20 ஜூன் 2014

சிடி-ரோம் டிரைவ் - குறும் தட்டகம்

 (மலேசிய நண்பன் 27.03.2011 ஞாயிறு பதிப்பில் வெளியிடப் பட்டது)

சுந்தரராஜன் பெருமாள், ஜாலான் காசிங், பெட்டாலிங் ஜெயா, சிலாங்கூர்.

கே: சிடி-ரோம் டிரைவின் வேகத்தை 20X, 48X, 52X என்று சொல்கிறார்கள். அதில் X என்றால் என்ன?
ப: சிடி-ரோம் என்றால் குறும் தட்டு. சிடி-ரோம் டிரைவ் என்றால் குறும் தட்டகம். முதன்முதலில் வெளிவந்த குறும் தட்டகத்தின் வேகம் 150 KBPS. இந்தக் குறும் தட்டகங்கள் 1990 களில் வெளிவந்தவை. விலையும் அதிகம்.




KBPS என்பதன் விரிவாக்கம் Kilo Bytes Per Second. அப்படி என்றால் ஒரு விநாடியில் எத்தனை ‘பைட்ஸ்’ தகவல்கள் பரிமாறப் படுகின்றன என்பதை அது குறிக்கிறது. ஆக, ஆரம்பத்தில் வெளிவந்த குறும் தட்டகத்தின் வேகம் 150 KBPS ஆக இருந்தது.

பின்னர், வேகம் கூடிய தட்டகங்கள் வெளிவந்தன. புதிய குறும் தட்டகங்களின் வேகத்தை எடுத்துச் சொல்ல பழைய குறும் தட்டகங்களின் வேகத்தை அடிப்படையாக எடுத்துக் கொண்டார்கள். ஆகவே 20X என்றால் 20 X 150 =3000 கேபிபிஎஸ் என்று பொருள்.

இப்போது 80X குறும் தட்டகங்களும் வெளிவந்து விட்டன. பழைய 2X குறும் தட்டின் விலை அப்போதைய விலையில் நான்கு ரிங்கிட். இப்போதைய குறும் தட்டின் விலை வெறும் நாற்பது காசுகள் தான். கணினி உலகம் எங்கோ போய்க் கொண்டு இருக்கிறது. விரட்டிப் பிடியுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக