14 மே 2016

கோலா செலிங்சிங்


கோலா செலிங்சிங் என்ற பகுதியில் இருக்கும் களும்பாங் தீவில் 1930-ஆம் ஆண்டுகளில் சில அகழ்வாராய்ச்சி நடந்து இருப்பது உண்மை. இந்தத் தீவிற்குப் புலாவ் பூலோ என்று இன்னொரு பெயரும் உண்டு.

Ivor Hugh Norman Evans எனும் ஆங்கிலேய வரலாற்று அறிஞர் 1930இல் முதல் ஆய்வு செய்தார். இவர் பேராக் அரும்பொருள் காட்சியகத்தின் இயக்குநராக இருந்தவர்.

அவர் எழுதி இருக்கும் Skeletal remains from the Kuala Selinsing excavations, Perak எனும் நூலில் இருந்து நிறைய தகவல்களைப் பெற முடியும்.

இந்த நூல் இப்போது ஆஸ்திரேலிய தேசிய நூலகத்தில் உள்ளது. இணையம் வழியாக நீங்களும் படித்து தகவல்களைப் பெற முடியும்.

அந்த நூலகத்தில் முதலில் நீங்கள் உறுப்பினராக வேண்டும். அதன் முகவரி: http://www.nla.gov.au/ இந்த நூலகத்தில் இருந்து தான் மலேசிய இந்தியர்களின் வரலாற்று ஆவணங்களைப் பெற்று வருகிறேன்.

கோலா செலிங்சிங் பாசி மணிகள் தமிழ் நாட்டின் Arikamedu எனும் இடத்தில் இருந்து கொண்டு வரப்பட்டன். உள்ளூர் மக்களுக்கு விற்கப்பட்டன. Kuala Selinsing (Perak), Sungai Mas (Kedah) and Santubong (Sarawak) ஆகிய இடங்களில் அதே காலக் கட்டத்தில் பாசிமணிகள் உற்பத்தியும் செய்யப்பட்டு உள்ளன. 

 

மணிகளை manik என்று மலாய் மொழியில் சொல்கிறார்கள். manikya எனும் சமஸ்கிருதச் சொல்லில் இருந்து manik எனும் சொல் உருவானது. கோலா செலிங்சிங்கில் மனித எலும்புக்கூடுகள் கிடைத்தன. உண்மை.

அவை 7ஆம் நூற்றாண்டில் அங்கு வாழ்ந்த இந்தியர்களின் எலும்புக் கூடுகள். மலாய்க்காரர்களின் எலும்புக்கூடுகள் என்று சொல்கிறார்கள். மேலிடங்களுக்குத் தெரியும். ஏனோ தெரியவில்லை. அந்த ரகசியங்கள் இன்னும் மர்மமாகவே உள்ளன.

பூஜாங் நாகரிகத்தை அவர்களின் நாகரிகம் என்று சொல்லவில்லையா. அந்த மாதிரிதான் கோலா செலிங்சிங் 7ஆம் நூற்றாண்டு எலும்புக்கூடுகளின் ரகசியங்களும். கொஞ்ச நாள் பொறுத்துக் கொள்ளுங்கள். ரகசியம் வெளியாகும்.

கோலா செலிங்சிங் ரகசியங்களை அவிழ்க்க வேண்டும். மலேசிய இந்தியர்களுக்கு மட்டும் அல்ல உலக இந்தியர்களுக்கே தெரிவிக்க வேண்டும். அது நம்முடைய பொறுப்பு அல்ல கடமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக