07 நவம்பர் 2019

சட்டமன்ற உறுப்பினர் குணா மீதான குற்றச்சாட்டுகள் நிராகரிப்பு

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக இருந்ததாகக் கைது செய்யப்பட்ட 12 பேரில் ஒருவரான சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி.குணசேகரன் மீதான 2 குற்றச்சாட்டுகளை நிராகரிக்க அரசு தரப்பு செய்த மனுவுக்கு இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது. 


கடந்த அக்டோபர் 10-ஆம் தேதி காலை 9.58 மணியில் இருந்து பின்னிரவு 11.50 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் எண் 139, கம்போங் பாரு ரஹாங், எண் 2844 ஜாலான் எஸ்ஜே 3/6பி தாமான் சிரம்பான் ஜெயா என்ற இடத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவான அம்சங்களை வைத்து இருந்ததாக குணசேகரன் மீது குற்றம் சாட்டப்பட்டது.

குணசேகரன் நேற்று நீதிமன்றம் வரவில்லை. அவரது சார்பில் ஜெலுத்தோங் எம்பி ஆர்.எஸ்.என்.ராயர் தலைமையில் 4 வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.



நெகிரி மாநில ஜ.செ.க. துணைத் தலைவரான குணசேகரன் (வயது 60) மீது கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி சிரம்பானிலும் அக்டோபர் 31-ஆம் தேதி கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்திலும் குற்றம் சாட்டப்பட்டது.

நேற்று இந்தத் தீர்ப்பு கிடைத்தவுடன் நீதிமன்றத்தில் இருந்த வழக்கறிஞர்களும் குணசேகரனின் மனைவியும் மகிழ்ச்சியடைந்தனர்.

மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் உட்பட பலரும் நீதிமன்றம் வந்து இருந்தனர். குலசேகரன் பேசுகையில், நேற்று முன்தினம் பக்காத்தான் தலைமைத்துவ மன்றத்தில் பல பிரச்சினைகளைப் பேசினோம். சொஸ்மா சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது என்றார். 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக