03 ஜூன் 2016

வாட்ஸ் அப் (Whatsapp) தமிழில் தட்டச்சு செய்வது எப்படி

முதலில் உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் இருக்க வேண்டும். அது மிகவும் சுலபம். மின்னஞ்சல் கணக்கு இல்லாதவர்கள் கூகிள் இணையப் பக்கத்திற்குப் போய் GMail என்பதைச் சொடுக்குங்கள். அல்லது GMail என்று தட்டச்சு செய்யுங்கள். gmail sign up என்பதைச் சொடுக்குங்கள். 



Create your Google Account என்று வரும். அதில் தேவையான விவரங்களைப் பதிந்து ஒரு மின்னஞ்சல் கணக்கைத் திறந்து கொள்ளுங்கள். ஏற்கனவே யாகூ, ஹாட்மெயில் மின்னஞ்சல் கணக்கு இருந்தால் அந்தப் பழைய கணக்கிலேயே பதிவு செய்யலாம். புதிதாகத் திறக்க வேண்டியது இல்லை.

பின்னர் உங்கள் கைப்பேசியில் Play Store என்பதைச் சொடுக்குங்கள். அதன் முகவரி: https://play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam&hl=en 


உங்கள் மின்னஞ்சலைக் கேட்கும். மின்னஞ்சலைப் பதிவு செய்யுங்கள். Sellinam என்று தட்டச்சு செய்து பதிவிறக்கம் செய்து கைப்பேசிக்குள் தமிழைப் பதிப்பு செய்யுங்கள். அவ்வளவுதான்.

எப்படி தமிழில் தட்டச்சு செய்வது என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ள http://sellinam.com/archives/406 எனும் முகவரிக்குச் செல்லுங்கள். விவரங்கள் உள்ளன. பின்னர் சொல்கிறேன். -முத்தண்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக