14 செப்டம்பர் 2019

இன்றைய சிந்தனை 15.07.2019 - ஓரவஞ்சனை

ஓரவஞ்சனை என்றால் ஒரு பக்கம் சார்ந்து செயல்படும் வெளிப்படையான பாரபட்சப் போக்கு. அண்மைய காலங்களில் ஊடகங்களில் அந்தப் போக்கை அதிகமாகப் பார்க்க முடிகின்றது. இங்கே முன்வைக்கப்படும் கருத்து சிலருக்கு வேதனை அளிக்கலாம். மன்னிக்கவும்.


‘வானம் இடிஞ்சிச்சு...
பூமி பொளந்துச்சு...
வெள்ளம் வந்துச்சு...
நாய் கொரைச்சுச்சு...
மக்கள் ஓடுச்சு...’


என்று ஒருவர் பதிவு செய்கிறார் என்றால் அதற்கு நூற்றுக் கணக்கான பேர் வரிந்து கட்டிக் கொண்டு ’லைக்’ போட்டு மகிழ்ச்சி அடைகிறார்கள். நமக்கும் மகிழ்ச்சி.

அதே அவர் ஒன்றரை டன் பவுடரை முகத்தில் கொட்டி... ‘என்னையும் பாருங்க என் அழகையும் பாருங்க’ என்று ஒரு செல்பி படத்தைப் போட்டால் அதற்கும் ஆயிரக் கணக்கான பேர் லைக் போடுகிறார்கள்.

ரொம்ப ரொம்ப சந்தோஷம். ஏன் என்றால் அது அவரவர் தனிப்பட்ட விசயம்.

விளம்பரம் தேவை தான். அதற்காகப் பொருத்தம் இல்லாத உரைவீச்சுகளைத் தவிர்க்கலாமே...

முகம் சுழிக்கும் அளவிற்கு ’மேக் அப்’ போட்டு விளம்பரம் தேடுவது தவிர்க்கப்பட வேண்டிய விசயம். பிசுபிசு பவுடர் கசிந்து... வியர்வையில் பிசுபிசுத்து மினுக்கும் முகத்தைப் பார்க்கும் போது அழகே அழகு என்று சொல்ல முடியவில்லை.

பாவம்... அந்த முகத்தின் மீது பரிதாபம் கலந்த அனுதாபம் தான் வருகிறது.

பெண்கள் என்றாலே அழகு. அந்த அழகிற்கு மேலும் அழகு தேவை இல்லை. கொஞ்சமாகச் செயற்கை அழகு போதும். இயற்கை கொடுத்த அழகே அழகு. அதில் லேசான ’மேக் அப்’ வைத்த அழகு என்றால் ரொம்பவும் அழகு.

உங்களின் சாதனைகள்; உங்களுடைய பிள்ளைகளின் சாதனைகள்; மற்ற மாணவர்களின் சாதனைகள்; உங்களுடைய விருதுகள்; உங்களின் வெளியூர்ப் பயணக் காட்சிகள்; உங்களின் அன்றைய சிறப்பான அம்சங்கள் போன்றவற்றுக்கு முதலிடம் வழங்க வேண்டும்.

நல்ல தனிப்பட்ட கருத்துகள்; சமூகத்திற்குப் பயன்படும் கருத்துகள்; தத்துவமான கருத்துகள்; பள்ளி மாணவர்களுக்கான ஊக்குவிப்புக் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்வோம்.

கூவத்தைச் சுத்தம் செய்ய நினைப்பது தவறு அல்ல. கூவத்திற்குக் கூந்தல் கட்ட நினைப்பது தான் தவறு.


பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்


Arjunan Arjunankannaya ஆமாம் ஐயா. எவ்வளவு மாணவர்கள் சாதனை புரிகிறார்கள். அதனைப் புரியாமல் அழகான பெண்கள் வந்தால் வரிசை கட்டி நிற்கிறார்கள்.வேதனை.
 
 
Muthukrishnan Ipoh உண்மைதான்... நம்முடைய மாணவர்கள் வெளிநாடுகளுக்குப் போய் பெரிய பெரிய அறிவியல் சாதனைகளை எல்லாம் செய்து வருகிறார்கள். 
 
நம் இனத்திற்குப் பெருமை தேடி தருகிறார்கள். அவர்களைப் பாராட்ட வேண்டும். அவர்களுக்கு உற்சாகம் தர வேண்டும்.

அண்மையில் நம் தமிழ்ப் பிள்ளைக
ள் ரஷ்யா, ஜார்ஜியா நாடுகளுக்குப் போய் நம் கலாசார நடனங்களை அரங்கேற்றம் செய்து உலக அளவில் முதல் நிலையில் வெற்றி பெற்று நாட்டிற்கும் நம் இனத்திற்கும் பெருமை செய்து இருக்கிறார்கள். அவர்களை உச்சி குளிர வேண்டும். அது நம் கடமைங்க ஐயா... அதுவே நம் உணர்வாக இருக்க வேண்டும்...

அதை விடுத்து.... அரை டன் பவுடர்களுக்கு ஆலாபனைகள் செய்வது நன்றாக இல்லை...
 
 
Doraisamy Lakshamanan நமது தாய்மொழி தமிழையும் நமது பண்பாட்டுக் கையேடான திருக்குறளையும் கொண்டு மலேசியத் தமிழ்ப் பள்ளிகளைப் பாதுகாக்கும் விதமாக, தற்போது தமிழ்ப் பள்ளிகளிலும் இடைநிலைப் பள்ளிகளிலும் படித்துக் கொண்டுள்ள அனைவரையும்... 
 
 பல்கலைக்கழகம் கல்லூரி வரை படிக்க வைத்து வேலை வாய்ப்பு கிடைக்கும் வரை இவர்கள அனைவரையும் கண்காணித்துப் படிக்க வைக்க, உலகத் திருக்குறள் கல்விப் பணிக்களப் புரவலர்கள் குழு, தற்போது ஜோகூர் SMK Tun Fatimah இடைநிலைப் பள்ளியில்... 
 
பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கு உதவியாக பார்வை கல்விக் கழகம் மலேசிய நண்பன் நாளிதழின் வழி இடைநிலைப் பள்ளிப் பாடக் குறிப்புக்கையே ஏடாக நாள் தோறும் ஒரு பாடத்தை அதன் செலெபஸ் படி ஓராண்டுக்கான பாடக் குறிப்புகளை வெளியிட்டு உதவினால்... 
 
மலேசியாவின் அனைத்து இடைநிலைப்பள்ளி மாணவர் மாணவிரும் நாள்தோறும் நாளிதழை வாங்கிப் படித்து கல்வியில் வெற்றி பெற மலேசிய நாளிதழ்களை மூவின மக்களும் வாங்கிப் படித்துப் பல துறைகளில் பயனடைவர் என நாங்கள் நம்புகிறோம்.
 
 
இத்திட்டத்தில் தங்களின் பங்களிப்பு உதவியை பேரளவில் எதிர்பார்க்கின்றோம்!
 
 
எப்படி தாங்கள் எந்த நாளிதழ் வழி எந்தப் பாடத்தின் செலபஸ் வழங்கி நம் மலேசியப் பல்லின மாணவர் சமுதாயம் மலேசியாவை மேம்பாடு அடைந்த நாடாக வளர உதவுங்கள் என தாங்களே அடையாளம் காணும்படி வேண்டுகிறேன்.  நன்றி வணக்கம்.
 
 
Raghavan Raman கருத்துக்கு நன்றி. அன்பர்கள் பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்ப்போம்.
 
 
Bala Sena ஆமாம் ஐயா.. சரியாகச் சொன்னீர்கள்.. போலிகளுக்குத் தான் இங்கே மதிப்பு..
 
 
Ve Sangkar வணக்கம் 🙏 சிறப்பாக சொன்னீர்கள்.
 
 
Parimala Muniyandy மிகவும் சரியாக சொன்னீங்க சார்.👌👍
 
 
Guna Shan அருமையாகச் சொன்னீர்கள் நண்பரே
 
 
 
 
 
 
 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக