30 ஆகஸ்ட் 2019

நுரையீரல் எப்படி வேலை செய்கிறது - 1

மனித உடலின் இயக்கத்திற்கு உயிர்க் காற்று (பிராணவாயு அல்லது உயிர்வளி) தேவை. உயிர்க் காற்றை ஆங்கிலத்தில் ஆக்சிஜன் (oxygen) என்று அழைப்பார்கள். உயிர்க்காற்று இல்லாமல் மனிதன் மட்டும் அல்ல. வேறு எந்த ஓர் உயிரும் உயிர் வாழ முடியாது.

நாம் சுவாசிக்கும் காற்றில் இருந்து உயிர்க் காற்றை நுரையீரல் (Lung) பிரித்து எடுக்கும் வேலையைச் செய்கிறது. அது மட்டும் அல்ல. இரத்தத்தில் உள்ள கரியமிலக் காற்றையும் உறிஞ்சி எடுத்து விட்டு அந்த இடத்தில் உயிர்க் காற்றை நிரப்பும் வேலையையும் செய்கிறது.

ஒரு நாளைக்கு சராசரியாக 22,000 முறை மூச்சு விடுகிறோம். இந்த விசயம் பலருக்கும் தெரியாது. ஏன் என்றால் யாரும் ஓன், டூ, திரி, போட்டு எண்ணிக் கொண்டு இருக்க மாட்டார்கள். மூச்சு விடுவதையே சிலர் மறந்து போய் இருப்பார்கள்.

சராசரியாக ஒரு மனிதர் ஓய்வு நிலையில் இருக்கும் போது ஒவ்வொரு நிமிடமும் 7 - 8 லிட்டர் காற்றைச் சுவாசிக்கிறார். அதாவது ஒரு நாளைக்கு 11,000 லிட்டர் காற்று. அதாவது 388 கன அடி காற்று. (388 cubic feet) காசு கொடுக்காமல் வாங்கிய காற்று. அதனால் கவலைப் படாமல் படியுங்கள். (கோபம் வேண்டாமே).

ஒரு பெரிய மினரல் பாட்டிலின் அளவு 1 லிட்டர். அப்படிக் கணக்குப் பண்ணிப் பார்த்தால் நாம் ஒவ்வொரு நிமிடமும் 7 - 8 பெரிய மினரல் பாட்டில் காற்றைச் சுவாசிக்கிறோம்.... ஒவ்வொரு நிமிடமும்... 

ஒரு நாளைக்கு 11,000 பெரிய மினரல் பாட்டில் காற்று. இப்படி நாம் உள்ளே இழுக்கும் காற்றில் 550 பெரிய மினரல் பாட்டில் ஆக்சிஜன் காற்று இரத்தத்தில் கலக்கிறது. சரிங்களா. 

ஆக நாம் உயிரோடு இருக்க வேண்டும் என்றால் நம் இரத்தத்தில் 19 புள்ளி 5 விழுக்காட்டு உயிர்க் காற்று இருக்க வேண்டும். இது பெரிய விசயம் இல்லை.

ஏன் என்றால் நம் உடலுக்குள் போகும் உயிர்க் காற்றில் ஏறக்குறைய 20 விழுக்காட்டை மட்டுமே எடுத்துக் கொள்கிறோம். மிச்சத்தை வேண்டாம் என்று சொல்லி மீண்டும் வெளியே தள்ளி விடுகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக