வரலாற்று பேரழகிகள் பட்டியலில் இன்றும் முதலிடத்தில் இருப்பவர் கிளியோபாட்ரா. கழுதைப் பாலில் குளிப்பாள். உடல் மினுமினுப்புக்காக கடல் முத்துக்களை காடியில் (vinegar) கரைத்துக் குடிப்பாள். அவளைப் பற்றி பலப்பல கதைகள். அவள் பேரழகி மட்டும் அல்ல. ஜூலியஸ் சீசர், மார்க் ஆன் டனி போன்ற மாவீரர்களின் காதல் மனைவியாகவும் வாழ்ந்தவள்.
கிரேக்கம், ரோம், எகிப்து என பல நாடுகளின் வரலாற்றையே மாற்றி அமைத்தவள். போராட்டங்களும், மர்மங்களும் நிரம்பிய அவளது வரலாற்றை இன்றும் பல மேற்கத்திய பல்கலைக்கழகங்கள் ஆராய்ந்து கொண்டு இருக்கின்றன. நாமும் கொஞ்சம் ஆராய்ந்து பார்ப்போம்.
எகிப்து பேரரசியாக இருந்தாலும் அவள் கிரேக்க பேரரசர் அலெக்சாண்டரின் தளபதி தாலமியின் வம்சாவளியில் வந்தவள். தாலமி என்பவர்கள் தங்களை கிரேக்கர்கள் எனக் கூறுவதில் பெருமை கொண்டிருந்தனர். ஆனால் 12ஆம் தாலமியின் மகளாக பிறந்த கிளியோபாட்ரா, தன்னை எகிப்து தேவதை இசிஸின் மறுபிறவி எனக் கூறிக்கொண்டாள்.
தனது முன்னோர்களை போல் அல்லாமல் மிகுந்த சிரத்தை எடுத்து எகிப்து மொழியை கற்றுக் கொண்டாள். இதனால் எகிப்து மக்கள் அவளை ஒரு தேவதையாகவே கொண்டாடினர்.
வசீகரம், இளமை, புத்திக்கூர்மை, தேசப்பற்று, நினைத்தை சாதிக்கும் உறுதி. இவைதான் கிளியோபாட்ராவின் வெற்றி ரகசியம். 11 மொழிகள் சரளமாக பேசுவாள். பேச்சாற்றலும் நிறைந்தவள். அவளது பேச்சுக்கு யாரும் மறு பேச்சு பேசியதில்லை.
14 வயதாகும்போதே தந்தையுடன் சேர்ந்து ஆட்சியை பகிர்ந்துகொண்டாள். தந்தை இறந்த பின் 18-வது வயதில் அரசியானாள். எகிப்து அரச வழக்கப்படி அரசி மட்டும் தனியாக ஆட்சி நடத்த முடியாது.
இதனால் அந்நாட்டு வழக்கப்படி தனது தம்பி 13ஆம் தாலமியை திருமணம் செய்து கொண்டாள். எகிப்தில் பெரும் படை கிடையாது. நைல் நதி தீரம் என்பதால் செல்வத்துக்கு பஞ்சமில்லை. இதனால் அண்டை நாடுகள் எகிப்து மேல் ஒரு கண்ணாகவே இருந்தன.
எகிப்தையும் தனது ஆட்சியையும் பாதுகாக்க கிளியோபாட்ரா எடுத்த முடிவு யாரும் எதிர்பாராதது. அப்போது வலிமையுடன் இருந்த ரோமப் பேரரசர் ஜூலியஸ் சீசரை காதலிக்க முடிவு செய்தாள். முதல் சந்திப்பிலேயே ஜூலியஸ் சீசரை தன் காதல் வலையில் வீழ்த்தினாள். அப்போது கிளியோபாட்ராவுக்கு 21 வயது, சீசருக்கு 54. விரைவில் சீசரின் மகனுக்கு கிளியோபாட்ரா தாயானாள்.
இந்நிலையில் மர்மமான முறையில் 13ஆம் தாலமி கொல்லப் பட்டார். கிளியோபாட்ராதான் கொன்றதாகக் கூறப் படுகிறது. அதன் பின்னர், காதலி கிளியோபாட்ராவை ரோமுக்கு அழைத்து வந்தார் சீசர். இது ரோமானியர்களுக்கு பிடிக்கவில்லை. இது சீசரின் உயிருக்கே ஆபத்தானது. அதிகாரப் போராட்டத்தில் சீசர் கொல்லப் பட்டார். ஆட்சியைப் பிடிப்பதில் சீசரின் வாரிசுகளுக்கும் தளபதிகளுக்கும் மோதல். இனியும் அங்கிருப்பது ஆபத்து என்பதை உணர்ந்தாள் கிளியோபாட்ரா. உடனடியாக எகிப்துக்கு தப்பினாள்.
சற்றும் தாமதிக்காமல் தொடர்ந்தது அவளது அடுத்த காதல் அத்தியாயம். தனது சாகசத்தால் ரோம பேரரசின் அதிகாரத்தைக் கைப்பற்றிய தளபதி மார்க் ஆன்டனியை திருமணம் செய்தாள். அவர்களுக்கு 3 குழந்தைகள் பிறந்தன. இந்த காலத்தில் தனது 2 சகோதரிகள் மற்றும் சகோதரனை கிளியோபாட்ரா கொன்று எகிப்து அரசுக்கு தன்னைத் தவிர வேறு வாரிசுகள் இல்லாமல் செய்து கொண் டாள்.
இந்நிலையில் கிளியோபாட்ராவுக்கு சீசரின் வாரிசான அகஸ்டஸ் சீசரால் ஆபத்து வந்தது. கடும் கோபத்தில் இருந்த அகஸ்டஸ் சீசர் எகிப்து மீது போர் தொடுத்தார். இதில் பரிதாபமாகத் தோற்ற ஆன்டனி தற்கொலை செய்து கொண்டார். கிளியோபாட்ராவும் அவளது குழந்தைகளும் சிறை பிடிக்கப் பட்டனர்.
சிறை வாழ்க்கையை விரும்பாத கிளியோபாட்ரா எகிப்து பாலைவனத்தில் திரியும் கொடிய விஷம் கொண்ட நல்ல பாம்பை கடிக்க வைத்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப் படுகிறது. 39 வயதில் அவளது சகாப்தம் முடிவுக்கு வந்தது.
வாழ்நாள் முழுவதும் தன் அழகிய தோற்றம் மீது அக்கறை செலுத்தி வந்த கிளியோபாட்ரா பாம்பு கடித்து இறந்திருக்க மாட்டாள் என ஜெர்மன் வரலாற்று ஆராய்ச்சியாளர் கிரிஸ்டோபர் செபர் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளார். ‘‘பாம்பு கடித்தால் அடுத்த நொடி மரணம் நிகழ்வதில்லை.
சற்று நேர மரணப் போராட்டம் உண்டு. இதனால் உடல் அலங்கோலமாகி முகம் விகாரமாகிவிடும். கிளியோபாட்ரா அதை விரும்பவில்லை. அவள் வாழ்ந்த காலத்தில் எகிப்தில் மிகவும் பயங்கரமான விஷம் ஒன்று வழக்கத்தில் இருந்தது. விஷத் தாவரங்களின் கூட்டால் செய்யப்படும் கசாயம் அது.
கிளியோபாட்ரா அதைத்தான் அருந்தினாள்’’ என்கிறார் செபர். எகிப்து பழங்கால ஏடுகளில் இருந்து, இதற்கான ஆதாரங்களையும் காட்டுகிறார் செபர். உலகப் பேரழகி கிளியோபாட்ராவின் வாழ்வு மட்டுமல்ல, மரணமும் புதிரும் மர்மமாகவே இருக்கிறது இன்று வரை.
இந்த கிளியோபாட்ராவுக்கு முன்னால் ஏழு கிளியோபாட்ராக்கள் வாழ்ந்து இருக்கிறார்கள். இவள் பிறக்கும் போதே எட்டாம் கிளியோபாட்ரா என்றே பெயர் சூட்டப்பட்டு பிறந்தவள். முன்பு வாழ்ந்த அந்த ஏழு பேருக்கும் கிடைக்காத பேரையும், புகழையும் இவள் மட்டும் எப்படிப் பெற்றாள். அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.
முதலாவது, இவளது புத்திசாலித்தனம். அடுத்த காரணம், அழகு. அழகு என்றால் ஐஸ்வர்யாராய் அழகல்ல. அதற்கெல்லாம் நூறுபடி மேலே என்கிறார்கள் எகிப்து சரித்திரவியலாளர்கள். வெறும் முப்பத்தொன்பது வயசு வரைக்கும் தான் அவள் வாழ்ந்திருக்கிறாள். ரொம்பச் சின்ன வயசிலேயே அரசியானவள் என்றாலும் ராஜாங்கக் காரியங்கள் தவிர பல்வேறு துறைகளில் அவளுக்குப் பெரிய ஆர்வங்கள் இருந்திருக்கின்றன.
உதாரணமாக, வான சாஸ்திரம், ஜோதிடம் போன்ற கலைகளைக் கல்வியாகவே கற்றவள் கிளியோபாட்ரா. அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பது, அவற்றின் வேதியியல், மருத்துவ குணங்களை ஆராய்வது போன்றவற்றில் அவளுக்கு அபாரமான திறமை உண்டு.
தன் வாழ்நாளில் அவளே ஏழு விதமான வாசனைகளைக் கண்டுபிடித்ததாகவும் சொல்லுகிறார்கள். எது எப்படியோ ஓர் அழகு ஜீவனை அநியாயமாகக் கொன்று விட்டார்கள். என்ன செய்வது. விதியின் கைகள் எழுதியே செல்லும்.
கிரேக்கம், ரோம், எகிப்து என பல நாடுகளின் வரலாற்றையே மாற்றி அமைத்தவள். போராட்டங்களும், மர்மங்களும் நிரம்பிய அவளது வரலாற்றை இன்றும் பல மேற்கத்திய பல்கலைக்கழகங்கள் ஆராய்ந்து கொண்டு இருக்கின்றன. நாமும் கொஞ்சம் ஆராய்ந்து பார்ப்போம்.
வரலாற்று பேரழகிகள் பட்டியலில் இன்றும் முதலிடத்தில் இருப்பவர் கிளியோபாட்ரா. கி.மு. 69&30 காலத்தில் வாழ்ந்தவள். பாலில் குளிப்பாள்.. கண்களில் பல வண்ண மைகளால் அலங்காரம் செய்துகொள்வாள்.. உடல் மினுமினுப்புக்காக முத்துக்களை வினிகரில் கரைத்து அருந்துவாள்.. என பல கதைகள் அவளை பற்றி உலவுகின்றன. அவள் பேரழகி மட்டுமல்ல ஜூலியஸ் சீசர், மார்க் ஆன் டனி போன்ற மாவீரர்களின் காதல் மனைவியாகவும் இருந்தாள். கிரேக்கம், ரோம், எகிப்து என பல நாடுகளின் வரலாறே அவளால் மாறியது. போராட்டங்களும், மர்மங்களும் நிரம்பிய அவளது வரலாற்றை இன்றும் பல மேற்கத்திய பல்கலைக்கழகங்கள் ஆராய்ந்து கொண்டிருக்கின்றன. - See more at: http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=12#sthash.cVjskS9z.dpuf

வரலாற்று பேரழகிகளின் பட்டியலில் இன்றுவரை, முதல் இடத்தில் இருப்பவர் கிளியோபாட்ரா. மறைக்க முடியாத மறுக்க முடியாத ஓர் அழகு ஓவியம். கிளியோபாட்ராவின் காலம் கி.மு.69-லிருந்து 30 வரை. வரலாற்றுப் புத்தகங்கள் சொல்லுகின்றன. எகிப்தை ஆண்ட பன்னிரெண்டாம் டாலமி என்கிற மன்னனுக்கும் இஸிஸ் என்கிற அரசிக்கும் பிறந்தவள் கிளியோபாட்ரா. எகிப்து பேரரசியாக இருந்தாலும் அவள் கிரேக்க பேரரசர் அலெக்சாண்டரின் தளபதி தாலமியின் வம்சாவளியில் வந்தவள். தாலமி என்பவர்கள் தங்களை கிரேக்கர்கள் எனக் கூறுவதில் பெருமை கொண்டிருந்தனர். ஆனால் 12ஆம் தாலமியின் மகளாக பிறந்த கிளியோபாட்ரா, தன்னை எகிப்து தேவதை இசிஸின் மறுபிறவி எனக் கூறிக்கொண்டாள்.
தனது முன்னோர்களை போல் அல்லாமல் மிகுந்த சிரத்தை எடுத்து எகிப்து மொழியை கற்றுக் கொண்டாள். இதனால் எகிப்து மக்கள் அவளை ஒரு தேவதையாகவே கொண்டாடினர்.
வசீகரம், இளமை, புத்திக்கூர்மை, தேசப்பற்று, நினைத்தை சாதிக்கும் உறுதி. இவைதான் கிளியோபாட்ராவின் வெற்றி ரகசியம். 11 மொழிகள் சரளமாக பேசுவாள். பேச்சாற்றலும் நிறைந்தவள். அவளது பேச்சுக்கு யாரும் மறு பேச்சு பேசியதில்லை.
14 வயதாகும்போதே தந்தையுடன் சேர்ந்து ஆட்சியை பகிர்ந்துகொண்டாள். தந்தை இறந்த பின் 18-வது வயதில் அரசியானாள். எகிப்து அரச வழக்கப்படி அரசி மட்டும் தனியாக ஆட்சி நடத்த முடியாது.
இதனால் அந்நாட்டு வழக்கப்படி தனது தம்பி 13ஆம் தாலமியை திருமணம் செய்து கொண்டாள். எகிப்தில் பெரும் படை கிடையாது. நைல் நதி தீரம் என்பதால் செல்வத்துக்கு பஞ்சமில்லை. இதனால் அண்டை நாடுகள் எகிப்து மேல் ஒரு கண்ணாகவே இருந்தன.
எகிப்தையும் தனது ஆட்சியையும் பாதுகாக்க கிளியோபாட்ரா எடுத்த முடிவு யாரும் எதிர்பாராதது. அப்போது வலிமையுடன் இருந்த ரோமப் பேரரசர் ஜூலியஸ் சீசரை காதலிக்க முடிவு செய்தாள். முதல் சந்திப்பிலேயே ஜூலியஸ் சீசரை தன் காதல் வலையில் வீழ்த்தினாள். அப்போது கிளியோபாட்ராவுக்கு 21 வயது, சீசருக்கு 54. விரைவில் சீசரின் மகனுக்கு கிளியோபாட்ரா தாயானாள்.
இந்நிலையில் மர்மமான முறையில் 13ஆம் தாலமி கொல்லப் பட்டார். கிளியோபாட்ராதான் கொன்றதாகக் கூறப் படுகிறது. அதன் பின்னர், காதலி கிளியோபாட்ராவை ரோமுக்கு அழைத்து வந்தார் சீசர். இது ரோமானியர்களுக்கு பிடிக்கவில்லை. இது சீசரின் உயிருக்கே ஆபத்தானது. அதிகாரப் போராட்டத்தில் சீசர் கொல்லப் பட்டார். ஆட்சியைப் பிடிப்பதில் சீசரின் வாரிசுகளுக்கும் தளபதிகளுக்கும் மோதல். இனியும் அங்கிருப்பது ஆபத்து என்பதை உணர்ந்தாள் கிளியோபாட்ரா. உடனடியாக எகிப்துக்கு தப்பினாள்.
சற்றும் தாமதிக்காமல் தொடர்ந்தது அவளது அடுத்த காதல் அத்தியாயம். தனது சாகசத்தால் ரோம பேரரசின் அதிகாரத்தைக் கைப்பற்றிய தளபதி மார்க் ஆன்டனியை திருமணம் செய்தாள். அவர்களுக்கு 3 குழந்தைகள் பிறந்தன. இந்த காலத்தில் தனது 2 சகோதரிகள் மற்றும் சகோதரனை கிளியோபாட்ரா கொன்று எகிப்து அரசுக்கு தன்னைத் தவிர வேறு வாரிசுகள் இல்லாமல் செய்து கொண் டாள்.
இந்நிலையில் கிளியோபாட்ராவுக்கு சீசரின் வாரிசான அகஸ்டஸ் சீசரால் ஆபத்து வந்தது. கடும் கோபத்தில் இருந்த அகஸ்டஸ் சீசர் எகிப்து மீது போர் தொடுத்தார். இதில் பரிதாபமாகத் தோற்ற ஆன்டனி தற்கொலை செய்து கொண்டார். கிளியோபாட்ராவும் அவளது குழந்தைகளும் சிறை பிடிக்கப் பட்டனர்.
சிறை வாழ்க்கையை விரும்பாத கிளியோபாட்ரா எகிப்து பாலைவனத்தில் திரியும் கொடிய விஷம் கொண்ட நல்ல பாம்பை கடிக்க வைத்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப் படுகிறது. 39 வயதில் அவளது சகாப்தம் முடிவுக்கு வந்தது.
வாழ்நாள் முழுவதும் தன் அழகிய தோற்றம் மீது அக்கறை செலுத்தி வந்த கிளியோபாட்ரா பாம்பு கடித்து இறந்திருக்க மாட்டாள் என ஜெர்மன் வரலாற்று ஆராய்ச்சியாளர் கிரிஸ்டோபர் செபர் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளார். ‘‘பாம்பு கடித்தால் அடுத்த நொடி மரணம் நிகழ்வதில்லை.
சற்று நேர மரணப் போராட்டம் உண்டு. இதனால் உடல் அலங்கோலமாகி முகம் விகாரமாகிவிடும். கிளியோபாட்ரா அதை விரும்பவில்லை. அவள் வாழ்ந்த காலத்தில் எகிப்தில் மிகவும் பயங்கரமான விஷம் ஒன்று வழக்கத்தில் இருந்தது. விஷத் தாவரங்களின் கூட்டால் செய்யப்படும் கசாயம் அது.
கிளியோபாட்ரா அதைத்தான் அருந்தினாள்’’ என்கிறார் செபர். எகிப்து பழங்கால ஏடுகளில் இருந்து, இதற்கான ஆதாரங்களையும் காட்டுகிறார் செபர். உலகப் பேரழகி கிளியோபாட்ராவின் வாழ்வு மட்டுமல்ல, மரணமும் புதிரும் மர்மமாகவே இருக்கிறது இன்று வரை.
இந்த கிளியோபாட்ராவுக்கு முன்னால் ஏழு கிளியோபாட்ராக்கள் வாழ்ந்து இருக்கிறார்கள். இவள் பிறக்கும் போதே எட்டாம் கிளியோபாட்ரா என்றே பெயர் சூட்டப்பட்டு பிறந்தவள். முன்பு வாழ்ந்த அந்த ஏழு பேருக்கும் கிடைக்காத பேரையும், புகழையும் இவள் மட்டும் எப்படிப் பெற்றாள். அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.
முதலாவது, இவளது புத்திசாலித்தனம். அடுத்த காரணம், அழகு. அழகு என்றால் ஐஸ்வர்யாராய் அழகல்ல. அதற்கெல்லாம் நூறுபடி மேலே என்கிறார்கள் எகிப்து சரித்திரவியலாளர்கள். வெறும் முப்பத்தொன்பது வயசு வரைக்கும் தான் அவள் வாழ்ந்திருக்கிறாள். ரொம்பச் சின்ன வயசிலேயே அரசியானவள் என்றாலும் ராஜாங்கக் காரியங்கள் தவிர பல்வேறு துறைகளில் அவளுக்குப் பெரிய ஆர்வங்கள் இருந்திருக்கின்றன.
உதாரணமாக, வான சாஸ்திரம், ஜோதிடம் போன்ற கலைகளைக் கல்வியாகவே கற்றவள் கிளியோபாட்ரா. அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பது, அவற்றின் வேதியியல், மருத்துவ குணங்களை ஆராய்வது போன்றவற்றில் அவளுக்கு அபாரமான திறமை உண்டு.
தன் வாழ்நாளில் அவளே ஏழு விதமான வாசனைகளைக் கண்டுபிடித்ததாகவும் சொல்லுகிறார்கள். எது எப்படியோ ஓர் அழகு ஜீவனை அநியாயமாகக் கொன்று விட்டார்கள். என்ன செய்வது. விதியின் கைகள் எழுதியே செல்லும்.
Keep sharing ideas .... Your valuable ideas will help newbies to grew up into professionals..... This ideas will make newbies to become more efficient in the field...
பதிலளிநீக்கு