சாலிகிராம் என்றால் 40 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த கடல்வாழ் உயிரினங்களின் அம்மோனைட் ஓடுகள். இந்த ஓடுகள் எப்படி நேபாளத்திற்குப் போயின.
(Shaligrams are Ammonoid fossils of the Devonian - Cretaceous period which existed from 400 to 66 million years ago. )
அந்தச் சமயத்தில் கடலில் இருந்த உயிரினங்களின் எலும்புக் கூடுகளும் நேபாளப் பகுதிக்கு வந்து சேர்ந்தன. இமயமலை அடிவாரத்தில் திமிங்கிலத்தின் எலும்புக் கூடுகளைத் தோண்டி எடுத்து இருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
ஆசியத் தகட்டை இந்தியத் தகடுதான் முதலில் மோதுகிறது. அந்த மாதிரியான ஒரு மோதலில், ஓர் அழுத்தத்தில் உருவானதே இமயமலையாகும்.
உலகத்திலேயே உயரமான அந்த மலை இன்னும் உயர்ந்து கொண்டு போகிறது. ஓர் ஆண்டிற்கு ஒரு சில அங்குலம் உயர்கிறது. இமயமலை உயர்வதற்கு, இந்திய, ஆசியத் தகடுகள் மோதிக் கொள்வதுதான் மூல காரணம்.
இந்த அடுக்குகள் ஒன்றோடு ஒன்று உரசிக் கொள்ளும் போது அல்லது ஒன்றை விட்டு மற்றொன்று விலகிச் செல்லும் போது நில அதிர்வு ஏற்படும். அந்த அதிர்வைத் தான் நிலநடுக்கம் என்கிறோம்.
அதற்கு கீழ்ப் புறமாக இருப்பது இந்திய டெக்டொனிக் பிளேட் (Indian Tectonic Plate). இந்த இரண்டு தட்டுகளும் பல கோடி ஆண்டுகளாக ஒன்றோடு ஒன்று உரசிக் கொண்டே இருக்கின்றன. அந்த உரசலின் விளைவாகத் தான் இமயமலைத் தொடர் உருவானது.
சாலிகிரம் என்பது திருமாலின் சின்னமாகும். இது படிமக் கற்களாகக் கிடைக்கிறது. சாலிகிரம் கற்களில் வட்ட நீள் வட்ட வடிவங்கள் காணப்படும். திருமால் வழிபாட்டில் மிக முக்கியமானது. சாலிகிராம் கற்கள் இயற்கையாகக் கிடைப்பவை.
உலகம் முழுவதிலும் நன்கு அறியப்பட்ட சாலிகிராம் மிகத் தொன்மையானது. பழங்காலத்தில் இருந்து கோயில்களிலும், மடங்களிலும் வீடுகளிலும் வைத்து வழிபடுகிறார்கள். .
நேபாளத்தின் முக்திநாத் எனும் இடத்தில் இரண்டு மலைகளுக்கு இடையில் கண்டகி எனும் நதி ஓடுகிறது. அதில் இந்தக் கற்கள் உருவாகின்றன. உலகை வியப்பில் ஆழ்த்துகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக