ரியூனியன் தீவில் கண்டுபிடிக்கப்பட்ட விமானத்தின் உடைந்த பாகங்கள், காணாமல் போன எம்எச் 370 விமானத்திற்கு சொந்தமானவை என பிரதமர் நஜிப் துன் ரசாக் உறுதிப்படுத்தியுள்ளார். அந்தப் பாகங்களை பிரான்ஸில் ஆய்வு செய்த அனைத்துலக ஆய்வாளர்கள், அவை எம்எச் 370 விமானத்தில் உள்ளவை என முடிவாக உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ரியூனியன் தீவுக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்ட விமான உடைந்த பாகங்கள் குறித்த உண்மைகளைக் கண்டறிவதற்காக அவை பிரான்ஸ் கொண்டு செல்லப்பட்டு சோதிக்கப்பட்டன. இச்சோதனையில் இந்த விவரம் வெளியாகியுள்ளது.
விமானம் காணாமல் போய் 515 நாட்கள் கழித்து இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது. மேலும், தற்போது வெளியாகியுள்ள இந்த உண்மை காரணமாக, விமானம் மாயமானது குறித்த விசாரணையில் முக்கிய திருப்பம் ஏற்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ரியூனியன் தீவுப் பகுதியில் இன்னும் விரிவாகத் தேடினால், விமானத்தின் மேலும் பல பாகங்கள் கண்டறியப்படலாம் என்றும் நம்பப்படுகிறது. அதனால் இப்பகுதியில் விரைவில் தேடுதல் பணிகள் விரிவுபடுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக