13 ஏப்ரல் 2020

Thank you Google


உலகளாவிய முன்னணிச் சேவையாளர்களுக்கு நன்றிகள் ஆயிரம்
கொரோனா வைரஸ் நெருக்கடி காலத்தின் போது முன்னணிச் சேவையாளர்களாய்ச் சேவைகள் வழங்கி வரும்...

மருத்துவர்கள்,
தாதிமார்கள்,
மருத்துவ உதவியாளர்கள்,
மருத்துவ ஊழியர்கள்,
மகப்பேறு உதவியாளர்கள்,
அவசர உதவியாளர்கள்,
மருத்துவ உணவு விநியோகிப்பாளர்கள்,
தனியர் காப்புக் கருவி தயாரிப்பாளர்கள் (ppe),
அஞ்சல்துறை ஊழியர்கள்,
சிறை அதிகாரிகள்,
பொதுப் போக்குவரத்து ஊழியர்கள்,
சுகாதாரப் பணியாளர்கள்,
போலீசார்,
இராணுவ வீரர்கள்,
ரேலா உறுப்பினர்கள்,
தீயணைப்புப் படை வீரர்கள்,
நகராண்மைக் கழகச் சேவையாளர்கள்,

மற்றும் இதர அத்தியாவசியச் சேவையாளர்கள் அனைவருக்கும் நன்றிகள்... நன்றிகள்...

மக்கள் சேவையே மகேசன் சேவை என தங்கள் உயிரைப் பணயம் வைத்து சேவை செய்யும் இவர்கள் மலேசிய மக்களின் மனங்களில் நடமாடும் தெய்வங்களாய் வணங்கப் படுகிறார்கள்.

வாழும் காலத்திலேயே அவர்களைப் பற்றி வரலாறு பேசுகின்றது. காலா காலத்திற்கும் மலேசியர்கள் அவர்களை நினைத்துப் பார்ப்பார்கள்.

தன்னலம் கருதாமல், அர்ப்பணிப்பு உணர்வுகளுடன் சேவை செய்து வரும் அன்பார்ந்த முன்னணிச் சேவையாளர்களே...

நீங்கள் ஒவ்வொரு நாளும் உங்களின் உயிரைப் பணயம் வைத்து மேற்கொள்ளும் கடின உழைப்பிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். நீங்கள் இல்லாமல் நாங்கள் இருக்க மாட்டோம். இருகரம் கூப்பி நன்றி கூறுகிறோம். நன்றிகள் ஆயிரம்.

#மலாக்காமுத்துக்கிருஷ்ணன்
13.04.2020

#GoogleDoodle

2 கருத்துகள்:

  1. கூகுளின் சேவைகள் எப்போதுமே சிறப்பானவை. அதற்கும் லோக கொரோனாவுக்காக சேவையாற்றும் ஒவ்வொருவருமே சிறப்பானவர்கள்.

    எமது புதிய வலைத்திரட்டிக்கு ஆதரவு தாருங்கள் நண்பரே.

    தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . இதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 27 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. நாமும் நன்றிகளை தெரிவிக்கின்றோம்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு