மனிதர்களின் இரத்தம் நான்கு வகைகளாகப் பிரிக்கப்படும். அவை ஏ, பி, ஓ, ஏபி. (A, B, O, AB) ஆனால் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் சூராட் எனும் இடத்தில் நோயாளி ஒருவருக்கு ஒரு புது வகையான இரத்தம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இது மருத்துவ உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அந்த நபரின் பெயர் வெளியிடப்படவில்லை. அவருடைய இரத்தம் வழக்கமாக உள்ள நான்கு வகையிலும் சேரவில்லை. அதனால் அந்த இரத்த வகைக்கு ‘இன்ரா – INRA’ எனப் பெயரிட்டு உள்ளனர். Lok Samparn Raktdan எனும் மருத்துவக் கூடத்தில் ஆய்வுகள் செய்யப் பட்டன. Dr Sanmukh Joshi, Dr Kinjal Mendpara and Dr Ankit Sheldiya ஆகிய இந்திய மருத்துவர்கள் ஆய்வுகள் செய்தனர்.
‘இன்ரா – INRA’ என்ற பெயரில் முதல் இரண்டு எழுத்துகள் இந்தியாவைக் குறிக்கும். மற்ற இரண்டு எழுத்துகள் அந்த நபரைக் குறிக்கும். இந்த நிலையில் அந்த நபரின் இரத்த மாதிரி உலக சுகாதார நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டது. அங்கீகாரமும் கிடைத்து உள்ளது.
இதில் ஒரு பெரிய வேதனையான செய்தி. அந்தப் புதுவகையான இரத்தம் கொண்ட அந்த நபர் யாருக்கும் இரத்த தானம் செய்ய முடியாது. மற்றவரிடம் இருந்து இரத்தம் பெறவும் முடியாது. உலக அளவில் இதுவரை இவரோடு சேர்த்து ஏழு பேருக்கு இந்த மாதிரி புதுவகையான இரத்தம் இருப்பது கண்டு அறியப்பட்டு உள்ளது. இப்படி அரிதான இரத்தம் கொண்ட மனிதர்களை COLTOL என்று மருத்துவ உலகம் அழைக்கிறது.
இன்னொரு வகை அரிய இரத்தம் உள்ளது. அதன் பெயர் பாம்பாய் இரத்தம் (Bombay Blood). உலகில் 10,000 பேரில் ஒருவருக்கு இந்த வகை இரத்தம் உள்ளது.
சான்று: http://www.india.com/news/india/new-blood-group-found-in-india-gujarat-doctors-verify-sample-with-who-1456095/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக