15 மே 2019

தமிழ்நேசன் முதல் சிறுகதை

தமிழ்நேசன் முதல் சிறுகதை - கிராமபோன் சந்தியாவந்தனம்

தமிழ்நேசன் நாளிதழில் வெளியான முதல் சிறுகதை கிராமபோன் சந்தியாவந்தனம். 1933 ஆகஸ்ட் 2-ஆம் தேதி வெளியானது. ஆசிரியர் நரசிம்ம ஐயங்கார் அவர்களே எழுதியது. சுருக்கு வழி ஜெபம் எனும் மற்றொரு பெயரும் அந்தச் சிறுகதைக்கு வழங்கப் பட்டது.
 


Prayer Made Easy - A Humorous Story by K. N
. என்று ஆங்கிலத்திலும் துணைத் தலைப்பு கொடுத்து இருந்தார். MAHA எனப்படும் மலாயாத் தோட்ட வேளாண்மைக் கண்காட்சி நடைபெற்ற போது தமிழ்நேசன் வெளியிட்ட சிறப்பு இதழில் அந்தக் கதை இடம்பெற்றது. அதுதான் தமிழ் நேசனின் முதல் சிறுகதை.

வேலை செய்யும் போது பிரார்த்தனை செய்ய முடியாமல் தவிக்கிறார் ஒருவர். அவருடைய பெயர் வேம்பு ஐயர். அவருக்கு அவருடைய நண்பர் கிராமபோன் பெட்டி ஒன்றைக் கல்கத்தாவில் பணம் கட்டி மலாயாவுக்கு வரவழைக்கிறார். அதைப் பற்றிய கதை.

அதே இதழில் மூக்கந்துரையைப் பாம்பு கடித்தது - Mr Morgan Bitten by Snake எனும் மற்றொரு கதையும் பிரசுரிக்கப் பட்டது. அந்தக் காலக் கட்டத்தில் ரப்பரின் விலை சரிவு கண்ட காலம். அதனால் ஆங்காங்கே வேலையில்லாப் பிரச்சினை.

அந்தக் காலக் கட்டத்தில் மூக்கந்துரை என்பவர் பாம்புகள் நிறைந்த ஒரு தோட்டத்திற்கு நிர்வாகியாக அனுப்பப் படுகிறார். ஜோகூர் லாபீஸ் பகுதியில் உள்ள தோட்டம்.

போனவர் அங்கே அடுத்தடுத்து ஐந்து பாம்புகளை அடித்துக் கொன்று விடுகிறார். ஓர் இரவு நேரத் தூக்கத்தில் சின்ன ஒரு நிகழ்ச்சி. அவருடைய இடைவாரின் கொக்கி இடுப்பில் மாட்டிக் கொள்கிறது.

மூக்கந்துரை ‘பாம்பு... பாம்பு’ என்று அலறி ஓடுகிறார். நிலைமை அறிந்த அவருடைய நண்பர் வருத்தப் படுகிறார். வேறு வழி இல்லாமல் மூக்கந்துரையை மீண்டும் அவருடைய சொந்த ஊருக்கே அனுப்பி வைக்கிறார். இதுதான் கதை. 86 ஆண்டுகளுக்கு முன்னால் மலாயாவில் வெளிவந்த இரு தமிழ்ச் சிறுகதைகள்.

(மலாயா-சிங்கப்பூர் ஆரம்ப காலக் கதைகளும் நாவல்களும் பதிவில் இருந்து)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக