28 ஜூலை 2016

சாதிகள் இல்லையடி பாப்பா

சாதிகள் இல்லையடி பாப்பா - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்
நீதி உயர்ந்த மதி,கல்வி - அன்பு
நிறை உடையவர்கள் மேலோர்

 
சாதிகள் இல்லையடி பாப்பா... குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்... என்று பாடும் போது ஏற்படும் உணர்ச்சியும் அதை ஒட்டி எழும் சமுதாயக் கோபமும் குறைந்த பட்சம் அவர் அவர் வாழ்க்கையில் கூட நடைமுறையாக உருமாறுவது இல்லை. 
 

 அதைவிட பாரதி தாழ்த்தப் பட்டவர்களுக்குத் தான் அதை எழுதி இருக்கிறார் என்பதைப் போலத் தான் சிலரின் நினைப்பும் இருக்கிறது.

எனக்கு தெரிந்த நாடறிந்த மூத்தக் கல்வியாளர் ஒருவர். முக்கிய பிரமுகர்கள் தலைமை ஏற்று இருந்த ஒரு சாதிச் சங்கச் சந்திப்பில் அங்கலாய்த்து இருக்கிறார். இது அண்மையில் நடந்த நிகழ்ச்சி. 

எழுத்தில் ஒன்றும் நடத்தையில் ஒன்றுமாய் வேசம் போடும் அந்த மாதிரி ஆட்களுக்குத் துணை போவது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை. 


வெளிப்படையாக இல்லை. ஆனால் காதோடு காது வைத்த மாதிரி இந்த சாதிப் பிரச்சினை மிகவும் அணுக்கமாக மறைமுகமாக உலாவிக் கொண்டு இருக்கிறது. அதை ஒழிக்க வேண்டும் என்பதே என்னுடைய போராட்டம்.

நம் நாட்டில் தலைதூக்கி விரித்தாடும் சாதி அமைப்புகளையும் சாதிச் சங்கங்களையும் இளைய தலைமுறையினர் நிராகரிக்க வேண்டும். 

என் காலத்தில் சாதி இல்லாமல் போகும் என்று நம்பினேன். அது நடக்கவில்லை. அதன் தாக்கமே பலரைப் பகைத்துக் கொள்ளச் செய்கிறது.

2 கருத்துகள்:

  1. பயப்பட ஒன்றுமில்லை. எல்லா ஜாதியிலும் ஏதோ ஒரு கலப்பு நடந்துகொண்டு தான் இருக்கிறது! நான் கலப்பில்லாத ஜாதிக்காரன் என்று தலை நிமிர்ந்து சொல்ல யாருக்கும் துணிவில்லை!

    பதிலளிநீக்கு
  2. பயப்பட ஒன்றுமில்லை. எல்லா ஜாதியிலும் ஏதோ ஒரு கலப்பு நடந்துகொண்டு தான் இருக்கிறது! நான் கலப்பில்லாத ஜாதிக்காரன் என்று தலை நிமிர்ந்து சொல்ல யாருக்கும் துணிவில்லை!

    பதிலளிநீக்கு