04 ஏப்ரல் 2020

அமேசான் காடுகளில் கொரோனா வைரஸ்

கொரோனா கோவிட் வைரஸ் அமேசான் காடுகளையும் விட்டு வைக்கவில்லை. அங்கேயும் கள்ளப் பார்வை. அங்கேயும் அதர்ம ஆட்சி. ஆரவாரம் இல்லாமல் ஒரு புதிய மிரட்சி.


அமேசான் காட்டிற்குள் அடங்கி ஒடுங்கி வாழ்கின்ற பூர்வகுடிக் மக்களிடமும் கொரோனா வைரஸ் பரவி இருக்கிறது. கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதியே பூர்வகுடிக் மக்களிடம் கொரோனா அறிகுறிகள் தோன்றி விட்டன. பிரேசில் அரசாங்கம் அதை உறுதிப்படுத்தி உள்ளது.

வடக்கு அமேசானில் பிரேசில், கொலாம்பியா, பெரு நாடுகளில் கொகாமா (Kokama) பூர்வகுடி மக்கள் வாழ்கிறார்கள். மக்கள் தொகை 21 ஆயிரம்.

அந்தப் பூர்வீக இனத்தைச் சேர்ந்த 20 வயது பெண்ணுக்குக் கொரோனா. அதைப் பிரேசில் நாட்டின் பூர்வகுடி இனங்களுக்கான மருத்துவ சேவைக் குழு உறுதிப்படுத்தி இருக்கிறது. 


பிரேசில் நாட்டில் சாவோ ஜோஸ் (Sao Jose Dos Campos) என்கிற கிராமம். அங்கே சுகாதாரத் துறை முகவராக அந்தப் பெண்மணி பணிபுரிகிறார். அவருக்குத் தான் கொரோனா பாதிப்பு. அதனால் சுற்று வட்டாரக் கிராமங்களில் கொரோனா தொற்று பரவி இருக்கலாம் என்று பெரிதும் அஞ்சப் படுகிறது.

அமேசான் காடுகளில் தனிமையில் வாழ்கின்ற பூர்வக்குடி மக்களிடம் கொரோனா விரைவில் பரவிவிடும் ஆபத்து இருக்கிறது. பிரேசில் அமேசான் காட்டுப் பகுதிகளில் 107 பூர்வகுடியினக் குழுக்கள் உள்ளன.

படிப்பு வாசனை குறைவு. பழமை வாதங்கள். பழமைப் போக்குகள். சின்னச் சின்ன கிராமங்களில் சின்னச் சின்னக் குழுக்களாய் வாழ்கிறார்கள். அதனால் கொரோனா எளிதில் தொற்றி விடலாம்.


உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இல்லை என்றால் உலகின் பழமையான பல பூர்வீக இனங்கள் காணாமல் போகலாம்.

அமேசான் காடுகள் கோடிக் கோடி ஆண்டுகளாகக் கோடிக் கோடி உயிர் இனங்களுக்கு உயிர் கொடுத்த உயிர்நாடி. கோடிக் கோடி ஆண்டுகளாக உயிர்க் காற்றைக் கொட்டிக் கொடுத்த உலக நாடி.

அங்கே கோடிக் கோடி ஆண்டுகளாகக் கொட்டும் மழையில் நனையும் மழைக் காடுகள். கோடிக் கோடி ஆண்டுகளாகச் சூரிய வெளிச்சத்தைப் பார்க்காத பச்சைக் பசுமரத்துக் காடுகள். 


ஒரே வார்த்தையில் சொன்னால்... கோடிக் கோடியான மரங்கள். கோடிக் கோடியான செடி கொடிகள். கோடிக் கோடியான மருந்து மூலிகைகள். கோடிக் கோடியான உயிரினங்கள்.

அமேசான் மழைக் காடுகள், உலகத்தையே வாழ வைக்கும் ஓர் உலக அதிசயம். அமேசான் காடுகளில் மட்டும் 390 பில்லியன் மரங்கள் உள்ளன. இந்த உலகின் உயிரினங்களில் மூன்றில் ஒரு பங்கு இந்த மழைக் காடுகளில் தான் வாழ்கின்றன.

இப்போது... அங்கேயும் கொரோனா வைரஸ் சாம்ராஜ்யம் தொடங்கி விட்டது. இதுவே ஒட்டு மொத்த உலக மனித இனத்திற்கு மாபெரும் சோதனைக் காலம். 
 

இனம், மொழி, சமயம், சாதி, சம்பிரதாயங்களைக் களைந்து விட்டு, மனிதர்கள் ஒரே மனித இனமாய் வாழ வேண்டிய ஒரு காலக் கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

உலகிலுள்ள கோடிக் கோடியான உயிரினங்களில் மனித இனம் மட்டும் தான் ஆறறிவு பெற்ற அழகிய இனம். அந்த இனத்திற்கு இப்போது ஓர் இக்கட்டான காலம். ஆண்டவர் கொடுத்த ஆறறிவை அழகாய்ப் பயன்படுத்திக் கொள்வோம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
04.04.2020


பேஸ்புக் பதிவுகள்

Tanigajalam Kuppusamy இறுதியிலுள்ள பத்தியின் வரிகள் மனதுக்கு இதமாகவுள்ளன.

Muthukrishnan Ipoh மகிழ்ச்சிங்க... அந்த ஆறறிவினால் நம் மனுக்குலம் அழிவை நோக்கிப் பயணிப்பதாக ஒரு நெருடலும் ஊர்கின்றது தணிகா...

Tanigajalam Kuppusamy >>> Muthukrishnan Ipoh
மிகவும் மகிழ்கிறேன். எப்போதும் இப்படியே அழையுங்கள். அணுகுண்டு, அணுப்பிளவு, இணைவு (Fission, Fusion) பற்றி ஒரு கட்டுரை எழுதுங்களேன். யுரேனியம், புளுடோனியம், நியுகிலியஸ் இவற்றின் பயன்பாடு குண்டு தயாரிப்பில் எப்படி பயன்படுகிறது என்பன போன்ற விளக்கங்களும் இருப்பது சிறப்பு.

Doraisamy Lakshamanan உலகமக்கள் அனைவரையும் இணையம் வழி ஒன்றிணைத்து இரவு பகல் எந்நேரமும் எல்லோரிடம் எல்லோரும் இணையம் வழி இணைந் துபேசி இல்லாத வசதிகளை எப்படித் தருவது என்பதை உலக நாடுகள் ஓன்றிணைந்து உருவாக்கி உதவ வேண்டுகிறேன் உறவுகளே!

Muthukrishnan Ipoh அதில் கொரோனா தன் பங்கை ஆற்றி வருவதையும் உணர முடிகின்றது...

Vejaya Kumaran: om murugaa ulaga makkal anaiwarayum kaapaatru. ellaa vithe noiyilirunthum anaittu makalayum kaatarul puriye wendum.. murugaa... kaapaatru.. om nameshiwaaye... (ஓம் முருகா... உலக மக்கள் அனைவரையும் காப்பாற்று. எல்லாவித நோய்களில் இருந்தும் அனைத்து மக்களையும் காத்தருள் புரிய வேண்டும். முருகா... காப்பாற்று... ஓம் நமசிவாய)

Muthukrishnan Ipoh வேண்டுகிறோம்.... 🙏🙏🙏

Endran Puven:
Arumai aiyaaa... ippoluthu amazon kaadugalin nilavarengal eppadi iruku aiya (அருமை ஐயா... இப்போது அமேசான் காடுகலின் நிலவரங்கள் எப்படி இருக்கு ஐயா)

Muthukrishnan Ipoh பொறுத்து இருந்து பார்ப்போம்...

Endran Puven: seri aiyaa (சரி ஐயா)

Khavi Khavi கால சூழலுக்கேற்ப பகுத்து அறியும் அறிவு. ஆறாம் அறிவு.

Melur Manoharan "இனிய" காலை வணக்கம் ஐயா...!

Muthukrishnan Ipoh 🙏🙏🙏

Selvi Sugumaran: Sir no word to said

Muthukrishnan Ipoh
மகிழ்ச்சி... 🙏🙏🙏

Parimala Muniyandy இனிய மதிய வணக்கம்🙏

Muthukrishnan Ipoh இனிய வாழ்த்துகள்....

Melur Manoharan "அருமையான" பதிவு ஐயா...!

Muthukrishnan Ipoh வாழ்த்துகள்

Rajaletchemy Hemy அடர்ந்த காட்டில் கோரானாவின் இராஜ பாட்டை அமைந்தது எவ்வாறு ஐயா

Sathya Raman அமேசான் காடுகள் கோடி, கோடி ஆண்டுகளாய் சூரிய வெளிச்சத்தையே காணாத அளவுக்கு காடுகளின் அடர்த்தியான மரங்கள் ஆச்சரியத்தையும், பிரமிப்பையும் ஏற்படுத்துகின்றன. அத்தகைய அரிய காடுகளைத் தான் சில மாதங்களுக்கு முன்பு தீ வைத்து தீர்க்கப் பார்த்தார்கள் சில பேராசைக்காரர்கள். வியப்பூட்டும் கட்டுரை நன்றிங்க சார்.🙏

Nahdan Narayansamy சார் என் இனிய வணக்கம்... Amazon பற்றிய பதிவு அருமை.. உங்களை போன்ற எழுத்தாளர்கள் இருக்கும் வரை தமிழுக்கு அழிவே இல்லை.. வாழ்க தமிழ்.. சார் ஒரு சின்ன வேண்டுகோள் Bermuda triangle பற்றி ஒரு பதிவு உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.. நன்றி அய்யா...

Muthukrishnan Ipoh அனைத்து எழுத்தாளர்களுக்கும் மகிழ்ச்சி... பெர்மூடா முக்கோணத்தைப் பற்றி தமிழ் மலரில் 3 கட்டுரைகள் அண்மையில் எழுதினேன். அவற்றை வலைப்பதிவில் பதிவு செய்கிறேன்... நன்றிங்க...

Nahdan Narayansamy சார் ரொம்ப நன்றி.. நான் தமிழ் மலர் வாங்குவது இல்லை.. உங்கள் பதிவுகள் அனைத்தும் வலைப் பகுதியில் பதிவு செய்யவும்.. உங்கள் பதிவுகளை நான் ஒரு பகுதியில் save பண்ணியுள்ளேன்.. வருங்காலத்தில் என் பிள்ளைகளுக்கு உதவியாக இருக்கும்....

Muthukrishnan Ipoh 🙏

Vally Jeeva: so sad sir and thanks for ur message

Jainthee Karuppayah தங்களின் ஆசிரியர் யார்? எந்தப் பள்ளி சார்? .... மலேசியாவில்... தங்களைப் போன்றோர் விரல் விட்டு எண்ணி விடலாம்... தாங்கள் தனித்து நிற்கிறீர்கள்... பெருமைக்குரிய விஷயம் நண்பரே

Muthukrishnan Ipoh மலாக்கா டுரியான் துங்கல் தமிழ்ப்பள்ளியில் படித்தவன்... அமரர் வி.பி. பழநியாண்டி ஆசிரியர் அவர்கள் தமிழ் படித்துக் கொடுத்தார்... தங்களின் கருத்துகள் பெரிதும் மகிழ்ச்சி அளிக்கின்றன... நன்றி...







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக