ராமசாமி கருப்பையா ramasamy_karuppiah@yahoo.com
கே: Facebook
கிற்கு ஆஸ்கார் விருது விருது கிடைத்திருப்பதாகக் கேள்விபட்டேன். இது எந்த
அளவிற்கு உண்மை. நான் மெக்சிஸ் அகன்ற அலைவரிசையைப் பயன் படுத்துகிறேன். மிகவும் மெதுவாக வேலை செய்கிறது. எப்படி
வேகமாக இயங்கச் செய்வது. நான் பயர்பாக்ஸ் உலவியைப் பயன்படுத்துகிறேன்.
ப: பேஸ்புக் என்பது ஒரு சமூகவலைத்தளம். அதற்கு ஆஸ்கார்
விருது கிடைக்கவில்லை. பேஸ்புக்கை வைத்து
ஒரு படம் எடுத்தார்கள். படத்தின் பெயர் The Social Network. அதற்கு ஆஸ்கார் விருது கிடைத்தது.
ஆஸ்கார் விருது என்பது உலகின் சிறந்த ஆங்கில அனைத்துலகத் திரைப்படங்களுக்கு
வழங்கப்படும் ஓர் உயரிய அங்கீகாரம் ஆகும்.
’சோசியல் நெட்வோர்க்’ படத்திற்கு 8 ஆஸ்கார் விருதுகள் பரிந்துரைக்கப்பட்டன. அவற்றில் 3 விருதுகள்
கிடைத்தன. 2009ஆம் ஆண்டு பென் மெஸ்ரிச் என்பவர் The Accidental Billionaires எனும் தலைப்பில் ஒரு நாவலை எழுதினார்.
காதலியால் வஞ்சிக்கப்பட்ட ஓர் இளைஞன் இணையத்தில் ஒரு சமூகத் தளத்தை
உருவாக்குகிறான். அதில் தன் காதலியின் படங்களைப் பதிவேற்றம் செய்கிறான்.
பல்கலைக்கழக மாணவர்களிடையே அந்தத் தளம் பிரபலம் அடைகிறது. காலப்போக்கில் அந்த
இளைஞன் கோடீஸ்வரனாகிறான்.
120 மில்லியன் ரிங்கிட் பட்ஜெட்டில் ’சோசியல்
நெட்வோர்க்’ படம் எடுக்கப்பட்டது. ஆனால், யாரும்
எதிர்பார்க்காத வகையில் தயாரிப்பாளர்களுக்கு 675 மில்லியனை வசூலித்துக் கொடுத்தது.
படத்தைப் பார்த்த ’பேஸ்புக்’கின் நிறுவனர் மார்க் சுக்கர்பர்க் கூட அந்தப் படம் இந்த
அளவுக்கு வெற்றி பெறும் என்று நினைக்கவில்லையாம்.
தன்னைப் பற்றி தவறுதலான கருத்துகளைச் சொல்லி இருக்கிறார்கள் என்று
வருத்தப்பட்டுக் கொண்டார்.
பேஸ்புக் மூலமாக 54,560 மில்லியன் ரிங்கிட் சொத்திற்கு அதிபதியாக இருக்கிறார் Mark
Zuckerberg எனும் 27 வயது இளைஞர். சுக்கர்பர்க்கிற்கு
சுக்கிரன் சுழற்றி சுழற்றி அடிக்கிறது என்று சொல்லலாம். தப்பே இல்லை. உங்களுடைய
இன்னொரு கேள்விக்கு அடுத்த வாரம் பதில் சொல்கிறேன்.
மு.பால்வரதன், செங்கன் ஜெயசீலன், ஆர்.சதீஷ்கனி, சபா.நிர்மலன்
மலாயாப் பல்கலைக்கழக மாணவர்கள்
மலாயாப் பல்கலைக்கழக மாணவர்கள்
கே: சென்ற வாரக் கேள்வி பதிலில் Open Source
Project என்பதைத் ’திறவெளி மூலப் பணி’ என்று நீங்கள் தமிழ்ப்படுத்தி உள்ளீர்கள். அதை இன்னும்
அழகாக,எளிமையாகத் தமிழ்ப்படுத்த
முடியும் என்பது எங்களுடைய நம்பிக்கை.
ப:தங்கள்
கருத்திற்கு நன்றி. Open Source என்றால் யார் வேண்டுமானாலும், எப்படி
வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளக் கூடியது என்று பொருள்படும். அதாவது
கட்டுப்பாடு இல்லாத மூலம் என்று பொருள்.
அதைத் திறவூற்று, திறமூலம் அல்லது திறவெளி மூலம் என்று தமிழ்ப்படுத்தலாம். Open Source
Project என்பதைத்
’திறவெளி
மூலப்பணி’ என்று நான் தமிழ்ப்படுத்தினேன். அதை மேலும் எளிமை
படுத்தலாம் என்று சொல்கிறீர்கள். நீங்கள் பல்கலைக்கழக மாணவர்கள். இவ்வளவு பரிவு
காட்டுவது உண்மையிலேயே பெருமை அளிக்கிறது.
கணினி உலகில் புதிய தமிழ்ச் சொற்களை உருவாக்கும் போது
மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நாம் தமிழ்ப்படுத்தும் ஒரு சொல்லை உலகில் உள்ள
எல்லாத் தமிழர்களும் எல்லாக் காலத்திற்கும் பயன்படுத்தப் போகிறார்கள். அதை முதலில்
மனதில் பயபக்தியுடன் நிலைபடுத்திக் கொள்ள வேண்டும்.
’ஒரு சொல்லை உருவாக்கிக்
கொடுக்கிறோம். நாம் இறந்து போன பிறகு, வருகின்ற நம்முடைய சந்ததியினர் இன்னும் பலப்பல
ஆயிரம் ஆண்டுகளுக்கு அந்தச் சொல்லைப் பயன்படுத்தப் போகிறார்கள்’ என்கிற ஓர் உயிர் அச்சம்
உடலோடு ஒட்டிக் கொள்ள வேண்டும். மொழிக்கு முதல் மரியாதை. அப்புறம்தான் மனிதனுக்கு
மரியாதை.
தமிழ்ப்படுத்தும் போது ஒரு சின்ன இழைத் தவறும்
நடந்துவிடக் கூடாது. ஆகவே, ஒரு சொல்லை உருவாக்கும் கட்டத்தில்
அந்தச் சொல்லின் மூலக் கூறுகள், ஒலி அசைவுகள், சொல் வேர்த்தன்மை, பிறமொழி
ஊடுருவல், பிறமொழிச் சாரல், புவிசார் வழக்கு, பயன்பாடு இலகுகள் போன்ற பல கூறுகளை
நன்கு அலசிப் பார்க்க வேண்டும். Open Source என்பதற்கு திறவெளிமூலம் எனும்
சொல்லே சரியாக அமைகின்றது என்பது என்னுடைய கருத்து.
சில தமிழாக்கங்கள்:
function = செயலாற்றி
open source = திறமூலம், திறந்த வெளிமூலம்
open base = திறந்த அடித்தளம்
open walk = திறந்த நடை
open end = திறந்த முனை
open university = திறந்தவெளி பல்கலைக்கழகம்
source document = மூல ஆவணம்
open source = திறமூலம், திறந்த வெளிமூலம்
open base = திறந்த அடித்தளம்
open walk = திறந்த நடை
open end = திறந்த முனை
open university = திறந்தவெளி பல்கலைக்கழகம்
source document = மூல ஆவணம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக