ஒருவருக்கு நாம் ஆயிரம் உதவிகள் செய்து இருக்கலாம். ஆனால் ஒரு முறை அவர் நம்மிடம் ஒரு குறையைக் கண்டுபிடித்து விட்டால்... அந்தக் கணத்தில் இருந்து நாம் செய்த உதவிகளை எல்லாம் அவர் மறந்து விடுவார்.
இது தான் உலகம். ஆக மற்றவர்களுக்காக நாம் வாழ வேண்டாம். நமக்காக நாம் வாழக் கற்றுக் கொள்வோம்.
............................
பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்
பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்
Raghavan Raman ஒருவர்
நம்மை மறப்பதற்கு நாம் தவறு செய்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
என்று ஒருவர் தனக்கு உங்களால் இனி எதுவும் கிடைக்காது என்று உணர்கிறாரோ
அன்றே உங்களை மறந்து விடுவார். பெரும்பாலும் இது தான் இன்றைய நிலை.
Muthukrishnan Ipoh உண்மைதான்...
இனி எந்த நன்மையும் இல்லை என தெரிய வந்ததும் ஏதாவது ஒரு சாக்கு போக்குச்
சொல்லி கழன்று விடுகிறார்கள்... உண்மையான அன்பிற்கு விசுவாசம் இல்லாதவர்கள்
கருத்திற்கு நன்றிங்க டத்தோ...
Muthukrishnan Ipoh வணக்கம்... வாழ்த்துகள்...
ஐயா... தாங்கள், தேவராஜ், அடியேன் மூவரும் மயில் வார இதழின் ஆசிரியர்
பகுதியில் பணி புரிந்த இனிய நினைவுகள்... இன்னும் பயணிக்கின்றன...
M R Tanasegaran Rengasamy அந்த இனிய நினைவுகள்... கலையாத மேகங்கள் ...தூவும் மழைத்துளி போல்... நெஞ்சை குளிர்விக்கும்... அதுவொரு வரம்... நன்றி சார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக