25 ஜனவரி 2015

வீரமங்கை வேலுநாச்சியார்

வீரமங்கை வேலுநாச்சியார்

எத்தனையோ சாதனை மங்கைகளை தமிழ் வரலாறு பார்த்திருக்கிறது. ஆனால் வீர மங்கை என்றால் அவர் ஒருவர்தான். வேலு நாச்சியார். வீரம் என்றால் சாதாரண வீரம் அல்ல, மாபெரும் படைகளை எதிர்கொண்டு வீழ்த்திய வீரம்.

இராமநாதபுரத்திற்கு அருகிலுள்ள ஊர். வேலுநாச்சியார் பிறந்தது இங்கேதான். தந்தை முத்து விஜயரகுநாதசெல்லத்துரை சேதுபதி. இராமநாதபுர மன்னர். தாய் முத்தாத்தாள் நாச்சியார். இவர்களின் ஒரே பெண் குழந்தை வேலுநாச்சியார்.

விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பது இந்தக் காலத்தில் நாம் சொல்லும் பழமொழி. ஆனால் அந்தக் காலத்தில் அதற்கு உதாரணமாய் இருந்திருக்கிறார் வேலுநாச்சியார். சிறுவயதில் வேலுநாச்சியாருக்கு தெரிந்த ஒரே மூன்றெழுத்து வார்த்தை வீரம். தெரியாத மூன்றெழுத்து வார்த்தை பயம்.

வாள்வீச்சு, அம்பு விடுதல், ஈட்டி எறிதல், குதிரையேற்றம், யானையேற்றம் என்று எல்லா போர்க் கலைகளையும் கற்றார். இவையனைத்தும் அவருக்கு பிற்காலத்தில் உதவின. வீர விளையாட்டுக்கள் மட்டுமன்றி பாடங்களிலும் வேலு நாச்சியார் கெட்டிதான்.

பத்து மொழிகள் தெரியும். மகாபாரதம், இராமாயணம் போன்ற இதிகாசங்கள் தெரியும். இப்படி வீறுகொண்டும் வேலு கொண்டும் வளர்ந்த இளம் பெண் வேலுநாச்சியார் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனை.

வேலு நாச்சியாரின் அழகிலும் வீரத்திலும் மனதைப் பறிகொடுத்த சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதர், வேலு நாச்சியாரை மணமுடித்தார். அது 1746ம் வருடம். வேலுநாச்சியார் சிவகங்கைக்கு குடிபுகுந்தார்.

சிவகங்கை சீமை சீரும் சிறப்புமான சீமை. அதை சீர்குலைக்க வந்தது ஒரு சிக்கல். ஆற்காடு நவாப்பின் பெரும்படை ஒன்று இராமநாதபுரத்தைத் தாக்கி கைப்பற்றியது. நவாபின் அடுத்த குறி சிவகங்கைதான்.

ஆசைப்பட்ட இடங்களை அடையாமல் விட்டதில்லை நவாப். நேரம் பார்த்து நெருங்குவான். நெருக்குவான். கழுத்தை நெரித்துவிடுவான். சிவகங்கை மன்னர் முத்துவடுமுகநாதரும் லேசுபட்டவர் அல்ல. போர்க்கலைகள் தெரிந்தவர்.

வீரம் செறிந்தவர். விவேகம் பொதிந்தவர். முத்துவடுக நாதரின் மனைவியான வேலு நாச்சியார் வீரனுக்கு ஏற்ற வீராங்கனையாகத் திகழ்ந்தார். இவர்களுக்கு உறுதுணையாக போர்ப்படை தளபதிகளாக சின்ன மருது, பெரிய மருது சகோதரர்கள். வீரத்துக்கு பெயர் பெற்றவர்கள்.

நேரம் பார்த்துக் கொண்டிருந்த நவாப்புக்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்தது. சிவகங்கையைத் தாக்க ஆங்கிலேயேப் படைகள் நவாப்புக்கு உதவ முன்வந்தன. அவர்களிடம் நவீனரக ஆயுதங்கள் இருந்தன. அவற்றைக் கொண்டு சிவகங்கையைத் தாக்கி தன் கட்டுக்குள் கொண்டுவரத் திட்டமிட்டான் நவாப்.

ஒரு முறை மன்னர் முத்து வடுகநாதர் காளையர் கோயிலில் வழிபாடு செய்து கொண்டிருந்தபோது நவாபின் படைகள் காளையர் கோயிலைச் சுற்றி வளைத்தனர். கொடூரமாய் தாக்கினர்.

ஆங்கிலேயர் கொடுத்த போர்ச் சாதனங்களைக் கொண்டு தாக்கினர். வடுகநாதரும் அவரது படைகளும் வீரப்போர் புரிந்தனர். இருந்தும் அவர்களால் அந்தத் தாக்குதலைச் சமாளிக்க இயலவில்லை. வடுகநாதர் வாளால் வெட்டப்பட்டு இறந்தார் இளவரசியும் கொல்லப்பட்டார். காளையர் கோயில் கோட்டை நவாப்படைகளின் வசமாகியது.

திடீர் தாக்குதலில் கோட்டை வீழ்ந்து மன்னர் இறந்துவிட்டார் என்ற செய்தி வேலு நாச்சியாருக்கு எட்டியது. கதறி அழுதார். கணவரின் உடலைப் பார்க்க வேண்டும் என்று துடித்தார். தானிருந்த இடத்திலிருந்து காளையர் கோயிலுக்குச் செல்ல விரும்பினார்.

இந்தச் சமயத்தில் நாச்சியாரைக் கைது செய்ய படை ஒன்றை அனுப்பினான் நவாப். அந்தப் படை வேலு நாச்சியாரை வழியிலேயே மடக்கியது. ஆனால் நாச்சியார் மடங்கவில்லை. ஆவேசத்துடன் போரிட்டார். எதிரிப்படைகளை சிதறி ஓடச் செய்தார்.

இறந்த கணவரை சென்று பார்த்துவிட வேண்டுமென்பதுதான் அவரது ஒரே இலக்காயிருந்தது. ஆனால் தளபதிகளாயிருந்த மருது சகோதரர்கள் அவருக்கு வேறு ஆலோசனை வழங்கினார்கள். 'கோட்டை வீழ்ந்துவிட்டது. அரசர் இறந்துவிட்டார். நீங்களும் போய் சிக்கிவிட்டால் நம்மால் நவாபை பழிவாங்கமுடியாது. நாட்டைக் கைப்பற்றவும் நாட்டின் பெருமையைக் காப்பாற்றவும் நீங்கள் வாழ்ந்தாக வேண்டும்.

அதனால் அங்கே போகக் கூடாது' என்றார்கள். ஆனால் நாச்சியார் கேட்கவில்லை. கணவரின் உடலைக் காண காளையர் கோயில் சென்றார். இதற்குள் நவாப் கூட்டமும் ஆங்கிலேயப் படைகளும் சிவகங்கைக்குள் நுழைந்துவிட்டன.

வேலு நாச்சியார் காளையர் கோயிலில் கண்ட காட்சி கொடூரமானது. எங்கெங்கும் பிணக் குவியல். கோயில் திடலின் நடுவே அரசரும் இளையராணியும் ரத்தம் வடிந்து கிடந்தார்கள். காணக் கூடாத காட்சி அது. கதறி அழுதார் நாச்சியார். கணவருடன் உடன்கட்டை ஏறிவிடலாமா என்று கூட யோசித்தார். ஆனால் கணவனைக் கொன்ற கயவர்களைப் பழிவாங்காமல் சாவதா? அந்த வீரமங்கைக்கு அது இயலாத காரியம்.

பல்லக்கு ஒன்றில் ஏறி மருது சகோதரர்களின் பாதுகாப்போடு சிவகங்கையிலிருந்து தப்பிச் சென்றார். விடிய விடிய குதிரையில் பயணம் செய்து மேலூர் சென்றார்கள். வேலு நாச்சியார் வீரத்தில் மட்டுமல்ல, விவேகத்திலும் கெட்டி. நவாபையும் ஆங்கிலேயர் படையினரையும் வீழ்த்த மன்னர் ஹைதர் அலி உதவியை நாடுவது என்று தீர்மானித்தார்.

ஏனென்றால் ஆங்கிலேயருக்கும் நவாப்புக்கும் பரம எதிரி ஹைதர் அலி. தான் ஒளிந்திருந்த காடுகளிலிருந்து ஹைதர் அலிக்கு உதவி கேட்டு கடிதம் எழுதினார். அப்போது ஹைதர் அலி திண்டுக்கல்லிலிருந்தார். கடிதங்களை ஹைதர் அலியின் அரண்மனையின் முன்பு மூன்று குதிரை வீரர்கள் வந்து நின்றார்கள். வேலு நாச்சியாரிடமிருந்து வருவதாகச் சொன்னார்கள். ஹைதர் அலி அவர்களை உள்ளே வரவழைத்தான்.

'வேலு நாச்சியார் வரவில்லையா?'' என்று ஹைதர் அலி கேட்க, தன் தலைப்பாகையை கழற்றினான், ஒரு வீரன். அது வேலு நாச்சியார். ஹைதர் அலியுடன் உருது மொழியை சரளமாகப் பேச அவருக்கு மேலும் ஆச்சர்யம். தன் வேதனைகளையும் இலட்சியத்தையும் ஹைதர் அலியிடம் விளக்கினார் வேலுநாச்சியார். அவரிடமிருந்த வீரத்தைக் கண்ட ஹைதர் அலி தன்னுடைய கோட்டையிலேயே தங்கிக் கொள்ள அனுமதி தந்தார்.

வேலு நாச்சியார் தனக்கு வேண்டிய பணிப் பெண்களுடனும், வீரர்களுடனும், விருப்பாட்சி கோட்டை, திண்டுக்கல் கோட்டைகளில் பாதுகாப்பாகத் தங்கினார். அங்கிருந்து தனது போர்ப் படைகளைப் பெருக்கத் துவங்கினர். வேலு நாச்சியாரின் லட்சியம் ஆங்கிலேயப் படையை அழிப்பது, நவாபை வீழ்த்துவது. சிவகெங்கை சீமையில் தனது பரம்பரை சின்னமான அனுமன் கொடியை பறக்க விடுவது. அதற்கான நாளும் வந்தது.

ஹைதர் அலி தந்த நவீன ரக ஆயுதங்களுடன் நவாப்படைகளுடன் போர் செய்யக் கிளம்பினார். வேலு நாச்சியார். முதலில் காளையர் கோயிலைக் கைப்பற்றினார். சிவகங்கையிலும் திருப்பத்தூரிலும் நவாப்பின் படைகளும் ஆங்கிலப் படைகளும் பரவி நின்றன. அவற்றைத் தோற்கடித்தால்தான் சிவகங்கையை மீட்க முடியும்.

வேலு நாச்சியார் தனது படைகளை இரண்டாகப் பிரித்து ஒரு படைக்கு சின்ன மருதை தளபதியாகவும், இன்னொரு படைக்கு பெரிய மருதுவுடன் இணைந்து வேலு நாச்சியார் தலைமை வகித்தார்.

சின்னமருது தலைமையிலான படை திருப்பத்தூரில் இருந்த வெள்ளையர் படைகளை வீழ்த்தியது. விஜயதசமி அன்று சிவகெங்கை அரண்மனைக்குள்ளே இருக்கும் ராஜராஜேஸ்வரி தெய்வத்தை கூட்டம், கூட்டமாக பெண்கள் சென்று வழிபடுவது வழக்கம். வெளியே ஆங்கிலேயர் படை காவல் காத்துக் கொண்டிருக்கும்.

வேலுநாச்சியாரும், அவரோடு இருந்த பெண்கள் படையும், ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக அரண்மனைக்குள் உள்ளே இருந்த கோவிலுக்குள் சென்று திடீர் தாக்குதல் நடத்தியது. இதை ஆங்கிலேயப் படைகள் எதிர்பார்க்கவில்லை. வெட்டுண்டு விழுந்தார்கள். பிழைத்தவர்கள் நாட்டைவிட்டு ஓடினார்கள்.

சிவகங்கை கோட்டை மீது பறந்த ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டது. வேலு நாச்சியாரின் அனுமன் கொடி ஏற்றப்பட்டது. அவரது சபதம் நிறைவேறியது. வேலு நாச்சியார் சிவகங்கையின் அரசியானார். அவருடைய காலம் வீரத்தின் காலமாக இருந்தது.

தனது அறுபத்தாறாவது வயதில் இறந்தார், வேலு நாச்சியார். அவரது வாழ்க்கை தமிழ் மண்ணின் வீரத்துக்கு சாட்சியாக இன்றும் இருக்கிறது.

- அனுப்பி உதவியவர்: ஜெகந்நாதன்

27 டிசம்பர் 2014

கிளியோபாட்ரா ஓர் அழகு ஓவியம்


வரலாற்று பேரழகிகள் பட்டியலில் இன்றும் முதலிடத்தில் இருப்பவர் கிளியோபாட்ரா. கழுதைப் பாலில்  குளிப்பாள். உடல் மினுமினுப்புக்காக கடல் முத்துக்களை காடியில் (vinegar)  கரைத்துக் குடிப்பாள். அவளைப் பற்றி பலப்பல கதைகள். அவள் பேரழகி மட்டும் அல்ல. ஜூலியஸ் சீசர், மார்க் ஆன் டனி போன்ற மாவீரர்களின் காதல் மனைவியாகவும் வாழ்ந்தவள்.

கிரேக்கம், ரோம், எகிப்து என பல நாடுகளின் வரலாற்றையே மாற்றி அமைத்தவள். போராட்டங்களும், மர்மங்களும் நிரம்பிய அவளது வரலாற்றை இன்றும் பல மேற்கத்திய பல்கலைக்கழகங்கள் ஆராய்ந்து  கொண்டு இருக்கின்றன. நாமும் கொஞ்சம் ஆராய்ந்து பார்ப்போம்.

வரலாற்று பேரழகிகள் பட்டியலில் இன்றும் முதலிடத்தில் இருப்பவர் கிளியோபாட்ரா. கி.மு. 69&30 காலத்தில் வாழ்ந்தவள். பாலில்  குளிப்பாள்.. கண்களில் பல வண்ண மைகளால் அலங்காரம் செய்துகொள்வாள்.. உடல் மினுமினுப்புக்காக முத்துக்களை வினிகரில்  கரைத்து அருந்துவாள்.. என பல கதைகள் அவளை பற்றி உலவுகின்றன. அவள் பேரழகி மட்டுமல்ல ஜூலியஸ் சீசர், மார்க் ஆன் டனி போன்ற மாவீரர்களின் காதல் மனைவியாகவும் இருந்தாள். கிரேக்கம், ரோம், எகிப்து என பல நாடுகளின் வரலாறே அவளால்  மாறியது. போராட்டங்களும், மர்மங்களும் நிரம்பிய அவளது வரலாற்றை இன்றும் பல மேற்கத்திய பல்கலைக்கழகங்கள் ஆராய்ந்து  கொண்டிருக்கின்றன. - See more at: http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=12#sthash.cVjskS9z.dpuf
வரலாற்று பேரழகிகள் பட்டியலில் இன்றும் முதலிடத்தில் இருப்பவர் கிளியோபாட்ரா. கி.மு. 69&30 காலத்தில் வாழ்ந்தவள். பாலில்  குளிப்பாள்.. கண்களில் பல வண்ண மைகளால் அலங்காரம் செய்துகொள்வாள்.. உடல் மினுமினுப்புக்காக முத்துக்களை வினிகரில்  கரைத்து அருந்துவாள்.. என பல கதைகள் அவளை பற்றி உலவுகின்றன. அவள் பேரழகி மட்டுமல்ல ஜூலியஸ் சீசர், மார்க் ஆன் டனி போன்ற மாவீரர்களின் காதல் மனைவியாகவும் இருந்தாள். கிரேக்கம், ரோம், எகிப்து என பல நாடுகளின் வரலாறே அவளால்  மாறியது. போராட்டங்களும், மர்மங்களும் நிரம்பிய அவளது வரலாற்றை இன்றும் பல மேற்கத்திய பல்கலைக்கழகங்கள் ஆராய்ந்து  கொண்டிருக்கின்றன. - See more at: http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=12#sthash.cVjskS9z.dpuf
வரலாற்று பேரழகிகளின் பட்டியலில் இன்றுவரை, முதல் இடத்தில் இருப்பவர் கிளியோபாட்ரா. மறைக்க முடியாத மறுக்க முடியாத ஓர் அழகு ஓவியம். கிளியோபாட்ராவின் காலம் கி.மு.69-லிருந்து 30 வரை. வரலாற்றுப் புத்தகங்கள் சொல்லுகின்றன. எகிப்தை ஆண்ட பன்னிரெண்டாம் டாலமி என்கிற மன்னனுக்கும் இஸிஸ் என்கிற அரசிக்கும் பிறந்தவள் கிளியோபாட்ரா. 

http://www.newyorker.com/wp-content/uploads/2013/06/cleopatra-liz-taylor-580.jpg

எகிப்து பேரரசியாக இருந்தாலும் அவள் கிரேக்க பேரரசர் அலெக்சாண்டரின் தளபதி தாலமியின் வம்சாவளியில் வந்தவள். தாலமி என்பவர்கள் தங்களை கிரேக்கர்கள் எனக் கூறுவதில் பெருமை கொண்டிருந்தனர். ஆனால் 12ஆம் தாலமியின் மகளாக பிறந்த கிளியோபாட்ரா,  தன்னை எகிப்து தேவதை இசிஸின் மறுபிறவி எனக் கூறிக்கொண்டாள். 

தனது முன்னோர்களை போல் அல்லாமல் மிகுந்த சிரத்தை  எடுத்து எகிப்து மொழியை கற்றுக் கொண்டாள். இதனால் எகிப்து மக்கள் அவளை ஒரு தேவதையாகவே கொண்டாடினர்.

வசீகரம், இளமை, புத்திக்கூர்மை, தேசப்பற்று, நினைத்தை சாதிக்கும் உறுதி. இவைதான் கிளியோபாட்ராவின் வெற்றி ரகசியம். 11  மொழிகள் சரளமாக பேசுவாள். பேச்சாற்றலும் நிறைந்தவள். அவளது பேச்சுக்கு யாரும் மறு பேச்சு பேசியதில்லை.

14 வயதாகும்போதே தந்தையுடன் சேர்ந்து ஆட்சியை பகிர்ந்துகொண்டாள். தந்தை இறந்த பின் 18-வது வயதில் அரசியானாள்.  எகிப்து அரச வழக்கப்படி அரசி மட்டும் தனியாக ஆட்சி நடத்த முடியாது. 

http://www.painting-history.com/imgs/clive_cleopatra.jpg

இதனால் அந்நாட்டு வழக்கப்படி தனது தம்பி 13ஆம் தாலமியை திருமணம் செய்து கொண்டாள். எகிப்தில் பெரும் படை கிடையாது. நைல் நதி தீரம் என்பதால் செல்வத்துக்கு பஞ்சமில்லை. இதனால் அண்டை நாடுகள் எகிப்து  மேல் ஒரு கண்ணாகவே இருந்தன.

எகிப்தையும் தனது ஆட்சியையும் பாதுகாக்க கிளியோபாட்ரா எடுத்த முடிவு யாரும் எதிர்பாராதது. அப்போது வலிமையுடன் இருந்த ரோமப் பேரரசர் ஜூலியஸ் சீசரை காதலிக்க முடிவு செய்தாள். முதல் சந்திப்பிலேயே ஜூலியஸ் சீசரை தன் காதல் வலையில்  வீழ்த்தினாள். அப்போது கிளியோபாட்ராவுக்கு 21 வயது, சீசருக்கு 54. விரைவில் சீசரின் மகனுக்கு கிளியோபாட்ரா தாயானாள்.

இந்நிலையில் மர்மமான முறையில் 13ஆம் தாலமி கொல்லப் பட்டார். கிளியோபாட்ராதான் கொன்றதாகக் கூறப் படுகிறது. அதன் பின்னர், காதலி கிளியோபாட்ராவை ரோமுக்கு அழைத்து வந்தார் சீசர். இது ரோமானியர்களுக்கு பிடிக்கவில்லை. இது சீசரின் உயிருக்கே ஆபத்தானது. அதிகாரப் போராட்டத்தில் சீசர் கொல்லப் பட்டார். ஆட்சியைப் பிடிப்பதில் சீசரின் வாரிசுகளுக்கும் தளபதிகளுக்கும் மோதல். இனியும் அங்கிருப்பது ஆபத்து என்பதை உணர்ந்தாள் கிளியோபாட்ரா. உடனடியாக எகிப்துக்கு தப்பினாள்.

சற்றும் தாமதிக்காமல் தொடர்ந்தது அவளது அடுத்த காதல் அத்தியாயம். தனது சாகசத்தால் ரோம பேரரசின் அதிகாரத்தைக் கைப்பற்றிய தளபதி மார்க் ஆன்டனியை திருமணம் செய்தாள். அவர்களுக்கு 3 குழந்தைகள் பிறந்தன. இந்த காலத்தில் தனது 2 சகோதரிகள் மற்றும் சகோதரனை கிளியோபாட்ரா கொன்று எகிப்து அரசுக்கு தன்னைத் தவிர வேறு வாரிசுகள் இல்லாமல் செய்து கொண் டாள்.

இந்நிலையில் கிளியோபாட்ராவுக்கு சீசரின் வாரிசான அகஸ்டஸ் சீசரால் ஆபத்து வந்தது. கடும் கோபத்தில் இருந்த அகஸ்டஸ் சீசர்  எகிப்து மீது போர் தொடுத்தார். இதில் பரிதாபமாகத் தோற்ற ஆன்டனி தற்கொலை செய்து கொண்டார். கிளியோபாட்ராவும் அவளது குழந்தைகளும் சிறை பிடிக்கப் பட்டனர்.

சிறை வாழ்க்கையை விரும்பாத கிளியோபாட்ரா எகிப்து பாலைவனத்தில் திரியும் கொடிய விஷம் கொண்ட நல்ல பாம்பை கடிக்க  வைத்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப் படுகிறது. 39 வயதில் அவளது சகாப்தம் முடிவுக்கு வந்தது.

வாழ்நாள் முழுவதும் தன் அழகிய தோற்றம் மீது அக்கறை செலுத்தி வந்த கிளியோபாட்ரா பாம்பு கடித்து இறந்திருக்க மாட்டாள்  என ஜெர்மன் வரலாற்று ஆராய்ச்சியாளர் கிரிஸ்டோபர் செபர் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளார். ‘‘பாம்பு கடித்தால் அடுத்த நொடி மரணம் நிகழ்வதில்லை.

சற்று நேர மரணப் போராட்டம் உண்டு. இதனால் உடல் அலங்கோலமாகி முகம் விகாரமாகிவிடும். கிளியோபாட்ரா அதை விரும்பவில்லை. அவள் வாழ்ந்த காலத்தில் எகிப்தில் மிகவும் பயங்கரமான விஷம் ஒன்று வழக்கத்தில் இருந்தது. விஷத் தாவரங்களின் கூட்டால் செய்யப்படும் கசாயம் அது. 


கிளியோபாட்ரா அதைத்தான் அருந்தினாள்’’ என்கிறார்  செபர். எகிப்து பழங்கால ஏடுகளில் இருந்து, இதற்கான ஆதாரங்களையும் காட்டுகிறார் செபர். உலகப் பேரழகி கிளியோபாட்ராவின்  வாழ்வு மட்டுமல்ல, மரணமும் புதிரும் மர்மமாகவே இருக்கிறது இன்று வரை.

இந்த கிளியோபாட்ராவுக்கு முன்னால் ஏழு கிளியோபாட்ராக்கள் வாழ்ந்து இருக்கிறார்கள். இவள் பிறக்கும் போதே எட்டாம் கிளியோபாட்ரா என்றே பெயர் சூட்டப்பட்டு பிறந்தவள். முன்பு வாழ்ந்த அந்த ஏழு பேருக்கும் கிடைக்காத பேரையும், புகழையும் இவள் மட்டும் எப்படிப் பெற்றாள். அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.

முதலாவது, இவளது புத்திசாலித்தனம். அடுத்த காரணம், அழகு. அழகு என்றால் ஐஸ்வர்யாராய் அழகல்ல. அதற்கெல்லாம் நூறுபடி மேலே என்கிறார்கள் எகிப்து சரித்திரவியலாளர்கள். வெறும் முப்பத்தொன்பது வயசு வரைக்கும் தான் அவள் வாழ்ந்திருக்கிறாள். ரொம்பச் சின்ன வயசிலேயே அரசியானவள் என்றாலும் ராஜாங்கக் காரியங்கள் தவிர பல்வேறு துறைகளில் அவளுக்குப் பெரிய ஆர்வங்கள் இருந்திருக்கின்றன.

உதாரணமாக, வான சாஸ்திரம், ஜோதிடம் போன்ற கலைகளைக் கல்வியாகவே கற்றவள் கிளியோபாட்ரா. அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பது, அவற்றின் வேதியியல், மருத்துவ குணங்களை ஆராய்வது போன்றவற்றில் அவளுக்கு அபாரமான திறமை உண்டு. 


தன் வாழ்நாளில் அவளே ஏழு விதமான வாசனைகளைக் கண்டுபிடித்ததாகவும் சொல்லுகிறார்கள். எது எப்படியோ ஓர் அழகு ஜீவனை அநியாயமாகக் கொன்று விட்டார்கள். என்ன செய்வது. விதியின் கைகள் எழுதியே செல்லும்.

17 டிசம்பர் 2014

அம்பேத்கர்



கல்வியின்மையால் அறிவை இழந்தோம்;
அறிவின்மையால் வளர்ச்சியை இழந்தோம்;
வளர்ச்சியின்மையால் சொத்தை இழந்தோம்; சொத்து இல்லாததால் சூத்திரர்களாக ஆனோம்!
-ஜோதிராவ் புலே (1890)

மகாராஷ்டிராவில் கொங்கன் மாவட்டத்தின் டபோலி எனும் சிறு கிராமம். அதிகாலைப் பனி விலகாத வயல்களுக்கு இடையே பாம்பு போல வளைந்து செல்லும் ஒற்றையடிப் பாதையில் ஒரு ஜோடிப் பிஞ்சுக் கால்கள் தாவிக் குதித்து ஓடுகின்றன. பின்னாலேயே அவனது தந்தை. அன்றுதான் அந்தச் சிறுவனுக்குப் பள்ளியின் முதல் நாள். அதனாலேயே, தந்தை மகன் இருவருக்கும் கரை காணாத உற்சாகம்.

ஆனால், பள்ளியில் சேர்ந்த அடுத்த நொடியிலேயே அந்தச் சிறுவனின் உற்சாகம் வடிந்து, வகுப்பறையைவிட்டு வெளியேறியது. காரணம், சக மாணவர்களுடன் சரி சமமாக உட்கார அவனுக்கு அனுமதி மறுக்கப் பட்டது. அவன் மகார் இனத்தைச் சேர்ந்தவன் என்பதுதான் காரணம். மீறி அந்தச் சிறுவன் தொடர்ந்து படிக்க விரும்பினால், வகுப்புக்கு வரும் போது புத்தகப் பையுடன் ஒரு கோணிச் சாக்கையும் கொண்டு வரும்படி வேண்டா வெறுப்பாக உத்தரவிட்டார் ஆசிரியர்.


அன்று, அந்தச் சிறுவனின் மனதில் ஆயிரம் கேள்விகள். ‘நாம் தீண்டத் தகாதவர்கள். நாம் சார்ந்திருக்கும் இந்து மதம் நம்மை அப்படித்தான் மற்றவர்களிடம் இருந்து பிரித்து ஒதுக்கி இருக்கிறது’ எனத் தன் மகனுக்கு பிற்பாடு விளக்கினார் அவனது தந்தை. அன்று இரவு, அந்தச் சிறுவனின் கன்னங்களில் நீர் வழிந்தது.

மறுநாள், ஆசிரியர் மற்றும் இதர மாணவர்களின் பார்வை வாசலை நோக்கித் திரும்பியது. அங்கே, அந்தச் சிறுவன் கையில் கோணிச்சாக்குடன் நின்று இருந்தான்.



1947… ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு அந்தச் சிறுவன் கோட் சூட் அணிந்த மனிதனாக வந்து நின்றான். ஒட்டுமொத்த இந்தியாவே அவனைத் திரும்பிப் பார்த்தது. இப்போது அவன் கையில் கோணிச்சாக்கு இல்லை… மாறாக, கோப்புகள் இருந்தன. இந்தியாவின் எதிர்காலத்தையே தீர்மானித்த இந்திய அரசியல் சாசனச் சட்டம் அந்தக் கோப்பில் இருந்தது.

தாழ்த்தப் பட்டவர்களின் மீதான அடிமைத் தளையைக் கல்வி எனும் வெடி வைத்துத் தகர்த்த வீரன்.  இந்து மதத்தின் 2,500 வருட மனக் கசடான மனு எனும் அதர்மத்தை விரட்டி அடித்த அறிவுச் சுரங்கம். இந்தியாவின் விடுதலைக்காகத் தனது காலத்தை விதையாக்கிப் போராடி வெற்றித் திருமகனாக வாழ்ந்த தியாகி…  டாக்டர் பி. ஆர். அம்பேத்கர்.

அம்பேத்கரின் வாழ்க்கை தவிர்க்கவே முடியாமல் இந்தியாவின் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து தொடங்குகிறது.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிற்குள் நாடோடிகளாக வந்த புதிய இனத்தவரான ஆரியர்கள், பொருளீட்டும் வாழ்வில் மேம்பட்டவர்களாக இருந்தனர். 

இதனால் இந்தியாவின் பூர்வக் குடிகளை அவர்களால் சுலபமாகச் சமாளிக்க முடிந்தது. தங்களை எதிர்ப்பிலிருந்து காத்துக் கொள்ளும் பொருட்டாக, சமூகத்தை நான்காகப் பிரித்தனர். 

பிராமணர், சத்ரியர், வைசியர், சூத்திரர் என்பதாக அதிகாரத்தின் படிகளை அவர்களே அமைத்தனர். அதற்கான காரணங்களை வடிவமைக்க, கடவுளும் மதமும் உருவானது. அதனை நம்ப வைக்க வேதங்களும், புராணங்களும், கதைகளும் உருவாக்கப் பட்டன. 

சடங்குகளும் சம்பிரதாயங்களும் இறுக இறுக, அதிகாரம் சூத்திரர்களை மேலும் மேலும் ஒதுக்கிக் கொண்டே போனது.

உலகில் எந்த நாட்டிலும், ஒருவன் எத்தனை கீழான குடியில் பிறந்தாலும், வளர்ந்த பிறகு அவன் தன் நிலையை மேம்படுத்திக் கொள்வது அவனது அறிவையும் நடத்தையையும் பொறுத்தே அமைகிறது. 

ஆனால், இந்தியாவில் மட்டும் கருவில் பிறக்கும் போதே அது தீர்மானிக்கப் பட்டு, வாழ்வில் எத்தனைதான் உயர்ந்தாலும் தாழ்ந்தவனாக கருதப்படும் இழிநிலை கட்டமைக்கப் பட்டது. 

இதனால், அவர்களின் உரிமைகள் பிடுங்கப் பட்டன; அறிவு பிடுங்கப் பட்டது; அவர்களுக்கான வாழ்நிலம் பிடுங்கப் பட்டது; ஆடைகள் பிடுங்கப் பட்டன; சுதந்திரமும் பிடுங்கப் பட்டு அடிமைகளாக மாற்றப் பட்டனர்.

இந்த இழிநிலையிலிருந்து தன்னையும் தனது சமூகத்தையும் விடுவிக்கத் தோன்றிய விடிவெள்ளியாக, டாக்டர் அம்பேத்கர், ஏப்ரல் 14, 1891ம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் மாஹ¨ எனும் சிற்றூரில் பிறந்தார். 

அவரது தந்தையார் ராம்ஜி சக்பால். மகாராஷ்டிரத்தில் கொங்கன் மாவட்டத்தைச் சேர்ந்த அம்பவடே எனும் சிறு கிராமம்தான் அவரது பூர்விகம். ராம்ஜியின் வம்சாவளியினர் மகாராஷ்டிரத்தின் பூர்வகுடிகளான மகார் இனத்தைச் சேர்ந்தவர்கள். 

துவக்க காலத்தில் இந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இங்கு வசித்த காரணத்தால்தான் மகா(ர்)ராஷ்டிரம் என்ற பெயர் இந்த நிலப்பரப்புக்கு உருவானது.

ஓங்குதாங்கான மகார்களை அப்போது இந்தியாவை ஆட்சி செய்த கிழக்கிந்திய கம்பெனி, தன் படைவீரர்களாகச் சேர்த்துக்கொண்டது. அம்பேத்கரின் தந்தை ராம்ஜி சக்பாலும் அந்தப் படையில் சுபேதாராகப் பணிபுரிந்துவந்தார். 

இதனாலேயே, ராம்ஜி சக்பாலுக்கு ஓரளவு வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்த பீமா என்ற பெண்ணைத் திருமணம் செய்ய முடிந்தது. ராம்ஜி சக்பாலுக்குத் தனது மனைவியின் மேல் கொள்ளைப் பிரியம். வரிசையாகப் பிறந்தன பதினாலு குழந்தைகள். 

அதில், பதினான்காவதாகப் பிறந்தது ஓர் ஆண் குழந்தை. குழந்தைக்கு என்ன பெயர் சூட்டுவது என யோசித்த ராம்ஜிக்கு, சட்டெனத் தோன்றியது மகாபாரத பீமனின் உருவம். அடிப்படையில், தீவிர பக்திமானான அவர், ஒரு குத்துச்சண்டை பிரியரும்கூட. 

 அதன் காரணமாக, தனது மகனும் எவருமே அசைக்க முடியாத வீரனாக வருங்காலத்தில் வளர வேண்டும் என்ற எண்ணத்தில் பீம் என அவனுக்குப் பெயர் சூட்டினார்.

பீமுக்கு இரண்டு வயதானபோது, சுபேதார் ராம்ஜி சக்பாலின் வாழ்வில் ஒரு திடீர் சோதனை. இனி மகார்களைப் படைப் பிரிவில் சேர்க்கக் கூடாது என பிரிட்டிஷ் அரசாங்கம் புதிய கட்டுப்பாட்டை விதித்ததால், ராம்ஜியின் வேலை பறிபோனது. 

மீண்டும் தனது சொந்த ஊரான மகாராஷ்டிரத்தின் டபோலிக்கே குடும்பத்துடன் இடம்பெயர்ந்த ராம்ஜிக்கு அந்த இடமும் கசந்தது. காரணம், அங்கும் தலைவிரித்தாடிய சாதியக் கொடுமை. 

தீண்டாமை எனும் பேய் அந்த ஊரையே நோய்க்கூறாகப் பற்றியிருந்தது. தனது பிள்ளைகள் பள்ளி சென்று முறையான கல்வியைப் பெறுவதற்குக்கூட அங்கிருந்த ஆசிரியர்களும் இதர சாதிகளைச் சேர்ந்த மக்களும் தடையாக இருப்பதைக் கண்டு ராம்ஜி வேதனைகொண்டார். 

தன் பிள்ளைகள் தினம்தினம் கோணி சுமந்து பள்ளிக்குச் செல்ல வேண்டிய அவமானத்தை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

குழந்தைகளின் பிஞ்சு இதயங்களில் தீண்டாமையின் வேதனை தீண்டிவிடக் கூடாது என உணர்ந்த ராம்ஜி, சிறிது காலத்திலேயே தனது குடும்பத்தை சதாரா நகரத்துக்கு மாற்றிக்கொண்டார். 

சதாராவுக்கு அவர்கள் குடி பெயர்ந்ததுமே, குடும்பத்தில் இரண்டு முக்கிய நிகழ்வுகள் நடந்தேறின. ஒன்று, ராம்ஜி சக்பாலின் மனைவி பீமாபாயின் திடீர் மறைவு. ராம்ஜியால் அந்தத் துக்கத்திலிருந்து அத்தனை சுலபமாக வெளிவர முடியவில்லை. 

இன்னொன்று, அதற்கு ஆறுதலான விஷயம். அது, ராம்ஜிக்குக் கிடைத்த ஸ்டோர் கீப்பர் வேலை. இனி, தனது குழந்தைகளுக்குக் கௌரவமான படிப்பைத் தர முடியும் எனும் நம்பிக்கை வந்தது.

அங்கிருந்த பள்ளி ஒன்றில் ஆங்கில வகுப்பில் தனது மகனைச் சேர்த்தார் ராம்ஜி. 

என்னதான் இடம் மாறினாலும் சாதி துவேஷம் அங்கும் அதிகம் இருந்தது. தனது பிள்ளைகளுக்கு இங்கும் அந்த வேதனையின் நிழல் படிந்துவிடக் கூடாது என நினைத்தார் ராம்ஜி. அவரது எண்ணத்தை தலைகீழாக மாற்றுவதற்கென்றே அன்று வந்தது ஒரு மழை!