு சிறு குறை.

Muthukrishnan Ipoh பொதுவாக அடியேன் அதிகம் பேசுவது இல்லை. எழுதுவது என்றால் கைவந்த கலை. அதனால் அன்றைய தினம் அதிகம் பேசவில்லை. மன்னிக்கவும்.

Muthukrishnan Ipoh அந்த நிகழ்ச்சியில் தங்களைச் சந்தித்தேன். உரையாடினோம். நன்றிங்க ஐயா

Manikam Manikam Manikam Valthukkal, thodaruthum tanggal eluthu pani

Thanga Raju மிக அருமை... பாராட்ட சொற்கள் பல உள்ளன... நன்றி மறவேன்

Muthukrishnan Ipoh நன்றிங்க ஐயா

Muthukrishnan Ipoh வணக்கம். கடந்த 20 நாட்களாக இந்தப் பேஸ்புக் பகுதி பக்கமே வரவில்லை. வேலைப் பளு காரணம். அதனால் உடனடியாக நன்றிப் பதிவுகளைக் காட்சி செய்ய இயலவில்லை. வாழ்த்துகள் தெரிவித்த அனைத்து நெஞ்சங்களுக்கும் இரு கரம் கூப்பிய நன்றிகள்.