25 ஏப்ரல் 2020

லாவோஸ் நாட்டில் இந்தியப் பாரம்பரியங்கள்

தென்கிழக்கு ஆசியாவில் லாவோஸ் ஓர் அமைதியான நாடு. மலேசியப் பரப்பளவில் மூன்றில் இரு மடங்கு. வடமேற்கே சீனா; மியான்மார். கிழக்கே வியட்நாம். தெற்கே கம்போடியா. மேற்கே தாய்லாந்து. அதன் தலைநகரம் வியன்டியன் (Vientiane).


லாவோஸ் மக்களின் வரலாற்றில் இந்தியர்களின் தாக்கங்கள் தான் அதிகம். அருகாமையில் சீனா நாடு. இருந்தாலும் அதன் தாக்கங்கள் குறைவு. மிக அருகாமையில் வியட்நாம். இருந்தாலும் அதன் தாக்கங்களும் குறைவு. ஆனால் சற்றுத் தொலைவில் இருக்கும் தாய்லாந்தின் தாக்கங்கள் சற்று அதிகம்.

லாவோஸ் நாட்டில் பெரும்பான்மை மக்கள் மகாபாரதம்; இராமாயணம் இந்திய இதிகாசங்களைத் தெரிந்து வைத்து இருக்கிறார்கள். அந்த இதிகாசங்களின் தாக்கங்கள் இன்றும் லாவோஸ் நாட்டில் நன்றாகவே உணரப் படுகிறது.
லாவோஸ் அஞ்சல் தலையில் கணேசர் படிவம்

2000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து இந்தோசீனா நாடுகளுக்கு வணிகம் பார்க்கச் சென்ற இந்தியர்கள் இந்து மதத்தையும் தேரவாத புத்த மதத்தையும் படரச் செய்தார்கள் (Theravada Buddhism). அதில் புத்தம் தழைத்தது. இந்து மதம் குழைந்து போனது.

(People of Laos were influenced by Indian rather than Chinese culture. From the 1st century AD Indian merchants introduced Theravada Buddhism into Laos.)

சான்று: http://www.localhistories.org/laos.html


ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக லாவோஸ் நாடு பகுதி பகுதிகளாகப் பிரிந்து சிதறிப் போய்க் கிடந்தது. அவற்றை எல்லாம் ஒன்று சேர்த்து ஓர் ஐக்கிய நாடாக உருவாக்கியவர் பா நிகும் (Fa Ngum).

இவரின் அசல் பெயர் ஸ்ரீ சதான கனயுதா மகாராஜா ராஜாதரனா ஸ்ரீ சுத்தான நகரன் (Somdetch Brhat-Anya Fa Ladhuraniya Sri Sadhana Kanayudha Maharaja Brhat Rajadharana Sri Chudhana Negara).

இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர். இருந்தாலும் பின்னாட்களில் இவரின் பெயர் பா நிகும் என்று மாற்றம் கண்டு லாவோஸ் வரலாற்றில் நிலைத்துப் போனது. 



இவர் இப்போது பா நிகும் எனும் பெயரில் தான் பிரபலம் அடைந்து உள்ளார். பா நிகும் எனும் மகாராஜா ராஜாதரனா தான், லாவோஸ் நாட்டில் லான் சாங் (Lan Xang) எனும் பேரரசை 1353-ஆம் ஆண்டில் உருவாக்கினார்.

மகாராஜா ராஜாதரனாவின் தந்தையார் பெயர் சம்மாத பிரகதிஞ்ச பைவாதம் (Samdach Brhat-Anya Phya Vath). இவர் ராஜதரணி ஸ்ரீ சுத்தானம் எனும் சிற்றரசின் (King of Rajadharani Sri Sudhana) அரசராக இருந்தார்.

இவருக்கு இரு மனைவிமார்கள். மூத்தவர் கெமர் பேரரசின் இளவரசியார். இரண்டாம் மனைவி தாய்லாந்தின் அயோத்தியா பேரரசின் இளவரசியார். அயோத்தியா அரசர் ராமாதிபதி (King Ramadipati of Ayudhaya) என்பவரின் மகள். 

லாவோஸ் நாட்டில் இந்திரன்

மகாராஜா ராஜாதரனாவின் பாட்டனார் பெயர் சௌனா காம்புங் (Souvanna Khamphong). இவர் லாவோஸ் முவாங் சுவா (Muang Swa) நிலப் பகுதியின் ஆட்சியாளர். இந்த முவாங் சுவா நிலப் பகுதிதான் இப்போது லுவாங் பிரபாங் (Luang Prabang) என்று அழைக்கப் படுகிறது. 

தாத்தா, மகன், பேரன் இவர்களின் சுருக்கம்.

1. மகாராஜா ராஜாதரனா ஸ்ரீ சுத்தான நகரன். லாவோஸ் நாட்டு மொழியில் பா நிகும் (Fa Ngum).

2. மகாராஜா ராஜாதரனா தந்தையாரின் பெயர் சம்மாத பிரகதிஞ்ச பைவாதம் (Samdach Brhat-Anya Phya Vath). லாவோஸ் நாட்டு மொழியில் சாவோ நிகியோ (Chao Fa Ngiao).

3. மகாராஜா ராஜாதரனா தாத்தாவின் பெயர் சௌனா காம்புங் (Souvanna Khamphong). 

லாவோஸ் நாட்டில் சரஸ்வதி தேவி

தாத்தா சௌனா காம்புங்கின் வைப்பாட்டிகளில் ஒருவருடன், மகாராஜா ராஜாதரனாவின் தந்தையார் சம்மாத பிரகதிஞ்ச பைவாதம் நெருக்கமாகப் பழகியதற்காகப் குடும்பத்தில் இருந்து வெளியேற்றப் பட்டார்.

மகாராஜா ராஜாதரனாவின் குடும்பம் கம்போடியத் தலைநகரான அங்கோர் வாட்டிற்குத் தப்பிச் சென்றது. கம்போடியாவில் தான் மகாராஜா ராஜாதரனா வளர்க்கப் பட்டார். பின்னர் ஒரு கெமர் நாட்டு இளவரசியை மணந்தார்.

1350-ஆம் ஆண்டு வாக்கில் மகாராஜா ராஜாதரனாவும் அவருடைய தந்தையாரும் கம்போடியாவில் ஓர் இராணுவப் படையை உருவாக்கினார்கள். மீகோங் நதி பள்ளத்தாக்கில் ஏராளமான சண்டைகள். அந்தச் சமயத்தில் மகாராஜா ராஜாதரனாவின் தந்தையார் இறந்தார். 

மகாராஜா ராஜாதரனா

பின்னர் மகாராஜா ராஜாதரனாவின் தாத்தா சௌனா காம்புங் தோற்கடிக்கப் பட்டார். அவரின் அரசு கைப்பற்றப்பட்டது. மகாராஜா ராஜாதரனா தான் கைப்பற்றிய நிலப் பகுதிகளை எல்லாம் ஒன்றிணைத்து லாவோஸ் எனும் நாட்டை உருவாக்கினார்.

லாவோஸ் நாட்டின் முதல் ராஜா. இவரின் வாரிசுகளில் கடைசியாக வந்தவர் ஸ்ரீ சாவாங் வதனா. 1975-ஆம் ஆண்டு காலமானார். அதன் பின்னர் லாவோஸ் நாட்டில் அரச பரம்பரை மறைந்து போனது.

பின்னர் காலத்தில் மகாராஜா ராஜாதரனா எனும் பெயர் பா நிகும் (Fa Ngum) என்று மாற்றம் கண்டு நிலைத்துப் போனது. அசல் மகாராஜா ராஜாதரனா எனும் பெயர் கரைந்து போனது. இருந்தாலும் லாவோஸ் மக்கள் தங்களின் இந்தியப் பின்புலத்தை மறக்கவில்லை.

மகாபாரதத்தில் கிருஷ்ண உபதேசம்

இந்திய இதிகாசங்களின் பிரதான மாந்தர்களுக்கு மரியாதை மதிப்பு கொடுக்கும் வகையில் அஞ்சல் தலைகளை வெளியிட்டு வருகிறார்கள்.

லாவோஸ் பற்றி ஒரு சின்ன தகவல். கரும் பச்சை மலைகள். ஆழ்மஞ்சள் மீகோங் நதிக்கரைக் காடுகள் (Mekong River). இயற்கை எழில் கொஞ்சும் அழகிய பசும் மழை மேகங்கள். இயற்கை அன்னை வஞ்சகம் இல்லாமல் செதுக்கியச் சிற்பங்களாய் மலை மேடுகள்.

இடை இடையே கோபுர வாசல்களாய் குன்றுக் குகைகள். பச்சை பசேல் கானகத்து ஓவியங்கள். நாடு முழுவதும் நடனம் ஆடும் வயல்காட்டுப் புல்வெளிகள். கூடவே தங்க ரத நெல்மணிக் கோலங்கள். வர்ணனை போதுங்களா.

லாவோஸ் அரண்மனை நாட்டியமணி

ஆனாலும் அங்கே வலிமிகுந்த கடந்த கால நினைவுகள். முதலில் பிரெஞ்சுக்காரர்களின் சுரண்டல்கள். அடுத்து ஜப்பானியர்களின் மிரட்டல்கள். அடுத்து வியட்நாம் போரின் வேதனைகள். லாவோஸ் மக்கள் இன்றும் அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள். பாவம் அவர்கள்.

உலகில் அதிகமான குண்டுகளைத் தன்னுள் புதைத்துக் கொண்டு வாழும் நாடு லாவோஸ். அந்த நாட்டின் துயர்ப் புகழாரங்கள் அன்றாடம் காம்போதிகள் பாடுகின்றன.


இராமர், சீதை, இராவணன், அனுமான்
ஆகியோரைச் சித்தரிக்கும் அஞ்சல் தலைகள்

அந்த நாட்டில் 67 விழுக்காடு புத்த மதம். 30 விழுக்காடு நாட்டுப்புற ஆன்மீகவாதங்கள் (animism). ஒரே ஒரு விழுக்காட்டு தான் இந்து மதத்தினர்.
இருந்தாலும் பாருங்கள்... இந்திய இதிகாசங்களான மகாபாரதம்; இராமாயணம் தொடர்பான கதாமாந்தர்களுக்கு அஞ்சல் தலைகளை வெளியிட்டு இந்து மதத்திற்குப் பெருமை செய்து இருக்கிறார்கள். 


மணல் ஸ்தூபி

இதில் ஒரு பெரிய ஆச்சரியம் என்னவென்றால் சரஸ்வதி தேவிக்குத் தான் அதிகமான அஞ்சல் தலைகளை வெளியிட்டு இருக்கிறார்கள்.

1955-ஆம் ஆண்டில் இராமர், சீதை, இராவணன், அனுமான் ஆகியோரைச் சித்தரிக்கும் 6 அஞ்சல் தலைகளை வெளியிட்டார்கள். 

சரஸ்வதி தேவி இந்திரன்

1969-ஆம் ஆண்டில் லாவோஸ் மீண்டும் 8 அஞ்சல் தலைகளின் தொகுப்பை வெளியிட்டது. அதில் இராமாயணத்தின் காட்சிகள் இடம் பெற்றன.

1971-ஆம் ஆண்டில் மற்றோர் அஞ்சல் தலையை வெளியிட்டது. அதில் விஷ்ணுவின் மீன் அவதாரம் அனுமனுடன் சண்டையிடுவதைச் சித்தரிக்கிறது.

இலவகுசன், இராமர், சீதை, இராவணன் மற்றும் அனுமான்
ஆகியோரைச் சித்தரிக்கும் லாவோஸ் நாட்டு அஞ்சல் தலைகள்

1974-ஆம் ஆண்டில் சரஸ்வதி, இந்திரன் மற்றும் பிரம்மா ஆகியோரைச் சித்தரிக்கும் 3 அஞ்சல் தலைகளின் தொகுப்பை வெளியிட்டது.

2004-ஆம் ஆண்டில் இராமாயணத்தின் 4 காட்சிகளைக் கொண்ட 4 அஞ்சல் தலைகளின் தொகுப்பை வெளியிட்டது.

மகாபாரதக் காட்சி

2006-ஆம் ஆண்டில் இலவகுசன், இராமர், சீதை, இராவணன் மற்றும் அனுமான் ஆகியோரைச் சித்தரிக்கும் 5 அஞ்சல் தலைகளின் தொகுப்பை வெளியிட்டது.

அண்மையில் விநாயகர் படத்தையும் அஞ்சல் தலையாக வெளியீடு செய்து உள்ளது. லாவோஸ் நாட்டைப் பற்றிய தகவல்கள் மேலும் வரும்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
25.04.2020



24 ஏப்ரல் 2020

கருடா இந்தோனேசியா

இந்தியப் புராணங்களில் விஷ்ணுவின் வாகனமாக குறிப்பிடப் படுவது கருடன்.  பறவைகளின் அரசன் என்றும் சொல்வார்கள். இந்தக் கருடனின் பெயரில் தான் இந்தோனேசியாவின் விமானச் சேவையும் இயங்கி வருகிறது. அதன் பெயர் கருடா இந்தோனேசியா (Garuda Indonesia). 



பல நூறாண்டுகளுக்கு முன்பு இருந்தே கருடா எனும் சொல் இந்தோனேசியாவில் பிரபலமாகி விட்டது. இந்தோனேசியாவிற்கு வணிகம் செய்ய வந்தவர்களும்; பேரரசுகளை உருவாக்கியவர்களும் மகாபாரதம்; இராமாயணம் போன்ற புராணை இலக்கியங்களை வேரூன்றச் செய்து விட்டார்கள்.

அந்த இலக்கியங்கள் வாயாங் கூலிட் எனும் நிழல் பொம்மலாட்டம்; மேடை நாடகங்கள்; கிராமப்புற கூத்துகள் வழியாக இந்தோனேசியாவில் பிரபலம் அடைந்து விட்டன.




இந்தோனேசிய விமானச் சேவைக்கு கருடா இந்தோனேசிய ஏர்வேஸ் (Garuda Indonesian Airways) என்று பெயர். இப்போதைக்கு ‘கருடா இந்தோனேசியா’. அப்படிப் பெயர் வைத்தது யார் தெரியுங்களா? ஆச்சரியப்பட வேண்டாம். முன்னாள் இந்தோனேசிய அதிபர் சுகார்னோ.

கருடா இந்தோனேசியா விமானச் சேவையின் வரலாற்றைக் கொஞ்சம் பார்ப்போம். முன்பு காலத்தில் இந்தோனேசியா துணைக் கண்டம் டச்சு காலனித்துவ நாடாக இருந்தது. 




1928-ஆம் ஆண்டில் இந்தோனேசியாவிற்கு என ஒரு விமானச் சேவை உருவாக்கப் பட்டது. அதன் பெயர் ராயல் டச்சு இண்டீஸ் ஏர்வேஸ் (Royal Dutch Indies Airways). சுருக்கமாக கே.என்.ஐ.எல்.எம். (KNILM).

1949 ஆகஸ்டு 23-ஆம் தேதி நெதர்லாந்து ஹேக் மாநகரில் டச்சு - இந்தோனேசிய உடன்படிக்கை மாநாடு நடந்தது. அப்போது இந்தோனேசியாவின் விமானச் சேவைக்கு என்ன பெயர் வைக்கலாம் எனும் விவாதம் நடந்தது.

அந்த மாநாட்டில் கலந்து கொண்ட முன்னாள் அதிபர் சுகார்னோ ஒரு கவிதையை மேற்கோள் காட்டினார்.




ஜாவானிய கவிஞர் ராதன் மாஸ் நோட்டோ சோரோட் (Raden Mas Noto Soerot) என்பவர் டச்சு மொழியில் எழுதிய கவிதை. டச்சு மொழியில் அந்தக் கவிதை: Ik ben Garuda, Vishnoe's vogel, die zijn vleugels uitslaat hoog boven uw eilanden.

தமிழில்: ’நான் கருடன். விஷ்ணுவின் பறவை. தீவுகளுக்கு மேலே இறக்கைகளைப் பரப்பி பறக்கிறேன்’.

அந்தக் கவிதையின் பொருளை அந்த மாநாட்டிற்கு வந்தவர்களிடம் அதிபர் சுகார்னோ விளக்கினார். ஆக இந்தோனேசியாவின் விமானச் சேவைக்கு கருடனின் பெயர் வைக்கலாம் என்று ஏற்றுக் கொள்ளப் பட்டது. 




(The name Garuda, the name of Lord Vishnu's mount (vahana) was introduced in 1949, during the Dutch – Indonesian Round Table Conference at The Hague on 23 August 1949 by Indonesian President Sukarno)

அந்த வகையில் ‘கருடா இந்தோனேசிய விமானச் சேவை’ என பெயர் வைக்கப் பட்டது. அதுவே ’கருடா இந்தோனேசியா’ என்று இப்போது மாற்றம் கண்டு உள்ளது. அந்தப் பெயர் நிலைத்து நிற்பதற்கு வழி வகுத்தவர் முன்னாள் அதிபர் சுகார்னோ.




இந்தோனேசியா சுதந்திரம் பெற்ற போது அதன் தலைநகரம் ஜொக்ஜகார்த்தாவில் (Yogyakarta) இருந்தது. அங்கே இருந்து அதிபர் சுகார்னோவை ஜகார்த்தாவிற்கு அழைத்து வர இந்தோனேசிய விமானச் சேவையின் முதல் விமானம் பயன்படுத்தப் பட்டது.

இது நடந்தது 1949 டிசம்பர் மாதம் 28-ஆம் தேதி. இந்தோனேசியாவின் சொந்த விமானத்தில் சொந்த மண்ணில் முதல் விமானப் பயணம்.

(One day after the Netherlands acknowledged the sovereignty of Indonesian Republic on December 28th, 1949, two airplanes Dakota (DC-3) flew from Kemayoran airport, from Jakarta to Yogyakarta to pick up Soekarno.)




”கருடா இந்தோனேசியா”வின் பழைய சுலோகங்கள்:

1. கருடா இந்தோனேசியா, இப்போது சிறந்தது (Garuda Indonesia, Kini Lebih Baik - Now Better)

2. கருடா இந்தோனேசியா, ஒன்றாகப் பெருமிதம் கொள்கிறோம் (Garuda Indonesia, Bangga Bersamanya - Proud of You Together)

இப்போதைய சுலோகம்: கருடா இந்தோனேசியா, இந்தோனேசியாவின் விமான நிறுவனம் (Garuda Indonesia, The Airline of Indonesia)




கருடா இந்தோனேசியா விமான நிறுவனத்திற்கு இப்போது 202 விமானங்கள் உள்ளன. உலகளவில் 90-க்கும் மேற்பட்ட இடங்களில் சேவை வழங்குகிறது. உலகில் மிகச் சிறந்த விமான நிறுவனங்களில் ஒன்றாகப் புகழ் பெற்று உள்ளது (World's Best Cabin Crew).

கருடா இந்தோனேசியா விமானச் சேவையை 5 நட்சத்திர விமானச் சேவையாக அனைத்துலக விமான ஆய்வு நிறுவனமான ஸ்கை டிராக்ஸ் (Skytrax) மதிப்பிடுகிறது.




இந்தோனேசியாவில் பலரின் பெயர்கள் இந்திரா, கிருஷ்ணா, குணவான், சத்தியவான், தர்மவான், குபேரன், சித்தார்த்தா (Sudarto), சூரியா, தேவி, பிரிதிவி, ஸ்ரீ, சிந்தா, ரத்னா, பரமிதா, குமலா, இந்திரா, ராதா, பிரியா, மேகவதி என்று முடியும். பார்த்து இருக்கலாம். கேட்டும் இருக்கலாம்.

ஒருமுறை ஜப்பானிய செய்தியாளர் கருடா விமானத்தில் தோக்கியோவில் இருந்து பயணிக்கும் போது இந்திராவதி எனும் பணிப்பெண்ணைப் பார்த்து, “நீங்கள் ஏன் இப்படிப் பெயர் வைத்துக் கொள்கிறீர்கள்?” என்று கேட்டாராம்.

அதற்கு அவர், “நாங்கள் எங்கள் மதத்தை மட்டும்தான் மாற்றிக் கொண்டோம். எங்கள் முன்னோர்களை அல்ல. அவர்களை எங்களால் மாற்றிக் கொள்ள இயலாது” என்று பதில் சொன்னாராம். நெஞ்சம் கனக்கிறது.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
25.04.2020

சான்றுகள்:
https://www.garuda-indonesia.com/id/en/corporate-partners/company-profile/about/index



இந்தோனேசியா பணத்தாட்களில் சிவன் கோயில்

இந்தோனேசியாவின் 50,000 ரூப்பியா பணத்தாட்களில் சிவன் கோயில் பதிக்கப்பட்டு உள்ளது. உலகத்தில் ஒரே ஒரு நாட்டில் மட்டும் தான் அதன் பணத்தாட்களில் இந்துக்களின் தெய்வமான சிவனின் கோயில் ஓவியமாகப் பதிக்கப்பட்டு உள்ளது. 
 
50,000 ரூப்பியா பணத்தாளில் சிவன் கோயில்
 
பணத்தாட்களின் முகப்பில் இராணுவத் தலைவர் குஸ்தி நுகுரா ராய் (Gusti Ngurah Rai) அவர்களின் படம். இந்தப் பணத்தாட்கள் 2011-ஆம் ஆண்டு வெளியிடப் பட்டன. 2016-ஆம் ஆண்டில் மறுபதிப்பு செய்யப்பட்டன.

இந்தச் சிவன் கோயில் பாலித் தீவின் பிரத்தான் புரத்தில் (Pura Bratan) உள்ளது. 1633-ஆம் ஆண்டு கட்டப் பட்டது. சிவனுக்கும் பார்வதிக்கும் நினைவுச் சின்னமாகக் கட்டப்பட்டது. 



இராணுவத் தலைவர் குஸ்தி நுகுரா ராய்

பாலித் தீவின் தலை நகரம் டென்பசார். அங்கு இருந்து சிங்கராஜா செல்லும் வழியில் பெடுகுல் (Bedugul) எனும் இடத்தில் ஒரு மலை ஏரி உள்ளது. அதன் பெயர் புரத்தான் ஏரி (Lake Bratan). பாலித் தீவின் வடக்கே உள்ளது.

ஓர் எரிமலை வெடிப்பினால் இந்த மலைஏரி உருவானது. இதன் உயரம் கடல் மட்டத்தில் இருந்து 4,900 அடி (1,500 மீட்டர்). இந்த ஏரியைச் சுற்றிலும் நிறையவே இந்துக் கோயில்கள். அனைத்தும் சிறியவை. அவற்றில் புரத்தான் சிவன் கோயில் மட்டுமே பெரியது. 

புரத்தான் சிவன் கோயில்

அந்தக் கோயிலின் படத்தைத் தான் இந்தோனேசியாவின் 50,000 ரூபாய் பணத்தாட்களில் பதிப்பு செய்து இருக்கிறார்கள். இந்தக் கோயில் தான் பாலித் தீவின் பெரிய ஒரு சிவன் கோயில். 


இதுதான் அது... அதுதான் இது...

ஜாவா, ஜோக் ஜகார்த்தாவிற்கு அருகில் இருக்கும் பிரம்பனான் சிவன் கோயில் தான் உலகிலேயே மிகப் பெரிய சிவன் கோயில் ஆகும் (World’s largest Hindu Temple, Prambanan temple. Temple Compounds consist of 240 temples located on a 17 square kilometers area). 10-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

600 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் பாலித் தீவில் புரத்தான் சிவன் கோயில் கட்டப் பட்டது.


50,000 ரூபாய் பணத்தாட்களின் முகப்பில் இராணுவத் தலைவர் குஸ்தி நுகுரா ராய் (Gusti Ngurah Rai) அவர்களின் படம். இவர் இந்தோனேசியாவின் தேசிய விடுதலை வீரர். டச்சுக்காரர்களுக்கு எதிராகப் போராடியவர். 1946-ஆம் ஆண்டு தம்முடைய 29-ஆவது வயதில் வீர மரணம் அடைந்தார்.

அவரின் நினைவாக பாலித் தீவின் அனைத்துலக விமான நிலையத்திற்கு நுகுரா ராய் (Ngurah Rai International Airport) என்று பெயர் வைக்கப் பட்டது.

இந்தோனேசியாவில் இந்து மதம் பன்னெடுங் காலமாகப் பயணித்து வந்து உள்ளது. மற்ற மதங்கள் வருவதற்கு முன்னரே அங்கே இந்து மதம் முக்கியமான மதமாக விளங்கி உள்ளது. 


உலகத்திலேயே அதிகமாக இந்தியர்கள் வாழும் நாடு இந்தியா. தலையாய மதம் இந்து. இருப்பினும் அந்த நாட்டின் பணத் தாட்களில் கூட சிவன் அல்லது சிவன் கோயில் இடம் பெறவில்லை. இந்தக் கட்டத்தில் இந்து மதத்தை நினைவுகூரும் இந்தோனேசியாவிற்கு மதிப்புமிக வாழ்த்துகள்.

இந்தோனேசியாவின் மக்கட் தொகையில் 3 விழுக்காடு தான் இந்து மக்கள். இருப்பினும் இந்து மதத்திற்கு அந்த நாடு முறையான அங்கீகாரம் வழங்கி வருகிறது.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
24.04.2020

23 ஏப்ரல் 2020

சுகர்னோ எனும் சுக கர்ணன்

இந்தோனேசியா பார்த்த மாபெரும் தலைவர்களில் தலையாய மகனாக விளங்குபவர் சுகர்னோ (Sukarno). 1945-ஆம் ஆண்டில் இருந்து 1967-ஆம் ஆண்டு வரை இந்தோனேசியாவின் அதிபராகப் பதவி வகித்தவர். இந்தோனேசியாவின் முதல் அதிபர்.


Jawaharlal Nehru’s visit to Indonesia, 10 June 1950

இவருக்கு மகாபாரதத்தில் வரும் கர்ணனின் பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த உண்மை பலருக்கும் தெரியாது. அதிபர் சுகர்னோவின் தந்தையார் ராதன் சுகமி (Raden Soekemi). இவர் கர்ணனின் சிறப்புகளில் ஈர்க்கப் பட்டவர்.

அதனால் தன் மகனுக்கு சுகர்னோ என்று பெயர் வைத்தார். Sukarno எனும் சொல்லைப் பிரித்தால் Su Karna என்று வரும்.
இந்தோனேசிய மொழியில் Su என்றால் சுகம். Karna என்றால் கர்ணன். மகாபாரதக் கதாபாத்திரம். அந்த வகையில் சுக கர்ணன் எனும் பெயர் சுகர்னோ ஆனது. 
 
15 வயதில் சுகர்னோ
யார் என்ன கேட்டாலும் இல்லை என்று சொல்லாதவன் கர்ணன். இப்போதும்கூட நாம் கொடையின் சிறப்பைப் பற்றி சொல்லும் போது கர்ணனைத் தான் குறிப்பிட்டுச் சொல்கிறோம். அந்த அளவுக்குத் தானம் செய்வதில் சிறந்து விளங்கியவன் கர்ணன். மகாபாரதத்தில் அனைவராலும் விரும்பப் பட்டவன் கர்ணன்.

இந்தோனேசியாவில் பலருக்கும் பிடித்தது வாயாங் கூலிட் (Wayang Kulit Jawa) எனும் நிழல் பொம்மலாட்டம். அதில் மகாபாரதம் பற்றி கதைச் சொல்லும் வழக்கம் இருந்தது. அதில் கர்ணன் முதன்மையான கதாபாத்திரம். அந்த வகையில் கர்ணன் எனும் கதை மாந்தர் இந்தோனேசியாவில் சிறப்புப் பெற்று இருக்கிறார். 



(Ida Ayu Nyoman Rai)

அதிபர் சுகர்னோவின் தாயாரின் பெயர் இடாயூ நியோமான் ராய் (Ida Ayu Nyoman Rai). இவர் பாலித் தீவைச் சேர்ந்த ஓர் இந்து.

சுகர்னோ பன்மொழித் திறமையாளர். ஜாவா மொழி, பாலி மொழி, சுந்தானிய மொழி, டச்சு மொழி, ஆங்கில மொழி, அரபு மொழி, இந்தோனேசிய மொழி, ஜெர்மன் மொழி, ஜப்பானிய என பல மொழிகள் தெரிந்தவர்.

சுகர்னோ பிறப்பு: 06 ஜுன் 1901; மறைவு: 21 ஜுன் 1970. வயது 69. ஜாவா சுரபாயாவில் பிறந்தார். ஜகார்த்தாவில் இறந்தார்.

சுகார்னோவின் தனிப்பட்ட வாழ்க்கை சற்றே மலைப்பைத் தருகிறது. ஒன்பது முறை திருமணம் செய்து கொண்டவர். அது அவரின் சொந்த வாழ்க்கை. ஆனால் அவர் அவர் இந்தோனேசிய மக்களுக்குச் செய்த நல்லவற்றை நினைத்துப் பார்ப்போம். 




சோசலிசச் சித்தாந்தத்தில் அதிகமாய் ஈடுபாடு கொண்டவர். அதனால் சீனா, ரஷ்யா, யூகோசுலோவியா நாடுகளுடன் நெருக்கமாகவே இருந்தார்.

1960-ஆம் ஆண்டு அவருக்கு ரஷ்ய அரசாங்கத்தின் லெனின் அமைதிப் பரிசு வழங்கப் பட்டது. உலகளாவிய நிலையில் இவருக்கு 26 கௌரவ டாக்டர் பட்டங்கள். உலகப் புகழ் அமெரிக்காவின் கொலாம்பியா பல்கலைக்கழகம்; மிச்சிகன் பல்கலைக்கழகம் போன்றவை டாக்டர் பட்டம் வழங்கி இருக்கின்றன.

மூன்று நூல்கள் எழுதி இருக்கிறார்.

1. Sukarno: An Autobiography;

2.Indonesia Accuses!

3. To My People



(Megawati Sukarnoputri)

இவரின் மனைவி மார்களின் பெயர்கள்.

1. சித்தி எத்தாரி Siti Oetari (1920)
2. இங்கிட் கர்னாசே Inggit Garnasih (1923)
3. பத்மாவதி Fatmawati (1943)
4. ஹர்த்தினி Hartini (1954)
5. கார்த்தினி மனோப்போ Kartini Manoppo (1959–1968);
6. ரத்னா தேவி Ratna Dewi (1962)
7. ஹர்யாத்தி Haryati (1963–1966);
8. யூரிகா சங்கர் Yurike Sanger (1964–1968);
9. ஹெல்டி ஜாபார் Heldy Djafar (1966–1969).  




சுகர்னோவின் மூன்றாவது மனைவியார் பெயர் பத்மாவதி (Fatmawati). இவர்களுக்குப் பிறந்தவர் மெகாவதி சுகர்னோபுத்ரி (Megawati Sukarnoputri). இவர் 2001-ஆம் ஆண்டில் இருந்து 2004-ஆம் ஆண்டு வரை இந்தோனேசியாவின் ஐந்தாவது அதிபராகப் பதவி வகித்தவர்.

சுகர்னோவின் ஆறாவது மனைவியார் பெயர் ரத்னா சாரி தேவி (Ratna Sari Dewi). இவர்களுக்குப் பிறந்த மகள் கார்த்திகா சாரி தேவி (Kartika Sari Dewi).

சுகர்னோவின் இதர பிள்ளைகள்: ருக்குமணி (Rukmini); ரச்சியமாவதி (Rachmawati);   சுக்மாவதி (Sukmawati); சூர்யவான் (Suryawan); கரினா கார்த்திகா (Karina Kartika); சுகர்னோ புத்ரா (Sukarnoputra); கம்பீரவதி (Gembirowati); ரத்னா ஜுவாமி (Ratna Juami); கார்த்திகா (Kartika).

சுகர்னோ டச்சுக்காரர்களின் காலனித்துவ ஆட்சியை எதிர்த்து இந்தோனேசியா சுதந்திரத்திற்காகப் போராடியவர். பத்தாண்டு காலம் சிறைவாசம் அனுபவித்தவர். இரண்டாம் உலகப் போரில் ஜப்பானியர்கள் இந்தோனேசியாவை ஆக்கிரமித்த போது தான் சுகர்னோ விடுதலையானார்.




1965-ஆம் ஆண்டில் நடந்த ஓர் இராணுவப் புரட்சியில் புதிய அதிபராகச் சுகார்த்தோ பதவி ஏற்றார். சுகர்னோ பதவி இழந்தார். தம்முடைய இறுதிக் காலம் வரையில் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டு இருந்தார்.

இந்தியப் பிரதமர் நேருவின் நெருங்கிய நண்பராக இருந்தவர். தவிர யூகோசுலாவிய அதிபர் ஜோசிப் தித்தோ (Josip Tito); கானா அதிபர் குவாமே நிக்ரூமா (Kwame Nkrumah); எகிப்திய அதிபர் காமல் நாசீர் (Gamal Nasser)போன்றவர்களிடமும் நெருக்கமான நட்புறவு கொண்டவர்.

1963-ஆம் ஆண்டில் மலேசியா உருவான போது மலேசியாவைப் பகைத்துக் கொண்டவர் (Indonesia–Malaysia confrontation - Konfrontasi). 1964 ஆகஸ்டு மாதம் ஜொகூர் பொந்தியான், லாபீஸ் பகுதிகளில் இந்தோனேசியப் படைகளைத் தரை இறக்கி மலேசியாவில் அமளி துமளிகளை ஏற்படுத்தியவர்.

அதுவே மலேசியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையே மோதல்களை உருவாக்கிக் கொடுத்தது. பின்னர் அமைதியானது.

சுகர்னோ மனுக்குலம் பார்த்த வித்தியாசமான விடுதலைப் போராட்டவாதி. ஏகாதிபத்தியங்களுக்கு எதிராகப் போராடியவர். உலகத் தலைவர்களில் மாறுபட்ட சிந்தனைவாதி.

புரட்சிகரமான எண்ணங்கள். துணிகரமான முயற்சிகள். விடுதலைப் போராட்டச் சிந்தனைகளில் சமூகச் சீர்த்திருத்தங்கள். அணி சேராக் கொள்கையில் பிடிவாதமான போக்கு. இவை அனைத்தும் அவரிடம் மலர்ந்த நளினமான நினைவுகளின் மந்திரக் கோல்கள்.

குறிப்பு: ராதா என்பது பெண்பால். ராதன் என்பது ஆண்பால். சுகர்னோ, பாண்டுங் தொழில்நுட்பக் கல்லூரியில் (Technical Institute Bandung) படித்தவர்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
23.04.2020




பேஸ்புக் அன்பர்களின் பதிவுகள்:

Periasamy Ramasamy : மேலும், கேட்போர் கவனம் முழுதும் தம் பக்கம் மட்டுமே ஈர்க்கச் செய்யும் வகையில் உரை (oratory skill) நிகழ்த்துவதில் உலகில் தலைசிறந்த தலைவர்கள் எனக் கொண்டாடப் பெறும் ஆப்ரஹாம் லிங்கன், நேரு, ஜோசப் ஸ்டாலின், கென்னடி, போன்றோர் வரிசையில் சுகர்னோவும் ஒருவர் என்பது குறிப்பிடத் தக்கது.

Muthukrishnan Ipoh : அதில் ஹிட்லர், கோலாபஸ் போன்ற நாஜி பீரங்கிகளையும் சேர்க்க வேண்டும் ஐயா... இவர்கள் இல்லாமலா...

Periasamy Ramasamy >>> Muthukrishnan Ipoh : உண்மை.... உண்மை the great orators வரிசையில் இடம் பிடித்தவர்கள். அவர்கள் பேசினால் படித்தவர்கள் பாமரர்கள் என்று எல்லாருமே மகுடிக்கு மயங்கிய நாகம் போலத்தான்.

Jeya Balan : தெரியாத தகவல் புதியதாகத் தெரிந்துக்கொண்டேன். நன்றிங்க. ஐயா!

Maha Lingam : GIPHY

Muthukrishnan Ipoh : மகிழ்ச்சி ஐயா...

Sheila Mohan : சிறப்பான வரலாற்று கட்டுரை... நன்றிங்க சார்...

Muthukrishnan Ipoh :
நன்றி... நன்றிங்க...


Kumar Murugiah Kumar's : அருமை ஐயா! பகிர்வுக்கு நன்றி!

Muthukrishnan Ipoh : மகிழ்ச்சி... நன்றி

KR Batumalai Robert : சிறப்பு அண்ணா.

Muthukrishnan Ipoh : மகிழ்ச்சி... நன்றிங்க

Vasanthi Mohanakumar : நன்றி ஐயா

Muthukrishnan Ipoh :
இனிய வாழ்த்துகள்


Melur Manoharan : "அருமையான" வரலாற்று தகவல் ஐயா...! "வாழ்த்துகள்"...!

Muthukrishnan Ipoh : மகிழ்ச்சி... இனிய வாழ்த்துகள்...

Sugaanraj Thiagarajan: This should be enshrined as one of the most significant piece of writing sir! Great work and effort on it. my salutations .

Senthil Kumari Nagusamy : தெரியாத வரலாற்று தகவல்களைத் தெரிந்து கொண்டோம். மிக்க நன்றி

Sharma Muthusamy

Maha Lingam

Thanabaal Varmen : ஒரு வரலாற்று உண்மையை அறிந்து கொண்ட மகிழ்ச்சி; வாழ்த்துகள்.

Muthukrishnan Ipoh : மகிழ்ச்சி ஐயா

Janarthanam Kumurasamy : நன்றி வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

Vejaya Kumaran: subhatirai

Khavi Khavi : சுத்தமான மதுரையே பின்னாளில் சுமதுரையாக... மெல்ல சுமத்ராவாக மருவியதாகவும் படித்திருக்கிறேன் ஆசிரியரே. சுகமான கர்ணனே, சுகர்ணன் ஆக, இந்தோ மொழியில் சுகர்னோ என்று பதிந்துவிட்டது. நன்றி..

Muthukrishnan Ipoh :
சுகர்னோவின் மனைவி பிள்ளைகளின் பெயரிலும் தமிழ் சமஸ்கிருதச் சொற்கள் கலந்து உள்ளன... கவனித்தீர்களா...


Ravi Purushothaman : சுமத்ரா.... இராமயணத்தில் வரும் சுமித் ரா ? சுமித்ரை

Muthukrishnan Ipoh : நல்ல தகவல்... நன்றிங்க...

Maha Lingam : நன்றி..ஐயா.. நல்லதோர் படைப்பு.. வாழ்த்துகள்.. அவரைப் பற்றி பல தெரியாத புரியாத கேள்விக்கு விடயம் கொடுத்ததற்கு நன்றி... வாழ்க நலமுடன் பல்லாண்டு.. தொடர்க தங்களின் தமிழ் தொண்டு...

Muthukrishnan Ipoh: நன்றி... மகிழ்ச்சி... இனிய வாழ்த்துகள்

Sugaanraj Thiagarajan : 💯

Vani Yap இந்தோனேசியாவின் அதிபர் சுகர்னோ என்பது பலருக்கும் தெரிந்து இருந்தாலும், அவரைப் பற்றிய பல சுவாரசியமான விசயங்கள் தெரிய வந்துள்ளது... உங்களின் கட்டுரையின் வழி. சிறப்பு.. நன்றி

Maha Lingam >>> Vani Yap உண்மைமா.

Muthukrishnan Ipoh : மகிழ்ச்சி... இனிய வாழ்த்துகள்

Thayalan Avalai

Poovamal Nantheni Devi : தெரியாத தகவல். தெரிந்து கொண்டேன். வரலாறு சிறப்பு

Muthukrishnan Ipoh இனிய வாழ்த்துகள்

Chandran Panakaran

Rajah Poomalai

Anusha Rathnam


Steven Siva: Nandringa Sir

Sai Ra : Arumai. 🙏

Muthukrishnan Ipoh : மகிழ்ச்சி...








22 ஏப்ரல் 2020

மலாக்கா மகா மைந்தர் பரமேஸ்வரா - 3

இந்தோனேசியாவை ஆட்சி செய்த இந்தியர்களின் வரலாறு ஒரு நீண்ட நெடிய வரலாறு. அந்த வரலாற்றில் பற்பல அதிசயமான நிகழ்வுகள். பற்பல ஆச்சரியமான விளைவுகள். அந்த நிகழ்வுகளில் ஒன்றுதான் பரமேஸ்வராவின் முப்பாட்டனார் நீல உத்தமனின் சிங்கப்பூர் புலம் பெயர்வு. 

Nila Utama (Credit: Singapore Bicentennial Office)

சிங்கப்பூரை நீல உத்தமன் தோற்றுவித்தார் என்பதில் மாற்றுக் கருத்துகள் இல்லை. நீல உத்தமன் தான் சிங்கப்பூருக்குச் சிங்க ஊர் என்று பெயரையும் வைத்தவர். சிங்கப்பூர் வரலாறும் சிதைவு படாமல் அவரைப் பற்றி இப்போதும் பெருமை பேசுகிறது.

சிங்கப்பூரின் பழைய பெயர் துமாசிக் (Temasek). தெமாசிக் என்றும் அழைப்பது உண்டு. தெமாகி எனும் ஒரு சிற்றரசர் துமாசிக்கை ஆட்சி செய்து வந்தார். 1299-ஆம் ஆண்டு நீல உத்தமன் துமாசிக்கின் மீது தாக்குதல் நடத்தினார்.

அந்தத் தாக்குதலில் தெமாகி சிற்றரசர் கொல்லப் பட்டார். அதன் பின்னர் சிங்கப்பூரில் நீல உத்தமனின் ஆட்சி.

 


Tamil Malar - 17.04.2020

சிங்கப்பூரில் ஓர் ஆட்சி அமைக்கப்பட்ட பின்னர் தான் பரமேஸ்வரா எனும் பெயரும் வெளியுலகத்திற்குத் தெரிய வருகிறது. அதற்கு முன்னர் சின்ன ஓர் இடைத் தகவல்.

பரமேஸ்வரா என்பவர் இந்தோனேசியா பலேம்பாங் எனும் இடத்தில் இருந்து சிங்கப்பூருக்கு வந்ததாகச் சொல்கிறார்கள். தவறு. பரமேஸ்வரா சிங்கப்பூரில் பிறந்தவர்.

சிங்கப்பூரை ஆட்சி செய்த தெமாகி (Temagi) என்பவரைக் கொலை செய்தததாகச் சொல்கிறார்கள். அதுவும் தவறு. தெமாகியை பரமேஸ்வரா கொலை செய்யவில்லை.
 
1299-ஆம் ஆண்டு நீல உத்தமன் துமாசிக்கின் மீது தாக்குதல் நடத்தினார். அந்தத் தாக்குதலில் தான் தெமாகி  கொல்லப் பட்டார். பரமேஸ்வரா தெமாகியைக் கொலை செய்யவில்லை.

பரமேஸ்வராவைப் பழி வாங்க சயாமியர்கள் படை எடுத்ததாகச் சொல்கிறார்கள். அதுவும் தவறு. நீல உத்தமன் மீது தான் சயாமியர்கள் படை எடுத்தார்கள். நீல உத்தமனின் நான்காவது தலைமுறை தான் பரமேஸ்வரா.


SingPost Releases Bicentennial Stamps Featuring Sang Nila Utama 22 Jun 2019

சிங்கப்பூரை ஆட்சி செய்த நீல உத்தமனின் வாரிசுகளும் அவர்கள் ஆட்சி செய்த காலக் கட்டங்களும்:

1. நீல உத்தமன் (ஸ்ரீ திரி புவனன்) - Nila Utama (Sri Tri Buana) - (1299 – 1347)
   
2. ஸ்ரீ விக்ரம வீரா - Sri Wikrama Wira - (1347 – 1362)
   
3. ஸ்ரீ ராணா விக்ரமா - Sri Rana Wikrama - (1362 – 1375)
   
4. ஸ்ரீ மகா ராஜா - Sri Maharaja - (1375 – 1389)
   
5. பரமேஸ்வரா - Parameswara - (1389 – 1398)

சயாமிய முற்றுகை நடந்த போது நீல உத்தமனின் ஆட்சிக்கு ஆதரவாக சீனாவில் இருந்து சீனக் கடற்படை களம் இறங்கியது. அதனால் சயாமியர்கள் பின்வாங்கினார்கள். 



SingPost Releases Bicentennial Stamps Featuring Sang Nila Utama 22 Jun 2019

சில வரலாற்றுக் கற்றுக் குட்டிகள் கதை சொல்வது உண்டு. முற்றிலும் தவறான கதைகள். வரலாற்றை ஒழுங்காகத் தெரிந்து கொள்ள வேண்டும். வாய்க்கு வந்தபடி கதை திரிப்பது சில அரைகுறைகளின் அரைவேக்காட்டு ராகங்கள். அந்த மாதிரியான ராகங்கள் வரலாற்றுக்குத் தேவை இல்லை.

இந்தோனேசியாவை ஆட்சி செய்த இந்தியர்களின் வரலாற்றில் இந்தியர் பேரரசுகளின் பட்டியல் வருகிறது. கவனியுங்கள்.

அந்தப் பேரரசுகளை யார் யார் தோற்றுவித்தார்கள்; எந்த ஆண்டில் தோற்றுவித்தார்கள்; எங்கே  தோற்றுவித்தார்கள் எனும் சுருக்கமான விவரங்களும் வழங்கப்பட்டு உள்ளன.



Sri Vijaya Empire

1. ஜலநகரப் பேரரசு - மேற்கு ஜாவா (Salakanagara Kingdom) கி.பி. 130 – 362

2. கூத்தாய் பேரரசு - களிமந்தான் போர்னியோ (Kutai Kingdom) கி.பி. 350 – 1605

3. தர்மநகரப் பேரரசு - ஜகார்த்தா (Tarumanagara Kingdom) கி.பி. 358 - 669

4. கலிங்கப் பேரரசு - மத்திய ஜாவா (Kalingga Kingdom) கி.பி. 500 – 600

5. மெலாயு பேரரசு - ஜாம்பி சுமத்திரா (Melayu Kingdom) கி.பி. 600

6. ஸ்ரீ விஜய பேரரசு - சுமத்திரா (Srivijaya Kingdom) கி.பி. 650 - 1377

7. சைலேந்திரப் பேரரசு - மத்திய ஜாவா (Shailendra Kingdom) கி.பி. 650 - 1025

8. காலோ பேரரசு - மேற்கு ஜாவா (Galuh Kingdom) கி.பி. 669–1482

9. சுந்தா பேரரசு - மத்திய ஜாவா (Sunda Kingdom) கி.பி. 669–1579

10. மத்தாரம் பேரரசு - கிழக்கு ஜாவா (Medang Kingdom) கி.பி. 752–1006

11. பாலி பேரரசு - பாலி (Bali Kingdom) கி.பி. 914–1908

12. கௌரிபான் பேரரசு - கிழக்கு ஜாவா (Kahuripan Kingdom) கி.பி. 1006–1045

13. கெடிரி பேரரசு - கிழக்கு ஜாவா (Kediri Kingdom) கி.பி. 1045–1221

14. தர்மாசிரியா பேரரசு - மேற்கு சுமத்திரா (Dharmasraya) கி.பி. 1183–1347

15. சிங்காசாரி பேரரசு - கிழக்கு ஜாவா (Singhasari Kingdom) கி.பி. 1222–

16. மஜபாகித் பேரரசு - ஜாவா - (Majapahit Kingdom) கி.பி. 1293–1500



Sang Nila Utama - Wikipedia

அந்தப் பேரரசுகளில் சில முக்கியமான பேரரசுகளை யார் யார் தோற்றுவித்தார்கள் எனும் சுருக்கமான விவரங்கள்:

1. பூரணவர்மன் - தர்மநகரப் பேரரசு (Tarumanagara) (கி.பி.358 - கி.பி.669 ஜாகர்த்தா)

2. ஸ்ரீ ஜெயாசேனா - ஸ்ரீ விஜய பேரரசு (Srivijaya) (கி.பி.650 - கி.பி.1377 சுமத்திரா)

3. கலிங்கர்கள் - சைலேந்திரப் பேரரசு (Shailendra) (கி.பி.650 - கி.பி.1025 மத்திய ஜாவா)

4. ஸ்ரீ கேசரி வர்மதேவா - வர்மதேவா பேரரசு (Warmadewa) (கி.பி.914 - கி.பி.1181 பாலி)

5. சஞ்சாயா (Sanjaya Rakai) - மத்தாராம் பேரரசு (Medang Mataram Kingdom) (கி.பி.732 - கி.பி.1006 கிழக்கு ஜாவா)

6. ராடன் விஜயா (Raden Wijaya) - மஜபாகித் பேரரசு (கி.பி.1293 - கி.பி.1527 ஜாவா)

7. ராஜாசா (Rajasa) - சிங்காசாரி (Singasari)  பேரரசு; (கி.பி1222 - கி.பி.1292 கிழக்கு ஜாவா) 

 
Seated female ascetic, Eastern Javanese period,
15th–16th century Indonesia (Java),
Majapahit kingdom Bronze; H. 6 5/8 in. (16.8 cm)

இந்தப் பேரரசுகள் எல்லாம் காலத்தால் கதைகள் சொல்லும் பேரரசுகள். மேலே சொன்ன சக்தி வாய்ந்த சில முக்கியமான பேரரசுகள் மட்டுமே காட்சிப் படுத்தப் படுகின்றன.

இந்தக் கட்டுரைத் தொடரின் ஒவ்வொரு பகுதியிலும் இந்தோனேசியாவை ஆட்சி செய்த ஒவ்வோர் இந்தியர் அரசையும் அடையாளப் படுத்துகிறேன். பரமேஸ்வரா கட்டுரைத் தொடருக்கு அந்த இணைப்புகள் வலு சேர்க்கும் என்று நம்புகிறேன்.

அந்தப் பேரரசுகளில் மிகவும் வலிமை வாய்ந்ததாகக் கருதப் படுவது மஜபாகித் (Majapahit) பேரரசு. ஒரு கட்டத்தில் மட்டும் அதாவது கி.பி.1350-ஆம் ஆண்டில் இருந்து 1389-ஆம் ஆண்டு வரையில் மஜபாகித் பேரரசின் கீழ் 9 பேரரசுகள் 8 சிற்றரசுகள் இயங்கி வந்து உள்ளன.

நன்றாகக் கவனியுங்கள். மஜபாகித் பேரரசின் கீழ் ஒன்பது பேரரசுகள் இருந்து இருக்கின்றன.



15th–16th century Indonesia (Java),
Majapahit kingdom Bronze

சுமத்திரா, நியூகினி, சிங்கப்பூர், மலாயா, புருணை, தென் தாய்லாந்து, சூலு தீவுக் கூட்டங்கள், பிலிப்பைன்ஸ், கிழக்கு தீமோர் நாடுகள் என ஒட்டு மொத்த தென்கிழக்காசியாவே மஜபாகித் பேரரசின் கீழ் தாழ் பணிந்து தலை வணங்கி நின்றன.

கி.பி. 1350 – 1389-ஆம் ஆண்டுகளில் மஜபாகித் பேரரசை ஹாயாம் வூரூக் (Hayam Wuruk) எனும் ராஜா ஜனகரன் (Rajasanagara) ஆட்சி செய்த போது, அந்தப் பேரரசு 12 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு ஆட்சி செய்யப்பட்து.

அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே அந்த மாவட்டங்களை ஆட்சி செய்து இருக்கிறார்கள். அந்தச் சொந்தங்கள் யார் என்பதையும் பார்ப்போம்.

1. கஹுரிபான் (Kahuripan) - திரிபுவன துங்காதேவி (Tribhuwanatunggadewi) - ராஜா ஜனகரனின் தாயார்.

2. கெடிரி (Kediri) - ராஜா தேவி மகாராஜாசா (Rajadewi Maharajasa) - ராஜா ஜனகரனின் மாமியார்.

3. துமாபெல் (Tumapel - Singhasari) - கர்த்தாவரதனா (Kertawardhana) - ராஜா ஜனகரனின் தந்தையார்    

4. வெங்கர் (Wengker - Ponorogo)  - விஜயராஜாசா (Wijayarajasa) - ராஜா ஜனகரனின் மாமனார்

5. மத்தாஹுன் (Matahun - Bojonegoro) - ராஜாசாவர்தனா (Rajasawardhana) - ராஜா ஜனகரனின் சகோதரர்

6. வீரபூமி (Wirabhumi - Blambangan) - பெரி வீரபூமி (Bhre Wirabhumi) - ராஜா ஜனகரனின் மகன்.

7. பாகுஹான் (Paguhan) - சிங்கவர்தனா (Singhawardhana) - ராஜா ஜனகரனின் மைத்துனர்

8. கபாலம் (Kabalam) - குசுமாவர்த்தனி (Kusumawardhani) - ராஜா ஜனகரனின் மகள்.    

9. பவனுவான் (Pawanuan) - சூரவர்த்தினி (Surawardhani) - ராஜா ஜனகரனின் மருமகள்.

10. லாசம் (Lasem - Central Java) - ராஜாசாதுதிதா இந்துதேவி (Rajasaduhita Indudewi) - ராஜா ஜனகரனின் சித்தப்பா மகள்    

11. பாஜாங் (Pajang - Surakarta) - ராஜாசாதுதிதா ஈஸ்வரி (Rajasaduhita Iswari) - ராஜா ஜனகரனின் சகோதரி

12. மத்தாராம் (Mataram - Yogyakarta)- விக்கிரமவர்தனா (Wikramawardhana) -     ராஜா ஜனகரனின் சகோதரர்.




ஆக ஒரு பேரரசை ஒரு குடும்பத்தார் மட்டுமே ஆட்சி செய்ய அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

(3.Majapahit Overseas Empire)

மேலே சொன்ன அந்தப் பேரரசுகளைத் தவிர மேலும் பற்பல சிற்றரசுகளும் இந்தோனேசியாவை ஆட்சி செய்து உள்ளன. இன்னும் ஒரு விசயம்.

பாலி தீவில் முதன்முதலில் ஒரு சிற்றரசை உருவாக்கியது ஓர் இந்திய மன்னர். அவருடைய பெயர் ஸ்ரீ கேசரி வர்மதேவா (Sri Kesarivarma). இவர் பல்லவ மன்னர்களின் வழித்தோன்றல். அந்தச் சிற்றரசின் பெயர் வர்மதேவா சிற்றரசு. கி.பி.914-ஆம் ஆண்டில் உருவாக்கப் பட்டது.

அப்போது அங்கே சைவமும் புத்தமும் சமகாலத்தில் பின்பற்றப் பட்டன. வர்மதேவா சிற்றரசு முதலில் அது ஒரு சிற்றரசு தான். காலப் போக்கில் அதுவே ஒரு பேரரசாக உருமாற்றம் கண்டது.

(4.Debbie Guthrie Haer, Juliette Morillot and Irene Toh);

(5.Andy Barski, Albert Beaucort and Bruce Carpenter)



15th–16th century Indonesia (Java),
Majapahit kingdom Bronze

பாலி தீவில் வர்மதேவா சிற்றரசு உருவான காலக் கட்டத்தில் ஜாவாவில் மத்தாரம் பேரரசு (Mataram Kingdom) எனும் ஓர் அரசு இருந்தது. இந்தப் பேரரசை சஞ்சாயா (Sanjaya Dynasty) பரம்பரையினர் ஆட்சி செய்து வந்தனர்.

இந்த மத்தாரம் பேரரசை கி.பி. 929-ஆம் ஆண்டு ஸ்ரீ இசயானா விக்ரமதாம துங்கா தேவா (Sri Isyana Vikrama Dhamma Tungga Deva) எனும் அரசர் ஆட்சி செய்து வந்தார். இவருடைய இன்னொரு பெயர் மாப்பு சிந்தோக் (Mpu Sindok). 

மாப்பு சிந்தோக் காலத்தில் தான் ஜாவா தீவில் இருக்கும் மெராப்பி (Merapi) எரிமலை வெடித்தது. உயிர்ச் சேதங்களும் பொருட் சேதங்களும் அதிகம் ஏற்பட்டன.

விக்ரமதாம துங்கா தேவாவிற்குப் பின்னர் அவருடைய மகள் இசானாதுங்க விஜயா (Isana Tunga Vijaya) என்பவர் ஆட்சிக்கு வந்தார்.

மெராப்பி எரிமலை வெடித்துச் சேதங்களை ஏற்படுத்தியதும், மத்தாரம் பேரரசு தன் நிர்வாகத்தைக் கிழக்கு ஜாவாவிற்கு மாற்றியது. மேற்கு ஜாவாவில் ஜொம்பாங் எனும் ஒரு மாவட்டம் (Jombang Regency) இருந்தது. இப்போதும் இருக்கிறது. 



Singapore 14th Century

இந்த மாவட்டத்தில் பிராந்தாஸ் ஆறு (Brantas River) சிறப்புமிக்கது. இந்த ஆற்றின் இருமருங்கிலும் தான் அப்போதைய புதிய மத்தாரம் பேரரசு அமைக்கப் பட்டது.

அந்தப் புதிய மத்தாரம் பேரரசிற்கு மேடாங் (Medang) அரசு என்று பெயர் வைக்கப்பட்டது. இருப்பினும் மேடாங் எனும் சொல்லை விட மத்தாரம் எனும் சொல்லே நிலைத்து விட்டது. இந்தோனேசிய வரலாற்றில் மத்தாரம் எனும் சொல்லே நிலையான அடைமொழியாகவும் வலம் வருகிறது.

இந்த விக்ரமதாம துங்கா தேவா தான் பின்னர் காலத்தில் இசாயனா எனும் அரச பரம்பரையை உருவாக்கினார். பழைய மத்தாரம் பேரரசில் இவர் சஞ்சாயா அரச பரம்பரையைச் சார்ந்தவர். புதிய அரசு உருவானதும் தன்னுடைய அரசப் பரம்பரைப் பெயரை இசாயனா என்று பெயர் மாற்றம் செய்து கொண்டார். இவரின் சந்ததியினரை இசாயனா பரம்பரையினர் (Isayana Dynasty) என்று சொல்வதும் உண்டு.



Singapore Bicentennial Film

மத்தாரம் பேரரசு தன் நிர்வாகத் தலைநரைக் கிழக்கு ஜாவாவிற்கு மாற்றியதற்கு மூன்று காரணங்கள் சொல்லப் படுகின்றன.

முதல் காரணம்: மெராப்பி எரிமலை வெடிப்பினால் ஏற்பட்ட சேதங்கள். அதனால் ஏற்பட்ட எரிமலைப் புகை மண்டலத்தின் நச்சுக் காற்றுகள்;

இரண்டாவது காரணம்: அரச அதிகாரப் போராட்டம்.

மூன்றாவது காரணம்: சுமத்திராவில் இருந்த ஸ்ரீ விஜய பேரரசு, ஜாவாவில் இருந்த மத்தாரம் பேரரசின் மீது தாக்குதல் நடத்தியது.

அந்த நிர்வாக மாற்றத்தில் சஞ்சாயா (Sanjaya) எனும் மற்றொரு சிற்றரசும் ஜாவாவில் உருவானது. ஓர் இடைச் செருகல்.

Prambanan, the Most Beautiful and Graceful Hindu Temple in Indonesia

சஞ்சாயா எனும் பெயரில் இரு அரசுகள் இருந்து இருக்கின்றன. அவற்றில் ஒன்று சஞ்சாயா சிற்றரசு. மற்றொன்று சஞ்சாயா பேரரசு.

கிழக்கு ஜாவாவிற்கு மாறிய சஞ்சாயா பேரரசு அப்படியே தன் அதிகார வலிமையைப் பாலி தீவிலும் களம் இறக்கியது. அந்த வகையில் தான் பாலி தீவில் முதன்முதலாக ஓர் இந்திய சாம்ராஜ்யம் உருவானது. இந்து சமயம் அங்கே நிலைத்துப் போனது.

அதனால் பாலி தீவு மக்கள் இந்து சமயத்தைப் பின்பற்றத் தொடங்கினார்கள். இப்போது பாலி தீவில் வாழ்பவர்களில் 83 புள்ளி 5 விழுக்காட்டினர் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் ஆகும்.

(தொடரும்)

சான்றுகள்:

1. Singapore. Ministry of Culture, Singapore. Ministry of Communications and Information. Information Division (1973). Singapore facts and pictures. Singapore: Ministry of Culture.

2. Sang Nila Utama, pioneers join Stamford Raffles along Singapore River". Channel NewsAsia.

3. Marwati Djoened Poesponegoro; Soejono (R. P.); Richard Z. Leirissa (2008). Sejarah nasional Indonesia: Zaman kuno – Volume 2. PT Balai Pustaka.

4. Groeneveldt, W.P. (1877). Notes on the Malay Archipelago and Malacca, Compiled from Chinese Sources.