// இன்று 19.04.2015 மலேசியா தினக்குரல் ஞாயிறு மலரில் வெளியான கேள்வி பதில் //
ஜெயக்குமார் கதிர்வேல், சிம்பாங் அம்பாட், தைப்பிங், பேராக்
கே: நான் இப்போது Intel Pentium 3 வகையைச் சேர்ந்த கணினியைப் பயன் படுத்தி வருகிறேன். அதில் விண்டோஸ் எக்ஸ்.பி இயங்குதளம் இருக்கிறது. போன வாரம் விண்டோஸ் 7 இயங்குதளத்தைப் பதித்தேன். பதிக்க முடியவில்லை. Install செய்ய முடியவில்லை. எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தேன் முடியவில்லை. எப்படி பதிப்பது. உதவி செய்யுங்கள்.

ப: மலேசியா சுதந்திரம் அடைந்த கொண்டாட்டத்தைப் பார்க்க மாட்டு வண்டியில் ஏறி, மலாக்கா கடல் கரைக்குப் போய் இருக்கிறேன். 1957இல் நடந்த வரலாறு. அது ஒரு கனா காலம். இப்போது மாட்டு வண்டிகளைப் பார்க்க முடிவதில்லை. அரும் காட்சியகத்தில் கூட பார்க்கக் கஷ்டமாக இருக்கிறது. இதை ஏன் சொல்ல வருகிறேன் என்றால் அந்த மாதிரியாகக் காலம் மாறிப் போய் விட்டது.
அப்படி இருக்கும் போது நீங்கள் என்னடா என்றால் கறுப்பு வெள்ளை தொலைக் காட்சிப் பெட்டியை வைத்துக் கொண்டு அதில் கலர் கலரா படம் வரமாட்டேங்குதே என்கிறீர். நீங்கள் பயன்படுத்தும் இண்டல் பெந்தியம் 3 இருக்கிறதே இது 1996 ஆம் ஆண்டுகளில் வெளி வந்த இரண்டாம் தலைமுறைக் கணினி வகை.
அதற்குப் பிறகு இண்டல் பெந்தியம் 4, இண்டல் டுவல் கோர், இண்டல் டிரிபள் கோர், குவாட்ரா என்று நவீனமான நளினமான கணினி வகைகள் வந்து விட்டன.
இப்போது சிப்பு எனும் Chips களைக் கொண்டு இயங்கும் கணினிகளும் வந்துவிட்டன. விலையும் ரொம்ப குறைவு. இதுவரை உங்கள் கணினி வேலை செய்கிறதே அதுவரைக்கும் அதற்கு முதலில் மாலை கட்டிப் போடுங்கள். விண்டோஸ் 7, விண்டோஸ் 8 இயங்குதளம் என்பது இப்போது உள்ள நவீனக் கணினிகளில் தான் வேலை செய்யும். புரிகிறதா?
உலகத்திலேயே மலேசியாவில்தான் கணினிகள் மிக மிக மலிவான விலையில் கிடைக்கின்றன. புரிந்து கொள்ளுங்கள். முன்னூறு நானூறு ரிங்கிட்டிற்கு மறுப் பயனீடு கணினிகள் கிடைக்கின்றன.
இயங்குதளம் என்றால் Operating System. கணினியை இயக்குகின்ற அடிப்படைச் செயல் முறை. விண்டோஸ் விஸ்த்தாவும் அப்படி தான். பழைய கணினிகளில் வேலை செய்யாது. காலத்திற்கு ஏற்றவாறு கணினியைத் தயாரித்துக் கொண்டு வருகிறார்கள். அதற்கு ஏற்றவாறு நாமும் மாறிக் கொள்ள வேண்டும். என்ன இருந்தாலும், பழைய வண்டியை 'பார்முலா 1' கார் பந்தயத்திற்கு இழுத்துக் கொண்டு போக நினைத்தீர்களே. அது வரைக்கும் பாராட்டுகள்.

வணக்கம்
பதிலளிநீக்குஐயா
கேள்வி பதில் பகுதியில் நன்றாக சொல்லியுள்ளீர்கள் அதுவும் நகைச்சுவை கலந்த கலவை விளக்கம் நன்றாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-