31 ஆகஸ்ட் 2019

மலேசிய தின வாழ்த்துகள் 2019

மலைக்காட்டு மலையகத்தைப் பொன் விளையும் பூமியாக மாற்றிக் காட்டிய மலேசிய இந்தியர்களுக்கு முதல் மரியாதை. 
 

மலைக் காட்டுப் பாதைகளில் இரத்தம் கொட்டி உயிர்களைச் சிந்தியவர்கள். மலைக் காட்டு மரங்களைக் கட்டி அணைத்து காசு மழை பொழியச் செய்தவர்கள். மலைக் காட்டு மிருகங்களுடன் மனித வாசம் பேசி மரித்துப் போனவர்கள்.

மலைக் காட்டுப் பாசா காடுகளில் பவித்திரம் பேசி மலேசியாவைப் பார் புகழச் செய்தவர்கள். அந்த வாயில்லா பூச்சிகளுக்கும் அனைத்து மலேசியர்களுக்கும் மலேசிய தின வாழ்த்துகள்... வாழ்த்துகிறோம்.

பேஸ்புக் அன்பர்களின் பதிவுகள்

 
Murugan Rajoo #கடந்த 5:ஆண்டுகளாய் ஒரே பதிவு.

சுதந்திரம் இனி நிரந்தரம் ஆக வேண்டும் இந்தியர்களுக்கு. எங்களுக்கு சலுகைகள்
வேண்டாம்...
உரிமைகள் தான் வேண்டும்
விழுகாடு ரீதியில் அல்ல
மண்ணின் மைந்தர்களாய்....

இனப்பாகுப்பாடு அற்ற சுதந்திரம்
இம்மியளவும் குறையாத
உரிமை.....
விழுகாடும் ஒதுக்கீடும்
எங்களுக்கு
விடுதலை கொடுக்காது...

தோட்டங்கள்
எம்மினத்திற்கு அடிமை
விலங்கிட்டது
நகரங்களில் நவீன கொத்தடிமைகளானோம்
சுதந்திரம் மட்டும் இன்னும்
கேள்விக்குறியாய்...

இருப்பதை கொடுப்பதை
வைத்து
நிறைவுக் கொள்ள
சுதந்திரம்
உணவோ உடையோ அல்ல
உரிமை....

என்ன செய்யவில்லை
நாங்கள்
வியர்வை சிந்தினோம்
உழைத்துக் கொடுத்தோம்
உதிரம் கொட்டினோம்
எங்களின்
தியாகங்களும் இங்கு
மறைக்கப்பட்டது வரலாற்றிலும் கூட....

எங்களின் அடுத்தத் தலைமுறைக்காவது உரிமையை கொடுங்கள்
சலுகை கருணையென
பிச்சைப் போடாதீர்கள்....

இருண்ட நாட்டில்
தீ குச்சியால்
சுதந்திரம் தேடுகிறோம்
தீ குச்சி ஒருநாள்
தீபந்தமாய் பற்றி எரியும்
சுதந்திர காற்று எங்களின்
சுவாசத்தின் உயிர்ப்பிப்பாகும்!!

"இனிய 62-ஆம் சுதந்திர தின வாழ்த்துக்கள்"

 
Kalai Selvam சகோதரர் முருகன் ராஜூவின் கவிதைக்கு மிக்க நன்றி நன்றி. உணர்வும் உணர்ச்சி மிக்க அனைத்து நமது மக்கள் உங்கள் கவிதை யை படித்தே ஆகவேண்டும்.
 
Santhanam Baskaran இனிய வணக்கம்.
மலேஷிய அன்பர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.

 
Neela Vanam தம்பி முருகன் ராஜுவின்' மன ஆதங்கத்தை இப்பதிவின் மூலமாக அரிய முடிகிறது அவரின் கருத்துக்கு உடன் படுகிறேன். எதிர் காலத்தில் நம்மவர்களின் நிலமை எப்படி இருக்கும் ? பதிவுக்கு நன்றி

மாரியப்பன் முத்துசாமி வரலாற்று மாற்றி அமைத்தாலும்
நம் முன்னோடிகளை வாழ்த்தி வணங்குவோம்

 
Megana Megana 👍👍வாழ்த்துக்கள் சார்
 

Image may contain: 1 person, beard and closeup
மலேசியாவுக்காக பாடுப்பட்ட தியாகி

Varusai Omar மா.சித்ரா தேவி .ஏம்மா கண்ணூ... இந்த சந்தோசமான சுதந்திர நன்னாள்ளே உனக்கு இந்த ஓநாய் படம் தான் கிடைத்ததா?
உன் மீது எனக்கு கோபம் கோபமாக வருகிறது சித்ரா!?

 

No photo description available.
Mahdy Hassan Ibrahim வாழ்த்துகள் மலேசிய நண்பர்களுக்கு!
 
Sheila Mohan இனிய வணக்கம்
சார்.. சுதந்திர தின
நல்வாழ்த்துகள்...


Vanaja Ponnan இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்
 
Krishna Raja சுதந்திரதின வாழ்த்துகள்
 
Varusai Omar காலம் காலமாக கடந்து வந்தபாதை தானே!?
நள்ளிரவில் விடுதலை கொடுத்தான் வெள்ளையன்.
ஆனால், கடந்த 60+2 ஆண்டுகள் கடந்தும் நம் நாட்டு இந்தியனுக்கு (அதை இ.வ. தமிழன் என வாசிக்க!) இன்னும் விடியலே கண்ணில் காணவில்லையே?
1955-இல் மலாயா நாட்டில் கால் பதித்த ஆண்டு.

பள்ளி மாணவப் பருவம்

துன்பம் போராட்டம். இளமையும் கடந்தது. வெரும் PR சிவப்பு அட்டையொடு.
மெத்தப் படித்திருந்தும் பேரும் புகழும் பெற்றிருந்தும், கையில் தொழில்? இல்லையே! கற்ற கல்விக்கும் திறனுக்கும் ஏற்ற வேலையுமில்லை, கூலியுமில்லை.
உயர்ந்த மனிதர்கள், தாழ்ந்த உள்ளங்கள்.

2010-களுக்கு பிறகு வந்தார் ஒரு மகராசன், ஆறாவது பிரதமராக.
இந்தியர்களிளின் வாழ்வில் சற்று வெளிச்சம். அதிலும், கிடைத்த சலுகை பணத்தை சில கேடு கெட்ட இந்தியத் தலைகள் (முதலைகள்?) மாமன் மச்சான் மைத்துனிகளுக்கு ஒதுக்கி குடித்துக் கும்மாளமிட்டு ஏப்பமிட்டார்கள் சாமானிய இந்தியன் அங்கே தெருக் கோடியில் கண்ணில் பெருக்கெடுத்து ஓடும் நீருடன் நெஞ்சில் பொங்கும் துயருடன்!

அதற்கு முன் வந்தார் ஒரு தானைத் "தல" இனிப்புத் தடவிய சொல்லாடலுடன்.

"அய்யா வாங்கோ அம்மா வாங்கோ.
கடனை உடனை வாங்கி எங்கிட்டெ கொட்டுங்கோ!
இனி உங்களை எல்லாம் கோடீஸ்வரர்களாக்குகிறேன்"

நம்மாளு தான் மூஞ்சீல எழுதி வச்சிருக்கே?
ஹும்ம்! அங்கேயும் அல்வாதான்னா, சூப்பர் அல்வா!
மகனும் தன் பங்குக்குகூகூகூ,
நம்பினார் கை விடப் பட்ட்ட்டார்ர்ர்!
நெஞ்சு கிழியிற சத்தம் தான்.
அவ்விடத்திலும் சூப்பபரா அல்வா மட்டுமில்லேபா! சிலருக்கு சங்கெதிட்டம்லெ!

இறுதியாக, 2011, ஓரந்தி மாலைப் பொழுதில், அலைபேசி அழைப்பு, "உங்கள் வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப் பட்டது. உங்கள் பிரஜை விணண்ணப்பம் வெற்றி!"
அப்பாபாடாடா,
60 ஆண்டுகால ஏக்கம், கனவு நிறைவேறப் போகிறதா?
அப்படியே மண்டியிட்டு சிறு பிள்ளை போல் தேம்பித் தேம்பி அழுது ஓய்ந்தேன்!

இறுதியில் 14.02.2012-இல்; பல்லாயிரக் கணக்காணோர் சூழ, பல்லூடகங்கள் சாட்சியாக அன்றைய பிரதமர் டத்தோ நஜீப் அப்துல் ரஜாக் கைகளால் அந்த அங்கீகாரம் கைகளில் கிடைத்த போது, 60 ஆண்டு கால காத்திருப்பு, காலம் கடந்து 63 அகவையில், நிறைவடைந்தது!

அன்றிரவே காணொலிகளில் தலைப்புச் செய்தி, மறுநாள் 13.02.2012-இல் அனைத்து பத்திரிக்கைகளிலும், (தமிழ், மலாய், சீன, ஆங்கில நாளேடுகளில் தலைப்புச் செய்தியானேன்!

ஒரு நாளேடு, நான் எழுதிக் கொண்டிருந்த நண்பனின் "ம. நண்பன்" 2013-ஆம் ஆண்டு நாட்காட்டியில் என்னைப் பதிப்பித்து பெருமைப் படுத்தி விட்டார்கள்.

இவை அனைத்தும் என் வாழ்வின் துயரமான பக்கங்கள். சத்தியமான உண்மைகள்.!


Muthukrishnan Ipoh ஐயா... உங்கள் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சியின் பதிவு மனதைக் கலங்கச் செய்து விட்டது... சற்று நேரம் விக்கித்துப் போனேன்... இறுதியில் ஒரு மகிழ்ச்சியான செய்தி... எவ்வளவு வேதனைப்பட்டு இருப்பீர்கள்... நினைத்துப் பார்க்கிறேன்... மனம் கசிகின்றது...

ஐயா... தங்களின் பதிவை என் வலைத் தளத்திலும் பதிவு செய்து இருக்கிறேன்... 

 
Varusai Omar Muthukrishnan Ipoh

தோழர் முத்து, உங்கள் பரிவிற்கும் அன்புக்கும் நன்றி தோழர்!

இன்னும் நிறைய இருக்கு முத்து.

சங்கநதியில் 1955/56-களில் வசித்த காலை, கம்யூனிசத் தாக்குதல்களை நேரில் கண்டது மட்டுமல்ல... மறுநாள் காலை பள்ளி செல்ல துன் V.T. சம்மந்னார் வீட்டைக் கடந்து Sg.Siput main வீதியில் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் சுட்டுக் கொல்லப்பட்ட சடலங்களைக் கிடத்தி வைத்திருப்பார்கள்.

அதையும் தினம் கடந்து, ரயில்வே ஸ்டேசன் தண்டவாளம் கடந்து தான் பள்ளி!
மலைக் குன்று. சுற்றிலும் ஆஸ்திரேலிய போர்ப் படை!
அதை மற்றொரு தரம் மதிவிடுகிறேன் நண்பா.
துன்ப காலங்களில் பட்டதாரியாவது மண்ணாவது, டாக்ஸி ஓட்டினேன்
தலைநகர் ஏர்போர்ட்டில்...


Muthukrishnan Ipoh Varusai Omar நிறைய வரலாற்றுத் தடங்கள்... அதிர்ச்சி... ஆச்சரியம்... ஒரு நூல் எழுதுவதற்கு முயற்சி செய்யுங்கள் ஐயா... என்னால் இயன்ற உதவிகளைச் செய்கிறேன்...

Varusai Omar இயற்கையாகவே நான் போராட்ட வாதி முத்து. என் தந்தையார் சொல்வார்கள். அவன் முற்போக்குவாதி. யார் சொன்னாலும் கேக்க மாட்டானே!

தந்தையின் சர்ட்டிபிகேட்! ஹஹஹாஹாஹா!
எப்பிடீ? ஹஹாஹாஹா

 
Vijikrish Krishnasamy Varusai Omar so sad to hear.
 

Varusai Omar Muthukrishnan Ipoh அனுபவங்கள் பலிச்சக்கால்..
நான் எழுதிய பழைய கதையின் தலைப்பு!

Varusai Omar Muthukrishnan Ipoh அந்த ஆசை எனக்கும் உண்டு. ஆனால், எனது கதை நறுக்களை இந்தியாவின் எனது முன்னாள் பேராசிரியர் தமது ஆய்வுப் படிப்பிற்காக (PhD.முனைவர்)... 
எனது தொகுப்புகள் என் மூத்த மைத்துனர் பாவலர் திலகம் பட்டர்வர் ஜைனுத்தீன் எழுத்து புத்தகங்களையும் திரும்பத் தருவதாகச் சொல்லி கொண்டு சென்றார்.

அவ்வளவுதான். தமிழ்நாட்டுக்காரன் பண்பாடு!
போனவன் போனான்டீடீடீயீயீ!
அவரது ஆய்வு; மலேசியா சிங்கையில் சிறுகதை கட்டுரைகள். ஹும்! எல்லாமே அம்போன்தா தோழர்.

Varusai Omar முத்து, துன் சம்மந்தன்/ உமா திருமணத்தில் என் தந்தையும் பெரியப்பாவும் சிலம்பம் ஆடினார்கள். எனது சிலம்ப ஆசிரியரும் என் தந்தைதான்.

Varusai Omar Muthukrishnan Ipoh 2013 நண்பனின் நாட்காட்டி படத்தை பதிவிட்டுள்ளேன். பிரதமருக்கு பொன்னாடை அணிவித்தேன். அதுதான் அவரது கழுத்தை அலங்கரிக்கிறது!

Varusai Omar ஒன்று சொல்ல விரும்புகிறேன் முத்து.
இந்த ராஜேந்திரன் பெருமாலூ, ஒரு கடைந்தெடுத்த...ஹீம் வேண்டாம் முத்து. தமிழில் கணினியில் அச்சேற்றி ஒன்றுக்கு இருமுறை நேரில் கொடுத்தும்.. தும் தும்தான். ஓவியம் வரையச் சென்ற இடத்தில் காணாமல் போனதாம்!!

Varusai Omar ஆனால் அதே கதை வேறு நாளேட்டில் அச்சானது வேறு கதை. பார்த்தீர்களா நண்பா? தமிழனுக்கு எதிரி ஜப்பான்/ ஆப்ரிக்காலே இருந்தா வாரான்?
நாம தான் பூனைய மடீலேயே கட்டீட்டூ அழரமே?


Krishnan ATawar Valtukal ayya


Krishna Raja சுதந்திரதின வாழ்த்துகள்



Sathya Raman  இன்றைய சூழலில் பல மனமாச்சாரியங்களையும், இடர்பாடுகளையும் எதிர்நோக்கி நிற்கின்ற இந்நாட்டு இந்தியர்கள் "மனித வாழ்வின் செல்வாக்கு தன்மானமே "என்ற சுய உணர்வோடு. சுயமரியாதையுடனும் வரும் காலங்களை எதிர் கொள்ள வேண்டுவதோடு கடந்த கால காயங்களை கடந்து செல்ல இந்த 62-ஆம் சுதந்திர தினம் நமக்கு சுகமாய் வழிகாட்டட்டும் . அன்பு உள்ளங்களுக்கு தேசிய தின வாழ்த்துக்கள்.🙏🌷 தமிழோடு வாழ்வோம், தமிழோடு வளர்வோம்

Kumar Murugiah Kumar's தமிழர் புகழ் உயிரோட்டம் உள்ள வரை வெல்லும்

Hamba Mu Umar Umar Romba nanri ayya

Sooriyaperumal Sooriya வேண்டும் விடுதலை

நாளை சுதந்திர தினமாம்
அடிமை நிலை விடுபட்ட தினமாம்...

"இந்தா எடுத்துபோ"

"வந்தேறிகள்"

கல்வியில்
சிறந்த அடைவுநிலை இருக்கட்டுமே
நாங்கள் வீசும் துறைதான்...

அரசாங்க பணியில்
பத்துதான்...
அதுவும் எங்கள் விருப்பம்...

தாய்மொழி பள்ளியிருக்கு...
கோயில் இருக்கு
சுதந்திரம் போதும்...

ஆமாம்
ஐம்பத்து ஏழுக்குப் பிறகு தானே பார்க்கிறோம்....!

மூவரும் கையொப்பமிட்டோமே...!
அது வெள்ளைக்காரனை ஏமாற்ற...

பாகுபாடு பார்க்க மாட்டோம் என்றது....?
அது உங்களை ஏமாற்ற

தேர்தல் வாக்குறுதிகள்...?
அது நாங்கள் வாழ...

எங்களுக்கு எப்போ சுதந்திரம்...?

அதான் கொடுத்திட்டாங்களே

கொடுத்தாங்க நீங்க
எப்போதுடா கொடுத்தீங்க...
எங்களின் உரிமை எங்கே..
எங்களுக்கும் வேண்டும் விடுதலை...

அதான் பேச்சு சுதந்திரமிருக்கு...

அதிலும் உங்களுக்குத் தானே
சுதந்திரம்

சரி..சரி...
மூவினமும் முக்கியம்
எல்லா வளமும் எல்லாருக்கும்...

ஐயையோ....
தேர்தல் வரப் போகிறது...

பெ.சா.

என்னடா
இப்படியெல்லாம் எழுதுகிறாய்
எகிறி குதிப்பார்கள்...

இதற்கேவா...?

குதிக்கட்டும் விடு
குறிப்பாக யாரையும் சொல்லவில்லை
எந்த சூழ்நிலையில்
சொல்லப்பட்டது என்று விளக்கிவிடலாம்...

எவ்வளவு இழிவு படுத்தினாலும்
மன்னிப்பு கேட்டால் சரியாகிடும்...
-சூரிய மூர்த்தி.


Sivan Koran மலேசியர்கள், இன்று அடித்துக் கொள்வோம் நாளை அணைத்துக் கொள்வோம்..... எந்த குடும்பத்திலும் நிலவும் உறவு முறை போல. வித்தியாசம் என்னவென்றால் மலேசியர்களான நாம் பல இனங்கள் பல மதங்கள் கொண்ட பெரிய குடும்பமாகும். நம் மலேசியா ஒரு சொர்க்க பூமியாக பிரார்த்தனை செய்வோம்.


Varusai Omar இது உங்களுக்காக முத்து!

சுதந்திரக் காற்று!
சுதந்திரக் காற்று
எங்கள் மூச்சு, ஒற்றுமை உணர்வு
எங்கள் பேச்சு.

எந்தையர் வழியில் ஏற்றமிகு துங்கு,
அவருக்கிணையாய் அருமை சம்பந்தனார்

இனியவராம் எம் டான் சியூ சின்னும்
இணைந்தே பெற்றனர் இன்ப சுதந்திரம்.
மலர்ந்தனர் மக்கள், மகிழ்ச்சியில் திளைத்தனர்,
அடிமைத் தளையை அறுத்தேயெறிந்தனர்.

மலைவளம் - கனிவளம் பல்கிப் பெருகிட,
நீர்வளம் - நிலவளம் செழித்தே ஓங்கிட
ஆலைகள் சாலைகள் அழகு பூஞ்சோலைகள்
விண்ணுயர் இரட்டை கோபுரம் காணீர்!!!

பெரியதொரு பாலம் பினாங்குத் தீவில்,
KLIA வான்வெளி வாசலாம்.
கப்பல் கப்பலாய்
கடலினில் உலாவரும், காட்சியின் மாட்சியை காணீர், காணீர்!!

இன்னும் சொல்ல எத்தனை யுண்டு?
அனைத்தும் நீங்கள் அனைவரும் அறிந்ததே!
கீழை நாடென கேலி பேசிய வேற்று நாட்டவர்
வியந்தே பார்க்கிறார்.

பார்த்தவர் வியக்கும் வண்ணம் எங்கள்
பார்புகழ் நாட்டை வளர்த்தவர்...மகாதீர்...!!
நேர்வழி இனங்கள் நிலைபெற வாழ
நிலைபெரும் வாழ்வை தந்தவர் வாழி!

ஒற்றுமை உணர்வொடு உயர்ந்திட உழைப்போம்
நாடும் நாளும்,
நம்மினிய மக்களும்
நலமாய் வாழ
இறைவனைத் தொழுவோம்..!!
--A. வருசை ஒமார்.😜😝😃😊😄😍 

சரஸ்வதி வீரப்புத்திரன் மலேசிய நாட்டில் ஒவ்வொரு மண்ணும் நம் தமிழர்களின் வியர்வை, இரத்தம், கண்ணீர் சரித்திரம் என்றுதான் சொல்லும் சார்.

ஒன்றா இரண்ட அவர்கள் பட்ட துன்பங்கள்...

இன்று நாம் சுதந்திரமாக வாழ்வது அவர்கள் நமக்கு அளித்த வாழ்வு
என்றென்றும் அவர்களை வணங்க கடமை பட்டிருக்கிறோம்...
 
 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக