மாம்
மணிகண்டன், ஜெராம் பாடாங், பகாவ், நெகிரி செம்பிலான்
கே:
கணினியில் நிரலிகளை நிறுவும் போது, நாம் கொடுக்கும் Serial
Number-களை, இன்ஸ்டால் செய்வதோடு மறந்து விடுகிறோம்.
அவை மீண்டும் தேவைப் படும் போது இணையத்தில் அல்லது நண்பர்களிடம் தேடிக் கொண்டு இருப்போம்.
இந்தப் பிரச்சினையைத் தவிர்க்க ஏதாவது வழி இருக்கிறதா?
ப: நீங்கள் என்ன கேட்க வருகிறீர்கள்
என்பது புரிகிறது. கணினிக்குள் ஏதாவது ஒரு நிரலியை நிறுவுகிறோம். அதாவது இன்ஸ்டால்
(Install) செய்கிறோம். அந்தச் சமயத்தில், அந்த நிரலி
Serial Numbers எனும் தொடர் எண்களைக் கேட்கும். அதையும்
கணினிக்குள் பதித்து விடுகிறோம். சரி.
அதோடு அந்த நிரலியின் தொடர் எண்களைச் சுத்தமாக
மறந்து விடுகிறோம். ஏதோ ஒரு காரணத்திற்காக, அதே நிரலியை மறுபடியும் பதிப்பு செய்ய வேண்டி
இருக்கிறது. அந்தத் தொடர் எண்கள் நினைவில் இருப்பது இல்லை.
மறந்து போன அந்த மாதிரியான
தொடர் எண்களை, கணினியில் இருந்து மீட்டு எடுக்கும் நிரலி எதுவும் இருக்கிறதா என்று
கேட்க வருகிறீர்கள். அப்படித் தானே. அந்த மாதிரி இலவச நிரலிகள் இருக்கின்றன. இருந்தாலும்,
சீரியல் நம்பரைக் கண்டுபிடிக்க உதவும் மிகச் சிறந்த நிரலி ஒன்று இருக்கிறது என்றால்
அது Belarc Advisor எனும் நிரலிதான்.
இது ஓர் இலவச நிரலி.
உங்களுடைய கணினியில் நீங்கள்
பயன்படுத்தும் எல்லா மென்பொருட்களின் சீரியல் எண்களையும் அது கண்டுபிடித்து தரும்.
மிக அற்புதமான நிரலி. பயன்படுத்திப் பாருங்கள். எந்தப் பிரச்சினையும் வராது. கண்டிப்பாக
ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். பதிவிறக்கம் செய்ய வேண்டிய இடம்: http://www.belarc.com/free_download.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக