09 செப்டம்பர் 2019

உலக மக்கள் தொகை நாள்

இன்று உலக மக்கள் தொகை நாள் (World Population Day). உலக மக்கள் தொகை குறித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஐ.நா. சபை தோற்றுவித்த நாள். 2009-ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 7,024,000,000. அதாவது ஏழு பில்லியன்.


இன்று 11.07.2019 மாலை 4.00 மணிக்கு உலக மக்கள் தொகை 7,716,834,712. கடந்த பத்து ஆண்டுகளில் 700 மில்லியன் கூடி இருக்கிறது. 2050-ஆம் ஆண்டில் 8 முதல் 10.5 பில்லியன் வரை கூடிச் செல்லும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

1990-ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் உலகின் பிறப்புகள் வருடத்திற்கு 173 மில்லியனாக இருந்தது. 2010-ஆம் ஆண்டுகளில் 140 மில்லியன் என்ற அளவில் குறைந்து இருக்கிறது.
மக்கள் தொகை விழிப்புணர்வு முன்னெடுப்புகளினால் 30 பில்லியன் பிறப்புகள் குறைந்து உள்ளன. சற்றே மன நிறைவு அளிக்கிறது.

இறப்புகள் என்று எடுத்துக் கொண்டால் இப்போது ஆண்டிற்கு 57 மில்லியன் இறப்புகள். ஆனால் 2050-ஆம் ஆண்டு வாக்கில் இறப்பு விகிதம் ஆண்டிற்கு 90 மில்லியனாக உயரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.


இறப்புகளின் எண்ணிக்கையைப் பிறப்புகளின் எண்ணிக்கை மிஞ்சி விட்டது. அதனால் உலக மக்கள் தொகையானது 2050-ஆம் ஆண்டு வாக்கில் 8 முதல் 10.5 பில்லியன் வரை எட்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

ஒவ்வொரு விநாடி நேரத்திலும் 2 புள்ளி 582 எனும் விகிதத்தில் குழந்தைகள் பிறக்கின்றன. அந்த வகையில் ஒரு நாளைக்குச் சராசரியாக 223,098 குழந்தைகள் பிறக்கின்றன. ஒரு வருடத்திற்கு 81,430,910 என்று பிறப்புத் தொகை அதிகரித்துச் செல்கின்றது.


இன்றைய 20-ஆம் நூற்றாண்டில் மக்கள் தொகை உயர்விற்குக் காரணம் மருத்துவ முன்னேற்றம்; பசுமைப் புரட்சி; விவசாய உற்பத்திப் பெருக்கம். அதனால் பல நாடுகளில் இறப்பு விகிதம் குறைந்தது.

இன்றைக்கு (11.07.2019) மாலை 4.32 வரை இறந்தவர்களின் எண்ணிக்கை 111,577. பிறந்தவர்களின் எண்ணிக்கை மாலை 4.34 வரை 266, 528.

அப்படி என்றால் இன்றைக்கு ஒருநாள் மாலை 4.30-க்குள் மட்டும் உலக மக்கள் தொகை 150,000 அதிகரித்து இருக்கிறது.


இந்த மாதிரி பெற்றுத் தள்ளிக் கொண்டு போனால் இன்னும் ஒரு நூற்றாண்டில் பூமாதேவி தாங்க மாட்டார். அவரும் ஏதாவது ஒரு முடிவுக்கு வரலாம். என்ன சொல்கிறீர்கள்?

மேற்சொன்ன புள்ளி விவரங்களை Current World Population எனும் இணையத் தளத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். அதன் முகவரி:

https://www.worldometers.info/world-population/


...........................
பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள் 



Neela Vanam ஐயா... உங்களுடைய பதிவைப் பார்த்தேன். உலகத்தில் மக்கள் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. கூடவே எல்லா பிரச்சனைகளும் அதிகமாகின்றன.  இதற்குப் பரிகாரம் என்ன? ஒவ்வொரு நாடும் சட்டத்தின் மூலம் பிறப்பு விகிதத்தைக் குறைப்பது... அதாவது சீனா நாட்டைப் போல...  குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள விரும்பும் தம்பதியினர் மனம் வைத்தால் முடியும். இப்போது உள்ள நிலைமையில் அதிகமாகப் பெற்றுக் கொண்டு காலம் எல்லாம் கஷ்டப் பட வேண்டுமா?
 
 
Santhanam Baskaran இது 5 ஆண்டுகளுக்கு முந்தைய புள்ளி விவரம்.
 
 Image may contain: text
 
 
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக